Wednesday, February 08, 2006

அஞ்சரைக்குள்ள வண்டி !ஜொள்ளுப்பாண்டி வயசுக்கு வந்த சமயம். இப்போ மாதிரி இன்டர்நெட் அறிவு எல்லாம் இல்லாம ஒரு டவுசரைப் போட்டுகிட்டு போஸ்டரைப் பார்த்து சுத்திகிட்டு இருப்போம்.ஒவ்வொரு ஊர்லயும் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு தியேட்டர் இருக்கும்.இப்போ சென்னையில பார்த்தா ‘ பரங்கிமலை ஜோதி’ ‘ மாதிரி ! எங்க ஊர்ல ‘ திருக்காம்புலியூர் முரளி ‘.

அனாடமி ஆர்வத்துல மனசு அலைபாய்ஞ்சுகிட்டு இருந்த வயசு! என்ன பண்றது? ஊர்பூரா அங்கங்கே அரைகுறை போஸ்ல போஸ்டர் ஒட்டி என்னையமாதிரி எளசுக மனச கெறங்டிச்சுகிட்டு இருந்தாங்க! தியேட்டர் பேரை தப்பான இடத்துல சரியா ஒட்டி இலைமறைக்காய் போல பாக்கறவங்க BP ய கண்ணாபிண்ணான்னு ஏத்திவிட்டுருவாங்க! போஸ்டரைப் பார்த்துட்டு பல பெரிசுக எதிர்லவந்த வண்டிமேல மோதி விழற சம்பவம் எல்லாம் நடந்திருக்கு! சரி எப்படியாச்சும் ஒரு படமாச்சும் திருக்காம்புலியூர் முரளில பார்கணுங்கறதை எங்க வாழ்க்கையின் லட்சியமா வச்சுகிட்டு அலைஞ்சோம்!

ஒருநாள் சாயங்காலம் டியூசன் முடிச்சுட்டு பசங்கெல்லாம் கும்பலா சைக்கிள்ல வந்துகிட்டு இருக்கறப்போதான் பார்த்தோம் அந்த போஸ்ட்டரை.
“ அஞ்சரைக்குள்ள வண்டி” திருக்காம்புலியூர் முரளியில் இன்றுமுதல் !‘ ( எப்படியும் பலபேர் இந்தப்படத்தைப் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன் ஆனா ஒத்துக்க மாட்டீங்களே ! )

அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்த தீ பற்றிக்கொண்டது ! எங்க கேங் லீடர் ராஜேஷ்தான் ஆரம்பித்தான். “ மக்கா இந்த தடவையாச்சும் இந்த படத்த பார்கலாம்டா என்ன சொல்றீங்க ?”
“ ஐய்யய்யோ நான் மாட்டேம்பா !” பல பால்புட்டிகள் சத்தம்போடாமல் எஸ்கேப் ஆகிவிட மிச்சம் இருந்தது நானும் ராஜேசும்தான்.

சரி ஆனது ஆவட்டும் எத்தனை நளைக்குதான் கற்பனையிலேயே படம் பார்க்குறது? ரிஸ்க் எடுக்க வேண்டியதுதான். முடிவு செய்தோம். ஊருல இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி இருந்தது தியேட்டர். என்ன பிரட்சணையின்னா வர்ற பெரிசுல எங்க ஊட்டு பெருசுக வந்துடுச்சின்னா என்ன பண்றது ?
“ அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாதுடா ! அப்படியே பார்த்தாலும் வீட்டிலே எப்படி சொல்ல முடியும். அப்புறம் அவங்க வண்டவாளம் தெரிஞ்சிடுமில்ல?! “ ராஜேசின் லாஜிகலான கேள்வி எனக்குள் இருந்த பயத்தை அகற்றியது.

வரும் சனிக்கிழமையென நாள் குறித்தோம். சனிக்கிழமை. காலை எழுந்ததிலிருந்தே மனது வேகமாக அடித்துக்கொண்டது. வீட்டில் சொல்லிவைத்திருந்தேன். “டியூசனில் டெஸ்ட் இருக்கும்மா அதுக்கப்புறம் டியூசன் இருக்கு ! 1 மணிக்குதான் சார் விடுவாரு ! “

“ சரிடா ! ஒழுங்கா டெஸ்ட் எழுது என்ன ? “ அம்மா தோசையை தட்டில் வைத்துகொண்டே சொன்னார். மன்னிச்சிக்குங்க தாயேன்னு! மனச்சுக்குள்ளேயே சொல்லிட்டு வீட்டிலிருந்து 11 மணிக்கு கிளம்பினேன் 11:30 க்கு படம்ன்னு ராஜேஷ் முந்திய நாளே தியேட்டர் பக்கம் போய் வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான்.

