Friday, April 28, 2006

நாயுடுஹால்ஞாயித்துக் கெழமை மட்டும்தான் நான் வீட்டுல இருக்கறது. அன்னிக்கிதான் வீட்டுல பறக்கறது, நீந்தறது இல்ல நடக்கறதுகளை கொழம்புல பார்க்க முடியும். அப்படித்தான் போன ஞாயித்துக்கெழமை மதியசாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு மப்பிலே ( சாப்பிட்ட களைப்புதான் வேற ஏதுமில்லை ! சாப்பாடு கொஞ்சம் ஹெவியில்லையா?) ஒரு குட்டித் தூக்கம் போட்டுகிட்டு இருந்தேன். சாயங்காலமா அப்படியே ஏரியா ரவுண்டப் நம்ம wave length உள்ள நண்பனோட ப்ளான் பன்ணி வச்சிருந்தேன். ஆயிரம்தான் சொல்லுங்க ‘ ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே !' ரேட்டுல நடந்தா கண்கொண்டு பார்க்க ஒண்னு கூட இல்லை ! ம்ம்ம் .....

அப்படியே ஒரு நாலுமணிக்கு எந்திரிச்சா நம்ம உடன்பிறப்பு மந்தகாசப் புன்னைகையோட எதிர்ல பார்த்துக் கேட்டுச்சு

“ எனக்கு ஒரு சுரிதார் வாங்கனும் T.Nagar போகலாம் வர்ரீயா? "

“அதெல்லாம் முடியாது நான் என் friend கூட வெளிய போகப்போறேன்”

“ எப்பவும்தான் அந்த தருதலைப் பயகூடதானே சுத்தறே ! இன்னிக்கு மட்டும் வாயேன் அப்படியே முருகன் இட்லிகடையிலே சாப்பிட்டுட்டு வந்துடலாம் ! “ இது உடன்பிறவா சிஸ்டர்.

ஆஹா சாப்பாட்டு விசயத்திலே நம்ம வீக் பாயிண்டை புடிக்கறாங்களே ! ஏதோ பாச மழையிலே சொல்றாங்கன்னு நெனைக்கதீங்க.நான் ஒரு இலவச டிரைவர் அவங்களுக்கு. இல்லேன்னா ஆட்டோவில்தானே போகனும்?

‘ நீங்க பாட்டுக்கு சேலைபாக்கறேன் சுரிதார் பாக்கறேன்னு சுத்திகிட்டு இருப்பீங்க நான் என்ன பண்றது ? “

“ நாங்க கூப்டா இப்படித்தான் பேசுவே . பாக்கத்தானே போறேன் நீ பொண்டாட்டிக்கு கூஜா தூக்கரதை.அப்போ போவே பாரு. கூடப்பொறந்தவளுக்கு ஒரு உதவி செஞ்சுடாதே. “ உடன்பிறப்பு AK 47 னாக மாறி வசவு மழை பொழிய ஆரம்பித்தது ஏண்டா சொன்னோம்னு ஆகிப்போச்சு .”சரி சரி கத்தாதே கெளம்பி வர்றேன் “ கெளம்பினோம். T Nagar ல் வழக்கம்போல கே கொள்ளைன்னு கூட்டம். வண்டிக்கு பார்க்கிங் கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துபோச்சு !

சில பல கடைகளைப் பார்த்தும் உ.பி ( உடன் பிறப்பு)க்கு திருப்தி ஏற்படவில்லை. சரி கொஞ்சம் பெரிய கடையிலதான் பார்த்தா என்னன்னு நாந்தான் சொன்னேன்
“ நாயுடு ஹாலில்” பாருங்களேன். ஒருவேளை நீங்க நெனைக்கற டிசைன்

கெடைக்கலாம் ”
“ சரி போலாம்”
“ நீங்க பாட்டுக்கு பார்த்துகிட்டு இருங்க. நான் அப்படியே பாண்டிபஜாரில ஒரு ‘வாக்’ போய்ட்டு வாறேன்” இதுக கூட இருந்தா எப்படி? ‘கட்டுசோத்துக்குள பெருச்சாளியக் கட்டுன’ மாதிரி அங்க என்ன பார்வை இங்க என்ன பார்வைன்னு நம்மளை பிண்ணிப் பெராண்டியெடுத்துடும்.

