Tuesday, February 21, 2006

Aனுபவக் கதைகள்
எதையும் ஆராய்ந்து அறியறதுங்கறது ஜொள்ளுப்பாண்டிக்கு சின்ன வயசில இருந்தே வந்திருச்சு. ( சரி சரி அடங்கிட்டேன் ! ) எங்க ஊரில் பார்த்தீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை மட்டும் பழைய புத்தக கடை போடுவாங்க. அதுவும் மத்தியானத்துலதான் இந்த கடைய ரோட்டோரமா விரிப்பாங்க. பல நாவல்கள் பாதி விலைக்கு கெடைக்குங்கறதால நான் இந்த கடைக்கு ரெகுலரான கஸ்டமர். படிக்கனுங்கற தணியாத ஆர்வத்திலே ( நெசமாலுமேங்க! ) பல நாவல்களை வாங்கி லீவு நாட்கள்ல எதையாவது கொறிச்சிகிட்டே புத்தகத்திலே லயிச்சுக்கிடக்குற சொகம் இருக்கே !!! ம்ம்.சரி கதைக்கு வருவோம். அப்படி ஒரு ஞாயித்துக்கிழமை கடையில நாவல்களை மேய்ஞ்சுகிட்டு இருக்கும் போதுதான் அந்த புத்தகத்தைப் பார்த்தேன்.

ஏற்கனவே அஞ்சரைக்குள்ள வண்டி பார்த்த ரணகளமான அனுபவத்திலே அந்த மாதிரி போஸ்டர்களைப் பார்த்தாலே தென்னாலிராமன் பூனைபோல பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருந்த காலம். என கவனத்தை நாவல்களைப் படிப்பதில் வெற்றிகரமாக திருப்பி சிறிதுகாலம் ஓட்டிக்கொண்டிருந்தேன். ஞாயிற்றுகிழமை ஆனால் போதும் நானும் எனது புத்தகத்தோழன் ஆனந்த்தும் அந்தக் கடையில் ஆஜராகிவிடுவோம். அப்படி நெசமாலுமே நாவல்களைத் தேடிக்கொண்டிருந்த போதுதான் அந்த புத்தகம் என் கையில் கிடைத்தது. ‘ லவ் லைஃப் அனுபவக்கதைகள் ‘ . என்னடா இது நாவலாசிரியர் பேரே இல்லை என்ன நாவல் இது என்ற என் வழக்கமான ஆர்வ மேலீட்டால் பிரித்துப் பார்த்தேன்.

“ அலோ ! அந்த புத்தகத்தை வாங்கறதுன்னா மட்டும் பிரிச்சு பாருங்க ! “ கண்டிப்பான குரல் கடைக்காரரிடம் வந்தது. “ என்னடா அப்படி இந்த புத்தகத்திலே விசேசம்” ன்னு “ சரி வாங்கிக்கறேன் !”
“ அப்படீன்னா 10 ரூபாய் கொடு !”
“ என்னாங்க இது பழைய புத்தகம் பாதிவிலை தானே ! “
“ அதெல்லாம் கெடையாது ஃபுல் ரேட்டுதான்! “

நான் ஆனந்தைப் பார்க்க ஆளுக்கு பாதி போட்டு வாங்கிக்கலாம்னு முடிவாச்சு! வெற்றிகரமாக வாங்கிக்கொண்டு வந்தோம். எதோ பலருடைய வாழ்க்கை அனுபவ வரலாறுன்னு நெனச்சா ஏமாந்து போய்டுவீங்க ! ( அப்படி நெனைக்க மாட்டீங்கன்னு எனக்கும் தெரியும் ! ) சினிமா போய் மாட்டிக்கொண்ட மாதிரி மாட்டிக்கொள்ளக் கூடாது ! ஒருவழியாக படித்து முடித்தோம். இனி அந்த புத்தகத்தை எப்படி டிஸ்போஸ் செய்வது ? நானும் ஆனந்த்தும் பல ஐடியாக்களை டிஸ்கஸ் செய்யும்பொழுதுதான் சினிமாவில் பார்த்த ஞாபகம் எனக்கு வந்தது..

