Saturday, October 14, 2006

ஜில்லுன்னு 5 doubts

ஜில்லுன்னு 5 doubtsஎனக்கு தினுசு தினுசா புதுப்புது சந்தேகம் தெனமும் கூரையப் பிச்சுகிட்டு கெளம்புதுங்க. என்னடா சந்தேகம் ஜாவா பீன்ஸா? இல்லை கேரட்டா? ன்லாம் அறிவுப்பூர்வமா எல்லாம் கெடையவே கெடையாதுங்கோ. வழக்கம் போல வாழ்க்கையின் சில ஏன்னு தெரியாத கேள்விகள் தாங்க. அதுலயும் பாருங்க நான் basic கா ஒரு நல்ல ரசிகன். ஆனா அழகு எங்க இருந்தாலும் ரசிக்கரது நம்ம வழக்கம். வழக்கம் போல எனக்கு பழக்கமான ஏரியாவில் அப்படித்தான் நடமாடும் பூச்செடிகளை ( எப்படி பூச்செடி நடமாடும்னு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு அப்பாவியா கேள்வி கேட்குற பால்புட்டி மன்னாருக எல்லாம் போயி ஜொள்ளுபேட்டை மெட்ரிக்குலேசன் ஸ்கூலிலே (கோ- எட் ) போய் LKG சேர்ந்துகுங்க கண்ணுங்களா ) பத்தி கொஞ்சமே கொஞ்சம் சந்தேகம் பக்கத்து வீட்டு ஆர்த்தி விட்ட ராக்கெட் மாதிரியே ‘ஜிவ்’ வுன்னு கெளம்பிடுச்சு. ஆராச்சும் பார்த்து பரிதபப்பட்டீகண்ணா பதில் தெரியாம அல்லாடிகிட்டு இருக்குற இந்த பரிதாப ஜொள்ளு பாண்டிக்கு கொறச்சு help செய்யண்டி !!!

நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமாருக்கும் நம்மள மாதிரியே சந்தேகம் வந்து வெட்கத்தை விட்டு கேட்டுபுட்டாரு, அப்புறம் நானும் ஏதோ என் ரேஞ்சுக்கு சந்தேகத்தை கொளுத்திப்போட்டா என்னான்னு தோணிச்சு. இதோ கொழுத்திட்டேன் !!

என் சந்தேகங்களை அப்படியே அள்ளித்தெளிக்கிறேன் முடிஞ்சா தீர்த்து வைங்க தீர்தயாத்திரை பெரியோர்களே தாலாட்டும் தாய்மார்களே ( மரியாதை மரியாதை ) !!

1) சேலை கட்டுனா இடுப்பு தெரியுது வயிரு தெரியுதுன்னு சுடிதாருக்கு மாறுனீங்களே கண்னுங்களா இப்போ அந்த சுடியிலேயும் Short சுடின்னு இடுப்புக்கு ஒரு ஜாண் மேல இருந்து கிழிச்சு விட்டுகிட்டு என்னைய மாதிரி அப்புறாணியோட கண்ணை கன்னா பின்னான்னு அலைபாய விடுறீயளே ஏங்க ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமிகளே இது நியாயமா ?


2) மொதோ வருசத்துல இருந்து பின்னாடியே நாயா சுத்திகிட்டு உங்களுக்காக வாலிப சந்தோசங்களான தம்மு தண்ணியெல்லாம் தியாகம் பண்ணிட்டு கலியுக முனிவர்களா சடாமுடியோட தெய்வீக காதலோட உங்களையே அம்பாளா நெனச்சு சுத்திகிட்டு இருக்கற அப்பாவி அய்யாசாமிகளை விட்டுட்டு பல்சரில் படம் போட்டுகிட்டு சாயங்காலம் ஆனா ‘கட்டிங்’ தெனம் அஞ்சு பாக்கெட் சிகரெட்டை அல்டாப்பா சாம்பலாக்குற அல்வா வாயன்களோட அலப்பறையா பில்லியனில் குந்திகினு போறீயளே இது ஞாயமா ? அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?


3) உங்களுக்கு வாங்கி குடுக்குற ஒரு ‘பட்டர் பாப்கார்ன்’ ரேட்டுக்கு மெஸ்ஸிலே ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ்சயே ரவுண்டு கட்டு அடிக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கெல்லாம் ராவா ‘கோக்’ கை முக்கி முக்கி குடிச்சாலும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல குடிக்க முடியலையே ?? அதிலே எப்பவாச்சும் ஒரு 60 மிலி கலந்தா வேணா ஒரு 10 நிமிஷத்துக்கு ஒப்பேத்தலாம் !! ஆனா ஒரு 300 மிலி கோக்கை வாங்கி வச்சுகிட்டு எப்படீங்க 3 மணி நேரத்துக்கு குடிச்சுகிட்டு இருக்கீங்க? சொட்டு நீர் பாசனம் போல ‘சொட்டுகோக்’ பாசனம்னு புதுசா ஏதாசும் கத்துகிட்டு வந்துருக்கீயளா?

4) எங்களூக்கெல்லாம் கொட்டாவி விடவே வாயை திறக்க முடியலே. ஆனா எப்பவும் ப்ரெஷ்ஷா FM ரேடியோ மாதிரி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா ? அடுத்தவன் பேசனும் நாம கேட்கணும்னு எப்போவாசும் நெனச்சு பார்த்து இருக்கீங்களா??


5) பொறக்கும்போதே கவச குண்டலடத்தோட பொறந்த மாதிரி எந்த நேரமும் செல்போனும் காதுமா கலக்குறீங்களே நெசமாலுமே பேசறீங்களா இல்லை பேசற மாதிரி படம் காட்டறீங்களா? அதெப்படீங்க கரெட்டா நாங்க pass பண்ரப்போ மட்டும் கஸ்மாலம் பேத்துருவேண்ணு பேத்தனமா செல்போன்ல திட்ட ஆரம்பிக்கிறீங்க ?


இப்போதைக்கு இவ்ளோ போதுங்க ! எல்லாமே என்னோட மற்றும் நம்ம பேட்டை குடிமகன்களோட ஞாயமான சந்தேகம் தானுங்க. படிச்சுபுட்டு அப்புறம் தாய் குலங்களெல்லாம் என் முதுகுலே தீபாவளி கொண்டாடிறாதீங்க . முடிஞ்சா பதில் சொல்லுங்க. இல்லாகாட்டி ஓரமா ஒக்காந்து உங்க சிந்தனைக் குதிரையோட வாலை திருகிவிட்டு பாருங்க. ஏதாச்சும் பதிலு கெடைக்காமலா போய்டும்?

47 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பாண்டி நீ என் இனமடா?

நம்மை போன்ற இளபிஞ்சு மனதில் அணுகுண்டை போல் வெடித்துக் கொண்டு இருந்த கேள்விகளை நம் கலாமை போல வெடிக்க வைத்து விட்டாய். இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம்ம பேட்டையில் பாண்டிக்கு அடுத்த இடத்தில் துண்டை போட்டு குந்திக்கிறேனுங்கோ....

said...

முட்டையில் இருந்து கோழி வந்ததா,
இல்ல
கோழியில் இருந்து முட்டை வந்ததா

போன்ற கேள்விக்கு கூட விடை கிடைக்கும், நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு 'வடை' கூட கிடைக்காது.

said...

பாண்டி அஞ்சு கேள்விகள் கேட்டாலும் சும்மா நச்சுனு ஐம்பெரும் காப்பியங்கள் லெவலுக்கு கேட்டுக் இருக்க. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எல்லாம் பாடப் புத்தகத்தில் போட்டு வருங்கால சங்கதி தெரியப்படுத்த வேண்டும்.

அதிலும் இந்த சொட்டுக் கோக் பாசனம் ரொம்பவே சூப்பர்.

said...

//அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?
//
சரியான கேள்வி...

said...

ஆறாவது கேள்வியை நான் கேக்குறேன்.

6. இப்படியெல்லாம் கேள்வி கேட்டா, வலைப்பூ அம்மனிகள் யாராவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

:)

said...

