Friday, March 31, 2006

36-28-36கேரளா என்றதும் நினைவுக்கு வருவது என்ன? என்ன? என்ன? உங்களுக்கு என்ன வேணா நினைவுக்கு வரட்டும்.ஆனா எனக்கு நினைவுக்கு வருவது மலையும் மலைசார்ந்த பகுதிகளும் தான். ( ம்ம்ம்ம்ம் கடவுளோட அற்புதமான படைப்பு ) அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா சும்மா தளதளன்னு இருக்கற எளநீர். அதுவும் ஒவ்வொரு எளநீயும் அசாதாரண சைஸ்சில் இருக்கறத அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். எப்படீன்னு கேக்கறீங்களா? ஒரு எளநீயவே குடிக்க முடியாது ! ( நீங்களும் உணரணுமா ? போய் பக்கத்திலே எங்காவது இளநீர் கடைக்குப் போங்கப்பா !) இல்ல நம்ம அண்ணன் விவசாயிகிட்டவே கேட்டுக்குங்களேன். அண்ணன் வேற கேரளா பக்கத்தில தானே இருக்கார் !

சரி எதுக்கு இப்போ கேரளா டூரிஸதுக்கு வாக்கு சேகரிக்கறேன்னு பாக்கறீங்களா? வர்றேன் மேட்டர் இருக்குங்க.

எங்க தெருவ பத்திக்கொஞ்சம் சொல்றேன். பொதுவா ஜொள் விதி ( Joll theory ) ன்னு ஒன்னு இருக்கு. அதாவது நாம எவ்ளோ பெரிய ஜொள்ளு பிஸ்தா இருந்தாலும் நம்ம ஏரியாவுல நாக்கைச் சுருட்டிகிட்டு இருக்கனும். அக்கம் பக்கம் இருக்கற ஆண்டிகள் எல்லாம் “ புள்ளாண்டான் இருக்கறதே தெரியலை அவ்ளோ பதவிசா இருக்கானேன்னு “ நம்ம அம்மா காதுபடச் சொல்றதைக் கேட்கறச்சே தேவாமிர்தமா இருக்குங்கோ ! சுருக்கமா சொல்லனுமுன்னா
“ஜொள்ளு பாண்டி அவன் தெருவுல எலி வெளியிலே புலி ! “ ( சரி சரி கை தட்டுனது போதும் மக்கா ! ) இதைய ஒரு கொள்கையாவே வெச்சுகிட்டு இருக்கேன்.

என்னோட இந்த கொள்கைய காப்பாத்த சும்மா ரத்தமெல்லாம் சிந்தவில்லை. பொதுவா எங்க தெருவிலே இருக்கரவங்கெல்லாம் ரிட்டயர்மெண்ட் ஆனதுக்கப்புறம் தான் வந்து குடியேருவாங்க. அவங்க புள்ளைங்கெல்லாம் எங்காவது US ல இருக்குங்க. அதுனால இயற்கையாகவே கடவுள் என் கொள்கைய சோதிக்க சந்தர்ப்பம் தரலே.

இப்படி நிம்மதியா நான் உண்டு என் கொள்கை உண்டுனு கெடக்கறப்போதான் இது நடந்துச்சு. எங்க வீட்டுக்கு எதிரில் இருக்கும் நாராயணன் தாத்தா வீட்டை காலி செய்துவிட்டு மகனுடன் UK ல் போய் தங்கப்போவதாகவும் அதானால யாரோ ஒரு கேரளாகாரங்களை வாடகைக்கு விட்டுச்செல்வதாகவும் என் அன்னையிடமிருந்து தகவல் சாப்பாட்டு வேளையில் கசிந்தது. சரி வழக்கம் போல ஏதோ ஒரு நாயர் தாத்தாவும் பாட்டியும் என இருந்து விட்டேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு காலையில் ஜாகிங் சென்றுவிட்டு வரும்போதுதான் கவனித்தேன். எதிர் வீட்டு வாசலில் கோலமிடும் பெண் ! அப்படியெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தக்க் கூடாது. ஒரு கவிஞனின் பாணியில் சொல்வதென்றால்
“கோலமிடும் கோலமயில் !” நம்ம தெருவுலயா ? சான்ஸே இல்லை ! அப்படி ஒரு அழகு ! கண்ணை எடுக்கவே முடிய வில்லை.
“ ஐயகோ! என்னடா இது பாண்டிக்கு வந்த சோதனை ! “என் கொள்கை நினைவுக்கு வர வேதனையுடன் வீட்டினுள் நுழைந்தேன்.

