Saturday, August 12, 2006

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு


“ இந்த ரெண்டு வருசத்துலே ஒரு ரெண்டாயிரம் டீயாவது இந்த கடையில குடிச்சிருக்கமாட்டே? “ ஆனந்த் என்னைப் பார்த்து நக்கலாக கேட்டான்.

“ டேய் அவ்ளோலாம் இருக்காதுடா ! ஏண்டா என்னை இப்படி ஓட்டுறீங்க? “ பரிதாபமாகக் கேட்டேன்.

“தினமும் சூரியன் வருதோ இல்லையோ நீ காலைல 7 மணிக்கே
‘டாண்’ ணு இந்த கடைக்கு டீ குடிக்க வந்துடறே இல்லை ? அதான் பாக்கிறோமே! “ கோபி வேறு ஒத்து ஊதினான்.

“ பாருங்க நீங்க இந்த கடையில டீ குடிக்க ஆரம்பிச்சப்போ எவ்ளோ பரிதாபமாக இருந்தது ! இப்போ பார்த்தா பெங்களூர் PUB ரேஞ்சுக்கு டெவலப் பண்ணிட்டான். இதுல பாதியாவது உங்க காசுலதான் வாங்கினதா இருக்கும் ! “ அருண் வேறு தன் பங்குக்கு வெறுப்பேற்றினார்.

நாங்கள் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன், முந்தைய நாள் இரவு ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்ட எதோ தன் வேலையைக் காட்டியதால் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ரொம்ப சீக்கிரமே எழுந்துட்டமோ ? என நேரம் பார்க்க காலை 7 எனக்காட்டியது. எனது ரூம்மேட்டுகள் இரண்டாம் சாமத்தில் இருந்தனர். மீண்டும் தூக்கம் வராததால் சரி போய் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று தெருமுனையில் இருக்கும் டீக்கடைக்கு வந்தேன்.

அது ஒரு டிசம்பர் மாதமானதால் குளிர் இன்னும் மிச்சமிருந்தது. கடைக்கு வெளியில் நின்று இரண்டு ‘ சிப் ‘ டீயை உள்ளே தள்ளியபோதுதான் எதிர்புறம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்குச் செல்லக் காத்திருக்கும் அவளைப் பார்த்தேன். ஒருவினாடி டீயை என் சட்டையில் சிதறிவிட்டேன். என் மனதையும் தான்.

அழகான கண்கள் , அகலமான கண்கள், சேல்விழி,வேல்விழி , என் விழியில் எல்லாமே தெரிந்தது. பஸ் வாராத வெறுப்பில் அவள் முகம் சுழித்தபோது அந்த சுழிப்புச் சுழலில் சிக்கி அமிழ்ந்து போனேன். ஒருவழியாக அவள் பஸ் ஏறி சென்றபோது நான் இரண்டு கோப்பை தேநீரை முடித்திருந்தேன். அது இரண்டாயிரம் கோப்பையாகும் என நினைக்கவேயில்லை.

பின்வந்த நாட்களில் அதிகாலை 6 மணிக்கே அலாரம் வைத்து எழுந்தேன். பின்னே அப்படியே லுங்கிலயா போய் என் தேவதையப் பார்ப்பது ? 6.45 க்கெல்லாம் குளித்து அரிதாரம் பூசி ரெடியாகி டீக்கடையில் ஆஜராக ஆரம்பித்தேன். டீயையும் அவளையும் சேர்த்து பருகத்தொடங்கினேன். டீக்கடையே என் போதிமரமானது.

இப்படியே எவ்ளோ நாள்தான் கடத்துவது.அவள் பேர் என்னான்னு கண்டுபிடிக்கணுமே ! ரூம் மேட்களிடம் கேட்கலாமா ? அவ்ளோதான்! வேற வெனையே வேண்டாம். கெடைச்சாண்டா ஒரு சின்னத்தம்பி என நம்மை கோமாளி ஆக்கி கபடி ஆடிவிடுவார்கள் ! சமயத்தில் அவர்களே ஹீரோ ஆகிவிட்டால் ?! இந்த மாதிரி மேட்டரையெல்லாம் அடக்கி வாசிக்கனும் பாஸ் .முதல்ல ‘ pitch ’ சை ரெடி பண்ணலாம் . எவன அனுப்பி ரிபோர்ட் வாங்கறது என யோசித்தபோதுதான் உடனே எனக்கு எங்கள் மேன்சனில் வேலை செய்யும் செல்வம் ஞாபகத்தில் வந்தான். பக்குவமாக எடுத்துச்சொல்லி அனுமானாக அனுப்பி வைத்தேன். அடுத்த நாளே வந்தான்.

