Monday, February 13, 2006

ஜொள்ளு for Dummies ( Edition 1 )Preface :

பலபேருக்கு ஜொள்ளுன்னா என்னான்னே தெரிய மாட்டேங்குது. இவங்கெல்லாம் ஜொள்ளுன்னா ஏதோ தீண்டத்தகாத சாமாச்சாரம் போல நெனச்சிகிட்டு செருப்ப எடுப்பேன் அடுப்ப எரிப்பேன்னு வீராப்பா வீண்வாதம் பண்ணிட்டு அலையுறாங்க! நம்ம வள்ளுவரே என்ன சொல்லியிருக்காருன்னா

காதலினும் மெல்லிது ஜொள்ளு சிலர் அதின்
செவ்வி தலைபடு வர்

வள்ளுவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது ?

போன ஞாயித்துகிழமை அப்படியே லேண்ட்மார்க்கில் land ஆகி இருந்தேன் ! பல பேரு புத்கத்தையும் புத்தகம் பார்க்கிற மாதிரி புத்தகம் பார்க்கிற பொண்ணுகளையும் புரட்டிகிட்டு இருந்தாங்க! ஒருகாலத்துல சுரிதாரே ஏதோ மார்டன் டிரெஸ்சின்னு நெனச்சிகிட்டு இருந்த காலம் மலைஏறி மன்னார்குடி கடல்ல கலந்திருச்சு.இப்போ என்னடாண்னா டிசர்ட்டும் டைட் ஜீன்ஸ்சுன்னு சும்மா பின்னி எடுக்கறாங்க நம்ம கண்ணை! ஏற்கனவே தரையெல்லம் ரொம்ப வழவழன்னு இருக்கு இதுல வேற ரோட்டுல ஆயில் கொட்டுன மாதிரி நம்ம சொந்தங்கள் எல்லாம் ஜொள்ளவிட்டு கெளப்பிட்டு இருக்காங்க. அவனவன் வழுக்கி விழாம இருக்கறதே பெரிசாப் போச்சு ! ஜொள்ளு பாண்டி இவ்ளோ distraction களையும் மீறி அப்பப்போ புத்தகத்தையும் மேய்ஞ்சுகிட்டு இருந்ததுல திடீர்ன்னு இந்த புத்தகம் கண்ணுல பட்டுது.அப்படியே சுட்டுட்டு வந்துருக்கறேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் சரக்க இறக்கி வுடுறேன்.

இதுல ஆண்பால் பெண்பாலெல்லாம் கிடையாது ! ஜொள்ளு இருபாலருக்கும் பொதுவானது ! என்னோட வசதிக்காக ஆண்பாலையே எடுத்துக்கறேன். யாராவது தப்பித்தவறி பொண்ணுங்களா இருந்துட்டா ஆண்களையெல்லாம் பொண்ணுங்களா மாத்திப்படிங்க! தவறாம படிங்க! சீக்கிரமே நீங்க Professional ஜொள்ளர் ஆயிடலாம் ! பரீச்சையெல்லாம் கெடையாது ஆனா Practicals உண்டு !!!

ஜொள்ளாமை ஒரு பெருங்குற்றம்
ஜொள்ளாமை ஒரு பாவச்செயல்

சரி பாடத்துக்குள்ள நுழைவமா ?

பொது விதி :

எல்லோரும் ஜொள்ளரே !

எல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்

ஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ! ( காதலி !)

ஜொள்ளு அதிகமாச்சுன்னா லொள்ளு !

ஜொள்ளு பல வகைப்படும். ஜொள்ளு பல இடங்களில் பலவாறு அழைக்கப்படுகிறது.சில சமயம் ஜொள்ளுக்கு ‘காதல் ‘ என்ற மறுபெயர் உண்டு. நீண்ட நாட்களாக ஒரே பெண்ணையோ அல்லது பையனையோ பார்த்து விடும் ஜொள்ளு காதலாகும் ஆபத்துகள் அதிகம்.

ஜொள்ளில் பல வகைகள் இருந்தாலும் இப்பொழுது பாப்புலராக உள்ள லேசர் ஜொள்ளைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

லேசர் ஜொள்ளு :

ஒரு கும்பல்ல நின்னுகிட்டு இருக்கீங்க ! பல பொண்ணுங்களும் பசங்களும் நிக்கறாங்க.திடீர்னு தென்மேற்கு திசையில இருந்து ஒரு ஜொள்ளு உங்களைக் க்ராஸ் பண்ணி உங்க பக்கத்திலே நிக்கிற அனுவையோ இல்லை அம்புஜத்தையோ தாக்குதுன்னு வைங்க! இப்போ அதே ஜொள்ளு திரும்பி அதே திசையில் பயணப்படுதுன்னு வைங்க! இப்படி எவ்ளோ கும்பலா இருந்தாலும் ஒரு பர்டிகுலர் ஆள் மேல குறி தவறாம விடுறதுதான் லேசர் ஜொள்ளு ! மாக்ஸிமம் பார்தீங்கன்னா இந்த ஜாதி ஜொள்ளர்கல்லாம் ‘காதல்’ அப்படீங்கற போர்வையில ஜொள்ளுமேளா நடத்திகிட்டு இருப்பாங்க!