புத்தகத்தை எரித்துவிட்டு சாம்பலை டாய்லெட்டில் போட்டு தண்ணீரை ஊற்றிவிடுவது என ! அட ! சூப்பரான ஐடியாவா இருக்கே ! ஒரு தடையம் கூட சிக்காது. ஜொள்ளு பாண்டி கலக்கரடா நீ ! எனக்கு நானே தட்டிக்கொடுத்துக் கொண்டேன். சரி யார் வீட்டு டாய்லெட்?
“எங்க வீட்டுல எப்பவும் எங்கம்மா இருப்பாங்கடா. உங்க வீட்டுலதான் ரெண்டுபேருமே வேலைக்குப் போறதுனால நீதான் safe ! நீயே பண்ணிடுடா “ ஆனந்த் கூறினான். சரி பொதுவாழ்க்கைலே இதெல்லாம் சகஜம்பா ! நானும் ஒத்துக்கொண்டேன். நான் தைரியசாலி என அடிக்கடி பீற்றிக்கொள்வதைக் காப்பாற்றிக் வேண்டுமே !

எங்கள் வீட்டில் ஒரு காரைச்சட்டி (தோட்ட மண்ணெடுக்க வச்சிருப்பாங்களே ) இருக்கும் . ஒரு பொன்னாளில் வீட்டில் யாருமில்லாதபொழுது காரைச்சட்டியில் புத்தகத்தை கொழுத்திபோட்டேன். சாம்பலானதும் நீர் ஊற்றி அணைத்துவிட்டு டாய்லெடில் கொட்டி நீரை ஊற்றிவிட்டேன். Yes ! Its workingout ! இப்படியாக என் முதல் disposal ஆரம்பித்தது. பின்வந்த நாட்களில் பல சாம்பல்கள் டாய்லெட்டில் கலந்தது.

இப்படியாக சென்றுகொண்டிருந்தபோதுதான் ஒரு ஞாயிற்றுக்கிழமை கடைக்காரர் கேட்டார்
“ தம்பி ஒரு Foreign book வந்திருக்கு வேணுமா? “ ஆனந்த்தை ஆவலுடன் பார்த்தேன். தலையசைத்தான்.
“ காமிங்க பார்க்கலாம் ! “ எடுத்துக் காட்டினார்.
“ என்னாங்க இவ்ளோ பெரிய புத்தகமா இருக்கு !”
“ உங்களுக்காக பாதிவெலைக்கு தர்றேன் !” கடைக்கார் தன் பாசத்தை தனது ரெகுலர் கஸ்டமரிடம் நிரூபிக்க பிரயத்தணப்பட்டுக் கொண்டிருந்தார்.

அத்தனை காலமாக மண்வாசனையான புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு அந்த புத்தகத்தைப் பார்க்கும் ஆவல் பீறிட்டு கிளம்பியது ! ஆளுக்கு பாதி காசு போடு வாங்கிக் கொண்டோம். டேய் “இன்னிக்கு நான் படிக்கறேன். நாளைக்கு நீ படி !” ஆர்வம் கொப்பளிக்க ஆனந்த் கேட்டான். சரி பயல் என்ன கோனார் நோட்ஸ்சையா படிக்கக் கேக்குறான். போய்ட்டு போறான் ! “ சரிடா. ஆனா பார்த்து பத்திரமா கொடு என்ன? “ அவ்வளவுதான் அமுதம் கிடைத்ததைப் போல் துள்ளிக்குதித்தான்.

அடுத்த நாள் புத்தகம் என்னிடம் வந்தது. Foreign புத்தகம்னா அந்த ரேஞ்ச் மெயிண்டைன் பண்ணியிருந்தார்கள். சரி தப்பித்தவறி இந்த புத்தகம் வீடுல மாட்டுனா அவ்ளோதான். எங்கப்பாரு இந்தவருச தீபாவளிய என் முதுகுலயே கொண்டாடிவாரு! நான் காலி. ! முதல்ல இதை dispose பண்ணிடனும். மணியைப் பார்த்தேன். அம்மா வரும் நேரம் ! புத்தகம் வேறு பெரியதாக இருந்தது. எரிஞ்சு முடிக்கவே ரொம்ப நேரம் ஆகும் போலத்தெரிஞ்சது.