சாப்பிடறப்போ அப்படியே அம்மாகிட்ட 'பிட்'டைப் போட்டேன்.” யாரும்மா வந்திருக்காங்க எதிர் வீட்டுல ? “ இதற்காகத்தானே காத்திருந்தேன் என் குமாரா என என் தாய் மடை திறந்த வெள்ளம் போல் தகவல்களைத் தெளித்தார்.
“ஒரு ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் அவரு எங்கயோ ப்ரைவேட் கம்பெனில மேனேஜரா இருக்காராம் அந்த அம்மா வீட்டுல தான் இருக்கு. அங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். பையன் டெல்லில இருக்கான் பொண்ணு காலேஜ்ல படிக்குது “
போதும் தாயே போதும். என்ன செய்யப் போறேன்?

அந்தப் பொண்ணு பேரு சிந்து. சிந்துவப் பத்தி என் பாஷைல சொல்றதுன்னா
“பிஸ்து கெளப்பும் பிகர் “ நமீதாவுக்கு போட்டியாக வளர்ந்திருந்தாள். வளர்ந்திருந்தது. நீளமான முடின்னு சொல்றேன் ! சிந்து எப்போ என்னையப் பார்த்து சிரிப்பை சிந்துவா போய் ஒட்டிக்கலாம்ன்னு பார்த்திருந்தேன்.ம்ஹூம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை போல ! தினமும் சிந்துவப் பார்த்து நான் ஜொள்ளை சிந்துனதுதான் மிச்சம். சரி சிந்துவை கரெக்ட் பண்றதுக்கு மலையாளம் கத்துகிட்டா என்ன? உடனே ஹிக்கின்பாதம்ஸ் சென்று 30 நாளில் மலையாளம் புத்தகம் வாங்கினேன்.

இதற்கிடையில் என் அம்மாவும் சிந்துவின் அம்மாவும் பழக்கமாகிவிட்டிருந்தார்கள். தேர்தல் நேர அரசியல்வாதி போல என் கொள்கைகள் காற்றில் என்றோ கலந்து விட்டிருந்தது. யாராவது எதிர்வீட்டிலே ஃபிகரை வச்சிகிட்டு பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா அலைவாங்களா? நீங்களே சொல்லுங்க?

“பாண்டி இங்க கொறச்சு வர்ணும்! “ இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினில். எதிர் வீட்டு ஆண்டிகோவ். அவ்வளவுதான் மறுநொடி அங்கே ஆஜராகியிருந்தேன். “என்னங்க ஆண்டி ? “
சிந்து ஒரு ஓரமாக புன்னகையைச் சிந்தியபடி நின்றிருந்தாள்.
“இந்தப் பரண்லே இருக்கற பொட்டியிலே சிந்துவோட புக் இருக்கு.எனக்கும் அவளுக்கும் அதை எடுக்கில்ல. பாண்டிக்கு முடிஞ்சால் கொரச்சு எடுத்துக் கொடுக்கோனும்.சிரமத்துக்கு ஷமிக்கனும் !”

ஆகா சிந்துவுக்கு உதவுகிற வாய்ப்பை விடுவேனா? “´ இவ்வளவுதானா? பொட்டியை இறக்கி வச்சா மதியோ? “( மதி - போதும் உபயம் – 30 நாளில் மலையாளம்)

சிந்துவின் ஆச்சரியப்பார்வையில் குஷியானேன்.

