Monday, February 27, 2006

காதல் எனப்படுவது யாதெனில்
கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு
களம் கண்ட இடத்திலெல்லாம்
காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்
தியேட்டரில் கார்னர்
எனக் கையாலும் காதல்
செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு
பக்திப்பழமா கதைவிட்டு
சூடக்காற்றில் காதல்
ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்
கோமியமா மழை கொட்டுனாலும்
எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி
துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்
காதலி அப்பீட் ஆனால்
அவன் கொடுக்கும் பார்ட்டியில்
4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது
வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே
திருமணம் செய்து கொள்வது


காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்

Make Love
Not Babies
என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை , தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா சந்தோஷப்படுவான் பாண்டி !

Wednesday, February 22, 2006

நறுக்குன்னு நாலு ! - சங்கிலிப் பதிவுஓரமா ஒக்கார்ந்து நான் உண்டு நம்ம வேலை உண்டுன்னு ( வேலைதான் என்னான்னு சொல்லியிருக்கமுள்ள ! ) இருந்தேன். நம்ம ஞான்ஸ்அண்ணே திடீர்னு கையப்புடிச்சு ஆட்டத்துக்குள்ள இழுத்து விட்டுட்டாரு ! ஓடி முடிக்கறதுக்குள்ள வாயில நுரை தள்ளிருச்சு ! சரி ஆனது ஆவட்டும்னு கொளுத்திப் போட்டுட்டேன் .எனக்கென்ன உங்க பாடு !


Four Jobs I have had

1. பிக்பாக்கெட் ( அப்பா பாக்கெட்டில் மட்டும் )
2. எழுத்தாளர் ( லவ் லெட்டர் மட்டும் - எனக்கில்லீங்க friends க்கு )
3. ஆலோசகர் ( என் கேணத்தனங்களை ரசிக்கிறவர்களுக்கு மட்டும் )
4. ஜொள்ளுதல் ( இதுக்கு மட்டும் ரிட்ரைமெண்ட்டே கிடையாது ஜாலி )

Four Movies I would watch over and over again

1. இன்று போய் நாளை வா
2. அழியாத கோலங்கள்
3. American Pie
4. Naked Gun 33 1/3

Four places I have been living ( for Years )

1. அம்மாவின் மனசு ( அம்மா என்றழைக்காத உயிரில்லையே ! )
2. அப்பாவின் முதுகு ( அப்படித்தான் சொல்றாரு அப்பாரு ! )
3. டீக்கடை பெஞ்சு ( எல்லா காலேஜ் எதிரிலும் உள்ள )
4. காலேஜ் கேண்டீன் ( எங்கள் தோட்ட மல்லிகைகளுக்கும் மணம் உண்டு)

Four TV Shows I love to watch

( எல்லோரும் இருக்கறப்ப )

1. விஜய் டிவி லொள்ளு சபா
2. ஜெயா டிவி காமெடி பஜார்
3. pogo just for gags

( நான் மட்டும் இருக்கறப்ப )

4. FTV ( எல்லாமே ஹி ஹி ! )


Four places I have been on vacation

1.சத்யம் தியேட்டர் வாசல் ( சும்மா நச்சுன்னு இருக்கும் )
2.ஸ்பென்சர்ஸ் ( கண்ணையே புடுங்கி போடனும் போல தோணும் )
3.பெசண்ட்நகர் பீச் ( காத்தும் கலரும் ரொம்பவே அடிக்கும் )
4. கிரிஸ்டல் Bar ( hi hi Definitely male )


Four of my favorite foods

1. ஜொள்ளு ( is the secret of my Energy )
2. காடை ( அப்படியே சாப்பிடுவேன் ! )
3. மூளை ( அப்பவாச்சும் நமக்கு வளருதான்னு பார்க்கதான் )
4. முட்டை in any form ( பரீட்சையில் வாங்கறதிலைங்கோ இது நெசமாலுமே கோழி போடறது )Four Games I love to watch

1. டென்னிஸ் ( womens singles & doubles)
2. கூடைப்பந்து ( “ )
3. பில்லியார்ட்ஸ் ( “ )
4. ஜிம்னாஸ்டிக்ஸ் (“ )

Four Bloggers I am tagging

சந்தோஷ்
சதையம்
கண்ணபிரான்
ஆள்தோட்டபூபதி

அப்பாடா எப்படியோ இந்த ரிலேரேஸ்ல என் பங்கு முடிஞ்சது ! இனி இவங்க பாடு !
உடரேன் ஜூட் !!!!

Tuesday, February 21, 2006

Aனுபவக் கதைகள்
எதையும் ஆராய்ந்து அறியறதுங்கறது ஜொள்ளுப்பாண்டிக்கு சின்ன வயசில இருந்தே வந்திருச்சு. ( சரி சரி அடங்கிட்டேன் ! ) எங்க ஊரில் பார்த்தீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை மட்டும் பழைய புத்தக கடை போடுவாங்க. அதுவும் மத்தியானத்துலதான் இந்த கடைய ரோட்டோரமா விரிப்பாங்க. பல நாவல்கள் பாதி விலைக்கு கெடைக்குங்கறதால நான் இந்த கடைக்கு ரெகுலரான கஸ்டமர். படிக்கனுங்கற தணியாத ஆர்வத்திலே ( நெசமாலுமேங்க! ) பல நாவல்களை வாங்கி லீவு நாட்கள்ல எதையாவது கொறிச்சிகிட்டே புத்தகத்திலே லயிச்சுக்கிடக்குற சொகம் இருக்கே !!! ம்ம்.சரி கதைக்கு வருவோம். அப்படி ஒரு ஞாயித்துக்கிழமை கடையில நாவல்களை மேய்ஞ்சுகிட்டு இருக்கும் போதுதான் அந்த புத்தகத்தைப் பார்த்தேன்.

ஏற்கனவே அஞ்சரைக்குள்ள வண்டி பார்த்த ரணகளமான அனுபவத்திலே அந்த மாதிரி போஸ்டர்களைப் பார்த்தாலே தென்னாலிராமன் பூனைபோல பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருந்த காலம். என கவனத்தை நாவல்களைப் படிப்பதில் வெற்றிகரமாக திருப்பி சிறிதுகாலம் ஓட்டிக்கொண்டிருந்தேன். ஞாயிற்றுகிழமை ஆனால் போதும் நானும் எனது புத்தகத்தோழன் ஆனந்த்தும் அந்தக் கடையில் ஆஜராகிவிடுவோம். அப்படி நெசமாலுமே நாவல்களைத் தேடிக்கொண்டிருந்த போதுதான் அந்த புத்தகம் என் கையில் கிடைத்தது. ‘ லவ் லைஃப் அனுபவக்கதைகள் ‘ . என்னடா இது நாவலாசிரியர் பேரே இல்லை என்ன நாவல் இது என்ற என் வழக்கமான ஆர்வ மேலீட்டால் பிரித்துப் பார்த்தேன்.

