Friday, August 18, 2006

ஞாண் tolet போர்டு கண்டு...

Tolet போர்டு கண்டு
நம்மூரு பஸ்டாண்டுல பஸ்சுக்கு நின்னுகிட்டு இருக்கீங்க. ரொம்ப நேரமா பஸ்சு வராத வெறுப்பிலே நின்னுகிட்டு இருக்குறப்போ ‘கும்சிக்’குன்னு ஒரு பஸ்சு ஆடி அசைஞ்சு வருது. அப்பாடா வந்துருச்சு நிம்மதியா போய் சீட்டுல செட்டில் ஆகலாம்னு ஆசை ஆசையாய் பஸ்சுக்குள்ளார ஏறிப்போறீங்க ! உங்களுக்கு பயங்கர ஷாக் !! என்ன?? எல்லா சீட்டுலயும் ஒரு துண்டோ இல்ல ‘பேக்’கோ போட்டுருக்கு. அடப்பாவிகளா! அதுக்குள்ளாரயும் துண்டு போட்டு சீட்டைப் புடிச்சிட்டீங்களாடான்னு பொலம்பிகிட்டே இறங்கிடுறீங்க ! சரி போனது போகட்டும் அடுத்த பஸ்ஸிலயாவது சூதனாமா இருந்து சீட்டப் புடிப்போன்னு உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிகிட்டு நிக்கிறீங்க !

அடுத்த பஸ்ஸும் வருது .ஆனா அதுலயும் நீங்க சீட்டப் புடிக்க முடியாம ‘பேக்கு’ மாதிரி நிக்குறீங்க. உங்க கண்ணுக்கு முன்னாடியே அவனவன் பாய்ஞ்சு ஜன்னல் வழியா சீட்டைப் போட்டுட்டு ‘என்னாடா புண்ணாக்கு!’ ன்னு உங்களை ஒரு பார்வை வேற பாக்குறானுவ ! என்ன கொடுமையடா இதுன்னு நீங்க ‘தேமே’ன்னு நிக்கிறீங்க. இப்படியே போய்கிட்டு இருந்தா என்னதான் பண்ணுரது ?? என்னடா பாண்டிப்பயலுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறீயளா? அது வேற ஒண்ணும் இல்லீங்க. போன வாரம் ப்ரெண்டு ஒருத்தனைப் பார்த்தேன். பய இப்போ கொஞ்சநாளா சாப்ட்வேர்ல வேலை பார்த்துகிட்டு இருக்கான். நம்மளோட ரொம்ப தோஸ்துங்க.

பய அப்படியே நம்மள மாதிரிதான். ‘என்னடா இப்போல்லாம் phone னே பண்றதில்ல! என்ன ஏதாசும் பொண்ணுகூட செட்டில் ஆகிட்டயா’ ன்னு கேட்டதுதான் . பய ரொம்ப பீலிங்ஸ் ஆய்ட்டான். என்னடா ஏதாசும் தப்பா பேசிட்டனான்னு பதறிப்போய் கேட்டா சொல்றான் “ எங்கடா பாண்டி நானும் ஒவ்வொரு தடவையும் ஏதாச்சும் பொண்ணுங்க வரும் அப்படியே பேசி செட்டில் ஆகிடலாம்னு பார்த்தா ஆவனவன் கம்பெனி வாசல்லயே துண்டோட நின்னு வாசல்லயே மடக்கீடுறானுவ ! என்ன பண்ரது? சரி அடுத்த தடவை வர்றதையாவது மடக்கிடலாம்னு நானும் கையிலே ஒரு துண்டெடுத்துகிட்டு போனா அங்கன பார்த்தா அவனவன் பெரிய ஜமுக்காளத்தையே வச்சிகிட்டு நிக்குறானுவ!! சரி நாமளும் கோதாவிலே இறங்கிடனும் உடக்கூடாதுன்னு நானும் ஒரு ஜமுக்காளத்தை எடுத்துகிட்டு போனா அவனவன் பெரிய தார்ப்பாயையே வச்சுகிட்டு நிக்குறானுவ. இதுலே நமகெங்க இடம் கெடைக்கப் போவுது !! “ ன்னு ரொம்ப சோகமா சொல்லிகிட்டு இருந்தான்.

