Thursday, July 27, 2006

டிசர்ட் (a) Tranquilizer

ஜொள்ளுப்பேட்டைரொம்ப நாளா நானும் பார்துகிட்டு தான் இருக்கேன். ரொம்ப கரைச்சலைக் கொட்டுத்துகிட்டே இருக்குதுக இந்த பொண்ணுங்க. ரோட்டுல, ஷாப்பிங் சென்ட்டர்ல சினிமா தியேட்டருல எங்கயுமே நிம்மதியா இருக்க முடியலெ ! சிக்னல்ல நின்னா இதுக பாட்டுக்கு parallel லா சிக்னல் கொடுதுகிட்டு எவன் செத்தா எனக்கென்னான்னு போய்ட்டே இருக்குதுக ! சரின்னு இதுகளைப்பார்த்தாலே ‘ காக்க காக்க’ ன்னு கந்த சஷ்டிகவசம் சொல்லிட்டு தப்பிக்கலாம்னு பார்த்தா அது பாட்டுக்கு low rise ஜீன்ஸ்ல நம்ம BP ய rise பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி போய்ட்டு இருக்குதுக ! நம்ம கண்ணு இருக்கே நம்ம சொல்லை என்னிக்கு கேட்டு இருக்கு? நீ என்ன வேணா சொல்லிட்டு போ நான் என் வேலைய பார்த்துகிட்டு இருக்கேன்னு மானாவாரியா Browse பண்ணி நம்மளை வாரிடுது !


என்ன பண்றதுன்னெ தெரியலெ ! இப்படித்தான் போன வாரம் நம்ம சகா ஒருத்தனை மீட் பண்றதுக்காக ஒரு ஓட்டல் lounge ல் ஒக்கார்ந்து கிட்டு இருந்தேன். அப்போதான் எதிரிலே ஒரு ரெண்டு பொண்ணுங்க வந்து ஒக்காந்துச்சுங்க. ஒரு பொண்ணு குர்தா டாப்ஸும் ஜீன்ஸும் போட்டு இருந்துச்சு. இன்னோரு குட்டி பிசாசு ஜீன்ஸும் டிசர்ட்டும். கொஞ்சம் நேர ஆராய்ச்சிக்கபுறம் தான் தெரிஞ்சுது அவுங்க அம்மாவும் பொண்ணுன்னு ! இதென்னடா இப்படி ஒரு மார்டன் குடும்பமான்னு பிரமிச்சு போயி இருந்தப்போதான் கவனிச்சேன் அந்த குட்டி பிசாசு போட்டிருந்த டிசர்ட்டுலே என்னமோ எழுதி இருந்துச்சு.

உடனே எனக்குள்ள இருந்த படிப்பு ஆர்வம் குலுக்கி ஓபன் பண்ணுன பீர் பாட்டிலைப் போல பொங்கு பொங்குன்னு பொங்கிருச்சு ! நாமதான் சீவக சிந்தாமணீயிலிருந்து சிட்னி செல்டன் வரை படிக்கறவுக தானே ( சும்ம ஒரு சின்ன பில்டப்பு கண்ணுகுறாதீங்க ! ) ஒரு தம்மாத்துண்டு நாலே நாலு வரி இருக்குற அந்த டிசர்ட் வரிகளை படிக்கனுன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. சரி படிச்சு தொலைக்க வேண்டியதுதானேன்னு கேக்கிறீயளா ? எங்கே ? அந்தக் குட்டி பிசாசு படிக்க உட்டாத்தானே ! மொதோ வரியைப் படிப்பேன் அவ்ளோதான் அங்கிட்டு திரும்பி மம்மின்னு ஏதாச்சும் பேசறது. நம்ம படிப்பு ஆர்வம் தெரியாத மம்மியும் நம்மளை சந்தேகக் கண்ணோட அப்பப்போ செக் பண்ணிகிட்டே வேற இருக்கு. இந்தகுட்டி வேற கண்ணா பின்னானு நெளிஞ்கிட்டு இருக்கரதுல எங்கத்த தெளிவா படிக்கறது?

என்னுடைய பல திறமைகளை உபயோகிச்சி ஒரு வழியா படிச்சிட்டேன் ! வேற ஒன்னும் இல்லை “ Kiss me Before my Boyfriend Comes !” அவ்ளோதான் மேட்டரே. நான் படிச்சுட்டு அதோட மொகத்தை பார்த்தா ஒரு நக்கலான சிரிப்பு வேற. எங்க போயி சொல்றது ! ஆனாலும் இந்த டிசர்ட் இருக்குதே நெசம்மாலுமே கண்ணாபின்னான்னு உபயோகப் படுத்தர வஸ்து ஆயிடுச்சு பொண்ணுக மத்தியிலே. என்னைய மாதிரி பப்ளிக்கா சொல்லிட்டு ஜொள்ளறவனுகளுக்கு இல்லை பப்ளிக்கா சொல்லாம ரகசியமா ஜொள்ளாறவகலுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்னாலும் சமூகப் பொறுப்புன்னு ஒண்ணு இருக்கே ! ( யாராது கை தட்டாமல் இருக்கரது ? )