“ அலோ ! அந்த புத்தகத்தை வாங்கறதுன்னா மட்டும் பிரிச்சு பாருங்க ! “ கண்டிப்பான குரல் கடைக்காரரிடம் வந்தது. “ என்னடா அப்படி இந்த புத்தகத்திலே விசேசம்” ன்னு “ சரி வாங்கிக்கறேன் !”
“ அப்படீன்னா 10 ரூபாய் கொடு !”
“ என்னாங்க இது பழைய புத்தகம் பாதிவிலை தானே ! “
“ அதெல்லாம் கெடையாது ஃபுல் ரேட்டுதான்! “

நான் ஆனந்தைப் பார்க்க ஆளுக்கு பாதி போட்டு வாங்கிக்கலாம்னு முடிவாச்சு! வெற்றிகரமாக வாங்கிக்கொண்டு வந்தோம். எதோ பலருடைய வாழ்க்கை அனுபவ வரலாறுன்னு நெனச்சா ஏமாந்து போய்டுவீங்க ! ( அப்படி நெனைக்க மாட்டீங்கன்னு எனக்கும் தெரியும் ! ) சினிமா போய் மாட்டிக்கொண்ட மாதிரி மாட்டிக்கொள்ளக் கூடாது ! ஒருவழியாக படித்து முடித்தோம். இனி அந்த புத்தகத்தை எப்படி டிஸ்போஸ் செய்வது ? நானும் ஆனந்த்தும் பல ஐடியாக்களை டிஸ்கஸ் செய்யும்பொழுதுதான் சினிமாவில் பார்த்த ஞாபகம் எனக்கு வந்தது..

புத்தகத்தை எரித்துவிட்டு சாம்பலை டாய்லெட்டில் போட்டு தண்ணீரை ஊற்றிவிடுவது என ! அட ! சூப்பரான ஐடியாவா இருக்கே ! ஒரு தடையம் கூட சிக்காது. ஜொள்ளு பாண்டி கலக்கரடா நீ ! எனக்கு நானே தட்டிக்கொடுத்துக் கொண்டேன். சரி யார் வீட்டு டாய்லெட்?
“எங்க வீட்டுல எப்பவும் எங்கம்மா இருப்பாங்கடா. உங்க வீட்டுலதான் ரெண்டுபேருமே வேலைக்குப் போறதுனால நீதான் safe ! நீயே பண்ணிடுடா “ ஆனந்த் கூறினான். சரி பொதுவாழ்க்கைலே இதெல்லாம் சகஜம்பா ! நானும் ஒத்துக்கொண்டேன். நான் தைரியசாலி என அடிக்கடி பீற்றிக்கொள்வதைக் காப்பாற்றிக் வேண்டுமே !

எங்கள் வீட்டில் ஒரு காரைச்சட்டி (தோட்ட மண்ணெடுக்க வச்சிருப்பாங்களே ) இருக்கும் . ஒரு பொன்னாளில் வீட்டில் யாருமில்லாதபொழுது காரைச்சட்டியில் புத்தகத்தை கொழுத்திபோட்டேன். சாம்பலானதும் நீர் ஊற்றி அணைத்துவிட்டு டாய்லெடில் கொட்டி நீரை ஊற்றிவிட்டேன். Yes ! Its workingout ! இப்படியாக என் முதல் disposal ஆரம்பித்தது. பின்வந்த நாட்களில் பல சாம்பல்கள் டாய்லெட்டில் கலந்தது.

இப்படியாக சென்றுகொண்டிருந்தபோதுதான் ஒரு ஞாயிற்றுக்கிழமை கடைக்காரர் கேட்டார்
“ தம்பி ஒரு Foreign book வந்திருக்கு வேணுமா? “ ஆனந்த்தை ஆவலுடன் பார்த்தேன். தலையசைத்தான்.
“ காமிங்க பார்க்கலாம் ! “ எடுத்துக் காட்டினார்.
“ என்னாங்க இவ்ளோ பெரிய புத்தகமா இருக்கு !”
“ உங்களுக்காக பாதிவெலைக்கு தர்றேன் !” கடைக்கார் தன் பாசத்தை தனது ரெகுலர் கஸ்டமரிடம் நிரூபிக்க பிரயத்தணப்பட்டுக் கொண்டிருந்தார்.

அத்தனை காலமாக மண்வாசனையான புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு அந்த புத்தகத்தைப் பார்க்கும் ஆவல் பீறிட்டு கிளம்பியது ! ஆளுக்கு பாதி காசு போடு வாங்கிக் கொண்டோம். டேய் “இன்னிக்கு நான் படிக்கறேன். நாளைக்கு நீ படி !” ஆர்வம் கொப்பளிக்க ஆனந்த் கேட்டான். சரி பயல் என்ன கோனார் நோட்ஸ்சையா படிக்கக் கேக்குறான். போய்ட்டு போறான் ! “ சரிடா. ஆனா பார்த்து பத்திரமா கொடு என்ன? “ அவ்வளவுதான் அமுதம் கிடைத்ததைப் போல் துள்ளிக்குதித்தான்.

அடுத்த நாள் புத்தகம் என்னிடம் வந்தது. Foreign புத்தகம்னா அந்த ரேஞ்ச் மெயிண்டைன் பண்ணியிருந்தார்கள். சரி தப்பித்தவறி இந்த புத்தகம் வீடுல மாட்டுனா அவ்ளோதான். எங்கப்பாரு இந்தவருச தீபாவளிய என் முதுகுலயே கொண்டாடிவாரு! நான் காலி. ! முதல்ல இதை dispose பண்ணிடனும். மணியைப் பார்த்தேன். அம்மா வரும் நேரம் ! புத்தகம் வேறு பெரியதாக இருந்தது. எரிஞ்சு முடிக்கவே ரொம்ப நேரம் ஆகும் போலத்தெரிஞ்சது.

