Thursday, June 15, 2006

மறக்கமுடியுமா ?

அதைய மறந்தா இப்படித்தான்



நான் படிச்தெல்லாம் சின்ன சின்ன ஊர்லதான். அங்கேல்லாம் எங்கே கான்வெண்ட் இருக்கு? நமக்கெல்லாம் காண்வெண்ட் கவர்மெண்ட் ஸ்கூல்தான். அதுலயும் பாய்ஸ் ஸ்கூல் கேர்ள்ஸ் ஸ்கூலுன்னு பிரிச்சி போட்டுருவாங்க. அத்தி பூத்த மாதிரி எப்போவாச்சும் சில பேதை பெதும்பை பெரிளம் பெண்ணுங்கன்னு கண்ணுல படரது உண்டு. அங்கேயெல்லாம் சென்னை மாதிரி இல்லை. பொண்ணப்பார்த்தாலே போதும் காதலிக்கறான்னு முத்திரை குத்தி பர்ஸ்ட் நைட் வரைக்கும் பசங்க வாயாலயே குடித்தனம் பண்ண வச்சிருவாங்க. பசங்க கூட இருந்தா கொஞ்சம் பகிரங்கமா ஜொள்ள முடியாது.

பள்ளிகூடத்திலே எங்க சட்டை பார்த்தீங்கன்னா பேண்ட்டை விட்டு வெளியில தான் இருக்கும். சர்ட்டை பேண்ட்டுக்குள்ள விட்டு ‘இன்’ பண்ணுனா போதும் எதோ நம்மளைய லண்டன்ல இருந்து அப்படியே இறங்கி ஸ்கூலுக்குள்ளே நொழஞ்சிட்ட மாதிரி பார்த்தி பசங்க ஒதுங்கீடுவாங்க. அதெல்லாம் கான்வெண்ட் கலாச்சாரம். தவிர ஸ்கூலுக்குள்ள அப்படியும் சில ‘இன் பண்ணிகிட்டு சுத்திகிட்டு இருக்கர பசங்க சாயங்கால நேரத்திலே கேர்ஸ் ஸ்கூல் பக்கமா ஒதுங்கற கேஸா இருப்பானுக.

இதுனால வேற ‘இன்’ பண்ணணும்னு உள்ளூர ஆசை இருந்தாலும் இந்த இமேஜை நெனச்சும் இன்னும் சில கவலைகளினாலும் ஊர்ல என் ‘இன்’ பண்ணணுங்கர ஆசை நிராசையா போச்சு. இதுலே வீட்டுல எங்கப்பாருக்கெல்லாம் நம்ம ட்ரெஸ்ஸிங்கைப் பார்த்து ஒரே கவலை. என்னடா பாண்டி கொஞ்சம் ‘நீட்’டா ட்ரெஸ் பண்ணிக்கோடா. இப்படி இருக்கியேன்னு தன் ஆதங்கத்தை அப்பப்போ வெளிப்படுத்துவார்.

ஒருவழியா சென்னைக்கு படிக்க வந்தாச்சு. அப்பாவோட இந்த ஆசையவாச்சும் நிறைவேத்தலாம்னு ஆரம்பத்திலேயே மங்கம்மா சபதம் போட்டேன். அப்பாருக்கு நான் அரியர்ஸே இல்லாம பாஸாகணும்ங்கற பேராசையெல்லாம் கூட இருந்துச்சு. தகுதிக்கு மீறி ஆசைப்படலாமா சொல்லுங்க? சரி தந்தை சொல் மிக்க மந்திரமில்லைங்கறதை அட்லீஸ்ட் இதுலயாச்சும் கடைபிடிப்பமேன்னு ‘இன்’ பண்ண ஆரம்பிச்சேன்.

முதல் வருட முடிவில் வீட்டிற்கு போனப்போ வீடென்னா ஊரே தெகச்சு போச்சு என் ‘ட்ரெஸிங் சென்ஸ்ஸ’ப் பார்த்து. அப்பாரு மொகத்திலே பெருமை பார்க்கனுமே. சரி பையன் ட்ரெஸ் விசயத்திலே தேறிட்டான். அப்படியே படிப்பிலேயும் கவனத்தை திருப்பச்சொல்லுன்னு தாயார்கிட்ட ஒரு ‘பிட்டை’ போட்டார். நமக்குத்தான் அதெல்லாம் காதிலேயே ஏறாதே !

