Wednesday, August 09, 2006

ஆஹாங் வந்துருச்சு !! - ஜொள்ஸ் வெளியீடு !!

Jolzஅப்போ நான் சென்னைக்கு வந்த புதுசு. கொஞ்சம் சுமாரான கும்பல் உள்ள ஊர்லே படிச்சிட்டு இங்க வந்தா எதுக்கெடுத்தாலும் திருவிழாக்கூட்டம்தான். டீக்கடைக்குப் போனா பஸ்ஸிலே போனா தியேட்டருக்கு போனா எங்கின போனாலும் கும்பல் கும்மியடிச்சிகிட்டு இருந்துச்சு. எங்கயாச்சும் போகனும்னு முடிவு பண்ணினா ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடியே கெளம்பினாத்தான் உண்டு. அதுலயும் சில சமயம் பஸ்சிலே போரப்போ ட்ராபிக் ஜாம் ஆயிடிச்சுன்னா அவ்ளேதான். முகூர்த்துக்கு போகமுடியாது சாந்தி முகூர்த்ததுக்குதான் போகமுடியும் .எவண்டா இவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு பஸ்சப் புடிச்சு போறதுன்னு ஊர்ல நம்ம் பைக் சும்மாதானே நிக்கிதுன்னு நம்ம நைனாவுக்கு போனப்போட்டு ‘பைக்’பார்சல்ன்னு சொல்லி அனுப்பிச்சேன். பைக் வந்துருச்சு. அப்படியே அடிதடி இல்லாம அலுங்காம குலுங்காம நகர்வலம் போறப்போ சும்மா கும்முன்னு இருக்கும்.


அப்போதான் கவனிச்சேன் இந்த ஊர்லே அல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துரானுவ. அதுலயும் இந்தப் பொண்ணுங்க பார்தீங்கண்ணா ஏதோ குரங்குகுட்டி எங்க கீழே விழுந்துருவனோன்னு அம்மாவை புடுசுக்குமே அதுமாதிரி பைக் ஓட்டுர பையனை பல்லி மாதிரி ஒட்டிகிட்டு போகுதுங்க !சரி சிக்னல்ல நிக்கிரப்போவாச்சும் கொஞ்சம் வெலகுமான்னு பார்த்தா ம்ஹூம் கவலையே படாம அவனோட காதப் புடிச்சி பெராண்டிறது கிச்சி கிச்சி மூட்டுரதுன்னு அமர்க்களப் படுத்துதுங்க ! இதுலே துப்பட்டாவால முகத்தை வேற மூடிகிட்டு தான் இத்தனை அட்டகாசமும். எனக்கும் இவுகளப் பார்த்து ஒரு மாதிரி ஆகிபோச்சு. என் பைக் பில்லியனைப் பார்த்தேன். காலியாத்தேன் இருக்கு.

மேன்சனில் என் ரூம் மேட்டுகிட்டே என் ஆதங்கத்தை சொன்னேன். பய குஜாலாய்ட்டான். மாமே அதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே கெடையாது. பைக் வேற வெச்சுருகே. உனக்கென்னடா கொரச்சல்.ரூம் மேட் சொல்ல சொல்ல மனசு ஒத்தை வீலில் பக் ஓட்டியது. என்ன ஒரு சின்ன சிக்கல்னா விட்டிலே நம்ம அம்மா தன்னோ பாசத்தையெல்லாம் நெய்யும் முட்டையுமா காட்டுனதுலே நம்ம உடம்பு என் அம்மாவோட மனசு மாதிரியே பெருசாய்டுச்சு ! என் பின்னாடி பைக்கிலே ஒக்காரவே பசங்க கொஞ்சம் யோசிப்பானுக. இப்படியான நெலமையிலே தான் இப்படிபட்ட ஆசையெல்லாம் லேசா எட்டிபார்க்க ஆரம்பிச்சு இருந்துச்சு. டேய் என்னைய நேர்லே பார்த்தா பொண்ணுங்கெல்லாம் அரிசி மூட்டைன்னு ஓட்டி எடுத்துருவாளுகடா ன்னு பரிதாபம கேட்டப்போதான் ‘போடாங்க’ ன்னு ஒரு பார்வை பார்த்தான். ஏண்டா இப்பேல்லாம் இண்டர்நெட் , சாட்டுன்னு எவ்ளோ வழி இருக்கு. இப்போதானே பிள்ளையார் சுழி போட்டுருக்கே! இன்னும் போக வேண்டிய தூரம் இருக்குடா’ன்னு ஆறுதல் சொல்லி இப்போவே ஏதாச்சும் நெட் கபேக்கு போலான்னு கெளம்பீட்டான். ஒருத்தனை கவுக்கறதுக்குன்னா பாருங்களேன் எப்படி அலையரானுவ.