எனக்கு பல நாளாவே சந்தேகம் ஒருவேளை இந்த டிசர்ட் போட்டுக்கற பொண்ணுக எல்லாம் ஏதாச்சும் அளவு தெரியாம சின்னதா வாங்கிறதுகளோ? பாவம் ! சேலை கட்டுனாதான் தொப்புள் தெரிய கட்டமுடியும் நான் நெனச்சுகிட்டு இருந்தா அந்த நெனப்புல மண்ணள்ளி போடுற மாதிரி டிசர்ட்ல கூட நாங்க தொப்புளைக் காட்டுவோன்னு ஒரு கோஷ்ட்டி சுத்திகிட்டு இருக்கு. அதுக போடுற ஜீன்ஸும் இப்பவோ அப்பவோன்னு கழண்டு வுழுகுற ரேஞ்சுல இருக்கு. அதுக்கு மேல போடுற டிசர்ட் என்னடாண்ணா எங்க இடுப்பைத் தொட்டுருமோன்னு பயதுகிட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கு ! என்னைய மாதிரி ஆளுக பாடுதான் ரொம்பத் திண்டாட்டமா போயிடுது. ! ஏம்மா இப்படி பண்ணுறீங்க ! உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? இங்கிலீஷ் படத்துலே மட்டுமே இதுபோன்ற உடைகளைபார்த்து கெடந்த எனக்கு ரொம்ப நாள் கழிச்சி போன வாரம் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா போனப்போ பார்த்து ‘பல்பு’ ஆய்ட்டேன்.

கொஞ்சநாள் மின்னாடிதான் தாவணியக் காணோம் னு ஒரு பதிவப்போட்டா இப்போ என்னடான்னா சுரிதாரையே காணோமே !!! அன்னிக்கி ஸ்பென்ஸர்ல வந்ததுகள்ள ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் சுரிதாரும் பூவும் வச்சுருந்துச்சுன்னா பார்த்துக்குங்களேன் ! இப்படியே போனா என்ன ஆகப் போகுதோ !! இன்னும் என்னென்னெல்லாம் காணாமப் போகப் போகுதோ !

60 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

T-ஷர்ட் வாசகம்னதும் எழுத்தாளர் சுஜாதாவை நினைக்காம இருக்க முடியல....

said...

பாண்டி இதே தொல்லைதான் இங்கே பெங்களுருலேயும் இருக்கு.டி-சர்ட் வாசகங்கள்தான் கொஞ்சம் அதிக புரட்சிகரமா இருக்கும், அதாலாம் கலக்ட் பண்ணி தனி மெயில் அனுப்புறேன். :-))))))

அப்பாடா சனி,ஞாயிற்றுக்கிழமைகளுக்கு உருப்படியான வேலை கிடைச்சிருக்கு.

said...

//சந்தனமுல்லை said...
T-ஷர்ட் வாசகம்னதும் எழுத்தாளர் சுஜாதாவை நினைக்காம இருக்க முடியல.... //

வாங்க சந்தனமுல்லை :) இனிமே சுஜாதாவோட சேர்த்து என் பேரையும் ஞாபகம் வச்சுக்குங்க ;))) ரொம்ப தேங்ஸ் பேட்டை பக்கம் வந்ததுக்கு :))

said...

// ராம் said...
பாண்டி இதே தொல்லைதான் இங்கே பெங்களுருலேயும் இருக்கு.டி-சர்ட் வாசகங்கள்தான் கொஞ்சம் அதிக புரட்சிகரமா இருக்கும், அதாலாம் கலக்ட் பண்ணி தனி மெயில் அனுப்புறேன். :-))))))

அப்பாடா சனி,ஞாயிற்றுக்கிழமைகளுக்கு உருப்படியான வேலை கிடைச்சிருக்கு. //

ஆஹா வார்ரே வா ராம்கண்ணா :)) ரொம்ப நல்ல சமுதாயப்பணி. சீக்கிரம் பண்ணுங்க ! உங்க மெயில் எப்போ வரும்னு காத்துகிட்டு இருபேன். பெங்களூரு வேறயா கேட்கவே வேண்டாம் காடுல மழைதான் போங்க :)))

said...

When will you put article about collection of T-Shirt words :)))))))

said...

இப்பிடித்தான் ஒரு பொண்ணு சொல்லுச்சாம்...

"இந்தப் பசங்கள்ளாம் ரொம்ப மோசம்டீ... முந்தியெல்லாம் வேட்டியத்தான் காலெல்லாம் தெரிய தூக்கிக் கட்டிக்கிட்டு நடந்து இம்சை பண்ணினாங்கன்னா...இப்ப அரப்பேண்ட்டு முக்காப் பேண்டு போட்டுக்கிட்டு கதறடிக்கிறாங்கடி...நம்மதான் வயிறு தெரியிற மாதிரி போட்டுக்கிட்டு வந்தா இப்ப அவனுங்களும் வயிறு தெரியிற மாதிரி போட்டுக்கிட்டு வர்ராங்க....இவனுக பாட்டுக்க இப்பிடிப் போட்டுட்டு வந்து நம்மள தரும சங்கடம் பண்றாங்களேடேடி...ஒழுங்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வர்ரவனே இல்லையா....அன்னைக்கு இப்படித்தான் ஸ்பென்சர்ஸ் போனா ரெண்டே ரெண்டு பேருதான் ஃபார்மல்ஸ்."

இப்படி உண்மையிலேயே ஒரு பொண்ணு சொன்னதுன்னு தெரிஞ்சா அந்தப் பொண்ணப் பத்தி என்னவெல்லாம் சொல்லுவீங்கப்பா...ஆனா நீங்க மட்டும்..ம்ம்ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்....

பசங்களுக்கான டீசட்டைகளப் பத்தித் தெரியலை போலிருக்கு. போடுறதில்லையா! அதுல இருக்குறது என்னன்னு நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன். ;-) நான் என்னோட ரெண்டு கண்ணால பாத்தேன். சென்னையிலதான். "சிக் மை டக்" இத ஆங்கிலத்துல எழுதிப் பாருங்க.

said...