போகிறவழியில் ராஜேஷ் என்னுடன் சேர்ந்து கொண்டான்! தூரத்தில் “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா” ன்னு தியேட்டரிலிருந்து பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. என்ன கொடுமை பாருங்க உள்ளே மஜாவான படம் வெளியா பக்தி பழமா பாட்டு. வேகவேகமாக சைக்கிளை மிதித்து சீக்கிரமே தியேட்டருக்கருகில் வந்துவிட்டோம். உடனே நுழையவில்லை. எவனெவன் வந்திருக்கானுகளோ? பார்டர் செக்யூரிட்டி போல சுற்றும் முற்றும் வேவு பார்துவிட்டு தெரிஞ்ச தலை ஏதும் இல்லையின்னு அப்படியே சைக்கிள் ஸ்டேண்ட் பக்கமா ஒதுங்குனோம். டிக்கெட் கவுண்டரில் கேட்டார்
“ எதுப்பா வேணும் முதல் வகுப்பா இல்ல பாக்ஸா? “

“ என்னாது பாக்ஸா ? கேள்விய பார்த்து நீங்க திருக்கம்புலியூர் முரளி எதோ சென்னை சத்யம் தியேட்டர் ரேஞ்சுக்கு நெனச்சுக்காதீங்க ! இது சாதாரண டெண்ட்
( கீத்து கொட்டாய்) தியேட்டர்.

“ சரி பாக்ஸே கொடுங்க ! “ 15 ரூபாய் டிக்கெட் ! ஆனால் டிக்கெட்டில் எழுதியிருந்ததோ வெறும் 3 ரூபாய். என்ன செய்ய இங்கெல்லாம் வந்து ரூல்ஸ் பேசிட்டு இருக்க முடியுமா? அப்படியே பூனைபோல சத்தம் போடாமல் வாங்கிக்கொண்டு பாக்ஸ் பக்கம் பதுங்கினோம். பாக்ஸ் என்றால் தனி தனி மரசேர் போட்டிருந்தார்கள். மற்றவர்களுக்கெல்லாம் வெறும் பெஞ்ச்தான்.

ஒருவழியாக படம் ஆரம்பித்தது. என்ன இது சம்பந்தமே இல்லாமல் பல சீன். யார் யாரோ வந்து போனார்கள். தியேட்டருக்குள்ள ஒக்கார்ந்துகிட்டு இருக்கிறவங்க அவனவன் பக்கத்தில இருக்கறவன்கிட்ட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கான்ங்க!. ஒண்ணுமே புரியலயேண்ண்ணு மண்டை குழம்பி உட்கார்ந்திருந்தோம். ஒரு 15 நிமிடம் ஆகியிருக்கும். திடீரென தியேட்டரினுள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் அமைதியானார்கள்! தியேட்டரினுள் மூச்சுவிடும் சத்தமே DTS effectல் கேட்டதுன்னா பார்த்துக்குங்களேன்! ஒடிய படம் நிறுத்தப்பட்டது. சடாரென திரையில் பலான படம் ! என்ன கன்றாவி இது ! இதுக்குப் போயா இவ்ளோ தூரம் வந்தேன்! நினைத்துக்கொண்டேன். ஒரு 10 நிமிடம் ஓடியிருக்கும். அவ்வளவுதான் படம் நிறுத்தப்பட்டது. ஒரு லாங் பெல் அடித்தது. அனைவரும் எழுந்துவிட்டனர். படம் முடிஞ்சிருச்சு ! “ இன்னிக்கு ஓட்டுன பிட்டு சரியில்லப்பா ! “ ஒரு திருப்தியடையாத ரசிகர் புலப்மலுடன் சென்றார். ரெகுலராக பார்க்கிறவர் போலும் பாவம் !


சீக்கிரம் சைகிளை எடுத்துட்டு கெளம்பிடணும்னு வெளியே வந்தோம். என் சைக்கிளை வேகமா எடுக்கறப்போ பின்னாலிருந்த சைக்கிளில் இடித்துவிட்டது ! இடித்தோடுமட்டுமல்லாமல் என் சைக்கிளின் ஸ்டேண்டு அந்த சைக்கிளின் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டது. எவண்டாது கபோதின்னு சைக்கிள்காரனைப்
பார்த்தா அது என் மாமா ! ஐய்யகோ !