பாண்டி,நீ மறுபடியும் ஆரம்பிச்சுடியா?நானும் அமைதியாக இருக்கனும் என்று ஆசை.ஆனால் இருக்க விடமாட்டீங்க போல் இருக்குதே.இப்போதான் சவுண்ட் பார்ட்டி சந்தேகத்தைத் தீர்த்து வைத்து விட்டு வந்தேன்.ஏன் என்னைக் கொஞ்ச நேரம் ஒய்வு எடுக்க விடமாட்டேங்கிறீங்க.இன்னும் வேறு யாருக்கவது சந்தேகம் வந்தால் என்னை அணுகவும்.உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பது எனது பாக்கியம்.1) சேலை கட்டுனா இடுப்பு தெரியுது வயிரு தெரியுதுன்னு சுடிதாருக்கு மாறுனீங்களே கண்னுங்களா இப்போ அந்த சுடியிலேயும் Short சுடின்னு இடுப்புக்கு ஒரு ஜாண் மேல இருந்து கிழிச்சு விட்டுகிட்டு என்னைய மாதிரி அப்புறாணியோட கண்ணை கன்னா பின்னான்னு அலைபாய விடுறீயளே ஏங்க ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமிகளே இது நியாயமா ?ஏன் பாண்டி உங்க ஊரில் யாருமே உடம்பை மறைச்சுகிட்டு இல்லையா? எல்லா பொண்ணுங்களும் இப்படிதான் இருக்காங்களா? இல்லையே? சேலைக் கட்டினா இடுப்பு தெரியும் என்று நினைக்கும் பெண்கள் யாரும் இப்படி அலைய மாட்டங்க! அப்படி அலையும் பெண்கள் நீங்க பார்க்கனும் என்பதற்காகதான் இப்படி உடை உடுத்துறாங்க. அதைப் பார்தோமா வந்தோமான்னு இரு! நீ அப்புறாணியா? அடப்பாவி.உன்னோட அப்பாவிதனம் தான் ஜொள்ளுப்பேட்டையில் ஜொள்ளு கடலாய் வழியுதோ?நீ அப்புறாணி பொய் சொல்லதே!

2) மொதோ வருசத்துல இருந்து பின்னாடியே நாயா சுத்திகிட்டு உங்களுக்காக வாலிப சந்தோசங்களான தம்மு தண்ணியெல்லாம் தியாகம் பண்ணிட்டு கலியுக முனிவர்களா சடாமுடியோட தெய்வீக காதலோட உங்களையே அம்பாளா நெனச்சு சுத்திகிட்டு இருக்கற அப்பாவி அய்யாசாமிகளை விட்டுட்டு பல்சரில் படம் போட்டுகிட்டு சாயங்காலம் ஆனா ' கட்டிங்' தெனம் அஞ்சு பாக்கெட் சிகரெட்டை அல்டாப்பா சாம்பலாக்குற அல்வா வாயன்களோட அலப்பறையா பில்லியனில் குந்திகினு போறீயளே இது ஞாயமா ? அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ' தப்பான' ஆளை தேர்தெடுக்கறீங்க ?நீங்க மட்டும் தப்பமால் சரியான பொண்ணுங்களை தேர்ந்து எடுகின்றீர்களே?இந்த மாதிரி பொண்ணுங்களைதான் உயிரைக் கொடுத்து காதலிக்கிறீங்க.நல்ல பொண்ணுங்களுக்கு அல்லவா கொடுத்துட்டு escape ஆகிறீங்க! கலாச்சரத்தோடு இருக்கும் பெண்களை யாரும் நிமிர்ந்துக் கூட பார்பது இல்லை .அரையும் குறையுமாய் திரியும் இந்த மாதிரி பெண்களைதான் விழுந்து விழுந்து காதலிகின்றீர்கள்.ஒரு சிலர் இந்த மாதிரி பெண்கள் பின்னால் சுற்றி விட்டு,கல்யாணம் பண்ணும் போது மட்டும் மகாலட்சுமி போல் பெண் வேண்டும் என்று எதிர்பார்கின்றார்கள்.இது மட்டும் தகுமா என்ன?


3) உங்களுக்கு வாங்கி குடுக்குற ஒரு ' பட்டர் பாப்கார்ன்' ரேட்டுக்கு மெஸ்ஸிலே ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ்சயே ரவுண்டு கட்டு அடிக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கெல்லாம் ராவா ' கோக்' கை முக்கி முக்கி குடிச்சாலும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல குடிக்க முடியலையே ?? அதிலே எப்பவாச்சும் ஒரு 60 மிலி கலந்தா வேணா ஒரு 10 நிமிஷத்துக்கு ஒப்பேத்தலாம் !! ஆனா ஒரு 300 மிலி கோக்கை வாங்கி வச்சுகிட்டு எப்படீங்க 3 மணி நேரத்துக்கு குடிச்சுகிட்டு இருக்கீங்க? சொட்டு நீர் பாசனம் போல ' சொட்டுகோக்' பாசனம்னு புதுசா ஏதாசும் கத்துகிட்டு வந்துருக்கீயளா?


பாண்டி உனக்குச் செலவு செய்ய முடியவில்லையா,லவ் பண்ணமால் ஜொள்ளு மட்டும் விடு!ஏன் இந்த கஞ்சதனம்?ஒரு பார்ப்கான் வாங்க இப்படி எல்லாம் யோசித்துப் பார்க்கலமா?நாங்க மட்டும் உங்களுக்கு என்று எந்த செலவுமே செய்யவில்லையா என்ன?
பாண்டி நீங்க எல்லாம் பார்ரில் பீரை ஒரே முடக்கில் குடித்தினால் வந்த வினை இது,எதையும் ரசித்துக் குடித்து பார் பாண்டி.முடியவில்லையா இப்படி எல்லாம் லூசுதனமாக கேள்விகள் கேட்கமால் ஓடிப்போ!இப்படிதான் பாரில் அந்த கருமம் எல்லாம் பிடித்ததை ரசித்து குடிக்கின்றீர்களே?அதைவிட கோக் ரொம்ப தேவலம்.அதை கொஞ்சம் ரசித்துக் குடிக்க கூட விடமாட்டீங்க போல் இருக்கே!நாங்கள் எது செய்தலும் குறை சொல்லவே ஒரு கூட்டம் அலைந்து கிட்டு இருக்கின்றது என்று தெரியுது!


4) எங்களூக்கெல்லாம் கொட்டாவி விடவே வாயை திறக்க முடியலே. ஆனா எப்பவும் ப்ரெஷ்ஷா FM ரேடியோ மாதிரி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா ? அடுத்தவன் பேசனும் நாம கேட்கணும்னு எப்போவாசும் நெனச்சு பார்த்து இருக்கீங்களா??ஆமாம்.உங்களுக்கு எல்லாம் கல்யாணதிற்கு பிறகு பேசினால் fm ரேடியோ மாதிரிதான் இருக்கும்,காதலிக்கும் பொழுது மணிக்கணக்கில் பேசினாலும் இன்னும் கொஞ்சம் பேசு,உன் குரலை கேட்டுகிட்டு இருக்கனும் போல் இருக்குன்னு உருகுவீங்க.கல்யாணதிற்கு பின் ஒரு வார்த்தை பேசினாலும் உங்களுக்கு எல்லாம் எட்டிக்காய் போல் கசக்கும்!இதுதான் க.மு க.பி.புரியவில்லையா?கல்யாணதிற்கு முன் கல்யாணதிற்கு பின்!


5) பொறக்கும்போதே கவச குண்டலடத்தோட பொறந்த மாதிரி எந்த நேரமும் செல்போனும் காதுமா கலக்குறீங்களே நெசமாலுமே பேசறீங்களா இல்லை பேசற மாதிரி படம் காட்டறீங்களா? அதெப்படீங்க கரெட்டா நாங்க pass பண்ரப்போ மட்டும் கஸ்மாலம் பேத்துருவேண்ணு பேத்தனமா செல்போன்ல திட்ட ஆரம்பிக்கிறீங்க ?


excuse me!நீங்க மட்டும் கையில் புத்தகமும் கையுமாக அலையுறதா நினைப்போ?அங்க மட்டும் என்ன வாழுதாம்?!கையிலே செல் வாயிலே பல் என்று பேசுற மாதிரி நடித்து கொண்டு, நடந்து போகின்ற பெண்களை cycle gapலில் சைட் அடிக்கமாட்டீங்க நீங்க?

said...

hello
naan unga blog sameeba kalama padikaren
nalla iruku... englishla tamil ezhutharennu varutha padatheenga ... enaku tamila eppadi idula type pannanumnu theriyathu...
unga kelvigaluku bhatil
1) chumma ungaluku viruntha irukatumenu thaan appadi ellam dress panrom
2) naanga ennanga life partnerava select panrom.. Chumma sutarthuku thane
3)ennaga panrathu ration kadaila ninnu ninnu payakam.. adu than appadi sotu sota poguthu
4)engaluku thaan aduvanga solli kekara payakame kidayuthungale
5)ammanga nijamave pesarom..ungala mathiri nallavanga niraya per irukanga naatula .. naanga missed call kudutha avanga pannuvanga.. naanga pesuvom... naanga missed call kudutha vudane avanga ennamo avangala naanga route vidaramathiri konja neruthuku appuram vazhivanga.. adunala thaan neenga kete dialogue ellam

IVAI ANAITHUM ENNUDAYA SONTHA KARUTHUGAL.. YARAIYUM PUN PADUTHUM ENNAM ILLAI
dhanx

said...