என்ன பண்றது? பய எனக்கு நெட்டு சாட்டுன்னு நமக்கு சொல்லிக்கொடுத்தான். காலேஜிலே கம்ப்யூட்டர் லேப்னாலே காத தூரம் ஓடுர நான் இவன் சொல்லிக் கொடுத்தபோ பயபக்கியோட கேட்டுகிட்டேன். ஆசை யாரை விட்டுச்சு? அதுக்கபுறம் எனக்கு காலையிலே பைக்க எடுத்துகிட்டு நெட் சென்டர்லே நுழைஞ்சா சும்மா கதறக் கதற சாட் பண்றதுதான் நம்ம முழுநேர வேலையாப் போச்சு.. பேசறது பையானா பொண்ணான்னு கண்டே பிடிக்க முடியாது. இருந்தாலும் நம்பிக்கையோட ஆரம்பிச்சேன் என் தேடுதல் வேட்டைய. சில பொண்ணுங்க ரொம்ம நேரம் பேசி நம்மளை ஏத்திவிட்டுட்டு நான் பையன்ன்னு சொல்லி நம்ம நெஞ்சிலே பழுக்க காய்ச்சி இழுத்துட்டு போகும்.சிலதுக பயங்கரமான கோபத்திலே எப்பவுமே இருக்கும் இப்படி பலதுக. தெனமும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனாய் நானும் என் சாட்டிங்கும். இப்படியாக ஒரு மாசம் போயிருக்கும் அப்போதான் ஒருநாள் சாட்டிங்கில் அவள் வந்தாள்.

பேரு சுமா ஊரு சென்னைன்னு வழக்கம் போல ஆரம்பிச்சாச்சு. இது எவ்ளொ நேரதுக்கு ஓடுமோன்னு நெனச்சுகிட்டே சாட் பண்ணிகிட்டு இருந்தேன். இப்படியாக தினமும் காலையிலே சுமா ஆன்லைனில் என்னுடன் சாட் பண்ண ஆரம்பித்தாள். என்னிக்காச்சும் அவளை ஆன்லைனில் பார்க்க முடியலைனா போதும் மனசு கெடந்து அடிச்சிக்கும். என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு. கொஞ்சம் கொஞ்சமா சுமா என் மனசுகுள்ளே வர ஆரம்பிச்சிட்டா ! தேவையிலாம ‘காதலர் தினம்’ படம் வேற பேக் க்ரண்டில் ஒட ஆரம்பிக்கும். சோனாலி பேந்ரே மாதிரி இருக்பாளோ?? லேசு பாசா அவகிட்டயே கேட்டா என் கண்ணு மீனா மாதிரி இருக்கும். இப்போதைக்கு அவ்ளோததன் சொல்ல முடியும்னு சொல்லிட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவா ! நம்மளைப் பத்தி கேட்டா போதும் நான் லேசா சூர்யா சாயல்ன்னு என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவானுகன்னு பட்டும் படாமலும் சொல்லுவேன். ஏன்னா சூர்யாவைத்தான் பல பொண்ணுகளுக்கு புடிக்குமாம்லே?? காசா பணமா அளந்து வுடுடா பாண்டின்னு சும்மா மடை திறந்த வெள்ளம் போல புழுகுதான்.