“ அண்ணே ! அவ பேரு மஞ்சு. +2 படிக்கிறா.” காதுக்குள் கிசுகிசுத்தான்.
“ செல்வம் கண்ணா இது போதுண்டா ! “ ரகசியம் காக்க அவனுக்கு வெகுமதி அளித்தேன். “ அண்ணே வேறே டீடெய்ல் வேணும்னா கேளுங்க. முடிச்சரலாம் “
5 ரூபாய்க்கே 50 ரூபாய் வேலையை செய்யத் துடித்தான். அவனை ஆசுவாசப்படுத்தி அனுப்பினேன்.

அடுத்த நாளிலிருந்து மஞ்சுவின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என யோசித்த போது கிடைத்த ஐடியாதான் ‘ Jogging “ செல்வது. என் ரூம் மேட்களுக்கும் சந்தேகம் வராது.தினமும் காலையில் 5:30 முதல் 6:30 வரை மெரீனாவில் ஓடிவிட்டு அப்படியே டீக்கடையில் ஐக்கியமாக ஆரம்பித்தேன். ( அத்தனை பேரும் தூங்கி வழியும் முகத்தோடு இருக்க நான் மட்டும் தனித்து தெரியமாட்டேன் ? ) மஞ்சு நடந்து வரும் வழியில் இருக்கும் போன் பூத்தில் நண்பர்களுக்கு போன் பேசினேன். எவண்டா இவன் காலங்காத்தால தேவையில்லாம போனப்போட்டு எழுப்பி உயிரவாங்கறானே என அவனவன் மண்டை காய்ந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். இப்படியாக சில பல மாதங்களில் மஞ்சுவின் பரிச்சய பார்வையை பெற்றுவிட்டேன்.

மஞ்சுவிற்கான என் பசலையை ரூம்மேட்களிடமிருந்து நீண்ட நாள் மறைக்க முடியவில்லை. ஒரு இளமாலைப் பொழுதில் என் ரூம்மேட் அருண் , மப்பிலிருந்த செல்வத்திடமிருந்து சுடச்சுட ‘ மேட்டரை ‘ க் கரந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டார். அவ்வளவுதான் அன்றைய அவலானேன்.

“ ஏண்டா ஏதோ உடம்பை குறைக்கதான் நீ ஒடரதா நெனச்சா அந்த பொண்ணணக் கூட்டிட்டு ஒடரதுக்கு trial பார்த்துகிட்டு இருக்கே போல ! “

“ நீ மந்திரிச்சுவிட்ட கோழி ரேஞ்சுக்கு சுத்திகிட்டு இருக்கும்போதே ஏதோ மேட்டர்ன்னு தோனுச்சு ! இதானா அது ! “

“ மாப்ளே பார்த்துடா மைனர் பொண்ண டாவடிசேன்னு தெரிஞ்சுது ஓரங்கட்டி
‘ டின் ’ னு கட்டிருவானுங்க ! “ அக்கரையாய் ரியாஸ் அட்வைசினான்.

“ அதான பார்த்தேன். என்னடா நம்ம குண்டன் மெரினாவே அதிர்ர ரேஞ்சுக்கு 5 மணிக்கே ஒடரானேன்னு ! நீயெல்லாம் காலை 7 மணி அப்படிங்கறதையே பேப்பர்ல தானடா படிச்சிருக்கே.”

நாலாபுறமிருந்தும் comments ஏவுகணைகளாகப் பாய்ந்தன. வாயைத் திறந்தால் பொளந்துவிடுவார்கள் என்பதால் சிரிப்புடன் வழிந்துகொண்டே அமைதியாக அமர்ந்திருந்தேன். “ டேய் செல்வம் தனியா கெடைச்சே நீ செத்தேடா மவனே ! “ மனதுக்குள் கருவினேன்.