//நம்ம கண்ணு இருக்கே நம்ம சொல்லை என்னிக்கு கேட்டு இருக்கு? நீ என்ன வேணா சொல்லிட்டு போ நான் என் வேலைய பார்த்துகிட்டு இருக்கேன்னு மானாவாரியா Browse பண்ணி நம்மளை வாரிடுது //

வாஸ்த்தவமான பேச்சுத் தான்...//இந்தகுட்டி வேற கண்ணா பின்னானு நெளிஞ்கிட்டு இருக்கரதுல எங்கத்த தெளிவா படிக்கறது?//

யோவ் ஜொள்ளு.., ஒன்னும் பார்க்கலை, ஒன்னும் பார்க்கலைனு நல்லா என்ஜாய் பண்ணிருப்ப போல,
மச்சம்யா உனக்கு.,(வயித்தெரிச்சல் எனக்கு)..,


//இந்த டிசர்ட் போட்டுக்கற பொண்ணுக எல்லாம் ஏதாச்சும் அளவு தெரியாம சின்னதா வாங்கிறதுகளோ?//

பாவம் அவங்கெல்லாம் ஏழைங்க...
பெரிய டிரெஸ் வாங்க கஸ்டப்படுற குடும்பம் போல..


//அன்னிக்கி ஸ்பென்ஸர்ல வந்ததுகள்ள ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் சுரிதாரும் பூவும் வச்சுருந்துச்சுன்னா பார்த்துக்குங்களேன் //

அப்போ முழு நேரமும் இது தான் வேலையா..?


//இப்படியே போனா என்ன ஆகப் போகுதோ !! இன்னும் என்னென்னெல்லாம் காணாமப் போகப் போகுதோ //

என்ன ஆகும் ,
நீங்கள் "டீசர்ட், ஜீன்ஸை காணலை",ஸ்கர்ட்டை காணலைனு" பதிவு போடுவீங்க...
ஆமா இப்படியே போச்சுன்னா 2050-ல
என்ன தலைப்புல பதிவு போடுவீங்க...அன்புடன்...
சரவணன்.

said...

எப்பா பாண்டி, தொப்பள் தெரிய டி சர்ட் போடுவது ஒல்டு பேசனாம், இப்ப வேற ஒரு கூத்து அடிச்சிக்கிட்டு இருக்காங்க. அந்த கொடுமைய வேணுமுனா உனக்கு தனியா சொல்லுறேன்.

இந்த டி.சர்ட் வாசகம் இந்தியாவில் மட்டும் இல்ல உலக முழுக்க இருக்கு. ஒரு சில வாசகங்களை படித்தால் நமக்கு தான் வெட்கமா இருக்கு. அதுங்களுக்கு இல்ல. ஹுக்கும் என்னத பண்ண, நாம வாங்கி வந்த வரம் அப்படி....

said...

பாண்டி என்னமோத் தெரியல்ல...

தலைவர் பாட்டு மனசுக்குள்ளே ஓடுது.... சரி உனக்காக அது என்னப் பாட்டுன்னு சொல்லுறேன்

படிச்சாப் போதும்ன்னு நினைக்காதேப்பா
இங்கேப் படிச்சுப்புட்டு பட்டம் விட்டா பறக்காதுப்பா...

LAZY BOY சொன்னாரு நான்
பாடுறேன் அவ்வளவே...

said...

இவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி சும்மா விட்டுட்டு வந்துடீங்களே ஜொள்ஸ்..எப்படி உங்களை என் தம்பின்னு வெளியில சொல்லிக்கறது.. ம்ம்.. மிஸ் பண்ணீடீங்க..

சனீஸ்வரன் மாதிரி கண்ணுல ஒரு துணிய கட்டிட்டு போங்க இனிமே..இந்த பொண்ணுங்கள நம்ப முடியாது..இப்படி அத இதன்னு படிக்கவைச்சு உங்க BP ஐ இன்கீரீஸ் பண்ணிடுவாங்க..

said...

//Anonymous said...
When will you put article about collection of T-Shirt words :))))))) //

வாங்க அனானி ஏன் பேரைத்தான் சொல்றது :) டிசர்ட் வார்த்தைகள்தானே? அதான் ராம் கலெட் பண்ணி எனக்கு அனுபிச்ச உடனே போட்டுர வேண்டியதுதான்:)

said...

//G.Ragavan said...
பசங்களுக்கான டீசட்டைகளப் பத்தித் தெரியலை போலிருக்கு. போடுறதில்லையா! அதுல இருக்குறது என்னன்னு நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன். ;-)//

வாங்க வாங்க ராகவன்ஜி:)) என்னா இது பசங்க டி சர்ட் போட்டா என்னா போடாட்டிதான் என்ன ? என்ன பேச்சு பேசறீங்க :) அதையெல்லாம் பாக்கறதுக்கு எங்க ஜி எனக்கு நேரம் ;))

said...

//உங்கள் நண்பன் said...

