Monday, August 07, 2006

நன்றி பாலா !!

நன்றி பாலா


நமக்கு இந்த சின்ன வயசில இருந்தே போட்டி போடருதுன்னா சுத்தமா புடிக்காது ! படிக்கரதுல இருந்து ஓடரது வரைக்கு எதுலையுமே போட்டி போட்டதே இல்லை ! போட்டின்னு ஒன்னு போட்டாதானே தோல்வின்னு ஒன்னு வரும்? இப்படிப்பட்ட உயரிய லட்சியத்தோடு ( சேம்பேறித்தனத்தை எப்படி சொல்றதாம்?) வாழ்ந்துகிட்டு இருக்கறப்போதான் அண்ணன் பாலாஒரு அறிவிப்பை வெளியிட்டாரு.

குங்குமத்தில புது முகங்கள் எழுத வாய்ப்பு!! நான் வழக்கம் போல அதைய படிசிட்டு விட்டுடேன்.பாலாண்ணன் கொடுத்த தேதியும் முடிஞ்சுபோச்சு ! அன்னிக்கு சாயங்காலம் ஒரு போன். போன்ல நம்ம பாலாண்ணன் !!! என்னாவே பாண்டி நான் கொடுத்த அறிவிப்பை படிச்சியா இல்லயான்னாரு.அண்ணே வழக்கம் போல நான் படிசிட்டு மறந்துட்டண்ணேன்னேன் அவ்ளோதான் பாலாண்ணே கதக்களி குச்சிப்புடின்னு போன்லயே நம்மளைப் போட்டு பிண்ணிட்டாரு. ஒழுங்கு மருவாதையா ஒரு கதைய நாளைக்கு காலைல 10 மணிக்குள்ளார அனுப்பலைனா நடக்கறதே வேறன்னு கொலை மிரட்டல் வேற !! என்ன பண்ணுவேன் ! உயிரைக் கையிலே பிடிச்சிகிட்டு ஒரு கதைய எழுதி அணுப்பினேன் !!

அது இந்த வார குங்குமத்தில் “ ஆஹா வந்துருச்சு ! “ . கதையோட தலைப்பும் அதுதான் ! முதோ முதலா நம்ம எழுத்தை அச்சுல பார்குரப்போ என்னே ஒரு சந்தோசம் !! ஒரு சூப்பர் Figure எங்கிட்டே வந்து பேசுன மாதிரி !! காலையிலே இருந்து தலை கால் புரியலே !!

அண்ணன் பாலா என்னைய புடிச்சு இப்படி போட்டு வாங்கலைனா என்னால இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிச்சிருக்க முடியாது !! பாலாண்ணே ரொம்ப நன்றிங்கண்ணா !!!

குங்குமத்தை நீங்க இங்க இருந்தே படிச்சிக்கலாம் ! ஆனா இந்த வார குங்குமம் இன்னும் update ஆகவில்லை. குங்குமத்திலே வந்த நம்ம கதைய உங்களுக்காகவே ஆஹா வந்துருச்சு - uncensored version கூடிய விரைவில் வலையேத்துகிறேன் !

கூடவே நம்ம சக வலைப்பதிவாளர்கள் நிலவு நண்பன்,பொன்ஸ்,விழியன்,அனிதா பவன்குமார், நிலாக்கா, ஜெஸிலா, மற்றும் ராசுக்குட்டி அவர்களுடைய கவிதைகளும் வந்திருக்கு. அல்லாருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேனுங்கோ !!

39 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

கண்மணி பாண்டி... ஆனந்தம் கொண்டேனடா... இன்று சோமபானங்களும் சுராப் பானங்களும் பொங்கி வழியட்டும் சொப்பன சுந்தரிகளின் குத்தாட்டம் தொடங்கட்டும் .. தாரைத் தப்பட்டைகளும் கிழிந்துத் தொங்கட்டும்

said...