சரி இனிமே இதை எரிக்கறதுங்கறது ஆவறதில்லை! பேசாம கிழிச்சு டாய்லெட்டில் போட்டுவிட்டால் என்ன? ஆனா இவ்ளோ பெரிய புத்தகமா இருக்கே ?! பரவயில்லை இதை நாளைவரை வச்சுகிட்டு இருக்க முடியாது ! டிஸ்போஸ்!

புத்தகத்தை கிழிக்க ஆரம்பித்தேன். பேப்பர்கள் எல்லாம் பக்கா குவாலிட்டியாக இருந்த்ததால் கிழித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஒரு பெரிய குவியலாக ஆகிவிட்டது. கொண்டுபோய் டாய்லெட்டில் போட்டேன். தண்ணீர் ஊற்ற ஆரம்பித்திருப்பேன். வெளியில் அம்மாவின் சத்தம். அவ்வளவுதான் பயமாகிவிட்டது. அவசர அவசரமாக நீரை ஊற்றிவிட்டு வந்துவிட்டேன். அப்பாடா ஒருவழியாக ஒழிந்தது. நிம்மதியுடன் வெளியேறினேன்.

அன்று இரவு அப்பாதான் சொன்னார். “என்னமோ டாய்லெட்டில் அடைச்சுகிட்டு இருக்குது. தண்ணியே போக கஷ்டப்படுது ! “

அவ்வளவுதான் ! எனக்கு எல்லாமே அடைத்துக்கொண்டது. அய்யகோ என்ன செய்யறது. “இல்லமா நல்லா தண்ணி ஊத்தினா சரியாகிடும்”. டாய்லெட்டிற்கு ஓடினேன்.
“சே இதுக்குதான் வீட்டிலே ஒரு பையன் இருக்கனுங்கறது. நீங்க சரியா தண்ணி ஊத்தியிருக்க மாட்டீங்க. தம்பி சரி பண்ணிடுவான் பாருங்க !“ அம்மா பெருமிதமாய் என்னைப் பற்றி கூறிக்கொண்டிருப்பது கேட்டது. அய்யோ தாயே ! என்னை ரொம்ப நல்லவேன்ன்னு சொல்றீங்களே ! “ வாளிவாளியாய் தண்ணியை ஊற்றினாலும் எல்லாமே ஊசித்துவாரத்தில் போகுமளவு வேகத்துடனேதான் சென்றது. என்னுடைய பற்பல முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரைப்போல டாய்லெட்டில் இரைந்தது.

“சரி விடு ! ஆளைக் கூப்பிட்டு என்ன அடைச்சுகிட்டு இருக்குன்னு பார்த்திர வேண்டியதுதான் ! “ அப்பா கூறியது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலானது.

“ ஐயகோ என்ன இது பாண்டிக்கு வந்த சோதனை ! இதுக்குக் காரணம் நாந்தான்னு தெரிஞ்சா என் இமேஜ் என்ன ஆவறது ?” அப்பா புதிதாக வாங்கிய பெல்ட் வேறு என்னைப்பார்த்து கண் சிமிட்டியது.

அப்பா எங்கிருந்தோ டாய்லெட் சுத்தம் செய்பவரை அழைத்து வந்திருந்தார். அவர் தனியாக இருந்த பொழுது கேட்டேன். “ ஏங்க செப்டிக் டேங்க திறக்காம இந்த அடைப்பை சரி செய்யமுடியுமா? “ “ ஓ பண்ணலாமே ! ட்ரை பண்ணிப் பார்க்குறேன் !” அவரும் பல முயற்சிஎடுத்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. “ “வேற வழியே இல்லைங்க டேங்க ஓபன் பண்ணிணாதான் முடியும்.”

“ போச்சு எல்லாம் போச்சு! டேங்கை தொறந்தா என் வண்டவாளமும் சேர்ந்து நாறுமே ! “ என்ன செய்வது ? அப்பா வேறு கூடவே நின்றுகொண்டிருந்தார். டேங்கை திறக்க சிமெண்ட் ஸ்லாபை உடைக்க ஆரம்பித்தார். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான் என் தாயார் சொன்னார் “ நீங்க ரெண்டுப்பேரும் ஏன் நிக்கறீங்க. ஒரே நாத்தமா இருக்கும். அவரே சரி பண்ணிடுவார் நீங்க உள்ள
போங்க ! “ “
“ ஆமா சார் நீங்க போய்டுங்க நான் பார்துக்கறேன் !”

அப்பா ஒருவழியாக உள்ளே போனார். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது. “இல்லமா நான் இருந்து பார்த்திட்டு வர்றேன்”

“என்னமே போ என்னத்த பார்க்கிறயோ ! “ திட்டிக்கொண்டே அம்மா சென்றுவிட்டார்.

எதோ ஒரு குழாயைக் கிண்ட அடைப்புக்குக் காரணமான வஸ்து வந்தது வேறெதுவுமில்லை என் Foreign Book துகள் துகளாய். சுத்தம் செய்பவர் அதையும் என்னையும் பார்த்தார். பேசாமல் அவர் பாக்கெட்டில் 20 ரூபாயைச் சொருகினேன்.சைகையிலேயே அப்பாவிடம் கூறவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.

எல்லாம் சரி செய்துவிட்டு வந்தவரிடம் அப்பா கேட்டார் “ என்னப்பா அடைச்சுகிட்டு இருந்தது ? “

“ குழாய் உடைஞ்சி உள்ள விழுந்திருச்சு சார். அதான் ! “

மானம்காத்த மகராசா !! நன்றிப்பெருக்குடன் அவரைப் பார்த்தேன். அதன்பின் ஞாயித்துக்கெழமை கடைகளையே மறந்துவிட்டேன்.

Monday, February 13, 2006

ஜொள்ளு for Dummies ( Edition 1 )Preface :

பலபேருக்கு ஜொள்ளுன்னா என்னான்னே தெரிய மாட்டேங்குது. இவங்கெல்லாம் ஜொள்ளுன்னா ஏதோ தீண்டத்தகாத சாமாச்சாரம் போல நெனச்சிகிட்டு செருப்ப எடுப்பேன் அடுப்ப எரிப்பேன்னு வீராப்பா வீண்வாதம் பண்ணிட்டு அலையுறாங்க! நம்ம வள்ளுவரே என்ன சொல்லியிருக்காருன்னா

காதலினும் மெல்லிது ஜொள்ளு சிலர் அதின்
செவ்வி தலைபடு வர்

வள்ளுவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது ?

