Wednesday, April 19, 2006

தேர்தல் வாக்குறுதி & இறுதி எச்சரிக்கை


தேர்தல் பணிகள் “முன்னால்” அழைத்தாலும் கழகப்பணிகள் “பின்னால்” அழைத்ததால் எம் தலைவன் கைப்பு மேற்கண்ட பணிகளில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியிருப்பதால் மிச்சமிருக்கும் கண்மணிகளோடு சங்கப்பணிகள் சீராகசென்றுகொண்டிருக்கிறன என்பதனை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.


சங்கத்துப் பெருசுக எல்லாம் கூட்டணி கூடா அணின்னு தொகுதிப்பங்கீட்டுல பிஸியா இருக்கறாங்க ! நமக்குத்தான் ‘கன்யா” குமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதிய ஒதுக்கிட்டாங்களே ! தவிர தேர்தல் செலவுக்குன்னு டாலரும் ரூபாயுமா வந்து குவியப்போகுது ! எனக்கென்ன கவலை. ( பழனியில இருந்து முருகன் டாலர்தான் வரப்போகுது போல ! )

தேர்தல்ன்னு வந்தா வாக்குறுதி முக்கியமில்லையா? அதான் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மாதிரி வ.வா.ச சார்பில் முதன்முதலாக நான் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கிறேன்.

1. தொகுதிவாழ் இளசுகள் அனைவருக்கும் இலவச ஜீன்ஸ் , T-shirt ( இரு பாலருக்கும் ) மகளிருக்கு ஸ்பெஷலாக Levis low rise Jeans . இதற்காக Levis Jeans கம்பெனியுடன் பேச்சுவார்த்தையை கழக கண்மணி சந்தோஷ் மேற்கொண்டு வருகிறார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

2. தொகுதிவாழ் பெரிசுகளுக்கு இலவச பெர்முடாஸ் மட்டும் பேரிளம்பெண்களுக்கு புத்தம் புதிய ராசாத்தி நைட்டிகள் !! ( நைட்டி கம்பெனிகாரங்க எல்லாம் அப்புறமா என்னைய வந்து பாருங்கப்பு )

3. கிலோ ரூ.2 க்கு ஒருகிலோ முந்திரிப்பருப்பு ( எத்தனி காலத்துக்குதான் நம்ம பசங்க கடலையக் கட்டி மாரடிச்சுகிட்டு இருப்பாங்க சொல்லுங்க ?)

4. பிஸ்சாவும் பர்கரும் ஏன் சென்னை பசங்களுக்குன்னு நேர்ந்து விட்டுருக்கா என்ன? என் தொகுதியிலும் மக்களுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக Cofee Bar மற்றும் பிட்ஸா கார்னர் வைக்க ஆவணசெய்யப்படும் ! ( ஏன் ஒதுக்குப்புறமான்னு பார்க்கிறீங்களா யாருக்கும் யாரலயும் தொல்லை வந்துடக்கூடாதப்பு ! )

5. சங்கத்து சார்பில் தொடைதட்டி ( Laptop ) தரலாமன்னு யோசிச்சதுல கொடுத்தா நிதி நிலைமை Bore போட்டு 1000 அடி ஆழத்துக்கு போகக்கூடிய அபாயம் இருப்பதால் அனைவரையும் ஏமாற்ற விரும்பாத காரணத்தாலும் Lap-Tops ( அதாங்க பெர்முடாஸு ஜீன்சு நைட்டி ) உடனடியாக வீடுதேடி வரும்ங்கறதை அறிவிச்சிக்கிறேன்.

5. தினமும் காலையில் சுடச்சுட உங்கள் இல்லம் தேடிவரும் “இட்லி வடை” ( சங்கத்தின் சின்னமும் அதானே ! ஒரே கல்லில் ரெண்டு மாங்கா ! )
( This programme is brought to you by Bostan Bala )


சரி இப்போதைக்கு போதும் இதுக்கு வரவேற்பு எப்படியிருக்குங்கறதைப் பார்ர்துட்டு சொல்றேன். வேற ஏதும் வேணுமா கண்ணுகளா கூச்சப்படாம கேளுங்க நிறைவேத்திருவோம் !


