Monday, July 03, 2006

மிஸ் Understanding

மிஸ் Understanding
காலேஜில நமக்கும் லேப்புக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தான்.முதோ முதலா வேற 'வைவா '( அதாங்க ஒக்கார வச்சு கேள்வி கேட்பாங்களே) attend பண்ணப் போறப்போ பசங்க எல்லாம் நம்மளை நல்லா மந்திரிச்சு விட்டானுங்க !

“பாண்டி லேப் பண்ணாட்டியும் வைவா கேட்டாங்கன்னா வாயில கொழுக்கட்டைய வச்சு அடைச்ச மாதிரி ஒக்காந்திருக்காதே.ஏதாச்சும் பதில் சொல்லியே ஆகனும் அப்போதான் ஏதோ பய படிச்சிருக்கான்னு நெனச்சு பாஸ் பண்ணி விடுவானுங்க என்ன? “ என பலவிதமாக தயார் பண்ணி அனுப்பினானுங்க. உள்ளுக்குள்ள உதரல் இருந்தாலும் “எனக்கேன்ன பயம் ? only fear !”ன்னு டயலாக் பேசிச்சி மனசு. ஏதோ லேப். கேட்டாரு ப்ரொபசர் “ What is surface tension? “ உடனே பதில் தெரியாட்டியும் என்னோட ஆறாவது அறிவை உபயோகிச்சு சொன்னேன் “ The tension developed on the surface is called surface tension! ரொம்ப டென்சன் ஆகிட்டாரு வாத்தியாரு. இதுக்கு மேல கேள்வி கேட்கறதிலே அர்த்தம் இலையின்னு சரி பய ஏதோ ஊர்நாட்டுல இருந்து வந்திருக்கான்னு மன்னிச்சி பாஸ் போட்டு விட்டுட்டாரு.

வாத்தியாரை வாழ்த்திட்டு வந்துட்டேன். ரெண்டாவது வருசம் ஏதோ மெக்கானிகல் லேப்.நம்ம தாய் ப்ராஞ்ச் அதுதானே. வாத்தியார்க எல்லாம் ரொம்ப சிம்பிளாத்தான் கேள்வி கேப்பாங்க ! அன்னைகின்னு பார்த்து நமக்கு ஆகாத ஒரு வாத்தி ! “ what is an air blower? “ இவ்ளோ சிம்பிளான கேள்விக்கு பதில் தெரியலைனா எப்படி ? படார்னு சொன்னேன் “It blows the air !” பதில் லாஜிக்கா கரெட்டா தெரிஞ்சாலும் ஒரு இன்ஜினியரிங்க ஸ்டூடெண்ட் கொஞ்சம் டெக்னிகலா சொல்லனும்னு சொல்லி அனுப்பீட்டாரு.

இப்படியாக எனது தாய் நாடான மெக்கானிகல் ப்ராஞ்சில் கோலேச்சிக் கொண்டிருதப்போதான் மூணாவது வருஷம் புதுசா மைக்ரோ ப்ராசசர் லேப். எலக்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தது அந்த லேப். எப்பவுமே இந்த மெக்கானிகலுக்கும் எலக்ரானிக்ஸ் வாத்தியார்களுக்கும் ஆகவே ஆகாது. வாத்தியார் லெவலில் மட்டும் தான் மத்தபடி கலரான ப்ராஞ்ச் அதுதானே ! இந்த எலக்ட்ரானிக்ஸ் பசங்களுக்கு கலர் கலராப் பொண்னுங்க கூட படிக்குதுன்னு அவனுக விடுற உதார் இருக்கே சொல்ல தனி பதிவுதான் போடனும். சம்மட்டி எடுத்தி இரும்பை காய்ச்சி அடிச்சிகிட்டு இருக்கர லேபில இருக்கிற மெக்கானிகல் பசங்க கிட்டே போயி ஒரு பூந்தோட்டதிலே விட்ட மாதிரி இந்த லேப். ரொம்பத்தான் மெரட்டினாங்க வாத்தியாருக எல்லாம். என்னதான் மெரட்டினாலும் எங்களுக்கு கொஞ்சம் கூட கோவமே வரலை. இன்னும் திட்ட மாட்டாங்களான்னுதான் இருந்துச்சு. அதுக்கு முழு காரணம் அந்த பூனைக் கண் சுஜாதா மிஸ் !

சேவல் பண்ணையா இருக்குற எங்க மெக்கானிகல் ப்ராஞ்ச்சிலே இருந்துட்டு திடீர்னு ஒரு நந்தவனத்துகுள்ள விட்ட மாதிரி இருந்துச்சு. ஏதோ ஆளுக்கொரு சூட்கேஸ் மாதிரி கொடுத்து இதுதான் ‘மைக்ரோ ப்ரசசர் கிட்.’ போய் ப்ரொக்ராம் பன்ணுங்கடான்னு விட்டுட்டாங்க. கையிலே வேற கலர்க்கலரா ஒயருக வேற கையிலயும் கலரு சுத்தியிலும் கலரு என்ன பண்ணுவோம் நாங்க?. என்ன பண்றது எப்படிப் பண்ரதுன்னு எவனுக்கு தெரியும்? ஒரு இரும்பைப் கொடுத்தமா பர்னஸ்ல காட்டி ‘ L ‘ பெண்டு பண்ணுனமான்னு இல்லாம என்னமோ கால்குலேட்டர் மாதிரி கொடுத்து லேபிலே விட்டுட்டாங்க. லேபிலே எங்களுக்கு சுஜாதா மிஸ்தான் இன்சார்ஜ். எங்க பசங்க குறும்புக்கு கேட்கவா வேணும்? சுஜாதா மிஸ் எங்களை திட்டுறதா நெனச்சுகிட்டு என்னன்னமோ சொல்லிகிட்டு இருப்பாங்க. ஒரு பொமரேனியன் நாய்குட்டி உங்களைப் பார்த்து குரைச்சா யாருக்காவது பயப்படத்தோனுமா ? சொல்லுங்கப்பு! ரசிக்கத்தானே தோணும்? அப்படியாக்கா சுஜாதா மிஸ் திட்ட திட்ட அவங்க மேல ஒரே crush ஆகிப் போச்சு. கொச்சையா ஜொள்ளுன்னு சொல்ல முடியாது. இது ஒரு மரியாதை கலந்த ஜொள்ளுன்னு வேணா சொல்லலாம் ! அதுக்கு காரணம் சுஜாதா மிஸ் மிஸசாக இல்லாமல் மிஸ்ஸாகவே இருந்ததாக் கூட இருக்கலாம்.

