Friday, February 10, 2006

நாயர் பெத்த பொண்ணு !

கோப்பெருந்தேவிகளும் , சீத்தலைச் சாத்தனார்களும் உலாவந்துகிட்டு இருக்கிற இந்த வலையில ஜொள்ளுப்பாண்டிக்கும் ஒரு கவிதையக் கொளுத்திப்போட்டா என்னான்னு தோணியதன் விளைவே இந்தக் கவிதைங்கறத நான் முன்னாடியே சொல்லிக்கறேன். அப்புறம் கவிதையப்படிச்சிட்டு தளை தட்டுது கால் தட்டுதுன்னு கம்பெடுத்துகிட்டு அடிக்க வந்துராதீங்க! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் சொல்லிபுட்டேன் ! ஏற்கனவே நான் ப்ளாக் ஜொள்ளுபத்தி எழுதுனதுல பல பேரு முதுகில சொருகுன அருவாளோட அலைஞ்சுகிட்டு இருக்காங்கன்னு நம்ம ஜொள்ளுப்பேட்டையில இருந்து ரகசிய தகவல் வந்திருக்கு. என்ன பண்றது விடலைபையன்னாலே பிரச்சனைதான் ! வழக்கம் போல சீரியசா எடுத்துக்காதீங்க!


அன்புள்ளவனே
நலம்
நலமறிய
ஆவல் !
காதலுடன்
உன்னவள் !


இப்படி பலபேரு லெட்டர் ஆரம்பிக்கிறதையே ஒண்ணுங்கீழ் ஒண்ணா எழுதிப்போட்டு பல பின்னூட்டம் வாங்கிபுடுறாங்க. ம்ம்ம் என்ன பண்றது ! நமக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லயே ! சரி காலேஜ்ல break ல உக்கார்து எழுதுனது இது. நமக்குத்தான் ஒரே பொண்ணப்பத்தி கவிதை எழுறது கூட கஷ்டமாச்சே! படிச்சுட்டு கொஞ்சம் கொளுத்தி போட்டுட்டு போனீங்கன்னா ஜொள்ளுபாண்டிக்கு சந்தோசந்தான் !

ஜீன்ஸ்சு சுடி மேக்ஸியிலே
கலக்குறாளே பொண்ணு
இவ ஸ்பாஞ்சு வச்ச கன்னம்
ரெண்டு வச்சிருக்கும் பன்னு !

லேத்து டூலு கணக்காத்தான்
கடையறாளே மனச ஒரு
ஆசிட் ஊத்தி கழுவுனாலும்
போகாதவ நெனப்பு !

பாக்கப் பாக்க அலுக்கலையே
நாயர் பெத்த பொண்ணு
அவள பாத்து பாத்து ஆகிபோச்சு
எம்மனசு புண்ணு !


மல்லிகாவ பாத்துபுட்டு
மதிகெட்டுப் போச்சு
எவனப் பாத்தாலும்
அவளப்பத்தியே பேச்சு !

சரி சரி டென்சன் ஆவாதீங்க ! ஏதோ என்னால முடிஞ்சது அவளோதான்! ஒகே ? சனிக்கிழமை வேற ! Bar ல எல்லாம் என்னமோ அம்மன் கோயில்ல கூழ் குடிக்க நிக்கற கும்பலைவிட அதிகமா இருக்கு கூட்டம். போய் துண்டுபோட்டு வைக்கனூம்தான் போல ! அளவா ஊத்திக்கிங்கப்பு. பாத்து பாங்கா நடந்துக்குங்க என்ன? வரட்டா !

12 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

வடு மாங்கா..... தயிர் சாதம் புகழ் பேரரசு அடுத்த படத்துக்கு "கவிஞர்" தேடிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன், போய் பாருங்களேன்........... தமிழ் கூறும் நல்லுலகிற்கு புண்ணியமாப் போகும்........

said...

//இவ ஸ்பாஞ்சு வச்ச கன்னம்
ரெண்டு வச்சிருக்கும் பன்னு//

இதில் பொருட்குற்றம் இல்லையென்று உம்மால் அறுதியிட்டுக் கூற முடியுமா?

;-)

said...

//
ஜீன்ஸ்சு சுடி மேக்ஸியிலே
கலக்குறாளே பொண்ணு
இவ ஸ்பாஞ்சு வச்ச கன்னம்
ரெண்டு வச்சிருக்கும் பன்னு !

லேத்து டூலு கணக்காத்தான்
கடையறாளே மனச ஒரு
ஆசிட் ஊத்தி கழுவுனாலும்
போகாதவ நெனப்பு !
//

சூப்பரா..இருக்கு.. நானெல்லாம் காதலிக்கும் போது எழுதிக் கொடுத்திருந்தால்.. நல்லா படிச்சுக் காட்டி புடிச்சிருக்க்கலாம்....
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெருமூச்சு கேக்குதா..

சீமாச்சு..

said...

வாங்கோ மனசு ! தாராளமா எழுதலாமே !

"வந்தேண்டா ஜொள்ளுப்பாண்டி
விடும் ஜொள்ளப்பத்தி பாடப்போறேன்"

ஆரம்பிச்சுடறேன் !

said...

அண்ணே ஞான்ஸ்!
நெசமாலுமே நான் கன்னத்தப்பத்திதான் எழுதினேன் ! எனக்கு சிலேடையெல்லாம் எழுதவராதுங்கோ! தேவையில்லாம என்னைய வம்பில மாட்டிவிடாதீங்க ! ஏற்கனவே என்னோட முந்திய பதிப்பை பார்த்துட்டு ஷாலினி அக்கா வேற செருப்போட காத்துகிட்டு இருக்காங்க! நான் சின்னப்பையங்கண்ணா ! காப்பாத்துங்க !

said...

சீமாச்சு வாங்க வாங்க !
உங்க பெருமூச்சுல ஏரியாவே சூடாகிப்போச்சு ! இப்பவும் ஓண்ணும் கொறஞ்சுபோயிடலைங்கண்ணா ! ட்ரை பண்ணுங்கோ !

said...

KalaiMaamani Jollu pandi

said...

அண்ணே என்ன இது குருவி தலையில பனங்காயா? எனக்கு கலைமாமணியா ?? ஆனந்தக்கண்ணீர் வருதுங்கோ !

said...

Lathe Toolu..............
Acid....................
Pandi Engg. Backround ulla Aalaaa?.
Pandi ithai Kaana Ulaganathan Paduna Kalakkalaa irukkum.
Dubai Raja.

said...

துபாய் ராசா உங்களுக்கு சுத்திப்போடனும் !! எப்படிப்பா நான் ராயல் மெக் !! (மெக்டவல் இல்லை :)

கானா உலகநாதன்?? அப்டீன்றீங்க?
ம்ம்ம்.. :)

said...

\\லேத்து டூலு கணக்காத்தான்
கடையறாளே மனச ஒரு
ஆசிட் ஊத்தி கழுவுனாலும்
போகாதவ நெனப்பு !\\

ROTFL:))very good attempt:-)
Are you a Mechanical student??


natpodu
Nivisha.

said...

// நிவிஷா..... said...
\\லேத்து டூலு கணக்காத்தான்
கடையறாளே மனச ஒரு
ஆசிட் ஊத்தி கழுவுனாலும்
போகாதவ நெனப்பு !\\

ROTFL:))very good attempt:-)
Are you a Mechanical student??


natpodu
Nivisha.//

வாங்க வாங்க நிவிஷா :)))
ரொம்ப டாங்ஸ்...:)))))
ஆமாம் நாங்க ராயல் மெக் தான்... :))) நீங்க...??