யோவ் ஜொள்ளு.., ஒன்னும் பார்க்கலை, ஒன்னும் பார்க்கலைனு நல்லா என்ஜாய் பண்ணிருப்ப போல,
மச்சம்யா உனக்கு.,(வயித்தெரிச்சல் எனக்கு)..,//]

வா நண்பா ;)),
நான் பார்க்க ஆசைப்பட்டது வாசகங்களைத்த்விர வேறொன்ரும் இல்லை என அறுதியிட்டு கூறுகிறேன் ;)) வயித்தெரிச்சல் எதுக்கு வாங்க உங்களையும் ஊர்வலுதுக்கு கூட்டிகிட்டு போறேன் ;))

//அப்போ முழு நேரமும் இது தான் வேலையா..?//

என்ன இது புதுசா கேட்குறீங்க ! என் வேலையே இதுதானே நண்பா !:)

//என்ன ஆகும் ,
நீங்கள் "டீசர்ட், ஜீன்ஸை காணலை",ஸ்கர்ட்டை காணலைனு" பதிவு போடுவீங்க...
ஆமா இப்படியே போச்சுன்னா 2050-ல
என்ன தலைப்புல பதிவு போடுவீங்க...//

நண்பா என்ன இப்படி 40 வருடங்களுகுப்பின் என்ன ஆகும்னு கேட்டு பயமுறுத்துறீங்க ??:)) வேற ஏதாச்சும் வராமயா போய்டும்? :))

said...

//அதையெல்லாம் பாக்கறதுக்கு எங்க ஜி எனக்கு நேரம் ;))//

ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ மை பாய். உன் பேரை நல்லா வெளங்க வெச்சிட்டு இருக்கே...நடத்து நடத்து!

said...

//“ Kiss me Before my Boyfriend Comes !” // - அவங்க சொல்லியும் நீங்க செய்யாததை வன்மையாக கண்டிக்கிறேன் :)
இதல்லாம் ஜுஜுபி இன்னும் நிறைய போட்டு அலையறாங்க.

said...

//ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ மை பாய். உன் பேரை நல்லா வெளங்க வெச்சிட்டு இருக்கே...நடத்து நடத்து!//

வாங்கப்பூ கைப்பூ :)))
உங்க பேரை உலக அளவுல பிரபலப் படுத்தரதுதானே என் வேலை !!:)))

said...

// கவிதா said...
இவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி சும்மா விட்டுட்டு வந்துடீங்களே ஜொள்ஸ்..எப்படி உங்களை என் தம்பின்னு வெளியில சொல்லிக்கறது.. ம்ம்.. மிஸ் பண்ணீடீங்க..

சனீஸ்வரன் மாதிரி கண்ணுல ஒரு துணிய கட்டிட்டு போங்க இனிமே..இந்த பொண்ணுங்கள நம்ப முடியாது..இப்படி அத இதன்னு படிக்கவைச்சு உங்க BP ஐ இன்கீரீஸ் பண்ணிடுவாங்க.. /

வாங்க வாங்க கவிதாக்கா :))

என்னாது என்னைய தம்பின்னு சொல்லிகறதா? நான் ஒரு தங்கக் கம்பின்னு தெரியலையா??

கண்ணைக் கட்டிகிட்டு போகணுமா??? ஐயகோ என்ன கொடுமை இது? சோறு தண்ணி இல்லாமல் வேனா இருந்தரலாம் ஆனா பார்க்காம எப்படி நான் இருப்பேன் :)))))

said...

//Dev said...
பாண்டி என்னமோத் தெரியல்ல...
படிச்சாப் போதும்ன்னு நினைக்காதேப்பா
இங்கேப் படிச்சுப்புட்டு பட்டம் விட்டா பறக்காதுப்பா...//

வாங்கண்ணா தேவண்ணா :))

ஆமா அல்லாரும் ஒரு கூட்டமாத்தான் கெளம்பியிருப்பீங்க போல இருக்கே !! :)) நான் நல்ல இருக்கறது புடிக்கலையா ? சரி அடுத்த தடவை ட்ரை பண்ணிப் பாக்கிறேன். அதையௌம் ஒரு காமெடிப் பதிவா போட்டுடமாட்டேன்:))))

said...

//நாகை சிவா said...
எப்பா பாண்டி, தொப்பள் தெரிய டி சர்ட் போடுவது ஒல்டு பேசனாம், இப்ப வேற ஒரு கூத்து அடிச்சிக்கிட்டு இருக்காங்க. அந்த கொடுமைய வேணுமுனா உனக்கு தனியா சொல்லுறேன்.
ஒரு சில வாசகங்களை படித்தால் நமக்கு தான் வெட்கமா இருக்கு. ஹுக்கும் என்னத பண்ண, நாம வாங்கி வந்த வரம் அப்படி.... //

வாங்க தம்பி சிவா :)) சந்தோசமா சொல்றீயளா இல்லை துக்கமா சொல்றீயளான்னே தெரியலையே?? நீங்க எதுக்கு வெக்கப் படுறீக? ஆமா ஆமா இருக்காதா பின்னே ;))) சரி அப்படியே அந்த வாசகங்களை மெயில் மூலமா தட்டி வுடுங்கப்பூ:))

said...

//vaik said...
//“ Kiss me Before my Boyfriend Comes !” // - அவங்க சொல்லியும் நீங்க செய்யாததை வன்மையாக கண்டிக்கிறேன் :)
இதல்லாம் ஜுஜுபி இன்னும் நிறைய போட்டு அலையறாங்க. //

வாங்க வைக் :))

வன்மையா நீங்க கண்டிக்கலா. பண்ணியிருந்தா பின்னியிருப்பாங்களே யோசிச்சீங்களா ?? :(( இதெல்லாம் ஜுஜூபியா?? அப்பசி என்னங்க வைக் எழுதியிருக்காங்க? சும்மா ஒரு அறிவுப் பசிக்காத்தான் கேக்குதேன் ;))

said...

