Tuesday, July 11, 2006

Gym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி !

Gym ஜினாக்கிடி

ரொம்ப நாளாவே எனக்கு இந்த ‘ஜிம்’முக்கு போகனுங்கரது ஆசை. இதுல வேற நம்ம ஹாலிவுட் ஹீரோஸ் அர்னால்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன் படங்களையெல்லாம் பாக்குறப்போ சும்மா ஜிவ்வுன்னு ஜிம்முக்கு போற ஆசை கூரையப் பிச்சிகிட்டு கெளம்பும். என்னடாது இப்படி இருக்குறானுவ! நாம என்னிக்கி இப்படி ஆகறதுங்கற ஏக்கம் வேற ! நம்மூரு பொண்ணுங்க வேற கோழிக்குஞ்சு கணக்கா இருக்குறாளுவ. நாம ஆசைப் பட்டு இவனுக சைஸ் ஆகிட்டா நம்மளைப் பார்த்து தெரிச்சி ஓடிருவாளுகளேன்னு வேற தேவையில்லாத ஒரு கவலை அப்போ !

டேய் பாண்டி இந்த வயசிலயே ஜிம்முக்கு போனா உசரமா வளர முடியாதுடான்னு என் க்ளாஸ்மேட் அய்யாச்சாமி சொன்னதையே வேதவாக்கா எடுத்துகிட்டு ஜிம்முக்கு போற என் ஆசைய காலேஜ் போற வரைக்கும் ஒத்தி வச்சேன்.எங்க ஊரு பைப்பாஸ் ரோடுல நானும் அய்யாச்சாமியும் காலைல எந்திரிச்சு வெள்ளை பனியன் டிரவுசரைப் போட்டுகிட்டு ஓடுவோம். ஜாகிங் போறதுன்னாலே வெள்ளை யூனிபார்ம் தான்னு எனக்கு பல தமிழ் சினிமாக்கள் கத்துகுடுத்துருக்கில்ல??

காலேஜிலே ஒரு அருமையான ஜிம் இருந்துச்சு ! மொதோ வருசம் எட்ட நின்னு பார்த்துகிட்டதோட சரி. போகலை. ராகிங் பயம்தான் ! ஒருவழியா ரெண்டாவது வருசம் தான் உள்ளே எட்டிப்பார்த்தேன். ஒவ்வொருத்தனும் ஒரு மார்க்கமாத்தேன் இருந்தானுவ. என் சீனியர்ஸ் பல பேரு இருந்ததால நானும் ஒரு ஓரமா பம்மிகிட்டே இருந்தேன். தனியாப் போனா சரிப்படாதுன்னு நம்ம பயலுவ எவனையாவது கூட்டிகிட்டு போலாமின்னு பார்த்தா ஒரு பயலும் மசிய மாட்டேனுவரானுக. ஒரு வழியா கஷ்டப்பட்டு என் ப்ரெண்ட் தீபக்கை ஜிம்முக்கு போலாம்டான்னு கூப்புட்டேன். பயபுள்ள அவனும் மசிய மாட்டேனுட்டான்.டேய் தீபக்கு இப்படி தேவாங்கு மாதிரி இருந்தால்லாம் நம்ம காலேஜு பொண்ணுக எவளும் மதிக்க மாட்டாளுவடான்னு ஒரு ‘பிட்’டைப் போட்டேன்.பய கண்ணாடிய பாக்க ஆரம்பிச்சுட்டான். அவ்ளோதான் ஒருவழியா ‘ஜிம்;முக்கு ஒரு பார்ட்னரை தேத்தீட்டேன்.

அடுத்த நாளுல இருந்து ரெகுலரா ‘ஜிம்’முக்கு போக ஆரம்பிச்சாச்சு. ‘ஜிம்’முல டம்பிள்ஸ் எடுத்து கொட்டை போட்ட ( எத்தனை நாளைக்குத்தான் பழம் தின்னு கொட்டை போடரது? ) பல பேரு இருந்தானுவ. நாங்க ஒரு ஓரமா கொஞ்சமா வெய்ட் இருக்குற டம்பிள்ஸை தூக்கிகிட்டே அல்லாறும் என்னனென்ன பண்ணுறானுவன்னு நோட்டம் பாத்துகிட்டே இருப்போம். அவனவன் டிசைன் டிசைனா வெய்ட்டைத் தூக்குறானுவ. சில பேர் வெய்ட் தூக்கறதைப்பார்த்தாலே எனக்கு பேதி கெளம்பும் . என்னாடாது நம்மளாம இந்த கர்லாக் கட்டையவே தூக்க முடியலே இவனுக இப்படி கட்டைய சுத்தி பின்னு பின்னுன்னு பின்னுறானுகளேன்னு ஒரே பொறாமையா இருக்கும். அர்னால்ட் ஆகரது சாதாரண விஷயம் இல்லைங்கறது புரிஞ்சு போச்சு. அர்னால்ட் ஆகறதுகுள்ள அரைக் கிழவன் ஆயிடனும் போல இருக்கே!!

