Tuesday, May 23, 2006

தாவணிக்கனவுகள்
ரொம்ப காலத்துக்கு மிந்தி தாவணி தாவணின்னு ஒரு ட்ரெஸ் இருந்துச்சாம். அதுக்கு ஒருகாலத்துலே பசங்க மத்தியிலே ஒரே கிராக்கியாம். பாக்கரவனெல்லாம் அந்த மஞ்சக்கலர் தாவணி இந்த சிகப்பு கலர் தாவணின்னு மாஞ்சு மாஞ்சு உருகி வழியரதைப் பார்த்து அதுக்கு தலை மேல கர்வம் வந்து டாண்டியா ஆடுச்சாம். என்னடா இவனுக நாம ஏதோ நாலுக்கு ரெண்டு சைஸ்ல இருக்கோம் நம்மளைப் பார்த்து இந்தப் பய புள்ளைக இம்புட்டு வழி வழியுரானுகளேன்னு அதுக்கு ஒரே சிரிப்பு !!

அதுவும் இந்த திருவிழா அது இதுன்னு வந்துடாப் போதும் இந்த தாவணிக்கு பெருமை சலங்கையக் கட்டிகிட்டு ஆடும். சும்மா சும்மா மாராப்ப புடிச்சி இழுத்து விடுரதும் ஆனா ஊனா முனைய வாயிலே வச்சி கடிச்சிக்கரதும் என்ன சொல்ல? இதையப் பார்த்து தாவணிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு . உடனே கடவுள்ட்ட போயி ஒரு கம்ளெயிண்ட் பண்ணுச்சாம்.

‘கடவுளே கடவுளே இந்த பய புள்ளைக என்னைய ரொம்பத்தான் படுத்தரானுக. என்னைய கட்டிகிட்டு இருக்கற இந்த பொட்டப்புள்ளைக கையி கால வச்சுகிட்டு என்னைய படுத்தர பாடு இருக்கே?? கொஞ்சம் நேரங்கூட சும்மா இருக்க விடாமா கைய வச்சி இழுத்து இழுத்து விடுரதும் முனையப் பிடிச்சி வாயில வச்சிக்கறதும அய்யோ அய்ய்யோ. இந்த ஆம்பளப் பசங்களாவது பரவாயில்லை. எங்களைப் பார்த்தவுடனே சும்மா கேஸ் ஏத்துன பலூன் கணக்கா பறக்க ஆரம்பிச்சுடுவானுக.இதுகளுக்கு மத்தியிலே நாம் கெடந்து அல்லல் படரேன் எனக்கு ஏதச்சும் பண்ணு கடவுளேன்னு!! ’ ஒரே பூத்து பூத்துன்னு ஒப்பாரி வச்சுதாம்.

கடவுளு சொன்னாரு ‘ நீயில்லையின்னா இந்த பசங்க ரொம்பத்தான் தவிச்சிப் போயிருவானுகளே. அப்புறம் அவனுக வேற என்கிட்ட வந்து ஒப்பாரி வச்சா என்ன பண்ணுவேன்? எனக்கே உன்னைய கட்டிப்பார்த்தா ஒரு ‘கிக்’குதான். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோன்னு’ கெஞ்சுனாராம்.

ஆனா தாவணி என்ன சாதாரணப்பட்ட ஆளா? அது இத்தனை வருசமா அதோடா எஜமானியம்மாகிட்டே எப்படியெல்லாம் பிடிவாதம் பிடிச்சா காரியம் ஆகும்னு கத்துகிட்டுல்ல வந்துருக்கு. தாவணி அழுகரதைப் பார்த்தா யருக்குத்தான் மனுசு இளகாது? பக்கத்துக்கு ஒண்ணுன்னு இருக்கர கடவுள் மட்டும் விதிவிலக்கா என்ன?
‘ சரி எப்படியோ போ. இனிமே இந்த பொட்டப்புள்ளைக உன்னைய மறக்க மாதிரி பண்ணிடரேன் ஓகேவா ? ‘ அப்படீன்னு சொல்லவும் அதையகேட்ட தாவணி அப்படியே துள்ளி குதிச்ச்சிச்சாம். அதுலே இருந்து கடவுளு பொம்பளை புள்ளைக மனசிலே இந்த தாவணி அப்படீன்னா என்னான்னு கேக்கர மாதிரி பண்ணிட்டாராம்.