போன ஞாயித்துகிழமை அப்படியே லேண்ட்மார்க்கில் land ஆகி இருந்தேன் ! பல பேரு புத்கத்தையும் புத்தகம் பார்க்கிற மாதிரி புத்தகம் பார்க்கிற பொண்ணுகளையும் புரட்டிகிட்டு இருந்தாங்க! ஒருகாலத்துல சுரிதாரே ஏதோ மார்டன் டிரெஸ்சின்னு நெனச்சிகிட்டு இருந்த காலம் மலைஏறி மன்னார்குடி கடல்ல கலந்திருச்சு.இப்போ என்னடாண்னா டிசர்ட்டும் டைட் ஜீன்ஸ்சுன்னு சும்மா பின்னி எடுக்கறாங்க நம்ம கண்ணை! ஏற்கனவே தரையெல்லம் ரொம்ப வழவழன்னு இருக்கு இதுல வேற ரோட்டுல ஆயில் கொட்டுன மாதிரி நம்ம சொந்தங்கள் எல்லாம் ஜொள்ளவிட்டு கெளப்பிட்டு இருக்காங்க. அவனவன் வழுக்கி விழாம இருக்கறதே பெரிசாப் போச்சு ! ஜொள்ளு பாண்டி இவ்ளோ distraction களையும் மீறி அப்பப்போ புத்தகத்தையும் மேய்ஞ்சுகிட்டு இருந்ததுல திடீர்ன்னு இந்த புத்தகம் கண்ணுல பட்டுது.அப்படியே சுட்டுட்டு வந்துருக்கறேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் சரக்க இறக்கி வுடுறேன்.

இதுல ஆண்பால் பெண்பாலெல்லாம் கிடையாது ! ஜொள்ளு இருபாலருக்கும் பொதுவானது ! என்னோட வசதிக்காக ஆண்பாலையே எடுத்துக்கறேன். யாராவது தப்பித்தவறி பொண்ணுங்களா இருந்துட்டா ஆண்களையெல்லாம் பொண்ணுங்களா மாத்திப்படிங்க! தவறாம படிங்க! சீக்கிரமே நீங்க Professional ஜொள்ளர் ஆயிடலாம் ! பரீச்சையெல்லாம் கெடையாது ஆனா Practicals உண்டு !!!

ஜொள்ளாமை ஒரு பெருங்குற்றம்
ஜொள்ளாமை ஒரு பாவச்செயல்

சரி பாடத்துக்குள்ள நுழைவமா ?

பொது விதி :

எல்லோரும் ஜொள்ளரே !

எல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்

ஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ! ( காதலி !)

ஜொள்ளு அதிகமாச்சுன்னா லொள்ளு !

ஜொள்ளு பல வகைப்படும். ஜொள்ளு பல இடங்களில் பலவாறு அழைக்கப்படுகிறது.சில சமயம் ஜொள்ளுக்கு ‘காதல் ‘ என்ற மறுபெயர் உண்டு. நீண்ட நாட்களாக ஒரே பெண்ணையோ அல்லது பையனையோ பார்த்து விடும் ஜொள்ளு காதலாகும் ஆபத்துகள் அதிகம்.

ஜொள்ளில் பல வகைகள் இருந்தாலும் இப்பொழுது பாப்புலராக உள்ள லேசர் ஜொள்ளைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

லேசர் ஜொள்ளு :

ஒரு கும்பல்ல நின்னுகிட்டு இருக்கீங்க ! பல பொண்ணுங்களும் பசங்களும் நிக்கறாங்க.திடீர்னு தென்மேற்கு திசையில இருந்து ஒரு ஜொள்ளு உங்களைக் க்ராஸ் பண்ணி உங்க பக்கத்திலே நிக்கிற அனுவையோ இல்லை அம்புஜத்தையோ தாக்குதுன்னு வைங்க! இப்போ அதே ஜொள்ளு திரும்பி அதே திசையில் பயணப்படுதுன்னு வைங்க! இப்படி எவ்ளோ கும்பலா இருந்தாலும் ஒரு பர்டிகுலர் ஆள் மேல குறி தவறாம விடுறதுதான் லேசர் ஜொள்ளு ! மாக்ஸிமம் பார்தீங்கன்னா இந்த ஜாதி ஜொள்ளர்கல்லாம் ‘காதல்’ அப்படீங்கற போர்வையில ஜொள்ளுமேளா நடத்திகிட்டு இருப்பாங்க!

இந்த லேசர் ( காதல் ) ஜொள்ளுல ஒரேயொரு ஆபத்துதான் . சமயத்தில இது கல்யாணம் வரை செல்லும் அபாயங்களும் உண்டு.இதைத்தான் வள்ளுவர்

ஜொள்ளினால் சுட்ட வடு உள்ளாரும் ஆறாதே
காதலினால் பட்ட வடு !

என அழகாக கூறியிருக்கிறார். இவர்களின் மெஜாரிட்டி அதிகமானதினால் இவர்கள் ஜொள்ளர் தினத்தை மாற்றி ‘ காதலர் தினம் ‘ எனப் பெயர்சூட்டி விட்டனர்.
இந்த ஜொள்ளுல வழுக்கிவிழுந்து சில்லறை பொறுக்குனவங்க எண்ணிக்கை இந்தியாவோட மக்கள் தொகையவே தாண்டும்ன்னா பார்துக்குங்களேன்! ஆனாலும் இவங்க சில்லறை பொறுக்குனதோட நிப்பாட்டிகாம அவங்க டிசைன் டிசைனா விட்ட ஜொள்ளப்பத்தி தெய்வீகமா பேசிகிட்டு எழுதிகிட்டு திரிவாங்க! அதுக்கு ‘கவிதை’ அப்படீன்னு பெயர் சூட்டி மகிழ்வார்கள் !

சரி போய்ட்டு போறாங்க ! என்னதான் இருந்தாலும் நம்ம இனம் இல்லையா? அதுனால ஜொள்ளுப்பாண்டி எல்லா so called காதலர்களுக்கும் வாழ்த்துக்கள சொல்லிகிறேனுங்கோவ்வ்வ்!

நேரமின்னமையால் மற்ற வகைகளைப் பற்றி அடுத்த edition ல ஜொள்ளறனுங்கோ! சரியா ? !

Friday, February 10, 2006

நாயர் பெத்த பொண்ணு !