இப்படியாக போய்கிட்டு இருந்தப்போதான் ஒருநாள் என் போன் நம்பர் கேட்டா. நானும் கொடுத்தேன். அன்னிக்கு சாயங்காலமே எனக்கு போன் சுமா கிட்டே இருந்து. ஆஹா பாண்டி ஒரு பொண்ணு அதுவும் சென்னையிலே முதோ முதலா கேர்ள்ப்ரெண்டு கெடச்சுட்டா !!! கத்திகிட்டே ஓடணும்போல இருக்கு. சும்மா சொல்லக் கூடாது சுமாவுக்கு அப்படியொரு குரல் வளம் . அப்படியே தேனிலே கரைச்ச வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டு ஓடுது. ஒரே குஜால்ஸ் தான் போங்க. அப்புறம் என்ன போன்லதான் சாட் ! போன் பில் கணக்கு கன்னா பின்னான்னு எகிற ஆரம்பிச்சிடுச்சு. நம்ம ரூம் மேட்டுக்கு ஒரே ஆச்சரியம் அப்புறம் கொஞ்சம் பொறாமை வேற. வாலிப வயசிலே இதெலாம் சகஜமபான்னு நானும் பேசிகிட்டே இருப்போம். இன்னமும் சுமா எப்படி இருபான்னு எனக்கு தெரியலே. ஒருநாளாச்ச்சும் நேரிலே பார்க்கலாம்னா பிடி கொடுக்கவே மாட்டேங்கறா. பல சினிமாக்கள் வேற பார்க்காமல் காதல் பேசாமல் காதல் காதலே இலாமல் காதல்ன்னு நம்ம கோடம்பாக்கம் டைரக்டர்கள் எல்லாம் காதல் கோடாங்கிகளா மாறி எனக்கு அவங்க படம் மூலமா பல்வேறு கற்பனைகளை அள்ளித் தெளிச்சி விட்டிருந்தாங்க. காதல் கோட்டை தேவயாணி போல இருப்பாளா ? இல்லை காதலர் தினம் சோனாலி பெந்தரே?? இப்படியேல்லாம் கனவிலேயெல்லாம் கூட வர ஆரம்பிச்சிடுச்சு.

இதுலே எனக்கு வர்ர போன் கால்களைப் பத்தி எங்க பசங்க மத்தியிலேவேற பல்வேறு கற்பனை கதைகள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மெஸ் மீல்ஸை ஒரு கட்டு கட்டிவிட்டு ஏகாந்தமா படுத்து தூங்கிகிட்டு இருக்கறப்போ போன் வந்தது. அட என் சுமா !!! என்ன சுமா ன்னு பேச ஆரம்பிச்சா ‘பாண்டி கொஞ்சம் நான் சொல்ற இடதுக்கு உடனே வர முடியுமா? நான் வந்த வண்டி பாதி வழியிலே பஞ்சர் ஆய்டுச்சு. ஞாயித்துக் கிழமைங்கரனால கடையே இல்லை. அப்போதான் உன் ஞாபகம் வந்துச்ச்சு. கொஞ்சம் வர முடியுமா? நான் ப்ளாக் ஜீன்ஸும் ரெட் டிசர்ட்டும் போட்டு நின்னுகிட்டு இருப்பேன்..நீங்க இருக்கற இடதுக்கு பக்கதுல தான் இருக்கேன் ப்ளீஸ் !!! ‘ அந்தகுரல்ல இருந்த ‘ப்ளீஸ்’ ஆகா ‘இதற்குத்தானடா ஆசைபட்டாய் பாண்டின்னு’ மனசு கெடந்து அடிச்சிக்குது. கமான் சீக்கிரம் கெளம்பு உன் பைக் காதல் ரதமாகப் போகுது ? ஆமா நான் உக்கார்ந்தா அவ உக்கார இடம் இருக்குமா. நம்ம சைஸ்ஸை பார்த்து எஸ்கேப் ஆய்டுவாளோ?? ச்சேசே முடியாதே அதான் நடு ரோட்டுலே நிக்கிறாளே !!

