Saturday, May 13, 2006

'தல' யுடன் ஒருநாள் - வ வா சா வின் பதிலடி !!


சமீபத்தில் முளைத்த காளான் தன்னை பார்த்திபன் என்று கூறிக்கொள்ளும் Freelance கோயபல்ஸ் பார்த்திபன் எங்கள் அண்ணன் தங்கக்கிண்ணம் ‘தல’ தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் எனவும் எங்கள் சங்கத்தினர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரைக் கடத்தி பதுக்கி வைத்துள்ளதாகவும் மேலும் அவரை மேலேயே அனுப்பிவிட்டதாகவும் புறம் பேசித்திரியும் கூடத்தினருக்கு சவுக்கடி கொடுக்கவும் மண்வாரித் தூற்றுபவர்களுக்கு அவர்கள் நாவை தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கினங்க அண்ணன் ‘தல’ யுடன் ஒருநாள் நடவடிக்கைகளை கூடேயே இருந்து பார்த்து அவர்தம் புகழை தரணியறியச்செய்திட வேண்டி சங்கத்தொண்டன் உங்கள் பாசமலர் ஜொள்ளுப்பாண்டி தன் டிஜிடல் கேமராவுடன் ராவோடு ராவாகக் ( I Mean Night ok? ) கிளம்பிச்சென்று வெற்றியுடன் வந்திருக்கின்றேன். (யப்பா மூச்சு முட்டுது யாராச்சும் சோடா குடுங்கப்பா !)

‘தல’ யின் ஒருநாள் நடவடிக்கைகளை கூடே இருந்து அறியும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? இதோ ‘தல’ யின் தலபுராணம் அறிய அலைகடலென வாரீர் வாரீர்.
காலை மணி 10:00 : அதிகாலையிலேயே எழுந்துவிடும் ‘தல’ மங்களகரமாக ‘ஃபுல் சூட்டில் நம்முன் ஆஜராகிரார்.


காலை மணி 10:30 : ‘ காலையில் தினமும் கண்விழித்தாலே கைதொழும் தெய்வம் அம்மா !! “ பாடிக்கொண்டே தர்பாருக்குமுன் கிளம்பும் முன் தன் தாயிடன் ஆசிவாங்கிக்கொண்டு நமக்கு கொடுத்த போஸ் !!

காலை மணி 11 : தாயிடம் ஆசி வாங்கினால் நாளெல்லாம் வெற்றி நமதே எனக்காட்டுகிறார் ‘தல’.


நண்பகல் மணி 12 : ஒருகையில் சோமபானம் நிறைந்த சொம்பு மறுகையில் ‘கேர்’ராக இருந்தால் முகர்ந்து பார்த்துக்கொள்ள லெமன்னுடன் ஒய்யாரமாக தர்பாரில் ‘தல’ அமர்ந்திருக்கு அற்புதக்காட்சி !!

பிற்பகல் மணி 4:00 : “சாப்ட்வேர் பீச் அமைப்பதைப் பற்றி துரைமார்களுடன் ஆலோசனையில் ‘தல’ ( தல யின் முன் துரைமார்கள் பவ்யமாக நிற்பதைப்பாரீர் !!)
இரவு மணி 8 : ‘ தல’ யின் அந்தப்புரக்காட்சிகளை அவருக்கே தெரியாமல் நம் கேமரா எடுத்த சில பல காட்சிகள்.இதப் பார்த்தபின்னாவது பார்த்திபன் போன்ற புல்லுறுவிகள் அடங்குவார்களாக!

52 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

இதுல கைப்பொண்ணையும் பத்தி எழுதி இருக்கலாம்ல? இப்போ அவங்களை வேற தனியா தேடணும்!!!

said...

அட நீங்க வேற பொன்ஸக்கா கப்பொண்ணு இருந்தா 'தல' இப்படி ஒரு கெட்ட ஆட்டம் போடமுடியுமா என்ன? தல அவுகள அவங்க 'ஆத்தா' வூட்டுக்கு அனுப்பி வச்சிருக்காருல்ல? தெரியாதா உங்களுக்கு ? ( என்ன இப்படி பகிரங்கமா கேட்டுகிட்டு அப்படியே maintain பண்ணுங்க ஓகே??)

said...