அந்த வாரத்தில் மேன்சன் வெளியே நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது எங்களைக் கடந்து சென்ற மஞ்சு என்னை special பார்வை பார்த்துவிட்டு போக அவ்வளவுதான் !

“ டேய் இவதான் ‘ உன் ஆளா? ‘ கேட்ட நண்பர்களிடம் வெட்கத்துடன் ஆமோதித்தேன். பின் பல நாட்களில் நண்பர்களுடன் இருக்கும் போது இல்லாத போது எனக்கு மஞ்சுவின் special பார்வைகள் கிடைத்தது.

ஒரு beach party யில் எல்லா விஷயங்களும் பேசி முடிந்துபோய் கடைசியில் பேச டாபிக் கிடைக்காமல் என் மஞ்சுவின் மேட்டரை எடுத்தனர். இனி கொஞ்ச நேரத்திற்கு நான் செத்தேன்.

“ குண்டா நீ எங்க கூட வர்றப்போ அவ எதிர்ல வந்தா உன்னைத்தாண்டா
பார்க்கிறா ! நாங்களும் பல தடவை பார்த்திட்டோம் “ ( பின்னே தினமும் காலைலே அவளுக்காக தேவுடு காக்கறது எனக்கு தானே தெரியும் ! )

“ மாப்ளே ! உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு ‘ லவ் வேவ்ஸ் ’ ஒடுதுடா ! “ கையை sin wave கணக்காக ஆட்டினான் ஆனந்த்.

“ பொண்ணும் நல்லாத்தான் இருக்கா ! உனக்கு ஏத்த ஜோடிதான் ! என்ஜாய் ! “


அவர்கள் பேச பேச எனக்குள் காதல் உடுக்கை தறிகெட்டு அடிக்க ஆரம்பித்தது.
இப்படிப் பேசிப் பேசியே மனச ரணகளமாக்குறான்களே !

“ நாளைக்கு முதல் வேளையா அவள்ட்ட போய் பேசிட வேண்டியதுதான். !” நினைத்துக்கொண்டிருந்த போதுதான் ஞாபகம் வந்தது.
“ மைனர் பொண்ணு ! முதுகுல டின்னு ! “ ரியாஸ் கூறியது அசரீரியாக ஒலித்தது. சரி இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் போய்டுவா அதுவரைக்கும் காத்திருப்போம் ! .

ஆயிற்று ! மஞ்சு காலேஜ் செல்ல ஆரம்பித்துவிட்டாள். அதுவரை 13B பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவள் இப்பொழுது 45B யில் செல்ல ஆரம்பித்தாள்.
இனி 45 Bயே என் தேவதை ரதம் !. எந்த கலேஜ்ல சேர்ந்திருக்கிறா ? டிடெக்டிவ் ஆக மாறி பல probability போட்டு பார்த்தேன். என் சக்திக்கு மீறியதாக இருந்தது.

என் ரூம் மேட் அருணிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. சென்னையில் ஓடும் பஸ் ரூட்டுகள் எல்லாம் அவரின் விரல் நுணியில் ! அதில் வேலை செய்யும் கண்டக்டர்களுக்கே இவர் ஸ்டாப்பிங் சொல்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி இந்த task கை அவரிடம் outsource பண்ணிட வேண்டியதுதான் ! மிகவும் பிகு பண்ணினார் அருண்.

“ ச்சீ ச்சீ என்னைய என்னான்னு நெனச்சுகிட்டு இருக்கீங்க ? போயும் போயும் ஒரு பொண்ணு போற இடத்தை கண்டுபிடிக்க சொல்றீங்களா! Never! என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்த்தென்ன ! “ சலங்கை கட்டாதகுறையாக ஆடினார். நான் கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக அருணை சாந்தமாக்கினேன்.

“ சரி அவளைப் பத்தி டீட்டெய்ல் சொல்லுங்க ! “ சந்தோஷமாக சொல்லத்தொடங்கினேன்.

