Friday, April 21, 2006

ப.ம.க விற்கு பகிரங்க எச்சரிக்கை !


ப.ம.க ( பச்சோந்தி மக்கள் கட்சி ) செல்வங்களே ! எனதருமை உடன் பிறவா சகோதர சகோதரிகளே ! பால்மனம் மாறாமல் உங்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மட்டும்தான் செய்யும் நம் தலைமை என மனப்பால் குடித்துக் கொண்டு ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அமர்ந்து பின்னூட்டக் கபடியாடிவரும் வலையின் மூத்த குடிகளே சிந்திப்பீர் ! நீங்கள் இருக்க வேண்டிய இடம் ப.ம.க வா?

எங்கே உங்கள் தலை ? பகிரங்கமாகச் சொல்ல முடியுமா உங்களால் ? உங்கள் தலைவரையே அருங்காட்சியகத்தில் தேடவேண்ய அவல நிலையிலிருக்கும் நீங்கள் எங்கே ? இளரத்தம் பாயும் புது வெள்ளமென பாயக்காத்திருக்கும் வீர மறவர் கூட்டமாம் வ.வா.ச எங்கே? இனியும் காத்திருக்க வேண்டுமா ? தேர்தல் போர்ப் பறைகளின் சத்தம் காதைக் கிழிப்பதுபோல் ஒலிப்பது கேட்கவில்லையா? தனியாகக் களம் சென்று கல்லடி பட வேண்டுமா ? இல்லை கூட்டு சேர்ந்து குருதி சிந்தக் காத்திருக்கும் கூட்டம் வேண்டுமா ? சிந்திப்பீர் தோழர்களே !

நிலா தேர்தல் என்றும் நில்லாத தேர்தலென்றும் வரலாற்றுக்கதைகளை பேசிப் பேசி வரும் தேர்தலை மறந்து கெக்கலிட்டுக் கொண்டு கிடைக்கும் சீட்டுகளை கோட்டை விடப்போகிறீர்களா? இல்லை சீறிவரும் காளையாம் பொங்கிவரும் கங்கையாம் கல்லடிபட்டாலும் கழகக் கண்மணிகளின் மேல் படாது தன் முதுகு கொண்டு காத்து நிற்கும் நவீன புலிகேசி அருமை அண்ணன் எங்கள் மன்னன் ‘தல’ கைபுள்ளயின் சீரிய தலைமையில் சமூகத் தொண்டாற்றி வரும் வருத்தப்படாத வாலிப சங்கத்தினரோடு ( வ.வா.ச) கூட்டணியமைத்து கொலகொலையாய் சீட்டுகளை அள்ளப் போகிறீர்களா?

அரேபிய சுல்தான்களிடமும் ருஷ்சிய ஜார் மன்னர்களிடமும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் உங்கள் நிலையை எண்ணி பரிதாபப் படுகிறோம். எங்கள் ‘தல’ இப்படி எங்களை அன்னியர்களிடம் அடிவாங்க விட்டிடுவாரா? ஓடோடி வந்து தன் புறம் காட்டி எங்களகத்தை காத்திடும் மல்கேட்டு கோமான் ! என்ன சீரழிகிறோம் நாங்கள் என்று கேட்கிறீர்களா உடன்பிறவா சகோதரர்களே? பதவிகள் அளித்தாலும் உங்களுக்குரிய மரியாதை உங்கள் கட்சியினரிடையே இருக்கிறதா? இதோ உங்களுக்காக சில சாம்பிள்கள்

அரேபிய சுல்தானாம் பினாத்தலாரின் பதிவிலிருந்து சில துளிகள் :

//ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்காமலே மூணுபக்கம் சொல்லக்கூடிய நாவன்மை படைத்த ராகவனார் போன்றோர்,

"இன்றைக்கு திங்கக்கிழமை" என்று மட்டுமே பதிவிட்டும், நூற்றுக்கு மேல் பின்னூட்டம் பெறும் திறம் கொண்ட இலவசனார் //

ஏதோ உங்களைப் புகழுவது போல் உங்களைப் பற்றி உங்களிடமே மண்ணை வாரியிரைத்திருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதிவே போதும். வேறென்ன சொல்ல? சிந்திப்பீர் செயல்படுவீர் !

