Sunday, February 05, 2006

நான்தாங்க ஜொள்ளுப்பாண்டி !முடியலங்க ! என்னால முடியலே ! இந்த தமிழ்கூறும் நல்லுலகுல என்னைப்போல அப்புராணி இளைஞன் ஜொள்ள ஒரு Blog இல்லையே !

ஒரு பக்கம் என்னடாண்ணா பெரிசுக ஜாதிச்சண்டைல இருந்து குழாயடி சண்டைவரை கெளப்பிவிட்டுட்டு ஓரமா ஒக்காந்து வேடிக்கை பார்க்கராங்க ! ஏற்கனவே செத்துப்போன மஹாத்மா பக்கத்துலேயே கல்லறை கட்டி அவரைக் கொன்னவன்
“ ரொம்ப நல்லவன்னு “ வடிவேலு மாதிரி கதர்றாங்க ! இவங்க பஞ்சாயத்த தீக்கறதுக்கே தாவு தீர்ந்து போகுது ! இது தெரியாம பலபேரு அவங்களுக்கு பின்னூட்டங்கர பேர்ல அடிச்சுகிட்டு சாவராங்க ! கடைசில பின்னூட்டம்னு சொல்றதுக்கு பதிலா
‘பின்னெச்சம்’ ன்னு சொல்லிட்டு போகலாம் ! ‘ பெரிசு பண்ணிய ரவுசு ‘ ன்னு தெரியாம பல இளைஞர்கள் எல்லாம் கெழவனா அலையறாங்க !

சரி இளைஞர்களுக்கு யாரும் எழுதரது இல்லயான்னு பார்க்க ஜொள்ளுப்பாண்டி தன்னோட குதிரைய எடுத்துட்டு கெளம்புனாரு ! ஆஹா தூரத்துல காதல் நந்தவனம் தெரியுதேன்னு நெருங்கிபோய் பார்த்தா ஐயகோ ! ஒரு தேவதாசுக்கே தாங்கலே ! இங்க என்னடான்னா பல தேவதாஸுங்க அங்கங்க நாயோட ஒக்காந்துகிட்டு கவிதைங்கற பேர்ல ஒப்பாரி வைக்கறாங்க ! ஓரமா ஒக்கரலாமின்னா இவங்க ஒப்பாரி சத்தத்துல நானும் சேர்ந்து ஒப்பாரி வைக்க வேண்டியிருக்கு ! எழவு வீட்டுக்குள்ள நுழைஞ்ச effect ! ரொம்ம பேசுனா என்மேல நாயை ஏவிவிட்டுடுவாங்கபா !

இவங்கள்ட்ட இருந்து தப்பிச்சு தெரிச்சி ஓடிவரப்போ யோசிச்சதுதான் ஜொள்ளுப்பேட்டை !
சரி என்னைய மாதிரி சராசரி இளைஞன் இந்த பக்கம் வந்தா ஒக்காந்து கொஞ்சம் நிம்மதியா தம்மடிச்சிட்டு அப்படியே pass ஆகுற பிகர்கள பார்த்து அவங்க முகம் சுழிக்காம சைட் அடிச்சிட்டு போறதுக்குதான் இந்த இடம் ! வந்தமா கொஞ்சம் ஜொள்ளுனமா பொழப்ப பார்த்தமான்னு போய்ட்டே இருங்க !
எனது குறிக்கோள் “ ரொம்ப ஜொள்ளு கொஞ்சம் லொள்ளு “

ஆகவே இங்கே எட்டிப்பார்த்திருக்கும் இளைஞர்களுக்காக ( வயதாலும் அல்லது மனதாலும் )சில வரிகள் :

பள்ளி வாழ்க்கையிலிருந்து வா வெளியே !
என்று இளைஞனாகப் போகிறாய் நீ ?
நீ ஒளவையாரல்ல கிழமொழி கூற
நீ சாக்ரடீஸ் அல்ல தத்துவங்கள் உதிர்க்க
நீயும் ஒரு இளைஞன் ! ?
என நீ உணரும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்றேனும் நீயும் இளைஞனாவாய்
என்ற நம்பிக்கையுடனே
காத்திருக்கிறேன் இந்த ஜொள்ளுப்பேட்டையில்..
25 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

Funny Picture. I wish I understood your language. I love the font.

JR Woodward

said...