“ தினமும் காலைலே 7 :30 மணிக்கு 45B ல கெளம்பிடறா அருண் ! அந்த பஸ் எந்த காலேஜ் வழியா போகும்? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.” பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டுகேட்டேன்.

“ உங்க மூஞ்சியெல்லாம் பாக்கிறாளே ! நிச்சயம் ஏதாவது டுடோரியல் காலேஜ்ஜுக்குதான் போய்ட்டு இருப்பான்னு நெனைக்கறேன் ! “ கவலையேபடாமல் மஞ்சுவைப்பற்றி என் நெஞ்சில் ஆசிடை ஊற்றினார். “ யோவ் என்ன திமிர் ! இன்னொருநாள் உனக்கு வச்சுக்கறேன் கச்சேரிய ! “ மனதுக்குள் மட்டும்தான் கருவமுடிந்தது. கோவப்பட்டா காரியம் ஆகுமா ?

“ என்னங்க அருண் கொஞ்சம் சீரியஸா யோசிங்க ! அவ கையிலே drawing sheets எடுத்துட்டு போற குழாய் மதிரி இருக்குமே அதபார்த்தேன் “ எப்படியாவது அருணிடமிருந்து அவர் திறமையை கொணர பல டீட்டெய்ல்களை அள்ளிவீசினேன். ராக்கெட் ஏவும் விஞ்ஞானி மாதிரி அருண் பல கணக்குகளைப் போட்டார்.
“ நிச்சயம் அவ SIT காலேஜ்ல தான் படிக்கணும் ! “ அருண் வாக்கே அல்லாவின் வாக்காக அருணை வணங்கினேன். “ வாழ்க அருண் ! வளர்க அவர்
தொப்பை ! “ மானசீகமாக வாழ்த்தினேன்.

சரி operation ஐ ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஆபரேசனா ? மஞ்சுகிட்டே பேசறதுதான் ! இதற்கும் அருணிடமே ஆலோசனை கேட்டேன்.
“ ஆமா ! பஸ்சில என்ன பேசமுடியும் ? தவிர நேர்ல பார்க்கிறப்போ பேசுறதுக்கு யோசிப்பா. அவளுக்குதான் உங்களைத்தெரியுமே ! பஸ்சில போறப்போ சந்தர்ப்பம் பார்த்து உங்க பேரு, போன் நம்பரை எழுதி அவகிட்ட கொடுத்த்துட்டு வந்திருங்க ! அதான் அந்தப் பார்வை உங்களைப் பார்க்கிறாளே ! நிச்சயம் போன் வரும் ! “ கிருஷ்ண பரமாத்மா கணக்காக எனக்கு உபதேசம் செய்தார். “
“ அருமையான யோசனை ! ரொம்ப தேங்ஸ் அருண் ! “

“ இன்னொரு விஷயம் ! நம்ம ஏரியாவுலகீது கொடுத்துறாதீங்க ! அவளுக்கு தெரிஞ்சவன் எவனாவது பார்த்திட்டு உங்களைப் பொளந்துடப் போறான் “ எச்சரித்தார்.
பயபக்தியோடு தலையாட்டினேன்.
“ பொண்ணு கெடைச்சாலும் புதன் கெடைக்காது. நாளைக்குதான் புதன் !
நாளைக்கே முடிச்சிருங்க ! All the Best ! “ அசீர்வதித்தார்.

அன்று இரவு தூக்கமே வரவில்லை. புதன் கிழமை. காலை 5 மணிக்கே எழுந்துவிட்டேன். குளித்து அரிதாரம் பூசி 7 மணிக்கெல்லாம் பக்கா கெட் அப்பில் இருந்தேன். தார்மீக ஆதரவாக அருண் பஸ் ஸ்டாப் வரை வந்தார். பாக்கெட்டில் தொட்டுப்பார்த்துக்கொண்டேன். என் பெயர் போன் நம்பர் எழுதிய சிறிய கார்ட் இருந்தது. மஞ்சுவும் நின்று கொண்டிருந்தாள். என்னைப்பார்த்தாளா ! தெரியவில்லை !