- ஜொள்ளணாற்றுப் படை (அதிகாரம் - 2 பாகம் - தாவணி கலைத்த தவம் )


சிறுகுறிப்பு :-

தாவணி - இருபதாம் நூற்றாண்டில் 1980 ன் இறுதியில் பொது வாழ்விலிருந்து முற்றிலும் விலகி விட்ட இந்த உடை கால் சென்டர்கள் வருவதற்கு முன் பல இளைஞர்களின் உறக்கத்தை மானாவாரியாக தொலைப்பதற்கு காரணமாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதனை அவ்வப்போது உபயோகப்படுத்தும் ஒரே துறை தமிழகத்திலுள்ள திரைப்படத்துறை. 80 களில் வந்த திரைப்படங்களில் இவை அநேகமாக பல கற்பழிப்பு காட்சிகளில் உருவப்படுவதற்கும் மற்றும் கதாநாயகர்கள் தற்போது இருப்பது போல கூகுள் இல்லாததால் பரம் பொருளை இதனடியில் தேடுவதற்கும் பயன் பட்டதாக பார்க்கும் திரைப்படங்கள் வாயிலாக அறிகிறோம்.

32 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

என்ன ஆராய்ச்சி!!! என்ன ஆராய்ச்சி!!!

எல்லாம் என்னை மாதிரிதான் திரியராங்க...

said...

பாண்டி, இன்னும் முழுக்கப் படிக்கலை.. தமிழ்மணத்துல நாளைக்கும் இருந்தா படிக்கறேன். (அதாவது, நீக்கப் படாமல் :) )

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பு: தாவணி இன்னும் மொத்தமா அழியலை.. தென் மாவட்டங்களில் ஏதேதோ கல்லூரிகளில் இன்னும் தாவணி தினசரி உடையாத் தான் இருக்கு.. நீங்க இங்க போட்டிருக்கும் எந்தப் படமும் 80களில் வந்தவை இல்லை.. எல்லாம் புதுப் படம் தான்.. ரம்பா, ஜோதிகா ஏன் புது வரவான தியா, எல்லாம் தாவணி போட்டு நடிச்சு நம்ம பார்த்திருக்கோம்.. எனவே உங்க கட்டுரையின் சிறு குறிப்பில் பொருட்குற்றம் உள்ளதென சொல்லிக் கொண்டு.. எஸ்கேப் :)

said...

அன்புத்தம்பி பாண்டி,

"பாவாடைத்தாவணியில் பார்த்த உருவமா?"
போன்ற பழைய பாடல்கள்தொடங்கி

"ஏய்!தாவணி போட்ட சிட்டு!!!!
நீ லாலாகடை லட்டு!!!!!"
போன்ற தத்துவப்பாடல்கள் மற்றும்

"தாவணி போட்ட தீபாவளி வந்தது
என் வீட்டுக்கு......." போன்ற
அண்மையில் வெளிவந்த பாடல்கள் வ்ரை அலசி ஆராய்ந்து பிழிந்து
காயப்போடப்பட்டு,அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட
'தாவணிக்கனவுகள்'
தமிழ் பேசும் நல்லுலகம் இருக்கும்வரை கலையப்போவதில்லை.
கலரும் போகப்போவதில்லை.என்று
அறுதியிட்டுக் கூறுவதில் பெருமை
அடைகிறேன்.

அன்புடன்,
துபாய் ராஜா

said...

Excellent one! ஓசை யில் பேச ஒரு தலைப்பு ரெடி! பாராட்டுக்கள்!

said...

தாவணி என்பதை இப்போது half-saree என்று கூறுகிறார்கள்.

இந்த half-sareeஐ கல்லூரிகளில் மாணவிகள் அணிந்து வரக்கூடாது (மத்த எதுனா நல்ல டிரஸ் போட்டுட்டு வரணும்!) என்று இப்போது கட்டுப்பாடு உள்ளது.

தாவணி என்றவுடன் என் நினைவுக்கு வந்த என்னுடைய ஒரு பதிவு இதோ...

வனிதாவணி... இளமோகினி... வந்தாடு...

said...

போன வருசம் மீனாட்சி காலேஜ் வாசலிலே பஸ்சுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்(எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?). அழகா(அதிசயமா!!??) ஒரு பொண்ணு தாவணி போட்டுக்கிட்டு காலேஜிக்கு வந்துக்கிட்டு இடுந்துசி. அழகுன்னா அப்படி ஒரு அழகு.அது கோடம்பாக்கம் பாலத்திலேருந்து காலேஜிக்குள்ள போகுற வரக்கும் டூவீலரெல்லாம் தடுமாறுது. அதே பொண்ண ரெண்டு நாள் கழிச்சு சுடிதாரிலே பாத்தேன். ஒருத்தனும் கண்டுக்கல.

said...