கோப்பெருந்தேவிகளும் , சீத்தலைச் சாத்தனார்களும் உலாவந்துகிட்டு இருக்கிற இந்த வலையில ஜொள்ளுப்பாண்டிக்கும் ஒரு கவிதையக் கொளுத்திப்போட்டா என்னான்னு தோணியதன் விளைவே இந்தக் கவிதைங்கறத நான் முன்னாடியே சொல்லிக்கறேன். அப்புறம் கவிதையப்படிச்சிட்டு தளை தட்டுது கால் தட்டுதுன்னு கம்பெடுத்துகிட்டு அடிக்க வந்துராதீங்க! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் சொல்லிபுட்டேன் ! ஏற்கனவே நான் ப்ளாக் ஜொள்ளுபத்தி எழுதுனதுல பல பேரு முதுகில சொருகுன அருவாளோட அலைஞ்சுகிட்டு இருக்காங்கன்னு நம்ம ஜொள்ளுப்பேட்டையில இருந்து ரகசிய தகவல் வந்திருக்கு. என்ன பண்றது விடலைபையன்னாலே பிரச்சனைதான் ! வழக்கம் போல சீரியசா எடுத்துக்காதீங்க!


அன்புள்ளவனே
நலம்
நலமறிய
ஆவல் !
காதலுடன்
உன்னவள் !


இப்படி பலபேரு லெட்டர் ஆரம்பிக்கிறதையே ஒண்ணுங்கீழ் ஒண்ணா எழுதிப்போட்டு பல பின்னூட்டம் வாங்கிபுடுறாங்க. ம்ம்ம் என்ன பண்றது ! நமக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லயே ! சரி காலேஜ்ல break ல உக்கார்து எழுதுனது இது. நமக்குத்தான் ஒரே பொண்ணப்பத்தி கவிதை எழுறது கூட கஷ்டமாச்சே! படிச்சுட்டு கொஞ்சம் கொளுத்தி போட்டுட்டு போனீங்கன்னா ஜொள்ளுபாண்டிக்கு சந்தோசந்தான் !

ஜீன்ஸ்சு சுடி மேக்ஸியிலே
கலக்குறாளே பொண்ணு
இவ ஸ்பாஞ்சு வச்ச கன்னம்
ரெண்டு வச்சிருக்கும் பன்னு !

லேத்து டூலு கணக்காத்தான்
கடையறாளே மனச ஒரு
ஆசிட் ஊத்தி கழுவுனாலும்
போகாதவ நெனப்பு !

பாக்கப் பாக்க அலுக்கலையே
நாயர் பெத்த பொண்ணு
அவள பாத்து பாத்து ஆகிபோச்சு
எம்மனசு புண்ணு !


மல்லிகாவ பாத்துபுட்டு
மதிகெட்டுப் போச்சு
எவனப் பாத்தாலும்
அவளப்பத்தியே பேச்சு !

சரி சரி டென்சன் ஆவாதீங்க ! ஏதோ என்னால முடிஞ்சது அவளோதான்! ஒகே ? சனிக்கிழமை வேற ! Bar ல எல்லாம் என்னமோ அம்மன் கோயில்ல கூழ் குடிக்க நிக்கற கும்பலைவிட அதிகமா இருக்கு கூட்டம். போய் துண்டுபோட்டு வைக்கனூம்தான் போல ! அளவா ஊத்திக்கிங்கப்பு. பாத்து பாங்கா நடந்துக்குங்க என்ன? வரட்டா !

Thursday, February 09, 2006

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part 2ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

மாணவர்கள் doubt கேட்டால்
Refer பண்ணச் சொல்லுவது
மாணவிகள் doubt கேட்டால்
Refer பண்ணிச் சொல்லுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல்
துப்பட்டா இல்லாமல் குனிந்து
பட்டாசு கொளுத்தும்
எதிர்வீட்டுப் பெண்ணை ரசிப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

ராங்க்காலில் பெண்குரல் கேட்டால்
நாயைப் போலக் குழைவது
அதுவே ஆண் குரல் என்றால்
நாயைப்போல குரைப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

தின்னவேத் தெரியலைனாலும்
பர்கரை வாங்கிவச்சுகிட்டு
காஃபி ஷாப்பில் அமர்ந்திருப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

சிம்கார்டே இல்லாட்டியும்
பொண்ணுங்களைப் பார்த்தால்
செல்போனை காதில் வைத்துக்கொள்வது!


Blog ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

' நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது !


இதைப் படிச்சிட்டு கவிப்பெருந்தகைகெல்லாம் என்னை ஊடுகட்டி அடிக்க வந்துறாதீங்க ! சும்ம ஜாலியா எடுத்துக்குங்க! ஓகே வா ?

Wednesday, February 08, 2006

அஞ்சரைக்குள்ள வண்டி !ஜொள்ளுப்பாண்டி வயசுக்கு வந்த சமயம். இப்போ மாதிரி இன்டர்நெட் அறிவு எல்லாம் இல்லாம ஒரு டவுசரைப் போட்டுகிட்டு போஸ்டரைப் பார்த்து சுத்திகிட்டு இருப்போம்.ஒவ்வொரு ஊர்லயும் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு தியேட்டர் இருக்கும்.இப்போ சென்னையில பார்த்தா ‘ பரங்கிமலை ஜோதி’ ‘ மாதிரி ! எங்க ஊர்ல ‘ திருக்காம்புலியூர் முரளி ‘.

அனாடமி ஆர்வத்துல மனசு அலைபாய்ஞ்சுகிட்டு இருந்த வயசு! என்ன பண்றது? ஊர்பூரா அங்கங்கே அரைகுறை போஸ்ல போஸ்டர் ஒட்டி என்னையமாதிரி எளசுக மனச கெறங்டிச்சுகிட்டு இருந்தாங்க! தியேட்டர் பேரை தப்பான இடத்துல சரியா ஒட்டி இலைமறைக்காய் போல பாக்கறவங்க BP ய கண்ணாபிண்ணான்னு ஏத்திவிட்டுருவாங்க! போஸ்டரைப் பார்த்துட்டு பல பெரிசுக எதிர்லவந்த வண்டிமேல மோதி விழற சம்பவம் எல்லாம் நடந்திருக்கு! சரி எப்படியாச்சும் ஒரு படமாச்சும் திருக்காம்புலியூர் முரளில பார்கணுங்கறதை எங்க வாழ்க்கையின் லட்சியமா வச்சுகிட்டு அலைஞ்சோம்!