சரி சரி போதும் நம்ம புராணம்.சிந்துவப் பத்தி சொல்லலேன்னா எனக்கு அடுத்த ஏழு ஜென்மத்துக்கு நரகம் தான். சிந்துவை நான் முதன் முதலா பார்த்தது எங்க காலேஜ் காரிடாரிலே. சிந்து ஒரு இடத்தை க்ராஸ் பண்ணிணா போதும் அப்புறம் அந்த வழியா நடக்கறவங்க கொஞ்சம் கவனமா இருக்கனும் இல்லையின்ன வழுக்கி விழுந்து சில்லரை பொறுக்க வேண்டியதுதான். ஏன்னு கேட்கிறீங்களா ? வேறென்ன லெக்சர்ல இருந்து ஸ்டூடெண்ட் வரைக்கும் விடற ஜொள்ளுதான் ! யாரிந்தப் பொண்ணுன்னு நானும் என் டேட்டாபேஸ்ல தேடிப்பார்த்தும் சிக்கலை. சரி கம்யூட்டர் லேப் வேற இருக்கு அதைய முடிச்சிட்டு மொதோவேலையா இதையப் பார்க்க வேண்டியதுதான்னு முடிவு செஞ்சுகிட்டேன்.

நமக்குத்தான் தமிழ்நாட்டை தாண்டுனா மனுசங்க லாங்குவேஜே புரிய மாட்டீங்குது. இதுலே மெஷின் லாங்குவேஜ் வேற ! ரொம்ப அலுத்துகிட்டே லேப்புக்கு போனோம். அவுட்புட்டை காட்டுனாத்தான் ஆச்சுன்னு அங்க இருக்குற லெக்சரர் பண்ற அழிச்சாட்டியம் இருக்குதே?? ஏதாச்சும் இன்புட் இருந்தாதானே ? தெரிஞ்சா காட்டமாட்டமா? என்ன பண்றது அக்கம் பக்கம் பாரடா பாண்டி ராசான்னு ஒப்பேத்தவேண்டியதுதான்னு நெனச்சுகிட்டே ‘லேப்’ குள்ள போனா ஒரு இன்பியலான காட்சி !! சிந்து அங்கே லேப்பில் !! அதுவும் எங்க லெக்சரர் கூட ஏதோ பேசிகிட்டு இருந்தா ! பாவம் அவளுக்கும் அவுட்புட் வரலையோ என்னவோ !

“பாய்ஸ் ! இவங்க பேர் சிந்து . இவங்கதான் உங்க ‘லேப் இன்ஸ்ரக்ட்டர்’ ஏதாசும் ப்ரோக்ராம் சம்பந்தமா சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்! “ ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் இன்பமும் !! என்னடா இது ஸ்டூடண்டுன்னு நெனச்சமே !! நமக்கு ஒண்ணும் தெரியாதுன்ன மதிக்க மாட்டாளே ! வேற வழியே இல்லை சிந்துவுக்கு முன்னாடி நம்ம மானம் போய்டகூடாது. முடிவெடுத்தேன். சிந்துவுக்கு ரொம்ப தங்கமான மனசு ( நெசமாத்தான் ) எந்த சந்தேகம்னாலும் உண்டனே க்ளீயர் செஞ்சா.

நமக்குத்தான் டவுட்டே வராதே. ஏதாச்சும் தெரிஞ்சாதானே ! எல்லாரும் Flow Chart வச்சுகிட்டு அல்லாடிகிட்டு இருந்தா நான் சிந்துவொட Flow லேப்பில் எங்க இருக்குன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். இப்படியே விட்டா சரிப்படாது. ஏதாச்சும் ‘டவுட்டு’ ன்னாதானே சிந்து கிட்டே பேசமுடியும். கஷ்டப்பட்டு ஒருவாரம் ப்ரோக்ராம் கத்துகிட்டு சிந்து கிட்டே கேட்கறதுக்காக வண்டி வண்டியா டவுடோடே போனேன்.

நான் கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க டவுட்டுகளைக் கேட்ட சிந்து இரண்டே வரிகளில் பதில் சொல்லித் தீர்த்துவிட்டு போனாள். ‘ ச்சே! என்ன இது ஒரு வாரம் ப்ரிபேர் பண்ணுனது வேஸ்ட் ஆகிபோச்சே! எப்போடா கம்ப்யூட்டர் லேப் வரும்ன்னு பசங்க எல்லாரும் தவம் இருக்க ஆரம்பிச்சிட்டோம். கம்ப்யூட்ட்ர் லேப்புன்னாலே காத தூரம் ஓடுர பசங்க கூட லேப் 2 மணிக்கின்னா 1 மணிக்கே போய் உட்கார ஆரம்பிச்சிட்டாணுங்க!