ஜொள்ளுப் பாண்டி அவர்களே,
நீர் அவருடன் ஒரு நாள் இருந்ததெல்லாம் சர். கைப்புள்ளையை கோர்ட்டில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அது தெரியுமா உமக்கு?

said...

பாண்டி உன் கடமி உணர்வைப் பார்த்து என் கண் கலங்கியதடா கண்மணி...

இன்று காலை புதிய தமிழக அரசின் பதவியேற்பு விழாவிற்கு கூட தல ரகசியமாக வந்துப் போனார்.. என்னிடம் பேசினார்...

தல நமீதா சந்திப்பு புகைப்படம் என்னாச்சு? பார்த்தி தன் மார்க்கெட அழித்த கதையை மால்கேட் அந்த சின்னப் பொன்ணு கதறி சொன்ன விஷ்யம் உனக்கும் தெரியும் அல்லவா?

said...

கைப்பொண்ணுவை சங்கத்து மகளிரணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தல வருத்தத்துடன் தெரிவித்தார்.
தன் நம்பிக்கையை மகளிரணி தவறாகப் பயன்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்தாலும்... தலயிடம் வருந்த வேண்டாம் .. எங்கிருந்தாலும் கைப்பொண்ணுவை கண்டுபிடித்து உங்களிடம் இன்னும் 48 மணி நேரத்தில் ஆற்றலரசி பொன் ஸ் அக்கா உங்களிடம் சேர்ப்பார் இல்லையேல் தன் சங்கப் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிவித்து உள்ளேன்....

said...

ஆமாம் ஆமாம்.. அண்ணி அம்மா வீடான மதுரைக்குச் செல்லும்போது சங்கத்துக்குக் குடுக்கச் சொல்லி ஒரு கைப்பிடி வேர்க்கடலை குடுத்தாங்க.. இப்போத் தான் நியாபகம் வருது..

ஆமாம், கைப்புவுக்கும் அண்ணிக்கும் தான் கல்யாணமே இன்னும் ஆகலியே இதுல அம்மா வீடுன்னு பிரிச்சி சொல்ல என்ன இருக்கு???

said...

//கைப்பொண்ணுவை சங்கத்து மகளிரணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தல வருத்தத்துடன் தெரிவித்தார்.
தன் நம்பிக்கையை மகளிரணி தவறாகப் பயன்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தார்//

ம்ம்.. கைப்பொண்ணு பத்தி ஓரளவு விஷயம் வெளியில் வந்தாயிற்று!

பாண்டி,
உங்க தலை கைப்புகிட்ட இருந்து இன்னும் ஒரு அறிக்கையும் காணோமே!

said...

பார்த்தி எங்க 'தல'யே ஒரு ராஜாங்கம் நடத்திகிட்டு இருக்கு.

ஜட்ஜுக்கே கோர்ட்டா?

அண்ணனோட தர்பாரிலே ஒரு 'இது' வேணும் பார்த்தி !!!

உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! :))))))

said...

தேவண்ணே இது நம்ம செஞ்சோற்றுக்கடன் இல்லையா? கலங்காதீங்க!

நமீதா சொல்லுச்சே சொல்லுச்சே
இந்த பார்த்திய நம்பி நடிச்சதுக்கு
என் மார்கெட்டும் போச்சு மார்கட்டும் போச்சுன்னு . ஏதோ தருவியா தரமாட்டியான்னு பொழப்ப ஒட்டிகிட்டு இருந்த எனக்கு நடிக்க சான்ஸ் தாரேன்னு ஒரேடியா எல்லாரும் 'கா' உட்ரமாதிரி பண்ணிட்டாரே ன்னு. அது அழுகரதைப்பார்த்து எனக்கு நெஞ்சு தாங்கலை தேவண்ணே ! :((

said...

பொன்ஸக்கா அதான் கல்யாணம் ஆகப்போகுதுல்லே? 'தல' மாப்பிளைம் 'கெத்'தை மெயின்டெய்ன் பண்ண வேணாம்?

said...

ஹெல்லோ, ஜொள்ளூ, பார்த்தி, தேவ், பின்னூட்ட இளவரசி,
சரளா அக்காவைத் தேடுங்க, கைப்பொண்ணு கிடைப்பாங்க. சின்னப் பசங்க கிட்டப் பொறுப்பை ஒப்படைச்சிட்டுப் போகும்போதே நினச்சேன் இப்படி ஏதாவது ஆகும்னு, என் புலம்பலை யார் மதிக்கிறாங்க.

said...

