Thursday, March 16, 2006

கட்டை - சில குறிப்புகள்பலவையான கட்டைகளைப்பற்றி ஆராய்வதே தன் வாழ்நாள்தொண்டு என கடமையாற்றும் ஜொள்ளுப்பாண்டி தனது ஆராய்ச்சியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொண்டு ஆராய்ச்சியில் ஏற்பட்ட சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதே இந்த கட்டுரையில் நோக்கம் எனபதை தெளிவுபடக் கூறிக்கொள்கிறேன்.

கட்டைகள் பலவகைப்படும். கட்டைகள் பல வகையாக இருந்தாலும் அனைவராலும் அறியப்படும் கட்டைகளாவன

உருட்டுக் கட்டை
விறகுக்கட்டை
கர்லாக்கட்டை
திமிசுக்கட்டை

உருட்டுக்கட்டை :

இதில் உருட்டுக்கட்டை சினிமாவால் பிரபலப்படுத்தப் பட்டாலும் பரவலாக அரசியல்வாதிகளால் இதன் உபயோகங்கள் பல்வேறு கட்டங்களில் சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக இதன் பயன்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மேலிருந்து கீழாக ஒரே அளவில் உருண்டு இருக்கும் திரண்டிருக்காது.

விறகுக்கட்டை :

பொதுவாக இவை அடுப்பெரிக்க பரவலாக இன்றும் கிராமப்புறங்களில் உபயோகப்படுதப் பட்டு வருகிறது. சில சமயங்களில் இது தகராறு செய்யும் கணவனையோ அல்லது நாய்களையோ விரட்ட மனைவியரால் இன்றும் பயன்படுத்தப்படும் உபயோமான வஸ்துவாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது! இவற்றுக்கென தனி அளவு கிடையாது.

கர்லாக்கட்டை :

பழைய எம்.ஜி.யார் படங்களில் பார்த்தால் அவர் தலைக்கு மேலே தூக்கி உடற்பயிற்சி செய்ய சுற்றிக்கொண்டிருப்பாறே அதுதான் இது.இப்போதைய மார்டன் ஜிம்முகளில் இவை அருகி விட்டாலும் இன்றும் சிலவற்றில் இவை தென்படுகின்றன. இவற்றின் கைப்பிடி பார்க்க சிறியதாக இருந்தாலும் வெய்ட் அதிகம். தம் பிடித்து தூக்கினால் தோள்களின் வலிமை கூடும்.

திமிசுக்கட்டை :

இவற்றைப்பற்றி ஏடுகளின் மூலமாக அறிந்திருந்தாலும் இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. படிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை அருள் கூர்ந்து எனக்களிக்க வேண்டுகிறேன்.கட்டுரையைப் படித்து விட்டு தேவையில்லாமல் நிஜ உருட்டுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க வரவேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன்.இங்கிருக்கும் படங்களுக்கும் கட்டுரைக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என கூறிக்கொள்கிறேன். வழக்கம் போல் ஜாலியாக எடுத்துக்கோங்கோ !

30 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

இனிய நண்பரே,

பழைய படங்களில்?!? எம்.ஜி.ஆர். கர்லாக்கட்டை சுற்றும் காட்சியை எந்தப் படத்திலும் பார்த்தேனில்லை.

உடற்பயிற்சி செய்யும் காட்சிகளும் கிடையாது. உடற்பயிற்சி ஆசிரியராக வார்மிங் அப் செய்யும் காட்சி ஆனந்த ஜோதியில் உண்டு.

குஸ்திக்கு தயாராகும் காட்சி சக்கரவர்த்தித் திருமகளில் உண்டு. உடலை முறுக்கேற்றிக் காட்டும் காட்சி உரிமைக் குரலில் உண்டு. அதிகமான அளவிற்கு உடலின் அமைப்பு தெரியும் உடை மகாதேவியில் உண்டு. சம்மட்டியைத் தூக்கிச் சுழற்றி புஜங்களைக் காட்டும் காட்சி தனிப்பிறவியில் உண்டு.