அதோ தூரத்தில் தெரிந்தது என் காதல் வாகனம். 45B மெல்ல அசைந்தாடி வந்து நின்றது. Crutial match ல் களமிறங்கும் வீரனை வழியனுப்புவது போல அருண் கைகளிலேயே வெற்றி என காட்டினார். கண்டக்டரிடம் “ ஒரு SIT “ டிக்கெட் வாங்கினேன். பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருந்தது. ச்சே ! மத்த நேரத்தில எல்லாம் எவ்ளோ கும்பலா இருக்கும் ! .நின்னுகிட்டு இருந்தாலாவது மஞ்சு பக்கத்திலே போய் நின்னுகலாம். என் ஆசையில் மண் விழுந்தது.
“ இங்க உக்கார்ந்துகுங்க ! “ ரொம்ப அக்கரையாக கூறினார் அருகிலிருந்தவர்.வேண்டா வெறுப்பாக அமர்ந்தேன். 4 சீட்களுக்கு முன் மஞ்சு அமர்ந்திருந்தாள்.

பஸ்ஸில் கும்பல் ஏறவேயில்லை. யாரவது கிழவி ஏறினால் எழுந்து இடம் கொடுக்கலாம் என்றால் கூட ஒருத்தரையும் காணோம் ! வேறு வழியில்லை. காலேஜ்ஜில் எப்படியும் இறங்குவாள். அப்போ கொடுத்திட வேண்டியதுதான்! எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். என் இதயம் தெரித்து வெளியே விழுந்துவிடுவதைப் போல் துடித்தது.

“ SIT காலேஜ் இறங்கு “ கண்டக்டரின் குரல் கேட்டு எழுந்தேன். எந்த வழியாக இருங்குகிறாள் ? மஞ்சுவைப் பார்த்தேன். “ ஐய்யகோ ! என்ன இது ! ” அவள் எழும் அறிகுறியே இல்லை ! இப்போ என்ன பண்றது ? நான் வேறு SIT வரை தான் டிக்கெட் எடுத்திருந்தேன். சரி ஆவது ஆகட்டும் ! அவள் எங்கே இறங்குறா பார்க்கலாம். இடையில் Ticket checker வந்தா என்ன பன்றது ? பயம் வேறு ஒருபுறம் ஆட்டிப்படைத்தது. மஞ்சுவிற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டேன்.

ஒரு வழியாக மஞ்சு கிண்டியில் இறங்கினாள். நல்லவேளை யாரும் டிக்கெட் கேட்கவில்லை. மஞ்சு இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வேகமாக நடையைக்கட்டி மஞ்சுவை நெருங்கினேன். “ Excuse me மஞ்சு ! “ சொல்ல வாயெடுத்தேன். திடீரென என்னை உரசியபடி ஒரு பைக் சென்று மஞ்சுவின் அருகில் நின்றது. டோனி ரேஞ்சுக்கு பைக்கில் ஒரு தடியன் ! அவனைக் கண்டதும் மஞ்சுவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி ! “ சீக்கிரம் போ ! உனக்காக இன்னைக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு
வர்றேன் !” மஞ்சு அவனிடம் கொஞ்சிக்கொண்டே பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்றாள்

போக்ரான் அணுகுண்டு என் இதயத்தில் வெடித்தது.. “ மைனர் பொண்ணு பேசினா முதுகுல டின்னு ன்ணு என்னை தடுத்துட்டீங்களேடா! காலேஜ் சேர்ந்து ஒரு மாசந்தானே இருக்கும் அதுக்குள்ளயே எவனோ தேத்தீட்டான்யா தேத்தீட்டான் !
3 ரூபாய்க்கு பஸ்ஸில் கிண்டி வந்த நான் திரும்பி தனியே திருவல்லிகேணிக்கு 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றபொழுது முன் சென்ற லாரியின் பின் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
“ பெண்ணின் திருமண வயது 21 !” அப்போ காதலிக்கும் வயது ? யாராச்சும் சொல்லுங்கப்பா !! ப்ளீஸ் !

25 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

அடப் பாவமே!
;(

said...

இந்த விஷயத்தில மட்டும் ஆற போடவே கூடாது, மீறி ஆறபோட்ட இதே மாதிரிதான் எவனாவது கொத்தீட்டு போய்டுவான். முடிஞ்ச வரைக்கும் on the spotல அடிக்கணும் மாமே,

said...