“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “ என் நலம் விரும்பி தோழன் துரைசிங்கம் சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு சந்தேகத்தை தேடி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் இதுவரை எட்டிப்பார்த்திராத கல்லூரி லைப்ரரி வரை ஓடினேன். ஒருவழியாக சிலபல டவுட்டுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தேன்.

ஒகே அடுத்தது action தான் ! மத்தியானம் பசங்க எல்லாம் லேப்புக்கு போக ஆரம்பிச்சானுங்க. ‘டேய் துரை அப்படியே போய்கிட்டு இரு நான் பாத்ரூம் போய்ட்டு வாரேன் என்ன ? ‘ ‘சீக்கிரம் வாடான்னு’ சொல்லிட்டு ஓடினான். எல்லாரோடையும் போனா பத்தோடு பதினொன்னு! கொஞ்சம் லேட்டா போனாத்தான் நநன் லேட்டஸ்டா தெரிவேன். என் ஐடியாவை நினைத்து நானே என்னை பாராட்டித் தள்ளினேன்.

எல்லாரும் போய்ட்டானுங்க போல ! ஒரு பயலையும் வழியிலே காணோம்.இதோ லேப் தெரிகிறது. லேப்டாப் போல சிக்கென்று என் சிந்து. என்னை கவனித்துவிட்டாள் !! என்னப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. “ கமான் பாண்டி ஒர்க் அவுட் ஆகிடும் போல இருக்கே !! “ நேரா அவள் டேபிளுக்கே போய் டவுட் கேட்டுற வேண்டியதுதான். பசங்க எல்லாம் ஏதோ பில்கேட்ஸுக்கே கோடிங் கத்துத்ர்ற ரேஞ்சுல எதையோ தட்டிகிட்டு இருந்தானுக.

என்னையவே பார்த்துகிட்டு இருக்காளே !! எங்கோ மனம் பறந்தது. அருகில் சென்றவுடன் சிந்துவின் பார்வையில் ஒரு தவிப்பு. நான் என் சந்தேகங்களை எடுத்து விட ஆரம்பித்தேன். சிந்து ஏதோ என்னிடம் சொல்ல வந்த மாதிரி தெரிந்தது. விடலையே ! இப்போதே முழுசையும் கேட்டுடணும் இல்லேண்ணா எனக்கு மறந்து போச்சின்னா?? ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டு சிந்துவைப் பார்த்தேன்.

யெஸ் அவள் முகத்தில் குழப்பம். இதைத்தான் எதிர் பார்த்தேன். தெரியலைன்னு சொல்லப் போறா இல்லை ரெபர் பண்ணிட்டு சொல்றென்னு சொல்லப் போறா !! எம் முகத்தில் பெருமிதம் ததும்பி வழிந்தது. “பாண்டி நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?” “ நோ நோ மேம்! “ நீங்க உங்க பேண்ட் ஸிப்பை போடலைன்னு நெனைக்கிறேன் ! “ ஆயிரம் போக்ராண் குண்டு என் மனதில் . என் கண்முன்னே என் மானம் ஸிப் வழியாக போய்டுச்சே!! டேய் என் முகம் கண்டிப்பா அவளுக்கு நெனப்புல வரும் ஆனா அது நான் கேட்ட கேள்வியினால இல்லே !!! யாராச்சும் ஒரு நாலு முழக் கயிரு கொடுங்கப்பூ அப்படியே தொங்கலாம் போல இருக்கே !!! இதப்போயி எப்படி மறந்தேன் ! இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !

30 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

:-)

said...

வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஆளா ஆயிருப்பீங்க!

"நம்மாளு என்னிக்கும் (நினைச்சி நினைச்சி) சிரிச்சிகிட்டே(!?) சந்தோஷமா இருக்கணும்னு" நினைச்சதோட மட்டுமில்லாம அப்படியே செஞ்சிருக்கீங்க!

வாழ்க! பாண்டி!

said...

I have been a regular reader of your blog. I always come with an expectation to laugh out loud and you don't disappoint me. Good for you and me.

said...

ஆகா பாண்டி ஸிப் மேட்டருல இப்படி ஸிலிப் ஆயிட்டியே.. சரி விடு நம்ம ஜொள்ளு வாழ்கையில இது எல்லாம் ஜகஜம்... சரியா? இதுக்கு எல்லாம் கயித்தை தேடுனா பின்னாடி நமக்காக காத்திட்டு இருக்கும் அவமானங்கள் ஏமாந்து போயிடும் இல்லையா.. அதனால ஜொள்ளைவிட்டு கவலையை விடு..

said...