எச்சரிக்கை :

வ.வா.ச வின் வளர்ச்சியைக்கண்டு பொறுக்காத சிலர் ஏதோ ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர்கள் கட்சி வெற்றிக்கொடி கட்டிவிட்டதாக ஊளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மை துக்கடா கட்சியென்றும் நேற்று முளைத்த காளான் என்றும் கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விழைகிறேன். நீங்கள் காங்கிரஸ் கட்சி போல பெரிதாக இருந்தாலும் எங்கள் சங்கம் வளர்ந்த தங்கத்தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரியத்தில் ஊறித் திழைத்திருக்கும் இம்மண்ணில் வசிக்கும் எங்களின் ஆதவில்லாமல் ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது என்பதனை என் தலைவன் கைபுவின் மீது ஆணையாகக் கூறிக்கொள்கிறேன். கொடுக்கற சீட்டை சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு தேர்தல் பணிகளுக்காக நிதி வசூல் செய்துகொடுத்துவிட்டு கமுக்கமாக இருங்கள் என அன்பாக எச்சரிக்கிறேன்.

தலைவன் கைப்பூ இல்லா நேரத்தில் அல்லும் பகலும் அயராது சங்கப்பணியாற்றி அறிக்கைமேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் எங்கள் அன்பு அண்ணன் தேவ் அவர்களை சீண்டிப்பார்க்க நினைப்பவர்கள் வீடுதேடி வருவதற்கு பொருட்களோடு ஆட்டோ காத்துகொண்டிருக்கிறன எனபதனையும் சூசகமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்பு இது யுத்த பூமியைய்யா! ஒரே ரணகளமாயிருக்கும். பார்த்து வாயை விடுங்கப்பு தெர்தா?

22 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எல்லா சரிதான் பாண்டி, சந்தோஷ் யாரு? லிங்கை சரியா குடுங்க..

said...

வாங்க பொன்ஸக்கா
சந்தோஷ் நம்ம தீவிர சங்கத்து பங்காளி இல்லையென்றாலும் அவ்வப்போது நமக்காக கடமையாற்ற தவறியதில்லை.லிக்ங்க்கை சரியாகக் கொடுத்துவிட்டேன் ஓகேவா?

said...

ஜொள்ளுப்பாண்டியின் தேர்தல் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! எதிரணி போல் வழிவதைத் துடைத்துக் கொள்ள ஜெஸிகா ஆல்பா போஸ்டர் அச்சடித்த டிஷ்யூ தாள்; ஜொள்ளர்கள் எல்லாருக்கும் இலவச வீடியோ ப்ளேயர் (டெக்கு கொடுத்தா ஆச்சா என்று சவுண்ட் விட்டவுடன் காஸெட்டும் உண்டு என்று சுடச்சுட சொல்கிறார்களே)....

ஜொள்ளுப்பேட்டை டெபாஸிட்டையாவது காப்பாத்துமய்யா.

said...

தம்பி ஜொள்ளுபாண்டி என் மீதும் என் கறைபடா கரங்கள் மீதும் இருக்கும் உன் நம்பிக்கைய் போற்றுகிறேன். இப்பொழுது தான் கம்பெனி உடனான பேச்சு வார்த்தை முடிந்தது. எனவே நாம் நமது இடைக்கெடுப்பை சே கணக்கெடுப்பை துவங்கலாம் என்று நினைக்கிறேன். நமக்கு நல்ல ஏரியாவா பாத்து குடுப்பா..

said...

பாண்டி பொறுமை... தம்பி உன் உணர்வு கண்டு சங்கமே ஸ்தம்பித்து நிற்கிறது... தல உன்னை நேரில கண்டு அவ்வ்வ்வ்வ்வ் என்று சவுண்ட் விட துடித்துக் கொண்டிருக்கிறார் எனபதை நீ அறிய வேண்டும்.. அந்த உன்னத தலைவனின் பொற்பாதங்களில் தேர்தல் வெற்றியை சம்ர்ப்பிக்க வேண்டியது நம் கடமை அல்லவா... அதனால் கயவர் பக்கம் மனம் செல்ல விடாதே.. மக்கள் மன்றம் நமக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் வண்ணம் செயலாற்று... கன்யா குமரி இனி வருத்தப் படாத வாலிபர்களின் தகர்க்க முடியாத கோட்டை என்னும் நிலையை உருவாக்கு... ம்ம் வென்று வா தம்பி தல உன்னை அமைச்சராக்கி அழகு பார்க்க காத்திருக்கிறார்.

said...

ஒரே டிஸ்கவுன்ட் or இலவசமா இருக்கு. சோப்பு, சீப்பு, ஷாம்பு விக்கிற மாதிரியாகிருச்சு தேர்தல்.. ஹ்ம்ம்ம்ம்ம்

said...

வாங்க பாலாண்ணே
உங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி. துடைக்க டிஷ்யூ ஓகே ஆனா அதில் பாரின் குட்டி ஜெஸிக்கா ஆல்பாவை பச்சைத்தமிழனுக்குத் தெரியுமா? நயந்தாராவையும்,நமீதாவையும் பூஜித்துக் கொண்டிருக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு அவர்களின் கனவுக்கன்னிகளை அச்சிட்டுக் கொடுத்தால் விழும் ஜொள்ளுகளும் வாக்குகளும் கனிசமாக உயரும் என்பது என் தாழ்மையான கருத்து !;)

said...