பின்குறிப்பு :- என் நைனா என்னை திருப்பிப்போட்டு வெழுத்ததில் 4 நாட்களுக்கு நான் விவேக் போல வேட்டியைக் கட்டிகொண்டு பின்னால் தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைந்தது ஒரு வேதனையான தனிக்கதை !

16 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

இதெல்லாம் எழுத ரொம்ப துணிச்சல்தான், பார்த்து. பொண்ணு பார்க்க போனா ப்லாக் பேர் சொல்லிராதீங்க, வெவகாரமா போயிரும்.

said...

ம்ம்ம்.. என்னத்த செல்றது. எல்லாரும் இதையேதான் செஞ்சி இருக்காங்க. ஒரே மாதிரி தான் சிந்தித்து இருக்கோம். ராஜேஸ் கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் என் பிரண்டு கிட்ட கேட்டேன். ஆனா அந்த காலத்துல வீட்ல மாட்ல.

said...

என்னங்க இளா நீங்க ! இப்போல்லாம் பொண்ணுங்க ரொம்ப மாறீட்டாங்க ! ம்ம்ம் எதுக்கும் நல்லவன் வேஷம் போடணும்ங்கறீங்க ! நல்லதுதான் ! அப்பப்போ கொஞ்சம் எட்டிப்பார்துக்குங்கண்ணாவ்!

said...

சந்தோஷ் ரொம்ப தைரியமா பேசியிருக்கீங்க ! இதுக்கே உங்களைப் பாராட்டுறேன். பலபேரு தலைல முக்காடு போட்டுட்டுவந்து என் ப்ளாக்குள்ள உலா வர்றதா கேள்விப்படுறேன் ! ம்ம்.
இப்படித்தான் திருச்சில கோஹினூர்ன்னு ஒரு தியேட்டர்ல பார்த்தா பலபேரு முக்காடோட டிக்கெட் வாங்க நிப்பாங்க! இப்போ இல்லே.கொஞ்சம் காலத்துக்கு முந்தி அதுவும் ஒரு பரஞ்கிமலை ஜோதி மாதிரி இருந்தப்போ!

said...

இப்போ தான் தலைப்புக்கு ஏத்த மாதிரி எழுத ஆரம்பிச்சி இருக்கீங்க!

Continue Jolling!

said...

வாங்க வாங்க துபாய்வாசி ! எல்லாம் உங்க ஆதரவு இருந்தா போதும் தன்னால வரும்!

said...

திருட்டு புருஷனும் நல்லா ஓடுன படம்ன்னு பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.அது பார்த்த அனுபவம் யாரவது போடுங்களேன்.

said...

வாங்கண்ணா கள்வன்,
திருட்டுபுருஷனா? அப்படி ஒரு படமே தெரியாதுங்கண்ணா!

said...

//சடாரென திரையில் பலான படம் ! என்ன கன்றாவி இது ! இதுக்குப் போயா இவ்ளோ தூரம் வந்தேன்! நினைத்துக்கொண்டேன்.//
தல...என்னது இப்படி சொல்லிபுட்டிங்க....அடுத்த நாலு வாராம் விடாம பல பலான படம் பார்தொமெ...எப்படி மக்கா மறந்த !!!


ஜொ ஜொ பாண்டி,
தொடரட்டும் உங்கள் ஜொள்ளுகள். அருமை :-)


ராஜேஷ்

said...

//ராஜேஷ் said...
//சடாரென திரையில் பலான படம் ! என்ன கன்றாவி இது ! இதுக்குப் போயா இவ்ளோ தூரம் வந்தேன்! நினைத்துக்கொண்டேன்.//
தல...என்னது இப்படி சொல்லிபுட்டிங்க....அடுத்த நாலு வாராம் விடாம பல பலான படம் பார்தொமெ...எப்படி மக்கா மறந்த !!!//

ஆஹா யாருப்பா நீ?? ராஜேசுன்னு பேரு வெச்சுகிட்டா மட்டும் போதுமா ? முதலும் கடைசியுமா நான் திருக்காம் புலியூர் முரளியில் பார்த்தா ஒரே படம் அதுவென துண்டை போட்டு தாண்டுகிறேன் !!;))) யப்பா இப்பயெலாம் கெளப்பி வுட்டு ஏற்கனவே லேட் ஆகியிருக்குற இமேஜிலே 'ஆட்டம் பாம்' போடாதீங்கோ !! :)))


//ஜொ ஜொ பாண்டி,
தொடரட்டும் உங்கள் ஜொள்ளுகள். அருமை :-)//

ரொம்ப டேங்ஸுங்கோ !! நல்லா வாரி வுட்டுட்டு என்னா இது ?? ;))))))

said...