சரி...என்னமோ இதை தெரிஞ்சுக்கிடு என்ன உபயோகமா செய்யப்பொரிங்கனு தெரியல... இருந்தாலும்.. எதாவது உங்க முலை'ல Reaction எர்ப்பட்டால் நல்லது'னு நம்பி..சொல்லுரென்... என் சகோதரிகள் நம்ம secret
a வெளீய விடுரென்னு தப்பா எண்ண வெண்டாம்...

1) short chudi is parambariyam mixed with western outlook..avlothaan.. naanga summa normal chudi potal..naanga "new generation"nu eavanukku theriya poguthu..time change aguramathiri..engal chuditharum change aguthu...
pavadai thavaniku pathil thaan lengha suits vanthiduche..athu theriyatha ungalukku?

2)ithum simple..film kaatikittu.. போலி சமியர்கலா தாடி வச்ச கேடிகள் அலையுதுக.
அதுகளையும் மதிச்சு,நம்பி லவ் பன்ன ஆரம்பிச்சா.. பல்சர் பொட்ட வெங்காயமா,மாரிடுதுக...இப்படி இருக்கிரதுக்கு..start'ல யெ... பல்சர் போட்டு Film காட்டுரது better'nu நம்புரொம்..:(

3)நிங்க குடிக்குர Quarter கருமத்த.. குடிப்பதுக்கு Coke எவ்லவொ Better..இல்ல? செரி.. அப்பொ quarter குடிக்குரது better'னா okay நாங்க ரெடி நெங்க ரெடியா?;)NEXT..

4)பொரப்பு'லையெ வந்தது.. என்னைக்கும் பொகாது.. yehahaha..:)

5)ithu SImplest question...
நிங்க தப்பா கெட்டிருப்பிங்க... அவங்க.. அது சொல்லிருக்கமாட்டாங்க... "டைய் கசுமாலம்.. அடுட்தவுங்க Cellphone'la பெசும்போது ஒட்டு கேட்க்குறது தப்பு'டா வென்று'னு சொல்லிருப்பாங்க..."

ஜொல்லு இது ரொம்ப சிம்புலு questions makkale.....

said...

Next time innum nalla yosichu questions kellunga..ithu 2cents kasukku urupudatha questions :P

said...

hai,
i am a recent visitor to your blog!!
enaku tamizhil eppadi type panrathunu theriala ada nala thaan tamizha englishla type panren
mannikavum.. solli kondungal appuram naanum tamila type pannuven....
ungal kelvikalukana bathilgal
ennudaiya suyama sinthani manikavum yaraium punpaduthum ennam ellam illa
1) ellam ungala mathiri nalla athmakal rasikatumenu thaan
2) ennaga panrathu naanga kalyanam panikara ideala avangala suthaliye
3) ellam ration queue la ninnu ration vangina anubavathala vanthuchu
4) aduthavana pesa vitta appuram naanga ninaikarthu eppadinga nadakum
5) ennanga panrathu naanga missed call eppada kudupom eppada kadala podalamnu ungala mathiri nalla pala atmakal kathukitu iruke

piragu santhipom…intha mathiri doubts iruntha ennanda kelu annachi… correeecta bathil solven
Munnadi eluthina comment varave illiye enna problem

said...

// நாகை சிவா said...

பாண்டி நீ என் இனமடா?
நம்மை போன்ற இளபிஞ்சு மனதில் அணுகுண்டை போல் வெடித்துக் கொண்டு இருந்த கேள்விகளை நம் கலாமை போல வெடிக்க வைத்து விட்டாய். //

வாங்க வாங்க சிவாதம்பி :))
என்னைய கலாம் ரேஞ்சுக்கு உயர்த்தி புல்லரிக்க வைச்சுட்டயேய்யா :)))

//இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம்ம பேட்டையில் பாண்டிக்கு அடுத்த இடத்தில் துண்டை போட்டு குந்திக்கிறேனுங்கோ.... //

வா சிவா வந்து குந்திக்கோ :)))

//பாண்டி அஞ்சு கேள்விகள் கேட்டாலும் சும்மா நச்சுனு ஐம்பெரும் காப்பியங்கள் லெவலுக்கு கேட்டுக் இருக்க. //

ஐம்பெருங்காப்பியமா ??? அய்யா சிவா நாக்கு தழுதழுக்கிறதே :))))

//இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எல்லாம் பாடப் புத்தகத்தில் போட்டு வருங்கால சங்கதி தெரியப்படுத்த வேண்டும்.//

ஆமா ஆமா நிச்சயமா செய்யலாம் யாரங்கே அந்த க்ரானைட் கல்லை எடுத்துடு வாய்யா கல்வெட்டுல பொரிக்கலாம் ;)))

//அதிலும் இந்த சொட்டுக் கோக் பாசனம் ரொம்பவே சூப்பர். //

:))))

said...

//வெங்கட்ராமன் said...
முட்டையில் இருந்து கோழி வந்ததா,
இல்ல
கோழியில் இருந்து முட்டை வந்ததா
போன்ற கேள்விக்கு கூட விடை கிடைக்கும், நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு 'வடை' கூட கிடைக்காது. //

வாங்க வெங்கட்ராமன் வாங்க :)) பாட்டி சுட்ட வடை கூடவா ? :))) பேடை பக்கம் ஒதுங்குனதுக்கு ரொம்ப தேங்கஸுங்க:)))

said...

// வெட்டிப்பயல் said...
//அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?
//
சரியான கேள்வி... //

வாங்க வெட்டிபயல் :))) கொஞ்சம் கசப்பான அனுபவம் ஏதும் ஏற்பட்டதுங்களாண்ணா ?? ;))))

said...

//வாங்க வெட்டிபயல் :))) கொஞ்சம் கசப்பான அனுபவம் ஏதும் ஏற்பட்டதுங்களாண்ணா ?? ;)))) //
கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு... இதுல எதுவும் ஏற்படல.
சும்மா... கூட இருக்குற பசங்களுக்கு ஏற்பட்டத பாத்த எஃபக்ட் ;)

said...

ஜொள்ஸ்,
இரண்டாவது கேள்விக்கு மட்டும் அனுபவ ரீதியான பதில் தெரியும் எனக்கு. 7த் லேர்ந்து சொந்தமா பல லவ் பண்ணி கண்டுபிடிச்சதுங்க...

நாம லவ் பண்ற பொண்ணுங்களை வச்சி யோசிக்கும்போது, நம்மைத்தவிர மத்த எல்லா பசங்களுமே நமக்கு தப்பாத்தான் தெரியறாங்க! நம்ம லவ் ஃபெயிலாகி, வேற ஒருத்தர் கூட அவங்க நல்லா செட்டில் ஆகறப்போதான் இந்த உண்மை புரியுது! ஆனா அடுத்த ரூட் ஆரம்பிச்சதும் இது மறந்துபோயி, பழைய படியே மத்தவனெல்லாம் தப்பான ஆளாயிடறாங்க!!

மத்த கேள்விக்கெல்லாம் பொண்ணுங்களுக்கே பதில் தெரியுமா தெரியல. அதனால வழக்கம்போல ச்சாய்ஸ்ல விட்டுடலாம் :)

said...

// லொடுக்கு said...
ஆறாவது கேள்வியை நான் கேக்குறேன்.

6. இப்படியெல்லாம் கேள்வி கேட்டா, வலைப்பூ அம்மனிகள் யாராவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?//

வாங்கண்ணா லொடுக்குபாண்டி :))) என்ன இப்படி கேட்டுபுட்டீக ?? அம்மணிக பதில் சொல்லி இருக்காக படிச்சு பாருங்கப்பூ ;)))

said...