இதுலவேற ரெண்டு நாள் கழிச்சி கை காலெல்லாம் ஜிம்முக்கு போறதால ஒரே வலி. இந்த தீபக்கு பய இனி ஆவறதில்ல நீயே போய்க்கோன்னு முரண்டு பண்ண ஆரம்பிச்சுட்டான். திரும்பவும் ‘தேவாங்கு’ ‘பிகரு’ன்னு பயமுறுத்தி வரவச்சேன். இப்படியா ரெகுலரா ஜிம்முக்கு போக ஆரம்பிச்சோம். ஒரு மாசம் போயிருக்கும். அதுக்குள்ள டேய் ‘கட்ஸ்’ பாரு இங்கே பாரு அங்கே பாருன்னு ரூம் மேட்டுககிட்டேல்லாம் ஒரே அலப்பரை விட ஆரம்பிச்சுட்டோம்.ஹாஸ்டல்ல அவனவன் எங்க அலப்பரை தாங்க முடியாம பொலம்புவானுக. ஒன்னுமே இல்லாட்டியும் தீபக்கை பார்த்து டேய் சூப்பரா ‘பாடி’ டெவலப் ஆகுதுடான்னு சொல்லி அவனையும் உற்சாகப்படுத்தினேன்.

இப்படியா ஒரு ரெண்டு மூணூ மாசம் போய்கிட்டு இருந்தப்போதான் ஒருநாள் ஜிம் மாஸ்டர் கூப்பிட்டு காலேஜில Mr College போட்டி நடக்கப் போறதாவும் அதுல கலந்துக்க பேரு கொடுக்கறீங்களான்னு கேட்டாரு. இவருக்கு என்ன தெரியும் நம்ம body யப் பத்தி? T-shirt டைக் கழட்டினாதான தெரியும் நம்ம வண்டவாளத்தைப் பத்தி ! சிரிச்சி மழுப்பிட்டே வந்துட்டேன். இது நடந்து ரெண்டு வாரம் இருக்கும். நான் மறந்தே போய்ட்டேன்.

Gymஜாலங்கிடி
ஒருநாள் ஜிம் முடிச்சிட்டு நானும் தீபக்கும் வந்துகிட்டு இருந்தப்போதான் ஜிம் மாஸ்டர் என்னைய உடனே கூட்டிட்டு வரச்சொன்னதா என் ஜூனியர் ஒருத்தன் வந்து சொன்னான். என்னாடாது ஜிம்முல அவரு இல்லையேன்னு கேட்டதுக்கு இன்னிக்கி
Mr College போட்டிக்காக அவரு ஆடிட்டோரியத்துல இருக்கறதாகவும் பசங்க கொஞ்சம் பேருதான் காம்படிஷனுக்கு பேரு கொடுத்திருக்கறதாகவும் சொன்னான். எனக்கு ஒரே திகிலாகிடுச்சு. போச்சுடா நாமதான் காம்படிஷனுக்கு வரலைன்னு சொன்னமே இவரு நம்மளை விட மாடீங்கறாரே ! என் மேல இவ்ளோ நம்பிக்கையா? என்னாடாது பாண்டிக்கு வந்த சேதனைன்னு பல யோசனையிலே நானும் தீபக்கும் போனோம். ஆடிட்டோரியம் வாசல்லயே ஜிம் மாஸ்ட்டர் காத்துகிட்டு இருந்தார். என்னைய பார்த்தோடனயே மாஸ்டர் மொகத்துலா அவ்ளோ பிரகாசம். “வா வா பாண்டி! உனக்காதத்தான் காத்துகிட்டு இருக்கோம். பசங்கதான் உன்னைய suggest பண்ணுனானுங்க ! போ உள்ள !” கழுத்தை பிடிச்சு தள்ளாத குறைதான்.

எங்கூட வந்த தீபக்க பார்த்து நீ வேணா போப்பான்னு சொல்லிட்டாரு. பய மொகத்தைப் பார்க்கனுமே ! ஆச்சரியம் அதிர்ச்சி ! சரி சரி தீபக்கு ! பொது வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்டான்னு பார்வையிலேயே சொல்லி அனுப்பிச்சேன். காம்படிஷன் இன்னும் தொடங்கலே ! மேடைக்கு பக்கத்துல இருக்கர ரூமுக்கு உடனே போகச்சொன்னாரு மாஸ்டரு. உள்ள போனா எங்க சீனியருக. அல்லாரும் சும்மா தீவனம் தின்னு வளர்ந்த ப்ராய்லர் சிக்கன் மாதிரி சும்மா ‘கும்’முன்னு ஜட்டியோட இருக்கரானுவ. நான் பரிதாபமா நாட்டுக்கோழிகணக்காவுள்ள இருக்கேன் ! இவனுககூட எங்கடா மோதறது ? கவலையோட போனேன்.