ஆனால், கர்லாக்கட்டை காட்சியை எதிலும் பார்த்ததாக நினைவில்லை.

செய்திக்காக மட்டுமே தவிர உங்கள் எழுத்திற்கு எதிராக எழுதும் நோக்கத்துடன் அன்று.

அன்புடன்
ஆசாத்

said...

ஹலோ ஜொள்ஸ்,
உங்களுக்கு இன்னொரு மேட்டர்...
டைட்டானிக் படத்துல கப்பல் உடைஞ்சு, எல்லாரும் தண்ணியில மூழ்கி செத்துட்டாங்க. ஆனா ஹீரோயின் மட்டும் சாகல ஏன் தெரியுமா?ஏன்னா ஹீரோயின் "செம கட்ட"

said...

வாங்க ஆசாத்,
எனது தகவல்களில் தவறு இருப்பின் மன்னிக்கவும் !
நமது நடிகர் சத்தியராஜ் அடிக்கடி எம்.ஜி.யார் கொடுத்த கர்லாக்கட்டை என பேட்டியளிப்பதைப் படித்டிருக்கிறேன்.அதனால் ஏதாவது படத்தில் உபயோகித்திருப்பாரோ என எண்ணி எழுதிவிட்டேன்.தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ! எம்ஜியார் ரசிகர்கள் மன்னிப்பீர்களாக.

said...

வாங்க வாங்க கண்ணன்,
அடடா அதான் காரணமா?

நம்ம பார்திபன் அந்த சீனைப்பார்த்தால் என்ன கவிதை எழுதியிருப்பார் தெரியுமா?

ஒரு
கட்டையே
கட்டையில்
மிதக்கிறதே!!

said...

ஹஹஹா...... ஒரே நகைச்சுவையா இருக்கு....

said...

சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க ப்ளீஸ்!

said...

திம்ஸுக்கட்டை

இதுவும் ஒருவகையில் நாட்டுக்கட்டையே! சங்க காலத்தில் இருந்து அஃதாவது கற்காலத்திலிருந்து, தற்காலம் வரை "சம்மி" "சம"ப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றது. கர்லாக்கட்டைக்கு எதிராக இது ஒல்லியாக ஆரம்பித்து அடிப்பாகத்தில் வேண்டிய வெயிட் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக எந்த ஒரு பள்ளத்தையும் நிரப்பிய பின் திம்சுக்கட்டையை வைத்து அடித்து பரப்பை சமப்படுத்துவார்கள்.

ஆதாரம்: குசும்பன் குறிப்புகள் (19:98 dated 2/3/23)
:-)

said...

என்ன இங்க என் பேரு அடிபடுது! கூப்பிட்டிகினியாப்பா!

//சில சமயங்களில் இது தகராறு செய்யும் கணவனையோ அல்லது நாய்களையோ விரட்ட மனைவியரால் இன்றும் பயன்படுத்தப்படும் உபயோமான வஸ்துவாக திகழ்கிறது//

ம். அண்ணனுக்கு அனுபவம் ஜாஸ்திதான் போல!

said...

நம்ம ஆளு நயன்தாரா படம் போட்டதுக்கே உனக்கு 100+ பின்னூட்டம் போடனும் தலை. ஹி.ஹி.


(எங்க மீதி 99 ன்னு பார்க்கறியா? தெரியும்ல நாமல்லாம் ஒரு பின்னூட்டம் போட்டா.... ம்ம்.. அது.)

ஆமா சும்மா போற பார்த்திபனை ஏன் இழுக்கறே? வந்துறப் போறான்!


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

http://jollupet.blogspot.com/2006/03/blog-post.html

//ஆனால், கர்லாக்கட்டை காட்சியை எதிலும் பார்த்ததாக நினைவில்லை. //

//நமது நடிகர் சத்தியராஜ் அடிக்கடி எம்.ஜி.யார் கொடுத்த கர்லாக்கட்டை என பேட்டியளிப்பதைப் படித்டிருக்கிறேன்.அதனால் ஏதாவது படத்தில் உபயோகித்திருப்பாரோ என எண்ணி எழுதிவிட்டேன்//

ஆசாத் & ஜொள்ளுப் பாண்டி,
அந்த எம்.ஜி.ஆர் கொடுத்த கர்லாக்கட்டையை சத்யராஜ் செவாலியே சிவாஜி அவர்களுடன் இணைந்து நடித்த புதியவானம் என்ற திரைப்படத்தில் பயன்படுத்துவார்.