தம்பி பாண்டி..........,தலய காணாமல் தவிக்கும் சங்க உறுப்பினர்களும், கெக்கலிக்கும் பரம்பரை எதிரி பார்த்திபனும் மிரண்டு போகும்படி ‘தல’ யின் ஒருநாள் நடவடிக்கைகளை கூடேயே இருந்து பார்த்து டிஜிடல் கேமராவிலும் பதிவு செய்து ராவோடு ராவாக செய்தி வெளியிட்ட தங்கமே !!!!!!!!! தானைத்தலைவர் கைபுள்ளையும் அண்ணி கைபொண்ணுவும் தலயின் அதிகாரபூர அரண்மணை முகவரியான 12,விவேகானந்தர் தெரு இல்லம் துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதையும் ,நீ வளைகுடா வந்த போது நமது வளைகுடா கிளை வழங்கிய பிரமாண்ட வரவேற்பையும் தேவைப்பட்டால் நீ தனிபதிவாய் தருவாய் என்பதையும் எதிரிக்ளுக்கு இருமாப்போடு தெரிவிக்கிறோம்.
(அந்த தனிபதிவில் “சாப்ட்வேர் பீச் அமைப்பதைப் பற்றி துரைமார்களுடன் ‘தல’ ஆலோசனை செய்யும் புகைபடத்தில் ‘தல’ யின் பின்னால் நிற்கும் எங்கள் மூஞ்சிகளும் தெளிவாக வரும்படி ஒரு குளோசப் போட்டோ இட வேண்டும் என்பது சங்க உறுப்பினர்கள் ஆஜை.)

அன்புடன்
துபாய் ராஜா.
(வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை)

said...

//சரளா அக்காவைத் தேடுங்க, கைப்பொண்ணு கிடைப்பாங்க//

கீதாக்கா சொல்றதைக்கேட்டீகளா? கமான் கொம்பை (ஹார்ன்) முழங்கி ரத கஜ புராதிகளோடு செல்வோம் அன்ணியாரை மீட் பண்ணுவோம்!

கரகரகர ரம்சி கத்தர
கரகரகர ரம்ஸி கத்தர...

said...

//கைப்பொண்ணுவை சங்கத்து மகளிரணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தல வருத்தத்துடன் தெரிவித்தார்.
//

//சரளா அக்காவைத் தேடுங்க, கைப்பொண்ணு கிடைப்பாங்க.//
இப்போ தான் தெரியுது யாரந்த மகளிரணியின் முக்கிய பிரமுகர்..

அக்கா, கீதாக்கா, என்னக்கா, முக்கி முனகிக்கிட்டே கேள்வியா கேட்டுத் தள்ளறீங்க?!!!

சிபி மற்றும் பாண்டி கவனிக்கவும், மகளிரணித் தலைவி கீதா முக்கி முனகி கேள்வி கேட்பதற்கும், மகளிர் அணியின் முக்கிய தலைவி என்று தேவ் சொன்னதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

said...

//தலயின் அதிகாரபூர அரண்மணை முகவரியான 12,விவேகானந்தர் தெரு இல்லம் துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள்//

வாங்க வாங்க துபாய்ராசா வந்து எங்க நெஞ்சுலே பாலை வார்த்தியே !! தலயோட அரண்மனைய தரணி அறியும்னுதான் நான் அட்ரஸ் சொல்லலே. எப்படியோ இப்போவாச்சும் 'தல' கைப்புவப் பத்தி பத்தி பத்தியா எழுதர பார்த்திக்கு புரிஞ்சா போதுமே.ஒத்தை ஆளு எல்லாரையும் என்னமா ஆட்டிவைக்கிறான் பாரு!! ஹும்..

said...

ஆஹா பொன்ஸக்கா 'சிவகாமி ஜோஸ்யம்' மாதிரி பார்த்திபன் ஜோஸ்யம் நடந்திடும் போல இருக்கே!! தேவண்ணா வந்து கொஞ்சம் சங்கப்பணிய ஆத்தறது?!

said...