எக்ஸ்ரா ரைஸ் உபயத்தில் ரூம் மேட் வாயப் பொளந்து தூங்கிகிட்டு இருந்தான்.
சத்தமில்லாம கெளம்பினேன் வந்து சொல்லிக்கலாம் இந்த சேதின்னு. பைக்கிலே உட்கார்துகிட்டு பின்னாடி கஷ்டப் பட்டு பார்க்க முயற்சித்தேன் முடியல!. இருக்கு கொஞ்சம் இடம் இருக்கும் எப்படியும் என்னைய இடிக்காம அவ ஒக்கார முடியாது. என்ன ஒரு சந்தோசம்! சுமா சொன்ன இடம் நான் இருக்கர இடத்திலிருந்து எப்படியும் ஒரு 6 கிலோமீட்டராவது இருக்கும். பல்வேறு கற்பனையோட போய்கிட்டே இருந்தேன். அவ சொன்ன இடம் வரப்போகுது. பரபரப்பா இருக்கு எனக்கு. துரத்திலே தெரியுதே சிகப்பு கலர் அவ தானோ?? மிதமான வேகதில்தான் சென்றேன். நான் எப்படியிருபேன் எந்த வண்டியில் வருவேன்லாம் அவகிட்டே நான் சொல்லலே. எல்லாம் ஒரு திரில்லுக்குதான் !

அதோ தூரத்திலே ஒரு வண்டியும் அது பக்கத்திலே ஒரு பொண்ணுபோல தெரியுதே. அப்போதுதான் கவனிச்சேன். சுமா சாதரணமாக இல்லை ஒரு சுமோ ரெஸ்லர் ரேஞ்சுக்கு என்னைப்போல இருமடங்கு சைஸில் !!! அய்யகோ இதென்ன சோதனை. தேவயாணி, சொனாலி பேந்ரே எல்லாம் சினிமாவில தானா?? எனக்கா இப்படியாக வேண்டும்? சுமா என் பைக்கில் உக்கார்ந்தா நெசம்மாலுமே பைக் ஒத்தை வீலில்தால் போகும். எப்படிடா பாண்டி தப்பிக்க போறே?? அவளுக்குதான் நான் எப்படி இருபேன்னு தெரியாதே ! போனை எடுத்தேன். ‘சுமா நான் வந்துகிட்டு இருந்தபோ பாதி வழியிலே என் வண்டியும் பஞ்சர் ஆய்டுச்சு. சாரிடா.’


32 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//இருந்தபோ பாதி வழியிலே என் வண்டியும் பஞ்சர் ஆய்டுச்சு. சாரிடா.’//

மனசு பஞ்சர் ஆகிடுச்சுனு நேரடியா சொல்ல முடியாது தான்.

அது சரி, அப்புறம் போன் வந்துதா!!! இப்ப ஜொள்ளு வந்திருக்காதே!!!! எள்ளூம் கொள்ளும் வெடிச்சிருக்குமே பேச்சுல :-)

said...

இணையத்தில் அரட்டை அடிப்பதும் பொய்! செல்பேசியில் பேசி உருகுவதும் பொய்!
நேரில் பார்ப்பதே "மெய்"

:)

said...

பாண்டி.. ஏலே அந்தச் சுமா இந்தக் கதையப் படிச்சுட்டு உன்னியக் கண்டுபிடிச்சு வந்து நின்னா என்னலே பண்ணுவே?

said...

//தேவயாணி, சொனாலி பேந்ரே எல்லாம் சினிமாவில தானா?? //

:-)

said...

Hyyooo.... hyoooo .... china pulla thanama iruku.... :))))))

KARVENDAN

said...

ennanga ippidi pannitteenga. neengale unga "kaadhalikku" help pannalenna vera yaaru paanuva?

