Friday, April 07, 2006

நாட்டுக்கட்டை


முன்னுரை :

ஒப்பனிங்கில் திரையில் ஒரு முகம்தெரிகிறது. அந்த முகம் அப்படியே zoom செய்யப்பட்டு வாய்மட்டும் closeupபில் காட்டப்படுகிறது. கர்சீப்பால் வழியும் ஜொள்ளைத்துடைத்துக் கொண்டே பேசுகிறார் ஜொள்ளு பாண்டி. அப்படியே பாரதிராஜாவின் குரலை மட்டும் எடுத்துக்கொண்டு பின்வருவனவற்றை வாசிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.


என் இனிய தமிழ் மக்களே! கிரமத்துக் கட்டைகளையும் இளம் குட்டிகளையும் கிழங்கட்டைகளையும் கண்டு ஜொள்ளி வந்த இந்த பாண்டியராசா இதோ உங்கள் முன் முதன் முறையாக நாட்டுக்கட்டையைப் பற்றிய என் ஆராய்ச்சியை கூற என் படை பரிவாரத்தோடு வந்திருக்கிறேன். களத்துமேடு , கம்மாக்கரையென பல இடங்களில் அலைந்து திரிந்து, உருண்டு புரண்டு இத்தகவல்களைச் சேகரிப்பதற்குள் என் தாவு தீர்ந்துவிட்டடென்றால் அது மிகையாது ! நாட்டுக்கட்டைகளைப் பற்றிய என் பதிவினை உங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

இந்தப் பதிவின் நிறையறிந்து குறைகளைந்து உங்கள் முன் விளக்கம் சொல்லும் நேரத்தில் இந்தப் பதிவினை எழுத எனக்கு தார்மீக ஆதரவும் தூண்டலும் தந்த என் இனிய நண்பர் அண்ணன் இளா அவர்களுக்கு என் நன்றிகள் பல,

“ஏங்க நாட்டுக்கடையப் பத்தி எழுதலை ? “ என்று நண்பர் இளா வின் கேள்வி என் இதயத்தில் அம்புபோல் தைத்தது ! ஐயகோ இது என்ன சோதனை ! இப்படி ஒரு சந்தேகத்தோடு நண்பர் இருக்கலாமா? இது என்ன தமிழுக்கு வந்த சோதனை ! இவரின் சந்தேகத்தை போக்குவது பாண்டியனின் கடமையல்லவா ? என்னை நானே ஜொள்ளிக்கேட்ட பொழுது உதித்ததுதான் இந்த “ நாட்டுக்கட்டை !


நாட்டுக்கட்டை ஆம் நாட்டுக்கட்டை. இதற்கு முன்முன் பதிவில் வெறும் கட்டைகளை மட்டும் அறிமுகப் படுத்திய பாண்டிய ராசா இப்பொழுது “நாட்டுக்கட்டை” யைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்ட தகவல்களை கூற உங்கள் முன் வந்திருக்கிறேன். இந்த வீர ஜொள் பயணத்தில் இத்தனை நாளும் என்னுடன் வந்து என் அட்டகாசங்களை சகித்துக் கொண்டு இப்பதிவினை வாசித்துக்கொண்டிருக்கும் ஜொள் ரசிகப் பெருமக்களுக்கு என் ஜொள்ளுகள் பல!

இந்தப் பூமியை தன் பூஞ்சிறகால் வருடிவிட்டுப் போகும் தென்றலைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் உணர்ந்திருப்பீர்கள்.ஆனால் நீங்கள் கடந்து செல்லும் தடங்களில் தென்படும் கட்டைகளைப் தவறவிட்டிருக்க மாட்டீர்கள் ! ஆம் அக்கட்டைகள் நாடுக்கட்டைகளே ! “ டேய் கட்டையிலே போறவனே ! “ என நீங்கள் திட்டுவது என் காதினில் இன்பத்தேன் போல பாயவேண்டுமெனில் “நட்டுக்கட்டையில போறவனே !”னு திட்டுங்கள்.

இந்தக் கட்டையின் களம் அறிந்து காலம் உணர்ந்து என் உணர்வினை எழுத்துக்களால் வடித்திருக்கிறேன்னென்றால் அது மிகையாகாது !

திமிசுக்கட்டையால் செய்த தேரில் ஏறி உருட்டுக்கட்டையின் துணையுடன் சில கர்லாக்கட்டை சுற்றும் வீரர்களையும் துணைக்கழைத்துக்கொண்டு நாட்டுக்கட்டையெனும் காவியம் படைக்க உங்கள் முன் வந்திருக்கிறான் இந்த ஜொள்ளுப் பாண்டிய ராசா !