அடடா இதென்னடா இப்படியொரு சோதனை. இப்படித்தாங்க காலேஜில இருந்து இந்தப் பொண்ணுங்க கூட ஒரே பிரச்சனை. ஏதாச்சும் பாக்குற மாதிரி ஒரு பொண்ணு வந்துடக் கூடாது. உடனே எங்க இருந்துதான் வருவானுகளோ? ஒடனே வந்து பட்டா போட்டு சுத்தியும் வேலிய போட்டுருவானுங்க ! இல்லையின்னா அதுக காலேஜுக்குள்ள நுழையுறப்போவே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டாத்தான் வரும். எவண்டாவன் அதுகுள்ளா ரிசர்வ் பண்ணுனதுன்னு கேட்டா அது ஸ்கூலுல இருந்தேன்னு பதில் வரும். நாம ஒரு ஓரமா RAC ( Reservation against cancellation) டிக்கெட்டோட நிக்க வேண்டியதுத்தான்.

ஆனா சிலபேரு இருப்பானுகங்க ! அந்தப்பொண்ணோட ஏதாச்ச்சும் ஒரேயொரு தகவல் தெரியும். உதாரணதுக்கு அதுக்கு தெலுங்கு தெரியும் அப்படீங்கர ஒரேயொரு ஜல்லி கல்லு கெடைச்சா போதுமே. சும்மா ஜல்லிய கொட்டி தாரைப் போட்டு ஒரு பெரிய காதல் Highwayயே போட்டுருவாணுங்க ! “அம்மாயி சாயிபாபா கோயில் சூஸ்தாரா ? “ ன்னு அரையும் கொறையுமா தெலுங்கு பேசி அப்படியே திருப்பதிக்கு அப்பீட் ஆயிருவானுங்க !

பேசாமா இந்த பொண்னுங்க மனசுக்கு ஒரு TOLET ன்னு போர்டு மாட்டிகிட்டா எவ்ளோ சவுகரியமா இருக்கும்?! “ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “ன்னு பல பாஷை பேசிகிட்டே அவங்க மனசுகுள்ள செட்டில் ஆகிடலாம் பாருங்க ! கொஞ்சம் ரோசணை பண்ணிப்பாருங்க அம்மணிகளா !!

49 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

orey thaamaaasu

said...

பாண்டி'ணே,

கரக்ட் நீங்க சொன்னது, வீணா (வினைசொல்) தாடியெல்லாம் வளர்த்துக்கிட்டு அலையறதுக்கு உங்க ரோசணை சரியா இருக்குமிண்ணே...

மாதர்குலங்க மனசு வச்சா நடக்குமிண்ணே....

said...

நல்லா இருக்கு

said...

// கார்த்திக் பிரபு said...
orey thaamaaasu //

வாங்க கார்திக் :))))

said...

// ராம் said...
பாண்டி'ணே,

கரக்ட் நீங்க சொன்னது, வீணா (வினைசொல்) தாடியெல்லாம் வளர்த்துக்கிட்டு அலையறதுக்கு உங்க ரோசணை சரியா இருக்குமிண்ணே...

மாதர்குலங்க மனசு வச்சா நடக்குமிண்ணே.... //

வாங்க ராம் :))) வினைச்சொல்லெல்லாம் சொல்லி புல்லரிக்க வக்கிறீங்களே :))))

said...

//திண்டுக்கல் பஸ்டாண்டு said...
நல்லா இருக்கு //

அட இதென்னப்பா பேரு திண்டுக்கல் பஸ்டாண்டுன்னு !!!:)))))

said...