அரண்மனையில பத்திரமா இருக்காருன்னும் சொல்றீங்க! அடையாறுல அடைச்சி வெச்சிட்டாங்கன்னும் சொல்றீங்க!


அப்ப அரண்மனையில பத்திரமா இருக்கவருகிட்டே ஒரு அறிக்கை விட்ச் சொல்லலாமே! உங்களுக்கும் சேஃப்டிதான?

said...

தல கைப்புள்ள நீங்க எதப் பத்தியும் கவலப்படாதீங்க. நா ராபின் ஹூட் வந்துட்டேன்.
ஊருக்குள்ள என்ன மாதிரிப் பெரியப் பெரிய ரவுடி நா இருக்கேன்.

said...

பார்த்தி இந்தப்பேச்சு தானே வேணாங்கரது. 'தல'அந்தப்புரத்துல சங்கபணியாத்திகிட்டு இருக்கும்போது அறிக்கை விட சொல்லனுமாம்முள்ளே?! அப்படியே கேட்டா என்ன ஆகும் தெரியுமா? அதான் 'தல' சார்பா நாங்கல்லாம் அறிக்கைப்புயலே நடத்திகிட்டு இருக்கொம்லே?

said...

பார்த்தி, மதுரைல இருக்காருன்னு சொல்றவங்களை விட்டுட்டியே!!

பார்த்திபன் - கட்டதுரை முன்னேற்றக் கழகம்
அண்டார்டிகா

said...

யாருப்பா இது ராபின்ஹூட்??

"தந்தனத்தோம் என்று சொல்லியே
என் வில்லில் பாட" ன்னு தனக்குத் தானே எதுக்கப்பூ இந்த பில்டப்பூ?
ஆமா யாரு நீ? உன்னிய இந்த ஏரியாவுலே இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லயே??!!!

said...

தம்பி பாண்டி..........,பரம்பரை எதிரி பார்த்திபன் கொட்டத்தை அடக்க மூணு சக்கர வண்டியில் ஏறி வரவா?என உருமிக் கொண்டிருக்கும் நமது ‘தல’,உலகம் முழுதுமிருந்து வரும் நமது சங்க உறுப்பினர்களின் எழுச்சிமிக்க ஆதரவு அறிக்கைகளை கண்டு " வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" என்று ஓரமாக உட்கார்ந்து தேம்பல் ஊளையிட்டு கொண்டு இருக்கிறார்.

அன்புடன்
துபாய் ராஜா.
(வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை)

said...

//பார்த்திபன் - கட்டதுரை முன்னேற்றக் கழகம்
அண்டார்டிகா //

:)) என்னப்பூ இது கலாட்டா?

said...

//சங்க உறுப்பினர்களின் எழுச்சிமிக்க ஆதரவு அறிக்கைகளை கண்டு " வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" என்று ஓரமாக உட்கார்ந்து தேம்பல் ஊளையிட்டு கொண்டு இருக்கிறார்.//

பாரீர் பாரீர் இப்படியொரு ஆதரவு !! இது சேர்த்த கூட்டமல்ல
தானாகவே கொள்கைப்பற்றினால்
சேர்ந்த கூட்டம் என இந்த உலக அறியட்டும்.

துபாய் ராசா 'தல' சஞ்சிரப்போகுது.பார்த்து பதவிசா சரக்க உள்ள இறக்கச் சொல்லு என்னா? ஓவராய்ட்ட தல அடிக்கடி தேம்பியழுகும் பார்துக்கப்பூ :))

said...

//ஊருக்குள்ள என்ன மாதிரிப் பெரியப் பெரிய ரவுடி நா இருக்கேன்.//

ஓ! இந்த மாட்டு ஐட்டத்தையும் மனுசன் ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டாங்களே.......ன்னு ஒரு ராகமா பாடுவாரே உங்க தலை!

அந்த ரவுடியா நீ!
:-)

said...

//யாருப்பா இது ராபின்ஹூட்??//
ஜொள்ளு உன்னப் பாத்தா பாவமா இருக்கு. நான் தா தல கைப்புள்ளயின் அந்தரங்க மெய்க்காப்பாளர்.

said...

ராபினு தல க்கு ஏது மெய்க்காப்பாளன்?? அப்போ நாங்கள்ளாம் என்னவாம்? சத்தம்போடாம வந்து சங்கத்துலே குந்திக்கோ சரியா? யாரையுமே நாங்க வேண்டாம்னு சொன்னதிலே சரியா? :))

said...