Thank you woodward. You are the first to comment in my blog ! Yah Hooo!

said...

மொழிதெரியாமல்லாம் கமெண்ட்ட அள்ளி தெளிச்சிட்டு போறாங்க! மொழி தெரிஞ்ச யாரும் ஒரு வார்த்தைய கூட போட மாட்டேங்கறீங்களே! என்ன ஆச்சு? உங்கள் பொன்னான ஜொள்ளுகளை ஜொள்ளுப்பேட்டையில் ஊத்துங்க தோழர்களே, தோழிகளே!

said...

வாங்க ஜொள்ளுபாண்டி தங்கள் வரவு நல்வரவாகட்டும். நல்லாத்தான் ஜொள்ளிருக்கிங்க.

said...

welcome..

write more...

padichen ...rasichen...

hahaha
blog naasam...

said...

சந்தோஷ் ரொம்ம டேங்ஸ் மாமே ! ஏதோ இந்த சின்னப்பையனையும் மதிச்சு வந்தீங்களே! உங்களுக்கு எத்திராஜ் காலேஜ் முன்னாடி சீட்டு தாரேன் !( போலீஸயெல்லாம் சமாளிச்சரலாம் ஓகே?) சந்தோசமா ஜொள்ளுங்க!

said...

வாங்க பொட்டிகடை அண்ணாச்சி ! பொட்டிக்கடைதான் இந்த ஜொள்ளுப்பாண்டிக்கு போதிமரம் ! பொட்டிக்கடையில நின்னு பண்ணாத தவமா ?
சரி என்னவோ ப்ளாக் நாசம்ன்னு எழுதியிருக்கீங்களே எதுக்குங்கண்ணா? கொஞ்சம் விளக்குங்களேன்!

said...

சிங்கமே!
சிறை விட்டு வெளியே வா..
சீருடைக்குள் ஃபிகர்கள் பார்..
பார்க்க மறுத்தால்..
பக்கத்து சலூனுக்கு போ..
பரட்டைத்தலையை 'பங்க்'காக்கு
பஸ்டான்டுக்குப் புறப்படு..

வருக...வாழ்த்துக்கள்.

said...

வணக்கம் நிழல்மனிதன்! என்ன என்னோட நிழல் மாதிரியே பேசுறீங்க ! ஆதரவுக்கு நன்றி !

said...

Ella Oorlayum Eathavathu oru Petai irukkum.Aaana entha Petaiyum Namma Jollu Petai mathiri Varathu.Eanna Jollu Petai Namalai mathiri ilagarkalukkaana Thani Thoguthi. Election Heatla Kanchi Poi irukkira Valipa vayothiga Anbarglae Namma Petaikku Appappo vanthu ilaiparittu Ponga.Regards Pandi.Dubai Raja.

said...

துபாய் ராசா ஜொள்ளுப்பேட்டை இளைஞர்களுக்கான தனித்தொகுதியா ??? ஆஹா பாசமழையில நனையவைக்கிறீங்களே!! அப்பப்போ தம்மடிக்க வந்துட்டு போங்கண்ணா !!

said...

Paandi Thammadikura Palakkam illai.Athu eppavathu Soma Paanam, Sura Paanam Sapidum Pothu thaan.innaikku engalukku Weekend. ( Gulflam Friday thaan Holiday )Vaangalaen Paanam Sapida. Dubai Raja.

said...

அழைப்புக்கு ரொம்ப டேங்கஸ் துபாய் ராசா :)

சோம பானம் சுராபானம் எல்லாம் துபாயிலே கெடைக்குதா? கண்டிப்பா இன்னுருநாள் வாறேன். கச்சேரிய வச்சுக்குவோம் ;))

said...

Dubaila kidaikkatha Paanamae kidaiyathu Pandi.konjam Panam silavalicha
Ramba,Oorvasi,Maenagainnu kantharva kannigaloda Kachaeriyai kalai katta vachiralaam.Avanga Dance Aaduvaanga.Namma Soma Paanam,Sura Paanam Sapittukittae ukkanthu rasikkalamnaen.Namma thaan DUBAI RAJA vachae.Thinam Thinam Theepavali thaan.So u r always welcome Pandi.Dubai Raja.

said...