//வாங்க ராம் :))) வினைச்சொல்லெல்லாம் சொல்லி புல்லரிக்க வக்கிறீங்களே :))))//

அப்புறம் இல்லன்னே வீணா'னா யாரு.. பொண்ணா... அழகா இருப்பாங்களான்னு கேப்பிங்க... அதுக்குதான்.

கவனமா இருக்க வேண்டியாதிருக்கு பாண்டி'ணே

said...

// ராம் said...
அப்புறம் இல்லன்னே வீணா'னா யாரு.. பொண்ணா... அழகா இருப்பாங்களான்னு கேப்பிங்க... அதுக்குதான்.
கவனமா இருக்க வேண்டியாதிருக்கு பாண்டி'ணே //

அடப்பாவி!!! இப்படி கவுக்கரதிலே என்ன சந்தோசம் உங்களுக்கு :(( ஆனா உங்க பயத்திலயும் ஒரு ஞாயம் இருக்கத்தேன் செய்யுது ;)))))

said...

பாண்டி!
என்னத்த சொல்ல...
ரூட் போட வழியில்லாம முழிக்குறவனுக்கு உங்க ஐடியா வொர்க் அவுட் ஆகும் போல இருக்கு.

said...

Jollu Sir,
Laughing, laughing and stomach aching and ulcer coming. What to do?

said...

//ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “//
ஆகா பாண்டி எப்படிப்பா இப்படி நல்ல நல்ல ரோசனையெல்லாம் சொல்லுறே உக்காந்து யோசிப்பியோ?

said...

நான் உங்க ரசிகர் ஆயிட்டேனுங்கோ!!!

said...

Dude you always find great pictures. Thanks for blogging.

said...

குருநாதரே நீங்கள் மறுபடியும் 'செருப்பு' என்று யாரவது ஒரு பெண்ணிடம் இருந்து பின்னூட்டம் வாங்கமால் சும்மா இருக்கமாட்டீங்க.சரி அது எப்படி 'to let board' மனதிற்குள் மாட்டிக்கொள்வது.சிஷ்யையின் சந்தேகத்தைத் தீர்து வையுங்கள்.

said...

இதுக்கு ஒரு சன்கம் ஆரம்பிச்சிரு தல! நான் உறுப்பினர் ஆகரன்

said...

// நாகை சிவா said...
பாண்டி!
என்னத்த சொல்ல...
ரூட் போட வழியில்லாம முழிக்குறவனுக்கு உங்க ஐடியா வொர்க் அவுட் ஆகும் போல இருக்கு. //

வாங்க சிவாத்தம்பி :)) நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்க ஏதோ பெரிய 6 LANE HIGHWAY யே போட்டு வச்சிருக்கற மாதிரி தெரியுதே ;))))))

said...

//gopalan said...
Jollu Sir,
Laughing, laughing and stomach aching and ulcer coming. What to do? //

வாங்க கோபாலன் :))ரொம்ப சந்தோசமா இருக்குதுங்கோ :)) அல்சர் வராம பார்துக்குங்க ! அப்புறம் பார்டிக்கு போக முடியாது ;)))

said...

வல்லிய ஐடியா!.
கல்யாணம் பண்ணிகிட்ட பொம்பளைங்களே தாலி, மெட்டி போட்டுக்கிறது இல்லே, இதுல் இப்படி வேற? பொண்ணுங்க சம உரிமை கேட்டுற போறாங்க? நாமலும் ஒரு போர்டு மாட்டிகிட்டு திரியனும். போர்ட பார்த்தா மக்கள் Q'ல நிக்க மாட்டாங்க?

said...

//சந்தோஷ் said...
//ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “//
ஆகா பாண்டி எப்படிப்பா இப்படி நல்ல நல்ல ரோசனையெல்லாம் சொல்லுறே உக்காந்து யோசிப்பியோ? //

அட வாங்க சந்தோஷ் :))) என்ன பண்றதுங்க சந்தோஷ் எல்லாம் நம்ம ப்ரெண்டுக்கு ஒரு யோசனைக்காகத்தான் இந்தப் பதிவு :))

said...