எப்டியோ மிஸ்ஸை மிஸ் பண்ணாம லேப் அட்டென்ட் பண்ணி பல கஷ்டமான ப்ராக்ரம்களை லாஜிக் புரியுதோ இல்லையோ (மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ப்ரோக்ராம் எழுதிப் பார்போமில்ல ? ) மைக்ரோப்ராசசரில் தட்டி மிஸ்ஸிடம் காட்டி நல்ல பெயரை கஷ்டப்பட்டு சம்பாரிச்சாச்சு. பலன்? நம்மளைப் பார்த்தா மிஸ் சில மில்லி மீட்டர் புன்னகையை எக்ஸ்ட்ராவா அள்ளித்தெளிக்கும் அளவுக்கு கொண்டாந்தாச்சு !. அப்பாடா என்ன ஒரு சந்தோசம் தெரியுமா ? இப்படியா போய்கிட்டு இருந்தப்போதான் செமஸ்டர் எக்சாம் வந்துச்சு.

மைக்ரோ ப்ராசசர் லேப்னாலே பலபேருக்கு பேதி பிச்சிக்கும். தெகிரியமா போனேன். இன்ப அதிர்ச்சி . எங்க மிஸ் சுஜாதாதான் internal Examinar ! வாரே வா. மிஸ்ஸு மொகத்தைப் பார்த்தாலே பயம் எல்லாம் பதுங்கீடுச்சு. இருந்தாலும் வைவா இவங்கதானே கேப்பாங்க? பதில் சொல்லி அசத்திபுடனும்டா பாண்டின்னு மனசுகுள்ளே சொல்லிகிட்டேன். லேப் பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்கு வைவா ஒருபக்கம் ஓடிகிட்டு இருக்கு. ரெண்டு ரெண்டு பேரா ஒக்கார வச்சு மிஸ் கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்க. என்னோட பார்ட்னர் முனிராசு. நம்ம முனிராசு இருக்கானே எல்லாம் என் ரேஞ்சுக்குத்தான் படிப்பான்.

கூப்டாச்சு.நானும் அவனும் போனோம். மிஸ்ஸுக்கு முன்னாடி ஒரு மைக்ரோ ப்ராசசர் பொட்டி இருந்துச்சு. மொதல்ல முனிராசுகிட்டேதான் கேட்டாங்க show me the microprocessor ! பய என்னமோ கீழ உழுந்த ஊசியத்தேடுன மாதிரி பெஞ்ச்சு புல்லா தேடு தேடுன்னு தேடறான். எனக்கா சிரிப்பு பிச்சிகிட்டு வருது. என்னடா இது முன்னாடியே இவ்ளோ பெரிய பொட்டி இருக்கு காட்ட வேண்டியதுதானேன்னு! பொட்டிக்குள்ள வேற தேடுறான். கப்பிப்பய! கண்டே புடிக்கல.

சுஜாதா மிஸ் என்னைப் பார்த்தாங்க. அதே கேள்வி. உடனே பொட்டிய காட்டுனேன். “ This suitcase is called microprocessor ” . அதிர்ச்சியோட பார்த்தாங்க மிஸ் என்னைய. என்ன இது சரியாத்தானே சொன்னேன். எத்தனை தடவை மைக்ரொப்ரரசசர் கொடுங்கன்னு வாங்கியிருப்பேன். திரும்பவும் கேட்டாங்க “Are you sure? “ எனகென்ன சந்தேகம் “yes mis “ . ஒகே நீங்க போகலாம்னு அனுப்பி விட்டுட்டாங்க. என்னடாது ஒரே கேள்வில அனுப்பி விட்டுட்டாங்கன்னு ஆச்சரியம் !

மிஸ் மொகத்தைப் பார்த்தேன் . நம்மளைப் பார்த்து ஒரு கேவலமான பார்வை பார்த்தாங்க ! கூடவே ஒரு நக்கலான சிரிப்பு வேற. பக்கத்தில இருந்த வாத்திகிட்டே என்னைய காட்டி ஏதோ சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. ஒண்ணுமே புரியலே. வெளிய வந்து எனக்கு ப்ரோக்ராம் சொல்லிக் கொடுத்த பயலுவ கிட்டே கேட்டா அவனுகளுக்கும் ஒரே சிரிப்புத்தான். “மாப்ளே பாண்டி! மைக்ரோப்ராசசர் ங்கரது ஒரு CHIP டா. நீ போயி மொத்த பொட்டியையே ப்ராசசர்ன்னு சொல்லிட்டயே !”