//ஜொள்ளு பேச்சி said...
பாண்டி,நீ மறுபடியும் ஆரம்பிச்சுடியா?.இன்னும் வேறு யாருக்கவது சந்தேகம் வந்தால் என்னை அணுகவும்.உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பது எனது பாக்கியம்.//

வாங்கம்மா ஜொள்ளுபேச்சி யாரும்மா நீ? ஏன் எனைய போட்டு இப்படி பின்னிப்பெடல் எடுக்குறே ?? :))

//அதைப் பார்தோமா வந்தோமான்னு இரு! நீ அப்புறாணியா? அடப்பாவி.உன்னோட அப்பாவிதனம் தான் ஜொள்ளுப்பேட்டையில் ஜொள்ளு கடலாய் வழியுதோ?//

அட எனா பேசி நான் அப்புறாணிதேன். ஜொள்ளுகடலா ஹிஹிஹி
//நல்ல பொண்ணுங்களுக்கு அல்லவா கொடுத்துட்டு escape ஆகிறீங்க! //

யாரங்கே இனிமே அல்வா கொடுகாதீகப்பூ !! வேறா ஏதாச்சில் பிஸா பர்கர்ன்னு ... :)))

//கலாச்சரத்தோடு இருக்கும் பெண்களை யாரும் நிமிர்ந்துக் கூட பார்பது இல்லை .அரையும் குறையுமாய் திரியும் இந்த மாதிரி பெண்களைதான் விழுந்து விழுந்து காதலிகின்றீர்கள்.//

ஐயகோ இதென்ன அபாண்ட குற்றச்சாட்டு!!! கலாச்சாரத்தோடு இருக்கிறார்களா எனப்பார்த்துதான் நான் இப்படி ஆய்ட்டேன் :((


//நாங்க மட்டும் உங்களுக்கு என்று எந்த செலவுமே செய்யவில்லையா என்ன?
எதையும் ரசித்துக் குடித்து பார் பாண்டி.முடியவில்லையா இப்படி எல்லாம் லூசுதனமாக கேள்விகள் கேட்கமால் ஓடிப்போ!//

அட என்னாபேச்சி ஓடிப்போக சொல்றே :))

//ஆமாம்.உங்களுக்கு எல்லாம் கல்யாணதிற்கு பிறகு பேசினால் fm ரேடியோ மாதிரிதான் இருக்கும்,காதலிக்கும் பொழுது மணிக்கணக்கில் பேசினாலும் இன்னும் கொஞ்சம் பேசு,உன் குரலை கேட்டுகிட்டு இருக்கனும் போல் இருக்குன்னு உருகுவீங்க.//

அப்படியா ?? ஆராச்சும் கல்யாணமான பேட்டை மகாஸ் பதில் சொல்லுங்கப்பூ !!! ஏன்னா எனக்கு ஒருதடவை கூட கல்யாணம் ஆகலையே :)))))

//கையிலே செல் வாயிலே பல் என்று பேசுற மாதிரி நடித்து கொண்டு, நடந்து போகின்ற பெண்களை cycle gapலில் சைட் அடிக்கமாட்டீங்க நீங்க? //

அட இதுகூட நல ஐடியாவா இருக்கே ரொம்ப தேங்கஸ் பேச்சி !!!:)))

said...

//Sudha Prasanna said...
naan unga blog sameeba kalama padikaren
nalla iruku... //

வாங்க சுதா பேட்டைகுள்ள புதுசா வந்து இருக்கீங்க ரொம்ப டேங்ஸ் !

//1) chumma ungaluku viruntha irukatumenu thaan appadi ellam dress panrom//

அப்பாடி இப்போவாசும் ஒதுகிட்டீங்களே:)))

//2) naanga ennanga life partnerava select panrom.. Chumma sutarthuku thane//

அஹா மக்களே பார்துகிடுங்க பிக்கப்பு எஸ்கேப்பு ரெண்டு பக்கமும் தானா ??

//3)ennaga panrathu ration kadaila ninnu ninnu payakam.. adu than appadi sotu sota poguthu//

ரேசன் dress லதானே இருக்குங்க சுதா நான் என்ன பண்ணுவேன் :)))

//4)engaluku thaan aduvanga solli kekara payakame kidayuthungale//

ஆமா ஆமா ரொம்ப கஷ்டம்தாங்கோ !!

//5)ammanga nijamave pesarom..ungala mathiri nallavanga niraya per irukanga naatula .. naanga missed call kudutha avanga pannuvanga.. naanga pesuvom...//

ஆஹா என்னைய மாதிரி நல்லவங்களாஆஆஆ :))) இப்படியெல்லாம் சொல்லி புல்லரிக்க வைக்கிறீங்களே . அதுதான் செல்போன் பில்லு எகிறுதா ம்ம்ம்ம் :)))))

said...

//சுகன்யா ஷ்ரி said...

வாங்க சுகன்யா ஷ்ரீ :))))

பரவாயில்லையே என்னைய திட்டிகிட்டே பதிலையும் சொல்லிட்டு போறீங்க வாழ்க !!:))

1) short chudi is parambariyam mixed with western outlook..avlothaan..//

அதென்னாங்க பாரம்பரிய லுக் ?? ;))

//ithum simple..film kaatikittu.. போலி சமியர்கலா தாடி வச்ச கேடிகள் அலையுதுக.//

அட தாடி வச்சவங்கெல்லாம் கேடிங்க இல்ல அம்மணி !!

//3)நிங்க குடிக்குர Quarter கருமத்த.. குடிப்பதுக்கு Coke எவ்லவொ Better..இல்ல? //

குவாட்டரை கருமம் எனக்கூறியதற்கு என் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதெல்லாம் தீர்த்தம் மாதிரிங்க தப்பு சொல்லாதெங்க ;)))))

// அடுட்தவுங்க Cellphone'la பெசும்போது ஒட்டு கேட்க்குறது தப்பு'டா வென்று'னு சொல்லிருப்பாங்க..."//

எப்படீங்க ஒட்டு கேட்க முடியும் அவங்க ப்பெசுறது அவங்களுக்கே கேட்குமான்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் :))))

//ஜொல்லு இது ரொம்ப சிம்புலு questions makkale.....

Next time innum nalla yosichu questions kellunga..ithu 2cents kasukku urupudatha questions :P //

முயற்சி பண்ணி பாக்குறேங்க அம்மணி. இன்னமும் உங்களுக்கு நெசமாவே தமிழ் டீச்சர் வேணாமா ???

said...

// அருள் குமார் said...
ஜொள்ஸ்,
இரண்டாவது கேள்விக்கு மட்டும் அனுபவ ரீதியான பதில் தெரியும் எனக்கு. 7த் லேர்ந்து சொந்தமா பல லவ் பண்ணி கண்டுபிடிச்சதுங்க...//

ஆஹா வாங்க அருள் வாங்க !! அல்லாரும் வெலகி ஒக்காருங்க. :)))

// லவ் பண்ற பொண்ணுங்களை வச்சி யோசிக்கும்போது, நம்மைத்தவிர மத்த எல்லா பசங்களுமே நமக்கு தப்பாத்தான் தெரியறாங்க! நம்ம லவ் ஃபெயிலாகி, வேற ஒருத்தர் கூட அவங்க நல்லா செட்டில் ஆகறப்போதான் இந்த உண்மை புரியுது! ஆனா அடுத்த ரூட் ஆரம்பிச்சதும் இது மறந்துபோயி, பழைய படியே மத்தவனெல்லாம் தப்பான ஆளாயிடறாங்க!!//

ஹிஹிஹி பஸ் ரூட் அளவுக்கு சொல்லிட்டீங்களே அருள். என்னா விளக்கம் என்னா விளக்கம் !!! ஆமாண்ணே அனுபவஸ்தர் சொல்லுறீங்க மறுபேச்சு பேசமுடியுமா ??
வந்து விளங்கம் கொடுத்ததுக்கு ரொம்ம ரொம்ம தேங்ஸுங்கண்ணா :)))

said...

பாண்டி எனக்கு ஒரு சந்தேகம்...இந்த மாதிரி கொஸ்டின் கேட்டா மட்டும் கரெக்டா பதில் குடுத்து கிளி கிளினு கிளிச்சுடுராங்க...ஆனாலும் பசங்க மனச புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்ளே...தாய்மார்களே நான் சும்ம ஒரு டவுட்டு கேட்டேன்...என்னையும் ஏறி மிதிச்சுட்டு போய்டாதீங்க... :-)

பங்காளி எதுக்கும் உன் பக்கத்துல உக்காந்துகறேன்...அடி விழுந்தாலும் ஆளுக்கு பாதியா விழட்டும் :-)

said...

//இப்படிதான் பாரில் அந்த கருமம் எல்லாம் பிடித்ததை ரசித்து குடிக்கின்றீர்களே//

ஜொள்ளுபேச்சி, ரசித்து குடிக்கிறோம்னு யாரு சொன்னா...அது கடமை அதுனால புடிக்குதோ புடிக்கலியோ கஷ்டபட்டு குடிக்கறோம்...சந்தேகம் இருந்தா நீங்களும் குடிச்சு பாருங்க..எங்க கஷ்டம் தெரியும் :-)

said...

