ஜொள்ளு எனப்படுவது யாதெனில்

எல்லாரும் மத்த ஏரியாவுல இருந்து புதுசா உள்ள வர்றீங்க. வாங்க ! கொஞ்சம் warmup பண்ணிக்குவோம். ஏரியாவ கொஞ்சம் சுத்திக்காட்டுரேன். எல்லோரும் நோட்பண்ணி வச்சுக்குங்க !
ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,
‘ உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்
உன் தங்கையைக் கண்டேன்
உன்னை மறந்தேன் ‘
என கவிதை எழுதுவது
ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,
வரும் நாட்களில்
அவளைப் பார்ப்பது
வராத நாட்களில்
அவள் தோழியைப் பார்ப்பது
ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,
Unit testல் 2 மார்க்
எடுத்தாலும்
கைகுலுக்கிப் பாராட்டுவது !
ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
குட்டைப்பாவாடையில்
குலதெய்வம் போலிருக்கிறாய்
என கரடி விடுவது !
ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
மூப்படைந்தாலும்
மூக்கில் எதோவென
கன்னத்தை கிள்ளி சரி செய்வது !
ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
ஞாயிறு பீச்சிற்கு
கூலிங்கிளாஸ் அணிந்து
செல்வது
ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
தன் ஏரியாவில்
தன்னடக்கமாய் இருந்து
அடுத்த ஏரியாவில்
அடக்கமிழப்பது !
ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
கும்பலில் செல்லும் போது
பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு
செல்வது
ஓகே. முதல் நாள். இவ்ளோ போதும்னு நெனைக்கிறேன். அப்பப்போ ஜொள் விளக்கப்புத்தகம் update செய்யப்படுங்கற எச்சரிக்கை விடுறேன்.நீங்களும் உங்க விளக்கத்த அப்படியே பேட்டையில ஏத்துங்க மாமோய் !


9 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:
amarkkalamaana collection :-))
பாலண்ணே ரொம்ப நல்லாருக்குண்ணுட்டீங்களே !
( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் ) இருங்க கண்ணீரைத் துடைச்சுக்கறேன்! ஆதரவுக்கு நன்றி !
நீங்க போட்ருக்க படத்தப் பாத்துட்டு சொல்றேன்..
ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,
Backview
பாத்துகிட்டே போயி
Frontview
மறக்குறது!
ஞானண்ணே பின்றீங்களே! உங்க பங்களிப்புக்கு ரொம்ப டேங்ஸ்! அப்பபோ இந்த பஸ் ஸ்டப்பு பக்கம் வாங்க !
Paandi University for the fundamental reasearch for JOLLU.
Dean : Jollu Paandi
WIll be released soon : 30 Natkalil Jollu vittu figurai madakkuvathu eppadi
வாங்க கிறுக்கனாரே
இது கூட நல்ல தலைப்பா இருக்கே? கவலைபடாதீங்க அப்படி எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை :))
\"ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
ஞாயிறு பீச்சிற்கு
கூலிங்கிளாஸ் அணிந்து
செல்வது\"
இதென்ன வகையான ஜொள்ளூ, புரியலையே?
//Divya said...
\"ஜொள்ளு எனப்படுவது யாதெனில் ,
ஞாயிறு பீச்சிற்கு
கூலிங்கிளாஸ் அணிந்து
செல்வது\"
இதென்ன வகையான ஜொள்ளூ, புரியலையே?//
வாங்க திவ்யா :))
என்னாங்க இப்படி கேட்டுப்புடீங்க. கூலிங்க்ளாஸ் போட்டுகிட்டா யாரைப்பாக்குராகன்னு தெரியாதில்ல? ;)))
//jolythaan said...
Paandi University for the fundamental reasearch for JOLLU.
Dean : Jollu Paandi
WIll be released soon : 30 Natkalil Jollu vittu figurai madakkuvathu eppadi///
வாங்க ஜாலி:))))
ஆஹா இப்படியெல்லாம் சொல்லி நம்மள புல்லரிக்க வைக்கிறீயளே !!! :))))
Post a Comment