ஹலோ பாண்டி,

ஜொள்ளு இருந்தாலும் ஒரு நல்ல கருத்தும் ஜாலிய சொல்லப்பட்டிருக்கு.

உங்கள் எழுத்துநடை நல்ல இருக்கு, ஜாலியா போகுது. விடாம எழுதுங்க.

பி.கு: எப்ப ரொம்ப கடுப்பா இருந்தாலும் உங்க பிளாக் வந்து ஒன்னு ரெண்டு பதிவை படித்தால் டென்சன் ரிலாக்ஸ் பண்ண வச்சிடுரீங்க. நன்றி.

said...

//We The People said...
ஹலோ பாண்டி,
ஜொள்ளு இருந்தாலும் ஒரு நல்ல கருத்தும் ஜாலிய சொல்லப்பட்டிருக்கு.
உங்கள் எழுத்துநடை நல்ல இருக்கு, ஜாலியா போகுது. விடாம எழுதுங்க.

பி.கு: எப்ப ரொம்ப கடுப்பா இருந்தாலும் உங்க பிளாக் வந்து ஒன்னு ரெண்டு பதிவை படித்தால் டென்சன் ரிலாக்ஸ் பண்ண வச்சிடுரீங்க//

வாங்க சங்கர் :))

ரொம்ப தேங்ஸ் ! இப்படியெல்லாம் என்னைய புகழாதீங்க அப்புற நான் அழுதுருவேன் :))))) அடிக்கடி பேட்டக்கு வாங்கண்ணா :)) !!!

said...

// //G.Ragavan said...
பசங்களுக்கான டீசட்டைகளப் பத்தித் தெரியலை போலிருக்கு. போடுறதில்லையா! அதுல இருக்குறது என்னன்னு நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன். ;-)//

வாங்க வாங்க ராகவன்ஜி:)) என்னா இது பசங்க டி சர்ட் போட்டா என்னா போடாட்டிதான் என்ன ? என்ன பேச்சு பேசறீங்க :) அதையெல்லாம் பாக்கறதுக்கு எங்க ஜி எனக்கு நேரம் ;)) //

ஜொ.பா, அதென்ன அப்படிச் சொல்லீட்ங்க..பசங்கங்குற வகையில டீசட்ட போடுற வழக்கம் எனக்கு உண்டு....கடைக்க்குப் போயி எடுக்கும் போது நாலு வகையும் பாக்குறதுண்டு...நீங்க பாக்குறதில்லைன்னா....... ;-) கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.

said...

//G.Ragavan said...
ஜொ.பா, அதென்ன அப்படிச் சொல்லீட்ங்க..பசங்கங்குற வகையில டீசட்ட போடுற வழக்கம் எனக்கு உண்டு....கடைக்க்குப் போயி எடுக்கும் போது நாலு வகையும் பாக்குறதுண்டு...நீங்க பாக்குறதில்லைன்னா....... ;-) கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.//

ஆஹா ராகவன்ஜி :)) தப்பாஎடுத்துக்காதீங்க !!! நான் கடையிலே வாங்க போறப்போ டிசர்ட்டை பாக்குறதுதான். ஆனா டிசர்ட் போட்ட பசங்களைப்பாக்கறதுக்கு துக்குதான் நேரம் இல்லையின்னு சொன்னேன். டிசர்ட் போட்ட பொண்ணுங்க இருக்கறப்போ எப்படி???ஹிஹிஹீஹிஹிஹ்ஹிஹிஹ்ஹிஹி :))))

said...

///வாங்க அனானி ஏன் பேரைத்தான் சொல்றது :) டிசர்ட் வார்த்தைகள்தானே? அதான் ராம் கலெட் பண்ணி எனக்கு அனுபிச்ச உடனே போட்டுர வேண்டியதுதான்:) ///

I am new to blogger world.I didn't know how to put comments in blogs. so you don't think i didn't have brave heart.

My name is vendan... karvendan..

ok va annathey!!!.

said...

தல,
சுஜாதா மட்டுமல்ல, PKP கூட டி-ஷர்ட் வாசகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

எனக்குக் கிடைத்த சில டி-ஷர்ட் வாசகங்கள்(ஆண்களுக்கு):

I Was Born Intelligent,
But Education Ruined Me.

Nobody is Perfect.
I am Nobody

Virginity is not Dignity
It is just lack of Oppertunity

99% of all women are Beautiful
the remaining 1% are in my office

Not all men are fools
Some stay Bachelors

Women are like elephants...
look at them
never own one

:)

said...

//I am new to blogger world.I didn't know how to put comments in blogs. so you don't think i didn't have brave heart.
My name is vendan... karvendan..
ok va annathey!!!.//

அடடா வாங்க கார்வேந்தன் :)) ஐயோ உங்களுக்கு தைரியம் இல்லேன்னு சொல்லுலைங்கண்ணா .பேரு சொல்லி கூப்டா மரியாதையா இருக்குமேன்னுதான் :)) பேரைச் சொன்ந்துக்கு ரொம்ப தேங்ஸ்ங்கண்ணா :))

said...

//அருள் குமார் said...
தல,
சுஜாதா மட்டுமல்ல, PKP கூட டி-ஷர்ட் வாசகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.//

வாங்க வாங்க அருள் :)))
டிசர்ட்டு வார்த்தையெல்லாம் கொடுத்து அசத்தறீங்களே !!! :))

//99% of all women are Beautiful
the remaining 1% are in my office//

ஹிஹிஹிஹி பார்த்து! இந்த டிசர்டை போட்டுட்டுபோனா முதுகுல டின்னு கட்டீர மாட்டாங்க ஆபீஸ்ல இருக்குர தாய்குலங்கள் எல்லாம்?? :)))

said...