“ டேய் நீ எங்கே போறே வா வந்து ‘ suggestion சொல்லு. அப்படியே தப்பிக்க பாக்கறே? “ என் நெனப்புக்குள் மண் !

வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைந்தேன். அய்யோ எவ்ளோ கலரு !!! விக்கறதுல இருந்து வாங்கறதுக எல்லாமே பொண்ணுகதான். ஆங்காங்கே சில ஆண்கள் கவலை தோய்ந்த முகத்தோடு தென்பட்டார்கள். 'அட போக்கத்தவனுகளா எதுக்கு இப்படி எளவூட்டுல இருக்கர மாதிரி நிக்கரானுவ சுத்திமித்தி பார்வைய ஓட்டவேண்டியது தானே பைத்தியங்கோளி பசங்க !!! '

கம்பீரமாக முதல் மாடி ஏறினேன். சரி ஒரு சுரிதார் தானே எவ்ளோ நேரம் ஆகிடப் போகுது என அலட்சியாம இருந்தேன். கண்ணு ஒரு எடத்துல தங்க மாட்டேன்னு அடம் புடிச்சது. அப்படியே பராக்குப் பார்த்துகிட்டு இருக்கரபோதான் மண்டையில் ஒரு ‘கொட்டு’ எவண்டா இதுன்னு திரும்பினா வேற யாரு?. உடன்பிறப்புதான்.

‘அங்கே என்ன பார்வை வேண்டி கெடக்கு? இந்த ட்ரெஸப் பாரு நல்ல இருக்கா? “

“ ஓ சூப்பர் !”

“ ஆனா வெலை ஜாஸ்தி.இதுக்குப் போய் இவ்ளோ கொடுக்க முடியாது !” ஒரே statement ல் item reject ஆனது.

‘ பின்னே எதுக்கு என்னைய கேட்டியாம்? “

“ ஏன் சொல்லமாட்டீங்களோ ? “ சரியா மாட்டிக்கிட்டேன். ஒவ்வொரு முறையும் எதாவது தென்படுவதைப் பார்த்தால் போதும் பொருக்காது இதுகளுக்கு! சஜசன் கேட்க வேண்டியது. பின் திட்ட வேண்டியது.

“ காட்டன் சுரிதார் எடுத்துக்க.அதான் இந்த வெயிலுக்கு நல்லது தவிர பொண்ணுகளுக்கு அது ‘ரிச்’ லுக் கொடுக்கும் ! “

“சரி சரி அடங்கு எங்களுக்குத் தெரியும் ! “

நம்ம நாலெட்ஜை உபயோகப் படுத்த விடமாட்டேங்கறாங்களே !

நம்ம நிலைமை தேன் பாட்டிலுக்குள் நுழைந்த எறும்புபோலாகிவிட்டது. சுத்தியும் ஏராளம தீனியிருந்தாலும் அதை திங்க முடிய மாட்டேங்குதே !!
எனக்கு வேணும் . எனக்கு வேணும் .

லேடீஸ் காலேஜ் விடுரப்போ எதிரில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்னீங்கன்னா தப்பிச்சுக்கலாம். ரொம்ப ஆசைப்பட்டு காலேஜ் பக்கத்திலே இருக்கற ஸ்டாப்புல நின்னீங்கன்னா அவ்ளோதான் நீங்க அம்பேல். லேடீஸ் ஸ்பெசல் பஸ்சில் ஏறியவன் கதி ஆகிப்போச்சு என் நிலைமை இப்போ!

முதல் மாடியில் ஆரம்பிச்சு இப்போ மூணாவது மாடியிலே இருக்கோம். இன்னும் ஒரு சுரிதார் கெடைக்கலேய்யா ! சுத்தியும் பார்க்க முடியலே. இதுக தொல்லை வேற ! இப்போவே வந்து மூணு மணிநேரம் ஆகப் போகுது . ஒருவழியா மூணாவது மாடியிலே அகழ்வாராய்ச்சி நடத்தி ஒருவழியா ‘புடிச்ச’ மாதிரி கலர்ல ‘புடிச்ச’ மாதிரி மெட்டீரியல்ல ‘ புடிச்ச’ மாதிரி டிசன்லே ‘ புடிச்ச’ மாதிரி வெலையிலே சுரிதார் கெடச்சு போச்சு. அப்பாடா !!!