அடப்பாவிகளா மைக்ரோப்ராசசர்ல ப்ரோக்ராம் பண்ண சொல்லிக் கொடுத்தீங்க. ஆனா அது ஒரு chip ன்னு சொல்ல மறந்துட்டீங்களேடா ! அதுதான் அந்த முனிராசுப் பய தேடோதேடுன்னு தேடிகிட்டு இருந்தானா ? சுஜாதா மிஸ் என்னவோ நம்மளை பாஸ் பண்ணி விட்டுட்டாங்க.ஆனா என்னைய காலேஜுக்குள்ள எங்க பார்த்தாலும் அவங்களுக்கு சிரிப்பு பிச்சிகிட்டு வந்துரும். நம்ம நிலைமை இப்படியா ஆகனும் ?


56 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

படிக்கவே மனசு ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டமா .:(

ஏற்கெனவே சிந்து அப்புறம் பைரவி, இப்ப சுஜாதா ம்ம் ஆடு மச்சி ஆடு..

said...

//ப்ரொபசர் “ What is surface tension? “ உடனே பதில் தெரியாட்டியும் என்னோட ஆறாவது அறிவை உபயோகிச்சு சொன்னேன் “ The tension developed on the surface is called surface tension! ரொம்ப டென்சன் ஆகிட்டாரு வாத்தியாரு.//

ஜொள்ஸ், எப்படி ஜொள்ஸ் இப்படி எல்லாம் வாத்தியார டென்ஷன் பண்றீங்க.. நான் வைவா போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட தான் டியூஷன்னுக்கு வரதா முடிவு பண்ணிட்டேன்..

said...

yeppa.. supperruppa.. yepudippa ithenllam.. thaana vararanummilla..

Excellant.. excellant.. your writing

Krish

said...

பாண்டி, நம்மக்கு தெரிஞ்ச ஒரே விசயம் அந்த Micro Processor தான். நாம என்னைக்கு கிளாஸ்க்கு போயி இருக்கோம், அந்த பாடத்த எடுத்த மேடம், என்னை தனியா அழைத்து நல்லா தீட்டிட்டு, எனக்கு மட்டும் தனியா சொல்லி கொடுத்தாங்க. அந்த மேடத்துக்கு ஒரு கோடி புண்ணியம். அந்த பாடத்தில் நான் முத மார்க் வேற எடுத்தேன். அதுக்கு பரிசு வேற குடுத்தானுங்க. இதே கருமத்தை தான் நான் வேலைக்கு சேரும் போது கேட்டானுங்க, NIIT ல Seminar எடுக்கும் போதும் இதே Micro Processor. எனக்கு பல விதத்தில் வொர்க அவுட் ஆன Micro Processor உன்ன இப்படி பழி வாங்கிடே...
8085 ஆ இல்ல 8086 ஆ...

said...

ஆகா பாண்டி,
ஒனக்கும் இந்த மாதிரி நடந்துருக்கா? சிமெண்டும், கான்க்ரீட்டுமா இருக்குற எங்க கையில ஷீட் மெட்டல் வர்க்ஷாப்ல(உங்க டிபார்ட்மெண்ட் தான்யா) ஒரு தகரத் துண்டைக் குடுத்து வளைச்சு கோன் எல்லாம் பண்ண சொல்லி செம டார்ச்சர்யா. வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போல. நல்லா காமெடியா எழுதியிருக்கேயா.
:)

said...

// மின்னுது மின்னல் said...
படிக்கவே மனசு ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டமா .:(

ஏற்கெனவே சிந்து அப்புறம் பைரவி, இப்ப சுஜாதா ம்ம் ஆடு மச்சி ஆடு.. //

வாய்யா மின்னலு :)) என்னத்தை ஆடுறது ? அதான் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சே ! :(

said...

//நாம என்னைக்கு கிளாஸ்க்கு போயி இருக்கோம், அந்த பாடத்த எடுத்த மேடம், என்னை தனியா அழைத்து நல்லா தீட்டிட்டு, எனக்கு மட்டும் தனியா சொல்லி கொடுத்தாங்க//
ரெண்டாவது லைனுக்குக்காகத் தானே முதல் லைன்ல இருக்கிறதே செஞ்சீங்க? ஜொ.பா, உங்களுக்கு இதெல்லாம் தெரியாம போய்டுச்சே!!

said...

//கவிதா said...

ஜொள்ஸ், எப்படி ஜொள்ஸ் இப்படி எல்லாம் வாத்தியார டென்ஷன் பண்றீங்க.. நான் வைவா போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட தான் டியூஷன்னுக்கு வரதா முடிவு பண்ணிட்டேன்.. //

வாங்க கவிதாக்கா :)
வை வாவுக்கு என்கிட்டே டியூசனா?? ஏன் உங்களுக்கு பாஸ் பண்ணனும்னு ஆசை இல்லையா???? :)))))

said...

//Anonymous said...
yeppa.. supperruppa.. yepudippa ithenllam.. thaana vararanummilla..

Excellant.. excellant.. your writing

Krish //

வாங்க க்ரிஷ் ! :))
ரொம்மப தேங்ஸ் பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு :))

said...