//விஸ்வா Viswa said...
நான் உங்க ரசிகர் ஆயிட்டேனுங்கோ!!! //

அட வாங்க வாங்க விஸ்வா :)) வந்து பேட்டையிலே ஐக்கியமாகுங்கோ !! :))

said...

//JR Woodward said...
Dude you always find great pictures. Thanks for blogging. //

hai Woodward thank you verymuch for your visit. Do you remember? you are the first one to comment in my blog when I started this Jollupet. thank you for your compliment :)))

said...

//குசும்பு தேவி said...
குருநாதரே நீங்கள் மறுபடியும் 'செருப்பு' என்று யாரவது ஒரு பெண்ணிடம் இருந்து பின்னூட்டம் வாங்கமால் சும்மா இருக்கமாட்டீங்க.//

வாங்க குசும்புதேவி :)) செருப்புன்னு யாராச்சும் சொல்லிடுவாங்களா என்ன? என் சிஷ்யைன்னு அப்புற நீங்க எதுக்கு இருக்கீங்க. குருவுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நீங்க பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டீங்கங்கறது எனக்கு தெரியாதா என்ன? ;)))

//சரி அது எப்படி 'to let board' மனதிற்குள் மாட்டிக்கொள்வது.சிஷ்யையின் சந்தேகத்தைத் தீர்து வையுங்கள். //

என்ன பெரிய விஷயம் பேசாமல் சின்னதாக தங்கத்தில் tolet என எழுதி டாலராக chain னில் மாட்டிக்கொண்டால் போயிற்று !!! :)))யாரேனும் கேட்டால் சொல்லவே இருக்கிறது "பேஷன் " :))

said...

//வேந்தன் said...
இதுக்கு ஒரு சங்கம் ஆரம்பிச்சிரு தல! நான் உறுப்பினர் ஆகறேன்//

வாங்க வேந்தன் :))) சங்கம் தான் ஏற்கனவே இருக்கே !!! பார்கலையா நீங்க ?? :)))வந்து உறுப்பினர் ஆகிக்குங்கோ!!! :))

said...

//ILA(a)இளா said...
வல்லிய ஐடியா!.
கல்யாணம் பண்ணிகிட்ட பொம்பளைங்களே தாலி, மெட்டி போட்டுக்கிறது இல்லே, இதுல் இப்படி வேற? பொண்ணுங்க சம உரிமை கேட்டுற போறாங்க? நாமலும் ஒரு போர்டு மாட்டிகிட்டு திரியனும். போர்ட பார்த்தா மக்கள் Q'ல நிக்க மாட்டாங்க?//

வாங்க வாங்க விவசாயி :)))) என்னே ஒரு சிந்தனை !! பொண்னுங்க ஓட்டு உங்களுக்குத்தான் போங்க !! சந்தோசமா இப்போ ?? ;)))))

said...

'செருப்பு,செருப்பு,செருப்பு'
சொல்லிட்டம்ல!

said...

//வாங்க சிவாத்தம்பி :)) நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்க ஏதோ பெரிய 6 LANE HIGHWAY யே போட்டு வச்சிருக்கற மாதிரி தெரியுதே ;))))) //
பாண்டிண்ணன், இதை எல்லாம் சபையிலா கேட்பது. எல்லாம் Given and Take policy, covering extra fitting policy, இது போல ஏகப்பட்ட பாலிஸி தான்....
தனியா விரிவா பேசுவோம் நேரா பாக்கும் போது :)

said...

//“ஞான் Tolet போர்டு கண்டு! இவ்விட நிங்கள் மனசு கிட்டுமோ?! “ன்னு பல பாஷை பேசிகிட்டே அவங்க மனசுகுள்ள செட்டில் ஆகிடலாம் பாருங்க ! கொஞ்சம் ரோசணை பண்ணிப்பாருங்க அம்மணிகளா !! //

பாண்டி! எப்படிப்பா ஒனக்கு மட்டும் இந்த மாதிரியான புரட்சிகரமான ஐடியாக்கள் எல்லாம் தோணுது. அந்த மாதிரி போர்டு போட்ட என் தங்கச்சி சுமாவை வேணாம்னு சொல்லிட்டு இப்ப இந்த மாதிரி பதிவெல்லாம் போடறது கொஞ்சம் கூட நல்லால்ல ஆமா!
:)

said...