வாங்கிட்டு கீழே எறங்கி வர்ரப்போ அங்க இருந்த கண்ணாடியில என் முகத்தைப் பார்த்தேன். நெசம்மாலுமே நான் மேலே ஏறுனபோ எப்படி மத்த ஆம்பிளைங்க மொகம் இருந்துச்சோ அதே மாதிரி இருந்துச்சு.

செத்து சுண்ணாம்பாகி அந்து அவலாகி நொந்து நூடுல்ஸாகி வந்தேன். வந்ததுக்கு முருகன் இட்லி கடையிலே நாலு இட்லியும் ஒரு ஆனியன் ஊத்தப்பமும்தான் கெடைச்சது. Beware மக்கா ! நமக்கே இப்படீன்னா கல்யாணம் ஆன பசங்களை நெனைக்கரபோ கண்ணுல கண்ணீர் வரலை அப்பூ ! ரத்தம் தான் வருது. நம்ம அனுபவம் மத்த வளரும் வாலிபர்களுகெல்லாம் ஒரு பாடமா இருக்கட்டும் என்னா?

அண்ணன் பாலபாரதிக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன் !!!!

47 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பெண்களுடன் ஆண்கள் துணிக் கடைக்கு சென்று படும் பாடு பற்றி

நாளேடுகள் தோன்றி வார இதழ்கள் தோன்றும் முன் இருந்தே எழுதப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த பதிவை படித்தவுடன் இதழில் புன்னகை வருவதை தடுக்க முடியவில்லை.

said...

APPA PAANDI... IDLI BILL YAARU KODUTHAA

said...

வாங்க குமரன் மிக்க நன்றி. உங்களுக்கும் இதுமாதிரி அனுபவம் இருக்குங்களா?:))

said...

தேவண்ணே வாங்க. டிரைவருக்கு கூலிங்க அது !! :)

said...

தேவ், குசும்பு தான்யா உனக்கு, உடன் பிறப்பு கூட போகும் போது பர்ஸ விட்ல மறந்து வெச்சிடுவம்னு தெரியாது.

ஸ்ரீதர்

said...

வாங்க ஸ்ரீதர் :))
அப்படியெல்லாம் இல்லை ஆனா நான் பட்ட கஷ்டத்துக்கு ஏதாவது compensation வேணுமில்லையா?:(

said...

ட்ரைனிங்லேயே சோர்ந்து போனா எப்படி.

இன்னும், கல்யாணம், தல் தீவாளி, பொங்கலு ட்ரைனிங் எபெக்ட் என்னனுன்னு புரியும்.

said...

அய்யய்யோ பால்ராஜ் என்ன இப்படி பீதியக் கெளப்புறீங்க !!! :))

அப்படியேதாச்சும் அனுபவம் இருந்தா வலையேத்துங்கப்பு படிக்கரவகளுக்கு ஒரு டிரெய்னிங் மாதிரி இருக்குமில்லே?

said...

//வாங்கிட்டு கீழே எறங்கி வர்ரப்போ அங்க இருந்த கண்ணாடியில என் முகத்தைப் பார்த்தேன். நெசம்மாலுமே நான் மேலே ஏறுனபோ எப்படி மத்த ஆம்பிளைங்க மொகம் இருந்துச்சோ அதே மாதிரி இருந்துச்சு.//

டாப்பு..

இதுல அண்ணன் பால பாரதிக்கு இந்தப் பதிவ சமர்ப்பிச்சீங்க பாருங்க.. பிச்சிட்டீங்க போங்க.. நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. நான் ஒரு நாள் எங்க அப்பாவுக்கு ட்ரெஸ் வாங்கப் போய் பட்ட கஷ்டத்தை பதிவு போட்டாலும் ஆத்த முடியாது :(

said...

ஆஹா பொன்ஸக்கா உங்களுக்கா இப்படியொரு அனுபவம்?
ஒருவேளை உங்கப்பாவே வந்திருந்தா அப்படியாயிருக்காதோ? :))

said...