ஓவர் சீனு உடம்புக்கு ஆவாதுனு இதை தான் சொல்லுறது.

பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் அப்பா.........
ரைட்... ரைட்...

said...

வழக்கம் போல என்னால முழுக்க படிக்க முடியலை.. ரொம்ம்ம்ம்ம்ப நீளம்ப்பா பாண்டி..

//நமக்குத்தான் தமிழ்நாட்டை தாண்டுனா மனுசங்க லாங்குவேஜே புரிய மாட்டீங்குது. இதுலே மெஷின் லாங்குவேஜ் வேற !//
இது நல்லா இருக்கு.. :)

said...

எலெ பாண்டி இப்படியால பல பேர் படிக்கிற இடத்தில பட்டுனு போட்டு உடைக்கிறது உண்மையை?
சரி சரி ஸிப்பு நீ தான் போட்டியா இல்ல......வேற யாராவது.....::)) சும்மா தெரிஞ்சுக்கலாமேனு.....

said...

// ராம் said...
:-) //

வாங்க ராம் :))

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஆளா ஆயிருப்பீங்க! //

ஆமாங்க சிபி :( உங்களுக்கு சந்தோசமா இருக்கு ம்ம்ம்ம்...

said...

//சந்தோஷ் said...
இதுக்கு எல்லாம் கயித்தை தேடுனா பின்னாடி நமக்காக காத்திட்டு இருக்கும் அவமானங்கள் ஏமாந்து போயிடும் இல்லையா.. //

ஆஹா சந்தோஸண்ணாவ் இதுக்கு மேலயும் எனக்கு அவமானம் வரணுமா ??? இருந்தாலும் அட்வைஸ் நல்லாத்தேன் இருக்கு :)

said...

//Anonymous said...
I have been a regular reader of your blog. I always come with an expectation to laugh out loud and you don't disappoint me. Good for you and me. //

வாங்க அனானி ! புல்லரிகுதுங்க உங்க விமர்சனம் பார்த்து ! அப்படியே பேரைப் போட்டிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன் :))

said...

// நாகை சிவா said...
ஓவர் சீனு உடம்புக்கு ஆவாதுனு இதை தான் சொல்லுறது.

பொது வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் அப்பா.........
ரைட்... ரைட்... //

வாங்க சிவாண்ணே !
உங்களுக்கென்ன பொதுவாழ்க்கையிலே ஜகஜம்னு போய்டுவீங்க போன மானம் திரும்பி வருமா ?? :(

said...

// பொன்ஸ் said...
வழக்கம் போல என்னால முழுக்க படிக்க முடியலை.. ரொம்ம்ம்ம்ம்ப நீளம்ப்பா பாண்டி..//

பொன்ஸக்கா நீங்களா இப்படி சொல்றது :( ஐயகோ படிக்க உங்களுக்லு கஷ்டமா இருந்தா இதை டைப் அடிச்ச எனக்கு எப்படி இருக்கும் ??:(

said...

//மின்னுது மின்னல் said...
எலெ பாண்டி இப்படியால பல பேர் படிக்கிற இடத்தில பட்டுனு போட்டு உடைக்கிறது உண்மையை?//

வங்க மின்னலு ! :))
இது ஒரு சமூக விழிப்புணர்வுக்குன்னு வச்சுக்குங்கண்ணா ! எல்லாரும் ஸிப்பு போட மறந்துடாதீங்க ! அப்ப்டீங்கறது மெசேஜு. புரிஞ்சுதா? ;)

said...

:-) ஏன் பாண்டி, ஒரு குவாட்டர் அடிச்சா போதாது? இதுக்கு போய்...

//இது ஒரு சமூக விழிப்புணர்வுக்குன்னு வச்சுக்குங்கண்ணா ! எல்லாரும் ஸிப்பு போட மறந்துடாதீங்க ! அப்ப்டீங்கறது மெசேஜு. புரிஞ்சுதா? ;) //

அது...

said...

ஏலே பாண்டி,

டவுட் கேக்கப் போனேன்......
காத்து வாங்கி வந்தேன்...
அதைப் பார்த்து நீங்கிப் போன
அந்தக் கன்னி என்னவா ஆனாள்?

ஆமா இந்தப் பாட்டு எந்தப் படத்துல்லடே வருது....

said...