//செருப்பு said...
'செருப்பு,செருப்பு,செருப்பு'
சொல்லிட்டம்ல! //

அடப்பாவிகளா என்ன ஆகப்போகுதோ உங்களுக்கேல்லாம்??!! எங்கே என் சிஷ்யகோடி ?? :)))))

said...

// நாகை சிவா said...
//பாண்டிண்ணன், இதை எல்லாம் சபையிலா கேட்பது. எல்லாம் Given and Take policy, covering extra fitting policy, இது போல ஏகப்பட்ட பாலிஸி தான்....
தனியா விரிவா பேசுவோம் நேரா பாக்கும் போது :) //

அடப்பாவி LIC பாலிஸி ரேஞ்சுக்கு ஏதேதோ சொல்லுறியே ;)) ம்ம்ம் கொடுத்து வச்ச மவராசன்....;)))))

said...

// கைப்புள்ள said...
//பாண்டி! எப்படிப்பா ஒனக்கு மட்டும் இந்த மாதிரியான புரட்சிகரமான ஐடியாக்கள் எல்லாம் தோணுது. அந்த மாதிரி போர்டு போட்ட என் தங்கச்சி சுமாவை வேணாம்னு சொல்லிட்டு இப்ப இந்த மாதிரி பதிவெல்லாம் போடறது கொஞ்சம் கூட நல்லால்ல ஆமா!//


வாங்க தல :))
எம்மேல கோவம் ஏதாசுன்னா ரெண்டு அடி அடிச்சிடுங்க. சும்மா சுமா கிமான்லாம் பயமுறுத்தக்கூடாது சொல்லிபிட்டேன் ;)))))))

said...

//சும்மா சுமா கிமான்லாம் பயமுறுத்தக்கூடாது சொல்லிபிட்டேன் ;)))))))//

அப்போ நீ ஆசை காட்டி மோசம் பண்ண என் தங்கச்சி சுமோவுக்கு சே...சுமாவுக்கு ஒரு வழி சொல்லு! நான் பேசாம் போயிடறேன்.
:)

said...

என்ன குருநாதரே!என்னை வம்பில் மாட்டி விடுகின்றீர்களே!"to let"என்று கழுத்தில் மாட்டிக்கொண்டால் இரண்டு அர்த்தங்களைக் குறிக்குமே!
அதுவும் தங்கத்தில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?தங்கம் விற்கின்ற விலைக்கு இது தேவையா?யார் அந்த செருப்பு?நல்ல காரியம் செய்தீர்கள்.இந்த ஆள் தொல்லை தாங்க முடியவில்லை.இப்படி யாரவது சொன்னால் அடங்குதான்னு பார்ப்போம்!

said...

பாண்டி!
சகோதரி சுமாவுக்குப் பதில் சொல்லு. சீக்கிரம்.

இவண்
அகில உலக சுமா நீதி கேட்போர் நலச் சங்கம்
கொ.ப.செ
சித்தூர்கட் வட்டம்

said...

யோவ் ஜொள்ளு!

சும்மா சொல்ல கூடாதுயா,இது செமத்தியான ரோசனையா இருக்கே!

said...

ஜொள்ஸ், 2 , 3 டூலெட் போர்டு போட்டுட போறாங்கப்பா..பாத்து.. இப்படி எல்லாம் ஐடியா குடுத்து நல்லா இருக்கற பொண்ணுங்கள கெடுத்துடாதீங்க.. அப்புறம் கஷ்டப்பட போறது நீங்கத்தான் சொல்லிட்டேன்..

said...