// ( சேம்பேறித்தனத்தை எப்படி சொல்றதாம்?) //

சரியா தான் இருக்கு. இங்கயே ஒரு கால் போடறதுக்கு சோம்பேறித்தனமா இருந்தா எப்படி :-)

said...

ஆகா சொல்ல விட்டு போச்சே!!!

வாழ்த்துக்கள், முதல் அச்சேற்றத்துக்கு.

//ஒரு சூப்பர் Figure எங்கிட்டே வந்து பேசுன மாதிரி !! //

பேர காப்பாத்த இத மாதிரி ஒன்னு சொல்லிடுங்க மறக்காம :-)

said...

//முதோ முதலா நம்ம எழுத்தை அச்சுல பார்குரப்போ என்னே ஒரு சந்தோசம் !! ஒரு சூப்பர் Figure எங்கிட்டே வந்து பேசுன மாதிரி !! காலையிலே இருந்து தலை கால் புரியலே !!//


பாண்டி.. உண்மையாகவே சந்தோசப் படக்கூடிய விசயம் தான்,வாழ்த்துக்கள்,

எல்லம் சரி விசயத்துக்கு வருவோம் பார்ட்டி எப்போ, எங்கே( அடப் பாவிங்களா எது எதுக்கு பார்ட்டி..)

//கூடிய விரைவில் வலையேத்துகிறேன்//

வேகமா ஏத்துங்க பாண்டி...

சக வலப்பதிவர்களின் ஆக்கங்களை அச்சேற்ற உதவிய கெளதம், நண்பர் பால.பாரதி மற்றும் குமுததிற்க்கு நன்றிகள்,


நம்ம சக வலைப்பதிவாளர்கள் நிலவு நண்பன்,பொன்ஸ்,விழியன்,அனிதா பவன்குமார், நிலாக்கா, ஜெஸிலா, மற்றும் ராசுக்குட்டி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்,

said...

பாண்டி!
என் தங்கமே...கதை எளுதி கலக்கிப் புட்டியேய்யா. வாழ்த்துகள். அப்பிடியே கதையையும் சீக்கிரமே எங்க கண்ணுல காட்டு.

said...

// Dev said...
கண்மணி பாண்டி... ஆனந்தம் கொண்டேனடா... இன்று சோமபானங்களும் சுராப் பானங்களும் பொங்கி வழியட்டும் சொப்பன சுந்தரிகளின் குத்தாட்டம் தொடங்கட்டும் .. தாரைத் தப்பட்டைகளும் கிழிந்துத் தொங்கட்டும் //

வாங்க தேவண்ணா :)) சோம சுரா பானங்கள் என்ன பனங்கள்ளே என்ன என்ன வேண்டுமோ வாருங்கள் பாண்டிச்சேரிக்கு ! பானம் உண்டபின் வரும் உறக்கத்தின் சொப்பனத்தில் சுந்தரிகளை எப்படி வரவழைப்பது ?? :))))

said...

வாழ்த்துக்கள் பாண்டி.

தேவு சொன்னதை மறுக்கா ஒருதடவ ரிப்பீட்டு சொல்லி அன்போட ஆரத்தழுவிக்கிறேன் கண்ணு. :-)

said...

//போட்டின்னு ஒன்னு போட்டாதானே தோல்வின்னு ஒன்னு வரும்?//

ஆஹா!ஆஹா!இதுவல்லவோ லட்சியம்.
இதுவல்லவோ லட்சியம். :-)

said...

// நன்மனம் said...
வாழ்த்துக்கள், முதல் அச்சேற்றத்துக்கு.
பேர காப்பாத்த இத மாதிரி ஒன்னு சொல்லிடுங்க மறக்காம :-) //

வாங்க நன்மனம் :) வாழ்த்துக்கு நன்றிங்க !!! என்ன ஆனாலும் நம்ம பேரைக் காப்பாத்த வேணாமா ?? :))

said...