நம்மளப் பார்த்து புட்டான் என் சீனியர் வேலு. 'வாடா பாண்டி உனக்காகத்தான் எல்லாரும் வெய்ட்டிங்! சீக்கிரம் அங்க இருக்கு பாரு மசாஜ் ஆயில் எடுத்துக்கோ !' ஓ இது வேறையா ?!! இத தடவிகிட்டு தான் நிக்கனுமாம்ல? அப்போதான் சும்ம பள பளன்னு ‘பாடி’ தெரியும் போல ! ஜட்டியோட எப்படி நிக்கறது ? பொண்ணுக யாரும் இருக்கக் கூடாது கடவுளேன்னு வேண்டிகிட்டே எண்ணெய் பாட்டிலை எடுத்தேன். “சீக்கிரம்டா என்ன யோசனை வந்து எண்ணெயா எல்லாருக்கும் தடவி வுடு ! காம்படிஷன் தொடங்கப் போவுது. இந்த பாரு கொஞ்சம் தாராளமாவே எண்ணெய தடவி வுடுடா அப்போதான் சும்மா பள பளன்னு இருக்கும்”.அவன் பாட்டுக்கு சொல்லிகிட்டே போறான் . அடங்கொப்பொறானே ! இதுக்குத்தான் கூப்பிட்டீயளா? இதென்னடாது நாறப் பொளப்புன்னு மனசுகுள்ள சொல்லிகிட்டாலும் வெளிய சொல்ல முடியுமா? சீனியராச்சே ! விதியேன்னு எண்ணெய்ய தேச்சு வுட்டேன்.

இதுக்குள்ளயும் நம்ம பய தீபக்கு போயி ஹாஸ்டல்ல இருக்கற நம்ம பசங்க கிட்டேயெல்லாம் 'பாண்டி Mr.College காம்படிஷன்ல கலந்துகறாண்டா வாங்க' ன்னு அல்லாறையும் கூட்டிகிட்டு வந்துடான். என் நெலைமை இப்படியா ஆகனும்? அவனுக முன்னால எல்லாரும் உடம்பு முழுசும் எண்ணெயோட நின்னா நான் மட்டும் உள்ளங்க கையிலே மட்டும் எண்ணெய்யோட ! இந்த எண்ணெய் தேய்ச்ச விவகாரம் எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.பசங்க இதனை நாள் நான் அவனுகளை படுத்துனதுக்கு சேர்த்து வச்சு என்னைய ஓட்டுன ஓட்டுல கொஞ்ச நாளைக்கு ‘ஜிம்’ பக்கமே எட்டிப்பார்கலையே நான்.

59 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

தம்பி பாண்டி!

இது போல எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?

நம்ம தலை வெச்சிருக்குற ஜிம்முலயும் ஒரு ஆள் தேவைப் படுதாம்!

said...

பாண்டி!
எனக்கு இதை படிச்சதும் பதினாறு வயதினிலே படத்துல சப்பாணி பரட்டைக்கு எண்ணெய் தேய்ச்சி விடற சீன் தான் ஞாபகத்துக்கு வருது.

"நல்லா அள்ளையிலே தேயுடா"னு பரட்டை சப்பாணி தலையில தட்டற மாதிரியெல்லாம் ஒனக்கு ஒன்னும் நடக்கலியே?
:)

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
தம்பி பாண்டி!

இது போல எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?

நம்ம தலை வெச்சிருக்குற ஜிம்முலயும் ஒரு ஆள் தேவைப் படுதாம்! //

வாங்க சிபியண்ணே ! ஒரு போட்டிக்கே உள்ளங்கை ரேகையே அழிஞ்சு போய்டுச்சு ! இதுல நீங்க வேற ! போங்கண்ணா !! :))

said...

//கைப்புள்ள said...
"நல்லா அள்ளையிலே தேயுடா"னு பரட்டை சப்பாணி தலையில தட்டற மாதிரியெல்லாம் ஒனக்கு ஒன்னும் நடக்கலியே? :) //

வாங்க 'தல' :)) அதையெல்லாம் வெளிய சொல்ல முடியுமா தல :(

said...

பாண்டி, நம்ம தல மாதிரி உனக்கும் உடம்புல படிக்கட்டு இருக்குமா?

said...

//"நல்லா அள்ளையிலே தேயுடா"னு பரட்டை சப்பாணி தலையில தட்டற மாதிரியெல்லாம் ஒனக்கு ஒன்னும் நடக்கலியே? :) //

வாங்க 'தல' :)) அதையெல்லாம் வெளிய சொல்ல முடியுமா தல :( //
அத வேறயா, உன் பொழப்பு நல்லா தான் நாறி இருக்கு. பாடிய பில்டப் பண்ண போன உன்ன எடுபிடி ஆக்கிடான்களே

said...