//கைப்புள்ள said...
அப்போ நீ ஆசை காட்டி மோசம் பண்ண என் தங்கச்சி சுமோவுக்கு சே...சுமாவுக்கு ஒரு வழி சொல்லு! நான் பேசாம் போயிடறேன்.//

தல என்னைய இப்படி போட்டு தாக்குறீயளே :(((( சுமாவுக்கு நான் ஒரே வழிதான் சொல்ல முடியும் - அண்ணாசாலை :))) அங்கேதான் ரோடு அகலமா இருக்கும்லே !!!!:)))


//பாண்டி!
சகோதரி சுமாவுக்குப் பதில் சொல்லு. சீக்கிரம்.

இவண்
அகில உலக சுமா நீதி கேட்போர் நலச் சங்கம்
கொ.ப.செ
சித்தூர்கட் வட்டம் //

அட இப்படிவேற கெளப்பி விட்டுகிட்டு திரியுறீங்களா ?? என்ன கொடுமையிது தல ? ஓணான பார்த்தமா க்ளிக்குனமான்னு இல்லாம ஏன் ஒரு கன்னிப்பையன் சாபத்தை வாங்க அலையுறீங்க ??? :))))))))

said...

//குசும்பு தேவி said...
என்ன குருநாதரே!என்னை வம்பில் மாட்டி விடுகின்றீர்களே!"to let"என்று கழுத்தில் மாட்டிக்கொண்டால் இரண்டு அர்த்தங்களைக் குறிக்குமே!
அதுவும் தங்கத்தில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?தங்கம் விற்கின்ற விலைக்கு இது தேவையா?யார் அந்த செருப்பு?நல்ல காரியம் செய்தீர்கள்.இந்த ஆள் தொல்லை தாங்க முடியவில்லை.இப்படி யாரவது சொன்னால் அடங்குதான்னு பார்ப்போம்!//

அய்யகோ வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே !! தீட்டிய மரதிலேயா கூர் பார்ப்பது ?? அய்யகோ என் சிஷ்யையே என்னைச் சாய்ப்பதா? இதைக்கண்டு பகைவர் நகுவாரே என் செய்வேன்? நீயா பேசியது குசும்பு தேவி நீயா பேசியது ??:)))))

said...

//தம்பி said...
யோவ் ஜொள்ளு!

சும்மா சொல்ல கூடாதுயா,இது செமத்தியான ரோசனையா இருக்கே!//

வாங்க தம்பி அண்ணே :)))
எல்லாம் உங்களைப் போன்ற சான்றோர்களுக்காதான் அள்ளிவிட்டுகிட்டு இருக்கேன் ;))))

said...

//கவிதா said...
ஜொள்ஸ், 2 , 3 டூலெட் போர்டு போட்டுட போறாங்கப்பா..பாத்து.. இப்படி எல்லாம் ஐடியா குடுத்து நல்லா இருக்கற பொண்ணுங்கள கெடுத்துடாதீங்க.. அப்புறம் கஷ்டப்பட போறது நீங்கத்தான் சொல்லிட்டேன்..//

வாங்க வாங்க கவிதாக்கா :)) என்னாக்கா இப்படி குண்டைத் தூக்கிப்போடுறீங்க :(( சரி மனச தேத்திகிட்டு வேற ஐடியா இருக்கா பாக்கறேன் :))))

said...

jollu brother,
can I have suma anni's mail id/chatting id?I cannot tolerate this already!must complain to suma......

said...

ஹி... ஹி... ஹி... சிரிப்புத்தான்.

said...

// 2erga said...
jollu brother,
can I have suma anni's mail id/chatting id?I cannot tolerate this already!must complain to suma...... //

2rga இது டூமச் ! ஏற்கனவே brotherன்னு கூப்பிட்டு என்னை பழிவாங்கி விட்டீர்கள் அப்புறம் இன்னும் என்ன சுமாகிட்டே போய் சொல்றது? :(( ஒருத்தன் எத்தனை அடியத்தான் தாங்குவான் :((((((

said...