ஜொள்ஸ்,
உங்களுக்கு பொட்டிக் கடைதான் போதிமரமா? நமக்கு ரேடியோக் கடை! அப்படியே சாயங்காலம் 4.30/5.00 மணிக்கு கேஸட் தேடிப் பிடிச்சு அந்த "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்" பாட்டு போட்டால் அப்படியே எதிர் வீட்டில இருந்த வெளக்கமாறோட வெளிய வருவாங்க பாருங்க!

(அட! சாயங்காலம் வாசல் கூட்டி கோலம் போடத்தான்)

said...

//உங்களுக்கு பொட்டிக் கடைதான் போதிமரமா? நமக்கு ரேடியோக் கடை! அப்படியே சாயங்காலம் 4.30/5.00 மணிக்கு கேஸட் தேடிப் பிடிச்சு அந்த "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்" பாட்டு போட்டால் அப்படியே எதிர் வீட்டில இருந்த வெளக்கமாறோட வெளிய வருவாங்க பாருங்க! //

சிபி, இது உங்க வீட்டம்மாவுக்குத் தெரியுமா?

said...

வாங்க சிபியண்ணே,
'மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்' அருமையான பாட்டு. ஆமா அந்த ரேடியோக்கடை அண்ணி வீட்டுக்கு முன்னாடிதானே இருந்துச்சு? ;)

said...

பொன்ஸக்க அந்த கடையே அவுக வீட்டுக்காரம்மா வீட்டுக்கு முன்னாடிதான் இருந்துக்கனும் :)

said...

//ஆமா அந்த ரேடியோக்கடை அண்ணி வீட்டுக்கு முன்னாடிதானே இருந்துச்சு?//

இல்லை இது எங்க வீட்டுப்பக்கம்!

//சிபி, இது உங்க வீட்டம்மாவுக்குத் தெரியுமா?
//

பொன்ஸ்! இது நாள் வரை நடந்ததெல்லாமே தெரியும். நயன்தாரா உட்பட!

said...

ஜொள்ளுப்பாண்டி

ரொம்ப டமாசுப்பா உன் ஜோள்ளு. அதுசரி - கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாமல் ஜொள்ளு விடு. இல்லாட்டி 'ஓரமா ஒக்காரதுல' தகராலாகிடும். ஆனா உம்பேருக்கு சரின்னு வச்சிக்க...

said...

jollupandi superupu.jollumanklukku oru azhakana jolluptra.enna bologspot mattum nasam

said...

hai pandi oman thamil sangam unnai valthukirathu.
un sevai thodara vlthukkal.
summa athiruthilla blogspot.
very nice.good tips for tamil singangkalukku.
by gobi oman muscat

said...

aaha...jollu vidaratha pathi neenga oru Ph.d panalam poliriku =D....Anyway,nice blog and keep it up yeah!

said...

அன்பு சகலை (ஒரே பென்னை சைட் அடிச்சா சகலை தானே) ஜொள்ளுப்பாண்டி அவர்களே,

தங்கள் ஜொல்லுப்பேட்டை-ஐ கண்டேன்.. தமிழ் மொழிக்கு தாங்கள் ஆற்றி வரும் இந்த சேவை ஜொல்லர்கல் அனைவருக்கும் தேவை.

இயல், இசை, நாடகம் போன்ற கலைகலுடன் "ஜொல்லு" என்னும் கலையயும் சேர்க்கும் அளவிர்க்கு தங்கள் தொன்டு சிறப்பாக உள்ளது.

வரன்டு கிடக்கும் இந்த பூமியை தங்கள் ஜொல்லகராதி-யால் பசுமை படுத்தும் உங்கல் தொன்டின் காரனமாக உங்களை இந்த உலகம் இனி

ஜொல்-வேந்தர் ஜொள்ளுப்பாண்டி"

என்றழைக்கட்டும் !!!

இப்படிக்கு-

என்றும் உங்கள் அருகில் அமர்ந்து ஜொல்லு விடும் அன்பு சகலை - சதீஷ் குமார் (BSK)

said...

ஜொல்லின் செல்வர் பாண்டி, நீங்கள் எத்தனை நாளைக்குத்தான், கம்மாங்கரையிலும், பேருந்து நிழ்ற்குடையிலும் ஜொல்லிக்கிட்டு இருப்பீங்க? வாங்க...எங்களோட கிளப்பில் (திருமனமானோர்) வந்து சேருங்கள் (பொறாமையின் உச்சக்கட்டம்!!..ஹீ...ஹீ)