//நாகை சிவா said...
பாண்டி, நம்ம தல மாதிரி உனக்கும் உடம்புல படிக்கட்டு இருக்குமா? //

வாங்க சிவாண்ணே :)) இது வரைஞ்ச உடம்பு இல்லேங்கண்ணா படிக்கட்டு இருக்கறதுக்கு :)))

said...

//இது வரைஞ்ச உடம்பு இல்லேங்கண்ணா படிக்கட்டு இருக்கறதுக்கு :))) //
இப்ப யார நீ கிண்டல் அடிக்குற, தலயவா?

சரி அந்த மேட்டர் விடு, உங்களை விட நான் ரொம்ப சின்ன பையன், என்னயே அண்ணன் கூப்பிடுவத கொஞ்சம் நிறுத்தங்க அண்ணன். நான் சின்ன பையன் சொன்ன, பாண்டியே உன்ன அண்ணன் கூப்பிடும் போது நீ எப்படி சின்ன பையன் கேட்குறாங்க.
அதனால இனி நீங்க அண்ணன், நான் உங்க தம்பி

said...

// நாகை சிவா said...
அத வேறயா, உன் பொழப்பு நல்லா தான் நாறி இருக்கு. பாடிய பில்டப் பண்ண போன உன்ன எடுபிடி ஆக்கிடான்களே //

அட சிவாண்ணே அதைய வுட மாட்டீங்களா ?? இதென்னதிது ராஜரகசியதையெல்லாம் தோண்டுதுருவிகிட்டு ??:))))

said...

நல்ல நகைச்சுவையான பதிவு. உண்மைச் சம்பவமா?

said...

//நாகை சிவா said...
சரி அந்த மேட்டர் விடு, உங்களை விட நான் ரொம்ப சின்ன பையன், என்னயே அண்ணன் கூப்பிடுவத கொஞ்சம் நிறுத்தங்க அண்ணன். நான் சின்ன பையன் சொன்ன, பாண்டியே உன்ன அண்ணன் கூப்பிடும் போது நீ எப்படி சின்ன பையன் கேட்குறாங்க.
அதனால இனி நீங்க அண்ணன், நான் உங்க தம்பி //

அடடா இது ஒரு பிரச்சனையா ?? :)))
எப்படி கூப்பிட்டா என்னா சிவா ? சரி சரி தம்பின்னு கூப்பிட்டு தொலைக்கிறேன் :))))))))))))))

said...

ஹாஹாஹா....

said...

//வெற்றி said...
நல்ல நகைச்சுவையான பதிவு. உண்மைச் சம்பவமா? //

வாங்க வெற்றி ! :))

அட நம்புங்க வெற்றி உண்மைதான் :))

said...

//அடடா இது ஒரு பிரச்சனையா ?? :)))
எப்படி கூப்பிட்டா என்னா சிவா ? சரி சரி தம்பின்னு கூப்பிட்டு தொலைக்கிறேன் :)))))))))))))) //
ஆமாங்க அண்ணா, இந்த பிரச்சனையில் ஒரு சிலர் நம்மளை கழுதையுடன் எல்லாம் கம்பெர் பண்ணிட்டாங்க.

நம்மள தம்பினு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப தாங்கஸ்ங்கணா

said...

//அவனுக முன்னால எல்லாரும் உடம்பு முழுசும் எண்ணெயோட நின்னா நான் மட்டும் உள்ளங்க
கையிலே மட்டும் எண்ணெய்யோட//

ஜொள்ளுப்பாண்டி,

ஜிம்..உடற்பயிற்சி இதெல்லாம் உடல் உறுதிக்குத்தான். இந்தமாதிரி உண்மைபேசுறது தான் பாண்டியோட மன உறுதியக் கூட்டுறது.

நிஜத்தில பெண்கள் உடல் உறுதியைக் காட்டிலும் மன உறுதியைத் தான் அதிகம் நேசிப்பாங்கன்ற உண்மையும் ஜொ.பாண்டி அறிந்திருந்திருக்கிறார் அப்போதே!

said...

கண்மணி பாண்டி...தொடரட்டும் உன் வீர வரலாறு....

நம்ம தல பெஞ்ச் பிரஸ் பண்ண அழகு நாகர்'கோவில்' ஏரியாவில்ல ரொம்ப பிரசித்தம் அவர் தொண்டன் நீ கருரைக் கலக்கி கிழ்ங்கு எடுத்து இருக்கே...

கழக போர்வாளே பாண்டி... கவலை வேண்டாம் உன் இரும்பு கரங்களால் நீ செய்த சேவையைப் பாராட்டி இன்று முதல் உனக்கு ஆயில் பாத் ஆணழகன் என்ற சிறப்பு பட்டத்தை சங்கம் வழங்குகிறது.