ஜொல்லு , இப்படி தாவணி பாடறியேப்பு.

உங்க பார்வையில சொல்லுங்க

யாருக்கு தாவணி போட்டா அழகு.

அசின்,ஜோதிகா,சதா,நயன்ஸ்,பாவனா????

said...

//என்ன ஆராய்ச்சி!!! என்ன ஆராய்ச்சி!!!

எல்லாம் என்னை மாதிரிதான் திரியராங்க... //

வாங்க உதயக்குமார் !! இது உலக்க்பொதுமறையான உணர்வு !!! :))

said...

//தாவணி இன்னும் மொத்தமா அழியலை.. தென் மாவட்டங்களில் ஏதேதோ கல்லூரிகளில் இன்னும் தாவணி தினசரி உடையாத் தான் இருக்கு..//

உடன்பிறவா சகோதரி பொன்ஸக்கா :) ,
மொத்தமா அழியலைதான் ஆனா almost அழிஞ்சிருச்சு :(( . யாராச்சும் தாவணி கட்டிகிட்டு வரமாட்டாங்களான்னு ஏங்குது மனசு :))) சும்மா ஒரு பாரம்பரிய உடையை ரசிக்கத்தானே தவிர வேற ஏதும் இல்லை :))

said...

//பாவாடைத்தாவணியில் பார்த்த உருவமா?"
போன்ற பழைய பாடல்கள்தொடங்கி

"ஏய்!தாவணி போட்ட சிட்டு!!!!
நீ லாலாகடை லட்டு!!!!!"
போன்ற தத்துவப்பாடல்கள் மற்றும்

"தாவணி போட்ட தீபாவளி வந்தது
என் வீட்டுக்கு......."//

வாங்க வாங்க துபாய் ராசா இப்படி database ல இருந்து தகவல்களை அள்ளித்தெளிச்சிருக்கீயளே !!

திரையிலா மட்டும் தான் பாக்க முடியுது தாவணிய நேர்ல எங்கே அதுவும் சென்னையிலே சுரிதாரே பார்க்க முடியலை :((

said...

//Excellent one! ஓசை யில் பேச ஒரு தலைப்பு ரெடி! பாராட்டுக்கள்! //

வாங்க செல்லா !! கண்டிப்பா பேசுங்கள் ரொம்ப சந்தோஷப்படுவேன். உங்க ஓசை பதிவு நன்றாக இருக்கிறது.வித்தியாசமான முயற்சி!!! பாரட்டுக்கள் !!

said...

//தாவணி என்பதை இப்போது half-saree என்று கூறுகிறார்கள்.

இந்த half-sareeஐ கல்லூரிகளில் மாணவிகள் அணிந்து வரக்கூடாது (மத்த எதுனா நல்ல டிரஸ் போட்டுட்டு வரணும்!) என்று இப்போது கட்டுப்பாடு உள்ளது.//

வாங்கண்ணே ஞான்ஸ் ! ரொம்பநாளா பேட்டையவே மறந்து போய்ட்டீயளே !!:((

அது சரி ஆஃப் சாரி தான். உங்களுக்கேல்லாம் அதைய பார்க்கற பாக்கியம் இருந்திருக்கும் :)))

said...

80 களின் பிரபலமான ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..

ஆடிக்குப் பின் ஆவணி..
என் தாடிக்குப் பின் ஒரு தாவணி...

:))))

said...

//போன வருசம் மீனாட்சி காலேஜ் வாசலிலே பஸ்சுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்(எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?). அழகா(அதிசயமா!!??) ஒரு பொண்ணு தாவணி போட்டுக்கிட்டு காலேஜிக்கு வந்துக்கிட்டு இடுந்துசி. அழகுன்னா அப்படி ஒரு அழகு.அது கோடம்பாக்கம் பாலத்திலேருந்து காலேஜிக்குள்ள போகுற வரக்கும் டூவீலரெல்லாம் தடுமாறுது. அதே பொண்ண ரெண்டு நாள் கழிச்சு சுடிதாரிலே பாத்தேன். ஒருத்தனும் கண்டுக்கல.//

வாங்க மகேஸ் !! :))

ரொம்ப சரிங்க ! இந்த மீனாட்சி காலேஜ் இருக்கே டூவீலர் ஆளுகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனம் தான். நானே பல தடவை தடுமாறி தடம் மாறியிருக்கேன்னா பார்துக்குங்களேன் :)) அதுவும் மதியம் இரு 2 மணி போல போன சும்மா ஏசி போட்ட மாதிரி ஜில்லு பல பிகருங்க !!