I like Jolly Pondy's Question, also cracking from Jollu Pechi's. பாண்டி அசத்தல்ன, பேச்சி அமர்களம், ஸ்டார்ட் மீசிக். டண்டக்கட, டக்கட, டண்டக்கட, டக்கட...

said...

jollu pandeeeeeee
Dhanx for the bathil!!!
enna panrathu enaku velai seiyara iduthula poyuthu pogama ungaloda blog ellam padika thaan vendi iruku... sila vishayangal kovam thanga varuthu .. seri serinu naanga vilayata eduthukarom...
enaku kooda thaanga konjam santhegam iruku ungala ellam pathi... kekatungala neenga ellarum sernthu theerthu vaipeengala
1) neenga kadal tholvi adanja dhadi vachikeenu thiriyareengale eduku?? enagaluku kadal tholvi erpatta naanga mounama kaneer vidarthoda seri!!!
2) ungaluku velai balu jasthi ayiduchuna dum illena drinks adikareengala enna matter athu..
unga comments /ஜொள்ளுபேச்சி, ரசித்து குடிக்கிறோம்னு யாரு சொன்னா...அது கடமை அதுனால புடிக்குதோ புடிக்கலியோ கஷ்டபட்டு குடிக்கறோம்...சந்தேகம் இருந்தா நீங்களும் குடிச்சு பாருங்க..எங்க கஷ்டம் தெரியும்/ ippadinu vera syam annachi sollikinaru.. ungaluku ennaga kastam.. sollunga mudinja adayum theerthu vaikarom...
Konjam ennoda santhegathayum theerthu vai thala!!

said...

//Syam said...
பாண்டி எனக்கு ஒரு சந்தேகம்...இந்த மாதிரி கொஸ்டின் கேட்டா மட்டும் கரெக்டா பதில் குடுத்து கிளி கிளினு கிளிச்சுடுராங்க...//

வாங்க ஷ்யாம் :)) கிளிங்க கிழிக்கத்தானே செய்யும். அது நம்ம் மனசுன்னு தெரியல போல ஏதோ சாப்பிடர வஸ்துன்னு நெனச்சுக்கிறாங்களோ என்னமோ :)))

//பங்காளி எதுக்கும் உன் பக்கத்துல உக்காந்துகறேன்...அடி விழுந்தாலும் ஆளுக்கு பாதியா விழட்டும் :-) //

அட பயப்படாம உக்காருங்க. அப்படியே அடி விழுந்தாலும் சடார்ன்னு எழுந்து கால்ல விழ தெரியாதா என்ன??? :))))
//
//இப்படிதான் பாரில் அந்த கருமம் எல்லாம் பிடித்ததை ரசித்து குடிக்கின்றீர்களே//

ஜொள்ளுபேச்சி, ரசித்து குடிக்கிறோம்னு யாரு சொன்னா...அது கடமை அதுனால புடிக்குதோ புடிக்கலியோ கஷ்டபட்டு குடிக்கறோம்...சந்தேகம் இருந்தா நீங்களும் குடிச்சு பாருங்க..எங்க கஷ்டம் தெரியும் :-) //

பாருங்க ஜொள்ளுபேச்சி அண்ணன் ஸ்யாம் எவ்ளோ வேதனையோட இந்த பதிலை சொல்லி இருக்கார்ங்கரதை புரிஞ்சுகிட்டு செயல்படுங்க என்னா??

said...

//ILA(a)இளா said...
I like Jolly Pondy's Question, also cracking from Jollu Pechi's. பாண்டி அசத்தல்ன, பேச்சி அமர்களம், ஸ்டார்ட் மீசிக். டண்டக்கட, டக்கட, டண்டக்கட, டக்கட... //

வாங்க இளா !!! :))

என்னாங்க ஸ்டாட் மீஸிக்கு?? எனாங்கறேன்? எங்க எப்போ என்ன நடக்குமோன்னு ஒரு மாதிரி சமாளிச்சு பட்ஜ்ஹிலை சொல்லி வச்சிருக்கேன். நீங்க ஜொல்ளுபேச்சிய வேற தூண்டிவிட்டு நம்ம மேல ஏவ பாக்குறீயளே ?? ஞாயமா ???

said...

//Sudha Prasanna said...
jollu pandeeeeeee
Dhanx for the bathil!!!
//sila vishayangal kovam thanga varuthu .. seri serinu naanga vilayata eduthukarom...//

வாங்க சுதா :)) என்னாங்க கோவம் சொல்லுங்க சொன்னாதானே தெரியும் ?? கோவமா இருக்கேன்னு சிரிச்சுகிட்டே நின்னா என்ன அர்த்தம்ங்கறேன் ?? :)))

//1) neenga kadal tholvi adanja dhadi vachikeenu thiriyareengale eduku?? enagaluku kadal tholvi erpatta naanga mounama kaneer vidarthoda seri!!!//

என்ன இப்படி கேடுபுட்டீங்க. அப்புறம் நம்ம் தமிழ் ப்ளாக் காதல் கவிகள் எல்லாம் ஊடுகட்டி கவிதை எழுதீருவாங்க ஜாக்கிரதை அம்மணி ;)))

சரி விசயதுக்கு வருவோம் கண்ணீர் விட்டா கர்சீப்புல தொடச்சா போய்டும் ஆனா தாடி விட்டா கர்சீப்புல தொடச்சாலும் போகாதே ??? ப்ளேடுல தொடச்சாதான் போகும். இதுலயே தெரியுதே யாரோட feelings சு ஸ்ராங்குன்னு ;)))))

// ungaluku velai balu jasthi ayiduchuna dum illena drinks adikareengala enna matter athu..
unga comments /ஜொள்ளுபேச்சி, ரசித்து குடிக்கிறோம்னு யாரு சொன்னா...அது கடமை அதுனால புடிக்குதோ புடிக்கலியோ கஷ்டபட்டு குடிக்கறோம்...சந்தேகம் இருந்தா நீங்களும் குடிச்சு பாருங்க..எங்க கஷ்டம் தெரியும்/ ippadinu vera syam annachi sollikinaru.. ungaluku ennaga kastam.. sollunga mudinja adayum theerthu vaikarom...
Konjam ennoda santhegathayum theerthu vai thala!! //

சுதாக்கா நான் தலை இல்லீங்கோ வெறும் வாலுதாங்கோ !!!;)))

ஆமாங்க குடிச்சுபுட்டு மட்டையாக இருக்கனும் அப்படியே மட்டையாக தப்பிச்சா போலீஸ்கிட்டே மாட்டாம வீடு போய் சேரோனும் அப்படியே வீடு போஇ சேர்ந்தாலும் கல்யாணம் கில்யாணம் ஆகி இருந்தா வூட்டுக்காரம்மாகிட்டே மாட்டாம இருக்கோனும் அப்படியே மாட்டிகிட்டாலும் பொருத்தமா பொய் சொல்லி கரெட் பண்ணோனும் அப்படியே பொய்ய அவங்க நம்பாட்டி அட்லீஸ்ட் மப்பிலே விழுகற மாதிரி கால்ல எல்லாம் விழுகோணும்... ம்ம்ம் அப்பா சொன்னதுக்கே மூச்சு முட்டுதே... அம்மணி இருக்கீங்களா ?? தீர்ந்துடுச்சா சந்தேகம் ??? ;))))

said...

அண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே!!!!!

நம்மளை மாதிரி இருக்கிற அப்பாவி ஆண்குலத்துக்கு நீங்க ஒரு விடிவெள்ளி, குலவிளக்கு,அணையா தீபம், அப்புறம் என்னான்வோ வருது... பேச்சி நம்மளை மொறைக்கிற மாதிரி இருக்கு. நா பெறகு வாறேன்... :-)))

said...

// ராம் said...
அண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே!!!!! //

வாங்க ராம் வாங்க :)))

//நம்மளை மாதிரி இருக்கிற அப்பாவி ஆண்குலத்துக்கு நீங்க ஒரு விடிவெள்ளி, குலவிளக்கு,அணையா தீபம், அப்புறம் என்னான்வோ வருது... //

இப்படியெல்லாம் சொல்லி புல்லரிக்க வைக்கிறீயளே !!! :))
பதிலுக்கு நாம் என்னா சொல்றது ?? போதுங்க எனக்கு வெட்கமா இருக்கு !!! ;))))

said...

பாண்டி,

நான் யோசிச்சு, கேட்டா பதில் வராதுன்னு தெரிஞ்சு கேட்காம விட்டுட்ட கேள்விங்களை நீயும் இன்னொரு சவுண்டான பார்ட்டியும் ஸ்பீக்கர் போட்டு கேட்டது சந்தோஷம்.

வர்ற அரை/ஒண்ணு பதிலும் சந்தேகம் முழுக்க தீர்க்காம அவுட் ஆஃப் சிலபஸா இருக்குது.

ஜொள்ளுமட்டும் விட்டு சந்தோஷமா இரு. கால்கட்டைப் போட்ட மறுகணமே இந்தப் பூச்செடிகள் பூச்சட்டியை மேலெறிந்து கைக்கட்டை புத்தூரிலோ லோக்கலாகவோ போடுவதில் வல்லவர்கள்.

