Monday, June 05, 2006

மதுமிதாவுக்காக நானும் ஜொள்றேன் !!

பாண்டி டான்ஸ்


வலைப்பதிவர் பெயர்: ஜொள்ளுப் பாண்டி

வலைப்பூ பெயர்: ஜொள்ளுப்பேட்டை

சுட்டி(URL) : http://jollupet.blogspot.com/

ஊர் : சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையிலே அப்படியே மேஞ்சுகிட்டு இருக்கறப்போதான் இந்த மேய்ச்சல் மைதானத்தை கண்டுபிடிச்சேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள் வருடம்: காதலர் மாதம் 2006

இது எத்தனையாவது பதிவு: குவாட்டருக்கு நாலு கம்மி

இப்பதிவின் சுட்டி(URL): http://jollupet.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நான் விட்ட ஜொள்ளு பெறுக இவ்வையகம் !

சந்தித்த அனுபவங்கள்: ஒண்ணா ரெண்டா ஒருநாளையிலே சொல்ல முடியுமா ??

பெற்ற நண்பர்கள்: ஏராளம்

கற்றவை: வாய் ஜொள் அளவு !!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கொஞ்சமா நஞ்சமா ?

இனி செய்ய நினைப்பவை: இனி என்ன எப்பவுமே என் பணி ... என் பேர் சொல்லும் :-)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: கொஞ்சம் ஜொள்ளு கொஞ்சம் லொள்ளு கலந்து செய்த கலவை நான் ! வெளியே ஜொள்ளு உள்ளே லொள்ளு விளக்க முடியா கவிதை நான் !

இன்னும் நீங்கள் நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: யாவரும் இன்புற்றிருக்க வேண்டியதேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே !!

18 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

தம்பி... டாண்ஸ்.. தான் சூப்பரா இருக்கு மேட்டரில் கோட்டை விட்டுட்டியே..

said...

:00000000)

said...

//தம்பி... டாண்ஸ்.. தான் சூப்பரா இருக்கு மேட்டரில் கோட்டை விட்டுட்டியே.. //

வாங்க பாலாண்ணே !!

மேட்டர் என்ன அதேதானே !! அதான் டான்ஸ் போட்டேன் :)

said...

வாங்க தேவண்ணா !! எல்லாம் உங்கள்ட இருந்து காப்பியடிச்சதுதான் :))

said...

"ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே"
தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்து இருப்பீங்க, அதுல பாலைய்யா இப்படி சொல்லுவார் அதுக்கு என்னா இப்போ அப்படின்னெல்லாம் கேட்கப்படாது

said...

சரி ரொம்பவும் ஜொள்ளிகிட்டு இருக்காமெ அப்பப்ப உருப்படியா எதையாவது எழுதவும் பாரு.

ஏதோ அண்ணங்கற முறையிலெ சொல்லறேன். அப்புறம் கேக்கறதும் கேக்காததும் உன் ஜொள்ளுக்கு சேர்ந்தது.

said...

நல்லாத்தேன் ஜொள்ளி இருக்கு தம்பி... :))))!!

said...

//மஞ்சூர் ராசா said...
சரி ரொம்பவும் ஜொள்ளிகிட்டு இருக்காமெ அப்பப்ப உருப்படியா எதையாவது எழுதவும் பாரு.//

வாங்க மஞ்சூர் ராசா :))
உருப்படியான பதிவா?? உருப்படியப் பத்திதானே ராசா நான் எழுதறேன் !! :)) சரி அண்ணன் சொல்றீங்க முயற்சி பண்றேன் :-)

said...

// பொன்ஸ் said...
நல்லாத்தேன் ஜொள்ளி இருக்கு தம்பி... :))))!! //

பொன்ஸக்கா கைமாறு என்ன செய்வேன் ???? :)))

said...

// ILA(a)இளா said...
"ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே"
தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்து இருப்பீங்க, அதுல பாலைய்யா இப்படி சொல்லுவார் அதுக்கு என்னா இப்போ அப்படின்னெல்லாம் கேட்கப்படாது //

வாங்க விவசாயி !!

இப்படியெல்லாம் கேட்டா எப்படி??
ஏன்னா இது வாலிப வயசு ;-)

said...

/வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: நான் விட்ட ஜொள்ளு பெறுக இவ்வையகம் !

இன்னும் நீங்கள் நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: யாவரும் இன்புற்றிருக்க வேண்டியதேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே!!/

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் பாண்டி ??????!!!!!!.

said...

//ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் பாண்டி ??????!!!!!!. //

வாங்க துபாய்ராசா என் செல்வமே இப்படியெல்லாம் என்னைய கேள்வி கேட்டா நான் அழுதுருவேன் :(

said...

:)),:))

said...

தொடர்ந்து ஜொள்ள வாழ்த்துக்கள்.

said...

//நாகை சிவா said...
தொடர்ந்து ஜொள்ள வாழ்த்துக்கள். //

வாங்க சிவா :))

பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப டேங்ஸ் :))

said...

என்னப்பா பாண்டி ஆளே காணோம் ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் தகுந்த இடைவெளியா????? :)))

said...

//சந்தோஷ் said...
என்னப்பா பாண்டி ஆளே காணோம் ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் தகுந்த இடைவெளியா????? :))) //

வாங்க சந்தோஷண்னா உங்களைத்தான் ஆளக்காணோம். என்னாண்ணே கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியிலே சொல்றமாதிரி இடைவெளியெல்லாம் இல்லை. சங்கப்பணிவேறு ஆத்தவேண்டியிருக்கே :))

said...

ஆகா பாண்டி என்னப்பா இப்படி சொல்லிட்டே நம்ம வீட்டுப்பக்கம் போயி பாருப்பா ஒரு பேன் பிரச்சனையில சங்க மக்கள் காய்ச்சி எடுத்துட்டு இருக்காங்க...