Wednesday, December 13, 2006

இஞ்சி இடுப்பு !! அப்டீன்னா ?

இஞ்சி இடுப்பு அப்படீன்னா என்னா? ன்னு நானும் மண்டைய உடைச்சுகிட்டு யோசனை பண்ணி பாக்குறேன் மக்கா என்னானே தோண மாட்டீங்குது !! சரி இஞ்சிய பார்த்தா ஏதாச்சும் ரோசணை தோணுமின்னு கடைக்கு போயி கால்கிலோ இஞ்சிய வாங்கி பார்த்தா கன்னாபின்னானு பல கோணங்கள்ல வளர்ந்து கெடக்குது. ஆனா இஞ்சி 'ஷேப்' எப்படி இடுப்பு 'ஷேப்' ஆக முடியும் ? ஒருவேளை இஞ்சி மாதிரியே இடுப்பும் கவனிக்காம விட்டா கன்னா பின்னான்னு வளர்ந்துட்டு போறதுனால சொல்லுறாகுளோ ? என்னாடா இது பாண்டிக்கு வந்த சோதனை !! இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சுகாட்டி மண்டையே வெடிச்சுடும் போலருக்கே !!

இப்படிப்பட்ட மிகப்பெரிய சமுதாயக்கவலை வந்து கொஞ்ச நாளா மனசுக்குள்ள உடுக்கை அடிக்க ஆரம்பிச்சு சலங்கைய கட்டிகிட்டு கோக்குமாக்கா ஆடுது !! என்ன பண்ணுவான் இந்த ஜொள்ளுப்பையன் ?? !! என்னோட பரிதாபமான நெலமையா பார்த்துத்தாங்க கடவுளே இந்த அம்மாயி போட்டோவ கண்ணுலே காட்டுணாரு. இந்த இஞ்சியோட பேரு ‘ இலியானா ‘. பாருங்களேன் என்னாமா இருக்கு ( பொண்ணுதாங்க ! ). இந்த இஞ்சி வெளைஞ்ச மண்ணு நம்ம ‘ கிக் ‘கான கோவாதான். அம்மணி நடிச்சதென்னவோ ரெண்டே ரெண்டு தெலுங்கு படம்தான். அம்மணியோட தெறமைய பாத்துபுட்டு துட்டோச பல புரொடியூரருக க்யூ கட்டி நிக்குறாங்களாம் !! இவுகதான் இப்போதைக்கு சம்பளம் அதிகமா வாங்குர நடிகையாம்லே !! சீக்கிரமா வந்து அம்மணிய தரிசணம் பண்ணிகிட்டு போங்கப்பூ. உஸ்ஸ் சத்தம் காட்டாம பாருங்க !!

Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
ஏலே மொக்கராசு !!! அந்த நமீதா போர்டை துக்கி கடாசிட்டு நம்ம ‘ இலியானா ‘ போர்டை எடுத்து மாட்டுலே !!!

Wednesday, December 06, 2006

பஸ்ஸில டவுன் பஸ்ஸில ...

டவுன் பஸ்ஸிலே


இந்த டவுன் பஸ் இல்லை டவுன் பஸ் அதிலே போயிருக்கீங்களா அப்பூ ? போகாம என்ன? அல்லாரும் போய் இருப்பீங்க. அதுவும் இந்த சென்னைக்குள்ள ஓடுற டவுன்பஸ் ஒரே கலக்கல் தான் போங்க. ஆனா பஸ்சிலே உட்கார்துகிட்டு போனா சொகமே இல்லைங்க. நிக்கனும்! நல்லா நடுவால நிக்கனும்! அப்போதான் பஸ்ஸுக்குள்ள உக்கார்ந்து இருக்குறது நின்னுகிட்டு இருக்குறது அப்புறம் பஸ் ஸ்டாபிலே ஏறுரதுக்கு காத்துகிட்டு இருக்குறதுன்னு பார்குறதுக்கு ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கு !! எதைய பார்க்குறதுன்னு கேட்குறீயளா ?? என்னா இது கப்பித்தனமா இருக்கு ? நான் வேற எதைய பார்க்கப்போறேன் ? ஹிஹிஹி . பஸ்சிலே உட்கார்துட்டா உங்களுக்கு வெறும் 60 டிகிரி ஆங்கிள்லதான் தலைய திருப்பி பார்க்க முடியும். ஆனா பஸ்ஸுக்குளார நின்னா 360 டிகிரியிலயும் யாரும் நம்ம கண்ணுல இருந்து தப்பிக்க முடியாது. எப்படி ஐடியா ?? இப்படியெல்லாம் ரொம்ப கஷ்டப்படு கண்டுபிடிச்ச டெக்னலஜிய உங்ககிட்டே சொல்லிட்டேன் பாருங்க ரொமப நல்ல பையன் நான் !! ( இப்படி நானே சொல்லிகிட்டாதான் உண்டு !! கண்டுகிடாதீங்க !! )

சென்னையிலே பஸ்சிலே வழக்கமா நாம போற மாதிரி இருந்தா எங்க போறோம்கறது முக்கியமில்லைங்க. ஆனா எந்த ரூட்டுல போறோம்கறது ரொம்ப முக்கியம். ஒரு உதாரணதுக்கு சொல்லனும்னா நான் பாச்சிலர்ஸ் பாரடைஸ் திருவல்லிக்கேனியிலே இருந்து அண்ணா நகர் போகணும்னா ரெண்டு மூணு ரூட்டிலே போலாம். அப்படிதான் பாருங்க போன புதுசிலே நமக்கு இதெல்லாம் தெரியாம 27B ல அண்ணாநகர் போகுமின்னு பஸ்ஸடாப்பிலே நிக்கிற ஒரு ரசனையில்லாதவரு சொல்லி அதிலே போக ஆரம்பிச்சேன். அப்பாடி அந்த பஸ்ஸிலே மீன் கூடை கருவாட்டுக்கூடை காய்கறிக்கூடைகளுக்கு மத்தியிலே அண்ணாநகர் போய் சேரதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். அப்போதான் ஆபத்பாந்தவன் போல என் மேன்சன் மேட் அருண் வந்தாரு என்னா பாண்டி ஜோலிய முடிச்சுட்டு வர்றப்போ எல்லாம் சப்பிபோட்ட கொட்டை மாதிரி வர்றே என்னா வேலை ஜாஸ்தியா ? ரொம்ப அக்கரை என்மேல அவருக்கு . வேலையினால இல்லீங்கண்னா எல்லாம் இந்த பஸ்ஸுதான்ன்னு சொல்லவும் அவருதான் நம்ம போதிமரமா இருந்து என்னொட பஸ்ஸு ரூட்டை மாத்தினாரு. “ இனிமே 27L இல்லாட்டி 27H லே போங்க . இதுவும் அண்ணா நகர்தான் போகுது. ஆனா என்ன விசேசம்னா இது போற ரூட்டிலே மூணு லேடீஸ் காலேஜ் இருக்கு “

அடுத்த நாளில இருந்து அதிலே போக ஆரம்பிச்சா ஆஹா என்னா ஒரு Golden ரூட்டை இவ்ளோ நாளும் மிஸ் பண்ணீட்டேனே ! அப்புறம் தெனமும் என்னைய சுத்தி ‘ பட்டாப் பூச்சிகள் தான் !! அப்புறம் பல fair & lovely களும் dark & lovely களும் நம்மகூட பஸ்ஸிலே !! செல சமயம் கூச்சமா வேற இருக்கும். எங்கயாச்சும் பூக்கடைய பார்த்துகிட்டு திரிஞ்சவனுக்கு பூக்கூடைக்குள்ளேயே அடைச்சு வச்ச மாதிரி என்ன ஒரு ஜாலி. தப்பா நெனச்சுகிடாதீங்க ஒன்லி சைட்டிங்ஸ் ஆப் இண்டியாதான். No உரசல்ஸ் No டச்சிங்ஸ் . அது ரொம்ப முக்கியம். ஏதாச்சு தெரியாத்தனமா ராசாபாசமான அவ்ளோதான் அப்புறம் பஸ்ஸிலே இருக்குற எல்லாரும் ஜாக்கிசானா மாறி உங்களை பிரிச்சு மேஞ்சுருவாங்கப்பூ.. சைட் அடிக்கிறதோட மட்டும் நிறுதிக்குங்க!! இதிலே வேற மூணுமே காலேஜுமே ‘ பல்ஸை ’ எகிர வைக்கிர பல மாடல்களை உருவாக்கிய கருவறைகளா இருந்துச்சுன்னா பார்துக்குங்க கேட்கவா வேணும் ? ஹூம்..

இப்படியாகா போய்கிட்டு இருந்தப்போதான் நம்ம அப்பாரு பாவம் பையன் பஸ்சிலே நொந்து நூடுஸ்ஸாகி போய்கிட்டு இருகானேன்னு தப்பா நெனசுகிட்டு ஊருல இருக்குற என்னோட பைக்கை பார்சல் பண்ணிவிட்டாரு. பைக்கிலே போறது சந்தோசமா இருந்தாலும் பஸ்ஸிலே கூட வர்ற மூணு காலேஜ் பொண்ணுகளை மிஸ் பண்ணுறமேன்னு ஏற்ட்ட துக்கம் தான் ஜாஸ்தி போங்க. என்ன பண்றது? வாழ்க்கையிலே சுக பயணத்துக்காக சக பயணிகளையே இழக்கற வலி இருக்கே !!! ஹும்ம்ம்.

போன வாரம் நம்ம சகா ஒருத்தன் மாப்ளே உன் வண்டிய இன்னிக்கு கொடேன் ஒரு சோலி இருக்குன்னு வழிஞ்சுகிட்டே கேட்டான் சரி சரி அவனுக்கு பில்லியனிலே ஒக்கரதுக்கு ஏதோ சிக்கிடுச்சு போலன்னு பெரிய மனசு பண்ணி தாராளமா எடுத்துகிட்டு போய்க்கோடா அப்படியே என்னிய ஏதாச்சும் பஸ் ஸ்டாப்பிலே இறக்கி விட்டுடுன்னு சொல்லி இறங்கிகிட்டேன். நமக்குதான் பஸ்ஸிலே போறதே ஒரு சொகமாச்சே. ரொம்ப நாள் வேற ஆச்சு பஸ்சிலே போய். ஒரு மீடியம் கும்பலோட ஒரு பஸ்ஸூ வந்துச்சு ஏறிட்டேன்.

வழக்கம் போல உக்கார இடம் இல்லை. ஹையா ஜாலின்னு அப்படியேகா நம்ம ரேடாரை சுத்தினா வாவ் சூப்பரான சிக்னல்!! ஒரு ரெண்டு சீட்டுக்கு முன்னாடி. பஸ்ஸிலே கம்பிய பிடிச்சுகிட்டு ஒரு பட்டாம் பூச்சி. சரி இனி நம்ம ஸ்டாப்பிங்க வர்ற வரைக்கும் பொழுது போய்டும்கற நிம்மதியிலே ஆரம்பிச்சேன் . ( என்னோட பயணத்தைதாங்க ) இப்படி பார்குறப்போ பஸ்ஸுக்குள்ளார இருக்குர floating population கொஞ்சம் உங்க பொருமைய சோதிப்பாங்க. இதிலே அதுக கூட ஆராச்சும் bodyguard வந்திருந்தா சும்மா ப்ரைம்மினிஸ்டர் செக்யூரிட்டி ரேஞ்சுக்கு அப்படியேக்கா கவர் பண்றது பீலா உடுறதுன்னு சும்மா சீனைக்கொடுத்துகிட்டு இருப்பானுங்க. அதையெல்லாம் கண்டுகிடவே கூடாது. நாமென்ன வாழ்க்கை பயணதிலயா போகப்போறோம்?

இங்கனயும் அப்படித்தான் போலங்க. என்னோட சிக்னல் அடிக்கடி கட்டாச்சு. ஆருடான்னு பார்த்தா ஏவனோ ஒருத்தன் என்னோட சிக்னல் வழியிலே பட்டாம்பூச்சிய மறைச்சுகிட்டு என்னைய மொறைச்சுகிட்டு இருக்குறான். எவனாவது அவளோட அண்ணனா இருப்பானோ? வழக்கமா இப்படி கூட வர்றவங்களை கண்டுக்க கூடாது. நாம கண்டுகிட்டோம்னு வச்சுகுங்க அப்புறம் ஓவரா சீனப் போடுவனுக. அதுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கலாமா ? டேய் இது மாதிரி பல பேரைப் பார்த்தவண்டா !! நீ மறைச்சா என்னா? எங்களுக்கு பார்க்க தெரியாதா ? கொஞ்சம் சிக்னல் கொடைக்கிற மாதிரி நகர்ந்து நின்னேன். கொஞ்ச நேரத்திலயே தெரிஞ்சு போச்சு அவனுக்கும் நம்ம பட்டாம்பூச்சிக்கும் சம்பந்தமே இல்லைன்னு. திரும்பவும் சும்மா சும்மா என்னைய மொறைக்குறதுன்னு ஒரே டார்ச்சரா போச்சு. டேய் நீயாசும் பாரு இல்லை என்னையவாச்சும் பார்க்க வுடுடான்னு கத்தனும் போல இருக்கு. என்ன பண்றது? பொது இடமாச்சே. இதுக்குள்ள என் பட்டாம்பூச்சி பறந்து போய்டுச்சு !! ஸ்டாப்பிங் வந்துடுச்சி போல. பஸ்ஸிலே பாதி டிக்கெட் காலி..

வேற வழியே இல்லை சீட்டிலே ஒக்கார்ந்துதான் ஆகணும்னு ஆகிபோச்சு. வேற பட்டாம்பூச்சி எதும் தேறலே. ஒக்கார்துதான் தீரணும் போல இருகேன்னு பார்த்தா இதிலே நம்ம மொறைக்குர பார்ட்டி பக்கதிலேதான் சீட்டு ஒன்னு காலியா இருக்கு. ஒக்காருங்கன்னு ரொம்ப ஆர்வமா அண்ணாதே வழி விட்டாரு. வேற வழியில்லாம வெறுமனே ரோட்டை வேடிக்கை பார்துகிட்டே வந்துகிட்டு இருந்தேன், திடீர்னுதான் காலிலே ஏதோ குறு குறுன்னு ஊருற மாதிரி இருகேன்னு பார்த்தா நம்ம பக்கத்திலே ஒக்கார்ந்துகிட்டு இருந்த மொறைக்கிற ஆளோட கையி என் தொடையிலே !! டேய் என்னடா பண்றேன்னு அவன் மூஞ்சியப்பார்த்தா ஒரு ‘மார்க்கமா’ சிரிக்கிறான். அடப்பாவி !! அவனா நீ ??!!!! அடங்கொப்புறானே டேய் இதுகெல்லாம் நான் ஆளு இல்லைடான்னு அலறியடிச்சு எந்திருச்சி பஸ்சு படிகட்டு கிட்டே போய் நின்னுகிட்டேன். அடப்பாவிகளா முந்தியெல்லாம் ஏதோ கைபோடுறது கால் போடுறது பொண்ணுகளுக்குத்தான் டார்ச்சர் கொடுத்துகிட்டு இருந்தானுவ. இப்போ ஆம்பிளைகளையும் வுட்டு வைக்கிலயாடா ?? பார்த்து சூதானமா இருந்துக்குங்கப்பூ !!

Wednesday, November 22, 2006

ஆப்பு வாங்குவது எப்படி ?

ICU

நான் ஆப்பு வாங்கனது எப்படீன்னுதான் தெரியுமே !!!

எல்லாரும் என நிலைமையப் பார்த்து கவனமா இருக்கப்பூ !!!

ஆத்தா!! ஆப்பத்தா!! ஒரு ஓரமா கைதாங்கலா என்னைய ஒக்கார வைங்கப்பூ !!!


-- ICU விலிருந்து ஜொள்ளுப்பாண்டி

Tuesday, November 21, 2006

சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !!

Image Hosted by ImageShack.us
நம்ம வலைப்பதிவர்கள் எழுதினாலும் பரபரப்புதான், சந்திச்சுகிட்டாலும் பரபரப்புதான். ஞாயித்துக்கிழமை நடந்த வலைப்பதிவர் சந்திப்புல ஊடால பூந்து சந்திப்பு நடக்க நடக்கவே படத்தை ப்ளாக்கிலே ஏத்தி எல்லார்கிட்டயும் வாங்கிகட்டிகிட்டாரு நம்ம இட்லிவடையார். இதுனால பலபேருக்கு ரத்தகொதிப்பு வந்து இட்லிவடையை பிரிச்சு மேய்ஞ்சு இட்லி உப்புமா ஆக்கீட்டாங்க. இதிலே மிகவும் ஆவேசமா கொலைவெறியோட சுத்திகிட்டு இருக்குர நம்ம ஆருயிர் அண்ணன் லக்கிலுக்கார் இனி தன் வாழ்கையிலே இட்லிவடையை சாப்பிடவே போறதில்லைன்னு பகிரங்க தீர்மானம் நிறைவேற்றியதோட நிக்காம ஆங்காங்கே ஓட்டல் முன்பு நின்னு தன்னோட லக்கி லுக் கொலைவெறி ரசிகர் மன்றம் சார்பா ‘ இட்லி உண்ணா ‘ விரத போராட்டம் நடத்தப்போரதா தகவல் வந்து இருக்குர சூழ்நிலையிலே இனிமே இந்த மாதிரி நடக்காரதை தடுக்கும் தீர்மானத்துடன் மீண்டும் ரகசிய வலைப்பதிவர் சந்திப்பு லக்கிலுக்காரின் பாசறை அமைந்திருக்கும் மடிப்பாக்கத்தில் வரவணையாளன் தலைமையில் உடனடியாக கூடுகிறது. இந்த சந்திப்பையும் இட்லிவடையார் சட்டினி வடிவத்தில்கூட வந்து கவர் செய்து விடுவார் என்ற எச்சரிகை உணர்வுடன் லக்கிலுக்கார் சுத்துவட்டாரங்களில் வெஜிடேரியன் ஓட்டல்களே இல்லாத இடத்தில் தனது பாசறையை அமைத்து இருக்கிறார். இதுவும் பத்தாதுன்னு ஆங்காங்கே தன்னோட ரசிகர் மன்ற ஆட்களை இட்லிமாவு சப்ளை செய்யும் கடை முன்பு நிறுத்தி கண்காணிப்பை பலப்படுத்தி கொண்டிருக்கிறார். எஸ்கே ஐயா அவர்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் வலைப்பதிவர்களுக்கு pressure மாத்திரைகளை அளித்துக்கொண்டிருக்கிறார். இனி Over to மீட்டிங்.

லக்கி : இது அநியாயம் அக்குரமம். இப்படி இனி நடக்கவே கூடாது என்ன ஒரு தைரியம் யார் கொடுத்தது அவருக்கு இந்த தைரியத்தை ??

விக்கி : இட்லி வடை இப்படி பண்ணி இனி நம்மளை வெளியே தலை காட்டவே முடியாம பண்ணீட்டாரே . இனி வெளிய போனா அவ்வளவுதான் ! இனி ஆட்டோ வரப்போகுதோ இல்லை ஆட்டோகிராப் வாங்கபோறாங்களோ தெரியலையே !!!

பொன்ஸ் : தெரியாதனமா என் குரலை ப்ளாக்கிலே போட்டதுக்கே ஆஹா குரலு நல்லாருக்கு கலரு நல்லாருக்கு வர்ற கமெண்டுக தொல்லை வேற ஒரே தலைவலியா இருக்கு இதிலே இந்த இட்லிவேற படத்தைப்போட்டுட்டாரு எப்படி சமாளிக்கரதோ ?? !!!

சிவகுமார் : இது போன்ற நிகழ்வுகள் நம்மை அடையாளம் காட்டும் என்பது ஒருபுறமிருக்க நம் அடையாளமாக நம் எழுதுக்கள் எங்கே போகும் என விவாதிப்பதற்கு ஒரு நல்ல களம் அமைத்துக்கொடுதிருக்கிறது என்றால் மிகையாகாது என்றாலும் அத்துமீறல் உரிமைப்பிரச்சனை ஆகுமா எனற தெளிவு நம்மிடையே இருக்கவேண்டும் .

வரவணை : ஐயா லக்கி சோடா எங்கப்பா ??

மரப்பூரார் : வலைப்பதிவை வடைப்பதிவில் வெளியிட்டதிற்கு கண்டனம் தெரிவிக்கும் தருணத்தில் வருகைப்பதிவேட்டில் என் வருகையை இருட்டடிப்பு செய்ய நிகழ்ந்த சதிட்டங்களுக்கும் என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .

லக்கி : இதைய இப்படியே விட்டா இட்லிவடை இனி மீட்டிங்குன்னு சொன்னாலே இதோ அருள் டீ வழங்கிக்கொண்டிருக்கிரார். இப்பொழுதுதான் லக்கி சேரை தூக்கிக்கொண்டு முன்வரிசைக்கு முந்துகிறார்னு ரன்னிங்க கமெண்டரியே கொடுப்பாரு போல இருக்கே !!

பொன்ஸ் : இனி அப்படியே போட்டோ எடுத்தாலும் யாருடைய முகமும் தெரியக்கூடாது. அதுக்கு இனி எல்லாருக்கும் யானை முகமூடியை toys kemp ல் இருந்து மொத்தமாக ஆர்டர் செய்துவிட்டால் என்ன ?

