Thursday, February 09, 2006

ஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part 2ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

மாணவர்கள் doubt கேட்டால்
Refer பண்ணச் சொல்லுவது
மாணவிகள் doubt கேட்டால்
Refer பண்ணிச் சொல்லுவது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல்
துப்பட்டா இல்லாமல் குனிந்து
பட்டாசு கொளுத்தும்
எதிர்வீட்டுப் பெண்ணை ரசிப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

ராங்க்காலில் பெண்குரல் கேட்டால்
நாயைப் போலக் குழைவது
அதுவே ஆண் குரல் என்றால்
நாயைப்போல குரைப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

தின்னவேத் தெரியலைனாலும்
பர்கரை வாங்கிவச்சுகிட்டு
காஃபி ஷாப்பில் அமர்ந்திருப்பது !

ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

சிம்கார்டே இல்லாட்டியும்
பொண்ணுங்களைப் பார்த்தால்
செல்போனை காதில் வைத்துக்கொள்வது!


Blog ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

' நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது !


இதைப் படிச்சிட்டு கவிப்பெருந்தகைகெல்லாம் என்னை ஊடுகட்டி அடிக்க வந்துறாதீங்க ! சும்ம ஜாலியா எடுத்துக்குங்க! ஓகே வா ?

22 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

கலக்கறே மாமு!

ஜொள்ளுல இவ்வளவு பெரிய ஆராய்ச்சியே செஞ்சிருக்கியே!

//மாணவர்கள் doubt கேட்டால்
Refer பண்ணச் சொல்லுவது
மாணவிகள் doubt கேட்டால்
Refer பண்ணிச் சொல்லுவது !//

உண்மைதான், எத்தனை முறை இப்படி பாதிக்கப் பட்டியோ?


//நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது !
//

அடப் பாவி!

said...

வாங்க வாங்க ஊர்காரரே ! எப்படி இருக்கீங்க? நான் 'அடப்பாவி' இல்லீங்க நான் ஒரு ' அப்புராணி ' பய ! ஜொள்ளுனதுக்கு ரொம்ப danks !

said...

//' நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது !//

கலக்கீட்டீங்க!

-ஞானசேகர்

said...

கலாசீட்டீங்கணா!!!

லொள்ளு என்ப்படுவது யாதெனில்,
இதை படித்த பின்னரும் மாறமாட்டேன் என்பது.
தில்லு என்ப்படுவது யாதெனில்,
இதை ரசித்து இன்னும் உஷாராய் களத்தில் இறங்குவது .

said...

கும்பிடறேனுங்கோ ஞானசேகர் அண்ணாச்சி ! ஜொள்ளுனதுக்கு ரொம்ப தேங்ஸ் !

said...

வாங்க மச்சி ஆள்தொட்டபூபதி !
தேங்ஸ்சுங்கோவ்வ்!
அடிக்கடி வந்து ஒதுங்கீட்டுப்போங்க !

said...

//தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல்
துப்பட்டா இல்லாமல் குனிந்து
பட்டாசு கொளுத்தும்
எதிர்வீட்டுப் பெண்ணை ரசிப்பது !//

************
//' நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது !//
செரு ப் பு

u should have heard this a lot, once more form me

-Shalini

said...
This comment has been removed by a blog administrator.
said...

வணக்கமுங்கோ ஷாலினி ! என்னங்க நீங்க ரொம்ப டென்சன் ஆய்டீங்க ! சரி என்னைப் பாராட்டி செருப்பு வாங்கிக் கொடுக்கறேங்கறீங்க ! சரி உங்க ஆசைய கெடுக்க முடியுமா? கொடுங்க! அது Nike செருப்பா இருந்தா நல்லாருக்குங்கோ !

ஆமாங்க நான் செருப்புன்னு செருப்பு கடையில நெறையாதடவை கேட்டிருக்கேன் ! நீங்களு செருப்பு சேல்ஸ் பண்றீங்களா? :)

சரி கொஞ்சம் சீரியாசாவே சொல்றேன். நான் சொன்னதுல தப்பு என்னங்க ? நடக்காததை சொல்லவில்லையே ? இதையெல்லம் சீரியஸா எடுத்துக்காதீங்க ! தேவையில்லாம ஏன் உங்க BP ய ஏத்திக்கிறீங்க ?

said...