இன்று முதல் ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா புதரகம் என சங்கம் எங்கு ஆணழகன் போட்டி நடத்தினாலும் அங்கு வெல்பவருக்கு உன் கையினால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பாக்கியம் கிட்டட்டும்...

ஆயில் பாத் ஆண்ழகன் போர் வாள் பாண்டி... வாழ்க வளர்க

said...

அடப்பாவமே .......

//கொஞ்ச நாளைக்கு ‘ஜிம்’ பக்கமே எட்டிப்பார்கலையே நான்//

அப்படின்னா இப்போ மருக்கா போறீங்களோ? இப்போ என்ன செய்யுரீங்க?

அன்புடன்
சிங்கை நாதன்.

said...

//இலவசக்கொத்தனார் said...
ஹாஹாஹா.... //

வாங்க கொத்ஸ் :)) நம்ம திறன ஆஞ்சு சிரிக்கிறீகளா ?? நல்ல சிரிங்கப்பு !! :))

said...

//நாகை சிவா said...
ஆமாங்க அண்ணா, இந்த பிரச்சனையில் ஒரு சிலர் நம்மளை கழுதையுடன் எல்லாம் கம்பெர் பண்ணிட்டாங்க. //

இதென்ன கலாட்டா சிவா?? கழுதை கூட எல்லாம் கம்பேர் பண்ணீட்டாங்களேன்னு நாம எதுக்கு கவலைப் படனும். கழுதை தானே கவலைப்படனும்??? சங்கத்துல இருந்து கிட்டு என்ன பேச்சு பேசறீங்க ! :))))))))

said...

//Hariharan said...
ஜிம்..உடற்பயிற்சி இதெல்லாம் உடல் உறுதிக்குத்தான். இந்தமாதிரி உண்மைபேசுறது தான் பாண்டியோட மன உறுதியக் கூட்டுறது.

நிஜத்தில பெண்கள் உடல் உறுதியைக் காட்டிலும் மன உறுதியைத் தான் அதிகம் நேசிப்பாங்கன்ற உண்மை //

வாங்க ஹரிஹரன் :)))))

என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு தெளிவு. யப்பா கண்ணுகளா இப்போவாச்சும் தெரிங்சுதா ? கொஞ்சம் பார்த்து ஓட்டுங்கப்பூ ! அண்ணை ஹரி வாழ்க வாழ்க !! :))))))))))

said...

// Dev said...
உன் இரும்பு கரங்களால் நீ செய்த சேவையைப் பாராட்டி இன்று முதல் உனக்கு ஆயில் பாத் ஆணழகன் என்ற சிறப்பு பட்டத்தை சங்கம் வழங்குகிறது.

இன்று முதல் ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா புதரகம் என சங்கம் எங்கு ஆணழகன் போட்டி நடத்தினாலும் அங்கு வெல்பவருக்கு உன் கையினால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பாக்கியம் கிட்டட்டும்...

ஆயில் பாத் ஆண்ழகன் போர் வாள் பாண்டி... வாழ்க வளர்க //

வாங்க தேவண்ணா :))))

//சங்கம் எங்கு ஆணழகன் போட்டி நடத்தினாலும் அங்கு வெல்பவருக்கு உன் கையினால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பாக்கியம் கிட்டட்டும்...//

தேவண்ணா இங்கையும் அதே பணியா?? நம்மள பர்பார்ம் பண்ண உடவே மாட்டீகளா??

ஆயில் பாத் ஆணழகனா??? இதெனாதிது?? பேசாம நான் என்ன ஒகேனக்கல் இல்ல குத்தாலத்திலேயா தொழில தொடங்க வேண்டியதுதானா?? அய்யகோ !!

எடு எண்ணெய்யை காட்டு உடம்பைன்னு டயலாக் பேசியே கலத்தி ஓட்ட வேண்டியது தானா?? :(

தேவு எனக்கு பேரை மாத்து !!! :))

said...

//Senthil said...
அடப்பாவமே .......

//கொஞ்ச நாளைக்கு ‘ஜிம்’ பக்கமே எட்டிப்பார்கலையே நான்//

அப்படின்னா இப்போ மருக்கா போறீங்களோ? இப்போ என்ன செய்யுரீங்க? //

வாங்க செந்தில் ! :)) இப்படிப்பட்ட சிக்ஸருக்கெல்லாம் அஞ்சுபவனா இந்தப் பாண்டி?? Never !! :))))

said...

Enna paandi,

Namellaam mechanical illiyaa!!...
Summa 300cc engine madri illaama lubrication oil kanakkaa irukiyaeppaa!!!

Mansoor

said...