ஒருநாள் சாயங்காலம் டியூசன் முடிச்சுட்டு பசங்கெல்லாம் கும்பலா சைக்கிள்ல வந்துகிட்டு இருக்கறப்போதான் பார்த்தோம் அந்த போஸ்ட்டரை.
“ அஞ்சரைக்குள்ள வண்டி” திருக்காம்புலியூர் முரளியில் இன்றுமுதல் !‘ ( எப்படியும் பலபேர் இந்தப்படத்தைப் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன் ஆனா ஒத்துக்க மாட்டீங்களே ! )

அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்த தீ பற்றிக்கொண்டது ! எங்க கேங் லீடர் ராஜேஷ்தான் ஆரம்பித்தான். “ மக்கா இந்த தடவையாச்சும் இந்த படத்த பார்கலாம்டா என்ன சொல்றீங்க ?”
“ ஐய்யய்யோ நான் மாட்டேம்பா !” பல பால்புட்டிகள் சத்தம்போடாமல் எஸ்கேப் ஆகிவிட மிச்சம் இருந்தது நானும் ராஜேசும்தான்.

சரி ஆனது ஆவட்டும் எத்தனை நளைக்குதான் கற்பனையிலேயே படம் பார்க்குறது? ரிஸ்க் எடுக்க வேண்டியதுதான். முடிவு செய்தோம். ஊருல இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி இருந்தது தியேட்டர். என்ன பிரட்சணையின்னா வர்ற பெரிசுல எங்க ஊட்டு பெருசுக வந்துடுச்சின்னா என்ன பண்றது ?
“ அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாதுடா ! அப்படியே பார்த்தாலும் வீட்டிலே எப்படி சொல்ல முடியும். அப்புறம் அவங்க வண்டவாளம் தெரிஞ்சிடுமில்ல?! “ ராஜேசின் லாஜிகலான கேள்வி எனக்குள் இருந்த பயத்தை அகற்றியது.

வரும் சனிக்கிழமையென நாள் குறித்தோம். சனிக்கிழமை. காலை எழுந்ததிலிருந்தே மனது வேகமாக அடித்துக்கொண்டது. வீட்டில் சொல்லிவைத்திருந்தேன். “டியூசனில் டெஸ்ட் இருக்கும்மா அதுக்கப்புறம் டியூசன் இருக்கு ! 1 மணிக்குதான் சார் விடுவாரு ! “

“ சரிடா ! ஒழுங்கா டெஸ்ட் எழுது என்ன ? “ அம்மா தோசையை தட்டில் வைத்துகொண்டே சொன்னார். மன்னிச்சிக்குங்க தாயேன்னு! மனச்சுக்குள்ளேயே சொல்லிட்டு வீட்டிலிருந்து 11 மணிக்கு கிளம்பினேன் 11:30 க்கு படம்ன்னு ராஜேஷ் முந்திய நாளே தியேட்டர் பக்கம் போய் வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான்.

போகிறவழியில் ராஜேஷ் என்னுடன் சேர்ந்து கொண்டான்! தூரத்தில் “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா” ன்னு தியேட்டரிலிருந்து பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. என்ன கொடுமை பாருங்க உள்ளே மஜாவான படம் வெளியா பக்தி பழமா பாட்டு. வேகவேகமாக சைக்கிளை மிதித்து சீக்கிரமே தியேட்டருக்கருகில் வந்துவிட்டோம். உடனே நுழையவில்லை. எவனெவன் வந்திருக்கானுகளோ? பார்டர் செக்யூரிட்டி போல சுற்றும் முற்றும் வேவு பார்துவிட்டு தெரிஞ்ச தலை ஏதும் இல்லையின்னு அப்படியே சைக்கிள் ஸ்டேண்ட் பக்கமா ஒதுங்குனோம். டிக்கெட் கவுண்டரில் கேட்டார்
“ எதுப்பா வேணும் முதல் வகுப்பா இல்ல பாக்ஸா? “

“ என்னாது பாக்ஸா ? கேள்விய பார்த்து நீங்க திருக்கம்புலியூர் முரளி எதோ சென்னை சத்யம் தியேட்டர் ரேஞ்சுக்கு நெனச்சுக்காதீங்க ! இது சாதாரண டெண்ட்
( கீத்து கொட்டாய்) தியேட்டர்.

“ சரி பாக்ஸே கொடுங்க ! “ 15 ரூபாய் டிக்கெட் ! ஆனால் டிக்கெட்டில் எழுதியிருந்ததோ வெறும் 3 ரூபாய். என்ன செய்ய இங்கெல்லாம் வந்து ரூல்ஸ் பேசிட்டு இருக்க முடியுமா? அப்படியே பூனைபோல சத்தம் போடாமல் வாங்கிக்கொண்டு பாக்ஸ் பக்கம் பதுங்கினோம். பாக்ஸ் என்றால் தனி தனி மரசேர் போட்டிருந்தார்கள். மற்றவர்களுக்கெல்லாம் வெறும் பெஞ்ச்தான்.

ஒருவழியாக படம் ஆரம்பித்தது. என்ன இது சம்பந்தமே இல்லாமல் பல சீன். யார் யாரோ வந்து போனார்கள். தியேட்டருக்குள்ள ஒக்கார்ந்துகிட்டு இருக்கிறவங்க அவனவன் பக்கத்தில இருக்கறவன்கிட்ட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கான்ங்க!. ஒண்ணுமே புரியலயேண்ண்ணு மண்டை குழம்பி உட்கார்ந்திருந்தோம். ஒரு 15 நிமிடம் ஆகியிருக்கும். திடீரென தியேட்டரினுள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் அமைதியானார்கள்! தியேட்டரினுள் மூச்சுவிடும் சத்தமே DTS effectல் கேட்டதுன்னா பார்த்துக்குங்களேன்! ஒடிய படம் நிறுத்தப்பட்டது. சடாரென திரையில் பலான படம் ! என்ன கன்றாவி இது ! இதுக்குப் போயா இவ்ளோ தூரம் வந்தேன்! நினைத்துக்கொண்டேன். ஒரு 10 நிமிடம் ஓடியிருக்கும். அவ்வளவுதான் படம் நிறுத்தப்பட்டது. ஒரு லாங் பெல் அடித்தது. அனைவரும் எழுந்துவிட்டனர். படம் முடிஞ்சிருச்சு ! “ இன்னிக்கு ஓட்டுன பிட்டு சரியில்லப்பா ! “ ஒரு திருப்தியடையாத ரசிகர் புலப்மலுடன் சென்றார். ரெகுலராக பார்க்கிறவர் போலும் பாவம் !


