Friday, March 10, 2006

வருத்தப் படாத வாலிபர் சங்கம் -Cheers !!!


நாக்கு தவறுனாலும் வாக்கு தவறமாட்டான் இந்த ஜொள்ளுப்பாண்டி ! பாண்டியன் ட்ரீட்டுன்னா சும்மாவா ? எல்லோரையும் குஷிப்படுத்த வேண்டாம்?

பல இன்னல்களைத் தாண்டி திமுக கூட்டணி மாதிரி ஒரு ஒப்பந்துக்கு வந்திருக்கு! வைகோ மாதிரி கோச்சுகிட்டு போன அண்ணன் சிபி ஒருவழியா அறிக்கை விட்டு சங்கத்துலதான் இருக்கேன்னு சொல்லிபுட்டாரு ( எத்தனி நாளைக்கண்ணே ?:) சரி இனிமே என்ன? கலகம் முடிஞ்சு ஜாலிதான் !! வாங்க வாங்க வெட்கப்படாதீங்க வருத்தப் படாதீங்க ! கலக்கி அடிங்க இல்ல ராவா அடிங்க.

அண்ணன் சிபிகிட்ட கட்டிங் விட்டுட்டு போங்கன்னு வாக்கு கொடுத்துட்டேன். அதுக்கான ஏற்பாடு செய்யரதுக்குள்ள அண்ணன் நம்ம தொகுதிக்கு விசிட் அடிச்சுட்டு கடுப்போட போய்ட்டாரு. போய் சும்மா இல்ல! என்னைய நல்ல வறுத்தெடுத்துடாரு.என்ன சிபி அண்ணே அவசரப்பட்டா எப்படி? சங்கத்து உறுப்பினர் எல்லாம் வந்து தாராளமா ஊத்திக்கிங்க !


சரக்கு வச்சுருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
வறுத்த கோழி
மொளகு போட்டு
பொறிச்சு வச்சிருக்கேன் !!!

சரக்கு அடிக்காதவங்களுக்குன்னெ இந்த பால் புட்டி. எடுத்துகிட்டு போய் ஒரு ஓரமா ஒக்காந்துக்குங்க கண்ணுகளா !! பசங்கெல்லாம் மப்பும் மந்தாரமுமா இருப்பாங்க கண்டுக்காதீங்க என்ன?

8 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

நமக்கு, கைப்ப்க்கெல்லாம் பால் புட்டியே போதும்(அட கரெக்டா ரெண்டே ரெண்டு இருக்கு)! தொட்டுக்க மட்டும் சுர்ருன்னு கொஞ்சம் ஊறுகா குடுத்துடு.

//வறுத்த கோழி//
பறவைக் காய்ச்சல் நேரத்துல
சங்கத்துல மெயின் பார்ட்டிக்கெல்லாம் சிக்கன் குடுத்து தீர்த்துட்டா அடுத்த பொறுப்புக்கு தயாராய்டலாம்னு பார்த்தியா? நடக்காது அப்பூ!


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

வாங் வாங் சிபியண்ணே !
( கொஞ்சம் மப்பு அதான் ) என்னாது நாமக்கல்லுல இருந்துகிட்டு கோழிக்காய்ச்சல்னு சொல்லி பண்ணை வச்சிருக்கிரவங்க கிட்ட சொல்லிபுடாதீகப்பு.ஏற்கனவே ஒருத்தர் sms அனுப்புனாருன்னு உள்ள தள்ளிட்டாங்க!

ச்சே ச்சே நமக்கு தலைவர் பதவியெல்லாம் சரிப்பட்டு வராது. நம்க்கெதுக்கு பொறுப்பு? அப்புறம் ஏதவது பிரச்சனையின்னா ஜாமீன் எடுக்கறது யாரு ? நீங்கதான் :)

பாலும் ஊறுகாயுமா? சந்தேகமா இருக்கே !! பாலுடன் கள்ளா சிபிண்ணே ? பெரிய ஆளுதான். சரி சரி ரெண்டு மொந்தை போதுமா?

said...

//சங்கத்து உறுப்பினர் எல்லாம் வந்து தாராளமா ஊத்திக்கிங்க !//

ஊத்திக்கிட்டாச்சேய்...!

ம்... சரக்கு சூ...ப்பர்!!

said...

வாங்க வாங்க ஞான்ஸண்ணே!
அப்பாடி சரக்கு சூப்பர்ன்னு சொல்லி என் கண்ணுல ஆனந்த கண்ணீர் வர வச்சிட்டீங்களே !!

அண்ணே எங்கண்ணே மத்தவங்க எல்லாம். பார்ட்டிகு வந்துட்டு சொல்லிகாக கொள்ளாம போய்ட்டாங்களா இல்ல இன்னும் தெளியாம மப்பும் மந்தாரமா இருக்காங்களா? ஊட்டுக்குக் தெரிஞ்சா ஊடுகட்டி உதைப்பாங்கன்னு பயமா? மக்கா இப்படி பொலம்ப வச்சுட்டீங்களே!

said...

அடடா இந்த வாலிப பசங்க தொல்லை ஜாஸ்த்தியாயிடுச்சே ! ஏம்பா இப்படி பண்றீங்க?

said...

என்னங்க அனானி இதெல்லம் கண்டுகாம ஒதுங்கிப் போங்களேன் ப்ளீஸ் !

said...

Paandi...... Paal Bottle,Side dish
llamm Thelivaa Theriyuthu.
Sarakku mattum sariyavae theriya Mattaekuthappa.( Earganavae SomaPaanam,SuraPaanam Saapittu mapula vantha eppadi theriyumnu Kaekuriyaa? ).Aduthaa Partykku ella Sarakkayum Jil Jil Jigar Thandaavaa Periya Agalamaana Andaala Mix Panni Vachiruppa.
Dubai Raasa.

said...

Thambi Jollu Paandi.......
Sani,Gayiru, Thingal office Vidumurai enbathal எலெக்சன் Dutyl busy Aagi Thagavalae illaama Poittiyaa ?.

Inru Kaalai Tamil Manathil Nanbar Kaaka Namathu Sangam kurithu Pala Santhaegangal elupi Vivaramaana vellai Arikkai Kaettirunthaar. Kavanithaayaaaa?.Naan ValaiGuda kilai Sarpil Earganavae Avarukku Pathil eluthi ullaen. Thalimai Sangam Sarpil Neeyum oru Arikkai vida Vaandum enpathu engal Aajai.

Va.Vaa.Sa.Va.Ki.P.C.Dubai Raja.