அழகிய பூச்செடிக்குள்ளிருக்கும் "சொர்ணாக்கா" பற்றி ஜொள்ளும்போது தெரிவதில்லை!

புத்தூர் மாவுக்கட்டுத் தொழிலில் இருப்பவர்கள் இந்தப்பூச்செடிகளின் சொந்தபந்தங்களே... இங்கு உன்மாதிரி கால்கட்டுப்போடாதவனும் என்மாதிரி கால்கட்டில் சிக்கியவனும் கைக்கட்டுக்காக வந்து புத்தூர் பிஸினஸை சிறப்பாக்குகிறோம்!

said...

பாண்டி,உன்னை துவைத்து எடுப்பதுதான் என்னுடைய வேலை.ஜொள்ளு எல்லாம் தப்பாக விட்டு,பாவம் இந்த ஆண்களுக்குத் தப்பு தப்பாக ஜொள்ளு விட கற்று கொடுத்துக் கிட்டு இருக்கின்றாய்,இவங்களை எல்லாம் உன்னிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

//அட எனா பேசி நான் அப்புறாணிதேன். ஜொள்ளுகடலா ஹிஹிஹி//

பாண்டி நீ பண்ணின சேட்டைகள் எல்லாம் இப்படி பேட்டையில் அரங்கேற்றம் பண்ணிவிட்டு நீ அப்புறாணி என்றால் அதை நம்பி மோசம் போக நான் ஒன்னும் முட்டாள் இல்லை.ஜொள்ளு பேச்சியாக்கும்!

//யாரங்கே இனிமே அல்வா கொடுகாதீகப்பூ !! வேறா ஏதாச்சில் பிஸா பர்கர்ன்னு ... :)))//

என்ன?ரொம்ப வாய் கொழுப்பு ஜஸ்தி ஆச்சு உனக்கு.இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க.பார்த்துப் பா!உடம்பு வீங்க போகுது!

//ஐயகோ இதென்ன அபாண்ட குற்றச்சாட்டு!!! கலாச்சாரத்தோடு இருக்கிறார்களா எனப்பார்த்துதான் நான் இப்படி ஆய்ட்டேன் :((
//

என்ன பாண்டி?எங்க வீட்டில் எனக்குக் காது குத்தி பல வருடம் ஆகிவிட்டது.நீ மறுபடியும் குத்த வேண்டாம்!உனக்கு ஏன் மார்டன் அம்மணிகள் மட்டும் கண்ணில் பளிச்சென்று தெரிகின்றார்கள்?இதில் இருந்தே தெரியவில்லையா இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கும் பெண்களின் நிலமை?

//அப்படியா ?? ஆராச்சும் கல்யாணமான பேட்டை மகாஸ் பதில் சொல்லுங்கப்பூ !!! ஏன்னா எனக்கு ஒருதடவை கூட கல்யாணம் ஆகலையே :)))))//

பாண்டி நீ கல்யாணம் ஆன விரக்தியில்தான் இந்த ஜொள்ளுப் பேட்டையை ஆரம்பித்தாய் என்று கேள்விப் பட்டேன்!இங்கே வரும் பெண்களே சற்று ஜாக்கிரதை.இந்த ஆளு கல்யாணம் ஆகி ஜொள்ளு விட்டு கிட்டு இருக்கலாம்.எதற்கும் கொஞ்சம் distance maintain பண்ணுங்க!

//அட இதுகூட நல ஐடியாவா இருக்கே ரொம்ப தேங்கஸ் பேச்சி !!!:)))//

இது உன்னைப் பார்த்துதான் சொன்னேன் பாண்டி.நீ இப்படிதான் அலைந்துகிட்டு இருக்கின்றாய் என்று கேள்விப் பட்டேன்!

Syam அண்ணாச்சி பொண்ணுங்களுக்கு x ray கண் என்று ஆண்டவன் இன்னும் படைக்கவில்லை,உங்க மனதை நீங்கள் திறந்துக் காட்டவில்லை என்றால் எங்களுக்கு எப்படி ஐயா புரியும்?ஆமா தண்ணி அடிப்பதில் என்ன சார் கடமை?இதுக்கு மட்டும் கணக்குப் பார்க்காத நீங்கள்,ஒரு butter popcorn க்கு கணக்குப் பார்ப்பது சரியா?குடிக்கமாலா அதை கருமம் என்று சொன்னேன்?!ஹி ஹி ஹி.

இளா தாங்ஸ்!ஆமா இது என்ன இசை?எனக்கு ஜொள்ளுப் பாண்டிக்கு சங்கு ஊதுவது போல் இருந்தது!

ராம் நீங்க பயங்கரமான ஆசாமி!அதிகமாக புகழ்கின்ற ஆள்களை நம்பக்கூடாது என்று அனுபவ பாடம் சொல்கின்றது.பாண்டி இவர் உன்னைத் தூண்டி விட்டு பொண்ணுங்க கையில் அடி வாங்க வைக்கப் பார்கின்றார்.நீ என்னோட போட்டியாக இருந்தாலும்,உன்னை மேல் உள்ள அக்கறையில் சொல்லுறேன்.இவரை மட்டும் நம்பாதே!அடி விழுந்தால் நீ மட்டும் மாட்டிக்கொள்வாய்.நம்ம ராம் அண்ணாச்சி உன்னை மாட்டிவிட்டு escape ஆகப் போறார்.பார்த்து பாண்டி!

//ஆமாங்க குடிச்சுபுட்டு மட்டையாக இருக்கனும் அப்படியே மட்டையாக தப்பிச்சா போலீஸ்கிட்டே மாட்டாம வீடு போய் சேரோனும் அப்படியே வீடு போஇ சேர்ந்தாலும் கல்யாணம் கில்யாணம் ஆகி இருந்தா வூட்டுக்காரம்மாகிட்டே மாட்டாம இருக்கோனும் அப்படியே மாட்டிகிட்டாலும் பொருத்தமா பொய் சொல்லி கரெட் பண்ணோனும் அப்படியே பொய்ய அவங்க நம்பாட்டி அட்லீஸ்ட் மப்பிலே விழுகற மாதிரி கால்ல எல்லாம் விழுகோணும்... ம்ம்ம் அப்பா சொன்னதுக்கே மூச்சு முட்டுதே... அம்மணி இருக்கீங்களா ?? தீர்ந்துடுச்சா சந்தேகம் ??? ;)))) //

இவ்வளவு கோவலப்பட்டு அந்த கருமத்தைக் குடிக்கனுமா?இதில் நாங்க குடிக்கின்ற coke பற்றி இவ்வளவு அலப்பறை வேற.

said...

//ippadinu vera syam annachi sollikinaru.. ungaluku ennaga kastam.. sollunga mudinja adayum theerthu vaikarom...
Konjam ennoda santhegathayum theerthu vai thala!! //

ஆமாங்க குடிச்சுபுட்டு மட்டையாக இருக்கனும் அப்படியே மட்டையாக தப்பிச்சா போலீஸ்கிட்டே மாட்டாம வீடு போய் சேரோனும் அப்படியே வீடு போஇ சேர்ந்தாலும் கல்யாணம் கில்யாணம் ஆகி இருந்தா வூட்டுக்காரம்மாகிட்டே மாட்டாம இருக்கோனும் அப்படியே மாட்டிகிட்டாலும் பொருத்தமா பொய் சொல்லி கரெட் பண்ணோனும் அப்படியே பொய்ய அவங்க நம்பாட்டி அட்லீஸ்ட் மப்பிலே விழுகற மாதிரி கால்ல எல்லாம் விழுகோணும்... ம்ம்ம் அப்பா சொன்னதுக்கே மூச்சு முட்டுதே... அம்மணி இருக்கீங்களா ?? தீர்ந்துடுச்சா சந்தேகம் //

சரியா சொன்னீங்க பாண்டி....
இவ்வளவு கஷ்டமும் எப்பவாவது வந்தா சரி தினமும் இந்த கஷ்டத்த அனுபவிக்கிறமே...சுதாக்கா எங்கள போயி அதுவும் எங்கள போயி :-)

said...

ராம்... பொய் சொல்லாதிங்க.... உங்களுக்கு வாந்தி தான் வருது'னு எங்களுக்கு தெரியும்கோ!! :P ...


ஜொல்லு..என்னால சொல்லாமல் இருக்க முடியல..ஆனால் நீங்க ஒரு வெங்காயம்'னு ப்ரூவ் பன்னுரிங்க.. :P எல்லா விஷயமும் ரொம்ப லேட்'ஆவெ உங்களுக்கு புரியும் பொல.... நா உங்கள திட்டிக்கிட்டெ பதில் சொல்லு'ரெனு..