“ அஞ்சரைக்குள்ள வண்டி” திருக்காம்புலியூர் முரளியில் இன்றுமுதல் !‘ ( எப்படியும் பலபேர் இந்தப்படத்தைப் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன் ஆனா ஒத்துக்க மாட்டீங்களே ! )

சத்தியமா அந்த படத்த மட்டும் நான் இதுவரை பார்த்ததே யில்ல..

said...

இந்த படம் பார்த்ததில்ல, ஆனா நிறைய கேள்விப் பட்டிருக்கேன். அப்ப வேற என்ன படம் பார்த்தீங்கனு யாருங்க சவுண்ட் விடறது... அதெல்லாம் பிளாக் எழுதறவங்களை கேளுங்கப்பா. நாங்க வெறும் பின்னூட்டம் மட்டும்தான். கொசுவர்த்தி சுருள் எல்லாம் சுத்தற நேரம் இன்னும் வரல... :-))))

//பலபேரு தலைல முக்காடு போட்டுட்டுவந்து என் ப்ளாக்குள்ள உலா வர்றதா கேள்விப்படுறேன் ! ம்ம்.
//

ஏங்க இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மை? அந்த தியேட்டர்ல ஓட்டற படம் மாதிரியா நீங்க எழுதறீங்க...

என்னமோ போங்க...

said...

//நாடோடி said...
“ அஞ்சரைக்குள்ள வண்டி” திருக்காம்புலியூர் முரளியில் இன்றுமுதல் !‘ ( எப்படியும் பலபேர் இந்தப்படத்தைப் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன் ஆனா ஒத்துக்க மாட்டீங்களே ! )

சத்தியமா அந்த படத்த மட்டும் நான் இதுவரை பார்த்ததே யில்ல.. //


வாங்கண்ணா நாடோடி ;)))
அந்த படத்தை மட்டும்தான் பார்க்கலையா ??? ;))))) விட்டுதள்ளுங்க ஒன்னும் இல்லை :)))))))))

said...

//Sridhar Venkat said...
இந்த படம் பார்த்ததில்ல, ஆனா நிறைய கேள்விப் பட்டிருக்கேன். அப்ப வேற என்ன படம் பார்த்தீங்கனு யாருங்க சவுண்ட் விடறது... அதெல்லாம் பிளாக் எழுதறவங்களை கேளுங்கப்பா. நாங்க வெறும் பின்னூட்டம் மட்டும்தான். கொசுவர்த்தி சுருள் எல்லாம் சுத்தற நேரம் இன்னும் வரல... :-))))

//பலபேரு தலைல முக்காடு போட்டுட்டுவந்து என் ப்ளாக்குள்ள உலா வர்றதா கேள்விப்படுறேன் ! ம்ம்.
//

ஏங்க இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மை? அந்த தியேட்டர்ல ஓட்டற படம் மாதிரியா நீங்க எழுதறீங்க...

என்னமோ போங்க... //

அட வாங்க ஸ்ரீதர் :))) இது ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதினதுங்கண்னா அப்போ நடந்தது இது :)))) தாழ்வு மனப்பான்மையெல்லாம் இல்லீங்கோ !! :)))

said...

\\என் நைனா என்னை திருப்பிப்போட்டு வெழுத்ததில் 4 நாட்களுக்கு நான் விவேக் போல வேட்டியைக் கட்டிகொண்டு பின்னால் தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைந்தது ஒரு வேதனையான தனிக்கதை !\\

idhu theyvaiya,ada.....pongayya:-)

natpodu
Nivisha.

said...

// நிவிஷா..... said...
\\என் நைனா என்னை திருப்பிப்போட்டு வெழுத்ததில் 4 நாட்களுக்கு நான் விவேக் போல வேட்டியைக் கட்டிகொண்டு பின்னால் தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைந்தது ஒரு வேதனையான தனிக்கதை !\\

idhu theyvaiya,ada.....pongayya:-)

natpodu
Nivisha.//

வாங் வாங் வாங் நிவிஷா :))
ஆஹா இங்கெயெல்லாம் எட்டி பாக்க ஆரம்பிச்சுட்டீயளா..?? இதெல்லாம் தேவைதானுங்கோ... ஏன்னா இது வாலிப வயசு !!! ;)))))))