// நாகை சிவா said...
இதே Micro Processor. எனக்கு பல விதத்தில் வொர்க அவுட் ஆன Micro Processor உன்ன இப்படி பழி வாங்கிடே...
8085 ஆ இல்ல 8086 ஆ... //

வாங்க சிவாண்ணே ! :))

இப்படித்தான் பல பேருக்கு ஒர்க் அவுட் ஆகுது நம்மளுக்கு ஆப்படிக்குது :((
எல்லாம் 8085 தான் (பேருதான் நல்லா ஞாபகம் இருக்கு ) :))))

said...

//கைப்புள்ள said...
ஆகா பாண்டி,
ஒனக்கும் இந்த மாதிரி நடந்துருக்கா? சிமெண்டும், கான்க்ரீட்டுமா இருக்குற எங்க கையில ஷீட் மெட்டல் வர்க்ஷாப்ல(உங்க டிபார்ட்மெண்ட் தான்யா) ஒரு தகரத் துண்டைக் குடுத்து வளைச்சு கோன் எல்லாம் பண்ண சொல்லி செம டார்ச்சர்யா. வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போல. நல்லா காமெடியா எழுதியிருக்கேயா.
:) //

வாங்க தல.....!

நீங்க civil லா ?? கோன் பண்ணுணீங்களா?? ஏன் கஷ்டப்பட்டீங்க? அப்படியே நம்ம மெக்கானிகல் லேபிலே இருக்குர attenders கிட்டே கண்ணைக் காமிச்சா போதுமே வேற எவனாச்சும் பன்ணி வச்சிருக்குற கோனை எடுத்து நம்ம கையில கொடுத்துடுவாங்கல்ல? ?? அப்புறம் நாமதான் அதைப் பண்ணினதா போடுக்கலாம்! மெக்கானிகல் லேப் வாழ்க்கையிலே இதேல்லாம் தண்ணிபட்ட பாடு தல ! :)))))

said...

ஏலே பாண்டி,

நீ எப்படியோ நல்லா படிச்சபையனு காட்டி பிட்டேல்லே...!அதுவும் இஞ்சினியர் படிப்புனு வேற....??! கலக்கு மச்சி பிகரா வரிசை வரிசையா ரவுண்டு கட்டப்போகுதுக... !!!!!! :-((((

said...

சிவிலே தான் நைனா!

//கோன் பண்ணுணீங்களா?? ஏன் கஷ்டப்பட்டீங்க? அப்படியே நம்ம மெக்கானிகல் லேபிலே இருக்குர attenders கிட்டே கண்ணைக் காமிச்சா போதுமே வேற எவனாச்சும் பன்ணி வச்சிருக்குற கோனை எடுத்து நம்ம கையில கொடுத்துடுவாங்கல்ல? ?? அப்புறம் நாமதான் அதைப் பண்ணினதா போடுக்கலாம்! மெக்கானிகல் லேப் வாழ்க்கையிலே இதேல்லாம் தண்ணிபட்ட பாடு தல ! :)))))//

அதை சொல்ல வேணாம்னு தான் நெனச்சி பாலிஷா பூசுனாப்புல சொன்னேன். உன் ஆலோசனைப் படித் தான்யா பைனல் எக்ஸாம்ல ஒரு கோனுக்கு ஆசைப்பட்டு நாங்க துட்டு குடுக்க, அத மெக்கானிகல் ப்ரஃபெஸர் பாத்துட, வேத்து டிபார்ட்மெண்ட் சப்ஜெக்ட்ல் ஒன்னா ரெண்டா- நாலு க்ரெடிட்டு கப்பு வாங்குற லெவலுக்குப் போயிடுச்சு. எதோ பாவம் பாத்து பாஸ் பண்ணி வுட்டாங்க. நாலு க்ரெடிட்னா என்னனு கேக்கிறியா? கப்பு வாங்கினா அடுத்த செமஸ்டர் டைம்டேபிளை அட்ஜஸ்ட் பண்ணி(அடுத்த dept டைம்டேபிள்) ஒரு வாரத்துல நாலு அவரு திரும்ப அட்டெண்ட் பண்ணனும், ஏற்கனவே இருக்கிற சொந்த டிப்பு கோர்ஸோட. இதல்லாம் ஆவுறதா யோசிச்சிப் பாரு. எதோ எங்க புண்ணியம் ஜஸ்ட்ல எஸ் ஆனோம்.

said...

Naanum Microprocessor lab exam la, program calculator la eludhitu poi, atha enter panna kuda teryaama mulitha kadhai nabahathuku vanthathu....

Mansoor

said...

//நீங்க civil லா ?? கோன் பண்ணுணீங்களா?? ஏன் கஷ்டப்பட்டீங்க? அப்படியே நம்ம மெக்கானிகல் லேபிலே இருக்குர attenders கிட்டே கண்ணைக் காமிச்சா போதுமே வேற எவனாச்சும் பன்ணி வச்சிருக்குற கோனை எடுத்து நம்ம கையில கொடுத்துடுவாங்கல்ல? ?? அப்புறம் நாமதான் அதைப் பண்ணினதா போடுக்கலாம்!//

அடடா! இது வேறையா?!!

said...

ஜொள்ளுப்பாண்டியின் ஜொள்ளுப்பேட்டை ப்ளாக்-க்கு விஜயம் செய்தாலே நம்ம PC மதர் போர்டு ஈரமாகி CPUல் உள்ள Pentium4 processor எல்லாம் Short Circuit ஆகிடுதும்மா!

வலைப்பதிவுகளில் நடக்கும் ஜாதீ,திராவிட, ஆரிய- குழாயடி சண்டைகளுக்கு மத்தியில், ஆளை அயரவைக்கும் 50டிகிரி குவைத் வெயிலின் நடுவே ஒதுங்க ஜில்"சைட்"

said...