ருஷ்சிய ஜார் மன்னராம் மருத்துவர் அய்யா ராமநாதன் பதிவிலிருந்து சில :
//மாறாய் நம் கட்சிக்குள்ளேயே இருக்கும் செய்நன்றி மறந்த ஓநாய்களைக் கண்டு…//

பாரீர் உடன் பிறப்பே நீ ஓநாயா? சொந்தக் கட்சியினரே ஓநாயென்றும் செய்நன்றி மறந்தவறென்றும் பேச பேச நீ எதையும் தாங்கும் இதயமாக கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமென்னா? தலைவாழை விருந்திருக்க மிச்சம் மீதி எதற்கு? பந்தி விரித்திருக்கின்றோம்.விருந்துண்ண வாரீர் வாரீர்.

சுல்தான்களும் ஜார் மன்னர்களும் உங்களின் சிந்தையறுத்து மூளையை மழுங்கடிக்க வலைவிரித்துக் காத்திருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கோலம்? வ.வா.ச என்ற சிறுதுளி பெருவெள்ளமாய் மாறும் என்பதில் துளிகூட ஐயமில்லை ! சீக்கிரமே வந்து ஐக்கியமாகுக தோழர்களே ! தலைமை தடுத்தால் தலை கொய்து விடுக ! பொருத்தது போதும் பொங்கியெழு !

உடன் பிறப்பே வா
ஓடோடி வா
பகை வெல்ல வா
பதவி வகிக்க வா
பார் புகழும் வா
நீசர்களை விட்டு வா
நேசக்கரம் கொண்டு அழைகிறோம் வா !

22 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எப்பா எவ்வளவோ பயிற்சி மைதானம் பார்த்திருக்கிறோம். பிற்கால அரசியலுக்கு பயிற்சி மைதானமாக அமைந்துள்ள தமிழ் மனத்தை எல்லோரும் போற்றுவோமாக.

அருமையான எதிர்(ரி) அறிக்கை.

ஸ்ரீதர்

said...

தம்பி.. உன் மடல் கண்டு மனம் நெகிழ்ந்திட்டேன்..

கதிரவனை நிலவு மூடினாலும்,
காரிருள் சூழ்ந்து உலகம் வாடினாலும்,
மின்னல் கண்களைப் பறித்தாலும்
இடிகள் இதயத்தைத் தகர்த்தாலும்
கடிகள் காதைக் கிழித்தாலும் (சும்மா இடிகளுக்கு மாட்சாத்தான்)
நம் கட்சி அழியாது தம்பி அழியாது..

என்னடா இந்த பச்சோந்திகளின் காட்டில் என்னை மட்டும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே என்று கலங்கி விட்டேன்.

உன் வீர முழக்கம் நம் தொண்டர்களின் தோள்களில் உரம் ஏற்றட்டும்..
எத்தனை பச்சோந்திகள் வந்தாலும்,
குன்றுமோ நமது கொற்றம்..
குறையுமோ நமது புகழ்
வெற்றிவேல்,
வீரவேல்

said...

ஸ்ரீதர், உங்க பக்கத்தை ஏன் பாக்கவே முடியலை?

said...

ஆமாம், சுரதால, ஸ்ரீதர்னு தட்டவே முடியலை :(

said...

தமிழ்மணப் பட்டி போடவில்லையா தம்பி? நமது அறிக்கைகள் ஊட்டம் பெற்று விளங்கும் போது, தமிழ்மணத்தில் வராமலேயே போய் அதனால், அந்தப் பச்சோந்திகள் கொண்டாடும்படி விடக் கூடாது...
... (அப்டியே ஊட்டிட்டாலும் )

said...

வருக தோழர் ஸ்ரீதர்! எல்லாம் நம்ம அரசியல் வியாதிகளைப் பார்ர்த்து தானே வருது :)

said...

வாருக பொன்ஸக்கா !