பார்த்தி சங்கத்து ஆளு ராபினுமேலே கைய வச்சே 'கை' உடம்புலே இருக்காது 'கை'யி உன் 'கையிலேதான் இருக்கும்னு எச்சரிக்கரேன்!

said...

சங்கத்து உறுப்பினர்கள் சற்று அமைதி காக்க வேண்டும்!

நேர்வழியில் எதிக்க துணிவின்றி சூழ்ச்சிகளால் சங்கத்தின் புகழைக் கெடுக்க களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர் நம் எதிரிகள். இதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டியது நம் கடமை எனினும் நீதி மன்றத்தின் பார்வைக்கென்று வந்துவிட்டதால் சட்ட ரீதியாகவே இவர்களை சந்திக்க வேண்டும். அதுதான் நமக்கு பெருமை!

வழக்கு நிலுவையில் உள்ளாபோது வீண் விவாதங்களையும், அறிக்கைகளையும் நமக்கு நல்லது. அவற்றை விடுத்து சங்கத்துச் சிங்கங்கள்
சற்றேனும் சளைத்து விடாமல் எதிரிகளின் வழக்குகளைத் தவிடுபொடியாக்கும் பலமான ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும். இப்பணியில் எள்ளளவேனும் சுணக்கம் இருத்தலாகாது. காரணம் இன்னும் இருப்பதோ ஒரு நாள். வழக்கு விசாரணைக்கு திங்கள் கிழமை வருகிறது. அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம்.

அதனை மனதில் கொண்டு ஆளுக்கொரு திசையில் நாம் புறப்பட வேண்டும்! சங்கச் சிங்கங்கள் தங்களுக்குள் ஒருவரொருவர் ஐயம் கொள்தலையும் தவிர்க்க வேண்டும்! அது புல்லுருவிகளின் சூழ்ச்சி என்பதையும் புரிந்து கொள்ளா வேண்டும்!

இக்கணமே புறப்படுங்கள்! மனம் தளராதீர்.

said...

சிபியண்ணே சரியச்சொன்னீங்க !! ஒருத்தர் மேல ஒருத்த்ர் சந்தேகப்படரதை விட்டுட்டு இப்போவே கெளம்பறோம் !!

said...

ஜொள்ளாண்டியண்ணே!

நல்லாத்தான் இருக்கு! ஆனா இதே 'தல' ரூட்டிலேயே போய்க்கிட்டிருந்தா bore அடிக்கும்ணே! சட்டுன்னு subjectஐ மாத்துங்கண்ணே!

said...

வ.வா.ச மீது அளவுக்கதிகமான அன்பும் ஆதரவும் கொண்ட பெரியோர்களே ...தாய்குலங்களே...

கடந்த சில நாட்களாக சங்கத்தில் நடக்கும் பல விஷயங்கள் மனத்தை ரணகளப் படுத்தி வருகின்றன.
சஙக்த்தின் கொள்கைக் கேலிக்குரியதாக ஆகிக் கொண்டிருக்கிறது.
தல யை உசுப்பேத்தி அவர் ரணகளப்படுத்த வேண்டிய சங்கத்து கண்மணிகள் ஒருவர் மனத்தை இன்னொறுவர் ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் நிலை இன்று வந்தது ஏன்?

சிந்திக்க அழைக்கிறேன்.....

said...

யார் இந்தப் பார்த்தீபன்... ஒரு கிழிந்தக் குடை அதற்குள் மழை என... பேந்த பேந்த முழித்து சங்கத்து வாசலில் நின்றவன்....அவன் ராகம் தெரியாது சரிகமபதநீ எனத் தெருவோரமாய் காதல் கிறுக்கனாய் அலைந்தக் காலத்தில் வெற்றி கொடி கட்டு என அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பாதையைக் காட்டியது யார்... நம் மாண்புமிகு மால்கேட் சிங்கம் தலக் கைப்பு ...
இன்று அவன் பச்சக் கான குதிரயிலேறி தலக் கைப்புவை அச்சக் செய்யப் பார்க்கிறான் இது எவ்வளவு பெரிய தமாஸ்....

said...