“ஓ பாண்டி மலையாளம் அறியோ? “

“கம்ளீட்டா இல்லா கொறச்சு கொறச்சு அறியாம் !” ( கொறச்சு - கொஞ்சம் )

என்னங்க இது சிந்து மாதிரி ஒரு பொண்ணு இருக்கறப்போ என் தாய் மொழி எதற்கு? அவள் தாய் மொழி தானே வேணும்?

“ நான் வேணா ஹெல்ப் செய்யட்டே ? பாக்ஸ் கொஞ்சம் வெய்ட் ! “ கேட்டது சிந்துவாக இருந்திருந்தால் ஓகே என சொல்லியிருப்பேன்.ஆனா கேட்டது அவள் அம்மாவாச்சே ! “ நோ ப்ராப்ளம் ஆண்டி ! நானே தூக்கிடுவேன்” என் வீரத்தை நிரூபிக்க ஒரு சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதேடா பாண்டி !

ஒரு ஸ்டூலில் ஏறி பொட்டியை துக்கினேன். அம்மா இது என்ன பொணம்கணக்கா கனக்குது. போச்சுடா பாண்டி. மாட்டிகிட்டயே! ஒருவழியா தம் கட்டி தூக்கிட்டேன். தலைக்கு மேல தூக்கறப்போதான் தெரியுது அந்த அட்டை பொட்டி கீழ் பகுதி ரொம்ப வீக். அவ்வளவுதான் என் தலை வழியே பொட்டியிலிருந்த புஸ்தகமெல்லாம் அபிஷேகமாகியிருந்தது. என் நிலைமையைப் பார்த்து சிந்துவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஆனால் எங்கே சிரித்தால் நான் சங்கடப்படுவேனோ என சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

அப்புறம் என்ன சிந்து என்னைய பார்த்து சிரிக்க ஆரம்பிச்சா ! ஆனாலும் பேசதான் தைரியம் வரமாட்டேங்குது. என்ன பண்ணலாம்? நேர்ல பார்த்தாதானே தைரியம் போகுது. போன்ல பேசுனா என்ன? சபாஷ்டா பாண்டி! சிந்துகிட்டே கேட்டுட வேண்டியதுதான்.மறுநாள் காலையில் சாப்பிட மேஜைக்கு வந்தால் தட்டில் புட்டு !

“ என்னம்மா நீங்க புட்டு செய்ய மாட்டீங்களே ! எவனாவது வித்துகிட்டு வந்தானா? “

“இல்லைடா. நம்ம சிந்து வீட்டிலே செஞ்சாங்களாம். கொடுத்து அனுப்பினாங்க ! “

ஓ அப்படியா கதை ! சூப்பராக இருந்தது புட்டு. ஒருவேளை சிந்து செய்திருப்பாளோ? கிளம்பும்போது அம்மா சொன்னார்.” டேய் பாண்டி போறப்போ இந்த டிபன் பாக்ஸை சிந்து வீட்டிலே கொடுத்துடு.” என் கையில் திணித்தார்.

பெல் அடித்ததும் கதவைத்திறந்தது சிந்து!

“ வாங்க வாங்க ! “ வழிவிட்டாள்.

“ இந்த டிபன் பாக்ஸை அம்மா கொடுத்திட்டுவரசொன்னாங்க ! புட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு“

“ ஓ ரொம்ப தேங்ஸ் !”

“அம்மா எங்கே சிந்து ?

“ அம்மே குளிக்குது ! “

“ சிந்து உங்க வீட்டு போன் நம்பர் என்ன? அம்மா கேட்டாங்க ! புட்டு செய்யறதைப்பத்தி கேட்கனுமாம் “ சரளமாக புளுகினேன்.

“ அதுவா ம்ம்ம்ம் 362836.”

“ ஒரு பேப்பரில் எழுதி தர்றீங்களா ? “

“ எதுக்கு பேப்பர் ? ஈஸியா மெமரைஸ் பண்ணிடலாம். Front லயும் back லயும் 36 போட்டுக்குங்க center ல 28 போட்டுக்குங்க. ஈஸியா ஞாபகம் வச்சுகலாம்.”