பாண்டி உண்மையச்சொல்லுலே... தெரியாமலா போனே ?! ;-)

said...

//இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !//

ஒன்னுக்கு போயிடலெயெ ??

:::)))

(எதுக்கும் ஒரு சிரிப்பான் இருக்கட்டும்)

said...

//வங்க மின்னலு ! :))
இது ஒரு சமூக விழிப்புணர்வுக்குன்னு வச்சுக்குங்கண்ணா ! //

ஒங்க சமூக விழிப்புணர்வ நெனச்சா புல்லரிக்குதுணா

//எல்லாரும் ஸிப்பு போட மறந்துடாதீங்க ! அப்ப்டீங்கறது மெசேஜு. புரிஞ்சுதா? ;)//

புரிஞ்சதுணா எல்லாரோடைய லைஃப்புளையும் இப்படி ஒரு மேட்டர் இருக்குமுணா நீங்க தொரந்து காட்டிடிங்க........... மனச..::))

said...

//மனதின் ஓசை said...
:-) ஏன் பாண்டி, ஒரு குவாட்டர் அடிச்சா போதாது? இதுக்கு போய்...//

போதாது மனதி ஓசை :( போதாது !! இது என் மனதின் ஓலம் !!

said...

// Dev said...
ஏலே பாண்டி,

டவுட் கேக்கப் போனேன்......
காத்து வாங்கி வந்தேன்...
அதைப் பார்த்து நீங்கிப் போன
அந்தக் கன்னி என்னவா ஆனாள்?

ஆமா இந்தப் பாட்டு எந்தப் படத்துல்லடே வருது.... //

வாங்க தேவண்ணா ! வேற எதுலே ? ஜொள்ளுப்பேட்டையிலே பாண்டிராசா ம்யூஜிக்குலதான் :))))

said...

//யாத்திரீகன் said...
பாண்டி உண்மையச்சொல்லுலே... தெரியாமலா போனே ?! ;-) //

ஆஹா கெளம்பிட்டீங்களா யாத்ரீகன் :(
தெரிஞ்சே ஆராச்சும் போவாகளா ? ஐயகோ கொஞ்சம் நஞ்சம் இருக்கர மானத்தியும் மொத்தமா டைட்டானிக்கிலே ஏத்திபுடலான்னு கங்கனம் கட்டீட்டீங்களா??:((

said...

//ஒங்க சமூக விழிப்புணர்வ நெனச்சா புல்லரிக்குதுணா //

//புரிஞ்சதுணா எல்லாரோடைய லைஃப்புளையும் இப்படி ஒரு மேட்டர் இருக்குமுணா நீங்க தொரந்து காட்டிடிங்க........... மனச..::)) //

மின்னலு இப்போவாச்சும் நம்மளைப்பத்தி புரிஞ்சுகிட்டீங்களே ரொம்ப டேங்ஸ் !! :))

said...

//“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “//

இதுக்குப் பேருதான் உசுப்பேத்துறதுங்கறது...

said...

//சுதாகர் said...
//“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “//

இதுக்குப் பேருதான் உசுப்பேத்துறதுங்கறது... //

வாங்க சுதாகர் :)
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் மனசே ரணகளமாயிருச்சு ம்ம்ம்ம்ம்....

said...

அதெல்லாம் சரி அதைப்பாத்த சிந்து என்ன ஆனாங்க? எனக்கு என்னமே உங்களுக்குள்ள ஒரு கெமிஸ்டிரி ஓர்க் அவுட் ஆகுதூன்னு நினைக்கிறேன். அவங்க பீரின்னா நீ வேண்ணா ஒரு டிரை விட்டு பாரேன்.

said...

அமா சொல்ல மறந்துட்டேன் இந்த முறை மறக்காம ஜிப் போட்டுட்டு போ..

said...

//அவங்க பீரின்னா நீ வேண்ணா ஒரு டிரை விட்டு பாரேன். //

வாங்க சந்தோஷண்னா ! நான் ட்ரையா?? அதைய நெனைக்கத்தான் முடியுமா ?:(

//ஆமா சொல்ல மறந்துட்டேன் இந்த முறை மறக்காம ஜிப் போட்டுட்டு போ.. //

பார்தீங்களா ! நீங்களே வாருனா எப்படீண்ணே ??

said...

சந்துல சிந்து பாடறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா ஜொள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

said...

//கவிதா said...
சந்துல சிந்து பாடறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா ஜொள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... //

:)))))))))))))))))))

கவிதக்கா சும்மா கலாய்க்கிறீங்களே !!:))