வாங்க ஸ்ரீதர் 'போர்' அடிக்குதா? :(( என்ன பண்றதுங்கோ ஸ்ரீதர் ? ஒரு ஜொள்வடியும் பதிவைத்தான் ஆரம்பிச்சேன்.திடீர்னு பார்த்தா சங்கப்பணிய ஆத்தவேண்டியே கடமை. கவலையே படாதீங்க கர்சீப்பை எடுத்து வச்சுக்குங்க.சீக்கிரமே ஒரு ஜொள்ளான பதிவு மிதந்து வந்துகிட்டு இருக்கு :))

said...

தேவண்ணே நானும் அதையத்தனே சொல்றேன்.சிந்திக்கத் தேவையான பொருட்களை ரெடி பண்ணுங்கோ.சிந்திச்சரலாம்;))

said...

//சிந்திக்க அழைக்கிறேன்..... //
தம்பி தேவ், சங்கத்துக் கூடாரத்தில் பேச வேண்டியதை எல்லாம் ஜொள்ளுப் பேட்டையிலும், குண்டக்க மண்டக்கவான இடத்திலும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. அதுவே ஒரு பெரிய தவறு..

சங்கத்தின் அலுவலகத்தில், இது பற்றி பதிவிட்டு, விவாதமேடையாக்காமல் விட்டால், சமாதானம் என்பது வெறும் சம்பிரதாயமான பேச்சே என்று தளபதி சிபியிடம் சொல்லிக் கொள்கிறேன்..

said...

கட்டத்துரை... தலக் கைப்பு தமிழகக் கிராமங்களில் வீதி வீதியாகத் சென்று மங்காத்தா, ரம்மி, மூணு சீட்டு போன்ற மகத்தான வீர விளையாட்டுக்களில் ஈடுப்பட்டு போர் காயங்களோடு புலம்ம்பிய அந்த பொற்காலங்களில் தலப் பின்னால் தமுக்கு அடித்து சென்ற சின்னப் பயலில் பெயர் துரை...
தலயின் சீட்டுக்கட்டுகளைப் பிரித்து அடுக்குவது அவனுக்கு உபரி தொழில்... அப்போதெல்லாம் தல தன் கம்பீரக் குரலில் டேய் 'கடட தொற டா' என்று வீரமாய் அவனை கூப்பிட்டது பின்னாளில் மருவி கட்டத்துரை என ஆனது...
இன்று அவன் எல்லாம் தலக்கு எதிரி தாமஸ்ங்கோ

said...

//தம்பி தேவ், சங்கத்துக் கூடாரத்தில் பேச வேண்டியதை எல்லாம் ஜொள்ளுப் பேட்டையிலும், குண்டக்க மண்டக்கவான இடத்திலும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. அதுவே ஒரு பெரிய தவறு..//

பொன்ஸக்கா இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.ஜொள்ளுப்பேட்டை மூன்றாம் தரக் குடியாக நடத்தப்படுவதை பாண்டி அனுமதிக்க மாட்டான். குண்டக்க மண்டக்கவில் விவாதிக்க வேண்டாம். ஏன் ஜொள்ளுப்பேட்டையில் விவாதித்தால் என்ன தவறு?

சங்கப்பலகையில் அறிக்கை வெளியிட இயலாததினால் நான் நம் தரப்பை விட்டுக்கொடுக்க கூடாதென்ற காரணத்தினால் நான் பதிவிட்டேன். ஏன் இங்கே விவாதிக்கக் கூடாதென்பதை தெரிவிக்கவும். சங்கப்பணிக்காக அயராது உழைக்கும் என் போன்ற தொண்டர்கள் மனம் நோக இப்படி கருத்து கூறியிருக்க வேண்டாம். சங்க நிர்வாகிகள் இதற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர் என்பதை வருத்த்ப்படாத வாலிபர் சங்கத்திலிருந்து வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன்.

said...

இல்ல பாண்டி.. அப்படி அர்த்தம் இல்லை.. ஸ்ரீதர் மாதிரி உன்னோட ஜொள்ளுபேட்டையைப் படிக்க ஆவலா வர்ற சில பேருக்கு போர் அடிச்சிடுது இல்ல.. அதனால தான் சொன்னேன்..