சீக்கிரம் சைகிளை எடுத்துட்டு கெளம்பிடணும்னு வெளியே வந்தோம். என் சைக்கிளை வேகமா எடுக்கறப்போ பின்னாலிருந்த சைக்கிளில் இடித்துவிட்டது ! இடித்தோடுமட்டுமல்லாமல் என் சைக்கிளின் ஸ்டேண்டு அந்த சைக்கிளின் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டது. எவண்டாது கபோதின்னு சைக்கிள்காரனைப்
பார்த்தா அது என் மாமா ! ஐய்யகோ !

பின்குறிப்பு :- என் நைனா என்னை திருப்பிப்போட்டு வெழுத்ததில் 4 நாட்களுக்கு நான் விவேக் போல வேட்டியைக் கட்டிகொண்டு பின்னால் தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைந்தது ஒரு வேதனையான தனிக்கதை !

Tuesday, February 07, 2006

செல் பேசும் வார்த்தைகள்
( எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு.அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன?.. ஒரு இளைஞன்,,, காதலன்.. அவன் செல்போன் மனசுவிட்டு பேசினா எப்படி இருக்கும் ! அதான் கண்ணு இது ! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும் )

கீய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்.. ( மெஸேஜ் ஒன்று வந்தடைகிறது )

செல் : நிம்மதியா தூங்க உடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இங்த நேரத்துல என்னடா மெஸெஜ் வேண்டியது கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய ‘சாட்’தான். என்ன பொழப்பு இது ! ஆஹா எங்திரிச்சிட்டான்யா..என்னைக் கையிலே எடுத்துட்டானே.. ஆஹா பொண்டாட்டிதான் மேஸேஜ் அனுப்பியிருக்கா ! இன்னும் கல்யாணமே ஆகலே அதுக்குள்ள லவ்வரு நம்பரை ‘பொண்டாட்டி’ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா...

“ செல்லம் தூங்கிட்டயாடா ? “

அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம தூர்டர்ஷன்ல ஹிந்தி மெகா சீரியலாடி பார்துகிட்டிருப்பாங்க ! அஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா !

“ ஆமா செல்லம் ! இப்பதான் துங்கினேன். கனவுல நீதான் வந்த! ரெண்டுபேரும் சுவிஸ்ல டூயட் பாடிட்டு இருந்தோம்” !

டேய் சத்தியமா சொல்லு.. உன் கனவுல அவளாடா வந்தா! கடலை முட்டாய்ல இருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வங்குன கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமிதான் வந்தாரு! ஏண்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற!

கீய்ங் கீய்ங்... கீய்ங் கீய்ங்...

பதில் வந்துடுச்சுடா.அவ இவனுக்கு ஒருபடி மேல படுத்துவாளே.. என்ன சொல்லியிருக்கா !

“ உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?”

ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன ட்டிரெஸ் போட்டிருந்தே, லிப்ஸ்டிக் சரியா இருந்துச்சா, மல்லிப்பூ வச்சுருந்தியா, ஹீல்ஸ் எத்தனை அடி உயரத்தில போட்டிருந்தே எல்லாம் வரிசையா கேளு!

“டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருங்தோம்.நீ தேவதை மாதிரி இருந்தே!


டேய் நீ தேவதைய முன்னபின்ன பார்த்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

“ டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குது நான் என்ன பண்ண?”

ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிபுடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமாண்ஸ் வேண்டியது கெடக்கு. அடங்குங்கடா!

“ என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிட்டே கண்ணை மூடி தியனம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்மா ..!

“ ச்சீ... த்தூ... எச்சி எச்சி ! உம்மான்னு அடிச்சா போதாதா ? .. அந்த இலவை எனக்கு வேற கொடுக்கணுமா , கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா. உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுடுச்சின்னு வெறுப்புதான் வரும். லூசுப்பய ! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

“ டேய் புஜ்ஜு, எனக்கு உன் பேரைச்சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!”

“ எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! ‘ கண்ணப்படைத்து பெண்ணைப்படைத்த இறைவனைவிட செல்லைப் படைத்து ப்ரீ SMS சை படைத்த மனுசன் கொடியவன்’ போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல !

“ செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் ?”

“ உலக வங்கியி;ல இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?”

கடன்காரி உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா.நம்மாளு என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்.

“ முதல் டீச்சர், முதல் சம்பளம், முதல் கவிதை, முதல் காதல்.. இடையெல்லாம் யாரவது எவ்வளவு பிடிக்கும்ன்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்”

“டேய் அளக்காதடா ! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெஸேஜைத் தான நீ அனுப்புன. நடத்து , நடத்து! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே நீ செத்தடா !

( அரை மணி நேரம் கழித்து அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிட்டு ‘சாட்’டை முடிக்கிறான்.)

முடிச்சிட்டாங்களா! என்னது திருப்பி இவன் ஏதோ நோண்டுறான். ஓ... என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வைக்கப் போறானா. எத்தனை மணிக்கு! அடப்பாவி உலகத்துலயே பகல் 12 மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் ‘பொண்டாட்டி’ திருப்பி ‘சாட்’டுக்கு வராம இருந்தா சரிதான்.

( காலை 11 மணி )

அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ ஏதோ ரிமைண்டர் செட் பண்ணி வைச்சிருக்கான். அதான்.. என்னது...

“ இன்று திங்கள்கிழமை. பல் தேய்க்க வேண்டும்”

அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தைக் கண்டுபுடிச்சவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ‘ ஏண்டா இப்படி ஒரு சிஸ்ட்டத்தை கண்டுபிடிச்சோம்’னு தன்னைத் தானே அடிச்சுக்குவான் விட்டா ‘ பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்’னு கூட ரிமைண்டர் வைப்படா நீ ! டேய் எவ்வள்வு நேரம் கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்திரிச்சு தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆஃப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான் போல ! டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!

( அரை மணி நேரம் கழித்து இன்கமிங் கால் வருகிறது )

‘ நந்தவனத்தில் ஓர் ஆண்டி’... ( ரிங் டோன் ஒலிக்கிறது. )

அவனவன் என்னென்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திட்டிருக்கான். கஞ்சப்பய! ரிங்டோனைப்பாரு. நந்தவனத்தில ஆண்டியாம். டேய் போனை எடுடா. யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.

