Wednesday, February 22, 2006

நறுக்குன்னு நாலு ! - சங்கிலிப் பதிவுஓரமா ஒக்கார்ந்து நான் உண்டு நம்ம வேலை உண்டுன்னு ( வேலைதான் என்னான்னு சொல்லியிருக்கமுள்ள ! ) இருந்தேன். நம்ம ஞான்ஸ்அண்ணே திடீர்னு கையப்புடிச்சு ஆட்டத்துக்குள்ள இழுத்து விட்டுட்டாரு ! ஓடி முடிக்கறதுக்குள்ள வாயில நுரை தள்ளிருச்சு ! சரி ஆனது ஆவட்டும்னு கொளுத்திப் போட்டுட்டேன் .எனக்கென்ன உங்க பாடு !


Four Jobs I have had

1. பிக்பாக்கெட் ( அப்பா பாக்கெட்டில் மட்டும் )
2. எழுத்தாளர் ( லவ் லெட்டர் மட்டும் - எனக்கில்லீங்க friends க்கு )
3. ஆலோசகர் ( என் கேணத்தனங்களை ரசிக்கிறவர்களுக்கு மட்டும் )
4. ஜொள்ளுதல் ( இதுக்கு மட்டும் ரிட்ரைமெண்ட்டே கிடையாது ஜாலி )

Four Movies I would watch over and over again

1. இன்று போய் நாளை வா
2. அழியாத கோலங்கள்
3. American Pie
4. Naked Gun 33 1/3

Four places I have been living ( for Years )

1. அம்மாவின் மனசு ( அம்மா என்றழைக்காத உயிரில்லையே ! )
2. அப்பாவின் முதுகு ( அப்படித்தான் சொல்றாரு அப்பாரு ! )
3. டீக்கடை பெஞ்சு ( எல்லா காலேஜ் எதிரிலும் உள்ள )
4. காலேஜ் கேண்டீன் ( எங்கள் தோட்ட மல்லிகைகளுக்கும் மணம் உண்டு)

Four TV Shows I love to watch

( எல்லோரும் இருக்கறப்ப )

1. விஜய் டிவி லொள்ளு சபா
2. ஜெயா டிவி காமெடி பஜார்
3. pogo just for gags

( நான் மட்டும் இருக்கறப்ப )

4. FTV ( எல்லாமே ஹி ஹி ! )


Four places I have been on vacation

1.சத்யம் தியேட்டர் வாசல் ( சும்மா நச்சுன்னு இருக்கும் )
2.ஸ்பென்சர்ஸ் ( கண்ணையே புடுங்கி போடனும் போல தோணும் )
3.பெசண்ட்நகர் பீச் ( காத்தும் கலரும் ரொம்பவே அடிக்கும் )
4. கிரிஸ்டல் Bar ( hi hi Definitely male )


Four of my favorite foods

1. ஜொள்ளு ( is the secret of my Energy )
2. காடை ( அப்படியே சாப்பிடுவேன் ! )
3. மூளை ( அப்பவாச்சும் நமக்கு வளருதான்னு பார்க்கதான் )
4. முட்டை in any form ( பரீட்சையில் வாங்கறதிலைங்கோ இது நெசமாலுமே கோழி போடறது )Four Games I love to watch

1. டென்னிஸ் ( womens singles & doubles)
2. கூடைப்பந்து ( “ )
3. பில்லியார்ட்ஸ் ( “ )
4. ஜிம்னாஸ்டிக்ஸ் (“ )

Four Bloggers I am tagging

சந்தோஷ்
சதையம்
கண்ணபிரான்
ஆள்தோட்டபூபதி

அப்பாடா எப்படியோ இந்த ரிலேரேஸ்ல என் பங்கு முடிஞ்சது ! இனி இவங்க பாடு !
உடரேன் ஜூட் !!!!

13 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

ம்...
பதிவும் சரி... போட்ருக்க படமும் சரி...

நீங்க மகா ஜொள்ளர்-னு ஜொல்லாம ஜொல்லுதுங்கோவ்!!