விக்கி : பேசாமல் நமது அடுத்த வலைப்பதிவர் சந்திப்பை தான்சானியாவில் ‘ கிகிடோ முசாமி ‘ மகாலில் வச்சுக்கலாமா ? பார்வதி மஹாலை கண்டுபிடிச்ச மாதிரி ஈசியா இட்லி நுழைய முடியாது.

வீ பீபுள் : இந்தியனா இருந்துகிட்டு விந்திய மலைச்சாரலை மறந்ததேன் ?? தன்சானியா ஓட வேண்டிய அவசியம் என்ன ? சென்னையிலேயே தாம்பரத்தின் தென் மேற்கே பால மலை அடிவாரத்தில் ‘குடில்கொண்டான் வலசு’ வை புறக்கணிப்பதேன் ?

சிமுலேசன் : ஏன் ஆப்கானிஸ்தானில் தோராபோரா மலைகுகையில் அடுத்த வலைஞர்கள் மீட்டிங்கை வைத்தால் என்ன ? அமெரிக்காவே நெருங்க முடியாத இடத்தில் இட்லி என்ன செய்யும் ??

டோண்டு : இது போன்ற தகவல் பரவலைத் தடுக்க இஸ்ரேலியர்கள் ஒரு அருமையான தொழில் நுட்பத்தை வைத்து இருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன் என்றால் ஏன் என்று யோசித்துப்பார்க்க வேண்டும்

பாலா : ( மனசுக்குள் )ஆஹா ஆரம்பிச்சிட்டாரே . ( சத்தமாக ) யப்பா அருள் அந்த பொருளை கொண்டுவந்தியா ??

அருள் : ம்ம் இதோ ?

பொருளை எடுத்துக்கொண்டு வந்து பயபக்தியுடன் பாலாவிடம் கொடுக்கிறார்.
அதிர்ச்சியுடன் அனைவரும் பாலாவைப்பர்க்கின்றனர்

பாலா : வலையுலக சுனாமி களம் கண்டால் தினவெடுக்கும் தோள்வேந்தன் மடிப்பாக்கம் கண்ட மாவீரன் அண்ணன் லக்கியாருக்கு சென்னைபட்டிணம் சார்பாக
‘ வலையுலக சின்னக்குத்தூசி ‘ என்ற பட்டத்தினை அளிக்கிறோம். நினைவுப்பரிசாக தங்கவாள் அளிக்க மனமிருந்தாலும் மார்க்கமில்லாததால் இந்த ‘ கோணி ஊசி ‘ யை அளிக்கிறோம்

சென்னைபட்டிணம் உறுப்பினர்கள் அனைவரும் போட்டோவிற்கு ' கோணிஊசி 'யை கொடுப்பதாக ‘போஸ் ‘ கொடுக்க லக்கியார் மட்டும் கேமராவுக்கு முதுகு காட்டி அதை பெற்றுக்கொள்கிறார்.

அப்போது திடீரென ஒரு பாடல்

“ பார்க்காத என்னப் பார்காத
ஒரு பார்வையால என்னப் பார்க்காத “

பார்த்தால் பொன்ஸின் மொபைல் போன் பாடி அலறுகிறது . மொபைலில் நாமக்கல் சிபி !! எடுக்கிறார் பொன்ஸ் .

சிபி : பொன்ஸ் இப்போதான் நம்ம இந்தியா தென்னாப்பிரிக்கா மேட்ச் பார்க்கலாம்னு TV ய போட்டேன் .

பொன்ஸ் : சீக்கிரம் சொல்லுங்க சிபி !! இங்க வரலாற்றையே புரட்டிபோடுர விவாதம் நடந்துகிட்டு இருக்கு. இதுலே நீங்க வேற கிரிகெட்டுன்னு !!!

சிபி : அம்மணி பொறுமை ! பொறுமை ! உங்க மீட்டிங் அப்படியே ESPN Channel ல LIVE வா தெரியுதுன்னு சொல்ல வந்தேன் . கீழே Courtesy : இட்லிவடை ன்னு வேற ஓடுதே !!

தகவலை பொன்ஸ் அனைவருக்கும் சொல்ல மிக்கப்பெரிய அதிர்ச்சிக்குளாகிறார்கள்.

லக்கி : ( உரத்தகுரலில் ) இட்லிவடைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............ என அலறிக்கொண்டே ஓட அனைவரும் லக்கியை பின்தொடர்ந்து தெரித்து ஓடி எஸ்கேப் ஆகிறார்கள் .


( பின்குறிப்பு : - வழக்கம் போல தமாசா எடுதுக்குங்க மக்களா !! உதைகிறதுன்னா பார்த்து உதைங்கப்பா. அப்புறம் அழுதுடுவேன் !!! )

Tuesday, November 14, 2006

தீராத வெளையாட்டு பிள்ளை
வெளையாட்டு புள்ளே !
எனக்கும் இந்த விளையாட்டுக்கும் என்னிக்குமே ஏழாம் பொருத்தம் தாங்க.ஆனா மனசு நெறையா வெளையாடனும் கோப்பைய வாங்கனும் வாங்குறபோ அமுதா டீச்சர் பொண்ணு என்னைய ஆச்சரியமா பார்க்கனுன்னு பல கனவுகளை சுமந்துகிட்டு அலைஞ்சேன். சரி எந்த வெளையாட்டு நமக்கு பொருத்தமா இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணுறப்போ ‘அல்லாதுக்கு பிட்னெஸ் தான் மாப்ளே தேவை! மொதல ஓட்டப்பந்தயத்திலே நம்ம கணக்கை ஆரம்பிப்போன்னு! ‘ நம்ம தோஸ்த் ஜார்ஜ் சொன்னதை ‘ நம்பி ’ ஓடரதுக்கு வாத்தியார்கிடே பேரைகொடுத்திட்டேன். அன்னிக்கு பிடிச்சது சனி. ஓடரதுக்கு பயிற்சின்னு சொல்லி வர சொன்னாரு வெளையாட்டு வத்தியார்னு சந்தோசமா போனோம். ஆரம்பத்திலே ground டை சுத்தி ஓடி வரணும். எங்க ஸ்கூல் ground டா சும்மா ஏக்கரா கணக்கா கெடக்கு. மொதோ ரெண்டு ரவுண்டு என்னமோ சந்தோசமாதேன் ஓடுனேன். சரி நிறுத்த சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சு ஓட சொல்லுவாங்கன்னு பார்த்தா ரெண்டு வாத்திக ஆளுக்கொரு மூலையிலே குச்சியோட நின்னுகிட்டு ஓடுங்கடா ஒடுங்கடான்னு வெரட்டிகிட்டு இருக்கனுவ.

எவனாவது கொஞ்சம் ஸ்லோவா ஓடுர மாதிரி இருந்தா பின்னாடி ரெண்டு இழுப்பு வேற . எனக்கா நாக்கு தள்ளுது,நம்ம பய ஜார்ஜ் என்னடான்னா சும்மா பெட்ரோலைக் குடிச்சுபுட்டு பின்னாடி பத்த வச்ச மாதிரி ‘பேய்’ கணக்கா ஓடிகிட்டு இருக்கான். அடப்பாவி மக்கா இப்படி கொண்டாந்து மாட்டிவிட்டுட்டியேடா நாயேன்னு நெனச்சுகிட்டு விதியேன்னு நானும் கொஞ்சம் சமாளிச்சு ஓடி ஓடி அப்படியே க்ரெண்டை விட்டு ஓடி வந்தவன்தான். இனி ground டு பக்கம் தல வெக்கிறதில்லைன்னு கொள்கை பிடிப்போட சுத்திகிட்டு இருந்தேன். இருந்தாலும் இந்த வெளையாட்டு தாகம் அடிமனசிலே warming up பண்ணிகிட்டே இருந்துச்சு.

சரி நாம தான் வெளையாடரது இல்லை அட்லீஸ்ட் எப்படி வெளையாடறாங்கன்னு பார்க்கவாச்சும் செய்யலாம்னு அப்படியாக்கா டிவி ய திருப்புனா ஆஹா வாலிபாலு பேஸ்கட் பால். டென்னிஸ் , சட்டில் கார்க்குன்னு போட்டு தாக்கியெடுக்குராக, அதுலயும் இந்த அம்மணிகள் ஆடுர ஆட்டம் இருக்கே ( நான் வெளையாட்ட தாங்க சொல்றேங்கோ ) அதையப் பார்க்குறதுக்கு கே கொள்ளே ன்னு திருவிழாக்கூட்டம் தான் போங்க. இந்த பொண்ணுங்க ஆடுற டென்னிஸ் இருக்கே அதுக்கு Refree யா இருக்குரதுக்கு ரொம்ப அபார திறமையும் நெசமாலுமே சாமியார்த்தனமும் நெறையா வேணுங்க. என்னா கஷ்டம்! என்னா கஷ்டம் ! இவங்க வெளையாடி எதிராளி சர்வீஸை ப்ரேக் பண்றாங்களோ இல்லையோ பாக்குற நம்ம மனசை போட்டுருக்குற ட்ரெஸ்ஸால கண்டிப்பா ப்ரேக் பண்ணிடுவாங்க. கொஞ்ச காலத்துக்கு மிந்தி இந்த டென்னிஸ் வெளையாடுற அம்மணிக எல்லாம் மொழங்காலுக்கு ஒரு ரெணு இஞ்ச் மேலே வரை ஸ்கர்ட்டு போட்டுகிட்டு வெளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே அது இஞ்ச் பை இஞ்சா உசந்து போயி இப்போ இடுப்புக்கு ரெண்டு இஞ்சுக்கு கீழே வரை ட்ரெஸ் போட்டா போதும்னு ஆகிபோச்சு. இப்படியெல்லாம் பண்ணுனா அப்புறம் எப்படீங்க ஆட்டத்தை கவனிக்கிறது ?

என்னாடா இது பாண்டிக்கு வந்த சோதனைன்னு அப்படியேக்கா கவனைத்தை டென்னிஸ்ல இருந்து வாலிபால் பக்கம் திருப்புனா ஆஹா பீச் வாலிபால்னு போட்டு தாக்கி யெடுக்குராங்க. Ball ஐ இல்லீங்கோ நம்ம மனசைதான். நீச்சல் உடையிலே நீச்சல் தான் அடிக்கனும்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன ? இவுக அப்படியே பீச்சோரம் காத்தோட்டமா வெளையாடிகிட்டும் இருக்காக. ஆம்பிளைங்க எல்லாம் ஒரு பத்து இருவது வருசமா இன்னும் அதே மாதிரி தானே ப்ரெஸ் போட்டுகிட்டு ஆடிகிட்டு இருக்காங்க, இந்த பொண்ணுகளுக்கு மட்டும் எப்படீங்க சும்மா நாளொரு மேனியும் பொழுதொரு ‘ மினி ’ யுமா ஆகிகிட்டு இருக்கு அவுக டெரெஸ்ஸு ?? வெளையாடி வெளையாடி இவுக உடம்பு இளைக்குதோ இல்லையோ இவுங்களை பார்த்து பார்த்து பலபேரு உடம்பு இளைகாம இருந்த சரிதான் .ம்ம்ம் ஆனாலும் வெளையாட்டை விட ரசிக்கிரதுக்கு பலது இருக்குங்க வெளையாட்டுலே !!!

இப்போல்லாம் எங்கம்மா “ இவனுக்கு வெளையாட்டுன்னா உசுரு ! டென்னிஸ் மேட்சுன்னா டிவி வுட்டு நகர மாட்டீங்கரான்ன்னு !! “ பெருமை பொங்க பக்கத்து வூட்டுகாரங்க கிட்டே சொல்லிகிட்டு இருக்கரதை கேட்கறப்போ எனக்கு ஆனந்தக்கண்ணீரா வருதுங்க !!

Thursday, November 02, 2006

கவர்ச்சி Vs ஆபாசம்கவர்ச்சி Vs ஆபாசம்

ரொம்ப காலமா இந்த கவர்ச்சி ஆபாசம்ன்னு நம்ம தமிழ் சினிமா டைரட்டருங்க ஜல்லியடிச்சுகிட்டு இருக்காங்க. அட அப்படி கவர்ச்சின்னா என்ன ஆபாசம்னா என்னா அப்படீங்கறது தெரிஞ்சுகாட்டி எனக்குத்தலையே வெடிச்சிடும் போல இருக்குங்க. சரி இனி அவரதில்லை! ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சிடவேண்டியதுதான்னு நம்ம பேட்டை R & D Center ல நம்ம பசங்க கிட்ட கொடுத்து ஆராயுச்சிபண்ணச் சொல்லி அந்த ஆராய்ச்சியோட முடிவுகளை கொடுத்திருக்கறேங்க. எல்லாரும் படிச்சி உங்க அறிவை வளர்த்துகணுங்கரதுதான் என்னோட ஆசைங்கரது உங்களுக்கு தெரியாதா என்ன ?? இனிமேலாச்சும் கவர்ச்சின்னா என்ன ஆபாசம்னா என்னான்னு தெரிஞ்சுகிட்டு ஜென்மசாபல்யம் அடைஞ்சுக்குங்க மக்களே !!

கவர்ச்சி என்பது

முண்டா பனியனை கிழித்துவிட்டுகொண்டு நமீதா போட்டுகொள்வது

ஆபாசம் என்பது

முண்டா பனியனை அதே நமீதா 10 வருடம் கழித்து போட்டுகொள்வது

கவர்ச்சி என்பது

பொண்டாட்டி ஊரில் இல்லாதபோது Fashion TV ல் மிட்நைட் ஹாட்டில் தெரிவது

ஆபாசம் என்பது

பொண்டாட்டி வீட்டில் இருக்கும்போது Fashion TV வந்தாலே சொல்வது

கவர்ச்சி என்பது

போனில் காதலியுடன் A ஜோக் சொல்லி சிரிப்பது

ஆபாசம் என்பது

போனில் காதலிக்கு A ஜோக் சொல்லுவதை அம்மா கேட்டுவிடுவது

கவர்ச்சி என்பது

பக்கத்து வீட்டு ஆவின் பிகர் தாவணி கட்டிகொள்ளும்போது தோன்றுவது

ஆபாசம் என்பது

அதே தாவணியைஅ தேஜாஸ்ரீ சினிமாவில் பூணுல் போல போட்டுக்கொள்வது

கவர்ச்சி என்பது

கழன்று விழுகிற ரேஞ்சில் ஜீன்ஸ் அணிந்து செல்வது

ஆபாசம் என்பது

அதே ஜீன்ஸ் நெசமாலுமே பொது இடத்தில் கழன்று விழுந்தால் ஏற்படுவது

கவர்ச்சி என்பது

நமீதா என்றாலே ஆண்கள் உணர்வது

ஆபாசம் என்பது

நமீதா என்றாலே பெண்கள் உணர்வது

கவர்ச்சி என்பது


டைட் டிசர்ட் பேண்ட் காதலி போட்டுக்கொண்டுவந்தால் காதலன் சொல்வது

ஆபாசம் என்பது

டைட் டிசர்ட் பேண்ட் மனைவி போட்டுக்கொண்டு வந்தால் கணவன் சொல்வது.

Wednesday, October 25, 2006

Dark & Lovely

Dark & Lovely

எதுவுமே நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கனும் . காரம் மணம் சுவை எல்லாமே. உடம்பிலே ஒருத்தனுக்கு கொஞ்சம் சதை கம்மியா இருந்திட்டா போதும், என்னடா ஓட்டடை குச்சி மாதிரி இருக்கே ம்பாங்க.சரின்னு கொஞ்சம் சதைப்பற்றோட இருந்தா என்ன மாப்ளே எந்த கடையிலே அரிசி வாங்குறவுக ன்னு நக்கல் வுட்டு கலாய்ப்பாங்க. என்னதான் பண்ணறது ? நம்ம சினிமாவிலே எடுத்துகிட்டா ஹீரோயின்க எல்லாமே நாட்டுப்பற்றோட இருக்காங்களோ இல்லையோ சதைப்பற்றோட இருக்கனும் அப்படீங்கறதிலே நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க.

இதிலே அந்த கால சாவித்திரில இருந்து சென்ற கால குஷ்பு மற்றும் நிகழ்கால நடமாடும் குத்துவிளக்கு நமீதா வரை சொல்லிகிட்டே போகலாம். இதிலே மேட்டரே நம்ம தானைய தலைவி நமீதாதாங்க. என்ன பண்றதுங்க. நம்ம தமிழ் சினிமா
எல்லாருக்கும் நல்லா வயிறார சோறு போடுது ஆனா நம்ம ஹீரோயினகளுக்கு மட்டும் வயித்தை மறைக்க ஒரு நல்ல dress போடவிடமாட்டீங்குது. இதிலே நம்ம நமீதா என்ன பண்ணுவாங்க ? அவங்களே ஏதோ கெடச்ச ஒரு மீட்டர் துணிய கஷ்டப்பட்டு சுத்திகிட்டு தன்னோட தொறமையால நடிக்கவும் செய்யுறாங்க. இது நம்ம நாட்டுல இருக்குற சில மாதர் அம்மணிகளுக்கு புடிக்கலைங்களாம். என்ன கொடுமைங்க இது? நமீதா இப்படிப்பட்ட உடைஉடுத்தி மாதர்களை இழிவு படுத்தறதா சொல்லி போராட்டம் நடத்தப்போறதா அறிக்கை வேற. என்னாங்க இது யாருங்க உங்களை அவமானப் படுத்தினா ?

இந்த டீவியிலே பாருங்க எப்போ பார்த்தாலும் சிகப்பழகு க்ரீம் விளம்பரம்தான். பொண்ணுங்க கலரா இல்லாட்டி வேலை கெடக்க மாட்டிங்குது ! கலரா இல்லாட்டி புருஷன் கெடைக்க மாட்டேங்குது ! ன்னு இந்த க்ரீம்காரங்க டுபுக்கு விட்டு விளம்பரம் பண்ணராங்க,.அதைப் பார்த்து நம்ம ஊரு அம்மணிக எல்லாருமே கிலோ கணக்குல க்ரீம் வாங்கி ஏதோ இப்போவே ஏஞ்ஜலீனா ஜோலியோட தங்கச்சி ஆகப்போற ரேஞ்சுக்கு பயபக்தியோட முகத்திலே தடவிகிட்டு இருக்காங்க !! என்ன கொடுமைங்க இது ? ஏங்க இவங்க விக்கறதே சிகப்பழகு கீர்ம்னு சொல்லித்தான். சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா! ஏதோ கதக்களி டான்ஸ் ஆட மேக்கப் போட்ட மாதிரி இருக்காது ?

ஆமா பொண்ணுங்க கருப்பா இருந்தா என்னாங்க? வேலை கெடைக்காதா ? இல்லை யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்களா ? என்ன பேத்தல் இது. கல்யாணம் பண்ணப்போறப்போ பொண்ணு கலரா இருக்கணும்தானே தேடுறாங்கன்னு ஆனா அது வெள்ளைக்கலராதான் இருக்கணும்னு நீங்க ஏங்க முடிவு பண்ணுறீங்க? இதிலே Fairness மீட்டர்ன்னு வேற கொடுக்கறானுங்க. அழகை மீட்டர் வச்சு அளக்க முடியுமா கண்ணுகளா? யோசிங்கப்பூ. அந்த மீட்டர் எல்லாம் பாக்குறவுக கண்ணுலதான் இருக்குங்கரது இந்த பாண்டியோட தாழ்மையான கருதுங்க.பொண்ணு கருப்பா களையா இருக்குண்னு சொல்லிட்டு போங்களேன்.

அதுனால மாதர் குலங்களே! உங்களை இழிவு படுத்துரது எங்கள் தானைய தலைவி நமீதா இல்லீங்கோ. இந்த மாதிரி அழகு கீரீம் விக்கிறவுக தானுங்கோ. உங்க போரட்டத்தை அங்கன போய் வெடிங்க கொளுத்துங்க. பாவம் ஏதோ பஞ்சாப்ல இருந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்து நடிச்சிகிட்டு இருக்குற அப்பாவி மேல ஏம்மா பாயுறீங்க ??

Saturday, October 14, 2006

ஜில்லுன்னு 5 doubts

ஜில்லுன்னு 5 doubtsஎனக்கு தினுசு தினுசா புதுப்புது சந்தேகம் தெனமும் கூரையப் பிச்சுகிட்டு கெளம்புதுங்க. என்னடா சந்தேகம் ஜாவா பீன்ஸா? இல்லை கேரட்டா? ன்லாம் அறிவுப்பூர்வமா எல்லாம் கெடையவே கெடையாதுங்கோ. வழக்கம் போல வாழ்க்கையின் சில ஏன்னு தெரியாத கேள்விகள் தாங்க. அதுலயும் பாருங்க நான் basic கா ஒரு நல்ல ரசிகன். ஆனா அழகு எங்க இருந்தாலும் ரசிக்கரது நம்ம வழக்கம். வழக்கம் போல எனக்கு பழக்கமான ஏரியாவில் அப்படித்தான் நடமாடும் பூச்செடிகளை ( எப்படி பூச்செடி நடமாடும்னு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு அப்பாவியா கேள்வி கேட்குற பால்புட்டி மன்னாருக எல்லாம் போயி ஜொள்ளுபேட்டை மெட்ரிக்குலேசன் ஸ்கூலிலே (கோ- எட் ) போய் LKG சேர்ந்துகுங்க கண்ணுங்களா ) பத்தி கொஞ்சமே கொஞ்சம் சந்தேகம் பக்கத்து வீட்டு ஆர்த்தி விட்ட ராக்கெட் மாதிரியே ‘ஜிவ்’ வுன்னு கெளம்பிடுச்சு. ஆராச்சும் பார்த்து பரிதபப்பட்டீகண்ணா பதில் தெரியாம அல்லாடிகிட்டு இருக்குற இந்த பரிதாப ஜொள்ளு பாண்டிக்கு கொறச்சு help செய்யண்டி !!!

நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமாருக்கும் நம்மள மாதிரியே சந்தேகம் வந்து வெட்கத்தை விட்டு கேட்டுபுட்டாரு, அப்புறம் நானும் ஏதோ என் ரேஞ்சுக்கு சந்தேகத்தை கொளுத்திப்போட்டா என்னான்னு தோணிச்சு. இதோ கொழுத்திட்டேன் !!

என் சந்தேகங்களை அப்படியே அள்ளித்தெளிக்கிறேன் முடிஞ்சா தீர்த்து வைங்க தீர்தயாத்திரை பெரியோர்களே தாலாட்டும் தாய்மார்களே ( மரியாதை மரியாதை ) !!

1) சேலை கட்டுனா இடுப்பு தெரியுது வயிரு தெரியுதுன்னு சுடிதாருக்கு மாறுனீங்களே கண்னுங்களா இப்போ அந்த சுடியிலேயும் Short சுடின்னு இடுப்புக்கு ஒரு ஜாண் மேல இருந்து கிழிச்சு விட்டுகிட்டு என்னைய மாதிரி அப்புறாணியோட கண்ணை கன்னா பின்னான்னு அலைபாய விடுறீயளே ஏங்க ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமிகளே இது நியாயமா ?


2) மொதோ வருசத்துல இருந்து பின்னாடியே நாயா சுத்திகிட்டு உங்களுக்காக வாலிப சந்தோசங்களான தம்மு தண்ணியெல்லாம் தியாகம் பண்ணிட்டு கலியுக முனிவர்களா சடாமுடியோட தெய்வீக காதலோட உங்களையே அம்பாளா நெனச்சு சுத்திகிட்டு இருக்கற அப்பாவி அய்யாசாமிகளை விட்டுட்டு பல்சரில் படம் போட்டுகிட்டு சாயங்காலம் ஆனா ‘கட்டிங்’ தெனம் அஞ்சு பாக்கெட் சிகரெட்டை அல்டாப்பா சாம்பலாக்குற அல்வா வாயன்களோட அலப்பறையா பில்லியனில் குந்திகினு போறீயளே இது ஞாயமா ? அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?


3) உங்களுக்கு வாங்கி குடுக்குற ஒரு ‘பட்டர் பாப்கார்ன்’ ரேட்டுக்கு மெஸ்ஸிலே ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ்சயே ரவுண்டு கட்டு அடிக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கெல்லாம் ராவா ‘கோக்’ கை முக்கி முக்கி குடிச்சாலும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல குடிக்க முடியலையே ?? அதிலே எப்பவாச்சும் ஒரு 60 மிலி கலந்தா வேணா ஒரு 10 நிமிஷத்துக்கு ஒப்பேத்தலாம் !! ஆனா ஒரு 300 மிலி கோக்கை வாங்கி வச்சுகிட்டு எப்படீங்க 3 மணி நேரத்துக்கு குடிச்சுகிட்டு இருக்கீங்க? சொட்டு நீர் பாசனம் போல ‘சொட்டுகோக்’ பாசனம்னு புதுசா ஏதாசும் கத்துகிட்டு வந்துருக்கீயளா?

4) எங்களூக்கெல்லாம் கொட்டாவி விடவே வாயை திறக்க முடியலே. ஆனா எப்பவும் ப்ரெஷ்ஷா FM ரேடியோ மாதிரி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா ? அடுத்தவன் பேசனும் நாம கேட்கணும்னு எப்போவாசும் நெனச்சு பார்த்து இருக்கீங்களா??


5) பொறக்கும்போதே கவச குண்டலடத்தோட பொறந்த மாதிரி எந்த நேரமும் செல்போனும் காதுமா கலக்குறீங்களே நெசமாலுமே பேசறீங்களா இல்லை பேசற மாதிரி படம் காட்டறீங்களா? அதெப்படீங்க கரெட்டா நாங்க pass பண்ரப்போ மட்டும் கஸ்மாலம் பேத்துருவேண்ணு பேத்தனமா செல்போன்ல திட்ட ஆரம்பிக்கிறீங்க ?


இப்போதைக்கு இவ்ளோ போதுங்க ! எல்லாமே என்னோட மற்றும் நம்ம பேட்டை குடிமகன்களோட ஞாயமான சந்தேகம் தானுங்க. படிச்சுபுட்டு அப்புறம் தாய் குலங்களெல்லாம் என் முதுகுலே தீபாவளி கொண்டாடிறாதீங்க . முடிஞ்சா பதில் சொல்லுங்க. இல்லாகாட்டி ஓரமா ஒக்காந்து உங்க சிந்தனைக் குதிரையோட வாலை திருகிவிட்டு பாருங்க. ஏதாச்சும் பதிலு கெடைக்காமலா போய்டும்?

Wednesday, October 04, 2006

அடங்கொப்புறானே !!

அடங்கொப்புறானே
உங்களுக்கு ஹாஸ்பிடல்ல யாரையாச்சும் உயிருக்கு ஆபத்தான நிலைமையிலே அட்மிட் பண்ணி பார்த்துகிட்ட அனுபவம் இருக்கா? நமக்கு அப்படிப்பட்ட அனுபவத்தை என் நைனா கொஞ்ச வருஷமா வாரி வழங்கிட்டு இருக்காரு. நம்ம ஊரு டாக்டருங்க இருக்காங்களே ரொம்ப கூலா போக்ரான் நேபாம்மெல்லாம் பேஷண்டை பார்த்துக்குற ஆண் வாரிசுககிட்டே அப்பபோ போட்டுகிட்டே இருப்பாங்க. “ தம்பி எதுவும் இன்னும் 48 மணி நேரம் போனாதான் சொல்ல முடியும் பார்த்துகுங்க ! “ உடனே ஒரு மூணு லட்சுமி வெடிய ஒன்னா திரியகோர்த்துகிட்டு மனசுகுள்ள வெடிக்கும். தம்பி டாக்டர் உங்கூட பேசனும்குறார் அப்படீன்னு யாராச்சும் வந்து சொன்னா போதும். இப்போ என்ன குண்டத்தூக்கி போடப்போறாங்களோன்னு பயந்துகிட்டே போய் போயி ஒரு கட்டத்துலே என்ன வேணாலும் சொல்லிக்கிங்க டாக்டர். எம் மனசு கல்லாயிடுச்சுன்னு நின்ணு கிட்டு வரதோணும்.

அப்படியே பேசிட்டு நொந்து நூலாகி வெளிய வருவோம் பாருங்க இதுலே இந்த வெள்ளை ட்ரெஸ் போட்ட பிசாசுங்க யாரு ஆங் அதாங்க நர்ஸ்சுங்க அதுக வேற Parallel லா சைடுல இப்படி ஆச்சு அப்படி மூச்சு இழுதுகிட்டாருன்னு போற போக்கிலே கொழுத்தி போட்டுகிட்டு போவாங்க. ஏம்மா ஒத்தைப் பையன் என்னைய பார்த்தா பாவமா இல்லையா ஒருத்தன் எத்தனை அதிர்ச்சியத்தான் தாங்குவான்னு கேட்கத்தோணும் ! எங்கே சிலதுக சிரிக்கிற சிரிப்புல அதுவும் மறந்து போய்டும்.

இப்படியாக அதிர்ச்சி மேல அதிர்ச்சி வாங்கி இடிதாங்கியா ஆகிபோன மனசோட ஆஸ்பத்திரியில் சுத்திகிட்டு இருந்தப்போதான் சிந்தியா என் நைனா இருக்கும் floorக்கு Duty nurse - ஆக வந்தாள். நாந்தான் நைனாவுக்கு பணி செய்வதே என் தலையாய கடமையாக இருந்தேனே. சுத்து வட்டாரத்துலே என்ன நடக்குது என்ன போகுதுன்னு நமக்கு எங்கே தெரியுது? நாக்கை நாலா மடக்கி வாய்குள்ள வச்சுகிட்டு என் கடமையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தேனா பார்துகுங்களேன்.

இந்த காலத்துலே இப்படி ஒரு பையனா ? இவ்ளோ சின்சியரா இருக்கானேன்னு பல பேரு பார்த்துருப்பாங்க போல ஆஸ்பிடல்ல, அதுல நம்ம சிந்தியாவும் ஒருத்தின்னு உங்களுக்கு தெரியாதா என்ன ? சிந்தியா சிரிப்பை சிந்துனா அதுல கூட லேசா பிச்சர் பீரை ஊத்துனா லேசா பொங்குற நுரை மாதிரி ஒரு மெல்லிய சோகம் கொப்பளிக்கிறது தெரிஞ்சுது. அட என்னைய போலவே ஒருத்தி சோககமா இருகாளேன்னு லேசா மனசு மெயின் ட்ராக்கிலே இருந்து ஒதுங்குனா கூட உடனே மெயில் ட்ரக்கான நைனா caring வந்து எல்லாத்தையும் ஓரங்கட்டி ஒதுக்கிடும்.

அப்படித்தான் ஒரு இளங்காலைப் பொழுதுலே ஹாஸ்பிடல் ரூம்ல இருந்து வந்தப்போதான் பார்த்தேன் சிந்தியாவை.அப்போதுதான் Duty ஆரம்பித்து இருக்கும் போல, லேசா மனசு கபடி ஆட ஆரம்பிச்சது நெசந்தான். ஒரு சின்ன வெள்ளை தொப்பி. ஒரு வெள்ளை Frock போட்டுகிட்டு சிந்தியா சிலுப்பிகிட்டு அடிக்கடி அப்புறம் என்னை கடந்து போனா. போற போக்கிலே அப்படியே என்னையய பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை வேற சிந்திட்டு போனா.
உன் floor ல் இருந்தா அப்படிதாண்டா நாயேன்னு நீங்க கத்துறது கேட்குதுங்கோ. ஆயிரம்தான் இருந்தாலும் நைனாவைப் பார்த்துக்குற கடமை வேறு பின்னால் அழைக்குது சிந்தியாவோட சிரிப்பு சத்தம் முன்னால் அழைக்குது என்ன பண்ணுவேன் நான். டேய் பாண்டி இந்த நேரத்திலே தான் steady யா இருக்கனும் என என் கடமையில் கருத்தும் சிந்தியாவின் மேல் கண்ணுமாக அல்லாடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு.

அப்போதான் ஒரு அதிகாலைப் பொழுதிலே வழக்கமான check up புக்கு சிந்தியா ரூமுக்கு வந்தாள். வழக்கம் போல ரெண்டு ஊசியப் போட்டுட்டு நைனாவுக்கு pressure பார்க்க ஒரு பொட்டி வச்சிருப்பாங்களே அதைய திறந்தாள். அப்போதான் கவனிச்சேன் அந்த பொட்டிகுள்ள இருந்து ஏதோ கீழ விழுந்துச்சு.ஆனா அதைய நம்ம சிந்தியா கவனிக்கலை. சிந்த்யாவுக்கு உதவுர பாக்கியத்தை நான் விடுவேனா Never !! பாய்ஞ்சு போய் எடுத்தேன். அட தங்கசங்கிலி.!! இம்மாம் பெருசா இருக்கே. அங்கன பார்த்தா சிந்தியா ஏதோ Pressure பார்ப்பதே தன் வாழ்வியல் கடமையாக சின்சியரா பார்துகிட்டு இருந்துச்சு. சரி சரி பார்க்கட்டும்.இந்த செயினை கொடுத்தா எப்படியெல்லாம் எனக்கு நன்றி சொல்ல போறாளோ??

ரூமை விட்டு வெளியே போய்ட்டா சிந்தி ( செல்லமா ஹிஹி ) . பின்னாடியே ஓடிபோய் கூப்பிட்டேன். ‘சிந்தியா உங்க pressure பார்க்கர Box ல இருந்து இந்த செயின் கீழே விழுந்துருச்சுங்க !! ‘. சிந்தயா முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் வெளிச்சம் . இருக்காதா பின்னே !! ‘ அட இதைதாங்க நான் காலைல இருந்து தேடிகிட்டு இருக்கேன் இங்கதான் இருக்குதா. நல்ல வேளை. என் தாலிக்கொடிங்க இது !! ‘ சிந்தியா சொல்லிக்கொண்டே போக எனக்கு அய்யோ அம்மா ஹார்ட் அட்டாக் வரமாதிரி இருக்கே. சிந்த்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறதே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு இதுலே தாலிய வேற அம்மணி இப்படி கழட்டி வச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தா எப்படி என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பிறன் மனையா இல்லை காலி மனையான்னு கண்டுகரது ?? மார்டன் அம்மணிகளே இதெல்லாம் ஞாயமா?? ஆராச்சும் சொல்லுங்கப்பூ !!

Friday, August 18, 2006

ஞாண் tolet போர்டு கண்டு...

Tolet போர்டு கண்டு
நம்மூரு பஸ்டாண்டுல பஸ்சுக்கு நின்னுகிட்டு இருக்கீங்க. ரொம்ப நேரமா பஸ்சு வராத வெறுப்பிலே நின்னுகிட்டு இருக்குறப்போ ‘கும்சிக்’குன்னு ஒரு பஸ்சு ஆடி அசைஞ்சு வருது. அப்பாடா வந்துருச்சு நிம்மதியா போய் சீட்டுல செட்டில் ஆகலாம்னு ஆசை ஆசையாய் பஸ்சுக்குள்ளார ஏறிப்போறீங்க ! உங்களுக்கு பயங்கர ஷாக் !! என்ன?? எல்லா சீட்டுலயும் ஒரு துண்டோ இல்ல ‘பேக்’கோ போட்டுருக்கு. அடப்பாவிகளா! அதுக்குள்ளாரயும் துண்டு போட்டு சீட்டைப் புடிச்சிட்டீங்களாடான்னு பொலம்பிகிட்டே இறங்கிடுறீங்க ! சரி போனது போகட்டும் அடுத்த பஸ்ஸிலயாவது சூதனாமா இருந்து சீட்டப் புடிப்போன்னு உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிகிட்டு நிக்கிறீங்க !

அடுத்த பஸ்ஸும் வருது .ஆனா அதுலயும் நீங்க சீட்டப் புடிக்க முடியாம ‘பேக்கு’ மாதிரி நிக்குறீங்க. உங்க கண்ணுக்கு முன்னாடியே அவனவன் பாய்ஞ்சு ஜன்னல் வழியா சீட்டைப் போட்டுட்டு ‘என்னாடா புண்ணாக்கு!’ ன்னு உங்களை ஒரு பார்வை வேற பாக்குறானுவ ! என்ன கொடுமையடா இதுன்னு நீங்க ‘தேமே’ன்னு நிக்கிறீங்க. இப்படியே போய்கிட்டு இருந்தா என்னதான் பண்ணுரது ?? என்னடா பாண்டிப்பயலுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறீயளா? அது வேற ஒண்ணும் இல்லீங்க. போன வாரம் ப்ரெண்டு ஒருத்தனைப் பார்த்தேன். பய இப்போ கொஞ்சநாளா சாப்ட்வேர்ல வேலை பார்த்துகிட்டு இருக்கான். நம்மளோட ரொம்ப தோஸ்துங்க.

பய அப்படியே நம்மள மாதிரிதான். ‘என்னடா இப்போல்லாம் phone னே பண்றதில்ல! என்ன ஏதாசும் பொண்ணுகூட செட்டில் ஆகிட்டயா’ ன்னு கேட்டதுதான் . பய ரொம்ப பீலிங்ஸ் ஆய்ட்டான். என்னடா ஏதாசும் தப்பா பேசிட்டனான்னு பதறிப்போய் கேட்டா சொல்றான் “ எங்கடா பாண்டி நானும் ஒவ்வொரு தடவையும் ஏதாச்சும் பொண்ணுங்க வரும் அப்படியே பேசி செட்டில் ஆகிடலாம்னு பார்த்தா ஆவனவன் கம்பெனி வாசல்லயே துண்டோட நின்னு வாசல்லயே மடக்கீடுறானுவ ! என்ன பண்ரது? சரி அடுத்த தடவை வர்றதையாவது மடக்கிடலாம்னு நானும் கையிலே ஒரு துண்டெடுத்துகிட்டு போனா அங்கன பார்த்தா அவனவன் பெரிய ஜமுக்காளத்தையே வச்சிகிட்டு நிக்குறானுவ!! சரி நாமளும் கோதாவிலே இறங்கிடனும் உடக்கூடாதுன்னு நானும் ஒரு ஜமுக்காளத்தை எடுத்துகிட்டு போனா அவனவன் பெரிய தார்ப்பாயையே வச்சுகிட்டு நிக்குறானுவ. இதுலே நமகெங்க இடம் கெடைக்கப் போவுது !! “ ன்னு ரொம்ப சோகமா சொல்லிகிட்டு இருந்தான்.

அடடா இதென்னடா இப்படியொரு சோதனை. இப்படித்தாங்க காலேஜில இருந்து இந்தப் பொண்ணுங்க கூட ஒரே பிரச்சனை. ஏதாச்சும் பாக்குற மாதிரி ஒரு பொண்ணு வந்துடக் கூடாது. உடனே எங்க இருந்துதான் வருவானுகளோ? ஒடனே வந்து பட்டா போட்டு சுத்தியும் வேலிய போட்டுருவானுங்க ! இல்லையின்னா அதுக காலேஜுக்குள்ள நுழையுறப்போவே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டாத்தான் வரும். எவண்டாவன் அதுகுள்ளா ரிசர்வ் பண்ணுனதுன்னு கேட்டா அது ஸ்கூலுல இருந்தேன்னு பதில் வரும். நாம ஒரு ஓரமா RAC ( Reservation against cancellation) டிக்கெட்டோட நிக்க வேண்டியதுத்தான்.

ஆனா சிலபேரு இருப்பானுகங்க ! அந்தப்பொண்ணோட ஏதாச்ச்சும் ஒரேயொரு தகவல் தெரியும். உதாரணதுக்கு அதுக்கு தெலுங்கு தெரியும் அப்படீங்கர ஒரேயொரு ஜல்லி கல்லு கெடைச்சா போதுமே. சும்மா ஜல்லிய கொட்டி தாரைப் போட்டு ஒரு பெரிய காதல் Highwayயே போட்டுருவாணுங்க ! “அம்மாயி சாயிபாபா கோயில் சூஸ்தாரா ? “ ன்னு அரையும் கொறையுமா தெலுங்கு பேசி அப்படியே திருப்பதிக்கு அப்பீட் ஆயிருவானுங்க !

பேசாமா இந்த பொண்னுங்க மனசுக்கு ஒரு TOLET ன்னு போர்டு மாட்டிகிட்டா எவ்ளோ சவுகரியமா இருக்கும்?! “ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “ன்னு பல பாஷை பேசிகிட்டே அவங்க மனசுகுள்ள செட்டில் ஆகிடலாம் பாருங்க ! கொஞ்சம் ரோசணை பண்ணிப்பாருங்க அம்மணிகளா !!

Saturday, August 12, 2006

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு


“ இந்த ரெண்டு வருசத்துலே ஒரு ரெண்டாயிரம் டீயாவது இந்த கடையில குடிச்சிருக்கமாட்டே? “ ஆனந்த் என்னைப் பார்த்து நக்கலாக கேட்டான்.

“ டேய் அவ்ளோலாம் இருக்காதுடா ! ஏண்டா என்னை இப்படி ஓட்டுறீங்க? “ பரிதாபமாகக் கேட்டேன்.

“தினமும் சூரியன் வருதோ இல்லையோ நீ காலைல 7 மணிக்கே
‘டாண்’ ணு இந்த கடைக்கு டீ குடிக்க வந்துடறே இல்லை ? அதான் பாக்கிறோமே! “ கோபி வேறு ஒத்து ஊதினான்.

“ பாருங்க நீங்க இந்த கடையில டீ குடிக்க ஆரம்பிச்சப்போ எவ்ளோ பரிதாபமாக இருந்தது ! இப்போ பார்த்தா பெங்களூர் PUB ரேஞ்சுக்கு டெவலப் பண்ணிட்டான். இதுல பாதியாவது உங்க காசுலதான் வாங்கினதா இருக்கும் ! “ அருண் வேறு தன் பங்குக்கு வெறுப்பேற்றினார்.