// உங்கள் நண்பன் said...
எல்லம் சரி விசயத்துக்கு வருவோம் பார்ட்டி எப்போ, எங்கே( அடப் பாவிங்களா எது எதுக்கு பார்ட்டி..)//

வாங்க நண்பன் !! தோழா பார்டிக்கா பஞ்சம் ?? அப்படியே 27L ல காலைல ஒரு 7:30 மணிக்கு ஏறினா போதும் ம்ம்ம்ம் .... :))))

சரி சரி லூசிலே விடுங்க இப்போதான் சட்டியக் கட்டியிருக்காக பனை மரத்துலே ஓகேவா ;)))

said...

//கைப்புள்ள said...
பாண்டி!
என் தங்கமே...கதை எளுதி கலக்கிப் புட்டியேய்யா. வாழ்த்துகள். அப்பிடியே கதையையும் சீக்கிரமே எங்க கண்ணுல காட்டு. //

வாங்க தல !! :))
டேங்க்ஸுங்கோ !! உங்களுக்கு காட்டாமலா ?? சீக்கிரமே ஏத்துரேன் தல !!

said...

//(துபாய்) ராஜா said...
வாழ்த்துக்கள் பாண்டி.

தேவு சொன்னதை மறுக்கா ஒருதடவ ரிப்பீட்டு சொல்லி அன்போட ஆரத்தழுவிக்கிறேன் கண்ணு. :-) //

வாங்க வாங்க புது மாப்பிள்ளை துபாய் ராஜா :)))))ரொம்ப சந்தோசங்க உங்களை பார்த்ததிலே :))

said...

//(துபாய்) ராஜா said...
//போட்டின்னு ஒன்னு போட்டாதானே தோல்வின்னு ஒன்னு வரும்?//

ஆஹா!ஆஹா!இதுவல்லவோ லட்சியம்.
இதுவல்லவோ லட்சியம். :-) //

:))) ஆமாம் ராசா நெசமாதேன் சொல்லுதேன் :))

said...

பாண்டி. கலக்கர.. சீக்கிரம் கதைய வலையெத்து...

//கூடவே நம்ம சக வலைப்பதிவாளர்கள் நிலவு நண்பன்,பொன்ஸ்,விழியன்,அனிதா பவன்குமார், நிலாக்கா, ஜெஸிலா, மற்றும் ராசுக்குட்டி அவர்களுடைய கவிதைகளும் வந்திருக்கு.//

என்னாய்யா சொல்றீங்க? பிலாக்ஸ்பாட் இப்ப குங்குமத்துக்கு போய்டுச்சா?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

said...

//அன்னிக்கு சாயங்காலம் ஒரு போன். போன்ல நம்ம பாலாண்ணன் !!! என்னாவே பாண்டி நான் கொடுத்த அறிவிப்பை படிச்சியா இல்லயான்னாரு.அண்ணே வழக்கம் போல நான் படிசிட்டு மறந்துட்டண்ணேன்னேன் அவ்ளோதான் பாலாண்ணே கதக்களி குச்சிப்புடின்னு போன்லயே நம்மளைப் போட்டு பிண்ணிட்டாரு. ஒழுங்கு மருவாதையா ஒரு கதைய நாளைக்கு காலைல 10 மணிக்குள்ளார அனுப்பலைனா நடக்கறதே வேறன்னு கொலை மிரட்டல் வேற !!//

ஏண்டாப்பா... ஒனக்கு இந்த வேல... ஏற்கனவே நட்புகளிடத்தில் நான் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துக்கிறதா குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிட்டு இருக்குற நேரத்தில் நீ வேறயா...?
நல்ல இரு.. அப்புட்டுத்தாய்ன்...

said...

// உங்கள் நண்பன் said...

வேகமா ஏத்துங்க பாண்டி...

சக வலப்பதிவர்களின் ஆக்கங்களை அச்சேற்ற உதவிய கெளதம், நண்பர் பால.பாரதி மற்றும் ***குமுததிற்க்கு*** நன்றிகள், //

***பாண்டி*** பேரைச் சொல்லி முன்னமே ஏத்திக்கொண்டா(டியா)ச்சா ?
;-)))

said...