:))

//எப்பவுமே இந்த மெக்கானிகலுக்கும் எலக்ரானிக்ஸ் வாத்தியார்களுக்கும் ஆகவே ஆகாது//

எல்லா இடத்துலயுமே இதே கதை தானா..இவங்க திருந்தவே மாட்டாங்களா..

said...

//ரெண்டாவது லைனுக்குக்காகத் தானே முதல் லைன்ல இருக்கிறதே செஞ்சீங்க//
ஆகா, நம்ம நேர்மை சந்தேகப்பட்டீங்களே. எங்க காலேஜ்ல வந்து கேட்டு பாருங்க, சிவா இந்த விசயத்தில் பத்தரை மாசம் தங்கம் சொல்லுவாங்க (காலேஜ்ல மட்டும் தான்)
நம்ம என்னா தான் சேட்டை பண்ணுனாலும், அங்க இருந்த முக்கால்வாசி வாத்தியார்களுக்கு நம்ம மேல ஒரு தனி பாசம் தான். தனியா கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுவது என்ன, வராட்டியும் அட்டென் டன்ஸ் போடுவது என்ன, நம்ம மேல ஏதும் action எடுக்க இருந்தா, அது நமக்கு சொல்வது என்ன, போல பல என்ன என்ன தான்........ இன்னிக்கும் நாம காலேஜ்க்கு போனா நமக்கு தனி மரியாதை தான்.......

said...

//எல்லாம் 8085 தான் (பேருதான் நல்லா ஞாபகம் இருக்கு ) :)))) //
இருந்தாலும் பொட்டி சைஸ் ரொம்ப தான் பெரிசு. இப்ப எல்லாம் சின்ன தா வந்துருச்சு பாண்டி.

said...

ஜொள்ஸ்,

நான் மைக்ரோப்ராசசர் தியரில மொத அட்டம்ட்டுல வாங்குனது '004'! அதுவும் 8086 ஆர்க்கிடெக்சருன்னு ஒரு டப்பா போட்டு நாலு காலு போட்டதுக்கு!

விடுங்கப்பு! துன்பம் நிறைந்த மாணவ வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்! :)))

said...

paandi brother... மிஸ் Understanding ... appo neenga maadiyile irukkom pothu சுஜாதா மிஸ் keezhe ground floor-la ninnukittu irunthaangala.. :-)

ennoamo ponga மிஸ்-a ippadi miss panniteenga...kuthi mathippa suitcase-a thotthu kaamichi "this is microprocessor" appadeenu solli iruntha kooda OK... :-)

said...

ஜொ.பாண்டி அண்ணே,

இப்படி ஒரு கத எழுதி எல்லாத்துகிட்ட இருந்தும் அவங்க சோக கதைய போட்டு வாங்கலாம்ன்னு பாக்குறயா
:-)))) முடியாது நான் சொல்ல மாட்டேன்.

said...

நீங்களும் சிந்து போனா சுஜாதானு விடாது படை எடுத்து தான் பார்க்கறீங்க...நெக்ஷ்ட் யாரு :-)

said...

பாண்டி,
"வைவா"ல நம்ம சகா ஒரு பெரும் கூத்து செஞ்சான். இங்கேயும் அதே மெக்கு, எலெக்ரிக்கல் பிரச்சனைதான். எங்க வாத்தியார்கலெல்லாம் எங்ககிட்ட நல்லபடியா நடந்தாலும் மெக்கானிக்கல் பசங்களை வாட்டிதான் எடுப்பாங்க. அதுல காஞ்சுபோன நம்ம மெக்கானிக்கல் சகா ஒருத்தன் வைவால "ஷண்ட் மோட்டார்" எப்படி ஒடுதுன்னு கேட்டதுக்கு வாயால "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ன்னு சவுண்ட் குடுத்தான் பாருங்க. அப்ப வாத்தியாருக்கு எறுன பி.பி ய அளந்தா அந்த அளக்குற மிசினே வெடிச்சுடும். எல்லாத்தையும் தூக்கிவீசிட்டு இந்த பக்கமே வரமாட்டேன்னுட்டு போய்ட்டாரு. அப்புறம் பெரிய பஞ்சாயத்து செஞ்சு அழைச்சு வர வேண்டியதா போச்சு. அப்படியும் அவனை பாஸ் போட்டு அனுப்பிட்டாரு. ஏன்னா பெயில் போட்டா திரும்பி வருவானில்ல.

said...

நாங்க கஷ்டப்பட்டதெல்லாம், இந்த hexagonal L-bit செய்யத்தான். தெரிந்திருந்தால், ஆள் மாறாட்டம் செய்திருக்கலாமே, வைவா அன்று மட்டும்

said...

//ராம் said...
ஏலே பாண்டி,

நீ எப்படியோ நல்லா படிச்சபையனு காட்டி பிட்டேல்லே...!அதுவும் இஞ்சினியர் படிப்புனு வேற....??! கலக்கு மச்சி பிகரா வரிசை வரிசையா ரவுண்டு கட்டப்போகுதுக... !!!!!! :-(((( //

வாங்க ராம் ! :) இதுலெ வருத்த்ப்படவோ சந்தோசப்படவோ என்ன இருக்கு? நம்மளை வரிசையா ரவுண்டு கட்டுனா ஏதோ வெளுக்கப் போறாகன்னுதான் அர்த்தம் நம்ம அகராதியில :))))

said...