//உள்ள போனா எங்க சீனியருக. அல்லாரும் சும்மா தீவனம் தின்னு வளர்ந்த ப்ராய்லர் சிக்கன் மாதிரி சும்மா ‘கும்’முன்னு ஜட்டியோட இருக்கரானுவ. நான் பரிதாபமா நாட்டுக்கோழிகணக்காவுள்ள இருக்கேன் ! இவனுககூட எங்கடா மோதறது ? கவலையோட போனேன்.//

ஜொள்ஸ், தேவையா உங்களுக்கு..ஆமா நாட்டு கோழி கொழம்பு சூப்பரா இருக்குமாமே?..உங்களுக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா?!!

said...

//நம்மூரு பொண்ணுங்க வேற கோழிக்குஞ்சு கணக்கா இருக்குறாளுவ.//

கோழிக்குஞ்சு ஒண்ணும் இன்னும் மாட்டலியா???

நேத்துகூட ஜிம் பாக்கம் பார்த்த மாதிரி இருக்கு!!!!

said...

இப்படி ஒரு பதிவை எதிர்பாக்கல பாண்டி. ஏன் இப்படி? என்னாச்சு உமக்கு?.

said...

ஆயில் பாத் ஆண்ழகன் பாண்டி இர்ஹு சரி, அது என்ன போர்வாள்? வை. கோ கட்சிக்காரரா?

said...

//Mansoor said ...
Enna paandi,

Namellaam mechanical illiyaa!!...
Summa 300cc engine madri illaama lubrication oil kanakkaa irukiyaeppaa!!!//

வாங்க மன்சூர் :)
என்னா பண்றதுங்கோ சில் சமயம் அப்படி ஆயிடுது :(

said...
This comment has been removed by a blog administrator.
said...

//கவிதா said...
ஜொள்ஸ், தேவையா உங்களுக்கு..ஆமா நாட்டு கோழி கொழம்பு சூப்பரா இருக்குமாமே?..உங்களுக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா?!! //

வாங்க வாங்க கவிதாக்கா :))
நாட்டுக்கோழிக் கொழம்பு ஞாபகப் படுத்தீட்டீயளே ! நல்ல வெடக் கோழியா புடிச்சு கொழம்பு வச்சா வாசனி ஊரைத்துக்கும். ம்ம்ம்ம் அதெல்லாம் எங்க அப்பத்தா கைப்பக்குவம். இப்பெல்லாம் நாட்டுக்கோழிக்கு ருசி கொறஞ்சுடுச்சு :(
ஏதாச்சும் நல்ல 'கோச்சே' கெடச்சா பிரியாணி வச்சு சாப்புடணும்!!

அருஞ்சொற்பொருள்:-
கோச்சே - சண்டை சேவல் :))

said...

//manasu said...
கோழிக்குஞ்சு ஒண்ணும் இன்னும் மாட்டலியா???
நேத்துகூட ஜிம் பாக்கம் பார்த்த மாதிரி இருக்கு!!!! //

வாங்க மனசு :))

கோழிக்கே வழியில்லை நீங்க வேற கோழிக்குஞ்சுக்கு அடிபோடுறீங்க போங்கண்ணே !
காதக் கொடுங்க நம்ம ஜிம் பக்கம் ஒரு நல்ல BPO இருக்குதுங்கோ கேட்கவா வேணும் ?? அவனவன் 5 கிலோ டம்பிள்ஸை எடுத்துகிட்டு 50 கிலோ தூக்குற ரேஞ்சுக்கு சிறிசுல இருந்து பெருசு வரை சும்ம கரச்சலை கொடுக்குதுங்க ! :)))

said...

//ILA(a)இளா said...
//இப்படி ஒரு பதிவை எதிர்பாக்கல பாண்டி. ஏன் இப்படி? என்னாச்சு உமக்கு?.
ஆயில் பாத் ஆண்ழகன் பாண்டி இர்ஹு சரி, அது என்ன போர்வாள்? வை. கோ கட்சிக்காரரா? //

வாங்க வாங்க இளா :))
என்ன ஆச்சுன்னு எந்த அர்த்தத்திலே கேக்குறீங்கன்னே புரியலையே :( என்னடா பேட்டை வாடை இல்லாத பதிவான்னு அதிர்ச்சியிலே கேக்கறீங்களா??
தேவுதான் நம்ம பேரை நாறடிக்கிறாருன்னா நீங்களுமா இளா!!!

போர்வாளு இல்லீங்கோ நான் வெறும் திருக்கை வாலுங்கோ!!! :))))

said...

சரி பாண்டி போட்டியில ஜொயிச்சி கப்பு வாங்கினியே(குடுத்தாங்களா இல்ல கைப்பு மாதிரி நீயே அதே கடையில் போயி வாங்கிட்டு வந்துடியா? ) வச்சி இருக்கியா இல்ல அடகு வச்சிடியா?

said...