தளபதி கிட்டயும் தேவ் கிட்டயும் சொல்லி உன்னையும் சங்கத் திண்ணைல சேத்துடுவோம்.. அப்புறம் உன் அறிக்கைகளை official-ஆவே வெளியிடலாமே :)

said...

பொன்ஸக்கா :)) இப்படியொரு தாயுள்ளத்தோடு நீங்க பேசியிருபீங்கன்னு தெரியாம அறியாம பேசிட்டேன். அஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்
தலைவர் சொன்ன மாதிரிஇதெல்லாம் ஜகஜம் :)))0

said...

இது என்ன கப்பித்தனமா இருக்கு சஙக்த்தின் போரவாள் பாண்டிக்கு வந்த பின்னூட்டத்தை நைசா சுருட்டிட்டு வந்து இங்கே வச்சு வியாவாரம் பாக்குற... ஏய் பார்த்தி ஒனக்கு இனி நாங்க எல்லாம் வேலைக்கு ஆவாது...

திருப்பதின்னு ஒரு படம்.. நம்ம அசீத் செகண்ட் ஹீரோவா வேசம் கட்டுன படம் அதுல்ல ஹீரோவா வருவாரே பேரரசு... அவர் வருவாரு அவருக்கு பதில் சொல்லு...

சரி மக்கா சனிக்கிழமையும் அதுவுமா உட்லாண்ட்ன்னு சைவப் பேச்சு எதுக்கு...

ஏலே பாண்டி பைக்ஸ் அன்ட் பேரல்ஸ், ஜெப்ரீஸ்ன்னு சங்கக்கூட்டதை இடம் மாத்துப்பூ

said...

வாவ் வாவ் தேவண்ணே இப்பவே டேபிள் ஆர்டர் பண்ணிடலாம் :)))))

said...

பாண்டி உனது கேள்விகளும் எனது விளக்கமும்.

1." யோவ் பார்த்தி சும்மா அழுகுனி ஆட்டம் ஆடாதே!! எங்கள் சங்கத்துக்கு வந்த பின்னூட்டத்தினை திருடி உம் பதிவுக்கு பின் போட்டுக்கொள்வது எவ்விதத்தில் ஞாயம்?? ".

உண்ர்ச்சிவசப்படாதே பாண்டி......., சங்க உறுப்பினர்கள் அனைவரும் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,நமது தல அண்ணன் கைப்புவின் கட்டளைப்படி வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை சார்பில் நான் தான் நமது கடித போக்குவரத்து நகல்களை பரம்பரை எதிரி பார்த்திபனுக்கு அனுப்பினேன்.

2."ஜொள்ளுப்பேட்டை மூன்றாம் தரக் குடியாக நடத்தப்படுவதை பாண்டி அனுமதிக்க மாட்டான். குண்டக்க மண்டக்கவில் விவாதிக்க வேண்டாம். ஏன் ஜொள்ளுப்பேட்டையில் விவாதித்தால் என்ன தவறு?".

ஆம்.பாண்டி,குண்டக்க மண்டக்கவில் விவாதிக்க வரும் நமது சங்க தேவு,சிபி, பொன்ஸ் ம்ற்ற முக்கிய, மற்றும் முக்காத ( Silent Members )உறுப்பினர்கள் ஜொள்ளுப்பேட்டைக்கு அடிக்கடி வருவதில்லை.அப்படி வந்திருந்தால் பொன்ஸ் என்னை யார் என்று கேட்டிருக்க மாட்டார் ?????.


இப்போது என் கேள்வி!!!!!!!???????
உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.

தம்பி பாண்டி......!!!!, உன்னை தவிர நம்ம தேவு,சிபி, பொன்ஸ் ம்ற்ற முக்கிய, மற்றும் முக்காத ( Silent Members )எவரும்
நமது வருத்தப் படாத வாலிபர் சங்கம் வளைகுடா கிளை வளர்ச்சிக்கு உரமிடவில்லை என்று கிளை உறுப்பினர்கள் கோடிட்டு காட்டினார்கள்.அவர்கள் வேறு ஏதாவது ரோடு போட்டு விடாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.

மற்ற சங்க நிர்வாகிகள் அனைவரும் இதற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.

மிகுந்த மனபாரத்துடன்,
துபாய் ராஜா.

said...