கிண்டியிலே இருக்கர மாதிரி பேசாம அந்த இடதிலே ' மான்கள் நடமாடும் பகுதி. ஜாக்கிரதையாகச் செல்லவும் !! ' அப்படீன்னு ஒரு போர்டு வச்சுடனும் ;-)

said...

//ஜொல்லு , இப்படி தாவணி பாடறியேப்பு.

உங்க பார்வையில சொல்லுங்க

யாருக்கு தாவணி போட்டா அழகு.

அசின்,ஜோதிகா,சதா,நயன்ஸ்,பாவனா???? //

வாங்க பெருசு :))


என்ன இப்படி கேட்டுபுட்டீக ??
அல்வா,ஜாங்கிரி,ஜாமூன்,பாயாசம்,லட்டு இதுலே எது இனிப்புன்னு கேட்ட மாதிரியில்ல இருக்கு?? :(

தாவணிம்போட்டா யாருதான் அழகில்லை?? ;)))

எனக்கு இந்த மாதிரி ஓரவஞ்சனையெல்லாம் கிடையாதுங்கண்ணா !! என்ன நயன்ந்தாரா தாவணி போட்டா கொஞ்சம் எசகுபிசகா இருக்கும்கறது என்னோட தாழ்மையான கருத்து ;))

said...
This comment has been removed by a blog administrator.
said...

//ஆடிக்குப் பின் ஆவணி..
என் தாடிக்குப் பின் ஒரு தாவணி...//

தேவண்ணா என்னாதிது ?? கலக்குதே. இப்போல்லாம் யாரு தாடி வளர்க்கிறா ?

'ஆடிக்குப் பின் டாவடி
தாவணியக்கண்டா சைட் அடி'
ன்னு போய்கிட்டே இருக்காங்க !! :))

said...

"தாவணி போட்ட தீபாவளி,பொங்கல், அப்ப்டியெல்லாம் பாட முடியாது, இருந்தாலும் கொஞ்சம் பேர் தாவணி நம்ம ஊர் பக்கம் போடுறாங்க(எல்லாம் ஒரு ஈர்ப்புக்குதான்). பிகர் சுமாரா இருந்தாலும் தாவணி போட்டா நல்லாதான் பாக்குறனுங்கன்னு பொன்னுங்களுக்கு தெரியும், சுமாரான் பிகர் சுடிதார் போட்டு வந்தா எவன் இப்போ பார்க்குறான்

said...

ஜொள்ளருக்கு (ஒரு மரியாதைதான்!) ஒரு வேண்டுகோள்... தாவணியின் அக்கா சேலையப் பற்றியும் ஒரு ஆன்மீக கட்டுரை (நீங்க இந்த பதிவை அப்படித்தான் வகைப்படுதிருக்கீங்க) எழுத வேண்டும். See throu எனப்படும் சேலை நாயுடு ஹாலில் உக்கார்ந்து அழுது கொண்டிருப்பதாக சென்னையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

said...

1.///"கிண்டியிலே இருக்கர மாதிரி பேசாம அந்த இடதிலே ' மான்கள் நடமாடும் பகுதி. ஜாக்கிரதையாகச் செல்லவும் !! ' அப்படீன்னு ஒரு போர்டு வச்சுடனும் ;-)"///.

கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல தம்பி!
எக்மோர்,அண்ணாநகர்,சைதாப்பேட்டை,பாரிமுனை என பெண்கள் கல்லூரிகள்
உள்ள இடமெல்லாம் இது போன்ற
எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட
வேண்டும்.

2.///"ஆடிக்குப் பின் டாவடி
தாவணியக்கண்டா சைட் அடி'!:))///

அடடா!!அடடா!!இதுவல்லவோ தத்துவம்!!பாண்டி!!!!உடம்பெல்லாம்
ஒரு 'ஃபுல்' அடிச்சமாதிரி ஆடுதப்பா!.

அன்புடன்,
துபாய் ராஜா.

said...

//பாண்டி, இன்னும் முழுக்கப் படிக்கலை.. தமிழ்மணத்துல நாளைக்கும் இருந்தா படிக்கறேன். (அதாவது, நீக்கப் படாமல் :) )//

அக்கா பொன்ஸ் ஏன் இப்படி ??

said...