// சத்தியா said...
ஹி... ஹி... ஹி... சிரிப்புத்தான். //

வாங்க சத்தியா :)) ரொம்ப டேங்ஸுங்க பேட்டை பக்கம் ஒதுங்குனதுக்கு :))

said...

நல்லா சொன்னீங்க போங்க

இது மாரி விஷியத்தில ரொம்ப உஷாரா இருக்கணும். டொலெட் போர்டெல்லாம் கேட்கிற வேண்டுகிற ஆள் எல்லாம் பொண்ணுங்க பாப்பாங்களா என்ன?.....

காலத்தே காதல் செய்-யின்னு சும்மாவா சொன்னாங்க...

ஜொள்ளு.... கொஞ்சம் நாளைக்குதான் அப்புறம் பழகிடும். (அதுதான் சீச்சீ இந்த பழம் புளிக்கும் கத)

said...

idhu ennanga pudhu prachanaiya...kalangalama nadakara thali kazhati vaipu prachanai thane...alaipayudheyla namma shalini ponnu kannadila matitu pona apdiye kan kottama parkareega...idhuve sindhyava irundha avlo thana...

seri kannalam aana pommanatinga thali potukanumna adha kannalam kattikitta aambadayanunga ennatha podanum...

ladies thali kattina samama aanpillayum edhachum eduthu kalyana adayalamai katikanum...appo than nanga ready thaliya potukaradhuku...

surukku kayira thavira edhu venumnalum potukonga pandi...

said...

//எலிவால்ராஜா said...
நல்லா சொன்னீங்க போங்க

இது மாரி விஷியத்தில ரொம்ப உஷாரா இருக்கணும். டொலெட் போர்டெல்லாம் கேட்கிற வேண்டுகிற ஆள் எல்லாம் பொண்ணுங்க பாப்பாங்களா என்ன?.....//

வாங்க எலிவால்ராசா பேருலயே கலக்குறீயளே :))

//காலத்தே காதல் செய்-யின்னு சும்மாவா சொன்னாங்க...//

இதை நான் ஒத்துக்க மாட்டேன். காதலுக்கு காலமாவது வயசாவது ;))))

//ஜொள்ளு.... கொஞ்சம் நாளைக்குதான் அப்புறம் பழகிடும். (அதுதான் சீச்சீ இந்த பழம் புளிக்கும் கத) //

ஹிஹிஹிஹி :)))

said...

//one among u said...
idhu ennanga pudhu prachanaiya...kalangalama nadakara thali kazhati vaipu prachanai thane...alaipayudheyla namma shalini ponnu kannadila matitu pona apdiye kan kottama parkareega...idhuve sindhyava irundha avlo thana...//

வாங்க எங்கள்ல ஒருத்தரே :))
அது ஷாலினி இது சிந்தியா அவ்ளோதான் :)))

//seri kannalam aana pommanatinga thali potukanumna adha kannalam kattikitta aambadayanunga ennatha podanum...//

கல்யாணம் ஆனா பொண்ணுங்களுக்கு தாலி ஆம்பிளைகளுக்கு தாடி ;))))

//ladies thali kattina samama aanpillayum edhachum eduthu kalyana adayalamai katikanum...appo than nanga ready thaliya potukaradhuku...//

என்னங்க கல்யாணம் ஆன ஆம்பிளைகளை ஈசியா கண்டுபிடிக்கலாமே !! எதையோ பறி கொடுத்த மாதிரி நொந்து நூடுஸ் ஆனா மாதிரி இருப்பாங்களே ;))))

ரொம்ப தேங்ஸுங்கோ !!!

said...

நான் தார்பாய் வாங்கிடேனுங்கோ...

said...

//சுந்தர் said...
நான் தார்பாய் வாங்கிடேனுங்கோ... //

வாங்க சுந்தர் :))
தார்பாய் வாங்கீட்டீங்களா :)))) சரி சரி தார்பாய தூக்கரதுக்கு ஏதாச்சும் உதவி வேணுமா ?? ;))))