சரி இனிமே இதை எரிக்கறதுங்கறது ஆவறதில்லை! பேசாம கிழிச்சு டாய்லெட்டில் போட்டுவிட்டால் என்ன? ஆனா இவ்ளோ பெரிய புத்தகமா இருக்கே ?! பரவயில்லை இதை நாளைவரை வச்சுகிட்டு இருக்க முடியாது ! டிஸ்போஸ்!

புத்தகத்தை கிழிக்க ஆரம்பித்தேன். பேப்பர்கள் எல்லாம் பக்கா குவாலிட்டியாக இருந்த்ததால் கிழித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஒரு பெரிய குவியலாக ஆகிவிட்டது. கொண்டுபோய் டாய்லெட்டில் போட்டேன். தண்ணீர் ஊற்ற ஆரம்பித்திருப்பேன். வெளியில் அம்மாவின் சத்தம். அவ்வளவுதான் பயமாகிவிட்டது. அவசர அவசரமாக நீரை ஊற்றிவிட்டு வந்துவிட்டேன். அப்பாடா ஒருவழியாக ஒழிந்தது. நிம்மதியுடன் வெளியேறினேன்.

அன்று இரவு அப்பாதான் சொன்னார். “என்னமோ டாய்லெட்டில் அடைச்சுகிட்டு இருக்குது. தண்ணியே போக கஷ்டப்படுது ! “

அவ்வளவுதான் ! எனக்கு எல்லாமே அடைத்துக்கொண்டது. அய்யகோ என்ன செய்யறது. “இல்லமா நல்லா தண்ணி ஊத்தினா சரியாகிடும்”. டாய்லெட்டிற்கு ஓடினேன்.
“சே இதுக்குதான் வீட்டிலே ஒரு பையன் இருக்கனுங்கறது. நீங்க சரியா தண்ணி ஊத்தியிருக்க மாட்டீங்க. தம்பி சரி பண்ணிடுவான் பாருங்க !“ அம்மா பெருமிதமாய் என்னைப் பற்றி கூறிக்கொண்டிருப்பது கேட்டது. அய்யோ தாயே ! என்னை ரொம்ப நல்லவேன்ன்னு சொல்றீங்களே ! “ வாளிவாளியாய் தண்ணியை ஊற்றினாலும் எல்லாமே ஊசித்துவாரத்தில் போகுமளவு வேகத்துடனேதான் சென்றது. என்னுடைய பற்பல முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரைப்போல டாய்லெட்டில் இரைந்தது.

“சரி விடு ! ஆளைக் கூப்பிட்டு என்ன அடைச்சுகிட்டு இருக்குன்னு பார்த்திர வேண்டியதுதான் ! “ அப்பா கூறியது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலானது.

“ ஐயகோ என்ன இது பாண்டிக்கு வந்த சோதனை ! இதுக்குக் காரணம் நாந்தான்னு தெரிஞ்சா என் இமேஜ் என்ன ஆவறது ?” அப்பா புதிதாக வாங்கிய பெல்ட் வேறு என்னைப்பார்த்து கண் சிமிட்டியது.

அப்பா எங்கிருந்தோ டாய்லெட் சுத்தம் செய்பவரை அழைத்து வந்திருந்தார். அவர் தனியாக இருந்த பொழுது கேட்டேன். “ ஏங்க செப்டிக் டேங்க திறக்காம இந்த அடைப்பை சரி செய்யமுடியுமா? “ “ ஓ பண்ணலாமே ! ட்ரை பண்ணிப் பார்க்குறேன் !” அவரும் பல முயற்சிஎடுத்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. “ “வேற வழியே இல்லைங்க டேங்க ஓபன் பண்ணிணாதான் முடியும்.”

“ போச்சு எல்லாம் போச்சு! டேங்கை தொறந்தா என் வண்டவாளமும் சேர்ந்து நாறுமே ! “ என்ன செய்வது ? அப்பா வேறு கூடவே நின்றுகொண்டிருந்தார். டேங்கை திறக்க சிமெண்ட் ஸ்லாபை உடைக்க ஆரம்பித்தார். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான் என் தாயார் சொன்னார் “ நீங்க ரெண்டுப்பேரும் ஏன் நிக்கறீங்க. ஒரே நாத்தமா இருக்கும். அவரே சரி பண்ணிடுவார் நீங்க உள்ள
போங்க ! “ “
“ ஆமா சார் நீங்க போய்டுங்க நான் பார்துக்கறேன் !”