//தாவணியின் அக்கா சேலையப் பற்றியும் ஒரு ஆன்மீக கட்டுரை (நீங்க இந்த பதிவை அப்படித்தான் வகைப்படுதிருக்கீங்க) எழுத வேண்டும். See throu எனப்படும் சேலை நாயுடு ஹாலில் உக்கார்ந்து அழுது கொண்டிருப்பதாக சென்னையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.//

உதயக்குமார்ஜி !! ( ஒரு பதில் மரியாதைதான் :) See Thro ?? எப்படி நான் மறப்பேன் ?? இப்படிபட்ட ஆன்மீக தாகத்தோடு பலர் இருப்பது தெரிந்துவிட்டதல்லவா? இனி அதைப்பற்றிய சொற்பொழிவை ஆத்திற வேண்டியதுதான் ;)

said...

//2.///"ஆடிக்குப் பின் டாவடி
தாவணியக்கண்டா சைட் அடி'!:))///

அடடா!!அடடா!!இதுவல்லவோ தத்துவம்!!பாண்டி!!!!உடம்பெல்லாம்
ஒரு 'ஃபுல்' அடிச்சமாதிரி ஆடுதப்பா!.//

அண்ணே துபாய்ராசண்ணே !! :))
full ன்னு கேட்கறப்போவே எனக்கு ஆடுதே :))

said...

இரசிக்கும்படி இருந்தது...

- குப்புசாமி செல்லமுத்து

said...

// இரசிக்கும்படி இருந்தது...

- குப்புசாமி செல்லமுத்து //


வாங்க செல்லமுத்தண்ணா பேட்டைக்கு புதுசா வந்திருக்கீங்க :) உங்க சுயவிடுதலை ( ??!!) போராட்டம் எப்படி போய்கிட்டு இருக்கு ?? :))

said...

போய்ட்டு இருக்கு பாண்டி... உங்க பேட்டையில இருந்து கொஞ்சம் ஆளுகள அனுப்பி வைக்கலாம்ல?

said...

//போய்ட்டு இருக்கு பாண்டி... உங்க பேட்டையில இருந்து கொஞ்சம் ஆளுகள அனுப்பி வைக்கலாம்ல? //

செல்லமுத்தண்ணா பேட்டையில இருந்து ஆளுகளா? அதுவும் சுய விடுதலைக்காகவா?? :)) ஏற்கனவே எங்கள்ட இருந்து விடுதலை வாங்கறதுக்கு பலபேரு காத்திகிட்டு இருக்கறாங்க ;)

said...

என்ன பாண்டி ரொம்ப நாளா ஆளே காணோம் புதுசா ஏதாவது project துவக்கி அதுல பிஸியா இருக்கியா என்னா? ஏதோ நல்லா இருந்தா சரி. அப்படியே இது போன்ற வாலிப ஆராய்ச்சிகள் தொடரட்டும்.

said...

//என்ன பாண்டி ரொம்ப நாளா ஆளே காணோம் புதுசா ஏதாவது project துவக்கி அதுல பிஸியா இருக்கியா என்னா? ஏதோ நல்லா இருந்தா சரி. அப்படியே இது போன்ற வாலிப ஆராய்ச்சிகள் தொடரட்டும். //

வாங்க சந்தோஷ் !! :))

உங்களைத்தான் ஆளைக்காணோம் :( . வருவீங்க வருவீங்கன்னு பாத்து பாத்து கண்ணு பூத்துப்போச்சு :) புது ப்ராஜெட் எல்லாம் இல்லை. சங்கப்பணிகள் தான் :)

said...

முந்தியே சொல்லனும்னு இருந்தேன். தாவணிப் படங்கள் சூப்பர். ஹிஹி.. இருந்தாலும் உங்க ரேஞ்சுக்கு ஜொள்ள முடியலப்பா..

-குப்புசாமி செல்லமுத்து

said...

//முந்தியே சொல்லனும்னு இருந்தேன். தாவணிப் படங்கள் சூப்பர். ஹிஹி.. இருந்தாலும் உங்க ரேஞ்சுக்கு ஜொள்ள முடியலப்பா..//

வாங்க செல்லமுத்தண்ணா :))

ஜொள்ரதுக்கு எதுக்குங்க ரேஞ்சு எல்லாம்?? சரி சரி நான் இருக்கும் போது என்ன கவலை ? ஜொள்ள நான் கத்துத்தாரேன் !!! :))))

said...

ஆராய்ச்சின்னா இதுதான் அராய்ச்சி,
சான்ஸே இல்ல....எங்கயோ போய்ட்டீங்க,
இரசிக்கும்படியான 'ஜொள்ளு' பதிவு:-))))