இந்த லேசர் ( காதல் ) ஜொள்ளுல ஒரேயொரு ஆபத்துதான் . சமயத்தில இது கல்யாணம் வரை செல்லும் அபாயங்களும் உண்டு.இதைத்தான் வள்ளுவர்

ஜொள்ளினால் சுட்ட வடு உள்ளாரும் ஆறாதே
காதலினால் பட்ட வடு !

என அழகாக கூறியிருக்கிறார். இவர்களின் மெஜாரிட்டி அதிகமானதினால் இவர்கள் ஜொள்ளர் தினத்தை மாற்றி ‘ காதலர் தினம் ‘ எனப் பெயர்சூட்டி விட்டனர்.
இந்த ஜொள்ளுல வழுக்கிவிழுந்து சில்லறை பொறுக்குனவங்க எண்ணிக்கை இந்தியாவோட மக்கள் தொகையவே தாண்டும்ன்னா பார்துக்குங்களேன்! ஆனாலும் இவங்க சில்லறை பொறுக்குனதோட நிப்பாட்டிகாம அவங்க டிசைன் டிசைனா விட்ட ஜொள்ளப்பத்தி தெய்வீகமா பேசிகிட்டு எழுதிகிட்டு திரிவாங்க! அதுக்கு ‘கவிதை’ அப்படீன்னு பெயர் சூட்டி மகிழ்வார்கள் !

சரி போய்ட்டு போறாங்க ! என்னதான் இருந்தாலும் நம்ம இனம் இல்லையா? அதுனால ஜொள்ளுப்பாண்டி எல்லா so called காதலர்களுக்கும் வாழ்த்துக்கள சொல்லிகிறேனுங்கோவ்வ்வ்!

நேரமின்னமையால் மற்ற வகைகளைப் பற்றி அடுத்த edition ல ஜொள்ளறனுங்கோ! சரியா ? !

10 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

// ஜொள்ளினால் சுட்ட வடு உள்ளாரும் ஆறாதே
காதலினால் பட்ட வடு ! //

பாண்டி குறளையாவது வுட்டு வைப்பீங்கன்னு பாத்தேன்...

said...

எவ்வளவு ஆச்சரியக்குறி!!!!

said...

வாங்க ராசய்யா ! கலாய்க்கரதுன்னு ஆகிப்போச்சு:) அப்புறம் என்னங்க?

said...

என்ன பாலாண்ணே வஞ்சப்புகழ்ச்சியா ? :)

said...

"நாலு பொண்ணுங்க
சந்தோசப்படறாங்கன்னா
'சைட் ' அடிக்கறதிலே
தப்பே இல்ல !"

said...

yeppaaaaadiiiiiiii
jollu uthurathu pathi ipdi pirichu menjirukireya????

ipo than started reading your jollus posts, very very intresting:-)


natpodu,
Nivisha.

said...

//Anonymous said...
"நாலு பொண்ணுங்க
சந்தோசப்படறாங்கன்னா
'சைட் ' அடிக்கறதிலே
தப்பே இல்ல !" //

வாங்க அனானி..
நம்ம பிட் டையே திருப்பி போடுறீயளே !! :)))

said...

//நிவிஷா..... said...
yeppaaaaadiiiiiiii
jollu uthurathu pathi ipdi pirichu menjirukireya???? //

வாங் வாங் நிவிஷா :)))
பிரிச்சு மேஞ்சு எல்லாம் இல்லீங்... ஏதோ உங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எங்க ரேஞ்சுக்குக்கு தக்கப்டி கொஞ்சமா... ஹிஹிஹிஹிஹி...

//ipo than started reading your jollus posts, very very intresting:-)


natpodu,
Nivisha.//

ஆஹா அப்படியா... நல்லா படிங்கோ... சந்தோசமா சிரிங்கோ.... சரியா..?? :))))

said...

எல்லோரும் ஜொள்ளரே !
எல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்
ஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ! ( காதலி !)
ஜொள்ளு அதிகமாச்சுன்னா லொள்ளு !
--------

Liked these lines:))

your writing if full of humour:-)

said...

// Shwetha Robert said...

எல்லோரும் ஜொள்ளரே !
எல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்
ஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ! ( காதலி !)
ஜொள்ளு அதிகமாச்சுன்னா லொள்ளு !
--------

Liked these lines:))

your writing if full of humour:-)//

வாங்க வாங்க ஸ்வேதா அம்மணி.....
எவ்ளோ பழைய பதிவு இது வந்து படிச்சு கருத்தெல்லாம்
சொல்லி இருக்கீயளே என்ன கைமாறு பண்ணுவேன்....;))))))