அய்யா ஜொள்ளரே,

"Handful aren't they?"
"Wish these were my brains"

இப்படியெல்லாம் போட்டு ஆபீசுக்கே வர்றாங்க பெண்கள் , பெங்களூருல தான். அதனால தான் ஜுஜுபினு சொன்னேன். ஒரு டிசன்சிக்காக போன பன்னூட்டத்துல சொல்லல. நீங்க கேட்டிங்களேனு சொல்றேன்.
பி.கு: ரொம்ப ஓவரா தெரிஞ்சா இத வெளியிடாதீங்க :)

said...

//நம்ம படிப்பு ஆர்வம் தெரியாத //

இந்த ஆர்வம் புல்லரிக்க வெக்குதுங்கோ.. :-)

said...

//சேலை கட்டுனாதான் தொப்புள் தெரிய கட்டமுடியும் நான் நெனச்சுகிட்டு இருந்தா அந்த நெனப்புல மண்ணள்ளி போடுற மாதிரி//

ஜொல்ஸ் எந்த காலத்துல இருக்கீங்க...நம்ம தமிழ் சினிமால தொப்புள்ல ராக்கட் உடாதது தான் பாக்கி..மத்த படி பொன்னுங்கள தப்பு சொல்லபடாது...தொவச்சதுக்கு அப்புறம் டிசர்ட் சுருங்கி போனா பாவம் அவுக என்ன பன்னுவாக...

said...

//இவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி சும்மா விட்டுட்டு வந்துடீங்களே ஜொள்ஸ்//

கிளம்பிட்டாங்கையா..கிளம்பிட்டாய்ங்க...

said...

அட அட என்னா ஒரு narration... பின்னரீங்க..
///உடனே எனக்குள்ள இருந்த படிப்பு ஆர்வம் குலுக்கி ஓபன் பண்ணுன பீர் பாட்டிலைப் போல பொங்கு பொங்குன்னு பொங்கிருச்சு//

எடுத்துக்காட்டு கூட tranqulising effect ஓட..

//என்னுடைய பல திறமைகளை உபயோகிச்சி ஒரு வழியா படிச்சிட்டேன்//

இது வேற இதுல..

இனி மேலாவது இப்படி காணவில்லை அறிக்கை எல்லாம் விடாதீங்க.. விபரீதம் ஆயிடும்

said...

//vaik said...
அய்யா ஜொள்ளரே,
இப்படியெல்லாம் போட்டு ஆபீசுக்கே வர்றாங்க பெண்கள் , பெங்களூருல தான். அதனால தான் ஜுஜுபினு சொன்னேன். //

வாங்க வைக் :)))
ஆஹா என்ன ஒரு அருமையான வாசகம் ;)) எடுத்துக்கொடுத்ததுக்கு ரொம்ப தேங்ஸ்ணா :)) பெங்களூரு பெங்களூருதான் !!!

said...

//Syam said...
இந்த ஆர்வம் புல்லரிக்க வெக்குதுங்கோ.. :-) //

ஹிஹிஹி கண்டுகுறாதீங்க ஷ்யாம் ;)

//பொண்ணுங்கள தப்பு சொல்லபடாது...தொவச்சதுக்கு அப்புறம் டிசர்ட் சுருங்கி போனா பாவம் அவுக என்ன பன்னுவாக... //

அட ஆமாம் ! பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க ! நம்மபாடுதான் திண்டாட்டமாய்டுது :))

said...

//மங்கை said...
அட அட என்னா ஒரு narration... பின்னரீங்க.. //

வாங்க வாங்க மங்கை :)) பின்னல்லாம் இல்லீங்க :) (தன்னடக்கம் கண்டுகாதீங்க ! :)

//இனி மேலாவது இப்படி காணவில்லை அறிக்கை எல்லாம் விடாதீங்க.. விபரீதம் ஆயிடும் //

என்ன பேச்சு பேசறீங்க மங்கை ?? என்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை இவ்வுலகம் அறிய வெளியிட்டு சமுதாயம் பயனுறவே இப்பணிகளை செய்து வருகிறேன் என்று சொன்னால் அது மிகையல்ல :)) ம்ம்ம்....

said...

I cannot stop laughing when I see this.I never thought that guys would be so disturbed seeing this as this is a common view nowadays!

said...

//Anonymous said...
I cannot stop laughing when I see this.I never thought that guys would be so disturbed seeing this as this is a common view nowadays!//

வாங்க அனானி :)) நல்லா சிரிங்க ! பசங்க பார்த்திட்டு டிஸ்டர்ப் ஆவாங்கன்னு நெனக்கலையாஆஆஅ???
எப்படீங்க ? அதுவும் எங்க என்ன எழுதியிருக்குங்கறதுதானே பிரச்சனை :))
உங்க பேரைத்தான் சொல்றது ! சாதாரணம் தான் எனக்கு அசாதாரணமா தெரியுதே !! :))

said...

பசங்க பார்த்திட்டு டிஸ்டர்ப் ஆவாங்கன்னு நெனக்கலையாஆஆஅ???
எப்படீங்க ? அதுவும் எங்க என்ன எழுதியிருக்குங்கறதுதானே பிரச்சனை :))

I don't dare to say my name here.Then you will shoot me for sure.Have self control or don't be too eager to see what writen in girls t shirt.simple solution for the problem.

said...