நான், தம்ழ்'ல கொஞ்சம் சொதப்பல் 'தான்...ஆனா, முட்டால் இல்ல..:P நிங்க சொல்லிகோடுத்தால்..தமிழ் , தாமில்'ஆக மாறிடும்...:D

said...

நீங்க அப்புறாணியா? ;)

said...

//ஜொல்லு..என்னால சொல்லாமல் இருக்க முடியல..ஆனால் நீங்க ஒரு வெங்காயம்'னு ப்ரூவ் பன்னுரிங்க.. :P எல்லா விஷயமும் ரொம்ப லேட்'ஆவெ உங்களுக்கு புரியும் பொல.... நா உங்கள திட்டிக்கிட்டெ பதில் சொல்லு'ரெனு..

நான், தம்ழ்'ல கொஞ்சம் சொதப்பல் 'தான்...ஆனா, முட்டால் இல்ல..:P நிங்க சொல்லிகோடுத்தால்..தமிழ் , தாமில்'ஆக மாறிடும்...:D //

அடப்பாவி பாண்டி!நம்ம சுகன்யா ஒரு பெண்ணு என்பதால் எப்படி எல்லாம் உருகி தமிழ் சொல்லித்தர ஓடுகின்றாய்.இதுவே ஒரு ஆண் வந்தால் இப்படி எல்லாம் உதவிச் செய்ய முன் வருவாயா?நீ ஒரு வெங்காயம் என்று எங்களுக்கு தெரிவித்த சுகன்யாவிற்கு எனது பாரட்டுக்கள்!

//தூயா said...
நீங்க அப்புறாணியா? ;) //

தூயா உண்மைத் தெரிந்தும் இப்படி எல்லாம் கேட்கலாமா?இந்த ஆள் அப்புறாணியா இல்லையா என்று ஜொள்ளுப் பேட்டையைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்!

said...

//Hariharan # 26491540 said...
பாண்டி,

நான் யோசிச்சு, கேட்டா பதில் வராதுன்னு தெரிஞ்சு கேட்காம விட்டுட்ட கேள்விங்களை நீயும் இன்னொரு சவுண்டான பார்ட்டியும் ஸ்பீக்கர் போட்டு கேட்டது சந்தோஷம்.//

வாங்க ஹரிஹரன் :))
உங்களுக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சா. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குங்கண்ணா !!!

//ஜொள்ளுமட்டும் விட்டு சந்தோஷமா இரு. கால்கட்டைப் போட்ட மறுகணமே இந்தப் பூச்செடிகள் பூச்சட்டியை மேலெறிந்து கைக்கட்டை புத்தூரிலோ லோக்கலாகவோ போடுவதில் வல்லவர்கள்.//

ஆஹா அனுபவஸ்தர் சொல்றீங்க கேட்டுக்கறேன் ! ;))))

//அழகிய பூச்செடிக்குள்ளிருக்கும் "சொர்ணாக்கா" பற்றி ஜொள்ளும்போது தெரிவதில்லை!
புத்தூர் மாவுக்கட்டுத் தொழிலில் இருப்பவர்கள் இந்தப்பூச்செடிகளின் சொந்தபந்தங்களே... //

வாவ் கலக்குறீங்களே ஹரி !! :)) செர்ணாக்காக்களைப்பற்றி ஒரு பீதி எப்பவுமே எனக்கு உண்டுங்க ;)))

//இங்கு உன்மாதிரி கால்கட்டுப்போடாதவனும் என்மாதிரி கால்கட்டில் சிக்கியவனும் கைக்கட்டுக்காக வந்து புத்தூர் பிஸினஸை சிறப்பாக்குகிறோம்! //

ஹஹஹஹஹா :)))))))

said...

//ஜொள்ளு பேச்சி said...
பாண்டி,உன்னை துவைத்து எடுப்பதுதான் என்னுடைய வேலை.//

என்னாங்க பேச்சி நான் என்னாங்க காடா துணியா துவச்சு எடுக்க ?? ;))))

//ஜொள்ளு எல்லாம் தப்பாக விட்டு,பாவம் இந்த ஆண்களுக்குத் தப்பு தப்பாக ஜொள்ளு விட கற்று கொடுத்துக் கிட்டு இருக்கின்றாய்,இவங்களை எல்லாம் உன்னிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.//

இதோடா வந்துட்டாங்க காவல் தெய்வம் அட நீங்க வேற !!!

//பாண்டி நீ பண்ணின சேட்டைகள் எல்லாம் இப்படி பேட்டையில் அரங்கேற்றம் பண்ணிவிட்டு நீ அப்புறாணி என்றால் அதை நம்பி மோசம் போக நான் ஒன்னும் முட்டாள் இல்லை.ஜொள்ளு பேச்சியாக்கும்!//

அட நீங்க ஏங்க மோசம் போகணும்? நான் என்னா தப்பு பண்னினேன் உங்களுக்கு ?? :(((


//உனக்கு ஏன் மார்டன் அம்மணிகள் மட்டும் கண்ணில் பளிச்சென்று தெரிகின்றார்கள்?இதில் இருந்தே தெரியவில்லையா இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கும் பெண்களின் நிலமை?//

என்னாங்க இது பார்த்தாலும் தப்பு பாக்காட்டியும் தப்பு கண்டுபிடிச்சா என்ன செய்வான் இந்தப் பாண்டி ??


//பாண்டி நீ கல்யாணம் ஆன விரக்தியில்தான் இந்த ஜொள்ளுப் பேட்டையை ஆரம்பித்தாய் என்று கேள்விப் பட்டேன்!இங்கே வரும் பெண்களே சற்று ஜாக்கிரதை.இந்த ஆளு கல்யாணம் ஆகி ஜொள்ளு விட்டு கிட்டு இருக்கலாம்.எதற்கும் கொஞ்சம் distance maintain பண்ணுங்க!//

அட என்னாங்க உண்மைதானே சொன்னேன்.ஏதோ பொண்ணுங்க இங்க க்யூகட்ட நிக்கர ரேஞ்சுக்குள்ல பேசுறீங்க.

பேச்சி வர வர உங்களுக்கு பதில் சொல்லியே நான் களைச்சுப்போய்டுவேன் போல இருக்கே :))))

said...

//Syam said...

சரியா சொன்னீங்க பாண்டி....
இவ்வளவு கஷ்டமும் எப்பவாவது வந்தா சரி தினமும் இந்த கஷ்டத்த அனுபவிக்கிறமே...சுதாக்கா எங்கள போயி அதுவும் எங்கள போயி :-) //

என்னாங்க சுதாக்கா ஷ்யாம் சொன்ன பதில் திருப்தியா ?? :))

said...

//சுகன்யா ஷ்ரி said...

//ஜொல்லு..என்னால சொல்லாமல் இருக்க முடியல..ஆனால் நீங்க ஒரு வெங்காயம்'னு ப்ரூவ் பன்னுரிங்க.. :P எல்லா விஷயமும் ரொம்ப லேட்'ஆவெ உங்களுக்கு புரியும் பொல.... நா உங்கள திட்டிக்கிட்டெ பதில் சொல்லு'ரெனு..

நான், தம்ழ்'ல கொஞ்சம் சொதப்பல் 'தான்...ஆனா, முட்டால் இல்ல..:P நிங்க சொல்லிகோடுத்தால்..தமிழ் , தாமில்'ஆக மாறிடும்...:D //

வாங்க சுகன்யா இன்னமும் ஒன்னும் கெட்டுப்போகலை தமிழ் கொஞ்சம் பொழக்கட்டுமே ப்ளீஸ் ;)))))))))

said...

// தூயா said...
நீங்க அப்புறாணியா? ;) //

வாங்க தூயா :)) என்ன ஒரு பேர் !! இதெல் என்னாங்க உங்களுக்கு சந்தேகம் ?? நான் அப்புறாணிதேன் !!

said...

//ஜொள்ளுமட்டும் விட்டு சந்தோஷமா இரு. கால்கட்டைப் போட்ட மறுகணமே இந்தப் பூச்செடிகள் பூச்சட்டியை மேலெறிந்து கைக்கட்டை புத்தூரிலோ லோக்கலாகவோ போடுவதில் வல்லவர்கள்.

அழகிய பூச்செடிக்குள்ளிருக்கும் "சொர்ணாக்கா" பற்றி ஜொள்ளும்போது தெரிவதில்லை!