சரி சரி பில்டப் ரொம்ப கொடுத்தாச்சு எங்கடா சப்ஜெக்ட்டுன்னு நீங்க கதர்றது கேக்குது,.அப்படியே கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ் !

நாட்டுக் கட்டை ஆம் நாட்டுக்கட்டை ! கால காலமாக நம் வாசல் வரை வந்து செல்லும் ஊர்நாட்டுக் கட்டைகளை அறிந்திருக்கிறீர்களா? இதைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே நம் புலவர்களின் காலம்வென்ற காவியக் கவிதைகளை நாம் சுவாசிக்கும் திரைப்பாடல்களில் அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டைளைப்போல சிதறிக்கிடக்கின்றன. இதைப் பற்றி நம் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் சினிமாப் பாடலில் ஒரு கவிஞர் இவ்வாரு அழகாக புனைந்திருக்கிறார். தலைவியைப் பார்த்து மையல் கொண்ட தலைவன் பாடுகிறான் பாருங்களேன் என்ன ஒரு சிந்தனை !

“ கட்டையினா கட்டையிது
கடைஞ்செடுத்த நாட்டுக்கட்டை டோய்யா
அடப் போய்யா “

இதைப் பார்க்கும் பொழுது நமக்குத் தோன்றுவது என்ன? நாட்டுக் கட்டையைக் கடைய முடியுமா? நமக்கு தெரிந்ததெல்லாம் தேக்கு, ரோஸ் மரம் தான் கடைய ஏற்றது.ஆனால் இங்கே நம் சமகாலப் புலவர் ( பெயர் தெரியவில்லை ) ஒரு அருமையான சிந்தனையை விஞ்ஞானப் பூர்வமாக விதைத்திருக்கிறார். ஒருவேளை நாட்டுக் கட்டைகள் கடைந்த பிறகு பெயரிடப்படுமா? இல்லை அவை கடையப்பட்டே விளைகிறதா? டமில் ஆர்வலர்கள் விளக்கங்களை தலைவணங்கி வரவேற்கிறேன்.

சரி இக்காலத்தில் தான் இப்படி சங்க காலங்களில் நாட்டுக்கட்டை புலவர்களை எங்ஙனம் பாதித்திருக்கிறது எனபதற்கு அய்யன் வள்ளுவர் கொடுத்திருக்கும் குரலினைப் பாருங்களேன்.

“ உள்ளக் களித்தலும்காண மகிழ்தலும் கள்ளுக்குஇல்
நாட்டுக் கட்டைக்கு உண்டு “

ஆஹா ஆஹா என்ன ஒரு குறள். பாருங்களேன் அய்யன் அய்யன் தான். பார்த்த உடனே மகிழ்ச்சியளிப்பதும் உள்ளத்தில் கிளர்ச்சியளிப்பதும் நாம் அடிக்கும் சரக்கினுக்குக் கூட கிடையாது ஆனால் பார்க்கும் நாட்டுக்கட்டைக்கு உண்டு !
அனுபவித்து எழுதியிருக்கிரார். இதன் மூலம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாட்டுக்கட்டைகள் பலரைப் பலவகைகளில் பதம் பார்த்திருப்பதை உணரமுடிகிறது. ஆனான பட்ட அய்யனே அப்படியென்றால் கேவலம் ஜொள்ளு பாண்டிய ராசா எந்த மூலைக்கு?

ஷாட் ஓகே. கட்.

12 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எமது குழப்பத்தை தெளிவு படுத்திய பாண்டிய தருமியே பிடியும் 1000 பொற்காசுகள்

said...

வாங்கண்ணா இளா
கொடுங்க கொடுங்க 1000 பொற்காசா !! ஆஹா ஆஹா என்ன ஒரு பெரிய மனசு உங்களுக்கு !

said...

ஐயா ஜொள்ளு பாண்டி ராசா! பாட்டில்லாம படமா! நான் உங்க படத்துல ஒரு பாட்டாவது எழுதறேனே!

நயந்தாராதேனே ஹீரோயின்! சிட்சுவேஷனையும் கற்பனை பண்ணிட்டேன்!