“ ஹலோ.. ஆங்... குட்மார்னிங் சார்.. கண்டிப்பா,,, இன்னைக்கு கண்டிப்பா முடிச்சரலாம் சார்.. இல்ல சார்... ஆமா கொஞ்சம் பிஸிதான்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்… ப்ளீஸ் அப்புறமா பேசலாமே சார்.. ஓகே. “

தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியதிருக்கே! மணி 12 ஆக இன்னும் 5 செகெண்டுதான் இருக்கு. அலாரம் அலரக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிட்டே இரு. நானும் தூங்...

( செல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது )

சொந்த சரக்கு இல்லீங்கண்ணா ! வந்த சரக்கு ! நலாருக்குங்களா ?

Monday, February 06, 2006

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்


எல்லாரும் மத்த ஏரியாவுல இருந்து புதுசா உள்ள வர்றீங்க. வாங்க ! கொஞ்சம் warmup பண்ணிக்குவோம். ஏரியாவ கொஞ்சம் சுத்திக்காட்டுரேன். எல்லோரும் நோட்பண்ணி வச்சுக்குங்க !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

‘ உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்
உன் தங்கையைக் கண்டேன்
உன்னை மறந்தேன் ‘

என கவிதை எழுதுவது

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

வரும் நாட்களில்
அவளைப் பார்ப்பது
வராத நாட்களில்
அவள் தோழியைப் பார்ப்பது

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

Unit testல் 2 மார்க்
எடுத்தாலும்
கைகுலுக்கிப் பாராட்டுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

குட்டைப்பாவாடையில்
குலதெய்வம் போலிருக்கிறாய்
என கரடி விடுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

மூப்படைந்தாலும்
மூக்கில் எதோவென
கன்னத்தை கிள்ளி சரி செய்வது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

ஞாயிறு பீச்சிற்கு
கூலிங்கிளாஸ் அணிந்து
செல்வது


ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

தன் ஏரியாவில்
தன்னடக்கமாய் இருந்து
அடுத்த ஏரியாவில்
அடக்கமிழப்பது !


ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,

கும்பலில் செல்லும் போது
பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு
செல்வதுஓகே. முதல் நாள். இவ்ளோ போதும்னு நெனைக்கிறேன். அப்பப்போ ஜொள் விளக்கப்புத்தகம் update செய்யப்படுங்கற எச்சரிக்கை விடுறேன்.நீங்களும் உங்க விளக்கத்த அப்படியே பேட்டையில ஏத்துங்க மாமோய் !

Sunday, February 05, 2006

நான்தாங்க ஜொள்ளுப்பாண்டி !முடியலங்க ! என்னால முடியலே ! இந்த தமிழ்கூறும் நல்லுலகுல என்னைப்போல அப்புராணி இளைஞன் ஜொள்ள ஒரு Blog இல்லையே !

ஒரு பக்கம் என்னடாண்ணா பெரிசுக ஜாதிச்சண்டைல இருந்து குழாயடி சண்டைவரை கெளப்பிவிட்டுட்டு ஓரமா ஒக்காந்து வேடிக்கை பார்க்கராங்க ! ஏற்கனவே செத்துப்போன மஹாத்மா பக்கத்துலேயே கல்லறை கட்டி அவரைக் கொன்னவன்
“ ரொம்ப நல்லவன்னு “ வடிவேலு மாதிரி கதர்றாங்க ! இவங்க பஞ்சாயத்த தீக்கறதுக்கே தாவு தீர்ந்து போகுது ! இது தெரியாம பலபேரு அவங்களுக்கு பின்னூட்டங்கர பேர்ல அடிச்சுகிட்டு சாவராங்க ! கடைசில பின்னூட்டம்னு சொல்றதுக்கு பதிலா
‘பின்னெச்சம்’ ன்னு சொல்லிட்டு போகலாம் ! ‘ பெரிசு பண்ணிய ரவுசு ‘ ன்னு தெரியாம பல இளைஞர்கள் எல்லாம் கெழவனா அலையறாங்க !

சரி இளைஞர்களுக்கு யாரும் எழுதரது இல்லயான்னு பார்க்க ஜொள்ளுப்பாண்டி தன்னோட குதிரைய எடுத்துட்டு கெளம்புனாரு ! ஆஹா தூரத்துல காதல் நந்தவனம் தெரியுதேன்னு நெருங்கிபோய் பார்த்தா ஐயகோ ! ஒரு தேவதாசுக்கே தாங்கலே ! இங்க என்னடான்னா பல தேவதாஸுங்க அங்கங்க நாயோட ஒக்காந்துகிட்டு கவிதைங்கற பேர்ல ஒப்பாரி வைக்கறாங்க ! ஓரமா ஒக்கரலாமின்னா இவங்க ஒப்பாரி சத்தத்துல நானும் சேர்ந்து ஒப்பாரி வைக்க வேண்டியிருக்கு ! எழவு வீட்டுக்குள்ள நுழைஞ்ச effect ! ரொம்ம பேசுனா என்மேல நாயை ஏவிவிட்டுடுவாங்கபா !

இவங்கள்ட்ட இருந்து தப்பிச்சு தெரிச்சி ஓடிவரப்போ யோசிச்சதுதான் ஜொள்ளுப்பேட்டை !
சரி என்னைய மாதிரி சராசரி இளைஞன் இந்த பக்கம் வந்தா ஒக்காந்து கொஞ்சம் நிம்மதியா தம்மடிச்சிட்டு அப்படியே pass ஆகுற பிகர்கள பார்த்து அவங்க முகம் சுழிக்காம சைட் அடிச்சிட்டு போறதுக்குதான் இந்த இடம் ! வந்தமா கொஞ்சம் ஜொள்ளுனமா பொழப்ப பார்த்தமான்னு போய்ட்டே இருங்க !
எனது குறிக்கோள் “ ரொம்ப ஜொள்ளு கொஞ்சம் லொள்ளு “

ஆகவே இங்கே எட்டிப்பார்த்திருக்கும் இளைஞர்களுக்காக ( வயதாலும் அல்லது மனதாலும் )சில வரிகள் :

பள்ளி வாழ்க்கையிலிருந்து வா வெளியே !
என்று இளைஞனாகப் போகிறாய் நீ ?
நீ ஒளவையாரல்ல கிழமொழி கூற
நீ சாக்ரடீஸ் அல்ல தத்துவங்கள் உதிர்க்க
நீயும் ஒரு இளைஞன் ! ?
என நீ உணரும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்றேனும் நீயும் இளைஞனாவாய்
என்ற நம்பிக்கையுடனே
காத்திருக்கிறேன் இந்த ஜொள்ளுப்பேட்டையில்..