//என்னடா இந்த பச்சோந்திகளின் காட்டில் என்னை மட்டும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே என்று கலங்கி விட்டேன்.//

ஐயகோ அப்படி நீங்கள் இப்படி நினைக்கலாம்? ப.ம.க வினரைப்போல முதுகில் குத்தும் வீரர்களல்ல நாம் ! போர்களத்தில் உங்களை தனியே விட்டு விட மாட்டோம்! நமக்காக பல உள்குட்து வெளிகுத்துகளைத் வாங்க நம் 'தல' கபிபூ இருக்கிறார்.நாம் வெரும் களவீரர்களே விளைவுகள் 'தல' முதுகில் அல்லவா தெரியும்?! தளரவேண்டாம்.முடிந்தவரை வாள் வீசுவோம்.ப.ம.கழக கண்மனிகளின் ஞானக்கண்களைத் திறப்போம்!!

said...

பொன்ஸக்கா தமிழ்மணப் பட்டி போட்டுவிட்டேன் !!!

said...

வா வா என்று இன்று வாய் விட்டு அழைப்பவர்கள் அன்று நான் ஆறு சீட்டு கேட்ட பொழுதும்...அது நடக்காது என்ற நிலையில் ஒன்பதே சீட்டுகள் மட்டும் பெற்றுக் கொண்டு சமாதானம் அடைய இருந்த நிலையிலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் எற்றுத் தள்ளி....அவர்களும் இதையே கேட்கிறார்கள் என்று எனக்கு இதயத்தில் கூட இடமளிக்க மறுத்த நிலையில் எனக்கு ஆதரவாக என்னைத் தேற்றுவதற்காக ராக-வா வா வா என்று கூடச் சொல்ல முடியாத நிலையை நீங்கள் இன்னமும் நினைத்துப் பார்க்காமல் இப்பொழுது வந்தாரை வாழவைக்கும் பமகவில் என்னை இணைத்துக் கொண்டு கழகத் தொண்டாற்றி வரும் வேளையில் எங்கள் கழகத்திற்கு எதிராக உருசிய உருக்கிற்கு எதிராக அமெரிக்கக் கொத்தனாருக்கு எதிராக கழகக் கண்மணிகளாம் அறுபதாயிரம் கோடி அடிப்படை உறுப்பினர்களைத் தேடிச் சாடி இப்படி ஒரு பதிவு போட்டிருக்கின்றீர்களே! இது நியாயமா? இது அடுக்குமா? இது முறையா? உமக்கு வாங்கித் தர வேண்டியது பொறையா? என்றெல்லாம் என்னை ஏன் கேட்க வைக்கின்றீர்கள். எல்லோரையும் மரியாதையாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எனது வாயைக் கிளறாதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறேன்.

said...

பொன்ஸ், இப்ப பாருங்க.

ஸ்ரீதர்.

ஈ-களப்பையில் மட்டும் தான் ஸ்ரீதர் முடியும், வேட்பாளர் பட்டியலில் என் பெயர் "தர்" தெரியுமா.:(((

அதனால் இந்த முறை வ.வா.ச, திருத்த முயற்சி செய்தால் வ.வா.ச க்கு தான் என் வோட்டு. "ஈ-வோட்டு" தானுங்கோ. (ஈ-வோட்டு)இதை திரிப்பவர்கள் வரவேற்கபடுகிறார்கள்

said...

பாண்டி!!! புறப்படு.. உஷாக்காவின் ஆஸ்பத்திரி எங்கே என்று கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.. வில்லென எழு தம்பி.. வில்லர்களை அழிப்போம்..

said...

அய்யா பாண்டி,

கலக்குறயே அய்யா. கழக கண்மனியே. அன்பில் அண்ணன், பெங்களூர் நாயகன் ராகவன்ஜி ய எப்படியாவது இழுத்துடுவ போலயே..

விரிவாக எழுத முயன்றாலும் முடியவில்லையப்பா

விரலு
சுளுக்கிகிச்சி :-)

நித்திரை தேவி என்னை பின்னால் அழைத்தாலும் கடமை என்னை முன்னால் இழுக்கிறது

said...

ஜீரா உங்கள் பதிலைக்கண்டு கலங்கினேன். ஐய்யகோ என்ன ஆயிற்று எம் தோழரே உமக்கு? நீரே உம்மை பமக வில் இணைத்துக் கொண்டீரா? என்ன வேதனை ! அதனால் தான் உங்கள் மதிமயங்கி அறிவு மழுங்கி மரியாதையின்றி இருப்பதை நான் சுட்டிக்காட்டியும் கூட அதனை உணராமல் பேசிகின்றீரே ! இதிலிருந்தே தெரியவில்லையா உன் வாயும் கரங்களும் கட்டப் பட்டிருக்கிறன என்று?