//சந்தோஷ் said...
சரி பாண்டி போட்டியில ஜெயிச்சி கப்பு வாங்கினியே(குடுத்தாங்களா இல்ல கைப்பு மாதிரி நீயே அதே கடையில் போயி வாங்கிட்டு வந்துடியா? ) வச்சி இருக்கியா இல்ல அடகு வச்சிடியா? //

அடடே ஆரட்து சந்தோஷண்ணனா வாங்க வாங்க !!:))

எந்த 'கப்'பைக் கேக்கறீங்க ?? பரீச்சையிலே வாங்குனதா?? :) நான் எந்த காலத்துல கப்பு வாங்கியிருக்கேன் பரீட்சையை தவிர?? :))

said...

Good one :)

said...

ஒரு பொண்ணுக்கு முக்கியத்துவம் தராம எழுதுற பாண்டியை கண்டிக்கிறேன். ஒரு கற்பனை, இதுவே Ms.College போட்டியா இருந்தா சந்தோசப்பட்டு இருப்பீங்கதானே. மறைக்காம சொல்லு பாண்டி

said...

//Pavan's Page said...
Good one :) //

வாங்க பவன் :))
ரொம்ப டேங்கஸ்ங்கண்ணா!!

said...

//ILA(a)இளா said...
ஒரு பொண்ணுக்கு முக்கியத்துவம் தராம எழுதுற பாண்டியை கண்டிக்கிறேன். ஒரு கற்பனை, இதுவே Ms.College போட்டியா இருந்தா சந்தோசப்பட்டு இருப்பீங்கதானே. மறைக்காம சொல்லு பாண்டி //

என்னங்க இளா சரி ஒரு பதிவாச்சும் கொஞ்சம் பொண்ணுங்க வாடை இல்லாம போடலாமே பார்த்தா உடமாட்டீங்கறளே:))))

Ms.College போட்டியா எங்கே எங்கே ?? அப்படி ஒருவேளை நடந்திருந்தா மொதோ நாளே போய் மேடைக்கு பக்கத்துலே துண்டு போட்டு இடத்தை புடிச்சிருப்போம்ல?? ;) இதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு :))))

said...

:-))))) JP.. so didnt you attend any female beauty competitions :-D hehehehe !!!

said...

// யாத்திரீகன் said...
:-))))) JP.. so didnt you attend any female beauty competitions :-D hehehehe !!! //

அட அட அட என்னா சந்தோசம்ணா உங்களுக்கு !! எங்க காலேஜ்ல கிடையாதுன்னு சொல்ல வந்தேன் ;))
பார்த்திருக்கேன் ம்ம்ம் ..... ஆனா -பாருங்க beauty competitions ல கலந்துக்காத பல beauties தினமும் பஸ்டாப்புல அங்கே இங்கே எல்லாம் தென்படுதே !!!! :))))

said...

அடடா என்னடா பேட்டை இப்படி வழுக்குதேனு பார்த்தேன் ஜொள்ளுனு நெனைச்சேன் இப்ப தான் புரியுது எண்ணைனு :)

said...

//vaik said...
அடடா என்னடா பேட்டை இப்படி வழுக்குதேனு பார்த்தேன் ஜொள்ளுனு நெனைச்சேன் இப்ப தான் புரியுது எண்ணைனு :) //

வாங்கண்ணா 'வைக்' பேரே கலக்குதே :))
என் சேகம் என்னோடுதான் !! பார்த்தீங்களா இப்படி போட்டு தாகறீங்களே என்னைய :( சரி உங்களுக்கு சந்தோசமாயிருந்தா சரிதான் :)))

said...

//நம்ம தலை வெச்சிருக்குற ஜிம்முலயும் ஒரு ஆள் தேவைப் படுதாம்! //

ennayum serthukka sollunga!

said...

எனக்கும் இத மாதிரி ஜிம்முக்கு போன அனுபவம் உண்டு.

நல்லா எழுதியிருக்கீங்க... :)))
இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2006/07/18/gympandi/

said...

// Vaa.Manikandan said...
//நம்ம தலை வெச்சிருக்குற ஜிம்முலயும் ஒரு ஆள் தேவைப் படுதாம்! //

ennayum serthukka sollunga! //

வாங்க மணி:)) ஜிம்மிலே நீங்களும் புஷ்ஷப்ஸ் எடுத்து புலப்ஸ் போட்ட அனுபவம் இருக்கா?? :)) தாராளமா சேர்ந்துக்குங்கண்ணா !! உங்களுக்கு இல்லாத இடமா?? :))

said...

//Dubukku said...
எனக்கும் இத மாதிரி ஜிம்முக்கு போன அனுபவம் உண்டு.