:-)))

said...

மொதல்ல டிராக்டர் சங்கம் சார்பா வாழ்த்துக்கள்.

said...

/எனக்கா இப்படியாக வேண்டும்? சுமா என் பைக்கில் உக்கார்ந்தா நெசம்மாலுமே பைக் ஒத்தை வீலில்தால் போகும். எப்படிடா பாண்டி தப்பிக்க போறே?? அவளுக்குதான் நான் எப்படி இருபேன்னு தெரியாதே ! போனை எடுத்தேன். ‘சுமா நான் வந்துகிட்டு இருந்தபோ பாதி வழியிலே என் வண்டியும் பஞ்சர் ஆய்டுச்சு. சாரிடா.’/

சிறுதுரும்பே பல்குத்த உதவும்போது, பெரிய சைஸ் சுமா எதுக்காவது இருக்கட்டும்னுதானே ஒரேயடிக்கா கட் பண்ணாம,அப்போதைக்கு கழட்டிவிட்டாய் பாண்டி. :-)))

said...

haha unedited version of the story...hey my name is not thurgai ok.It is thurgah.Don't change my name then you have to face the consequences.I like the orginal version better.Hey neega surya mathiriya irrupenga?too much!

said...

//haha unedited version of the story...hey my name is not thurgai ok.It is thurgah.Don't change my name then you have to face the consequences.I like the orginal version better.Hey neega surya mathiriya irrupenga?too much! //

பாண்டிண்ணே,

இந்த அக்கா இங்கிலிபிஸில என்னோமோ நம்மளை திட்டுறங்களோனு தெரியுது.

said...

//நன்மனம் said...
மனசு பஞ்சர் ஆகிடுச்சுனு நேரடியா சொல்ல முடியாது தான்.//

வாங்க நன்மனம் !! எல்லாம் அவையடக்கம்தான் ;))

//அது சரி, அப்புறம் போன் வந்துதா!!! இப்ப ஜொள்ளு வந்திருக்காதே!!!! எள்ளூம் கொள்ளும் வெடிச்சிருக்குமே பேச்சுல :-) //

ஹிஹிஹி !!!:)))

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
இணையத்தில் அரட்டை அடிப்பதும் பொய்! செல்பேசியில் பேசி உருகுவதும் பொய்!
நேரில் பார்ப்பதே "மெய்"//

வாங்க சிபியண்ணே :))

என்னே அனுபவம் உங்களுக்குமா ?? :))

//நேரில் பார்ப்பதே "மெய்"//

நேரில் பார்ப்பது மெய்யாக இருந்தாலும் "மொய்" யெழுதவேண்டியிருக்கும் ஜாக்கிரதை !!! :)

said...

// Dev said...
பாண்டி.. ஏலே அந்தச் சுமா இந்தக் கதையப் படிச்சுட்டு உன்னியக் கண்டுபிடிச்சு வந்து நின்னா என்னலே பண்ணுவே? //

தேவண்ணா ஏன் இப்படி பீதியக் கெளப்புறீங்க ?? :( ம்ம்ம் ....

said...

// மனதின் ஓசை said...
//தேவயாணி, சொனாலி பேந்ரே எல்லாம் சினிமாவில தானா?? //

:-)//

நன்றிங்க மனதின் ஓசை!! ஓசைன்னு பேரை வச்சுகிட்டு ஓசையில்லாமல் வந்திருக்கீங்க :))

said...

//Hyyooo.... hyoooo .... china pulla thanama iruku.... :))))))

KARVENDAN //

வாங்க கார்வேந்தன் :)) சின்னப்புள்ளாண்டால் வேற எப்படி நடந்துக்குவான் ?? :))நன்றிங்கோ !!

said...

//shiv said...
ennanga ippidi pannitteenga. neengale unga "kaadhalikku" help pannalenna vera yaaru paanuva?//

ஆஹா சிவா எங்கேருந்து கெளம்பி இருக்கீங்க ?? நான் சொன்னனா காதலின்னு ?? சரி சரி ரொம்ப பரிதாபப் படறீங்க உங்களுக்கு அந்த வாய்ப்பை தாரேன் சரியா?? ;))

said...

//ILA(a)இளா said...
மொதல்ல டிராக்டர் சங்கம் சார்பா வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி இளா :)) பேரலலா ட்ரக்டர் சங்கம் வேரையா ?? :))

said...

//துபாய்) ராஜா said...
சிறுதுரும்பே பல்குத்த உதவும்போது, பெரிய சைஸ் சுமா எதுக்காவது இருக்கட்டும்னுதானே ஒரேயடிக்கா கட் பண்ணாம,அப்போதைக்கு கழட்டிவிட்டாய் பாண்டி. :-))) //

வாங்க துபாய்ராசா:))

சரி சரி விடுங்களேன் ;)))

said...

//thurgah said...
I like the orginal version better.Hey neega surya mathiriya irrupenga?too much!//

வாங்க துர்கா :))
ரொம்ப நன்றிங்க !! அதுதான் புளுகுன்னு நானே ஒதுக்கறனே. அப்பவும் என்னைய இப்படி ஓட்டனுமா ?? கருணைகாட்டுங்கம்மா :)))

said...

ஆஹாங் வந்துருச்சு பில்ட்-அப் சூப்பருதான். ஆனாக்கா அரிசி மூட்டை அப்புறம் ஆக்காங் தேவயானி, சோனாலின்னோன்ன இடிச்சிச்சி பாஸு. கவுக்கப்போற பில்லியனுலன்னு(அஃதாவது பைக் பின்னாடி உள்ள இடத்துலன்னு)...

ஒரு வேளை இதைத்தான் பாம்பின் பில்லியன் பாம்பறியும்பாங்களோ? (நான் என் அனுபவத்தையும் சேத்துச் சொல்றேன் பாஸு)

;-)

said...

ஹலோ...
யாரு சுமாவா? நல்லா இருக்கியாமா.?
நான் தான் உன் "அண்ணன்" சரவணன் பேசுறேன்,

இந்தப் பாண்டிப் பய உன்னையப் பார்க்காம ஒன்னொட நினைவாவே ஒன்ன மாதிரியே "துரும்பா"
எளச்சுப் போய்டாம்மா, கொஞ்சம் போன் பண்ணி பேசும்மா தங்கச்சி...


அன்புடன்...
சரவணன்.

said...

பாண்டி உன் வாழ்க்கையில இப்பிடி ஒரு விபரீதமா? ஆனா சுமா வர்க் அவுட் ஆகியிருந்துச்சின்னா மிஸஸ் அண்ட் மிஸ்டர் சுமோ அகியிருக்கலாம். மிஸ் பண்ணிட்டியேய்யா. ஆனாலும் தேவ் சொன்ன மாதிரி உன்னை டிரேஸ் பண்ணறதுக்கு வாய்ப்பு இருக்கு. இப்ப 'குங்குமம்' கண்ட செலிப்ரிடியா வேற ஆயிட்டே!
:)

said...

ஏலே பாண்டி!!!
தங்கச்சி சுமா ஃபோன் பண்ணுச்சா இல்லையா, அட வெக்கப்படாம சொல்லுலே?அன்புடன்...
சரவணன்.

said...

//உங்கள் நண்பன் said...
ஏலே பாண்டி!!!
தங்கச்சி சுமா ஃபோன் பண்ணுச்சா இல்லையா, அட வெக்கப்படாம சொல்லுலே?//

எலே சரவணா எம்மேல என்னப்பா கடுப்பூ ?? :((!! எஞ்சாமி ஜொள்ளவராயன் பார்த்துப்பான் !! நான் நம்பரை மாத்திட்டேன்ல ;)))

said...