//கைப்புள்ள said...
சிவிலே தான் நைனா!
அதை சொல்ல வேணாம்னு தான் நெனச்சி பாலிஷா பூசுனாப்புல சொன்னேன். //

அடடா தல காலேஜிலே நீங்க நம்மளை மாதிரி ஒரு ஆளை வச்சி attender ஐ புடிச்சிருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது. ஆனாலும் நம்ம ப்ராஞ்ச் வாத்தியாருக எல்லாம் ரொம்ப தங்கமான மனுசங்க ஆச்சே! சும்மா மெரட்டியிருப்பாங்க ! :)))

said...

//Mansoor said...
Naanum Microprocessor lab exam la, program calculator la eludhitu poi, atha enter panna kuda teryaama mulitha kadhai nabahathuku vanthathu....//

வாங்க மன்சூர் அண்ணே ! :) பலபேரு பல்பு வாங்கியிருப்பீக போல தெரியுதே ! :))

said...

//கவிதா said...
அடடா! இது வேறையா?!! //

என்ன கவிதாக்கா :)) இப்படி சொல்லிபுட்டீக? இன்னும் கெமிஸ்ரி லேபிலே சால்ட் கொடுக்கரப்பவே சால்ட் பேரை சொல்லிக் கொடுத்த ஸ்கூல் லேப் அட்டென்டர் கதையே இருக்க இது என்ன ஜுஜுபி ! :))))

said...

// Hariharan said...
ஜொள்ளுப்பாண்டியின் ஜொள்ளுப்பேட்டை ப்ளாக்-க்கு விஜயம் செய்தாலே நம்ம PC மதர் போர்டு ஈரமாகி CPUல் உள்ள Pentium4 processor எல்லாம் Short Circuit ஆகிடுதும்மா!//

வங்க ஹரியண்ணா ! :)) short circuit ஆகுதா ?? ஆகக்கூடாதே ! அனேகமா நீங்க ஒரு கர்சீப் மெயின்டெய்ன் பண்ணுனா சரியாப்பூடும்னு நெனக்கிறேன் :)))))))) பேட்டைப் பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப தேங்ஸ்ணா!!

said...

//கப்பி பய said...
:))

//எப்பவுமே இந்த மெக்கானிகலுக்கும் எலக்ரானிக்ஸ் வாத்தியார்களுக்கும் ஆகவே ஆகாது//

எல்லா இடத்துலயுமே இதே கதை தானா..இவங்க திருந்தவே மாட்டாங்களா.. //

வாங்க கப்பி ! (பேரே கலக்குது ! )
உங்க காலேஜிலையும் இதே கதையா? என்ன பண்றது பலாப்பழக் கடையிலே இருந்தா ஈய வெரட்டிதானே ஆகனும் ! :))))

said...

//பொன்ஸ் said...
//நாம என்னைக்கு கிளாஸ்க்கு போயி இருக்கோம், அந்த பாடத்த எடுத்த மேடம், என்னை தனியா அழைத்து நல்லா தீட்டிட்டு, எனக்கு மட்டும் தனியா சொல்லி கொடுத்தாங்க//
ரெண்டாவது லைனுக்குக்காகத் தானே முதல் லைன்ல இருக்கிறதே செஞ்சீங்க? ஜொ.பா, உங்களுக்கு இதெல்லாம் தெரியாம போய்டுச்சே!! //

வாங்க பொன்ஸக்கா ! :))
என்னக்கா பண்றது எனக்கு அவ்ளோ வெவரம் பத்தாது !:((

said...

// நாகை சிவா said...
//எல்லாம் 8085 தான் (பேருதான் நல்லா ஞாபகம் இருக்கு ) :)))) //
இருந்தாலும் பொட்டி சைஸ் ரொம்ப தான் பெரிசு. இப்ப எல்லாம் சின்ன தா வந்துருச்சு பாண்டி. //

வாங்க சிவாண்ணே ! :)) என்னதான் பொட்டி சிறுசுன்னாலும் மேட்டர் பெருசாச்சேண்ணே !!:)))

said...

// இளவஞ்சி said...
ஜொள்ஸ்,

நான் மைக்ரோப்ராசசர் தியரில மொத அட்டம்ட்டுல வாங்குனது '004'! அதுவும் 8086 ஆர்க்கிடெக்சருன்னு ஒரு டப்பா போட்டு நாலு காலு போட்டதுக்கு!

விடுங்கப்பு! துன்பம் நிறைந்த மாணவ வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்! :))) //

வாங்க இளவஞ்சி !!! மார்க்கைச் சொல்ல உங்களுக்கு 'தில்' இருக்கு எனக்கு இல்லையே !! :(((. துன்பம் இருந்துச்சுதான் ஆனா அது இன்பமா இருதுச்சே!! :)))))))

said...

//நீங்க civil லா ?? கோன் பண்ணுணீங்களா?? ஏன் கஷ்டப்பட்டீங்க? அப்படியே நம்ம மெக்கானிகல் லேபிலே இருக்குர attenders கிட்டே கண்ணைக் காமிச்சா போதுமே வேற எவனாச்சும் பன்ணி வச்சிருக்குற கோனை எடுத்து நம்ம கையில கொடுத்துடுவாங்கல்ல? ?? அப்புறம் நாமதான் அதைப் பண்ணினதா போடுக்கலாம்! மெக்கானிகல் லேப் வாழ்க்கையிலே இதேல்லாம் தண்ணிபட்ட பாடு தல ! :)))))//

கைப்ஸ் வீட்டுக்கு வீடு வாசப்படி!?!

said...