கழகபோர்வாள் தேவ் அண்ணே எனக்கு அமைச்சர் பதவியா??? ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறேன் நான். என்ன தவம் செய்தேனோ!!!
கன்யாகுமரி நம் கோட்டையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதினை கூறிக்கொள்கிறேன் ! வஞ்சிக்கோட்டை வாலிபனாய் நம் 'தல'யை வீரமுரசோடு வெற்றி வீரனாய் சந்திக்கிறேன். பிரச்சாரத்துக்கு வராம ஆப்பு வச்சிராதிங்கண்ணாவ்!

said...

வாங்க சந்தோஷ்,
சங்கம் தழைக்க வந்த நல்லவரே! வல்லவரே! ஜீன்ஸ் பேச்சுவார்த்தியினை வெறிகரமாக முடித்ததைக் கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சியுற்றேன். பேசியபடி கமிஷனை அவர்கள் சங்கத்துக்கு அளித்திவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை !

என்ன ஏரியா வேண்டும் கேள் நண்பனே ! கொணர்ந்து தருகிறேன் !

said...

தோழர் இளா சந்தனக்கட்டை கிடைக்காத விரக்தியில் பேசுகிறார் என நினக்கிறேன். கவலைப்படாதீங்கப்பு தேர்தல் முடிஞ்சதும் சந்தனக் கட்டையென்ன சந்தனக் காடே நம்மளுதுதான். கமான் களத்தில் குதிங்கண்ணா !

said...

ஜொள்ளு கட்சியின் தலைவா!

கொள்கையில்லாமல் நம் கட்சி தேர்தலில் நிற்கலாமா! இதோ அவசர கொள்கை அறிவிப்பு..

ஜில்லு ! ஜொள்ளு ! அள்ளு!

அப்படியே திறமையான ஒருத்தரை கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கலாமே!

ஹி.. ஹி.. என்னைத் தவிர யாரை நினைக்கப் போறீங்க!

அப்படியே நம்ம நயந்தாராவை உதவி கொள்கை பறுப்பு.. சாரி.. பரப்பு செயலாளராக்கிட்டீங்கன்னா வெற்றி நிச்சயம்தான்.

அப்புறம் 'ஜொள் TV' ஒண்ணு ஆரம்பிக்கலாம் அண்ணே!!

வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!

said...

வாங்க ஸ்ரீதரண்ணா ! எல்லாம் ஓகே.ஆனா நம்ம தளபதி'சிபி' ரூட் விட்டுட்டு இருக்கர நயன்ந்தாராவ உதவி கொ.ப.செ, ஆக்கச் சொல்றீகளே! கழகத்துக்குள்ளே 'கலகம்' வந்துடாது? வேற யாரையாச்சும் உங்க அசிஸ்டண்டா வச்சுக்குங்களேன் ப்ளீஸ் ! :))

said...

//அப்படியே நம்ம நயந்தாராவை உதவி கொள்கை பறுப்பு.. சாரி.. பரப்பு செயலாளராக்கிட்டீங்கன்னா வெற்றி நிச்சயம்தான்.

அப்புறம் 'ஜொள் TV' ஒண்ணு ஆரம்பிக்கலாம் அண்ணே//


ஸ்ரீதர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை தலை கைப்பு மீண்டும் தலைமையேற்கப்போகும் வரவிருக்கும் முதல் சட்ட மன்ற கூட்டத்தொடரில் முன்மொழியவிருக்கிறேன்.

said...

என்னாது!என்ன அப்பு!

என் மேலே ஒழுங்கு நடவடிக்கையா! இத்தினி நாளா நாங்க வெளிலதான் சோடா பாட்டில் வீசினோம். இப்ப சட்டசபையிலேயே வீச வெச்சுடுவீங்க போலிருக்கே!

said...

அமைதி அமைதி ஸ்ரீதரண்ணா கொஞ்சம் அமைதி ! எதுக்கு சோடாபாட்டில் எல்லாம்? நான் ஷாம்பெய்ன் வாங்கித்தாரேன்!! அதுக்கு சோடா கலக்கத்தேவையில்லை!! ;)))

said...