அய்யா பாண்டி,

// 'தல'யின் அந்தப்புரக்காட்சிகளை அவருக்கே தெரியாமல் நம் கேமரா எடுத்த சில பல காட்சிகள்.

இது ஆண் சிங்கத்தின் (தல) பாதுகாப்பில் பெண் சிங்கங்கள் எல்லாம் துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கு.

என்னா 'தல' இது வாலிப வயசு !

இப்படில்ல சொல்லணும் !!!

வாழ்க தல !

வாழ்க சங்கம் !

கார்த்திக்
வட அமெரிக்க கிளை

said...

பாசக்கரப்பய...பாண்டி... இந்த அண்ணனை மறந்துட்டீயாப்பூ...
நம்ம புது கழகத்தைஒ ஆரம்பிச்சு அழைப்பு அனுப்பு...

said...

//அப்படி வந்திருந்தால் பொன்ஸ் என்னை யார் என்று கேட்டிருக்க மாட்டார் ?????.
இப்போது என் கேள்வி!!!!!!!???????
உன் பதிலை எதிர்பார்க்கிறேன்.//

வர வர ப்ளாக்கர் அக்கவுன்ட் இல்லாதவைங்களெல்லாம் நம்மள மெரட்டிப்பார்க்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.. ஐயா பாண்டி.. இதுக்கெல்லாம் நான் தான் காரணம்னு வேற சொல்றாரே!!!

கைப்பு வழி தனி வழி.. அந்த வழியில் செல்லும் தொண்டர்கள் வழியே எம் வழி..
என்ன வழின்னு கேக்கறீயளா... அதான், ஐயாம் தி எஸ்கேப் :)

said...

அமைதி அமைதி துபாய் ராசா ! உங்கள் வருத்தம் புரிகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கதிலிருந்துவிட்டு இதற்கெல்லாம் வருத்தப் படலாமா? :) வளைகுடா சங்கத் தங்கங்கள் இவ்வாறு இனி வருத்தப்படவேண்டாம். :))

said...

//இது ஆண் சிங்கத்தின் (தல) பாதுகாப்பில் பெண் சிங்கங்கள் எல்லாம் துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கு. //

கார்த்தி கலக்கியடிக்கிறீயளே !!! :)) எனக்குத்தோனாமப் போச்சே !!!

said...

//பாசக்கரப்பய...பாண்டி... இந்த அண்ணனை மறந்துட்டீயாப்பூ...//

பாரதியண்ணே என்ன இப்படி சொல்லி என்னைய அப்செட் ஆக்கிபுட்டீங்க?? எப்படி உங்களை நான் மறப்பேன்??? இப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் முளையிலேயே கில்ளியெறிய வேண்டாமா? :))

said...

பொன்ஸக்கா அது துபாய்ராசாவின் மிரட்டல் இல்லை அவரின் கதறல் !!:((

நம் சங்கத்தின் வளைகுடா கிளையிலிருந்து லிட்டர் லிட்டராக தமது ஆதரவை பேரல் பேரலாக வழங்கிக்கொண்டிருக்கும் உண்மைத் தொண்டன்.( துபாய் ராசா போதுமா??)

said...

//தலப் பின்னால் தமுக்கு அடித்து சென்ற சின்னப் பயலில் பெயர் துரை...
தலயின் சீட்டுக்கட்டுகளைப் பிரித்து அடுக்குவது அவனுக்கு உபரி தொழில்... அப்போதெல்லாம் தல தன் கம்பீரக் குரலில் டேய் 'கடட தொற டா' என்று வீரமாய் அவனை கூப்பிட்டது பின்னாளில் மருவி கட்டத்துரை என ஆனது...//

தேவண்ணே இதப்படிச்சிட்டு கட்டதொரை பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுவது நிச்சயம்:)) என்ன ஒரு கற்பனை கலக்குங்கண்ணா !

Bikes and barrels/ Jeffries ன்னு சொல்லி மனசை கெடுத்திட்டீங்களே தேவு!! :))

said...

//இது ஆண் சிங்கத்தின் (தல) பாதுகாப்பில் பெண் சிங்கங்கள் எல்லாம் துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கு. //

கார்த்திக், இளவஞ்சி வகுப்புல ரொம்ப காது கொடுத்துட்டீங்க போலிருக்கு :)