அப்பா ஒருவழியாக உள்ளே போனார். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது. “இல்லமா நான் இருந்து பார்த்திட்டு வர்றேன்”

“என்னமே போ என்னத்த பார்க்கிறயோ ! “ திட்டிக்கொண்டே அம்மா சென்றுவிட்டார்.

எதோ ஒரு குழாயைக் கிண்ட அடைப்புக்குக் காரணமான வஸ்து வந்தது வேறெதுவுமில்லை என் Foreign Book துகள் துகளாய். சுத்தம் செய்பவர் அதையும் என்னையும் பார்த்தார். பேசாமல் அவர் பாக்கெட்டில் 20 ரூபாயைச் சொருகினேன்.சைகையிலேயே அப்பாவிடம் கூறவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.

எல்லாம் சரி செய்துவிட்டு வந்தவரிடம் அப்பா கேட்டார் “ என்னப்பா அடைச்சுகிட்டு இருந்தது ? “

“ குழாய் உடைஞ்சி உள்ள விழுந்திருச்சு சார். அதான் ! “

மானம்காத்த மகராசா !! நன்றிப்பெருக்குடன் அவரைப் பார்த்தேன். அதன்பின் ஞாயித்துக்கெழமை கடைகளையே மறந்துவிட்டேன்.

12 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

ஹி...ஹி...என்னைப் போல் ஒருவன்(ர்)....ஹி...ஹி

said...

செம தி(ரி)ல்!!
===========

You are tagged !

more details here, in my blog.

said...

குசும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான்

said...

வாங்க சதையம் !
பேட்டைக்கு வந்து உண்மைய சொன்னதுக்கு நன்றி ! இவ்ளோ தெகிரியமா உங்களுக்கு !!

said...

ஞானம்ணே !
எதோ சொல்லிப்புட்டேன். என்னத மறச்சி என்ன பண்ணப் போறோம் சொல்லுங்க! அப்பப்ப வந்து மாரல் சப்போர்ட் பண்றதுக்கு ரொம்ப தேங்ஸ் !

said...

வாங்க இளா !
குசும்பு ஜாஸ்திதான் ஏன்னா இது வாலிப வயசு ! ;)

said...

/*அய்யோ தாயே ! என்னை ரொம்ப நல்லவேன்ன்னு சொல்றீங்களே ! */ என்ன பண்றது நம்மளை பெத்தவங்க எல்லாரும் இப்படித்தான் ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல. நாம் அப்படிப்பட்ட அப்பாவிற்கு இப்படி ஒரு புள்ளையான்னு மெடல் வாங்கி குடுத்தாலும் நல்லவங்களாவே இருக்காங்க.

said...

வாங்க வாங்க சந்தோஷ் !
சரியாச் சொன்னீங்க ! என்ன பண்றது. தப்புலருந்து தப்பிக்கலாம்னு தப்பிச்சுபோன தப்பு நம்மல தப்பிக்க விடமாட்டேன்னுது ! கோயிலுக்கு போனாலும் அங்க நாலு
T-சர்ட் வந்து ஜங்குஜங்குன்னு ஆடுது! இது என் தப்பா?

said...

jollu... aaahaaa antha puthagangalai friends-odu sernthu sandai pottu kondu padiappathil evalavu sugam... padichi mudichapprum ellorum mandirchi vitta maathiri iruppom... good old memories.. :-)

said...

வாங்க லார்டு லபக்கு
பேரே சூப்பரப்பு ! இங்கேயும் அந்த கதைதான் ;)

said...

பாண்டி உங்க Aனுபவமே தனிதான் ;)) நல்லா சிரிச்சேன் !!

said...

//தீர்த்தா said...
பாண்டி உங்க Aனுபவமே தனிதான் ;)) நல்லா சிரிச்சேன் !! //

வாங்க தீர்த்தா :))
என அனுபவம் உங்களுக்கு சிரிப்ப கொடுத்ததுன்னா ரொம்ப சந்தோசந்தாங்க :)))