//பஸ் வாராத வெறுப்பில் அவள் முகம் சுழித்தபோது அந்த சுழிப்புச் சுழலில் சிக்கி அமிழ்ந்து போனேன்.//

//5 ரூபாய்க்கே 50 ரூபாய் வேலையை செய்யத் துடித்தான். அவனை ஆசுவாசப்படுத்தி அனுப்பினேன்.//

அருமை பாண்டி.எழுத்துல எங்கியோ
போய்ட்டிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

said...

இதைப் படித்துவிட்டு கண்ணீர் வந்துவிட்டது.அழுகையால் வந்த கண்ணீர் அல்ல.சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது.எப்படி ஜொள்ஸ் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கின்றது?காதலிக்க எல்லாம் வயது இல்லை.நீங்கள் too late!so better luck next time!

said...

//“பெண்ணின் திருமண வயது 21!” அப்போ காதலிக்கும் வயது ? யாராச்சும் சொல்லுங்கப்பா !! ப்ளீஸ்!//

அட வுடு பாண்டி.இந்த மஞ்சு போனா
இன்னொரு அஞ்சு.அந்த அஞ்சும் இல்லைனா,ஆறு,ஏழு,எட்டு,பத்து..ன்னு
முயற்சி சிறிதும் மனந்தளரமா முயற்சி செய்.நம்ம 'சுமா' மாதிரி 'நல்ல சைஸ்ல' ஏதாவது ஒண்ணு மாட்டும்.

said...

பாண்டி மஞ்சுவை இப்படி அநியாயமா கோட்டை விட்டுடீங்க. ஸ்கூலு புள்ளயா இருக்கும் போதே வளைச்சு போடனும், இல்லாட்டி இப்படி தான் கோட்டை விட வேண்டியது இருக்கும்.
கிணற்றில் இருக்கும் போதே பிடிக்காமல் கடலில் கலந்த பிறகு பிடிக்க முடியுமா.
சரி சரி பரவாயில்லை. நம்ம ஊரில் ஸ்கூல் புள்ளைங்களுக்கா பஞ்சம். முயற்சியை விட வேண்டாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
அடப் பாவமே!
;(
//

வாங்க சிபி ! :)) சந்தோசத்துல சொல்லற மாதிரி தெரியுது;))

said...

//தம்பி said...
இந்த விஷயத்தில மட்டும் ஆற போடவே கூடாது, மீறி ஆறபோட்ட இதே மாதிரிதான் எவனாவது கொத்தீட்டு போய்டுவான். முடிஞ்ச வரைக்கும் on the spotல அடிக்கணும் மாமே, //

ஆஹா யாரிந்தத் தம்பி? :)) அய்யகோ இப்படியொரு அறிவுரையை அள்ளித்தெளிக்க யாருமற்றுப்போய்தானே நிர்க்கதியானேன் !! :((
சரி சரி இனிமேயாச்சும் அப்பப்போ கொஞ்சம் வந்து ஐடியக்களை அள்ளித்தெளிச்சிட்டு போங்க தம்பி :))

said...

//(துபாய்) ராஜா said...
//பஸ் வாராத வெறுப்பில் அவள் முகம் சுழித்தபோது அந்த சுழிப்புச் சுழலில் சிக்கி அமிழ்ந்து போனேன்.//

//5 ரூபாய்க்கே 50 ரூபாய் வேலையை செய்யத் துடித்தான். அவனை ஆசுவாசப்படுத்தி அனுப்பினேன்.//

அருமை பாண்டி.எழுத்துல எங்கியோ
போய்ட்டிருக்கீங்க.வாழ்த்துக்கள். //

வாங்க ராசா ரொம்ப தேங்ஸுங்கோ !!:))

said...

// thurgah said...
இதைப் படித்துவிட்டு கண்ணீர் வந்துவிட்டது.அழுகையால் வந்த கண்ணீர் அல்ல.சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது.//

வாங்க துர்கா :)) என் நிலைமை உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்குது ம்ம்...