ஆகா பாண்டி,
சூப்பர் மச்சி கலகிட்ட போ,

/*' நிலா நிலா ஓடிவா 'வையே மீண்டும் எழுதியிருந்தாலும்
அது பொண்ணுங்க எழுதிய கவிதைன்னா
அந்தக் கவிதையவிட பெருசா
முழநீளத்திற்கு பாராட்டி பின்னூட்டம் இடுவது ! */

சும்மா நச்சுன்னு சென்னமா(ஆமா இதுக்கு முன்னாடி ஏதாவது ஒரு கவிதை பிளாக் எழுதி பின்னுட்டம் கிடைக்காம் பிளாப் ஆயிடிச்சா என்ன?)....
ஷாலினி ஏன் டென்ஷன் ஆகுறாங்குன்னு தெரியலை..... சும்மா ஜாலியா எடுத்துகோங்க(நீங்க கவிதை பிளாக் ஏதாவது எழுதுறிங்களான்னு தெரியலை.)...

பாண்டி அந்த செருப்பு பின்னுட்டத்தையும் அசால்டா போட்டு அதுக்கு sportive ஒரு பதில் போட்டு இருக்க பாரு அங்க தான் நீ நிக்கிற.

said...

சந்தோஷம் சந்தோஷ்!

நானா? கவிதை ப்ளாக்கா ? kabi nahi ! என் கவிதைன்னு ஒண்ணத்தான் அரங்கேத்தியிருக்கிறேனே ! அதுதான் நம்ம ரேஞ்ச்.

ஷாலினி திரும்ப வந்தாங்களான்னு தெரியலே ! செருப்பு, பொது மாத்துக்கெல்லாம் பயந்தா அரசியல் பண்ண முடியுமா ? பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா !

said...

kalakuringa jollupandi, rombha comedy-ya iruku, athuvum antha nila nila odiva superb

said...

//ennorujollu said...
kalakuringa jollupandi, rombha comedy-ya iruku, athuvum antha nila nila odiva superb //

வாங்க வாங்க சக ஜொள்ளே !! சிரிச்சிட்டு போனதுக்கு ரொம்ப டேங்ஸ் மாமு !!

said...

ipdi jollu vittathukku thaan apdi aapu vechangaloooooooo ;) ----- ammu

said...

//Anonymous said...
ipdi jollu vittathukku thaan apdi aapu vechangaloooooooo ;) ----- ammu //

வாங்க வாங்க ;)))
அம்மு இதெல்லாம் ரொம்ப ஓவர்னா நெனைக்கிறே நீ? அடிப்பாவி நான் ரொம்ப பாவம் கண்ணு ;))

said...

//நான் ரொம்ப பாவம் கண்ணு ;))//

அதான் கவிதைலயே தெரியுதே :-D

said...

//சேதுக்கரசி said...
//நான் ரொம்ப பாவம் கண்ணு ;))//

அதான் கவிதைலயே தெரியுதே :-D //

வாங்கக்கா :)))
என்ன சொல்றீங்க ?? :)) அப்படியா என்ன ? ;)))

said...

//ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

மாணவர்கள் doubt கேட்டால்
Refer பண்ணச் சொல்லுவது
மாணவிகள் doubt கேட்டால்
Refer பண்ணிச் சொல்லுவது !///

ஆஹா...!! அற்புதம்...

said...

Ella Pandi,

Sariyanna padil saliniikku, Entha penkkal la appidi than.

Niskha fm Dubai

said...

//thesun said...
//ஜொள்ளு எனப்படுவது யாதெனில்,

மாணவர்கள் doubt கேட்டால்
Refer பண்ணச் சொல்லுவது
மாணவிகள் doubt கேட்டால்
Refer பண்ணிச் சொல்லுவது !///

ஆஹா...!! அற்புதம்...//

வாங்கண்ணா சன் :))
அட இது அற்புதமா ?? ::))) ரொம்ப தேங்ஸுங்கோ...

said...

//Ella Pandi,

Sariyanna padil saliniikku, Entha penkkal la appidi than.

Niskha fm Dubai//

வாங்க நிஸ்கா :))
அட ரொம்ப அனுபவமாங்க ?? :))))

said...

Hi jolu pandi nenga jolluku kudukara vilakangal abaram!!! kandipa etha schoola collegla kataya padamaka vazhtugiren!!!