நம்ம ஜொள்ளு பாண்டிதான் ஹீரோ! (சேரனே நடிக்கும் போது உங்களுக்கென்ன குறச்சல் மகராசா!) ஆஹா! சான்ஸ் குடுத்திட்டீங்க போலிருக்கே!

ஜொல்லு பாண்டி busல பயணம் செய்யராரு.அப்ப முன்ன ஒரு figure.அட நம்ம ஹீரோயிந்தான். ஹீரோ மனசுக்குள்ள ஒரு பாட்டு பாடராரு. பின்ன! Busல உறக்க பாடினா சில்லர collect ஆயிடுமில்லே!

" நாட்டு கட்ட திரும்புமா
என் சீட்ட நெருங்குமா
ஆத்தாடி! மனசுக்குள்ள கூத்தாடி
ஜொள்ளுதான் அரும்புமா!
இல்ல
இதயம்தான் நொறுங்குமா!

பாட்டு எப்படி! title போடும்போது மறக்காம 'கவிப்பேயரசு' அடச்சே! கவிப்பேரரசுன்னு பட்டம் போட்டுடுங்கண்ணே!

said...

அண்ணன் கவிப்பேரரசு ஸ்ரீதர் அவர்களே ! தங்கள் கவிதையை மெச்சினோம் ! தங்கள் பேனாவிற்கு மையூற்றி எழுதுகிறீர்களா இல்லை ஜொள்ளூற்றி எழுதுகிறீர்களா ? கவிதை தாண்டவமாடுகிறது !!

ஆகா ஸ்ரீதர் கலக்குறீங்களே .நான் ஹீரோவா ? வேண்டாம்ணே மக்கள் பொழச்சுப்போகட்டும்.ஆனா பாட்டுக்கு ஸ்ரீதர் தான் முடிவு பண்ணிட்டேன் ! பிண்ணியெடுங்க !

said...

பாண்டியரே,

கிளாப் பாய் வேலைக்கு என்னைய போட்டுங்க. நான் நல்லா "கிளாப்" அடிப்பேங்ணா...

said...

வாங்க குசும்பண்ணா !
என்னாது நீங்க போய் 'க்ளாப்' அடிக்கலாமா? நீங்க 'தலை' அது என்னைய மாதிரி 'வால்'லோட வேலைங்கண்ணா ! வாலிருக்க தலை க்ளாப் அடிக்கலாமா? :))

said...

hi nhi

said...

வங்கண்ணா ஹமீத் ;-))

said...

பாண்டி படத்தை பாத்துப்போடுப்பா தமிழ்மணத்துல் சிவப்பு விளக்கு போட்டுட போறாங்க.

said...

அடடா வாங்க சந்தோஷ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க ! இந்தப்படத்துக்கே இப்படி சொல்லிட்டீங்க? அப்படி ஒன்னும் ஆபாசமா இருக்கற மாதிரி தெரியலயே!

நான் போடுற படத்திலே கவர்ச்சி இருக்கும்ண்ணே ஆனா ஆபாசம் இருக்காது ! ;)

இப்போ சொல்லுங்கோ இந்தப்படம் கவர்ச்சியா? ஆபாசமா?

said...

கடைசிவரைக்கும் நாட்டுக்கட்டைனா என்னனே நீங்க சொல்லலீங்க பாண்டியண்ணே...
சங்ககாலம், வள்ளுவர்ன்னு ஏதேதோ கதை அளந்துட்டு அப்பீட்டா......ஒழுங்கு மருவாதையா நாட்டுக்கட்டைனா என்ன?, திம்சு கட்டைனா என்ன? அப்படின்னு விபரமா பதிவு போடுங்க!!

said...

// Divya said...
கடைசிவரைக்கும் நாட்டுக்கட்டைனா என்னனே நீங்க சொல்லலீங்க பாண்டியண்ணே...
சங்ககாலம், வள்ளுவர்ன்னு ஏதேதோ கதை அளந்துட்டு அப்பீட்டா......ஒழுங்கு மருவாதையா நாட்டுக்கட்டைனா என்ன?, திம்சு கட்டைனா என்ன? அப்படின்னு விபரமா பதிவு போடுங்க!!//

:))) hahhaha வாங்கம்மணி திவ்யா :))
இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு..?? அப்போ திரும்ப விளக்க்க்க்க்கமா ஒரு பதிவு போட்டுடலாம் யாரும் வெளக்கமாற எடுத்துட்டு வந்தா நீங்க சமாளிப்பீயளா சொல்லுங்க..?? ! ;)))))))