//எப்படி ஜொள்ஸ் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கின்றது?காதலிக்க எல்லாம் வயது இல்லை.நீங்கள் too late!so better luck next time! //

காதலிக்க வயது இல்லை எனக் கூறி எந்து சிந்தனையை தெளிவுபடுத்திய துர்கா அவர்களுக்கு ஜொள்ளுப்பேட்டையின் சார்பாக இந்த சால்வையை அணிவிக்கின்றேன் :))))

said...

//(துபாய்) ராஜா said...
//“பெண்ணின் திருமண வயது 21!” அப்போ காதலிக்கும் வயது ? யாராச்சும் சொல்லுங்கப்பா !! ப்ளீஸ்!//

அட வுடு பாண்டி.இந்த மஞ்சு போனா
இன்னொரு அஞ்சு.அந்த அஞ்சும் இல்லைனா,ஆறு,ஏழு,எட்டு,பத்து..ன்னு
முயற்சி சிறிதும் மனந்தளரமா முயற்சி செய்.நம்ம 'சுமா' மாதிரி 'நல்ல சைஸ்ல' ஏதாவது ஒண்ணு மாட்டும். //

துபாய் ராசா உங்களுக்கு என்ன கோவம்ணே என்மேல :((

said...

// நாகை சிவா said...
பாண்டி மஞ்சுவை இப்படி அநியாயமா கோட்டை விட்டுடீங்க. ஸ்கூலு புள்ளயா இருக்கும் போதே வளைச்சு போடனும்,//

வாங்க சிவா தம்பி :)) நல்லாதேன் சொல்லி இருக்கீங்க !! ஆனா அப்போ நம்ம கூட இருந்த பயலுவ பொறமையிலே ஏதோ சொல்லிபுட்டானுக போல :(

//சரி சரி பரவாயில்லை. நம்ம ஊரில் ஸ்கூல் புள்ளைங்களுக்கா பஞ்சம். முயற்சியை விட வேண்டாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். //

அட இதைய நம்ம வள்ளுவர் வேற சொல்லிப்புட்டாரா??:)))

said...

பாண்டி,

நீங்க வரவர ஓரே சோகமான மேட்டரா சொல்லிகிட்டே வர்றீங்க....

said...

//தம்பி said...
இந்த விஷயத்தில மட்டும் ஆற போடவே கூடாது, மீறி ஆறபோட்ட இதே மாதிரிதான் எவனாவது கொத்தீட்டு போய்டுவான். முடிஞ்ச வரைக்கும் on the spotல அடிக்கணும் மாமே, //

அனுபவம் பேசுகிறது! :)

said...

//ராம் said...
பாண்டி,

நீங்க வரவர ஓரே சோகமான மேட்டரா சொல்லிகிட்டே வர்றீங்க.... //

அட என்னங்க ராம் கோச்சிக்கறீங்க :)) எனக்குத்தானே சோகம் படிக்கிற உங்களுக்குமா ?? :))

said...

Brother..Atleast oneum pickup aagatium ungaleyavathu look viduthey... Aana enai ellam aarumey look kooda vida matengirango.. boss.

ungala patha poramaiya irukku :(((

Karvendan

said...

//அட என்னங்க ராம் கோச்சிக்கறீங்க :)) எனக்குத்தானே சோகம் படிக்கிற உங்களுக்குமா ?? :)) //

உங்களுக்கும் சோகம் இருக்குமின்னா எங்களுக்கும் இருக்குமில்லே.... :-)))

said...

//Karvendan said...
Brother..Atleast oneum pickup aagatium ungaleyavathu look viduthey... Aana enai ellam aarumey look kooda vida matengirango.. boss.

ungala patha poramaiya irukku :(((//

வாங்க கார்வேந்தன் :)) என்னையப் பார்த்து பொறாமையா??:)))) இப்படி சொல்ற மொதோ ஆள் நீங்கதாங்கண்ணா :))))

said...

//ராம் said...

உங்களுக்கும் சோகம் இருக்குமின்னா எங்களுக்கும் இருக்குமில்லே.... :-))) //

ஆஹா எஞ்சோகத்துல பங்கேத்துக்குற தோழன் ராம் வாழ்க வாழ்க :))))

said...