//Anonymous said...
I don't dare to say my name here.Then you will shoot me for sure.Have self control or don't be too eager to see what writen in girls t shirt.simple solution for the problem. //

ok.பேரைச் சொல்லாட்டி போங்க :) ஆமா எனக்கு டிசர்ட்ல என்ன எழுதியிருக்குன்னு படிக்கால்லாம் ஆர்வம் ஒன்னும் இல்லீங்க. என்னடா இப்படி ஒரு டிசர்ட் போட்டுகிட்டு இருக்கோம் பார்காமலே போறானேன்னு அந்தப் பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிடக் கூடாது பாருங்க ;)).

said...

நீங்க உண்மையிலேயே சரியான ஜொள்ளர்தான்...

:))

said...

OMG you are funny.Poor guy!I wonder how you would behave if you are in Singapore...hmmm don't come here because you will get more disturbed,you even cannot handle a t-shirt.

said...

I am not sure that girl going to be heartbroken but you will surely would be heartbroken if you don't read that!right!!!!!!!

said...

// செந்தழல் ரவி said...
நீங்க உண்மையிலேயே சரியான ஜொள்ளர்தான்...//

வாங்க செந்தழல் ரவி :))
யார்கிட்டயும் சொல்லாம இருந்தேன் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே ;))

said...

//thurgah said...
OMG you are funny.Poor guy!I wonder how you would behave if you are in Singapore...hmmm don't come here because you will get more disturbed,you even cannot handle a t-shirt. //

OMG - Oh My God?? வாங்க துர்க்கா :)நான் சிங்கபூர்ல இருந்தா என்னாங்க சென்னையிலே இருந்தா என்ன ம்ம்ம் நீங்க எச்சரிச்சிட்டீங்க ! ஜாக்கிரதையா இருந்துக்குறேன்:)) ஆயிரம்தான் இருந்தாலும் டிசர்ட்டு....:)))

said...

//Anonymous said...
I am not sure that girl going to be heartbroken but you will surely would be heartbroken if you don't read that!right!!!!!!! //

வாங்க வாங்க அனானி என்னைய உடமாட்டீங்க போல!!:))) அவங்க மனசொடிஞ்சு போனா எனக்கு மனசு தாங்குமா?? ;)))மத்தபடி எனக்கு கல்லு மனசுங்கோவ் !!! :))

said...

girls heart means your heart will broke....guys heart means you heart won't break?not fair....u r a reall jollu

said...
This comment has been removed by a blog administrator.
said...

//வாங்க வாங்க ராகவன்ஜி:)) என்னா இது பசங்க டி சர்ட் போட்டா என்னா போடாட்டிதான் என்ன ? என்ன பேச்சு பேசறீங்க :) அதையெல்லாம் பாக்கறதுக்கு எங்க ஜி எனக்கு நேரம் ;)) //

ரீபீட்டு.. இப்படியே பசங்களை பாத்துட்டு இருந்தா நமமளை வேற மாதிரின்னு நினைச்சிடுவாங்க.. ஜொள்ள்ஸ் நாலு பேரு வந்து போற இடம் நம்ம பேரை கொஞ்சம் நல்ல மாதிரியா போடுறது :)) கல்யாணம் ஆகாத புள்ளப்பா யாராவது பாத்துட்டு தாலி கைல இருக்கும் பொழுது கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க(என் கவலை எனக்கு)..

said...

//Anonymous said...
girls heart means your heart will broke....guys heart means you heart won't break?not fair....u r a reall jollu //

அடடா என்ன இப்படி உரிமைப் பிரச்சனையக் கெளப்புறீங்க !!!:)))

said...

//சந்தோஷ் said...
ரீபீட்டு.. இப்படியே பசங்களை பாத்துட்டு இருந்தா நமமளை வேற மாதிரின்னு நினைச்சிடுவாங்க.. ஜொள்ள்ஸ் நாலு பேரு வந்து போற இடம் நம்ம பேரை கொஞ்சம் நல்ல மாதிரியா போடுறது :)) கல்யாணம் ஆகாத புள்ளப்பா யாராவது பாத்துட்டு தாலி கைல இருக்கும் பொழுது கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க(என் கவலை எனக்கு).. //

வாங்க சந்தோஷ் வாங்க :)) அட நீங்க வேற சந்தோஷ் ஏன் தேவையில்லாத கவலை எல்லாம்?? சும்மா லூஸிலே விடுங்க !! :)))

said...

// சும்மா லூஸிலே விடுங்க !! :))) //
எதை :)) சரி விட்டாச்சி

said...

hehe...what to do I just love picking up fight with you!next time don't see all this ok?

said...

//சந்தோஷ் said...
// சும்மா லூஸிலே விடுங்க !! :))) //
எதை :)) சரி விட்டாச்சி //

ரொம்ப தேங்ஸுங்க சந்தோஷ் :))

said...

//Anonymous said...
hehe...what to do I just love picking up fight with you!next time don't see all this ok? //

அய்யா/அம்மா
யாருண்ணா/ யாரும்மா நீங்க ?? என்னோட சண்டிஅயெல்லாம் எதுங்குங்க ??:)) நான் சரண்டர் !!! :)))

said...