//manasu said...
கைப்ஸ் வீட்டுக்கு வீடு வாசப்படி!?! //

வாங்க மனசு ! :)) சரி சரி உங்களுக்கும் அப்படித்தானா ?? சும்ம சொல்லுங்கப்பூ வெக்கபடாதீங்க ! :))

said...

//lord labakkudoss said...
paandi brother... மிஸ் Understanding ... appo neenga maadiyile irukkom pothu சுஜாதா மிஸ் keezhe ground floor-la ninnukittu irunthaangala.. :-)//

வாங்க லாடுலபக்கு ஆனாலும் ரொம்பத்தேன் குசும்பு உங்களுக்கு :)))

said...

//Karthik Jayanth said...
ஜொ.பாண்டி அண்ணே,//

தல கார்த்தி நான் அண்ணனா நோஓஓஓஓஓஓஒ !!! அப்புறம் உங்க கவிதை எப்படி இருக்கு ??
;)))

said...

//Syam said...
நீங்களும் சிந்து போனா சுஜாதானு விடாது படை எடுத்து தான் பார்க்கறீங்க...நெக்ஷ்ட் யாரு :-) //

வாங்க ஷ்யாம் :)) நான் எங்கங்க படையெடுத்தேன்! :( சருக்குன கதை பல இருக்கு. ஒவ்வொண்ணா சொல்லிட்டு வாரேன் ஓகேவா?? :)))

said...

//சோழநாடன் said...
பாண்டி,
"வைவா"ல நம்ம சகா ஒரு பெரும் கூத்து செஞ்சான். இங்கேயும் அதே மெக்கு, எலெக்ரிக்கல் பிரச்சனைதான். எங்க வாத்தியார்கலெல்லாம் எங்ககிட்ட நல்லபடியா நடந்தாலும் மெக்கானிக்கல் பசங்களை வாட்டிதான் எடுப்பாங்க. அதுல காஞ்சுபோன நம்ம மெக்கானிக்கல் சகா ஒருத்தன் வைவால "ஷண்ட் மோட்டார்" எப்படி ஒடுதுன்னு கேட்டதுக்கு வாயால "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ன்னு சவுண்ட் குடுத்தான் பாருங்க. அப்ப வாத்தியாருக்கு எறுன பி.பி ய அளந்தா அந்த அளக்குற மிசினே வெடிச்சுடும். எல்லாத்தையும் தூக்கிவீசிட்டு இந்த பக்கமே வரமாட்டேன்னுட்டு போய்ட்டாரு. அப்புறம் பெரிய பஞ்சாயத்து செஞ்சு அழைச்சு வர வேண்டியதா போச்சு. அப்படியும் அவனை பாஸ் போட்டு அனுப்பிட்டாரு. ஏன்னா பெயில் போட்டா திரும்பி வருவானில்ல. //

வாங்க சோழா !! :))))

உங்க சகா நம்மளைவிட பெரும்பார்ட்டியா இருப்பாரு போல இருக்கே !!!:)))

said...

//கஸ்தூரிப்பெண் said...
நாங்க கஷ்டப்பட்டதெல்லாம், இந்த hexagonal L-bit செய்யத்தான். தெரிந்திருந்தால், ஆள் மாறாட்டம் செய்திருக்கலாமே, வைவா அன்று மட்டும் //

வாங்க கஸ்த்தூரி ! அதுக்குபோயா கஷ்டப்படீங்க? Foundry ல இருக்குற shelf ல தேடினாக் கூட கெடைக்குமே ! அப்படியே இல்லாட்டியும் உங்களுக்கு ரெண்டு நம்பருக்கு முன்னால இருக்கரவன் submit பண்ணுன L -Bitடை எடுத்து திரும்பவும் submit பண்ணியிருக்க வேண்டியதுதானே ??? :)))) பொழைக்கத்தெரியாம இருக்கீயளே !! ரொம்ப டேங்ஸ்க்கா! பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு !!! :))

said...

CHIP LEVELல program பண்ணியிருக்கப்பு,

said...

:-))) machi... indha maathiri ans ellam naan oruthan thaan kudupendra maathiri payaluva viva mudinjathum kalaaichutanuva.. namala maathiri pala paer irukurathu aaruthala thaanya irukuthu :-))))

said...

//அப்புறம் உங்க கவிதை எப்படி இருக்கு ??//
பாண்டி இது கொஞ்சம் கூட நல்லா இல்ல. நானே பங்காளி கரெட் பண்ணி நமது கவிதை சொல்லி வைச்சு இருக்கேன். நீ வேற பங்காளியை உசுப்பேத்தி விடுற.....

said...

நடத்துங்க, நடத்துங்க

said...

// ILA(a)இளா said...
CHIP LEVELல program பண்ணியிருக்கப்பு, //

வாங்க விவசாயி :)) CHIP level லா இருந்தாலும் சும்மா பெண்டு நிமித்தீருச்சே!!:((

said...

//Anonymous said...
namala maathiri pala paer irukurathu aaruthala thaanya irukuthu :-)))) //

வாங்க அனானி ( பேரு சொல்லுங்கண்ணா ! :))
நம்மள மாதிரி பல பேரு இருக்கரதாலதான் மழையே பெய்யுதுங்கண்ணா !!! ( வேறென்ன சிரிப்பு மழைதான் :))

said...

// நாகை சிவா said...
//அப்புறம் உங்க கவிதை எப்படி இருக்கு ??//
பாண்டி இது கொஞ்சம் கூட நல்லா இல்ல. நானே பங்காளி கரெட் பண்ணி நமது கவிதை சொல்லி வைச்சு இருக்கேன். நீ வேற பங்காளியை உசுப்பேத்தி விடுற.....//

அடடா சிவாண்ணா கவிதைக்கு உரிமைப் பிரச்சனை இருக்கரது எனக்கு தெரியாம போச்சே !! மன்னிசுக்குங்கண்ணா !! கார்த்திய வேற ஏதாவது லோக்கலா ஜெசிகா ஆல்பா மாதிரி பார்த்துக்கச் சொல்றேன் :)))

said...

//பாலசந்தர் கணேசன் said..
நடத்துங்க, நடத்துங்க //

வாங்க பாலசந்தர் :)) எல்லாம் உங்க ஆசீர்வாதம் :))

said...

//அதுல காஞ்சுபோன நம்ம மெக்கானிக்கல் சகா ஒருத்தன் வைவால "ஷண்ட் மோட்டார்" எப்படி ஒடுதுன்னு கேட்டதுக்கு வாயால "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ன்னு சவுண்ட் குடுத்தான் பாருங்க. அப்ப வாத்தியாருக்கு எறுன பி.பி ய அளந்தா அந்த அளக்குற மிசினே வெடிச்சுடும். எல்லாத்தையும் தூக்கிவீசிட்டு இந்த பக்கமே வரமாட்டேன்னுட்டு போய்ட்டாரு. அப்புறம் பெரிய பஞ்சாயத்து செஞ்சு அழைச்சு வர வேண்டியதா போச்சு. அப்படியும் அவனை பாஸ் போட்டு அனுப்பிட்டாரு. ஏன்னா பெயில் போட்டா திரும்பி வருவானில்ல.//

இருந்தாலும் வாத்தியாரு பொறாமைப் பட்டிருப்பாரு! பையன் நம்மளை விட புத்திசாலியா இருக்கானேன்னு!

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
இருந்தாலும் வாத்தியாரு பொறாமைப் பட்டிருப்பாரு! பையன் நம்மளை விட புத்திசாலியா இருக்கானேன்னு! //

சிபியண்ணா நீங்க இப்படியெல்லாம் சொல்லப்போக யாராச்சும் ப்ளாக் வச்சுருக்குர வாத்தியாருக என்னைய ஊடுகட்டப் போறாங்க போங்க :))))

said...

i have never read such a funny post in my life.thanks for the laugh:) antha andavan thaan kaapathanum..approm..course'a
nallapadiya mudichingala illaiya?:

said...

// சுகன்யா ஷ்ரி said...
i have never read such a funny post in my life.thanks for the laugh:) antha andavan thaan kaapathanum..approm..course'a
nallapadiya mudichingala illaiya?://

வாங்க சுகன்யா ஷ்ரீ வாங்க :))
ரொம்ப சந்தோசங்க அம்மணி ஏதோ நம்ம ப்ளாகுக்கு வந்து சந்தோசமா திரும்பி போனா சரிதான் :))

அட என்ன இப்படி கேடுபுட்டீங்க :( கோர்செல்லாம் சூப்பரா முடிச்சுட்டோம்ல ;))

said...

இந்த மெக்கனிக்கல் எழவ தான் எஙக அப்பாரு படிச்சாரு.... அவருக்கிட்ட உங்க கதைய சொன்னா... விழுந்து வெழுந்து சிரிக்குராரு,,,,அது மட்டுமில்லாம,,, அவருக்கு வெர பழைய நியாப்ககளா...ஆடொகிராவ் படம் மாதிரி..சொல்லிக்கொண்டிருந்தார்.... மொத்ததுல.. மெக்கனிக்கல் எஞ்ஜினியரிங்'ல எந்த நாதாரியும் படிக்க பொகல பொல இருக்கு...*Excluding my dad ofcourse..:P*avara naatharinu kupidamaaten!!!!!!!

ஆனால் ஒன்னு... அந்த மைக்ரோ chip,விஷயம்.Hilarious.

said...

நீங்க எப்பவோ எழுதுனது...இருந்தும் .... நல்ல flow. "இன்று போஒ நாளை வா" படத்துல injection போடுர scene மாதிரி தொடர்ந்து சிரிப்பு....

சோலநாடான் comment அதுக்கு மேல ...

அடிக்கடி எழுதுங்கப்பு இந்த மாதிரி ந்ஜபகம் இல்லென்ன பலய நாட்குரிப்பை தேடி எடுங்க.

said...

//Poov said...
நீங்க எப்பவோ எழுதுனது...இருந்தும் .... நல்ல flow. "இன்று போஒ நாளை வா" படத்துல injection போடுர scene மாதிரி தொடர்ந்து சிரிப்பு....

சோலநாடான் comment அதுக்கு மேல ...

அடிக்கடி எழுதுங்கப்பு இந்த மாதிரி ந்ஜபகம் இல்லென்ன பலய நாட்குரிப்பை தேடி எடுங்க.//

வாங்க பூவேந்திரன் :)))
ஹையோ என்னைய இப்படி மூஞ்சிக்குமுன்னாடி என்னைய புகழாதீங்க எனக்கு கூச்சமா இருக்கு !! கொஞ்சம் மத்தவககிட்டே போய் சொல்லுங்கப்பூ !! :)))))))))))