நாங்கள் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன், முந்தைய நாள் இரவு ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்ட எதோ தன் வேலையைக் காட்டியதால் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரொம்ப சீக்கிரமே எழுந்துட்டமோ ? என நேரம் பார்க்க காலை 7 எனக்காட்டியது. எனது ரூம்மேட்டுகள் இரண்டாம் சாமத்தில் இருந்தனர். மீண்டும் தூக்கம் வராததால் சரி போய் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று தெருமுனையில் இருக்கும் டீக்கடைக்கு வந்தேன்.

அது ஒரு டிசம்பர் மாதமானதால் குளிர் இன்னும் மிச்சமிருந்தது. கடைக்கு வெளியில் நின்று இரண்டு ‘ சிப் ‘ டீயை உள்ளே தள்ளியபோதுதான் எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்குச் செல்லக் காத்திருக்கும் அவளைப் பார்த்தேன். ஒருவினாடி டீயை என் சட்டையில் சிதறிவிட்டேன். என் மனதையும் தான்.

அழகான கண்கள் , அகலமான கண்கள், சேல்விழி,வேல்விழி , என் விழியில் எல்லாமே தெரிந்தது. பஸ் வாராத வெறுப்பில் அவள் முகம் சுழித்தபோது அந்த சுழிப்புச் சுழலில் சிக்கி அமிழ்ந்து போனேன். ஒருவழியாக அவள் பஸ் ஏறி சென்றபோது நான் இரண்டு கோப்பை தேநீரை முடித்திருந்தேன். அது இரண்டாயிரம் கோப்பையாகும் என நினைக்கவேயில்லை.

பின்வந்த நாட்களில் அதிகாலை 6 மணிக்கே அலாரம் வைத்து எழுந்தேன். பின்னே அப்படியே லுங்கிலயா போய் என் தேவதையப் பார்ப்பது ? 6.45 க்கெல்லாம் குளித்து அரிதாரம் பூசி ரெடியாகி டீக்கடையில் ஆஜராக ஆரம்பித்தேன். டீயையும் அவளையும் சேர்த்து பருகத்தொடங்கினேன். டீக்கடையே என் போதிமரமானது.

இப்படியே எவ்ளோ நாள்தான் கடத்துவது.அவள் பேர் என்னான்னு கண்டுபிடிக்கணுமே ! ரூம் மேட்களிடம் கேட்கலாமா ? அவ்ளோதான்! வேற வெனையே வேண்டாம். கெடைச்சாண்டா ஒரு சின்னத்தம்பி என நம்மை கோமாளி ஆக்கி கபடி ஆடிவிடுவார்கள் ! சமயத்தில் அவர்களே ஹீரோ ஆகிவிட்டால் ?! இந்த மாதிரி மேட்டரையெல்லாம் அடக்கி வாசிக்கனும் பாஸ் .முதல்ல ‘ pitch ’ சை ரெடி பண்ணலாம் . எவன அனுப்பி ரிபோர்ட் வாங்கறது என யோசித்தபோதுதான் உடனே எனக்கு எங்கள் மேன்சனில் வேலை செய்யும் செல்வம் ஞாபகத்தில் வந்தான். பக்குவமாக எடுத்துச்சொல்லி அனுமானாக அனுப்பி வைத்தேன். அடுத்த நாளே வந்தான்.

“ அண்ணே ! அவ பேரு மஞ்சு. +2 படிக்கிறா.” காதுக்குள் கிசுகிசுத்தான்.
“ செல்வம் கண்ணா இது போதுண்டா ! “ ரகசியம் காக்க அவனுக்கு வெகுமதி அளித்தேன். “ அண்ணே வேறே டீடெய்ல் வேணும்னா கேளுங்க. முடிச்சரலாம் “
5 ரூபாய்க்கே 50 ரூபாய் வேலையை செய்யத் துடித்தான். அவனை ஆசுவாசப்படுத்தி அனுப்பினேன்.

அடுத்த நாளிலிருந்து மஞ்சுவின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என யோசித்த போது கிடைத்த ஐடியாதான் ‘ Jogging “ செல்வது. என் ரூம் மேட்களுக்கும் சந்தேகம் வராது.தினமும் காலையில் 5:30 முதல் 6:30 வரை மெரீனாவில் ஓடிவிட்டு அப்படியே டீக்கடையில் ஐக்கியமாக ஆரம்பித்தேன். ( அத்தனை பேரும் தூங்கி வழியும் முகத்தோடு இருக்க நான் மட்டும் தனித்து தெரியமாட்டேன் ? ) மஞ்சு நடந்து வரும் வழியில் இருக்கும் போன் பூத்தில் நண்பர்களுக்கு போன் பேசினேன். எவண்டா இவன் காலங்காத்தால தேவையில்லாம போனப்போட்டு எழுப்பி உயிரவாங்கறானே என அவனவன் மண்டை காய்ந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். இப்படியாக சில பல மாதங்களில் மஞ்சுவின் பரிச்சய பார்வையை பெற்றுவிட்டேன்.

மஞ்சுவிற்கான என் பசலையை ரூம்மேட்களிடமிருந்து நீண்ட நாள் மறைக்க முடியவில்லை. ஒரு இளமாலைப் பொழுதில் என் ரூம்மேட் அருண் , மப்பிலிருந்த செல்வத்திடமிருந்து சுடச்சுட ‘ மேட்டரை ‘ க் கரந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டார். அவ்வளவுதான் அன்றைய அவலானேன்.

“ ஏண்டா ஏதோ உடம்பை குறைக்கதான் நீ ஒடரதா நெனச்சா அந்த பொண்ணணக் கூட்டிட்டு ஒடரதுக்கு trial பார்த்துகிட்டு இருக்கே போல ! “

“ நீ மந்திரிச்சுவிட்ட கோழி ரேஞ்சுக்கு சுத்திகிட்டு இருக்கும்போதே ஏதோ மேட்டர்ன்னு தோனுச்சு ! இதானா அது ! “

“ மாப்ளே பார்த்துடா மைனர் பொண்ண டாவடிசேன்னு தெரிஞ்சுது ஓரங்கட்டி
‘ டின் ’ னு கட்டிருவானுங்க ! “ அக்கரையாய் ரியாஸ் அட்வைசினான்.

“ அதான பார்த்தேன். என்னடா நம்ம குண்டன் மெரினாவே அதிர்ர ரேஞ்சுக்கு 5 மணிக்கே ஒடரானேன்னு ! நீயெல்லாம் காலை 7 மணி அப்படிங்கறதையே பேப்பர்ல தானடா படிச்சிருக்கே.”

நாலாபுறமிருந்தும் comments ஏவுகணைகளாகப் பாய்ந்தன. வாயைத் திறந்தால் பொளந்துவிடுவார்கள் என்பதால் சிரிப்புடன் வழிந்துகொண்டே அமைதியாக அமர்ந்திருந்தேன். “ டேய் செல்வம் தனியா கெடைச்சே நீ செத்தேடா மவனே ! “ மனதுக்குள் கருவினேன்.

அந்த வாரத்தில் மேன்சன் வெளியே நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது எங்களைக் கடந்து சென்ற மஞ்சு என்னை special பார்வை பார்த்துவிட்டு போக அவ்வளவுதான் !

“ டேய் இவதான் ‘ உன் ஆளா? ‘ கேட்ட நண்பர்களிடம் வெட்கத்துடன் ஆமோதித்தேன். பின் பல நாட்களில் நண்பர்களுடன் இருக்கும் போது இல்லாத போது எனக்கு மஞ்சுவின் special பார்வைகள் கிடைத்தது.

ஒரு beach party யில் எல்லா விஷயங்களும் பேசி முடிந்துபோய் கடைசியில் பேச டாபிக் கிடைக்காமல் என் மஞ்சுவின் மேட்டரை எடுத்தனர். இனி கொஞ்ச நேரத்திற்கு நான் செத்தேன்.

“ குண்டா நீ எங்க கூட வர்றப்போ அவ எதிர்ல வந்தா உன்னைத்தாண்டா
பார்க்கிறா ! நாங்களும் பல தடவை பார்த்திட்டோம் “ ( பின்னே தினமும் காலைலே அவளுக்காக தேவுடு காக்கறது எனக்கு தானே தெரியும் ! )

“ மாப்ளே ! உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ‘ லவ் வேவ்ஸ் ’ ஒடுதுடா ! “ கையை sin wave கணக்காக ஆட்டினான் ஆனந்த்.

“ பொண்ணும் நல்லாத்தான் இருக்கா ! உனக்கு ஏத்த ஜோடிதான் ! என்ஜாய் ! “


அவர்கள் பேச பேச எனக்குள் காதல் உடுக்கை தறிகெட்டு அடிக்க ஆரம்பித்தது.
இப்படிப் பேசிப் பேசியே மனச ரணகளமாக்குறான்களே !

“ நாளைக்கு முதல் வேளையா அவள்ட்ட போய் பேசிட வேண்டியதுதான். !” நினைத்துக்கொண்டிருந்த போதுதான் ஞாபகம் வந்தது.
“ மைனர் பொண்ணு ! முதுகுல டின்னு ! “ ரியாஸ் கூறியது அசரீரியாக ஒலித்தது. சரி இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் போய்டுவா அதுவரைக்கும் காத்திருப்போம் ! .

ஆயிற்று ! மஞ்சு காலேஜ் செல்ல ஆரம்பித்துவிட்டாள். அதுவரை 13B பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவள் இப்பொழுது 45B யில் செல்ல ஆரம்பித்தாள்.
இனி 45 Bயே என் தேவதை ரதம் !. எந்த கலேஜ்ல சேர்ந்திருக்கிறா ? டிடெக்டிவ் ஆக மாறி பல probability போட்டு பார்த்தேன். என் சக்திக்கு மீறியதாக இருந்தது.

என் ரூம் மேட் அருணிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. சென்னையில் ஓடும் பஸ் ரூட்டுகள் எல்லாம் அவரின் விரல் நுணியில் ! அதில் வேலை செய்யும் கண்டக்டர்களுக்கே இவர் ஸ்டாப்பிங் சொல்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி இந்த task கை அவரிடம் outsource பண்ணிட வேண்டியதுதான் ! மிகவும் பிகு பண்ணினார் அருண்.

“ ச்சீ ச்சீ என்னைய என்னான்னு நெனச்சுகிட்டு இருக்கீங்க ? போயும் போயும் ஒரு பொண்ணு போற இடத்தை கண்டுபிடிக்க சொல்றீங்களா! Never! என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்த்தென்ன ! “ சலங்கை கட்டாதகுறையாக ஆடினார். நான் கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக அருணை சாந்தமாக்கினேன்.

“ சரி அவளைப் பத்தி டீட்டெய்ல் சொல்லுங்க ! “ சந்தோஷமாக சொல்லத்தொடங்கினேன்.

“ தினமும் காலைலே 7 :30 மணிக்கு 45B ல கெளம்பிடறா அருண் ! அந்த பஸ் எந்த காலேஜ் வழியா போகும்? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.” பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டுகேட்டேன்.

“ உங்க மூஞ்சியெல்லாம் பாக்கிறாளே ! நிச்சயம் ஏதாவது டுடோரியல் காலேஜ்ஜுக்குதான் போய்ட்டு இருப்பான்னு நெனைக்கறேன் ! “ கவலையேபடாமல் மஞ்சுவைப்பற்றி என் நெஞ்சில் ஆசிடை ஊற்றினார். “ யோவ் என்ன திமிர் ! இன்னொருநாள் உனக்கு வச்சுக்கறேன் கச்சேரிய ! “ மனதுக்குள் மட்டும்தான் கருவமுடிந்தது. கோவப்பட்டா காரியம் ஆகுமா ?

“ என்னங்க அருண் கொஞ்சம் சீரியஸா யோசிங்க ! அவ கையிலே drawing sheets எடுத்துட்டு போற குழாய் மதிரி இருக்குமே அதபார்த்தேன் “ எப்படியாவது அருணிடமிருந்து அவர் திறமையை கொணர பல டீட்டெய்ல்களை அள்ளிவீசினேன். ராக்கெட் ஏவும் விஞ்ஞானி மாதிரி அருண் பல கணக்குகளைப் போட்டார்.
“ நிச்சயம் அவ SIT காலேஜ்ல தான் படிக்கணும் ! “ அருண் வாக்கே அல்லாவின் வாக்காக அருணை வணங்கினேன். “ வாழ்க அருண் ! வளர்க அவர்
தொப்பை ! “ மானசீகமாக வாழ்த்தினேன்.

சரி operation ஐ ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஆபரேசனா ? மஞ்சுகிட்டே பேசறதுதான் ! இதற்கும் அருணிடமே ஆலோசனை கேட்டேன்.
“ ஆமா ! பஸ்சில என்ன பேசமுடியும் ? தவிர நேர்ல பார்க்கிறப்போ பேசுறதுக்கு யோசிப்பா. அவளுக்குதான் உங்களைத்தெரியுமே ! பஸ்சில போறப்போ சந்தர்ப்பம் பார்த்து உங்க பேரு, போன் நம்பரை எழுதி அவகிட்ட கொடுத்த்துட்டு வந்திருங்க ! அதான் அந்தப் பார்வை உங்களைப் பார்க்கிறாளே ! நிச்சயம் போன் வரும் ! “ கிருஷ்ண பரமாத்மா கணக்காக எனக்கு உபதேசம் செய்தார். “
“ அருமையான யோசனை ! ரொம்ப தேங்ஸ் அருண் ! “

“ இன்னொரு விஷயம் ! நம்ம ஏரியாவுலகீது கொடுத்துறாதீங்க ! அவளுக்கு தெரிஞ்சவன் எவனாவது பார்த்திட்டு உங்களைப் பொளந்துடப் போறான் “ எச்சரித்தார்.
பயபக்தியோடு தலையாட்டினேன்.
“ பொண்ணு கெடைச்சாலும் புதன் கெடைக்காது. நாளைக்குதான் புதன் !
நாளைக்கே முடிச்சிருங்க ! All the Best ! “ அசீர்வதித்தார்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. புதன் கிழமை. காலை 5 மணிக்கே எழுந்துவிட்டேன். குளித்து அரிதாரம் பூசி 7 மணிக்கெல்லாம் பக்கா கெட் அப்பில் இருந்தேன். தார்மீக ஆதரவாக அருண் பஸ் ஸ்டாப் வரை வந்தார். பாக்கெட்டில் தொட்டுப்பார்த்துக்கொண்டேன். என் பெயர் போன் நம்பர் எழுதிய சிறிய கார்ட் இருந்தது. மஞ்சுவும் நின்று கொண்டிருந்தாள். என்னைப்பார்த்தாளா ! தெரியவில்லை !

அதோ தூரத்தில் தெரிந்தது என் காதல் வாகனம். 45B மெல்ல அசைந்தாடி வந்து நின்றது. Crutial match ல் களமிறங்கும் வீரனை வழியனுப்புவது போல அருண் கைகளிலேயே வெற்றி என காட்டினார். கண்டக்டரிடம் “ ஒரு SIT “ டிக்கெட் வாங்கினேன். பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருந்தது. ச்சே ! மத்த நேரத்தில எல்லாம் எவ்ளோ கும்பலா இருக்கும் ! .நின்னுகிட்டு இருந்தாலாவது மஞ்சு பக்கத்திலே போய் நின்னுகலாம். என் ஆசையில் மண் விழுந்தது.
“ இங்க உக்கார்ந்துகுங்க ! “ ரொம்ப அக்கரையாக கூறினார் அருகிலிருந்தவர்.வேண்டா வெறுப்பாக அமர்ந்தேன். 4 சீட்களுக்கு முன் மஞ்சு அமர்ந்திருந்தாள்.

பஸ்ஸில் கும்பல் ஏறவேயில்லை. யாரவது கிழவி ஏறினால் எழுந்து இடம் கொடுக்கலாம் என்றால் கூட ஒருத்தரையும் காணோம் ! வேறு வழியில்லை. காலேஜ்ஜில் எப்படியும் இறங்குவாள். அப்போ கொடுத்திட வேண்டியதுதான்! எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். என் இதயம் தெரித்து வெளியே விழுந்துவிடுவதைப் போல் துடித்தது.

“ SIT காலேஜ் இறங்கு “ கண்டக்டரின் குரல் கேட்டு எழுந்தேன். எந்த வழியாக இருங்குகிறாள் ? மஞ்சுவைப் பார்த்தேன். “ ஐய்யகோ ! என்ன இது ! ” அவள் எழும் அறிகுறியே இல்லை ! இப்போ என்ன பண்றது ? நான் வேறு SIT வரை தான் டிக்கெட் எடுத்திருந்தேன். சரி ஆவது ஆகட்டும் ! அவள் எங்கே இறங்குறா பார்க்கலாம். இடையில் Ticket checker வந்தா என்ன பன்றது ? பயம் வேறு ஒருபுறம் ஆட்டிப்படைத்தது. மஞ்சுவிற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன்.

ஒரு வழியாக மஞ்சு கிண்டியில் இறங்கினாள். நல்லவேளை யாரும் டிக்கெட் கேட்கவில்லை. மஞ்சு இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வேகமாக நடையைக்கட்டி மஞ்சுவை நெருங்கினேன். “ Excuse me மஞ்சு ! “ சொல்ல வாயெடுத்தேன். திடீரென என்னை உரசியபடி ஒரு பைக் சென்று மஞ்சுவின் அருகில் நின்றது. டோனி ரேஞ்சுக்கு பைக்கில் ஒரு தடியன் ! அவனைக் கண்டதும் மஞ்சுவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி ! “ சீக்கிரம் போ ! உனக்காக இன்னைக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு
வர்றேன் !” மஞ்சு அவனிடம் கொஞ்சிக்கொண்டே பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்றாள்

போக்ரான் அணுகுண்டு என் இதயத்தில் வெடித்தது.. “ மைனர் பொண்ணு பேசினா முதுகுல டின்னு ன்ணு என்னை தடுத்துட்டீங்களேடா! காலேஜ் சேர்ந்து ஒரு மாசந்தானே இருக்கும் அதுக்குள்ளயே எவனோ தேத்தீட்டான்யா தேத்தீட்டான் !
3 ரூபாய்க்கு பஸ்ஸில் கிண்டி வந்த நான் திரும்பி தனியே திருவல்லிகேணிக்கு 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றபொழுது முன் சென்ற லாரியின் பின் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
“ பெண்ணின் திருமண வயது 21 !” அப்போ காதலிக்கும் வயது ? யாராச்சும் சொல்லுங்கப்பா !! ப்ளீஸ் !

Wednesday, August 09, 2006

ஆஹாங் வந்துருச்சு !! - ஜொள்ஸ் வெளியீடு !!

Jolzஅப்போ நான் சென்னைக்கு வந்த புதுசு. கொஞ்சம் சுமாரான கும்பல் உள்ள ஊர்லே படிச்சிட்டு இங்க வந்தா எதுக்கெடுத்தாலும் திருவிழாக்கூட்டம்தான். டீக்கடைக்குப் போனா பஸ்ஸிலே போனா தியேட்டருக்கு போனா எங்கின போனாலும் கும்பல் கும்மியடிச்சிகிட்டு இருந்துச்சு. எங்கயாச்சும் போகனும்னு முடிவு பண்ணினா ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பினாத்தான் உண்டு. அதுலயும் சில சமயம் பஸ்சிலே போரப்போ ட்ராபிக் ஜாம் ஆயிடிச்சுன்னா அவ்ளேதான். முகூர்த்துக்கு போகமுடியாது சாந்தி முகூர்த்ததுக்குதான் போகமுடியும் .எவண்டா இவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு பஸ்சப் புடிச்சு போறதுன்னு ஊர்ல நம்ம் பைக் சும்மாதானே நிக்கிதுன்னு நம்ம நைனாவுக்கு போனப்போட்டு ‘பைக்’பார்சல்ன்னு சொல்லி அனுப்பிச்சேன். பைக் வந்துருச்சு. அப்படியே அடிதடி இல்லாம அலுங்காம குலுங்காம நகர்வலம் போறப்போ சும்மா கும்முன்னு இருக்கும்.


அப்போதான் கவனிச்சேன் இந்த ஊர்லே அல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துரானுவ. அதுலயும் இந்தப் பொண்ணுங்க பார்தீங்கண்ணா ஏதோ குரங்குகுட்டி எங்க கீழே விழுந்துருவனோன்னு அம்மாவை புடுசுக்குமே அதுமாதிரி பைக் ஓட்டுர பையனை பல்லி மாதிரி ஒட்டிகிட்டு போகுதுங்க !சரி சிக்னல்ல நிக்கிரப்போவாச்சும் கொஞ்சம் வெலகுமான்னு பார்த்தா ம்ஹூம் கவலையே படாம அவனோட காதப் புடிச்சி பெராண்டிறது கிச்சி கிச்சி மூட்டுரதுன்னு அமர்க்களப் படுத்துதுங்க ! இதுலே துப்பட்டாவால முகத்தை வேற மூடிகிட்டு தான் இத்தனை அட்டகாசமும். எனக்கும் இவுகளப் பார்த்து ஒரு மாதிரி ஆகிபோச்சு. என் பைக் பில்லியனைப் பார்த்தேன். காலியாத்தேன் இருக்கு.