Paandi.. Namma Thala Vetri Kodi Katu na idamana UAE la Va.Vaa. Sankathoda Kilaiya Thirapatharku enga sidela ella earpadum Panniyaachu.Sankathin Mukkiya urupinargalana Namma Dev,Santhosh, Boston Bala,Naamakkal Sibi matrum Mukkatha Urupinargal ( Silent Members )Anivaritathum kalanthu Peasi udan TheriyaPaduthavum.illai enral ThamilNattin Jollu Pugalai Tharani engum Parappi kondirukkum Gulf Nanbargalagiya Naangal intha murai mattum.....................
( Thanithu Potieduvathaa ? illai engalai anugi ulla vera katchigal
kooda kootani vaipathaa ? enpathu
unathu Pathilil thaan ullathu Thambi Pandi ).Dubai Raja.

said...

துபாய் ராசா :)) வளைகுடா பகுதிலே சங்கத்தோட கிளைய தாராளமா திறந்துக்குங்க!! 'தல'யவே வந்து ரிப்பன் கட் பண்ண சொல்லாம் :)) இப்பவே 'தல' ரிப்பன் வெட்ட தீட்டுன அருவாளோட மூணு சக்கர வண்டியில் உக்கார்ந்துட்டார்! கூட்டணி கனவெல்லாம் மறந்துட்டு சங்கத்து பணிய நல்லா ஆத்துங்கப்பு !!!

said...

//இப்ப சட்டசபையிலேயே வீச வெச்சுடுவீங்க போலிருக்கே!//

ம்ம்ம்.. ஸ்ரீதர் சட்டசபைக்குள்ள போறதுக்கு முழுத்தகுதியும் பெற்றுவிட்டார். சங்கத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

அப்படியே மைக் பிடுங்குதல், நாற்காலி எறிதல் போன்ற பயிற்சிகளும் உள்ளன.


அசெம்ப்ளி லாங்குவேஜ் கற்றுத்தர சிறப்பு லெக்சரடர்(அதாங்க கெஸ்ட் லெக்சரர்) வேறு ஒருவர் இருக்கிறார்.
அவ்வப்போது வந்து சொல்லிக் கொடுத்துவிட்டு செல்வார்.

said...

உலகமெல்லாம் வாழும் என் இனிய தமிழ் மக்களே! ந்ம் மதிப்பிற்குறிய தலைவர் ஜொள்ளுப் பாண்டியின் அன்புக் கட்டளைக்கு இணங்கி சோடா பாட்டிலை கீழே போட்டு 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்கிற அரிய தத்துவத்திற்கு மதிப்பளித்து இன்று முதல் ஷாம்பைன் பாட்டிலை மட்டுமே கையில் எடுப்பேன் என உறுதி மொழி கூறுகிறேன்! கூடவே ஊறுகாய் பாட்டிலை வச்சுக்கலாமா தலைவா!

said...

Paandi.. Pathil kandavudan kilai Thirappu vilaa earpadugalil irangi vittom.Inru Maalai UAE naeram 6.30 Mani alavil Ulga Pugal Petra Dubai Jumeira Open Beachl Vaithu nadai Peru irrukkum VaruthaPadatha Vaalipur Sanga Valaiguda Kilai Thirappu vilaavirgu Sanka Singangal AnaiVaraiyum Varuga Varuga ena Varaverpathil Perumaiyadaiyum ungal Arumai Dubai Raasa.
Note:Namathu Sangathil inaiya Pala Arabiya Sheikugalum matrum Pala Naadugalai Cherntha Vellaikaara duraimaargalum viruppam therivithu ullathaal urupinar Cherkkai vinnappa Padivathai Vaendiya alavu anupivaikkavum.Sanga kilai Thirapu vilaa PugaiPadangal viraivil minnanjal moolam anupi vaikka Padum.
VaruthaPadatha Vaalipur Sanga Valaiguda Kilai Pothu Cheyallar Dubai Raasa.

said...

வாவ் துபாய் ராசா வளைகுடா சிங்கமே !! துபாய் ஷேக்குகளே ஷாக்காகிற மாதிரி சங்கப்பணியாத்தறதை நெனச்சி நெனச்சி ஆனந்தக்கண்ணீர் விட்டுகிட்டு இருக்கேன். கிளைய ரிப்பன் வெட்டி தெறந்துராதீங்க !! ஏதாச்சும் துப்பட்டா வெட்டி தெறந்தா இந்தப்பாண்டி நெம்ம சந்தோசப்படுவான்.:))

said...

தம்பி பாண்டி........,துப்பட்டாவின் பாரம்பர்ய பெயரான தாவணியை வெட்டி தான் வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை திறக்கப்பட்டது என்பதை தழுதழுப்புடன் தெரிவித்துகொள்கிறேன்.

அன்புடன்,
துபாய் ராஜா.
(வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை)