Wednesday, May 03, 2006

ஸ்ரீல ஸ்ரீ ஜொள்ளானந்தா ஸ்வாமிகளின் கும்தலக்கா பேட்டி !!!!


பமக தன் கொள்கையை ( ?! ) பரப்ப எங்கோ ஒடக்காண்கள் ( lizard ) மேயும் விராலிமலை குகையில் ஒளிந்திருந்த குஜிலியானந்தாவை தரதரவெனெ வெளியே இழுத்து வழுக்கட்டாயமாகப் பேட்டியெடுத்து வெளியிட்டதால் வ.வா.ச வும் ஏதேனும் ஒரு சாமியாரை பேட்டியெடுத்து தன் கொள்கையை பரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்கையைப் பரப்ப ஏதேனும் சாமியார்கள் கிடைப்பார்களா எனத் தேட சங்க ‘தல’ கைப்புவும் தளபதி ‘தேவ்’வும் இமயமலைப்பக்கம் சென்றுள்ளதால் தற்காலிக ஏற்பாடாக லோக்கலாக மீனம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலைச் சாரலில் சமுதாயப்பணியாற்றும் ஸ்வாமி ஜொள்ளானந்தா பேட்டி தர சம்மதித்து நம்மை வரச்சொன்னார். தல கைப்புவும் தேவும் குகை குகையாக சடாமுடி சாமியார்களைத் தேடி பிடித்து வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடுமென்பதாலும் ஸ்வாமி ஜொள்ளானந்தா அடிக்கடி ஜொள்ளுப்பேட்டை பக்கம் வந்து அருள்பாலித்து வருவதாலும் இவரைவிட்டால் இப்போதைக்கு பமக விற்கு பதிலடி கொடுக்க வேறு சாமியார்கள் கிடைக்கமாட்டார்கள் எனற ரகசியகாரணங்கள் இருப்பதாலும் ஸ்வாமி அவர்களை குஷிப்படுத்த வாங்கிச் சென்ற குவாட்டரைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியவாரே கொடுத்த பேட்டி !!

நாம் : ஸ்வாமி எங்கே சென்று விட்டீர்கள் இத்தனை காலம் ?

ஜொ.ஸ்வாமி : நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! மக்கட்பணி மகேசன் பணி. அதனை எப்படி ஆற்றுவது என நாம் நம் பக்தைகளுடன் கொடைக்கானல் மலையிலே கோடைஸ் இன்டர் நேஷனல் ஓட்டலில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம்! நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி தங்களின் பூர்வாசிரமம் பற்றி...?

ஜொ.ஸ்வாமி : கோட்டையாம் கோயிலாம் கோமணனத்து ஆண்டியாம் தேடினோம் ஓடினோம் தோராபோரா மலை வரை இருந்தும் மட்டில்லை ! போலீஸு ரெய்டிலே மாட்டினோம் ஏற்றினோம் ஏறாத கோர்ட்டில்லே !! விடவில்லை என் அப்பன் அங்கமுத்து பண்டிதன் வாங்கினோம் தாங்கினோம் வாங்காத ஆப்பில்லே !!! அவனே கூறினான் ( மேலே கை காட்டுகிறார் ) சாமியார் ஆகினோம் ! நம நம கம கம குவாட்டர் கும கும !!

நாம் : ஸ்வாமி பமக பற்றி குஜிலியானந்தா ஏதோ சொல்கிறாரே ?

ஜொ.ஸ்வாமி : பற்றற்று இருக்க வேண்டிய சாமியாராம் பற்றுகொண்டு பமக பற்றிக் கூறுகிறாராம். மூடவேண்டிதை மூடாமல் மூடவேண்டாததை மூடிக்கொண்டலையும் கோமகனாம் கோமேதகத் தலைவனாம் பமக பலப்பமாம் !!! கண்ணனே ஆக்கினான் கண்ணணே கொலை செய்தான்!! யாரும் தேவையில்லை அவர்கட்கு அவரொருவர் போதுமே.தேர்தலில் பமகவிமற்கு மக்கள் பாடைகட்டுவது என் ஞான திருஷ்டியில் தெரிகிறது! நம நம கம கம குவாட்டர் குமகும !! ( உடனே பக்தைகள் ஸ்வாமிகளுக்கு ஆரத்தி எடுக்கிறனர் )

ஸ்வாமிகள் நாம் வாங்கி சென்றிருந்த குவாட்டரில் பாதியை கொஞ்சமாகக் கவிழ்த்துக்கொள்ளுகிறார். மீதியை கமண்டலத்தில் சரித்துக்கொள்கிறார்.

நாம் : ஸ்வாமி பமக விற்கு நூற்றுக்கணக்காக பிண்ணூட்ட வாக்குகள் வருவதாக் கூறுவது பற்றி ???

ஜொ.ஸ்வாமி : மகாபாரதத்திலே கவ்ரவர்கள் எத்தினி பேர் ? ( ஸ்வாமிக்கு லேசாக மப்பு தட்டுகிறது போலும் ) 100 பேர். ஆனா பாண்டவர்கள் எத்தனை பேர் ? Just அஞ்சே பேர் !! என்ணிக்கை முக்கியமில்லை ! யுத்தத்திலே யாரை பகவான் ஜெயிக்க வச்சான் ? புரிஞ்சுதா? 100 பேர் 1000 பேர் பூச்சாண்டிக்கு பயப்பட வேண்டாம் ! அப்படியே பயம் வந்தா இருக்கவே இருக்கு ஸ்லோகம் முடியரப்போ உனக்கு சொல்லித்தாரேன். ( நம் மீது எதையோ தூவுகிறார் பக்தைகள் கண்ணத்தில் போட்டுக்கொண்டு குலவை ஒலி எழுப்புகிறார்கள் ) நம நம கம கம குவாட்டர் குமகும !!

நாம் : ஸ்வாமி வ வா ச வோட எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஜொ.ஸ்வாமி : காலமே உங்களிடம் சொல்லும் !! எத்தனி ஆப்பு வரினும் வாழையாடி வழையாக வளரும் வாழைபோலே ! குவாட்டர் மீது குவாட்டர் அடித்தாலும் கவிழாத ஜொள்ளானந்தா போலே ! நாக்குதள்ள சாப்ட்வேர் கண்டுபிடித்தாலும் பின்னூட்டமே வாராமல் போனாலும் தளராமல் ஜல்லியடிக்கும் பினாத்தலார் போலே அது வளந்துகொண்டேதான் இருக்கும். நம நம கம கம குவாட்டர் குமகும !!
( கமண்டலத்தையும் சரித்துக்கொள்கிறார் )

நாம் : ஸ்வாமி பயப்படாமல் இருக்க ஏதோ ஸ்லோகம் சொல்லுவதாக கூறினீர்களே?

ஜொ.ஸ்வாமி : அதுவா சிஷ்யா வேறென்ன ? நம நம கம கம குவாட்டர் குமகும !!

சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் பக்தையின் மடியில் சாய்கிறார். ஸ்வாமி மலையேறிவிடதாக பக்தைகள் கூற நடையைக் கட்டினோம் !!!

20 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பழிக்குப் பழி, புளிக்குப் புளி.. ஹா ஹாஹாஹாஹா, இப்ப என்ன செய்யும் இந்த ப.ம.க

said...

படம் சூப்பரூ பாண்டி... !!!!

உய் உய்.. வேறென்ன.. எல்லாம் பிகிலு தான்.. :)

said...

பாண்டி சூப்பரப்பு!கலக்கல்.

said...

//உய் உய்.. வேறென்ன.. எல்லாம் பிகிலு தான்.. //
இந்த பிகில் பழசின் எதிரொலி.. கை ஒடிச்சு போனதால் இப்படி..
ஆனாலும் தம்பி ஒன்மேல வருத்தமப்பூ எனக்கு..

said...

கலக்கலப்பு.சூப்பர்.

வ.வா.சங்கம் வாழ்க.

உடல் மண்ணுக்கு,உயிர் சங்கத்துக்கு

said...

வாங்க இளா,
அதிர்ச்சியில் பமக உறைந்து போயுள்ளதாக ஒற்றர்கள்மூலம் அறிகிறேன் :))

said...

வாவ் பொன்ஸக்கா
நீங்க அடிக்கிற பிகிலு பமக வுக்கு திகிலு !!! :))

said...

தல தல உன்னையத்தானே தல தேடிகிட்டு இருக்கோம் !! ரொம்ப பெண்டு நிமித்துராண்களா மல்கேட்டிலே?? :(

எப்படியிருந்த ராசா இப்படி ஆய்ட்டியே !!!

said...

பலாண்ணே என் மேல் வருத்தமா? என்ன குற்றம் செய்தேன்? ஏன் இந்த வருத்தம்? உடனே கூறுங்கள் நிவிர்த்தி செய்கிறேன்.

said...

வாவ் வாவ் செல்வன் வருக வளர்க இப்படிப்பட்ட பாசவார்த்தையெல்லாம் கேட்கறப்பபோ மனசு குளுந்து போய்ட்ரது !!:))

said...

இதை இப்படியே விடக்கூடாது பாண்டி அண்ணே.பமகவை கண்டித்து கைப்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போறதா அறிவிச்சுடலாமா?இல்லை கைபுவை தமிழ்நாடு முழுக்க அங்கப்பிரதட்சணமா வலம் வர சொல்லிடலாமா?

said...

// சங்க ‘தல’ கைப்புவும் தளபதி ‘தேவ்’வும் //

உங்க கட்சியில இருந்த மொத்த ஆளுங்க எண்ணிக்கையே மூணுதான். அதுல ரெண்டு சாமியார தேடவோ சாமியாராகவோ இமயமலைக்கு போயிட்டாங்க.. லெட்டர்பேட பழைய பேப்பர்காரனுக்கு போட்டுட்டு பமக பக்கம் வாங்க. தினமூடிக்கு ஆசிரியராக்கி தினமும் எனக்கு குட்டி கதைகள் எழுதும் பொறுப்பு தாரேன். அதவிட்டுபோட்டு... ஹைய்யோ ஹைய்யோ.. சிறுபிள்ளதனமால்ல இருக்கு...

said...

அய்யய்யோ செல்வன் என்ன இப்படி சொல்லிபிட்டீங்க ? ஏற்கனவே 'தல'ய மாறுகால் மாறுகை வாங்கி டின்னு கட்டி ஆப்பட்டிச்சு உக்கார்த்தி வச்சிருக்காங்க :(
இப்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தை 'தல' தாங்குமா? இந்த பூமிதான் தாங்குமா?? கொஞ்சம் 'தல'ய தெளியவப்போம் மொதல்லே !

said...

வாங்க வாங்க தலைவா நீங்கதான் பமக வோட தலையா??? இப்படி எதிர்கட்சி முகாமுக்கே வந்து ஆள்தேத்திறீங்களே !! ரொம்ப தைரியம் தான் !!

கட்சிப்பணி காரணமாக எங்க சங்க இளங்சிங்கங்கள் கிட்ட பொறுப்ப ஒப்படச்சிட்டு எங்க 'தல' இமயமலைக்கு போன விசயம் உங்களுக்கு தெரிங்சுதான் தெகிரியமா வந்து இருக்கீங்க !!

ஆசிரியரா? நானா? உங்க ஆளுகளும் எங்க சங்கக் கவி பொன்ஸும் சேர்ந்து கட்சிக்கு அப்பாற்பட்டு ஆசிரியப்பா கவிதை எழுதி தமிழ்தொண்டு ஆத்தரதைப்பார்த்து தப்பா புரிங்சுகிட்டீங்கன்னு நெனைக்கிறேன்.

அது தமிழ்பாதுகாப்புப்படை!(வேற யாரு காப்பாத்தப்போறா?) தமிழ்பணி வேறு கட்சிப்பணி வேறு ! இருந்தும் நட்புடன் இருப்போம் என்ன சொல்றீங்க ??

said...

//அது தமிழ்பாதுகாப்புப்படை!(வேற யாரு காப்பாத்தப்போறா?) தமிழ்பணி வேறு கட்சிப்பணி வேறு ! இருந்தும் நட்புடன் இருப்போம் என்ன சொல்றீங்க ?? //

என்ன சொல்றதுன்னே தெரியலை பாண்டி.. உன்னோட அரசியல் நாகரிகம் என்னை நாத் தழுதழுக்கச் செய்கிறது. அதே மாதிரி மாண்பு மிகு எதிர்கட்சித் தலைவரும் நினைச்சிருப்பாரு.. அதான் ஒண்ணும் எழுதாம இருக்காரு:)

said...

தம்பி பாண்டி புழுதிவாக்கம் ஆரம்ப பள்ளி மாணவர்கள் எடுத்தக் கருத்து கணிப்பு படி நமது வ.வா.ச அ.உ.ஆ.சூ.கு.க மல்லிகை கூட்டணி 233.5 இடங்களை வெல்லும் எனத் தெரியவந்துள்ளது

said...

பொன்ஸக்க விடுங்க. எதிர்கட்சித் தலைவர் நம்ம அரசியல் நாகரீகத்தைப் பார்த்து கூடிய சீக்கிரம் நம்ம கட்சில சேர வரப் போறதா ஸ்ரீல ஸ்ரீ ஜொள்ளானந்த ஞானதிருஷ்டியில பார்த்ததா சொல்றாருங்கோ!!

said...

அண்ணே தேவு கருத்து கணிப்பிலேயே சொல்லிபிட்டாங்களா?
இனி இந்த பமக எங்கே போய் முட்டிக்கொள்வார்கள்?? ஹஹஹஹஹாஆ

said...

நம நம கம கம குவாட்டர் குமகும !!

குவாட்டரை குடித்தோம் ! எமனை வென்றோம் !

வாழ்க தல !

வாழ்க சங்கம் !

உடல் உயிர் எல்லாம் சங்கத்துக்கே !
கார்த்திக்

said...

வாங்க கார்த்தி !!
உடலோடு உயிர் கொடுத்த உத்தமத் தொண்டன் எங்கள் சங்க F16 கார்த்தி வாழ்க வாழ்க !!!