Congrats
I am yet to buy the book
odane vangi pakkanum

said...

ஆஹா பாண்டி! நம் குலப் பெருமையை குங்குமம் வரைக்கும் எடுத்து சென்று விட்டாயே.....நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்.

இது உனக்கு முதல் வெற்றி தான். இன்று குங்குமம், நாளை டைம் நாளை மறுநாள்.............என்று உன் வெற்றி தொடர வேண்டும். அதை கண்டு நான் ஆனந்த கண்ணீரில் முழ்க வேண்டும்.

வாழ்க வாழ்க
வாழ்த்துக்கள்(மற்றவர்களுக்கும் சேர்த்து தான்)

said...

// சோம சுரா பானங்கள் என்ன பனங்கள்ளே என்ன என்ன வேண்டுமோ வாருங்கள் //

பாண்டி,

ஏலே ஜெயிச்சிப்பிட்டேலே... சரி சரி பார்சலா பெங்களுரு பக்கமா யாரவது வந்தா குடுத்தனுப்பா.... :-))))

said...

//மனதின் ஓசை said...
என்னாய்யா சொல்றீங்க? பிலாக்ஸ்பாட் இப்ப குங்குமத்துக்கு போய்டுச்சா?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. //

வாங்க மனதின் ஓசை :))
மிக்க நன்றிங்கோ ! :))

said...

//யெஸ்.பாலபாரதி said...
ஏண்டாப்பா... ஒனக்கு இந்த வேல... ஏற்கனவே நட்புகளிடத்தில் நான் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துக்கிறதா குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிட்டு இருக்குற நேரத்தில் நீ வேறயா...?
நல்ல இரு.. அப்புட்டுத்தாய்ன்... //

வாங்க பாலண்ணே என்ன இப்படி சொல்லிபுட்டீக !! உங்களுக்கில்லாத உரிமையா??:))))

said...

//லதா said...
***பாண்டி*** பேரைச் சொல்லி முன்னமே ஏத்திக்கொண்டா(டியா)ச்சா ?
;-))) //

வாங்க லதா விடுங்க! எல்லாரும் சந்தோசமா இருந்தா சரிதான் :))

said...

//அனிதா பவன்குமார் said...
Congrats
I am yet to buy the book
odane vangi pakkanum //

வாங்க அனிதா ரொமப தேங்ஸுங்க !:)) சீகிரம் வாங்குங்கோ !! உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!

said...

//நாகை சிவா said...
ஆஹா பாண்டி! நம் குலப் பெருமையை குங்குமம் வரைக்கும் எடுத்து சென்று விட்டாயே.....நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்.//

சிவாதம்பி உன் மகிழ்வு கண்டு நெகிழ்ந்தேனடா என் செல்வமே !! :))

said...

//ராம் said...
ஏலே ஜெயிச்சிப்பிட்டேலே... சரி சரி பார்சலா பெங்களுரு பக்கமா யாரவது வந்தா குடுத்தனுப்பா.... :-)))) //

வாங்க வாங்க ராம் :))
கொஞ்சம் புளிச்சுருமே ராமு !!
பார்சலா கொடுத்தனுப்புறதை விட அங்கினயே நெலமங்கலா போனா சுடசுட கெடைக்குமே ட்ரை பண்ரது ?:))))

said...

குங்குமம் கண்ட குசும்புக்காரத் தம்பி! நீ வாழ்க!

என் இளவல் என்பதில் யாம் பெருமை அடைகிறோம்!
(ரவைக்கு வட்டம் உண்டுல்ல? ஹி.ஹி..)

said...

valtjukkal thalaivaa..ennaku perumaiyaa iruku ungalai ninaichaa

said...