“அட ஆமா 36-28-36. ஈஸியாதான் இருக்கு. தேங்ஸ் சிந்து. “

இனி போன்ல பேசிட வேண்டியதுதான். பேசிட்டு அந்த கதைய தனியா சொல்றேங்க ஒகே வா ? அதுவரை ஓரமா ஒக்கார்ந்து புட்டோ இலலை இளநீரோ குடிங்க !
29 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//மலையும் மலைசார்ந்த பகுதிகளும் தான். ( ம்ம்ம்ம்ம் கடவுளோட அற்புதமான படைப்பு )//

என்ன சொல்ல வர்றீங்க?

said...

வாங்க சீனு !
நீங்க kerala tourism advertisement பார்த்திருக்கிறீர்களா? அதில் கேரளாவை God's own Land எனக்குறிப்பிட்டிருப்பார்கள். அதைதான் இங்கே சொல்லியிருக்கிறேன். தவிர கேரளா முழுதும் மலைப்பாங்கான பிரதேசம் தானே !
என்னங்கண்ணா இவ்ளோ பெரிய விளக்கம் கொடுக்க வச்சிட்டீங்க ! போங்க !

said...

இப்ப முன்னாடி 'ரெண்டு' சேர்த்து டயல் செய்யறீரா? (சென்னையில் ஏழு இலக்கமாயிடுச்சே அதை மட்டுமே சொல்கிறேன் ;-)

said...

வாங்க பாலாண்ணே
நான் ஊர் பேரையே சொல்லவேயில்லையே ! எங்க ஊர்ல இன்னும் அதே நம்பர் தான் :-)

said...

உங்க எதிர்வீட்டு சிந்து சினிமாவில் எல்லாம் ஆக்ட் செஞ்சாச்சோ.... ஆ படத்தில் இருக்கும் குட்டியை ஞான் எதோ ஒரு சினிமாவில் நோக்கிட்டு உண்டு... படம் பேர் இப்போ நினைவுக்கு வர்றல்ல....

வல்லிய ஜொள் ஸ்டோரியோ...

said...

ஆராணு தேவோ? வரு சேட்டா வரு சாயா குடிக்கோ?
ஆ குட்டி எண்டே சிந்து இல்லே சேட்டா ! சும்மா ஒரு bang குக்காக ஞாண் நெட்டில் சுட்ட படமாக்கும் ! ஆ குட்டி நடிச்ச படம் கலாபக் காதலன் ! மதியோ?

வல்லிய ஜொள்ளோ இல்லியோ நீங்கள் பறைஞ்சாள் மதி ! :-)

said...

ஜொள்ளு உனக்கு ரொம்ப லொள்ளு !

said...

ஐயா! ஏதோ சனிக்கிழமை ராவு சூர்யா படம் மாதிரி இருக்கு,என்னமோ பாண்டி நடத்து

said...

வாங்கய்யா அனானி,
கொஞ்சம்தாங்க லொள்ளு மத்ததெல்லாம் ஜொள்ளு :)

said...

வாங்கண்ணா விவசாயி !
சனிக்கிழமை ராவுல சூர்யா படமெல்லாம் போடறாங்களா என்ன? என்ன படம்ணா? சொல்லுங்க நானும் பாக்குதேன் !

said...

ஜொள்ளு பாண்டி!

கலக்கிட்ட போ! இனிதே தொடரட்டும் உங்கள் ஜொள் புராணம்!

வாழ்க உம் புகழ்! வளர்க உங்கள் ஜொள்!

said...

வாங்க ஸ்ரீதரண்ணா,
ரொம்பப் புகழாதீங்கண்ணா ! நான் ரொம்ம சாதரணமானவன் ! :) பேட்டைப்பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப டேங்ஸ் !

said...

எலே! எடுபட்ட பயலே!
உதை வாங்காம திருந்த மாட்டியா நீ!

said...