என்ற தம்ழ் கொஞ்ஜம் கஷ்டம் தான் இருந்தாளும் நா ஒன்ற சொல்லிக்குரென்..."அட பாவிகளா!! நீங்க ரொம்ப ஜொல்லு தான்!! பார்தது இல்லாம அதை ப்லொகு'வெற பன்னுரிங்களா?! நல்ல வெலை Blog police'னு யாரும் online இவ்-டீசிங் என்ற பேர்ல புடிக்க வரமாட்டாங்க ...இல்லனா!!? ஐய்ய-கோ..ஏதொ சம்திங் சம்திங் பர்த்தோமா.... சும்மா கம்முனு இருந்தோமா'னு இல்லாம...எதுக்கு இந்த வீன் பரிட்ஜை?! எல்ல பெண்களும் ஸ்ட்ரைக்'னு பொனால்... உங்க நிலமைய யொசிச்சு பர்த்திங்களா?...அப்புரம எப்ரல்-மெயிலெ பசுமையெல்லை
காஜ்சு போச்சுடா'னு புலம்ப வெண்டியது...... :P..உஙளுக்கு அது பதிரி கஷ்டம் குடுக்க குடாதுனு நினைச்சாங்களொ என்ன்வொ!!... :) இத்தெல்லாம் அனுபவிக்கொனும் ஆராய கூடாது...பெண்கள் எங்கள் கண்கள்...அது மாதிரி பொற்றோனும்.. என்றா?! ஜொள்ளு...புரிஜ்சுதா 'லெ?;)

said...

//சுகன்யா ஷ்ரி said...
என்ற தம்ழ் கொஞ்ஜம் கஷ்டம் தான் இருந்தாளும் நா ஒன்ற சொல்லிக்குரென்...//

வாங்க சுகண்யா ஷ்ரி :)) கொஞ்சம் இல்லீங்க நெறையவே !! என்கிட்டே வேணா தமிழ் கத்துகுங்களேன் :)))


//"அட பாவிகளா!! நீங்க ரொம்ப ஜொல்லு தான்!! பார்தது இல்லாம அதை ப்லொகு'வெற பன்னுரிங்களா?! நல்ல வெலை Blog police'னு யாரும் online இவ்-டீசிங் என்ற பேர்ல புடிக்க வரமாட்டாங்க ...//

என்னாங்க இப்படி வாரிவிடறீங்க. இது ஈவ் டீசிங்கா?? அய்யகோ அப்படீன்னா பேசாமயே இப்படி டிசர்ட் போட்டு எங்களை டீஸ் பண்ணுறீங்களே அதுக்கு பேரு என்னவாம்?

//ஏதொ சம்திங் சம்திங் பர்த்தோமா.... சும்மா கம்முனு இருந்தோமா'னு இல்லாம...//

அட என்ன இப்படி சொல்லீட்டீக? யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படீங்கற உயர்ந்த உள்ளம் கொண்டவன்க நானு ;)))

//பெண்கள் எங்கள் கண்கள்...அது மாதிரி பொற்றோனும்.. என்றா?! ஜொள்ளு...புரிஜ்சுதா 'லெ?;) //

அம்மணி நீங்க சொல்றீங்க ஜொள்ளுபண்டி அப்படி நடக்கிறான் ஓகேவா ? :))

said...

{வாங்க சுகண்யா ஷ்ரி :)) கொஞ்சம் இல்லீங்க நெறையவே !! என்கிட்டே வேணா தமிழ் கத்துகுங்களேன் :)))}

Jollu...பெயர்லயே ஜொல்லுனு இருக்கும் போது நான் அப்படிப்பட்ட விபரிதமான முடிவயெல்லாம் எடுக்க மாட்டென்...:P


{என்னாங்க இப்படி வாரிவிடறீங்க. இது ஈவ் டீசிங்கா?? அய்யகோ அப்படீன்னா பேசாமயே இப்படி டிசர்ட் போட்டு எங்களை டீஸ் பண்ணுறீங்களே அதுக்கு பேரு என்னவாம்?
}

இப்படித்தான்..ஒரு கசுமாலம்.. சொன்னான்... அவன...வுட்-ப்ரிட்ஜ்'னு ஒரு மனநல மருத்துவமனை இங்க இருக்கு...அதுக்கு டிக்கெட் வாங்கிக்கிட்டான்,,,தெவையா?? jus kidding:P....சரி சரி...உங்க காமெடி ப்லொக் பொச்ட் எல்லாம் நல்ல இருக்கு...புத்தகத்த...படிபேனொ இல்லையொ.. உங்க புலம்பல்கல தொடர்ந்து படிப்பேன்..ஒகெ?

said...

//சுகன்யா ஷ்ரி said...
Jollu...பெயர்லயே ஜொல்லுனு இருக்கும் போது நான் அப்படிப்பட்ட விபரிதமான முடிவயெல்லாம் எடுக்க மாட்டென் //

அட என்னாங்க சுகன்யா நான் பெயரிலே மட்டும்தாங்க ஜொள்ளு ! நான் சாமியாருன்னு சொன்னாதானே நீங்க பயப்படனும் ;))))

//உங்க காமெடி ப்லொக் பொச்ட் எல்லாம் நல்ல இருக்கு...புத்தகத்த...படிபேனொ இல்லையொ.. உங்க புலம்பல்கல தொடர்ந்து படிப்பேன்..ஒகெ? //

ரொம்ம சந்தோசம்ங்க அம்மணி! பேட்டைக்கு அடிக்கடி வாங்கோ :))

said...

டி-சர்ட் வாசகம்ன்னா ஓவியர் ஜெயராஜை யாரும் நினைவுபடுத்தவே இல்லை. அவருடைய படங்களில் இருந்த வாசகங்கள் பல பிரச்சனையை இண்டு பண்ணின.. எனக்கு நினைவில் அவர் ஒரு பனியனில் 'TNDDC' என்று எழுதியிருந்தார்.TNDDC- Tamil Nadu Diary Development Corporation