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

:-)

said...

வாங்கண்ணா குசும்பன் !
தெய்வமுங்க நீங்க ! என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு தெளிவு ! அண்ணா என அறிவுக்கண்ணைத் தெரந்துட்டீங்க ! இது தான் திமிசுக்கட்டையா ? நம்ம சினிமா பாட்டுல வேற அர்த்தம் சொன்ன மாதிரி இருந்துச்சே ! அண்ணா உங்களை ஒரு கேள்வி கேக்கலாமா ?

நாட்டுக்கட்டைன்னா எண்னண்ணா??

said...

அட யாரது ? பார்திபனா? அண்ணா உங்களைச்சொல்லலே ! நான் சொன்னது நடிகர் பார்திபனுங்கோ!

என்னது அனுபவமா? எனக்கா? இன்னும் மொளைக்கவே இல்லே கல்யாணமா? ஹஹ்ஹாஆஆ நல்ல ஜோக்குபா !

said...

ஏனுங்க நாட்டுக் கட்டை பத்தி எழுதல?

said...

சிபியண்ணே வாங்க!
ஓ ஓ நீங்க நயன்ந்தாரா ரசிகர் மன்றத்தலைங்கரதை மறந்தே போய்ட்டேன்.:-)) என்ஜாய்!

இப்படி ஒரு தகவல் களஞ்சியா இருக்கீங்களே !! எப்படியோ எம்.ஜி.யாரோட அவரது கர்லாக்கட்டை நடிக்காட்டியும் சத்யராஜோடவாச்சும் நடிச்சுதே.

said...

வாங்க முத்து நீங்கள் என் சொத்து !

said...

//சிபியண்ணே வாங்க!
ஓ ஓ நீங்க நயன்ந்தாரா ரசிகர் மன்றத்தலைங்கரதை மறந்தே போய்ட்டேன்.:-)) என்ஜாய்!//

இப்பதான் கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள குடும்ப்த்துல குழப்பம் பண்ணிருவீங்களே

said...

வாங்கண்ணா இளா !
நாட்டுக்கட்டையாஆஆ? அப்புறம் என்னைய 'கட்டைல போறவனே'ன்னு தாய்க்குலங்களெல்லாம் உதைக்க வந்துட்டாங்கன்னா என்ன பண்றது?
சரி பார்க்கலாம் ! நாட்டுகட்டையப் பத்தி எழுத ஒரு சந்தர்ப்பம் கெடைக்காமயா பூடும்?

said...

இளா
குடும்பத்துல குழப்பமா ? நான் அப்படியெல்லாம் செய்வேனா? அப்படியே வந்தாலும் சங்கத்துல பிராது கொடுதுடுங்க! தல வந்து பைசல் பண்ணீடும் ! ஓகேவா?

said...

ஜொள்ளுப்பாண்டியரே!

நாட்டுக்கட்டை என்பது "பொது"வாக மற்ற கட்டைகளோடு ஒப்பீடும் பொழுது கொஞ்சம் கரடு முரடாக இருக்கும். அஃதாவது "அழகு"க்காக வளர்க்கப்படும் "ஒல்லிபிச்சான்" கட்டைகள் போலன்றி, "தளதள"வென்று காணப்படும். இக்கட்டைகளைக் கொண்டு "பம்பரம்" போன்றவை செய்து "சுற்றலாம்". கிராமத்து செண்டிமெண்ட்களை பூர்த்தி செய்வது இவ்வகை நாட்டுக்கட்டைகளே. சிலசமயம் நாட்டுக்கட்டைகளாக பொருந்தாத கட்டைகளைக் காட்டினாலும் அவை மக்களிடம் எடுபடுவதில்லை.