" குண்டா நீ எங்க கூட வர்றப்போ அவ எதிர்ல வந்தா உன்னைத்தாண்டா
பார்க்கிறா "

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குறாங்கையா!!!! -

நாம்ம கமல் சார் சொன்ன மாதிரி... ரெண்டு மூனு ரவுண்டு அடீங்க.. அப்போ பெண்ணின் காதலிக்கும் வயதும் தெரியும்... காதலும் புரியும்...

சின்னப் பசங்க எல்லாம் லவ் மேட்டர பிலாக்குல போடுறாங்கய்யா!! என்னன்னு சொல்ல!! :P

said...

//Kanya said...
நாம்ம கமல் சார் சொன்ன மாதிரி... ரெண்டு மூனு ரவுண்டு அடீங்க.. அப்போ பெண்ணின் காதலிக்கும் வயதும் தெரியும்... காதலும் புரியும்...

சின்னப் பசங்க எல்லாம் லவ் மேட்டர பிலாக்குல போடுறாங்கய்யா!! என்னன்னு சொல்ல!! :P //

வாங்க கன்யாக்கா :)))) என்ன இப்படி சொல்லிபுட்டீக ?? லவ் மேட்டரை நீங்களுந்தான் எழுதுங்களேன்:)) ரொம்ப ஜாலிய இருக்கும் !!

said...

ம்... ரொம்பச் சோகமாப் போச்சுப்பா.

பாண்டி!... இத்தனை நாளாக கஷ்ரப்பட்டதில
பிரியோசனமே இல்லாமப் போச்சே? மஞ்சு உங்கள அம்போன்னு விட்டிட்டுப் போட்டாங்களே? சரி... சரி... வேற பொண்ணுங்களா இல்ல?

நன்றாக எழுதி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள்.

said...

//சத்தியா said...
ம்... ரொம்பச் சோகமாப் போச்சுப்பா.
பாண்டி!... இத்தனை நாளாக கஷ்ரப்பட்டதில
பிரியோசனமே இல்லாமப் போச்சே? மஞ்சு உங்கள அம்போன்னு விட்டிட்டுப் போட்டாங்களே? சரி... சரி... வேற பொண்ணுங்களா இல்ல?

நன்றாக எழுதி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள். //

வாங்க சத்தியா :)) என்னங்க பன்றது ? ஆனா உலகதுலே ஆம்பிளைங்களுக்கு கவலைப் படரது யாரு? இதுவே ஒரு பொண்ணுன்னா ஆளாளுக்கு ஆறுதல் சொல்றேன்னு பிஸ்து கெளப்பி இருப்பாங்க :((

ரொம்ப தேங்ஸுங்க :)))

said...

"உங்க மூஞ்சியெல்லாம் பாக்கிறாளே ! நிச்சயம் ஏதாவது டுடோரியல் காலேஜ்ஜுக்குதான் போய்ட்டு இருப்பான்னு நெனைக்கறேன் ! "
HAHAHHAHAHAHAHAHAAH
Ishwara.. paavam neenga.. ippo puriyuthu ean neenga jollupandi'ya maruninganu..hehehe.. neenga unga paer jollupandi'nu irukuratha.. Jolludevadas'nu maatrinaal porutthamaa irrukum...

said...

//சுகன்யா ஷ்ரி said...
"உங்க மூஞ்சியெல்லாம் பாக்கிறாளே ! நிச்சயம் ஏதாவது டுடோரியல் காலேஜ்ஜுக்குதான் போய்ட்டு இருப்பான்னு நெனைக்கறேன் ! "
HAHAHHAHAHAHAHAHAAH
Ishwara.. paavam neenga.. ippo puriyuthu ean neenga jollupandi'ya maruninganu..hehehe.. neenga unga paer jollupandi'nu irukuratha.. Jolludevadas'nu maatrinaal porutthamaa irrukum... //

அடடடா என்னா ஒரு சந்தோசம் சுகன்யா உங்களுக்கு !! நமக்கும் இந்த காதலுக்கும் காத தூரம்முங்க அம்மணி. ரொம்ப சிரிக்காதீங்க அப்புறம் யாராச்சும் மயங்கீரப்போறாங்க :(((