நல்லா எழுதியிருக்கீங்க... :)))
இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2006/07/18/gympandi/
//

வாங்க வாங்க டுபுக்கு :)) உங்களை பேட்டையிலே பார்த்தது நெம்ம சந்தோசம்ணா !! நீங்களும் ஜிம்முக்கு போனீங்களா?? இப்போ இல்லையா?? தேசிபண்டிட்டில் இணைத்ததுக்கு ரொம்ம டேங்ஸ்ணா !! :)))

said...

நல்ல காமெடி வயிறு குலுங்க சிரிச்சேன்

:)

said...

//தம்பி said...
நல்ல காமெடி வயிறு குலுங்க சிரிச்சேன்//

வாங்க தம்பி ! நீங்க வயிறுகுலுங்க சிரிச்சதைக் கேட்டதுமே ரொம்ப சந்தோசமா இருக்குங்க :))

said...

//வயிறு குலுங்க சிரிச்சேன்//

இதுவே நல்ல உடற்பயிற்சிதான்.

தொப்பை குறையும்.

-சுவாமி பித்தானந்தா!

said...

மணிகண்டனாரையும் எண்ணெய் தேய்க்கும் பணிக்கு சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்!

(எத்தினி நாளுக்குத்தான் 48லயே நிற்பதாம்?)

said...

//வாங்க மணி:)) ஜிம்மிலே நீங்களும் புஷ்ஷப்ஸ் எடுத்து புலப்ஸ் போட்ட அனுபவம் இருக்கா?? :)) தாராளமா சேர்ந்துக்குங்கண்ணா !! உங்களுக்கு இல்லாத இடமா?? :))//

என்னய்யா இது? சங்கத்துக்குப் போட்டியா ஜிம்கம்மா? அந்தப் பக்கம் ஆளையே காணும்?

said...

50 அடிச்சாசில்லா. இப்பம் போயி நிம்மதியா கெடந்து ஒறங்குல. என்ன நாஞ்சொல்லறது....

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
//வயிறு குலுங்க சிரிச்சேன்//

இதுவே நல்ல உடற்பயிற்சிதான்.

தொப்பை குறையும்.

-சுவாமி பித்தானந்தா! //

வாங்க அவதாரப் புருஷர் சிபியண்ணே இப்படியெல்லாம் கமண்டல அவதாரத்திலேயும் பின்னுறீயளே !! :))

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
மணிகண்டனாரையும் எண்ணெய் தேய்க்கும் பணிக்கு சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்!

(எத்தினி நாளுக்குத்தான் 48லயே நிற்பதாம்?) //

அப்புறம் மணிகண்டன் நம்மளை ஊடு கட்டி அடிக்க வந்துருவாரு:( ஓ 50 க்கு தூக்கிவிட்டதுக்கு நன்றிங்கோ !!

said...

//இலவசக்கொத்தனார் said...
//வாங்க மணி:)) ஜிம்மிலே நீங்களும் புஷ்ஷப்ஸ் எடுத்து புலப்ஸ் போட்ட அனுபவம் இருக்கா?? :)) தாராளமா சேர்ந்துக்குங்கண்ணா !! உங்களுக்கு இல்லாத இடமா?? :))//

என்னய்யா இது? சங்கத்துக்குப் போட்டியா ஜிம்கம்மா? அந்தப் பக்கம் ஆளையே காணும்? //

கோச்சுக்காதீங்க கொத்ஸ்ஸூ !! :)) சங்கத்திலதான் நீங்க கரகாட்டம் மயிலாட்டம்னு போட்டு பட்டையக் கெளப்பறீங்களா !! ஒரு பிரமிப்பிலே வெளிய இருந்து பார்துகிட்டு இருக்கேனாக்கும் :))))

said...

//இலவசக்கொத்தனார் said...
50 அடிச்சாசில்லா. இப்பம் போயி நிம்மதியா கெடந்து ஒறங்குல. என்ன நாஞ்சொல்லறது.... //

கொத்ஸ்ஸண்ணா ஆனாலும் உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசண்ணா ! ஆஆஅவ்வ்வ்வ்......
( ஆனந்த அழுகைங்கோ )

said...

jollz,u r so funny.I cannot stop reading your blog.You always make me smile and sometimes laugh and I am afraid people think I am mad for laughing in front of my notebook(laptop).Whenever I see gym I will surely think of you.Keep up the good work!

said...

//thurgah said...
jollz,u r so funny.I cannot stop reading your blog.//

வாங்க துர்கா :)) இப்படியொரு ரசிகையா புல்லரிக்குதே !!!!

//You always make me smile and sometimes laugh and I am afraid people think I am mad for laughing in front of my notebook(laptop).//

அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க துர்கா :)) வாய்விட்டுச் சிரிச்சா ரொம்ப நல்லதுங்க :)

//Whenever I see gym I will surely think of you.Keep up the good work! //

ரொம்ப தேங்ஸுங்க துர்கா !! :))

said...

:))))))))))