அவரு வந்ததுனால தான்பா இந்த பிரச்சினை.. நான் சொல்லும் சிகப்பு, பச்சை, பிங்க் கலர் எல்லாம் வேணாம்பாரு.. கொஞ்சம் அழகா கோடு போட்ட பாண்டுத் துணி சொன்னா, இதெல்லாம் பொண்ணுங்க போடரதுன்னு... ம்ஹ்ம்.. ஒரே வெள்ளையும் கருப்புமா சட்டை எடுத்துகிட்டு வர்றதுக்கு பொண்ணுங்களை ஏன் கூட்டிகிட்டு போகணும்????!!!

said...

ரொம்ப நல்ல பாயிண்ட் ! அக்கா உங்கப்ப வக்கீலோ? ஹிஹி அவங்கதானே கருப்பு வெள்ளையிலெ இருப்பாங்க அதான் :)

பொன்ஸக்கா பொண்ணுங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க.பொண்ணுங்க உலகத்துலே இருக்குர அத்தனை கலர்லயும் துணி போடறதாலதான்
"கலர்" பாக்கப் போலாம்னு நாங்கெல்லாம் சொல்ல முடியுது.

ஆனா ஆம்பிளைகளூக்கு அப்படியா? அப்படி எசகுபிசகான கலர்லே போட்டுட்டு போனா " என்ன மாப்ளே ஏதாச்சும் தெலுங்கு சூட்டிங்லருந்து சுட்டுகிட்டு வந்த ட்ரெஸான்னு கலாய்ச்சிருவாங்க ! :))

said...

துணிக்கடைக்கே இப்படீன்னா இருக்கு உங்களுக்கெல்லாம் நகைக்கடையிலே:-)

said...

ஆஹா... பாண்டி... நீ தான் பேச்சுலர்களின் கொலபல்பு!(எத்தினி காலத்துக்கு வெளக்குன்னு சொல்றது..?)
உன்னை மாதிரி.. இன்னும் இரண்டெரு பாசக்காரத் தம்பிகள் கிடைத்தால்... க.பி.கழகத்தை தொடங்கீடலாம்.
அப்புறம்..
மற்ற சங்கத்தினரை புற முதுகிட்டு ஓடச்செய்யலாம்...
சங்கத்தின் போர்வாளாகவும்..
கொ.ப.செயலராகவும் நீ பெறுப்பு ஏற்றுக்கொள்ளத்தயாரா சொல்லு..
பாத்திடலாம் ஒரு கை!

said...

வெயிலுக்கு நல்ல மேட்டர் அப்பு. ஜில்லுன்னு மோர் குடிச்ச மாதிரி இருந்துச்சு.

ஆமா..... உடன்பொறப்பு ஒண்ணு தானா??

said...

வாங்க துளசியக்கா :)

இப்படியெல்லாம் சாபம் கொடுக்காதீங்க அப்புறம் நான் அழுதுடுவேன் :(

said...

சரி சரி. அழாதீங்க. அக்ஷ்யதிருதியை ஸ்பெஷல் போஸ்டிங் போட்டுருக்கேன். போய்ப் பாருங்க:-)))

said...

பாரதியண்ணே !! இப்படியொரு offerஆஆ?? என்னண்ணே நான் வளர்ந்த வ.வா.சங்கத்திலே எங்க தலைக்குதான் ஆப்பு வைப்போம்.ஆனா சங்கத்துக்கே வைக்க சொல்றீங்களே??? வளர்த்த சங்கத்துக்கே ஆப்பு வைப்பானா இந்தப் பாண்டி? நான் பாசக்காரப் பயலாச்சே !!:))

க.பி.க வை ஆரம்பிங்கன்ணே. நான் வெளியில இருந்து ஆதரவு தாரேன் ;))

said...

வாங்க மனசு :) ஒரு உடன்பிறப்புக்கே தாங்கலை நீங்க வேற !!! :))

said...

ஜொள்ளு பாண்டி கலக்குரே போ !!!

said...

நிசமாவே நீ கலக்குற ஜொள்ளுப்பாண்டி..

said...

நன்றி மகேஷ் :))

வாங்க ஞானியாரே ! பேட்டை விசிட்டுக்கு ரொம்ப தேங்ஸ் ;-)

said...

அய்யா பாண்டி, அண்ணன் சொல்லிட்டாரு, இந்தச் சீலைய மாத்தச் சொல்லி.. அண்ணிக்குச் சீல எடுக்கப் போவணும், தொணைக்கு வாடா கண்ணு.. தனியா போனா மறுக்கா தொலஞ்சு போய்ட்டா என்ன பண்ணுவேன்.. ??!!!

said...

ஆத்தா கைப்பொண்ணு, சீலை தானே எடுத்துட்டா போச்சு ! 'தல' சொல்லுக்கு அப்பீலு ஏது? நாயுடுஹாலில் புதுசா ' மால்குடி' சேலைன்னு ஒண்ணை அறிமுகம் செஞ்சிருக்காங்களாம்.சும்ம கும்முன்னு இருக்கும்.அந்த சேலையில 'தல' உன்னைய பார்த்தா அப்படியே குளுந்து போய்டுவாரு ! கண்டிப்பா வர்ரேன் ஆத்தா ! ஆனா கூலிங்கிளாஸ் எனக்கு வாங்கித்தந்தாத்தான் வருவேன் சரியா? ;)

said...

பாண்டி,

பதிவ படிச்சதுக்கே இப்படி ரத்த கண்ணீர் வருதே !!.. இன்னும் இத நேர்ல வேற அனுபவிக்கிறவங்க நிலைமை ரொம்ம்ம்ப கஷ்டம்தான்..

இத பத்தி வர்ற கதை எல்லாம் கேட்டு இருக்கேன்.. ஆனா சங்கத்து ஆள் சொல்லும் போது நம்பவேண்டியது இருக்கு

இதுக்குதான் நம்மள மாதிரி தனி ஆளா இருக்குறது எவ்வளவு பெரிய்ய்ய சுகந்திரம்ன்னு கன்டுகிட்டேன்.

said...

அண்ணே இப்போவாச்சும் புரிஞ்சுதே !! கவலைப்படாதே சகோதரா!!!

said...

ஜொள்ளுப்பாண்டி, வியப்படைய வேண்டாம்.
நாங்கள் துணிக்கடைக்குச் சென்றால் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வித துணிகளைப் / உடைகளைப் பார்த்துவிட்டு மனதிற்குப் பிடித்த ஏதெனும் ஒன்றை வாங்குவோம். நண்பர்களாகப் பழகும் சில கடைக்காரர்கள் நகைச்சுவையாக, என்னங்க உங்கள் மாமனார் / மாமியாருக்காக வாங்குகிறீர்களா என்பார்கள்.:-)))

said...

ஏலேய்ய்ய்ய்.. கொள பல்பு.. எனக்கு சமர்ப்பிச்ச பதிவை சதம் போடாம வுட மாட்டியாவே நீ....

said...

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. சரி, படத்துக்கும் உங்க பதிவுக்கும் என்ன சம்பந்தம்? (சத்தியமா புரியலேங்கோ!)

said...

லதாக்கா வாங்க வாங்க !:))
நீங்களா ? ரெண்டே ரெண்டுக்குள்ளாற செலக்ட் பண்ணீருவீங்களா?? மகமாயி லதாகாவுக்கு என்னமோ ஆயிடுச்சி நீயே சரியாக்கீரு ஆத்தா. லதக்காவுக்கு சரியாச்சின்னா அக்காவ வர்ற பண்டிகைக்கு அலகு குத்தி கையிலே தீச்சட்டியோடே பூ மிதிக்க வைக்கிறேன் :))

said...

வாங்க பாரதியண்ணே !! என்ன இப்படி சொல்லிபிட்டீங்க ! அண்ணே முகராசி அப்படி!

இப்போதாண்ணே குவாட்டரை தாண்டியிருக்கு அதுகுள்ள ஃபுல் ஆய்டுமா என்ன?

ஆமா எம்மேல என்ன வருத்தமண்ணே?

said...

வாங்க ஜெயசந்திரன் !! என்ன இப்படி கேட்டு என்னைய அப்செட்டு பண்ணீட்டிங்க ! என்னைக்கி நான் படத்துக்கு சம்பந்தமா படம் போட்டுருக்கேன்? :(

சரி கேட்டுபுட்டீங்க வெளக்காம இருக்க முடியலையே !

அந்த ஆளு தெரிஞ்சே வாழைப்பழ தோலுமேல காலை வைக்கிறான் என்ன ஆகும்? தொபுக்கடீர்ன்னு விழவேண்டியதுதான் கரெட்டா? அதுமாதிரிதான் ஜொள்ளுபாண்டியாகிய நான் தெரிஞ்சே போய் மாட்டிகிட்டேன்!!

கொஞ்சம் இருங்கண்ணா மூச்சு வாங்குது !!! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது பாருங்க !! :))

said...

க.பி.கழகத்துக்கு ஐடியா கொடுத்துட்டு.. இப்படி சும்ம இருந்த எப்படி..?
வ.வா.சங்கத்தின் கொள்கை வேறு.. நம்ம(!) கழகத்தின் கொள்கை வேறு என்பது கூட தெரியாத என்ன...?
அது தான் வருத்தம்.
அத..ஓரமாவையு! ஆமா...
திருட்டுப்பயலே- பார்த்துட்டீயா?
என்னமோ சொல்றாய்ங்களேப்பூ...

said...

பரதியண்ணே இதுதான் உங்க வருத்தமா? கபிக வைப்பத்தி கூடிய விரைவில் முடிவெடுப்போம் :))

என்னடா நம்மளைக் கூப்புடரமாதிரி இருக்கேன்னு 'திருட்டுப்பயலே ' பார்த்தேன். விமர்சனத்தை தனி பதிவாத்தான் போடனும்ண்ணே!

said...

Paandi.....Annan S.BalaBharathin Centuty Aasikkaga Namathu Va.Vaa.Sanga Valaiguda kilai urupinargal Sarpil un Pani Thodara Vaalthukkal.
Dubai Raasa.

said...

//'திருட்டுப்பயலே ' பார்த்தேன். விமர்சனத்தை தனி பதிவாத்தான் போடனும்ண்ணே//
தம்புடு.. அதை நம்ம க.பி.கழகத்தின் தொடக்க அறிக்கையா வுட்ட நல்லாயிருக்காது?!?!

//கபிக வைப்பத்தி கூடிய விரைவில் முடிவெடுப்போம் //
இப்பத்தாய்யா.. பேச்சுலர் வுட்ட்ட சுத்தப்படுத்துன திருப்தி வருது...

சீக்கரம் அழைப்பு அனுப்புப்பூ!

said...

விசாலக் கெளம தான் நான் வருவேன்.. விழுப்புரம் வரைக்கும் போய்ட்டு வாரேனப்பூ...
அதுக்குள்லாற ஏதும் ஜொள்ளு வுட்டு 'டின்'கட்டிக்காத ராசா.. நல்ல பையலா இருந்துக்கரணும்.
ஓகேயா!
இல்லங்காட்டி.. இந்தா பேச்சிலர்களே இப்படித்தான்னு எவனாவது பல்லுமேல நாக்கப்போட்டுருவான்..
அப்புறம் மனசு தாங்காது தம்பி.. சாக்கரதை!

said...

//அதுக்குள்லாற ஏதும் ஜொள்ளு வுட்டு 'டின்'கட்டிக்காத ராசா.. நல்ல பையலா இருந்துக்கரணும்.//

பாரதியண்ணே சொல்லிபுடீங்கல்ல? இப்பவே நாக்கை நாலா மடிச்சி வச்சிக்கறேன் :))

said...

தம்பி, சும்மா இந்த பக்கமா வந்தேன். நல்லாத்தான் ஜொள்ளியிருக்கே. அதுலெ பாரு, நீ ஒரே யடியா ஜொள்ளி கடையிலேயே சிலையாட்டம் நின்னுடுவெயோன்னு பயந்துத்தான் உன் உடன்பொறப்பு அப்பப்ப உன்ன நனவுலகத்துக்கு கொண்டுவந்திருக்கு. நல்லதுக்கு காலமில்லெப்பா.

நமக்கு இந்த அனுபவம் ரொம்ப அதிகமுங்கோ. இப்பவும்.

said...

வாங்க மஞ்சூர் ராசா :))
நிசமாவே சிலையா நின்னா நல்லாதான் இருக்கும்.ஆனா பாருங்க அங்க பல சிலைங்க அசைஞ்சிகிட்டு இருக்கு ;))ம்ம் என்ன வந்து என்ன பயன்?

said...

உடன் பிறப்பு உஷாரான ஆல் போல் இருக்கு, உங்கள பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திருக்காங்க...இந்த ஜொள்ளு பாண்டி" ன்ற பேரு அவங்களுக்கும் தெரியுமோ... இருந்தாலும் உங்க நிலைமை பாவமாதான் இருக்கு.. இன்னொருதரம் தனியா போய்ட்டு வந்துருங்களேன்.

said...

//பாரதியண்ணே சொல்லிபுடீங்கல்ல? இப்பவே நாக்கை நாலா மடிச்சி வச்சிக்கறேன் :)) //

எப்படி..நாலா..மடிப்பீங்க..?!!

said...

வாங்க கவிதா :)

//இந்த ஜொள்ளு பாண்டி" ன்ற பேரு அவங்களுக்கும் தெரியுமோ.//

இதைப்போன்ற வரலாற்று ரகசியங்களையெல்லாம் காப்பாத்த வேண்டாமா? :))

//இன்னொருதரம் தனியா போய்ட்டு வந்துருங்களேன். //

ஆஆஆஆவ்வ்வ்வ் உங்க பாசத்தை நெனச்சா ஆழுகாச்சி அழுகாச்சியா வருது:)) போலாம்தான் ஆனா தேன் பாட்டிலுக்குள் விழுந்த எறும்பாகிப்போவான் இந்தப் பாண்டி :(

//எப்படி..நாலா..மடிப்பீங்க..?!! //

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா அப்புறம் நான் அழுதுருவேன் :))

said...

\நம்ம நிலைமை தேன் பாட்டிலுக்குள் நுழைந்த எறும்புபோலாகிவிட்டது. சுத்தியும் ஏராளம தீனியிருந்தாலும் அதை திங்க முடிய மாட்டேங்குதே !!
எனக்கு வேணும் . எனக்கு வேணும் .||

Hillarious!
சூப்பரா எழுதியிருக்கிறீங்க பாண்டி!
“ காட்டன் சுரிதார் எடுத்துக்க.அதான் இந்த வெயிலுக்கு நல்லது தவிர பொண்ணுகளுக்கு அது ‘ரிச்’ லுக் கொடுக்கும் ! “\\

அப்படியா பாண்டி, 'ரிச்' லுக் கொடுக்குமா??
தகவலுக்கு நன்றிங்கண்ணா!

\\

said...

oru thadava naanum ponnungaloda poyittu apapaa.. mudiyala..avvvv...

said...

//Divya said...
\நம்ம நிலைமை தேன் பாட்டிலுக்குள் நுழைந்த எறும்புபோலாகிவிட்டது. சுத்தியும் ஏராளம தீனியிருந்தாலும் அதை திங்க முடிய மாட்டேங்குதே !!
எனக்கு வேணும் . எனக்கு வேணும் .||

Hillarious!
சூப்பரா எழுதியிருக்கிறீங்க பாண்டி!
“ காட்டன் சுரிதார் எடுத்துக்க.அதான் இந்த வெயிலுக்கு நல்லது தவிர பொண்ணுகளுக்கு அது ‘ரிச்’ லுக் கொடுக்கும் ! “\\

அப்படியா பாண்டி, 'ரிச்' லுக் கொடுக்குமா??
தகவலுக்கு நன்றிங்கண்ணா!//

வாங்க திவ்யா :)))
அட உங்களுக்குத்தெரியாதுங்களா திவ்யா? எது ரிச் லுக் கொடுக்கும்னு? என்கிட்டவே போட்டுவாங்கறீயளா ?? ;))))

said...

//balaji said...
oru thadava naanum ponnungaloda poyittu apapaa.. mudiyala..avvvv...//

வாங்க பாலாஜி :)))
ஆஹா பையனாப் பொறந்தா இதுகெல்லாம் அழுவக்கூடாது சரியா ?? ;))))))