மேன்சனில் என் ரூம் மேட்டுகிட்டே என் ஆதங்கத்தை சொன்னேன். பய குஜாலாய்ட்டான். மாமே அதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே கெடையாது. பைக் வேற வெச்சுருகே. உனக்கென்னடா கொரச்சல்.ரூம் மேட் சொல்ல சொல்ல மனசு ஒத்தை வீலில் பக் ஓட்டியது. என்ன ஒரு சின்ன சிக்கல்னா விட்டிலே நம்ம அம்மா தன்னோ பாசத்தையெல்லாம் நெய்யும் முட்டையுமா காட்டுனதுலே நம்ம உடம்பு என் அம்மாவோட மனசு மாதிரியே பெருசாய்டுச்சு ! என் பின்னாடி பைக்கிலே ஒக்காரவே பசங்க கொஞ்சம் யோசிப்பானுக. இப்படியான நெலமையிலே தான் இப்படிபட்ட ஆசையெல்லாம் லேசா எட்டிபார்க்க ஆரம்பிச்சு இருந்துச்சு. டேய் என்னைய நேர்லே பார்த்தா பொண்ணுங்கெல்லாம் அரிசி மூட்டைன்னு ஓட்டி எடுத்துருவாளுகடா ன்னு பரிதாபம கேட்டப்போதான் ‘போடாங்க’ ன்னு ஒரு பார்வை பார்த்தான். ஏண்டா இப்பேல்லாம் இண்டர்நெட் , சாட்டுன்னு எவ்ளோ வழி இருக்கு. இப்போதானே பிள்ளையார் சுழி போட்டுருக்கே! இன்னும் போக வேண்டிய தூரம் இருக்குடா’ன்னு ஆறுதல் சொல்லி இப்போவே ஏதாச்சும் நெட் கபேக்கு போலான்னு கெளம்பீட்டான். ஒருத்தனை கவுக்கறதுக்குன்னா பாருங்களேன் எப்படி அலையரானுவ.

என்ன பண்றது? பய எனக்கு நெட்டு சாட்டுன்னு நமக்கு சொல்லிக்கொடுத்தான். காலேஜிலே கம்ப்யூட்டர் லேப்னாலே காத தூரம் ஓடுர நான் இவன் சொல்லிக் கொடுத்தபோ பயபக்கியோட கேட்டுகிட்டேன். ஆசை யாரை விட்டுச்சு? அதுக்கபுறம் எனக்கு காலையிலே பைக்க எடுத்துகிட்டு நெட் சென்டர்லே நுழைஞ்சா சும்மா கதறக் கதற சாட் பண்றதுதான் நம்ம முழுநேர வேலையாப் போச்சு.. பேசறது பையானா பொண்ணான்னு கண்டே பிடிக்க முடியாது. இருந்தாலும் நம்பிக்கையோட ஆரம்பிச்சேன் என் தேடுதல் வேட்டைய. சில பொண்ணுங்க ரொம்ம நேரம் பேசி நம்மளை ஏத்திவிட்டுட்டு நான் பையன்ன்னு சொல்லி நம்ம நெஞ்சிலே பழுக்க காய்ச்சி இழுத்துட்டு போகும்.சிலதுக பயங்கரமான கோபத்திலே எப்பவுமே இருக்கும் இப்படி பலதுக. தெனமும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனாய் நானும் என் சாட்டிங்கும். இப்படியாக ஒரு மாசம் போயிருக்கும் அப்போதான் ஒருநாள் சாட்டிங்கில் அவள் வந்தாள்.

பேரு சுமா ஊரு சென்னைன்னு வழக்கம் போல ஆரம்பிச்சாச்சு. இது எவ்ளொ நேரதுக்கு ஓடுமோன்னு நெனச்சுகிட்டே சாட் பண்ணிகிட்டு இருந்தேன். இப்படியாக தினமும் காலையிலே சுமா ஆன்லைனில் என்னுடன் சாட் பண்ண ஆரம்பித்தாள். என்னிக்காச்சும் அவளை ஆன்லைனில் பார்க்க முடியலைனா போதும் மனசு கெடந்து அடிச்சிக்கும். என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு. கொஞ்சம் கொஞ்சமா சுமா என் மனசுகுள்ளே வர ஆரம்பிச்சிட்டா ! தேவையிலாம ‘காதலர் தினம்’ படம் வேற பேக் க்ரண்டில் ஒட ஆரம்பிக்கும். சோனாலி பேந்ரே மாதிரி இருக்பாளோ?? லேசு பாசா அவகிட்டயே கேட்டா என் கண்ணு மீனா மாதிரி இருக்கும். இப்போதைக்கு அவ்ளோததன் சொல்ல முடியும்னு சொல்லிட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவா ! நம்மளைப் பத்தி கேட்டா போதும் நான் லேசா சூர்யா சாயல்ன்னு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவானுகன்னு பட்டும் படாமலும் சொல்லுவேன். ஏன்னா சூர்யாவைத்தான் பல பொண்ணுகளுக்கு புடிக்குமாம்லே?? காசா பணமா அளந்து வுடுடா பாண்டின்னு சும்மா மடை திறந்த வெள்ளம் போல புழுகுதான்.


இப்படியாக போய்கிட்டு இருந்தப்போதான் ஒருநாள் என் போன் நம்பர் கேட்டா. நானும் கொடுத்தேன். அன்னிக்கு சாயங்காலமே எனக்கு போன் சுமா கிட்டே இருந்து. ஆஹா பாண்டி ஒரு பொண்ணு அதுவும் சென்னையிலே முதோ முதலா கேர்ள்ப்ரெண்டு கெடச்சுட்டா !!! கத்திகிட்டே ஓடணும்போல இருக்கு. சும்மா சொல்லக் கூடாது சுமாவுக்கு அப்படியொரு குரல் வளம் . அப்படியே தேனிலே கரைச்ச வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டு ஓடுது. ஒரே குஜால்ஸ் தான் போங்க. அப்புறம் என்ன போன்லதான் சாட் ! போன் பில் கணக்கு கன்னா பின்னான்னு எகிற ஆரம்பிச்சிடுச்சு. நம்ம ரூம் மேட்டுக்கு ஒரே ஆச்சரியம் அப்புறம் கொஞ்சம் பொறாமை வேற. வாலிப வயசிலே இதெலாம் சகஜமபான்னு நானும் பேசிகிட்டே இருப்போம். இன்னமும் சுமா எப்படி இருபான்னு எனக்கு தெரியலே. ஒருநாளாச்ச்சும் நேரிலே பார்க்கலாம்னா பிடி கொடுக்கவே மாட்டேங்கறா. பல சினிமாக்கள் வேற பார்க்காமல் காதல் பேசாமல் காதல் காதலே இலாமல் காதல்ன்னு நம்ம கோடம்பாக்கம் டைரக்டர்கள் எல்லாம் காதல் கோடாங்கிகளா மாறி எனக்கு அவங்க படம் மூலமா பல்வேறு கற்பனைகளை அள்ளித் தெளிச்சி விட்டிருந்தாங்க. காதல் கோட்டை தேவயாணி போல இருப்பாளா ? இல்லை காதலர் தினம் சோனாலி பெந்தரே?? இப்படியேல்லாம் கனவிலேயெல்லாம் கூட வர ஆரம்பிச்சிடுச்சு.

இதுலே எனக்கு வர்ர போன் கால்களைப் பத்தி எங்க பசங்க மத்தியிலேவேற பல்வேறு கற்பனை கதைகள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மெஸ் மீல்ஸை ஒரு கட்டு கட்டிவிட்டு ஏகாந்தமா படுத்து தூங்கிகிட்டு இருக்கறப்போ போன் வந்தது. அட என் சுமா !!! என்ன சுமா ன்னு பேச ஆரம்பிச்சா ‘பாண்டி கொஞ்சம் நான் சொல்ற இடதுக்கு உடனே வர முடியுமா? நான் வந்த வண்டி பாதி வழியிலே பஞ்சர் ஆய்டுச்சு. ஞாயித்துக் கிழமைங்கரனால கடையே இல்லை. அப்போதான் உன் ஞாபகம் வந்துச்ச்சு. கொஞ்சம் வர முடியுமா? நான் ப்ளாக் ஜீன்ஸும் ரெட் டிசர்ட்டும் போட்டு நின்னுகிட்டு இருப்பேன்..நீங்க இருக்கற இடதுக்கு பக்கதுல தான் இருக்கேன் ப்ளீஸ் !!! ‘ அந்தகுரல்ல இருந்த ‘ப்ளீஸ்’ ஆகா ‘இதற்குத்தானடா ஆசைபட்டாய் பாண்டின்னு’ மனசு கெடந்து அடிச்சிக்குது. கமான் சீக்கிரம் கெளம்பு உன் பைக் காதல் ரதமாகப் போகுது ? ஆமா நான் உக்கார்ந்தா அவ உக்கார இடம் இருக்குமா. நம்ம சைஸ்ஸை பார்த்து எஸ்கேப் ஆய்டுவாளோ?? ச்சேசே முடியாதே அதான் நடு ரோட்டுலே நிக்கிறாளே !!

எக்ஸ்ரா ரைஸ் உபயத்தில் ரூம் மேட் வாயப் பொளந்து தூங்கிகிட்டு இருந்தான்.
சத்தமில்லாம கெளம்பினேன் வந்து சொல்லிக்கலாம் இந்த சேதின்னு. பைக்கிலே உட்கார்துகிட்டு பின்னாடி கஷ்டப் பட்டு பார்க்க முயற்சித்தேன் முடியல!. இருக்கு கொஞ்சம் இடம் இருக்கும் எப்படியும் என்னைய இடிக்காம அவ ஒக்கார முடியாது. என்ன ஒரு சந்தோசம்! சுமா சொன்ன இடம் நான் இருக்கர இடத்திலிருந்து எப்படியும் ஒரு 6 கிலோமீட்டராவது இருக்கும். பல்வேறு கற்பனையோட போய்கிட்டே இருந்தேன். அவ சொன்ன இடம் வரப்போகுது. பரபரப்பா இருக்கு எனக்கு. துரத்திலே தெரியுதே சிகப்பு கலர் அவ தானோ?? மிதமான வேகதில்தான் சென்றேன். நான் எப்படியிருபேன் எந்த வண்டியில் வருவேன்லாம் அவகிட்டே நான் சொல்லலே. எல்லாம் ஒரு திரில்லுக்குதான் !

அதோ தூரத்திலே ஒரு வண்டியும் அது பக்கத்திலே ஒரு பொண்ணுபோல தெரியுதே. அப்போதுதான் கவனிச்சேன். சுமா சாதரணமாக இல்லை ஒரு சுமோ ரெஸ்லர் ரேஞ்சுக்கு என்னைப்போல இருமடங்கு சைஸில் !!! அய்யகோ இதென்ன சோதனை. தேவயாணி, சொனாலி பேந்ரே எல்லாம் சினிமாவில தானா?? எனக்கா இப்படியாக வேண்டும்? சுமா என் பைக்கில் உக்கார்ந்தா நெசம்மாலுமே பைக் ஒத்தை வீலில்தால் போகும். எப்படிடா பாண்டி தப்பிக்க போறே?? அவளுக்குதான் நான் எப்படி இருபேன்னு தெரியாதே ! போனை எடுத்தேன். ‘சுமா நான் வந்துகிட்டு இருந்தபோ பாதி வழியிலே என் வண்டியும் பஞ்சர் ஆய்டுச்சு. சாரிடா.’


Tuesday, August 08, 2006

ஆஹாங் வந்துருச்சு !!! ( குங்குமம் வெளியீடு )

குங்குமத்தில் வந்த என்னோட கதையை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கேன். பார்த்து படிங்கப்பூ!!! :))


Monday, August 07, 2006

நன்றி பாலா !!

நன்றி பாலா


நமக்கு இந்த சின்ன வயசில இருந்தே போட்டி போடருதுன்னா சுத்தமா புடிக்காது ! படிக்கரதுல இருந்து ஓடரது வரைக்கு எதுலையுமே போட்டி போட்டதே இல்லை ! போட்டின்னு ஒன்னு போட்டாதானே தோல்வின்னு ஒன்னு வரும்? இப்படிப்பட்ட உயரிய லட்சியத்தோடு ( சேம்பேறித்தனத்தை எப்படி சொல்றதாம்?) வாழ்ந்துகிட்டு இருக்கறப்போதான் அண்ணன் பாலாஒரு அறிவிப்பை வெளியிட்டாரு.

குங்குமத்தில புது முகங்கள் எழுத வாய்ப்பு!! நான் வழக்கம் போல அதைய படிசிட்டு விட்டுடேன்.பாலாண்ணன் கொடுத்த தேதியும் முடிஞ்சுபோச்சு ! அன்னிக்கு சாயங்காலம் ஒரு போன். போன்ல நம்ம பாலாண்ணன் !!! என்னாவே பாண்டி நான் கொடுத்த அறிவிப்பை படிச்சியா இல்லயான்னாரு.அண்ணே வழக்கம் போல நான் படிசிட்டு மறந்துட்டண்ணேன்னேன் அவ்ளோதான் பாலாண்ணே கதக்களி குச்சிப்புடின்னு போன்லயே நம்மளைப் போட்டு பிண்ணிட்டாரு. ஒழுங்கு மருவாதையா ஒரு கதைய நாளைக்கு காலைல 10 மணிக்குள்ளார அனுப்பலைனா நடக்கறதே வேறன்னு கொலை மிரட்டல் வேற !! என்ன பண்ணுவேன் ! உயிரைக் கையிலே பிடிச்சிகிட்டு ஒரு கதைய எழுதி அணுப்பினேன் !!

அது இந்த வார குங்குமத்தில் “ ஆஹா வந்துருச்சு ! “ . கதையோட தலைப்பும் அதுதான் ! முதோ முதலா நம்ம எழுத்தை அச்சுல பார்குரப்போ என்னே ஒரு சந்தோசம் !! ஒரு சூப்பர் Figure எங்கிட்டே வந்து பேசுன மாதிரி !! காலையிலே இருந்து தலை கால் புரியலே !!

அண்ணன் பாலா என்னைய புடிச்சு இப்படி போட்டு வாங்கலைனா என்னால இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிச்சிருக்க முடியாது !! பாலாண்ணே ரொம்ப நன்றிங்கண்ணா !!!

குங்குமத்தை நீங்க இங்க இருந்தே படிச்சிக்கலாம் ! ஆனா இந்த வார குங்குமம் இன்னும் update ஆகவில்லை. குங்குமத்திலே வந்த நம்ம கதைய உங்களுக்காகவே ஆஹா வந்துருச்சு - uncensored version கூடிய விரைவில் வலையேத்துகிறேன் !

கூடவே நம்ம சக வலைப்பதிவாளர்கள் நிலவு நண்பன்,பொன்ஸ்,விழியன்,அனிதா பவன்குமார், நிலாக்கா, ஜெஸிலா, மற்றும் ராசுக்குட்டி அவர்களுடைய கவிதைகளும் வந்திருக்கு. அல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேனுங்கோ !!

Thursday, July 27, 2006

டிசர்ட் (a) Tranquilizer

ஜொள்ளுப்பேட்டைரொம்ப நாளா நானும் பார்துகிட்டு தான் இருக்கேன். ரொம்ப கரைச்சலைக் கொட்டுத்துகிட்டே இருக்குதுக இந்த பொண்ணுங்க. ரோட்டுல, ஷாப்பிங் சென்ட்டர்ல சினிமா தியேட்டருல எங்கயுமே நிம்மதியா இருக்க முடியலெ ! சிக்னல்ல நின்னா இதுக பாட்டுக்கு parallel லா சிக்னல் கொடுதுகிட்டு எவன் செத்தா எனக்கென்னான்னு போய்ட்டே இருக்குதுக ! சரின்னு இதுகளைப்பார்த்தாலே ‘ காக்க காக்க’ ன்னு கந்த சஷ்டிகவசம் சொல்லிட்டு தப்பிக்கலாம்னு பார்த்தா அது பாட்டுக்கு low rise ஜீன்ஸ்ல நம்ம BP ய rise பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி போய்ட்டு இருக்குதுக ! நம்ம கண்ணு இருக்கே நம்ம சொல்லை என்னிக்கு கேட்டு இருக்கு? நீ என்ன வேணா சொல்லிட்டு போ நான் என் வேலைய பார்த்துகிட்டு இருக்கேன்னு மானாவாரியா Browse பண்ணி நம்மளை வாரிடுது !


என்ன பண்றதுன்னெ தெரியலெ ! இப்படித்தான் போன வாரம் நம்ம சகா ஒருத்தனை மீட் பண்றதுக்காக ஒரு ஓட்டல் lounge ல் ஒக்கார்ந்து கிட்டு இருந்தேன். அப்போதான் எதிரிலே ஒரு ரெண்டு பொண்ணுங்க வந்து ஒக்காந்துச்சுங்க. ஒரு பொண்ணு குர்தா டாப்ஸும் ஜீன்ஸும் போட்டு இருந்துச்சு. இன்னோரு குட்டி பிசாசு ஜீன்ஸும் டிசர்ட்டும். கொஞ்சம் நேர ஆராய்ச்சிக்கபுறம் தான் தெரிஞ்சுது அவுங்க அம்மாவும் பொண்ணுன்னு ! இதென்னடா இப்படி ஒரு மார்டன் குடும்பமான்னு பிரமிச்சு போயி இருந்தப்போதான் கவனிச்சேன் அந்த குட்டி பிசாசு போட்டிருந்த டிசர்ட்டுலே என்னமோ எழுதி இருந்துச்சு.

உடனே எனக்குள்ள இருந்த படிப்பு ஆர்வம் குலுக்கி ஓபன் பண்ணுன பீர் பாட்டிலைப் போல பொங்கு பொங்குன்னு பொங்கிருச்சு ! நாமதான் சீவக சிந்தாமணீயிலிருந்து சிட்னி செல்டன் வரை படிக்கறவுக தானே ( சும்ம ஒரு சின்ன பில்டப்பு கண்ணுகுறாதீங்க ! ) ஒரு தம்மாத்துண்டு நாலே நாலு வரி இருக்குற அந்த டிசர்ட் வரிகளை படிக்கனுன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. சரி படிச்சு தொலைக்க வேண்டியதுதானேன்னு கேக்கிறீயளா ? எங்கே ? அந்தக் குட்டி பிசாசு படிக்க உட்டாத்தானே ! மொதோ வரியைப் படிப்பேன் அவ்ளோதான் அங்கிட்டு திரும்பி மம்மின்னு ஏதாச்சும் பேசறது. நம்ம படிப்பு ஆர்வம் தெரியாத மம்மியும் நம்மளை சந்தேகக் கண்ணோட அப்பப்போ செக் பண்ணிகிட்டே வேற இருக்கு. இந்தகுட்டி வேற கண்ணா பின்னானு நெளிஞ்கிட்டு இருக்கரதுல எங்கத்த தெளிவா படிக்கறது?

என்னுடைய பல திறமைகளை உபயோகிச்சி ஒரு வழியா படிச்சிட்டேன் ! வேற ஒன்னும் இல்லை “ Kiss me Before my Boyfriend Comes !” அவ்ளோதான் மேட்டரே. நான் படிச்சுட்டு அதோட மொகத்தை பார்த்தா ஒரு நக்கலான சிரிப்பு வேற. எங்க போயி சொல்றது ! ஆனாலும் இந்த டிசர்ட் இருக்குதே நெசம்மாலுமே கண்ணாபின்னான்னு உபயோகப் படுத்தர வஸ்து ஆயிடுச்சு பொண்ணுக மத்தியிலே. என்னைய மாதிரி பப்ளிக்கா சொல்லிட்டு ஜொள்ளறவனுகளுக்கு இல்லை பப்ளிக்கா சொல்லாம ரகசியமா ஜொள்ளாறவகலுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்னாலும் சமூகப் பொறுப்புன்னு ஒண்ணு இருக்கே ! ( யாராது கை தட்டாமல் இருக்கரது ? )

எனக்கு பல நாளாவே சந்தேகம் ஒருவேளை இந்த டிசர்ட் போட்டுக்கற பொண்ணுக எல்லாம் ஏதாச்சும் அளவு தெரியாம சின்னதா வாங்கிறதுகளோ? பாவம் ! சேலை கட்டுனாதான் தொப்புள் தெரிய கட்டமுடியும் நான் நெனச்சுகிட்டு இருந்தா அந்த நெனப்புல மண்ணள்ளி போடுற மாதிரி டிசர்ட்ல கூட நாங்க தொப்புளைக் காட்டுவோன்னு ஒரு கோஷ்ட்டி சுத்திகிட்டு இருக்கு. அதுக போடுற ஜீன்ஸும் இப்பவோ அப்பவோன்னு கழண்டு வுழுகுற ரேஞ்சுல இருக்கு. அதுக்கு மேல போடுற டிசர்ட் என்னடாண்ணா எங்க இடுப்பைத் தொட்டுருமோன்னு பயதுகிட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கு ! என்னைய மாதிரி ஆளுக பாடுதான் ரொம்பத் திண்டாட்டமா போயிடுது. ! ஏம்மா இப்படி பண்ணுறீங்க ! உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? இங்கிலீஷ் படத்துலே மட்டுமே இதுபோன்ற உடைகளைபார்த்து கெடந்த எனக்கு ரொம்ப நாள் கழிச்சி போன வாரம் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா போனப்போ பார்த்து ‘பல்பு’ ஆய்ட்டேன்.