//இப்போதான் சட்டியக் கட்டியிருக்காக பனை மரத்துலே ஓகேவா ;)))//

சும்மாயிரு பாண்டி... இந்த தேவு தான் பட டிஸ்கசன்னு சொல்லி பனமரத்தடிக்கு கூட்டிடு போறாரு, நீயாவது சீமச்சரக்கு வங்கித்தருவனு பார்த்தா நீயும் அங்கேயே கூட்டிடு போர பாத்தியா...?

குங்குமம் என்பதற்க்குப் பதிலாக குமுதம் என்று சொல்லியதை சுட்டிக் காட்டிய லதாவிற்க்கு நன்றி...

அன்புடன்...
சரவணன்.

said...

//அங்கினயே நெலமங்கலா போனா சுடசுட கெடைக்குமே ட்ரை பண்ரது ?:)))) //

சுடசுட'வா ஏலே பாண்டி என்னப்பெ சொல்லிறீர்...?

said...

ரொம்ப ஸந்தோஷம், ஜொள்ளுப் பாண்டி ஸார். வாழ்த்துக்கள்.

(யாம் பெறும் இன்பம்) பெறட்டும் தமிழகம்.

said...

பாண்டி தங்கமே...
குங்குமத்தில் வெற்றித்திலகம் சூடினாயே..

வாழ்த்துக்கள்..வாழ்க! வளர்க!!

said...

வாழ்த்துகள் பாண்டி.

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
குங்குமம் கண்ட குசும்புக்காரத் தம்பி! நீ வாழ்க!
என் இளவல் என்பதில் யாம் பெருமை அடைகிறோம்!//

வாங்க வாங்க சிபியண்ணே !! :))உங்க பேரை காப்பாத்தியே தீருவோம்ல!! :))

(ரவைக்கு வட்டம் உண்டுல்ல? ஹி.ஹி..) ஹி ஹி அது இல்லாமலா??!!

said...

//கார்த்திக் பிரபு said...
valtjukkal thalaivaa..ennaku perumaiyaa iruku ungalai ninaichaa //

ரொம்ப சந்தோஷங்க கார்த்திக் :))

said...

//உங்கள் நண்பன் said...
சும்மாயிரு பாண்டி... இந்த தேவு தான் பட டிஸ்கசன்னு சொல்லி பனமரத்தடிக்கு கூட்டிடு போறாரு, நீயாவது சீமச்சரக்கு வங்கித்தருவனு பார்த்தா நீயும் அங்கேயே கூட்டிடு போர பாத்தியா...?//

தோழா சரவணா சரி இவ்ளோதானா உன் ஆதங்கம் ?? யாரங்கே சரவணனுக்கு ரெண்டு லார்ஜ் மார்டினி !!! :)))

said...

//ராம் said...
//அங்கினயே நெலமங்கலா போனா சுடசுட கெடைக்குமே ட்ரை பண்ரது ?:)))) //

சுடசுட'வா ஏலே பாண்டி என்னப்பெ சொல்லிறீர்...? //

ஐ மீன் ப்ரெஷ்ஷா கெடைக்கும்னு சொல்ல வந்தேன் ராம் ;)))))

said...

//Muse (# 5279076) said...
ரொம்ப ஸந்தோஷம், ஜொள்ளுப் பாண்டி ஸார். வாழ்த்துக்கள்.
(யாம் பெறும் இன்பம்) பெறட்டும் தமிழகம். //

வாங்க வாங்க தோழர் ம்யூஸ் :) மிக்க நன்றி :)

said...

// கப்பி பய said...
பாண்டி தங்கமே...
குங்குமத்தில் வெற்றித்திலகம் சூடினாயே..

வாழ்த்துக்கள்..வாழ்க! வளர்க!! //

மிக்க நன்றி கப்பி :)))

said...

//Boston Bala said...
வாழ்த்துகள் பாண்டி. //

வாங்க பாலாண்ணே !!;)) ரொம்ப நன்றிங்கண்ணா! :)) பேட்டை பக்கம் காணரதேயில்லை :)