கோயபல்சுகளிடம் ஏமாந்துவிட்டு வெறும் அறிக்கைவிட்டே காலத்தை கடத்திவிடாமல் சீரிய தலைமையிம் கீழ் மக்கள் பணியாற்ற ஓடோடி வாராய்!!!


கட்டுகளை அறுத்திரிந்துவிட்டு வா !! உமக்காக பல தொகுதிகள் பல பகுதிகளில் உமக்கேற்ற மரியாதை கொடுக்க காத்திருக்கிறன !

கட்டுகளை அறு
தொகுதிகளே நம் எரு
காத்திருக்கிறார் நம் குரு
தூரமில்லை நம் சங்கத் தெரு!

said...

பாண்டி, வரவர, ஜொள்ளு தவிர மத்த விஷயத்திலயும் நீ கவிஞராயிட்டய்யா. கவிஞர் ஆய்ட்ட.. அடுத்த பேராசிரியர் நீதான்...

அது சரி, கோயபல்ஸ் யாரு? நம்ம கட்சியா, ப.ம.கவா?

said...

ஸ்ரீதர், உங்க பேருல அட்லீஸ்ட் தர் ஆவது இருக்கே. என் பேரு வாக்காளர் பட்டியல்லயே இல்லை. சென்னைக்குள்ளேயே வீடு மாத்தினதுல, அங்கேர்ந்து இங்க இன்னும் மாத்தித் தரமாட்டேங்கறாங்க..

Azerbaijan - எங்கங்க இருக்கு இது??

said...

Kaipponnuvin Varugai matrum therthal Arikkai aagiyavatrai thodarnthu Va.Vaa.Sangathin Kudumba Arasiyal Pokkai kandithu Namakkal Shibi Sangathai Vittu veliyeri Paa.Ma.Kavil Inaiya Iruppathaga therigirathu.

said...

யோவ் பார்த்தி
உனக்கு சிண்டு முடியரதே வேலையாப்போச்சு ! இதே பின்னூட்டத்தை காப்பியெடுத்து எங்க சங்க ஆளுக எல்லோருக்கும் அனுப்பியிருக்கே ?

பாவிகள் சாபமிட்டு
ஆவிகள் சாவதில்லை !

said...

பொன்ஸக்கா கோயபல்ஸ் சும்மா உசுப்பேத்ததான்! யாரையும் குறித்துஇல்லை !!

said...

சங்கத்தின் மூளை என இனி தம்பி பாண்டி அழைக்கப்படுவான்.... தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பார்கள் கைப்புவின் பாசமிகு தம்பி பாண்டியே காகிதப் புலிகளின் புளுகு பலூன்களில் ஊசி குத்திய வீரம் குறித்து அக்கா பொன்ஸ் தனி வெண்பாவே பாடுவார்...

said...

தேவண்ணா நான் மூளையா ? மூளையா? மூளையா?

முட்டையோட பொரிச்ச மூளைய இப்போதான் அஞ்சப்பரில் வெட்டிட்டு வாறேன் அதுகுள்ள இப்படி வேற சொல்லி உசுப்பேத்துறீங்களே !

said...

ஜொள்ளு அது எப்படிபா முட்டையோட மூளைய பொரிக்க முடியும்னு அஞ்சப்பரில் கேட்டியா... கேட்டியா... கேட்டியா...

:-)))

நீங்க யாரும் சிறிக்கலேன்னா? அதான் அந்த ஸ்மைலி

ஸ்ரீதர்

said...

வாங்க கழகக்கண்மணி ஸ்ரீதர் முட்டையப் பொரிச்சது என்னவோ கோழிதான் :))

அதைய உடைச்சி சட்டியிலே மூளையோட பொரிச்சது அஞ்சப்பர் chef ! டேஸ்ட்டு சூபரப்பு ! அஞ்சப்பர் போனா try பண்ணிப்பாருங்களேன்.