கொஞ்சநாள் மின்னாடிதான் தாவணியக் காணோம் னு ஒரு பதிவப்போட்டா இப்போ என்னடான்னா சுரிதாரையே காணோமே !!! அன்னிக்கி ஸ்பென்ஸர்ல வந்ததுகள்ள ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் சுரிதாரும் பூவும் வச்சுருந்துச்சுன்னா பார்த்துக்குங்களேன் ! இப்படியே போனா என்ன ஆகப் போகுதோ !! இன்னும் என்னென்னெல்லாம் காணாமப் போகப் போகுதோ !

Tuesday, July 11, 2006

Gym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி !

Gym ஜினாக்கிடி

ரொம்ப நாளாவே எனக்கு இந்த ‘ஜிம்’முக்கு போகனுங்கரது ஆசை. இதுல வேற நம்ம ஹாலிவுட் ஹீரோஸ் அர்னால்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன் படங்களையெல்லாம் பாக்குறப்போ சும்மா ஜிவ்வுன்னு ஜிம்முக்கு போற ஆசை கூரையப் பிச்சிகிட்டு கெளம்பும். என்னடாது இப்படி இருக்குறானுவ! நாம என்னிக்கி இப்படி ஆகறதுங்கற ஏக்கம் வேற ! நம்மூரு பொண்ணுங்க வேற கோழிக்குஞ்சு கணக்கா இருக்குறாளுவ. நாம ஆசைப் பட்டு இவனுக சைஸ் ஆகிட்டா நம்மளைப் பார்த்து தெரிச்சி ஓடிருவாளுகளேன்னு வேற தேவையில்லாத ஒரு கவலை அப்போ !

டேய் பாண்டி இந்த வயசிலயே ஜிம்முக்கு போனா உசரமா வளர முடியாதுடான்னு என் க்ளாஸ்மேட் அய்யாச்சாமி சொன்னதையே வேதவாக்கா எடுத்துகிட்டு ஜிம்முக்கு போற என் ஆசைய காலேஜ் போற வரைக்கும் ஒத்தி வச்சேன்.எங்க ஊரு பைப்பாஸ் ரோடுல நானும் அய்யாச்சாமியும் காலைல எந்திரிச்சு வெள்ளை பனியன் டிரவுசரைப் போட்டுகிட்டு ஓடுவோம். ஜாகிங் போறதுன்னாலே வெள்ளை யூனிபார்ம் தான்னு எனக்கு பல தமிழ் சினிமாக்கள் கத்துகுடுத்துருக்கில்ல??

காலேஜிலே ஒரு அருமையான ஜிம் இருந்துச்சு ! மொதோ வருசம் எட்ட நின்னு பார்த்துகிட்டதோட சரி. போகலை. ராகிங் பயம்தான் ! ஒருவழியா ரெண்டாவது வருசம் தான் உள்ளே எட்டிப்பார்த்தேன். ஒவ்வொருத்தனும் ஒரு மார்க்கமாத்தேன் இருந்தானுவ. என் சீனியர்ஸ் பல பேரு இருந்ததால நானும் ஒரு ஓரமா பம்மிகிட்டே இருந்தேன். தனியாப் போனா சரிப்படாதுன்னு நம்ம பயலுவ எவனையாவது கூட்டிகிட்டு போலாமின்னு பார்த்தா ஒரு பயலும் மசிய மாட்டேனுவரானுக. ஒரு வழியா கஷ்டப்பட்டு என் ப்ரெண்ட் தீபக்கை ஜிம்முக்கு போலாம்டான்னு கூப்புட்டேன். பயபுள்ள அவனும் மசிய மாட்டேனுட்டான்.டேய் தீபக்கு இப்படி தேவாங்கு மாதிரி இருந்தால்லாம் நம்ம காலேஜு பொண்ணுக எவளும் மதிக்க மாட்டாளுவடான்னு ஒரு ‘பிட்’டைப் போட்டேன்.பய கண்ணாடிய பாக்க ஆரம்பிச்சுட்டான். அவ்ளோதான் ஒருவழியா ‘ஜிம்;முக்கு ஒரு பார்ட்னரை தேத்தீட்டேன்.

அடுத்த நாளுல இருந்து ரெகுலரா ‘ஜிம்’முக்கு போக ஆரம்பிச்சாச்சு. ‘ஜிம்’முல டம்பிள்ஸ் எடுத்து கொட்டை போட்ட ( எத்தனை நாளைக்குத்தான் பழம் தின்னு கொட்டை போடரது? ) பல பேரு இருந்தானுவ. நாங்க ஒரு ஓரமா கொஞ்சமா வெய்ட் இருக்குற டம்பிள்ஸை தூக்கிகிட்டே அல்லாறும் என்னனென்ன பண்ணுறானுவன்னு நோட்டம் பாத்துகிட்டே இருப்போம். அவனவன் டிசைன் டிசைனா வெய்ட்டைத் தூக்குறானுவ. சில பேர் வெய்ட் தூக்கறதைப்பார்த்தாலே எனக்கு பேதி கெளம்பும் . என்னாடாது நம்மளாம இந்த கர்லாக் கட்டையவே தூக்க முடியலே இவனுக இப்படி கட்டைய சுத்தி பின்னு பின்னுன்னு பின்னுறானுகளேன்னு ஒரே பொறாமையா இருக்கும். அர்னால்ட் ஆகரது சாதாரண விஷயம் இல்லைங்கறது புரிஞ்சு போச்சு. அர்னால்ட் ஆகறதுகுள்ள அரைக் கிழவன் ஆயிடனும் போல இருக்கே!!

இதுலவேற ரெண்டு நாள் கழிச்சி கை காலெல்லாம் ஜிம்முக்கு போறதால ஒரே வலி. இந்த தீபக்கு பய இனி ஆவறதில்ல நீயே போய்க்கோன்னு முரண்டு பண்ண ஆரம்பிச்சுட்டான். திரும்பவும் ‘தேவாங்கு’ ‘பிகரு’ன்னு பயமுறுத்தி வரவச்சேன். இப்படியா ரெகுலரா ஜிம்முக்கு போக ஆரம்பிச்சோம். ஒரு மாசம் போயிருக்கும். அதுக்குள்ள டேய் ‘கட்ஸ்’ பாரு இங்கே பாரு அங்கே பாருன்னு ரூம் மேட்டுககிட்டேல்லாம் ஒரே அலப்பரை விட ஆரம்பிச்சுட்டோம்.ஹாஸ்டல்ல அவனவன் எங்க அலப்பரை தாங்க முடியாம பொலம்புவானுக. ஒன்னுமே இல்லாட்டியும் தீபக்கை பார்த்து டேய் சூப்பரா ‘பாடி’ டெவலப் ஆகுதுடான்னு சொல்லி அவனையும் உற்சாகப்படுத்தினேன்.

இப்படியா ஒரு ரெண்டு மூணூ மாசம் போய்கிட்டு இருந்தப்போதான் ஒருநாள் ஜிம் மாஸ்டர் கூப்பிட்டு காலேஜில Mr College போட்டி நடக்கப் போறதாவும் அதுல கலந்துக்க பேரு கொடுக்கறீங்களான்னு கேட்டாரு. இவருக்கு என்ன தெரியும் நம்ம body யப் பத்தி? T-shirt டைக் கழட்டினாதான தெரியும் நம்ம வண்டவாளத்தைப் பத்தி ! சிரிச்சி மழுப்பிட்டே வந்துட்டேன். இது நடந்து ரெண்டு வாரம் இருக்கும். நான் மறந்தே போய்ட்டேன்.

Gymஜாலங்கிடி
ஒருநாள் ஜிம் முடிச்சிட்டு நானும் தீபக்கும் வந்துகிட்டு இருந்தப்போதான் ஜிம் மாஸ்டர் என்னைய உடனே கூட்டிட்டு வரச்சொன்னதா என் ஜூனியர் ஒருத்தன் வந்து சொன்னான். என்னாடாது ஜிம்முல அவரு இல்லையேன்னு கேட்டதுக்கு இன்னிக்கி
Mr College போட்டிக்காக அவரு ஆடிட்டோரியத்துல இருக்கறதாகவும் பசங்க கொஞ்சம் பேருதான் காம்படிஷனுக்கு பேரு கொடுத்திருக்கறதாகவும் சொன்னான். எனக்கு ஒரே திகிலாகிடுச்சு. போச்சுடா நாமதான் காம்படிஷனுக்கு வரலைன்னு சொன்னமே இவரு நம்மளை விட மாடீங்கறாரே ! என் மேல இவ்ளோ நம்பிக்கையா? என்னாடாது பாண்டிக்கு வந்த சேதனைன்னு பல யோசனையிலே நானும் தீபக்கும் போனோம். ஆடிட்டோரியம் வாசல்லயே ஜிம் மாஸ்ட்டர் காத்துகிட்டு இருந்தார். என்னைய பார்த்தோடனயே மாஸ்டர் மொகத்துலா அவ்ளோ பிரகாசம். “வா வா பாண்டி! உனக்காதத்தான் காத்துகிட்டு இருக்கோம். பசங்கதான் உன்னைய suggest பண்ணுனானுங்க ! போ உள்ள !” கழுத்தை பிடிச்சு தள்ளாத குறைதான்.

எங்கூட வந்த தீபக்க பார்த்து நீ வேணா போப்பான்னு சொல்லிட்டாரு. பய மொகத்தைப் பார்க்கனுமே ! ஆச்சரியம் அதிர்ச்சி ! சரி சரி தீபக்கு ! பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்டான்னு பார்வையிலேயே சொல்லி அனுப்பிச்சேன். காம்படிஷன் இன்னும் தொடங்கலே ! மேடைக்கு பக்கத்துல இருக்கர ரூமுக்கு உடனே போகச்சொன்னாரு மாஸ்டரு. உள்ள போனா எங்க சீனியருக. அல்லாரும் சும்மா தீவனம் தின்னு வளர்ந்த ப்ராய்லர் சிக்கன் மாதிரி சும்மா ‘கும்’முன்னு ஜட்டியோட இருக்கரானுவ. நான் பரிதாபமா நாட்டுக்கோழிகணக்காவுள்ள இருக்கேன் ! இவனுககூட எங்கடா மோதறது ? கவலையோட போனேன்.

நம்மளப் பார்த்து புட்டான் என் சீனியர் வேலு. 'வாடா பாண்டி உனக்காகத்தான் எல்லாரும் வெய்ட்டிங்! சீக்கிரம் அங்க இருக்கு பாரு மசாஜ் ஆயில் எடுத்துக்கோ !' ஓ இது வேறையா ?!! இத தடவிகிட்டு தான் நிக்கனுமாம்ல? அப்போதான் சும்ம பள பளன்னு ‘பாடி’ தெரியும் போல ! ஜட்டியோட எப்படி நிக்கறது ? பொண்ணுக யாரும் இருக்கக் கூடாது கடவுளேன்னு வேண்டிகிட்டே எண்ணெய் பாட்டிலை எடுத்தேன். “சீக்கிரம்டா என்ன யோசனை வந்து எண்ணெயா எல்லாருக்கும் தடவி வுடு ! காம்படிஷன் தொடங்கப் போவுது. இந்த பாரு கொஞ்சம் தாராளமாவே எண்ணெய தடவி வுடுடா அப்போதான் சும்மா பள பளன்னு இருக்கும்”.அவன் பாட்டுக்கு சொல்லிகிட்டே போறான் . அடங்கொப்பொறானே ! இதுக்குத்தான் கூப்பிட்டீயளா? இதென்னடாது நாறப் பொளப்புன்னு மனசுகுள்ள சொல்லிகிட்டாலும் வெளிய சொல்ல முடியுமா? சீனியராச்சே ! விதியேன்னு எண்ணெய்ய தேச்சு வுட்டேன்.

இதுக்குள்ளயும் நம்ம பய தீபக்கு போயி ஹாஸ்டல்ல இருக்கற நம்ம பசங்க கிட்டேயெல்லாம் 'பாண்டி Mr.College காம்படிஷன்ல கலந்துகறாண்டா வாங்க' ன்னு அல்லாறையும் கூட்டிகிட்டு வந்துடான். என் நெலைமை இப்படியா ஆகனும்? அவனுக முன்னால எல்லாரும் உடம்பு முழுசும் எண்ணெயோட நின்னா நான் மட்டும் உள்ளங்க கையிலே மட்டும் எண்ணெய்யோட ! இந்த எண்ணெய் தேய்ச்ச விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.பசங்க இதனை நாள் நான் அவனுகளை படுத்துனதுக்கு சேர்த்து வச்சு என்னைய ஓட்டுன ஓட்டுல கொஞ்ச நாளைக்கு ‘ஜிம்’ பக்கமே எட்டிப்பார்கலையே நான்.

Monday, July 03, 2006

மிஸ் Understanding

மிஸ் Understanding
காலேஜில நமக்கும் லேப்புக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தான்.முதோ முதலா வேற 'வைவா '( அதாங்க ஒக்கார வச்சு கேள்வி கேட்பாங்களே) attend பண்ணப் போறப்போ பசங்க எல்லாம் நம்மளை நல்லா மந்திரிச்சு விட்டானுங்க !

“பாண்டி லேப் பண்ணாட்டியும் வைவா கேட்டாங்கன்னா வாயில கொழுக்கட்டைய வச்சு அடைச்ச மாதிரி ஒக்காந்திருக்காதே.ஏதாச்சும் பதில் சொல்லியே ஆகனும் அப்போதான் ஏதோ பய படிச்சிருக்கான்னு நெனச்சு பாஸ் பண்ணி விடுவானுங்க என்ன? “ என பலவிதமாக தயார் பண்ணி அனுப்பினானுங்க. உள்ளுக்குள்ள உதரல் இருந்தாலும் “எனக்கேன்ன பயம் ? only fear !”ன்னு டயலாக் பேசிச்சி மனசு. ஏதோ லேப். கேட்டாரு ப்ரொபசர் “ What is surface tension? “ உடனே பதில் தெரியாட்டியும் என்னோட ஆறாவது அறிவை உபயோகிச்சு சொன்னேன் “ The tension developed on the surface is called surface tension! ரொம்ப டென்சன் ஆகிட்டாரு வாத்தியாரு. இதுக்கு மேல கேள்வி கேட்கறதிலே அர்த்தம் இலையின்னு சரி பய ஏதோ ஊர்நாட்டுல இருந்து வந்திருக்கான்னு மன்னிச்சி பாஸ் போட்டு விட்டுட்டாரு.

வாத்தியாரை வாழ்த்திட்டு வந்துட்டேன். ரெண்டாவது வருசம் ஏதோ மெக்கானிகல் லேப்.நம்ம தாய் ப்ராஞ்ச் அதுதானே. வாத்தியார்க எல்லாம் ரொம்ப சிம்பிளாத்தான் கேள்வி கேப்பாங்க ! அன்னைகின்னு பார்த்து நமக்கு ஆகாத ஒரு வாத்தி ! “ what is an air blower? “ இவ்ளோ சிம்பிளான கேள்விக்கு பதில் தெரியலைனா எப்படி ? படார்னு சொன்னேன் “It blows the air !” பதில் லாஜிக்கா கரெட்டா தெரிஞ்சாலும் ஒரு இன்ஜினியரிங்க ஸ்டூடெண்ட் கொஞ்சம் டெக்னிகலா சொல்லனும்னு சொல்லி அனுப்பீட்டாரு.

இப்படியாக எனது தாய் நாடான மெக்கானிகல் ப்ராஞ்சில் கோலேச்சிக் கொண்டிருதப்போதான் மூணாவது வருஷம் புதுசா மைக்ரோ ப்ராசசர் லேப். எலக்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தது அந்த லேப். எப்பவுமே இந்த மெக்கானிகலுக்கும் எலக்ரானிக்ஸ் வாத்தியார்களுக்கும் ஆகவே ஆகாது. வாத்தியார் லெவலில் மட்டும் தான் மத்தபடி கலரான ப்ராஞ்ச் அதுதானே ! இந்த எலக்ட்ரானிக்ஸ் பசங்களுக்கு கலர் கலராப் பொண்னுங்க கூட படிக்குதுன்னு அவனுக விடுற உதார் இருக்கே சொல்ல தனி பதிவுதான் போடனும். சம்மட்டி எடுத்தி இரும்பை காய்ச்சி அடிச்சிகிட்டு இருக்கர லேபில இருக்கிற மெக்கானிகல் பசங்க கிட்டே போயி ஒரு பூந்தோட்டதிலே விட்ட மாதிரி இந்த லேப். ரொம்பத்தான் மெரட்டினாங்க வாத்தியாருக எல்லாம். என்னதான் மெரட்டினாலும் எங்களுக்கு கொஞ்சம் கூட கோவமே வரலை. இன்னும் திட்ட மாட்டாங்களான்னுதான் இருந்துச்சு. அதுக்கு முழு காரணம் அந்த பூனைக் கண் சுஜாதா மிஸ் !

சேவல் பண்ணையா இருக்குற எங்க மெக்கானிகல் ப்ராஞ்ச்சிலே இருந்துட்டு திடீர்னு ஒரு நந்தவனத்துகுள்ள விட்ட மாதிரி இருந்துச்சு. ஏதோ ஆளுக்கொரு சூட்கேஸ் மாதிரி கொடுத்து இதுதான் ‘மைக்ரோ ப்ரசசர் கிட்.’ போய் ப்ரொக்ராம் பன்ணுங்கடான்னு விட்டுட்டாங்க. கையிலே வேற கலர்க்கலரா ஒயருக வேற கையிலயும் கலரு சுத்தியிலும் கலரு என்ன பண்ணுவோம் நாங்க?. என்ன பண்றது எப்படிப் பண்ரதுன்னு எவனுக்கு தெரியும்? ஒரு இரும்பைப் கொடுத்தமா பர்னஸ்ல காட்டி ‘ L ‘ பெண்டு பண்ணுனமான்னு இல்லாம என்னமோ கால்குலேட்டர் மாதிரி கொடுத்து லேபிலே விட்டுட்டாங்க. லேபிலே எங்களுக்கு சுஜாதா மிஸ்தான் இன்சார்ஜ். எங்க பசங்க குறும்புக்கு கேட்கவா வேணும்? சுஜாதா மிஸ் எங்களை திட்டுறதா நெனச்சுகிட்டு என்னன்னமோ சொல்லிகிட்டு இருப்பாங்க. ஒரு பொமரேனியன் நாய்குட்டி உங்களைப் பார்த்து குரைச்சா யாருக்காவது பயப்படத்தோனுமா ? சொல்லுங்கப்பு! ரசிக்கத்தானே தோணும்? அப்படியாக்கா சுஜாதா மிஸ் திட்ட திட்ட அவங்க மேல ஒரே crush ஆகிப் போச்சு. கொச்சையா ஜொள்ளுன்னு சொல்ல முடியாது. இது ஒரு மரியாதை கலந்த ஜொள்ளுன்னு வேணா சொல்லலாம் ! அதுக்கு காரணம் சுஜாதா மிஸ் மிஸசாக இல்லாமல் மிஸ்ஸாகவே இருந்ததாக் கூட இருக்கலாம்.

எப்டியோ மிஸ்ஸை மிஸ் பண்ணாம லேப் அட்டென்ட் பண்ணி பல கஷ்டமான ப்ராக்ரம்களை லாஜிக் புரியுதோ இல்லையோ (மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ப்ரோக்ராம் எழுதிப் பார்போமில்ல ? ) மைக்ரோப்ராசசரில் தட்டி மிஸ்ஸிடம் காட்டி நல்ல பெயரை கஷ்டப்பட்டு சம்பாரிச்சாச்சு. பலன்? நம்மளைப் பார்த்தா மிஸ் சில மில்லி மீட்டர் புன்னகையை எக்ஸ்ட்ராவா அள்ளித்தெளிக்கும் அளவுக்கு கொண்டாந்தாச்சு !. அப்பாடா என்ன ஒரு சந்தோசம் தெரியுமா ? இப்படியா போய்கிட்டு இருந்தப்போதான் செமஸ்டர் எக்சாம் வந்துச்சு.

மைக்ரோ ப்ராசசர் லேப்னாலே பலபேருக்கு பேதி பிச்சிக்கும். தெகிரியமா போனேன். இன்ப அதிர்ச்சி . எங்க மிஸ் சுஜாதாதான் internal Examinar ! வாரே வா. மிஸ்ஸு மொகத்தைப் பார்த்தாலே பயம் எல்லாம் பதுங்கீடுச்சு. இருந்தாலும் வைவா இவங்கதானே கேப்பாங்க? பதில் சொல்லி அசத்திபுடனும்டா பாண்டின்னு மனசுகுள்ளே சொல்லிகிட்டேன். லேப் பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்கு வைவா ஒருபக்கம் ஓடிகிட்டு இருக்கு. ரெண்டு ரெண்டு பேரா ஒக்கார வச்சு மிஸ் கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்க. என்னோட பார்ட்னர் முனிராசு. நம்ம முனிராசு இருக்கானே எல்லாம் என் ரேஞ்சுக்குத்தான் படிப்பான்.

கூப்டாச்சு.நானும் அவனும் போனோம். மிஸ்ஸுக்கு முன்னாடி ஒரு மைக்ரோ ப்ராசசர் பொட்டி இருந்துச்சு. மொதல்ல முனிராசுகிட்டேதான் கேட்டாங்க show me the microprocessor ! பய என்னமோ கீழ உழுந்த ஊசியத்தேடுன மாதிரி பெஞ்ச்சு புல்லா தேடு தேடுன்னு தேடறான். எனக்கா சிரிப்பு பிச்சிகிட்டு வருது. என்னடா இது முன்னாடியே இவ்ளோ பெரிய பொட்டி இருக்கு காட்ட வேண்டியதுதானேன்னு! பொட்டிக்குள்ள வேற தேடுறான். கப்பிப்பய! கண்டே புடிக்கல.

சுஜாதா மிஸ் என்னைப் பார்த்தாங்க. அதே கேள்வி. உடனே பொட்டிய காட்டுனேன். “ This suitcase is called microprocessor ” . அதிர்ச்சியோட பார்த்தாங்க மிஸ் என்னைய. என்ன இது சரியாத்தானே சொன்னேன். எத்தனை தடவை மைக்ரொப்ரரசசர் கொடுங்கன்னு வாங்கியிருப்பேன். திரும்பவும் கேட்டாங்க “Are you sure? “ எனகென்ன சந்தேகம் “yes mis “ . ஒகே நீங்க போகலாம்னு அனுப்பி விட்டுட்டாங்க. என்னடாது ஒரே கேள்வில அனுப்பி விட்டுட்டாங்கன்னு ஆச்சரியம் !

மிஸ் மொகத்தைப் பார்த்தேன் . நம்மளைப் பார்த்து ஒரு கேவலமான பார்வை பார்த்தாங்க ! கூடவே ஒரு நக்கலான சிரிப்பு வேற. பக்கத்தில இருந்த வாத்திகிட்டே என்னைய காட்டி ஏதோ சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. ஒண்ணுமே புரியலே. வெளிய வந்து எனக்கு ப்ரோக்ராம் சொல்லிக் கொடுத்த பயலுவ கிட்டே கேட்டா அவனுகளுக்கும் ஒரே சிரிப்புத்தான். “மாப்ளே பாண்டி! மைக்ரோப்ராசசர் ங்கரது ஒரு CHIP டா. நீ போயி மொத்த பொட்டியையே ப்ராசசர்ன்னு சொல்லிட்டயே !”

அடப்பாவிகளா மைக்ரோப்ராசசர்ல ப்ரோக்ராம் பண்ண சொல்லிக் கொடுத்தீங்க. ஆனா அது ஒரு chip ன்னு சொல்ல மறந்துட்டீங்களேடா ! அதுதான் அந்த முனிராசுப் பய தேடோதேடுன்னு தேடிகிட்டு இருந்தானா ? சுஜாதா மிஸ் என்னவோ நம்மளை பாஸ் பண்ணி விட்டுட்டாங்க.ஆனா என்னைய காலேஜுக்குள்ள எங்க பார்த்தாலும் அவங்களுக்கு சிரிப்பு பிச்சிகிட்டு வந்துரும். நம்ம நிலைமை இப்படியா ஆகனும் ?


Thursday, June 22, 2006

ஆம்ly Vs பொம்ly

பொம்பளை பொம்பளைதான்


ஆம்பிளை ஆம்பிளைதான் !

வேறென்ன சொல்ல கெடக்கு !

Thursday, June 15, 2006

மறக்கமுடியுமா ?

அதைய மறந்தா இப்படித்தான்நான் படிச்தெல்லாம் சின்ன சின்ன ஊர்லதான். அங்கேல்லாம் எங்கே கான்வெண்ட் இருக்கு? நமக்கெல்லாம் காண்வெண்ட் கவர்மெண்ட் ஸ்கூல்தான். அதுலயும் பாய்ஸ் ஸ்கூல் கேர்ள்ஸ் ஸ்கூலுன்னு பிரிச்சி போட்டுருவாங்க. அத்தி பூத்த மாதிரி எப்போவாச்சும் சில பேதை பெதும்பை பெரிளம் பெண்ணுங்கன்னு கண்ணுல படரது உண்டு. அங்கேயெல்லாம் சென்னை மாதிரி இல்லை. பொண்ணப்பார்த்தாலே போதும் காதலிக்கறான்னு முத்திரை குத்தி பர்ஸ்ட் நைட் வரைக்கும் பசங்க வாயாலயே குடித்தனம் பண்ண வச்சிருவாங்க. பசங்க கூட இருந்தா கொஞ்சம் பகிரங்கமா ஜொள்ள முடியாது.

பள்ளிகூடத்திலே எங்க சட்டை பார்த்தீங்கன்னா பேண்ட்டை விட்டு வெளியில தான் இருக்கும். சர்ட்டை பேண்ட்டுக்குள்ள விட்டு ‘இன்’ பண்ணுனா போதும் எதோ நம்மளைய லண்டன்ல இருந்து அப்படியே இறங்கி ஸ்கூலுக்குள்ளே நொழஞ்சிட்ட மாதிரி பார்த்தி பசங்க ஒதுங்கீடுவாங்க. அதெல்லாம் கான்வெண்ட் கலாச்சாரம். தவிர ஸ்கூலுக்குள்ள அப்படியும் சில ‘இன் பண்ணிகிட்டு சுத்திகிட்டு இருக்கர பசங்க சாயங்கால நேரத்திலே கேர்ஸ் ஸ்கூல் பக்கமா ஒதுங்கற கேஸா இருப்பானுக.

இதுனால வேற ‘இன்’ பண்ணணும்னு உள்ளூர ஆசை இருந்தாலும் இந்த இமேஜை நெனச்சும் இன்னும் சில கவலைகளினாலும் ஊர்ல என் ‘இன்’ பண்ணணுங்கர ஆசை நிராசையா போச்சு. இதுலே வீட்டுல எங்கப்பாருக்கெல்லாம் நம்ம ட்ரெஸ்ஸிங்கைப் பார்த்து ஒரே கவலை. என்னடா பாண்டி கொஞ்சம் ‘நீட்’டா ட்ரெஸ் பண்ணிக்கோடா. இப்படி இருக்கியேன்னு தன் ஆதங்கத்தை அப்பப்போ வெளிப்படுத்துவார்.

ஒருவழியா சென்னைக்கு படிக்க வந்தாச்சு. அப்பாவோட இந்த ஆசையவாச்சும் நிறைவேத்தலாம்னு ஆரம்பத்திலேயே மங்கம்மா சபதம் போட்டேன். அப்பாருக்கு நான் அரியர்ஸே இல்லாம பாஸாகணும்ங்கற பேராசையெல்லாம் கூட இருந்துச்சு. தகுதிக்கு மீறி ஆசைப்படலாமா சொல்லுங்க? சரி தந்தை சொல் மிக்க மந்திரமில்லைங்கறதை அட்லீஸ்ட் இதுலயாச்சும் கடைபிடிப்பமேன்னு ‘இன்’ பண்ண ஆரம்பிச்சேன்.

முதல் வருட முடிவில் வீட்டிற்கு போனப்போ வீடென்னா ஊரே தெகச்சு போச்சு என் ‘ட்ரெஸிங் சென்ஸ்ஸ’ப் பார்த்து. அப்பாரு மொகத்திலே பெருமை பார்க்கனுமே. சரி பையன் ட்ரெஸ் விசயத்திலே தேறிட்டான். அப்படியே படிப்பிலேயும் கவனத்தை திருப்பச்சொல்லுன்னு தாயார்கிட்ட ஒரு ‘பிட்டை’ போட்டார். நமக்குத்தான் அதெல்லாம் காதிலேயே ஏறாதே !

சரி சரி போதும் நம்ம புராணம்.சிந்துவப் பத்தி சொல்லலேன்னா எனக்கு அடுத்த ஏழு ஜென்மத்துக்கு நரகம் தான். சிந்துவை நான் முதன் முதலா பார்த்தது எங்க காலேஜ் காரிடாரிலே. சிந்து ஒரு இடத்தை க்ராஸ் பண்ணிணா போதும் அப்புறம் அந்த வழியா நடக்கறவங்க கொஞ்சம் கவனமா இருக்கனும் இல்லையின்ன வழுக்கி விழுந்து சில்லரை பொறுக்க வேண்டியதுதான். ஏன்னு கேட்கிறீங்களா ? வேறென்ன லெக்சர்ல இருந்து ஸ்டூடெண்ட் வரைக்கும் விடற ஜொள்ளுதான் ! யாரிந்தப் பொண்ணுன்னு நானும் என் டேட்டாபேஸ்ல தேடிப்பார்த்தும் சிக்கலை. சரி கம்யூட்டர் லேப் வேற இருக்கு அதைய முடிச்சிட்டு மொதோவேலையா இதையப் பார்க்க வேண்டியதுதான்னு முடிவு செஞ்சுகிட்டேன்.

நமக்குத்தான் தமிழ்நாட்டை தாண்டுனா மனுசங்க லாங்குவேஜே புரிய மாட்டீங்குது. இதுலே மெஷின் லாங்குவேஜ் வேற ! ரொம்ப அலுத்துகிட்டே லேப்புக்கு போனோம். அவுட்புட்டை காட்டுனாத்தான் ஆச்சுன்னு அங்க இருக்குற லெக்சரர் பண்ற அழிச்சாட்டியம் இருக்குதே?? ஏதாச்சும் இன்புட் இருந்தாதானே ? தெரிஞ்சா காட்டமாட்டமா? என்ன பண்றது அக்கம் பக்கம் பாரடா பாண்டி ராசான்னு ஒப்பேத்தவேண்டியதுதான்னு நெனச்சுகிட்டே ‘லேப்’ குள்ள போனா ஒரு இன்பியலான காட்சி !! சிந்து அங்கே லேப்பில் !! அதுவும் எங்க லெக்சரர் கூட ஏதோ பேசிகிட்டு இருந்தா ! பாவம் அவளுக்கும் அவுட்புட் வரலையோ என்னவோ !

“பாய்ஸ் ! இவங்க பேர் சிந்து . இவங்கதான் உங்க ‘லேப் இன்ஸ்ரக்ட்டர்’ ஏதாசும் ப்ரோக்ராம் சம்பந்தமா சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்! “ ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் இன்பமும் !! என்னடா இது ஸ்டூடண்டுன்னு நெனச்சமே !! நமக்கு ஒண்ணும் தெரியாதுன்ன மதிக்க மாட்டாளே ! வேற வழியே இல்லை சிந்துவுக்கு முன்னாடி நம்ம மானம் போய்டகூடாது. முடிவெடுத்தேன். சிந்துவுக்கு ரொம்ப தங்கமான மனசு ( நெசமாத்தான் ) எந்த சந்தேகம்னாலும் உண்டனே க்ளீயர் செஞ்சா.

நமக்குத்தான் டவுட்டே வராதே. ஏதாச்சும் தெரிஞ்சாதானே ! எல்லாரும் Flow Chart வச்சுகிட்டு அல்லாடிகிட்டு இருந்தா நான் சிந்துவொட Flow லேப்பில் எங்க இருக்குன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். இப்படியே விட்டா சரிப்படாது. ஏதாச்சும் ‘டவுட்டு’ ன்னாதானே சிந்து கிட்டே பேசமுடியும். கஷ்டப்பட்டு ஒருவாரம் ப்ரோக்ராம் கத்துகிட்டு சிந்து கிட்டே கேட்கறதுக்காக வண்டி வண்டியா டவுடோடே போனேன்.

நான் கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க டவுட்டுகளைக் கேட்ட சிந்து இரண்டே வரிகளில் பதில் சொல்லித் தீர்த்துவிட்டு போனாள். ‘ ச்சே! என்ன இது ஒரு வாரம் ப்ரிபேர் பண்ணுனது வேஸ்ட் ஆகிபோச்சே! எப்போடா கம்ப்யூட்டர் லேப் வரும்ன்னு பசங்க எல்லாரும் தவம் இருக்க ஆரம்பிச்சிட்டோம். கம்ப்யூட்ட்ர் லேப்புன்னாலே காத தூரம் ஓடுர பசங்க கூட லேப் 2 மணிக்கின்னா 1 மணிக்கே போய் உட்கார ஆரம்பிச்சிட்டாணுங்க!

“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “ என் நலம் விரும்பி தோழன் துரைசிங்கம் சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு சந்தேகத்தை தேடி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் இதுவரை எட்டிப்பார்த்திராத கல்லூரி லைப்ரரி வரை ஓடினேன். ஒருவழியாக சிலபல டவுட்டுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தேன்.

ஒகே அடுத்தது action தான் ! மத்தியானம் பசங்க எல்லாம் லேப்புக்கு போக ஆரம்பிச்சானுங்க. ‘டேய் துரை அப்படியே போய்கிட்டு இரு நான் பாத்ரூம் போய்ட்டு வாரேன் என்ன ? ‘ ‘சீக்கிரம் வாடான்னு’ சொல்லிட்டு ஓடினான். எல்லாரோடையும் போனா பத்தோடு பதினொன்னு! கொஞ்சம் லேட்டா போனாத்தான் நநன் லேட்டஸ்டா தெரிவேன். என் ஐடியாவை நினைத்து நானே என்னை பாராட்டித் தள்ளினேன்.

எல்லாரும் போய்ட்டானுங்க போல ! ஒரு பயலையும் வழியிலே காணோம்.இதோ லேப் தெரிகிறது. லேப்டாப் போல சிக்கென்று என் சிந்து. என்னை கவனித்துவிட்டாள் !! என்னப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. “ கமான் பாண்டி ஒர்க் அவுட் ஆகிடும் போல இருக்கே !! “ நேரா அவள் டேபிளுக்கே போய் டவுட் கேட்டுற வேண்டியதுதான். பசங்க எல்லாம் ஏதோ பில்கேட்ஸுக்கே கோடிங் கத்துத்ர்ற ரேஞ்சுல எதையோ தட்டிகிட்டு இருந்தானுக.

என்னையவே பார்த்துகிட்டு இருக்காளே !! எங்கோ மனம் பறந்தது. அருகில் சென்றவுடன் சிந்துவின் பார்வையில் ஒரு தவிப்பு. நான் என் சந்தேகங்களை எடுத்து விட ஆரம்பித்தேன். சிந்து ஏதோ என்னிடம் சொல்ல வந்த மாதிரி தெரிந்தது. விடலையே ! இப்போதே முழுசையும் கேட்டுடணும் இல்லேண்ணா எனக்கு மறந்து போச்சின்னா?? ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டு சிந்துவைப் பார்த்தேன்.

யெஸ் அவள் முகத்தில் குழப்பம். இதைத்தான் எதிர் பார்த்தேன். தெரியலைன்னு சொல்லப் போறா இல்லை ரெபர் பண்ணிட்டு சொல்றென்னு சொல்லப் போறா !! எம் முகத்தில் பெருமிதம் ததும்பி வழிந்தது. “பாண்டி நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?” “ நோ நோ மேம்! “ நீங்க உங்க பேண்ட் ஸிப்பை போடலைன்னு நெனைக்கிறேன் ! “ ஆயிரம் போக்ராண் குண்டு என் மனதில் . என் கண்முன்னே என் மானம் ஸிப் வழியாக போய்டுச்சே!! டேய் என் முகம் கண்டிப்பா அவளுக்கு நெனப்புல வரும் ஆனா அது நான் கேட்ட கேள்வியினால இல்லே !!! யாராச்சும் ஒரு நாலு முழக் கயிரு கொடுங்கப்பூ அப்படியே தொங்கலாம் போல இருக்கே !!! இதப்போயி எப்படி மறந்தேன் ! இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !

Monday, June 05, 2006

மதுமிதாவுக்காக நானும் ஜொள்றேன் !!

பாண்டி டான்ஸ்


வலைப்பதிவர் பெயர்: ஜொள்ளுப் பாண்டி

வலைப்பூ பெயர்: ஜொள்ளுப்பேட்டை

சுட்டி(URL) : http://jollupet.blogspot.com/

ஊர் : சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையிலே அப்படியே மேஞ்சுகிட்டு இருக்கறப்போதான் இந்த மேய்ச்சல் மைதானத்தை கண்டுபிடிச்சேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள் வருடம்: காதலர் மாதம் 2006

இது எத்தனையாவது பதிவு: குவாட்டருக்கு நாலு கம்மி

இப்பதிவின் சுட்டி(URL): http://jollupet.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நான் விட்ட ஜொள்ளு பெறுக இவ்வையகம் !

சந்தித்த அனுபவங்கள்: ஒண்ணா ரெண்டா ஒருநாளையிலே சொல்ல முடியுமா ??

பெற்ற நண்பர்கள்: ஏராளம்

கற்றவை: வாய் ஜொள் அளவு !!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கொஞ்சமா நஞ்சமா ?

இனி செய்ய நினைப்பவை: இனி என்ன எப்பவுமே என் பணி ... என் பேர் சொல்லும் :-)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: கொஞ்சம் ஜொள்ளு கொஞ்சம் லொள்ளு கலந்து செய்த கலவை நான் ! வெளியே ஜொள்ளு உள்ளே லொள்ளு விளக்க முடியா கவிதை நான் !

இன்னும் நீங்கள் நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: யாவரும் இன்புற்றிருக்க வேண்டியதேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே !!

Tuesday, May 23, 2006

தாவணிக்கனவுகள்
ரொம்ப காலத்துக்கு மிந்தி தாவணி தாவணின்னு ஒரு ட்ரெஸ் இருந்துச்சாம். அதுக்கு ஒருகாலத்துலே பசங்க மத்தியிலே ஒரே கிராக்கியாம். பாக்கரவனெல்லாம் அந்த மஞ்சக்கலர் தாவணி இந்த சிகப்பு கலர் தாவணின்னு மாஞ்சு மாஞ்சு உருகி வழியரதைப் பார்த்து அதுக்கு தலை மேல கர்வம் வந்து டாண்டியா ஆடுச்சாம். என்னடா இவனுக நாம ஏதோ நாலுக்கு ரெண்டு சைஸ்ல இருக்கோம் நம்மளைப் பார்த்து இந்தப் பய புள்ளைக இம்புட்டு வழி வழியுரானுகளேன்னு அதுக்கு ஒரே சிரிப்பு !!

அதுவும் இந்த திருவிழா அது இதுன்னு வந்துடாப் போதும் இந்த தாவணிக்கு பெருமை சலங்கையக் கட்டிகிட்டு ஆடும். சும்மா சும்மா மாராப்ப புடிச்சி இழுத்து விடுரதும் ஆனா ஊனா முனைய வாயிலே வச்சி கடிச்சிக்கரதும் என்ன சொல்ல? இதையப் பார்த்து தாவணிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு . உடனே கடவுள்ட்ட போயி ஒரு கம்ளெயிண்ட் பண்ணுச்சாம்.

‘கடவுளே கடவுளே இந்த பய புள்ளைக என்னைய ரொம்பத்தான் படுத்தரானுக. என்னைய கட்டிகிட்டு இருக்கற இந்த பொட்டப்புள்ளைக கையி கால வச்சுகிட்டு என்னைய படுத்தர பாடு இருக்கே?? கொஞ்சம் நேரங்கூட சும்மா இருக்க விடாமா கைய வச்சி இழுத்து இழுத்து விடுரதும் முனையப் பிடிச்சி வாயில வச்சிக்கறதும அய்யோ அய்ய்யோ. இந்த ஆம்பளப் பசங்களாவது பரவாயில்லை. எங்களைப் பார்த்தவுடனே சும்மா கேஸ் ஏத்துன பலூன் கணக்கா பறக்க ஆரம்பிச்சுடுவானுக.இதுகளுக்கு மத்தியிலே நாம் கெடந்து அல்லல் படரேன் எனக்கு ஏதச்சும் பண்ணு கடவுளேன்னு!! ’ ஒரே பூத்து பூத்துன்னு ஒப்பாரி வச்சுதாம்.

கடவுளு சொன்னாரு ‘ நீயில்லையின்னா இந்த பசங்க ரொம்பத்தான் தவிச்சிப் போயிருவானுகளே. அப்புறம் அவனுக வேற என்கிட்ட வந்து ஒப்பாரி வச்சா என்ன பண்ணுவேன்? எனக்கே உன்னைய கட்டிப்பார்த்தா ஒரு ‘கிக்’குதான். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோன்னு’ கெஞ்சுனாராம்.

ஆனா தாவணி என்ன சாதாரணப்பட்ட ஆளா? அது இத்தனை வருசமா அதோடா எஜமானியம்மாகிட்டே எப்படியெல்லாம் பிடிவாதம் பிடிச்சா காரியம் ஆகும்னு கத்துகிட்டுல்ல வந்துருக்கு. தாவணி அழுகரதைப் பார்த்தா யருக்குத்தான் மனுசு இளகாது? பக்கத்துக்கு ஒண்ணுன்னு இருக்கர கடவுள் மட்டும் விதிவிலக்கா என்ன?
‘ சரி எப்படியோ போ. இனிமே இந்த பொட்டப்புள்ளைக உன்னைய மறக்க மாதிரி பண்ணிடரேன் ஓகேவா ? ‘ அப்படீன்னு சொல்லவும் அதையகேட்ட தாவணி அப்படியே துள்ளி குதிச்ச்சிச்சாம். அதுலே இருந்து கடவுளு பொம்பளை புள்ளைக மனசிலே இந்த தாவணி அப்படீன்னா என்னான்னு கேக்கர மாதிரி பண்ணிட்டாராம்.

- ஜொள்ளணாற்றுப் படை (அதிகாரம் - 2 பாகம் - தாவணி கலைத்த தவம் )


சிறுகுறிப்பு :-

தாவணி - இருபதாம் நூற்றாண்டில் 1980 ன் இறுதியில் பொது வாழ்விலிருந்து முற்றிலும் விலகி விட்ட இந்த உடை கால் சென்டர்கள் வருவதற்கு முன் பல இளைஞர்களின் உறக்கத்தை மானாவாரியாக தொலைப்பதற்கு காரணமாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதனை அவ்வப்போது உபயோகப்படுத்தும் ஒரே துறை தமிழகத்திலுள்ள திரைப்படத்துறை. 80 களில் வந்த திரைப்படங்களில் இவை அநேகமாக பல கற்பழிப்பு காட்சிகளில் உருவப்படுவதற்கும் மற்றும் கதாநாயகர்கள் தற்போது இருப்பது போல கூகுள் இல்லாததால் பரம் பொருளை இதனடியில் தேடுவதற்கும் பயன் பட்டதாக பார்க்கும் திரைப்படங்கள் வாயிலாக அறிகிறோம்.

Saturday, May 13, 2006

'தல' யுடன் ஒருநாள் - வ வா சா வின் பதிலடி !!


சமீபத்தில் முளைத்த காளான் தன்னை பார்த்திபன் என்று கூறிக்கொள்ளும் Freelance கோயபல்ஸ் பார்த்திபன் எங்கள் அண்ணன் தங்கக்கிண்ணம் ‘தல’ தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் எனவும் எங்கள் சங்கத்தினர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரைக் கடத்தி பதுக்கி வைத்துள்ளதாகவும் மேலும் அவரை மேலேயே அனுப்பிவிட்டதாகவும் புறம் பேசித்திரியும் கூடத்தினருக்கு சவுக்கடி கொடுக்கவும் மண்வாரித் தூற்றுபவர்களுக்கு அவர்கள் நாவை தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கினங்க அண்ணன் ‘தல’ யுடன் ஒருநாள் நடவடிக்கைகளை கூடேயே இருந்து பார்த்து அவர்தம் புகழை தரணியறியச்செய்திட வேண்டி சங்கத்தொண்டன் உங்கள் பாசமலர் ஜொள்ளுப்பாண்டி தன் டிஜிடல் கேமராவுடன் ராவோடு ராவாகக் ( I Mean Night ok? ) கிளம்பிச்சென்று வெற்றியுடன் வந்திருக்கின்றேன். (யப்பா மூச்சு முட்டுது யாராச்சும் சோடா குடுங்கப்பா !)

‘தல’ யின் ஒருநாள் நடவடிக்கைகளை கூடே இருந்து அறியும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? இதோ ‘தல’ யின் தலபுராணம் அறிய அலைகடலென வாரீர் வாரீர்.
காலை மணி 10:00 : அதிகாலையிலேயே எழுந்துவிடும் ‘தல’ மங்களகரமாக ‘ஃபுல் சூட்டில் நம்முன் ஆஜராகிரார்.


காலை மணி 10:30 : ‘ காலையில் தினமும் கண்விழித்தாலே கைதொழும் தெய்வம் அம்மா !! “ பாடிக்கொண்டே தர்பாருக்குமுன் கிளம்பும் முன் தன் தாயிடன் ஆசிவாங்கிக்கொண்டு நமக்கு கொடுத்த போஸ் !!

காலை மணி 11 : தாயிடம் ஆசி வாங்கினால் நாளெல்லாம் வெற்றி நமதே எனக்காட்டுகிறார் ‘தல’.


நண்பகல் மணி 12 : ஒருகையில் சோமபானம் நிறைந்த சொம்பு மறுகையில் ‘கேர்’ராக இருந்தால் முகர்ந்து பார்த்துக்கொள்ள லெமன்னுடன் ஒய்யாரமாக தர்பாரில் ‘தல’ அமர்ந்திருக்கு அற்புதக்காட்சி !!

பிற்பகல் மணி 4:00 : “சாப்ட்வேர் பீச் அமைப்பதைப் பற்றி துரைமார்களுடன் ஆலோசனையில் ‘தல’ ( தல யின் முன் துரைமார்கள் பவ்யமாக நிற்பதைப்பாரீர் !!)
இரவு மணி 8 : ‘ தல’ யின் அந்தப்புரக்காட்சிகளை அவருக்கே தெரியாமல் நம் கேமரா எடுத்த சில பல காட்சிகள்.இதப் பார்த்தபின்னாவது பார்த்திபன் போன்ற புல்லுறுவிகள் அடங்குவார்களாக!

Wednesday, May 03, 2006

ஸ்ரீல ஸ்ரீ ஜொள்ளானந்தா ஸ்வாமிகளின் கும்தலக்கா பேட்டி !!!!


பமக தன் கொள்கையை ( ?! ) பரப்ப எங்கோ ஒடக்காண்கள் ( lizard ) மேயும் விராலிமலை குகையில் ஒளிந்திருந்த குஜிலியானந்தாவை தரதரவெனெ வெளியே இழுத்து வழுக்கட்டாயமாகப் பேட்டியெடுத்து வெளியிட்டதால் வ.வா.ச வும் ஏதேனும் ஒரு சாமியாரை பேட்டியெடுத்து தன் கொள்கையை பரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்கையைப் பரப்ப ஏதேனும் சாமியார்கள் கிடைப்பார்களா எனத் தேட சங்க ‘தல’ கைப்புவும் தளபதி ‘தேவ்’வும் இமயமலைப்பக்கம் சென்றுள்ளதால் தற்காலிக ஏற்பாடாக லோக்கலாக மீனம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலைச் சாரலில் சமுதாயப்பணியாற்றும் ஸ்வாமி ஜொள்ளானந்தா பேட்டி தர சம்மதித்து நம்மை வரச்சொன்னார். தல கைப்புவும் தேவும் குகை குகையாக சடாமுடி சாமியார்களைத் தேடி பிடித்து வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடுமென்பதாலும் ஸ்வாமி ஜொள்ளானந்தா அடிக்கடி ஜொள்ளுப்பேட்டை பக்கம் வந்து அருள்பாலித்து வருவதாலும் இவரைவிட்டால் இப்போதைக்கு பமக விற்கு பதிலடி கொடுக்க வேறு சாமியார்கள் கிடைக்கமாட்டார்கள் எனற ரகசியகாரணங்கள் இருப்பதாலும் ஸ்வாமி அவர்களை குஷிப்படுத்த வாங்கிச் சென்ற குவாட்டரைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியவாரே கொடுத்த பேட்டி !!

நாம் : ஸ்வாமி எங்கே சென்று விட்டீர்கள் இத்தனை காலம் ?

ஜொ.ஸ்வாமி : நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! மக்கட்பணி மகேசன் பணி. அதனை எப்படி ஆற்றுவது என நாம் நம் பக்தைகளுடன் கொடைக்கானல் மலையிலே கோடைஸ் இன்டர் நேஷனல் ஓட்டலில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம்! நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி தங்களின் பூர்வாசிரமம் பற்றி...?

ஜொ.ஸ்வாமி : கோட்டையாம் கோயிலாம் கோமணனத்து ஆண்டியாம் தேடினோம் ஓடினோம் தோராபோரா மலை வரை இருந்தும் மட்டில்லை ! போலீஸு ரெய்டிலே மாட்டினோம் ஏற்றினோம் ஏறாத கோர்ட்டில்லே !! விடவில்லை என் அப்பன் அங்கமுத்து பண்டிதன் வாங்கினோம் தாங்கினோம் வாங்காத ஆப்பில்லே !!! அவனே கூறினான் ( மேலே கை காட்டுகிறார் ) சாமியார் ஆகினோம் ! நம நம கம கம குவாட்டர் கும கும !!

நாம் : ஸ்வாமி பமக பற்றி குஜிலியானந்தா ஏதோ சொல்கிறாரே ?

ஜொ.ஸ்வாமி : பற்றற்று இருக்க வேண்டிய சாமியாராம் பற்றுகொண்டு பமக பற்றிக் கூறுகிறாராம். மூடவேண்டிதை மூடாமல் மூடவேண்டாததை மூடிக்கொண்டலையும் கோமகனாம் கோமேதகத் தலைவனாம் பமக பலப்பமாம் !!! கண்ணனே ஆக்கினான் கண்ணணே கொலை செய்தான்!! யாரும் தேவையில்லை அவர்கட்கு அவரொருவர் போதுமே.தேர்தலில் பமகவிமற்கு மக்கள் பாடைகட்டுவது என் ஞான திருஷ்டியில் தெரிகிறது! நம நம கம கம குவாட்டர் குமகும !! ( உடனே பக்தைகள் ஸ்வாமிகளுக்கு ஆரத்தி எடுக்கிறனர் )

ஸ்வாமிகள் நாம் வாங்கி சென்றிருந்த குவாட்டரில் பாதியை கொஞ்சமாகக் கவிழ்த்துக்கொள்ளுகிறார். மீதியை கமண்டலத்தில் சரித்துக்கொள்கிறார்.

நாம் : ஸ்வாமி பமக விற்கு நூற்றுக்கணக்காக பிண்ணூட்ட வாக்குகள் வருவதாக் கூறுவது பற்றி ???

ஜொ.ஸ்வாமி : மகாபாரதத்திலே கவ்ரவர்கள் எத்தினி பேர் ? ( ஸ்வாமிக்கு லேசாக மப்பு தட்டுகிறது போலும் ) 100 பேர். ஆனா பாண்டவர்கள் எத்தனை பேர் ? Just அஞ்சே பேர் !! என்ணிக்கை முக்கியமில்லை ! யுத்தத்திலே யாரை பகவான் ஜெயிக்க வச்சான் ? புரிஞ்சுதா? 100 பேர் 1000 பேர் பூச்சாண்டிக்கு பயப்பட வேண்டாம் ! அப்படியே பயம் வந்தா இருக்கவே இருக்கு ஸ்லோகம் முடியரப்போ உனக்கு சொல்லித்தாரேன். ( நம் மீது எதையோ தூவுகிறார் பக்தைகள் கண்ணத்தில் போட்டுக்கொண்டு குலவை ஒலி எழுப்புகிறார்கள் ) நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி வ வா ச வோட எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஜொ.ஸ்வாமி : காலமே உங்களிடம் சொல்லும் !! எத்தனி ஆப்பு வரினும் வாழையாடி வழையாக வளரும் வாழைபோலே ! குவாட்டர் மீது குவாட்டர் அடித்தாலும் கவிழாத ஜொள்ளானந்தா போலே ! நாக்குதள்ள சாப்ட்வேர் கண்டுபிடித்தாலும் பின்னூட்டமே வாராமல் போனாலும் தளராமல் ஜல்லியடிக்கும் பினாத்தலார் போலே அது வளந்துகொண்டேதான் இருக்கும். நம நம கம கம குவாட்டர் குமகும !!
( கமண்டலத்தையும் சரித்துக்கொள்கிறார் )

நாம் : ஸ்வாமி பயப்படாமல் இருக்க ஏதோ ஸ்லோகம் சொல்லுவதாக கூறினீர்களே?

ஜொ.ஸ்வாமி : அதுவா சிஷ்யா வேறென்ன ? நம நம கம கம குவாட்டர் குமகும !!

சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் பக்தையின் மடியில் சாய்கிறார். ஸ்வாமி மலையேறிவிடதாக பக்தைகள் கூற நடையைக் கட்டினோம் !!!

Friday, April 28, 2006

நாயுடுஹால்ஞாயித்துக் கெழமை மட்டும்தான் நான் வீட்டுல இருக்கறது. அன்னிக்கிதான் வீட்டுல பறக்கறது, நீந்தறது இல்ல நடக்கறதுகளை கொழம்புல பார்க்க முடியும். அப்படித்தான் போன ஞாயித்துக்கெழமை மதியசாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு மப்பிலே ( சாப்பிட்ட களைப்புதான் வேற ஏதுமில்லை ! சாப்பாடு கொஞ்சம் ஹெவியில்லையா?) ஒரு குட்டித் தூக்கம் போட்டுகிட்டு இருந்தேன். சாயங்காலமா அப்படியே ஏரியா ரவுண்டப் நம்ம wave length உள்ள நண்பனோட ப்ளான் பன்ணி வச்சிருந்தேன். ஆயிரம்தான் சொல்லுங்க ‘ ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே !' ரேட்டுல நடந்தா கண்கொண்டு பார்க்க ஒண்னு கூட இல்லை ! ம்ம்ம் .....

அப்படியே ஒரு நாலுமணிக்கு எந்திரிச்சா நம்ம உடன்பிறப்பு மந்தகாசப் புன்னைகையோட எதிர்ல பார்த்துக் கேட்டுச்சு

“ எனக்கு ஒரு சுரிதார் வாங்கனும் T.Nagar போகலாம் வர்ரீயா? "

“அதெல்லாம் முடியாது நான் என் friend கூட வெளிய போகப்போறேன்”

“ எப்பவும்தான் அந்த தருதலைப் பயகூடதானே சுத்தறே ! இன்னிக்கு மட்டும் வாயேன் அப்படியே முருகன் இட்லிகடையிலே சாப்பிட்டுட்டு வந்துடலாம் ! “ இது உடன்பிறவா சிஸ்டர்.

ஆஹா சாப்பாட்டு விசயத்திலே நம்ம வீக் பாயிண்டை புடிக்கறாங்களே ! ஏதோ பாச மழையிலே சொல்றாங்கன்னு நெனைக்கதீங்க.நான் ஒரு இலவச டிரைவர் அவங்களுக்கு. இல்லேன்னா ஆட்டோவில்தானே போகனும்?

‘ நீங்க பாட்டுக்கு சேலைபாக்கறேன் சுரிதார் பாக்கறேன்னு சுத்திகிட்டு இருப்பீங்க நான் என்ன பண்றது ? “

“ நாங்க கூப்டா இப்படித்தான் பேசுவே . பாக்கத்தானே போறேன் நீ பொண்டாட்டிக்கு கூஜா தூக்கரதை.அப்போ போவே பாரு. கூடப்பொறந்தவளுக்கு ஒரு உதவி செஞ்சுடாதே. “ உடன்பிறப்பு AK 47 னாக மாறி வசவு மழை பொழிய ஆரம்பித்தது ஏண்டா சொன்னோம்னு ஆகிப்போச்சு .”சரி சரி கத்தாதே கெளம்பி வர்றேன் “ கெளம்பினோம். T Nagar ல் வழக்கம்போல கே கொள்ளைன்னு கூட்டம். வண்டிக்கு பார்க்கிங் கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துபோச்சு !

சில பல கடைகளைப் பார்த்தும் உ.பி ( உடன் பிறப்பு)க்கு திருப்தி ஏற்படவில்லை. சரி கொஞ்சம் பெரிய கடையிலதான் பார்த்தா என்னன்னு நாந்தான் சொன்னேன்
“ நாயுடு ஹாலில்” பாருங்களேன். ஒருவேளை நீங்க நெனைக்கற டிசைன்

கெடைக்கலாம் ”
“ சரி போலாம்”
“ நீங்க பாட்டுக்கு பார்த்துகிட்டு இருங்க. நான் அப்படியே பாண்டிபஜாரில ஒரு ‘வாக்’ போய்ட்டு வாறேன்” இதுக கூட இருந்தா எப்படி? ‘கட்டுசோத்துக்குள பெருச்சாளியக் கட்டுன’ மாதிரி அங்க என்ன பார்வை இங்க என்ன பார்வைன்னு நம்மளை பிண்ணிப் பெராண்டியெடுத்துடும்.

“ டேய் நீ எங்கே போறே வா வந்து ‘ suggestion சொல்லு. அப்படியே தப்பிக்க பாக்கறே? “ என் நெனப்புக்குள் மண் !

வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைந்தேன். அய்யோ எவ்ளோ கலரு !!! விக்கறதுல இருந்து வாங்கறதுக எல்லாமே பொண்ணுகதான். ஆங்காங்கே சில ஆண்கள் கவலை தோய்ந்த முகத்தோடு தென்பட்டார்கள். 'அட போக்கத்தவனுகளா எதுக்கு இப்படி எளவூட்டுல இருக்கர மாதிரி நிக்கரானுவ சுத்திமித்தி பார்வைய ஓட்டவேண்டியது தானே பைத்தியங்கோளி பசங்க !!! '

கம்பீரமாக முதல் மாடி ஏறினேன். சரி ஒரு சுரிதார் தானே எவ்ளோ நேரம் ஆகிடப் போகுது என அலட்சியாம இருந்தேன். கண்ணு ஒரு எடத்துல தங்க மாட்டேன்னு அடம் புடிச்சது. அப்படியே பராக்குப் பார்த்துகிட்டு இருக்கரபோதான் மண்டையில் ஒரு ‘கொட்டு’ எவண்டா இதுன்னு திரும்பினா வேற யாரு?. உடன்பிறப்புதான்.

‘அங்கே என்ன பார்வை வேண்டி கெடக்கு? இந்த ட்ரெஸப் பாரு நல்ல இருக்கா? “

“ ஓ சூப்பர் !”

“ ஆனா வெலை ஜாஸ்தி.இதுக்குப் போய் இவ்ளோ கொடுக்க முடியாது !” ஒரே statement ல் item reject ஆனது.

‘ பின்னே எதுக்கு என்னைய கேட்டியாம்? “

“ ஏன் சொல்லமாட்டீங்களோ ? “ சரியா மாட்டிக்கிட்டேன். ஒவ்வொரு முறையும் எதாவது தென்படுவதைப் பார்த்தால் போதும் பொருக்காது இதுகளுக்கு! சஜசன் கேட்க வேண்டியது. பின் திட்ட வேண்டியது.

“ காட்டன் சுரிதார் எடுத்துக்க.அதான் இந்த வெயிலுக்கு நல்லது தவிர பொண்ணுகளுக்கு அது ‘ரிச்’ லுக் கொடுக்கும் ! “

“சரி சரி அடங்கு எங்களுக்குத் தெரியும் ! “

நம்ம நாலெட்ஜை உபயோகப் படுத்த விடமாட்டேங்கறாங்களே !

நம்ம நிலைமை தேன் பாட்டிலுக்குள் நுழைந்த எறும்புபோலாகிவிட்டது. சுத்தியும் ஏராளம தீனியிருந்தாலும் அதை திங்க முடிய மாட்டேங்குதே !!
எனக்கு வேணும் . எனக்கு வேணும் .

லேடீஸ் காலேஜ் விடுரப்போ எதிரில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்னீங்கன்னா தப்பிச்சுக்கலாம். ரொம்ப ஆசைப்பட்டு காலேஜ் பக்கத்திலே இருக்கற ஸ்டாப்புல நின்னீங்கன்னா அவ்ளோதான் நீங்க அம்பேல். லேடீஸ் ஸ்பெசல் பஸ்சில் ஏறியவன் கதி ஆகிப்போச்சு என் நிலைமை இப்போ!

முதல் மாடியில் ஆரம்பிச்சு இப்போ மூணாவது மாடியிலே இருக்கோம். இன்னும் ஒரு சுரிதார் கெடைக்கலேய்யா ! சுத்தியும் பார்க்க முடியலே. இதுக தொல்லை வேற ! இப்போவே வந்து மூணு மணிநேரம் ஆகப் போகுது . ஒருவழியா மூணாவது மாடியிலே அகழ்வாராய்ச்சி நடத்தி ஒருவழியா ‘புடிச்ச’ மாதிரி கலர்ல ‘புடிச்ச’ மாதிரி மெட்டீரியல்ல ‘ புடிச்ச’ மாதிரி டிசன்லே ‘ புடிச்ச’ மாதிரி வெலையிலே சுரிதார் கெடச்சு போச்சு. அப்பாடா !!!

வாங்கிட்டு கீழே எறங்கி வர்ரப்போ அங்க இருந்த கண்ணாடியில என் முகத்தைப் பார்த்தேன். நெசம்மாலுமே நான் மேலே ஏறுனபோ எப்படி மத்த ஆம்பிளைங்க மொகம் இருந்துச்சோ அதே மாதிரி இருந்துச்சு.

செத்து சுண்ணாம்பாகி அந்து அவலாகி நொந்து நூடுல்ஸாகி வந்தேன். வந்ததுக்கு முருகன் இட்லி கடையிலே நாலு இட்லியும் ஒரு ஆனியன் ஊத்தப்பமும்தான் கெடைச்சது. Beware மக்கா ! நமக்கே இப்படீன்னா கல்யாணம் ஆன பசங்களை நெனைக்கரபோ கண்ணுல கண்ணீர் வரலை அப்பூ ! ரத்தம் தான் வருது. நம்ம அனுபவம் மத்த வளரும் வாலிபர்களுகெல்லாம் ஒரு பாடமா இருக்கட்டும் என்னா?

அண்ணன் பாலபாரதிக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன் !!!!