யோவ் பார்த்தி
எதுக்கு திருந்தனும்? ஏதாச்சும் தப்பு பண்ணினாதானே திருந்தனும். நாந்தான் தப்பே பண்ணலையே ! உதையா ? அதுவும் எனக்கா? ஹஹாஹாஆஆ நல்ல ஜோக்.

said...

பாண்டி,
அந்த நம்பருக்கு போன் போட்டா தற்சமயம் அந்த எண் உபயோகத்தில் இல்லை அப்படின்னு வருது. எனக்கும் மலையாளம் கத்துக்கணும் நம்பர் குடுத்தா நல்லா இருக்கும்.

said...

அப்படிப்போடு அருவாளை ! எண்ணன்ணே மலையாளம் கத்துக்கொடுக்க பல புத்தகம் இருக்கு எதுக்கு நான் படிக்கிற புத்தகத்தைக் கேட்கறீங்க ? அடி மடியிலயே கைய வைக்கறீங்களே நியாயமா?

said...

Jollu pandee, Kerala la yaarum kolam poda mattanga ... this is an art specifictto Tamil nadu ;-) in naycase i enjoyed your post keep it up

Muthusamy Chicago

said...

வாங்க முத்துசாமியண்ணே !! கேரளாவிலே கோலம் போட மாட்டாங்களா ?? இதென்ன புதுக்கதையா இருக்கு?? நம்ம ஆளுக போடறாங்களே ! :)))

போட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப டேங்ஸ்! :))

said...

//மலையும் மலைசார்ந்த பகுதிகளும் தான். ( ம்ம்ம்ம்ம் கடவுளோட அற்புதமான படைப்பு )//

இது எல்லாம் கொஞ்சம் ஓவர் அப்பு..ஆமா சொல்லிட்டேன்..

said...

//362836//

தம்பி பாண்டி! இது போன் நம்பரா?

பார்த்தி கேட்டதுல தப்பே இல்லைன்னு தோணுது.

said...

உங்க வலைப்பூ இன்னிக்குத்தாங்க பார்க்கிறேன். உங்க பேருக்கேத்த மாதிரியே எழுதுறீங்க ;-)

கேரளாவுல கோலம் போடுவாங்களோ இல்லியோ ஓணப்பூக்கோலம் அப்படின்னு பூக்கோலம் போடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். அதைப் பார்த்துட்டு வந்து ஒரு பூ, பூக்கோலம் போடுகிறதுன்னு எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.

said...

என்னவோ justification ஜஸ்டிபிகேசன்கிறாங்களே.. அதைக் கொஞ்சம் மாத்துங்க. Firefoxல உங்க வலைப்பூ சரியா தெரியல

said...

//கவிதா said...
இது எல்லாம் கொஞ்சம் ஓவர் அப்பு..ஆமா சொல்லிட்டேன்.. //

வாங்க கவிதாக்கா !!
ஓவரா இருந்தா சொல்லுங்க திருத்திக்கறேன் :)) மன்னிச்சிவிட்டுங்கக்கா!! :))

said...

//சேதுக்கரசி said...
உங்க வலைப்பூ இன்னிக்குத்தாங்க பார்க்கிறேன். உங்க பேருக்கேத்த மாதிரியே எழுதுறீங்க ;-)//

வாங்க சேதுக்கரசி ! பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! Firefox ல் தெரியலையா ? Template தான் மாத்தனும்னு நெனைக்கிறேன் ! சரி பண்றேன் ! அதுவரைக்கும் IE ல அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ப்ளீஸ் !! :))

said...

suuuper

said...

tromba nallaave irukku

said...

nameethaakku neelamnu yaru sonna..nanum mudiya thaan solrane

said...

//vino said...
suuuper
romba nallaave irukku //

அட வாங்க வினோ :)) ரொம்ப டேங்ஸுங்கண்ணா :)

said...

//கார்த்திக் பிரபு said...
nameethaakku neelamnu yaru sonna..nanum mudiya thaan solrane //

அட வாங்க கார்த்தி! என்னைய மாட்டிவிடறதிலே உங்களுக்கு ரொம்ப சந்தோசமாங்கண்ணா ?? :))))