ரொம்ப குசும்பு ஜாஸ்தி போல!!!
;-)

said...

வாங்க அண்ணே ஞான்ஸ் !
எல்லாரும் என்னையபோலத்தான் என்ன அவங்கல்லாம் கமுக்கமா பண்ணிகிட்டு இருக்கறதை நான் கொஞ்சம் பகிரங்கமா சொல்றேன் !! அவ்ளோதான் வித்தியாசம்! சரியா இல்லையா சொல்லுங்க ?

said...

அண்ணா, ஜொள்ளண்ணா,

பாஸ்கெட் பால் கேம்லே டபுள்ஸ் எல்லாம் இல்லேண்ணா - ஜொள்ளு உங்க கண்ணை மறச்சிடிச்சே?

said...

அடடா ஆரம்பிச்சிட்டீங்களா துபாய்வாசி :) அண்ணே நீங்க ஸ்போர்ட்ஸ்ல கிங்குன்னு தெரியாம போச்சே ! சரி ஏதோ சின்னப்பையன் ஆர்வக் கோளாருல எழுதிபுட்டேன் மன்னிச்சி விட்டுடுங்கண்ணா!

said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கானு ;-)யோசிச்சிருப்பாரு நம்ம ஜொள்ளுப்பாண்டி.. அதுனாலதான் டங்கு சிலிப் ஆகி இருக்கு.. சரிதானுங்கனா ;-) ?

said...

பாண்டி,
ஆளை விடுங்க நான் வரலை இந்த 4 பேரு விளையாட்டுக்கு. ஆனா நீங்க பண்ண எல்லா நாளுமே சுப்பர், பழைய படி எழுதுங்கப்பா எதுக்குப்பா நமக்கு எதையோ பாத்து ஏதோ ஏதோ பண்ண மாதிரி.

said...

நச்சுன்னு 4 figure படம் போட்டே உங்கள நிரூபிச்சு இருக்கலாம், இதெல்லாம் எழுதனுமா என்ன?

said...

ஐய்யய்யோ யாத்ரீகன்
ஏன் இப்படியெல்லாம் ரெட்டை அர்தத்தில சொல்லி என்னைய மாட்டி விடறீங்க ? நெசமாலுமே ஸ்லிப்புதான் ஆகி போச்சு !

பேட்டை விசிட்டுக்கு றொம்ப தேங்ஸ்ங்கண்ணா !

said...

ok ங்க சந்தோஷ் ! பரவாவில்லை. தொடர்றேன் தொடருங்க !

said...

ஆகா இளா என்ன பேச்சு சொல்லிபுட்டீங்க ! இந்த ஐடியா தோணாம போச்சே ! சரி உடுங்க வேறொரு சான்ஸ் கெடைக்காமையா போய்ட்டும் ?

said...

திமிசுக்கட்டை என்பது கொததனார்கள் உபயோகிப்பது. செவ்வக வடிவ கட்டை நீண்ட கைப்பிடியுடன் கூடியது. ம்ண் , கல் போன்றவகளை அடித்து மட்டம் பண்ண உபயோகிப்பது. அதனால் தான் குண்டானவர்களை, அவர்கள் நடந்தால் மண் புதைந்து கெட்டியாகும் என்ற அர்த்தத்தில் திமிசுக்கட்டை என்று அழைப்பதுன்டு.( உன்களுக்கு ஜோதிகா ஞாபகம் வந்தால், நான் பொறுப்பில்லை)

said...

வாங்க கிறுக்கன்,
இவ்ளோ டெக்னிகலா ஒரு விளக்கத்தை அள்ளித்தெளிச்சிருக்கீங்களே ! என்னன்னவோ ஞாபகம் வருதே !!

said...

சூப்பர் ஜொள்ளுண்னே. பிரமாதம். நான் வலைக்கு புதுசு. இப்பதான் எப்படியோ ஒன்னு எழுதி விட்டிருக்கேன். பார்த்து அபிப்பிராயம் சொலலுங்களேன்.

‍kiruk.blogspot.com. ‍நன்றி