பாண்டி அந்து பொண்ணு சுமோன்னு தான் சொல்லி இருக்கும் உனக்குத் தான் ஜொள்ளு மயக்கத்தில் சுமான்னு கேட்டு இருக்கும். ஜொள்ளு வாழ்க்கையில் இது எல்லாம் ஜகஜம் இந்த சாட் ரூம் இல்லாட்டி அடுத்தது தலை கஜினியை மனசுல நினைச்சி படைஎடுப்பை ஆரம்பி

said...

//Kusumban said...
ஆஹாங் வந்துருச்சு பில்ட்-அப் சூப்பருதான். ஆனாக்கா அரிசி மூட்டை அப்புறம் ஆக்காங் தேவயானி, சோனாலின்னோன்ன இடிச்சிச்சி பாஸு. கவுக்கப்போற பில்லியனுலன்னு(அஃதாவது பைக் பின்னாடி உள்ள இடத்துலன்னு)...

ஒரு வேளை இதைத்தான் பாம்பின் பில்லியன் பாம்பறியும்பாங்களோ? (நான் என் அனுபவத்தையும் சேத்துச் சொல்றேன் பாஸு)//

வாங்க குசும்பண்ணா :))ரொம்ப தேங்ஸுங்க ! ஓஒ உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா :))) சபாஷ்!!

said...

// கைப்புள்ள said...
பாண்டி உன் வாழ்க்கையில இப்பிடி ஒரு விபரீதமா? ஆனா சுமா வர்க் அவுட் ஆகியிருந்துச்சின்னா மிஸஸ் அண்ட் மிஸ்டர் சுமோ ஆகியிருக்கலாம்.//

வாங்க கைபூ :))) என்னா ஒரு நெக்கலு ! என் நிலைமை உங்களுக்கெல்லாம் ஒரே டமாஸாபூடுச்சு !! ம்ம்ம்ம் உங்களுக்கும் ஒரு சுமோ கிடைக்கக்கடவது என வரம் அளிக்கிறேன் ;))))

said...

//சந்தோஷ் said...
பாண்டி அந்து பொண்ணு சுமோன்னு தான் சொல்லி இருக்கும் உனக்குத் தான் ஜொள்ளு மயக்கத்தில் சுமான்னு கேட்டு இருக்கும். ஜொள்ளு வாழ்க்கையில் இது எல்லாம் ஜகஜம் இந்த சாட் ரூம் இல்லாட்டி அடுத்தது தலை கஜினியை மனசுல நினைச்சி படைஎடுப்பை ஆரம்பி //

வாங்க சந்தோஷ் :)) அட என்னாண்ணே உங்அளுக்கு தெரியாதா போன்ல பேசறதுக்கெல்லாம் நீங்கதானே GODfather ன்னு :)) சரி கஜினி ஆகச்சொல்றீங்க அனுபவஸ்தர் சொல்லை கேக்கறேன் :)))

said...

//ம்ம்ம்ம் உங்களுக்கும் ஒரு சுமோ கிடைக்கக்கடவது என வரம் அளிக்கிறேன் ;))))//

அடப்பாவி! இதுக்குப் பேரு உங்க ஊருல வரமா?
:((

said...

ஜொள்ளுப்பாண்டி said...
// கைப்புள்ள said...
//ம்ம்ம்ம் உங்களுக்கும் ஒரு சுமோ கிடைக்கக்கடவது என வரம் அளிக்கிறேன் ;))))//

அடப்பாவி! இதுக்குப் பேரு உங்க ஊருல வரமா?:(( //

அட என்னாங்க தல! சுமோவில ஆரம்பிங்கன்னு நல்ல எண்ணத்தோடதான் வரம் கொடுத்தேன் ;))))

said...

hayyo hayyo .. ore nagaichuvaiyaaga irukkiradhu..

said...

//balaji said...
hayyo hayyo .. ore nagaichuvaiyaaga irukkiradhu..//

வாங்க பாலாஜி :)))
அட சிரிங்க பாலாஜி ஜாலியா :))) ரொம்ப நன்றிங்க ...