Ref: Kusumbarus (Page 987: Word: Nattukkattai)

மேலதிக விபரங்களுக்கு மயில் போடவும். :-)

said...

// ஆதாரம்: குசும்பன் குறிப்புகள் (19:98 dated 2/3/23) //

விட்டுப்போன குறிப்பு:

நன்கு உபயோகப்படுத்தப்பட்ட பிறகு இடைப் பாகம் )( போல இருக்கும்
:-)))

said...

குசும்பு தலைவரே!
கலக்கீட்டீங்கண்ணா!

// இக்கட்டைகளைக் கொண்டு "பம்பரம்" போன்றவை செய்து "சுற்றலாம்". //

"இக்கட்டைகளின் மீது" என்று வந்திருக்க வேண்டுமோ?? :-))

மொத்தத்தில் அண்ணன் குசும்பனின் தெளிவுரை கோனார் தெளிவுரையை விஞ்சிவிட்டது என்றால் அது மிகையாகாது.

சந்தோஷமாக இப்படி கூச்சலிடத்தோன்றுகிறது

" மனிதர் உணர்து கொள்ள இது
சாதா கட்டை அல்ல அல்ல அல்ல!
அதையும் தாண்டி
நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை "(echo fading )

said...

வாங்க லதா வாங்க !
பேட்டைக்குள் முதன்முறையாக வந்திருக்கும் தானையத்தலைவி லதா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். (விசில் சத்தம் கேக்குதா?)

லதா நீங்க அனேகமா biology studentஆ? திமிசுக்கட்டைன்னா எப்படியிருக்கும்னு படம்போட்டு விளக்கியிருக்கீங்களே! என் கண்ணுல ஆனந்தக்கண்ணீர் வருது ! பாண்டியோட சிற்றறிவுக்கு புரியர மாதிரி விளக்கமளித்த லதாவுக்கு ஒரு
" ஓ " போடுங்கமா !!

அப்பப்போ வந்து விளக்கத்த அள்ளித்தந்துட்டு போங்க !

said...

//இடைப் பாகம் )( போல இருக்கும்//

லதா மேடம் கலக்கிப்புட்டீங்க போங்க ;-)

said...

பாண்டிய மன்னருக்கு இன்னமும் சந்தேகம் ஏதுமிருந்தால் அடியேனை அணுகவும். பொற்காசுகள் எனக்குத் தேவையில்லை :-)

said...

அண்ணா குசும்பண்ணா!
நெசமாலுமே உங்களுக்கு குசும்பு ஜாஸ்திங்கண்ணா! சந்தேகம்னாலும் சந்தேகம்னாலும் அண்ணனையே கேட்டுக்கறேன் :-))

said...

திமிசுக்கட்டை என்பது கொததனார்கள் உபயோகிப்பது. செவ்வக வடிவ கட்டை நீண்ட கைப்பிடியுடன் கூடியது. ம்ண் , கல் போன்றவகளை அடித்து மட்டம் பண்ண உபயோகிப்பது. அதனால் தான் குண்டானவர்களை, அவர்கள் நடந்தால் மண் புதைந்து கெட்டியாகும் என்ற அர்த்தத்தில் திமிசுக்கட்டை என்று அழைப்பதுன்டு.( உன்களுக்கு ஜோதிகா ஞாபகம் வந்தால், நான் பொறுப்பில்லை)

said...

வாங்க கிறுக்கன்,
இவ்ளோ டெக்னிகலா ஒரு விளக்கத்தை அள்ளித்தெளிச்சிருக்கீங்களே ! என்னன்னவோ ஞாபகம் வருதே !!

said...

நல்லாத்தேன் 'கட்டை' ஆராய்ச்சி பண்ணியிருக்கிறீக !!!

said...

// Divya said...
நல்லாத்தேன் 'கட்டை' ஆராய்ச்சி பண்ணியிருக்கிறீக !!!//

:))) வாங்க திவ்யா :)))
உங்க ரேஞ்சுக்கு இல்லீனாலும் ஏதோ எங்க ரேஞ்சுக்கு பண்ணினோம்... நீங்க சொன்ன சரியாத்தேன் இருக்கும் .. :)))))