புத்தூர் மாவுக்கட்டுத் தொழிலில் இருப்பவர்கள் இந்தப்பூச்செடிகளின் சொந்தபந்தங்களே... இங்கு உன்மாதிரி கால்கட்டுப்போடாதவனும் என்மாதிரி கால்கட்டில் சிக்கியவனும் கைக்கட்டுக்காக வந்து புத்தூர் பிஸினஸை சிறப்பாக்குகிறோம்//

hariharan அண்ணாச்சியை மறந்துட்டு போயிட்டேன்.பதிலடி கொடுக்கமால் போனது என் தப்புதான்.அண்ணாச்சி ஜொள்ளு விடும் போது ரசிகனாக இருக்கும் நீங்க எல்லாரும் கல்யாணதிற்கு பிறகு ராட்சசனாக மாறி போவது ஏனோ?அதுப் போல்தான் இதுவும்.நீங்கள் ரசிகனாகவே இருங்கள்.நாங்களும் பூச்செடிகளாகவே இருப்போம்.எங்க உள்ளிருக்கும் "சொர்ணாக்கா" வெளிவருவதும் வரமால் இருப்பதும் உங்கள் கைகளில்!

said...

//அடப்பாவி பாண்டி!நம்ம சுகன்யா ஒரு பெண்ணு என்பதால் எப்படி எல்லாம் உருகி தமிழ் சொல்லித்தர ஓடுகின்றாய்.இதுவே ஒரு ஆண் வந்தால் இப்படி எல்லாம் உதவிச் செய்ய முன் வருவாயா?நீ ஒரு வெங்காயம் என்று எங்களுக்கு தெரிவித்த சுகன்யாவிற்கு எனது பாரட்டுக்கள்!//

JolluPaechi,

நிங்கள் என்ட வல்லிய குரு 'அல்லெ?!..நிங்க என்னொட நல்ல குரு'இல்லையா!

எல்லாம் உங்க தயவுல தான் பெச்சி... ஜொல்லுபாண்டி மாதிரி இருக்குர ஆட்களுக்கு , நம்ம மதிரி கொஞ்சம் பெண்கள்'இல்லை என்றால், நம்ம சகோதரிகள் கதி..என்னாகும்!!

said...

அடபாவமே என் தலைதான் இங்கே உருண்டுக்கிட்டு இருக்கா...???

said...

//ராம் நீங்க பயங்கரமான ஆசாமி!அதிகமாக புகழ்கின்ற ஆள்களை நம்பக்கூடாது என்று அனுபவ பாடம் சொல்கின்றது.பாண்டி இவர் உன்னைத் தூண்டி விட்டு பொண்ணுங்க கையில் அடி வாங்க வைக்கப் பார்கின்றார்.//


அம்மா பேச்சி,

நான் எங்கண்ணே புகழ்ந்து பேசலே... இங்கே கொடுமைகளுக்கு துணிஞ்சு கேள்விக் கேட்ட வீரதீரத்தே தான் சொன்னேன். நீங்க என்னோமோ அடிகிடின்னு சொல்லீறிங்க... என்னோமோ அதெல்லாம் நாங்க வாழ்க்கையிலே வாங்காத மாதிரி.. ஒரு துணிச்சலான வீரன் வாழ்க்கையிலே விழுப்புண் வாங்குறது சகஜம்ம்மா...
:-))

//நீ என்னோட போட்டியாக இருந்தாலும்,உன்னை மேல் உள்ள அக்கறையில் சொல்லுறேன்.இவரை மட்டும் நம்பாதே!அடி விழுந்தால் நீ மட்டும் மாட்டிக்கொள்வாய்.நம்ம ராம் அண்ணாச்சி உன்னை மாட்டிவிட்டு escape ஆகப் போறார்.பார்த்து பாண்டி!//

இந்த மாதிரியெல்லாம் எங்க அண்ணன் தம்பி பாசத்தே பிரிச்சிற முடியாது. அடி நான் வாங்கினாலும் எங்கண்ணண் வாங்கினாலும் அது வீரனுக்கு கிடைத்த விழுப்புண்ணு மாதிரி தான்.

said...

//ராம்... பொய் சொல்லாதிங்க.... உங்களுக்கு வாந்தி தான் வருது'னு எங்களுக்கு தெரியும்கோ!! :P ...//

என்னா சுகன்யா இப்பிடி சொல்லீறிங்க.... அதெல்லாம் நடக்குமின்னு தெரிஞ்சுதானே அதெல்லாம் செய்யுறோம்... சமயத்திலே நாங்க நினைக்கிறதே விட கொஞ்சம் எக்ஸ்டராவேதான் நடக்கும்....
:-)))

said...

ஏங்க என் பேருக்கு என்ன? தமிழ் பெயர்..நல்லா தானே இருக்கு!!

said...

வணக்கம் தொழர்களே

நான் உங்கள் பேட்டைக்கு புதுசு

அக்கா பேச்சியின் பேத்தலை படித்தேன் நம் மேல் கொலை வெறியில் உள்ளார் என நன்றாக தெரிகிறது.

இருந்தலும் நம் அண்ணன் பாண்டியை காப்பது இந்த அன்பு தம்பியின் கடமை /*அண்ணா இந்த இடத்தில் அழதே */ நான் இருக்கிறேன் உனக்கு.

பேச்சிக்கு எனது பதில்கள்

1. // she wrote ஏன் பாண்டி உங்க ஊரில் யாருமே உடம்பை மறைச்சுகிட்டு இல்லையா? எல்லா பொண்ணுங்களும் இப்படிதான் இருக்காங்களா? இல்லையே? சேலைக் கட்டினா இடுப்பு தெரியும் என்று நினைக்கும் பெண்கள் யாரும் இப்படி அலைய மாட்டங்க! அப்படி அலையும் பெண்கள் நீங்க பார்க்கனும் என்பதற்காகதான் இப்படி உடை உடுத்துறாங்க. அதைப் பார்தோமா வந்தோமான்னு இரு!//

ha ha ha அண்ணா அவங்களே ஒத்துக்கொண்டர்கள் சில பெண்கள் ஆண்கள் பார்க்கவேண்டும் என தான் அப்படி அலைகிறார்கள், அதனால் அப்படிப்பட்ட பெண்களை பார்ப்பதிலும் தப்பில்லை ******
தப்பில்லை.

2.//she wrote நீங்க மட்டும் தப்பமால் சரியான பொண்ணுங்களை தேர்ந்து எடுகின்றீர்களே?இந்த மாதிரி பொண்ணுங்களைதான் உயிரைக் கொடுத்து காதலிக்கிறீங்க.நல்ல பொண்ணுங்களுக்கு அல்லவா கொடுத்துட்டு escape ஆகிறீங்க! கலாச்சரத்தோடு இருக்கும் பெண்களை யாரும் நிமிர்ந்துக் கூட பார்பது இல்லை .அரையும் குறையுமாய் திரியும் இந்த மாதிரி பெண்களைதான் விழுந்து விழுந்து காதலிகின்றீர்கள்.ஒரு சிலர் இந்த மாதிரி பெண்கள் பின்னால் சுற்றி விட்டு,கல்யாணம் பண்ணும் போது மட்டும் மகாலட்சுமி போல் பெண் வேண்டும் என்று எதிர்பார்கின்றார்கள்.இது மட்டும் தகுமா என்ன?//

aaha சபாஷ் நாங்கள் உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள் எங்களிடம் திருப்ப கேள்வி கேக்கறீர்கள் , பெண்களுக்கே உரிய பிற்போக்கு செயல் ஒன்றும் பண்ண இயலாது.சரி நான் பதில் சொல்கிறேன்.

ஆம் ஒரு ஆண் காதலிக்கும் போது எல்லாப் பெண்களையும் நல்ல பெண் என நினைத்து தான் காதலிக்கிறான். காதலில் எந்த ஆணும் பொய் சொல்வதில்லை , நான் தண்ணி அடிப்பேன், தம் அடிப்பேன் என எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவான், ஆனால் எந்த பெண்ணும் உண்மைகளை சொல்வது இல்லை.நீங்கள் நடிப்பதால் தான் நாங்கள் ஏமாறுகிறோம். யாறும் தெரிந்தே தப்பான பெண்ணை காதலிப்பதில்லை. ஆனால் நீங்கள் தப்பானவன் என தெரிந்தே காதலிக்கிறீர்கள்.

note: இங்கு பிரச்சனை தப்பான ஆளை காதலிப்பது தான். எனவே ஏமாத்துறதை பத்தி பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

3.//she wrote பாண்டி உனக்குச் செலவு செய்ய முடியவில்லையா,லவ் பண்ணமால் ஜொள்ளு மட்டும் விடு!ஏன் இந்த கஞ்சதனம்?ஒரு பார்ப்கான் வாங்க இப்படி எல்லாம் யோசித்துப் பார்க்கலமா?நாங்க மட்டும் உங்களுக்கு என்று எந்த செலவுமே செய்யவில்லையா என்ன?
பாண்டி நீங்க எல்லாம் பார்ரில் பீரை ஒரே முடக்கில் குடித்தினால் வந்த வினை இது,எதையும் ரசித்துக் குடித்து பார் பாண்டி.முடியவில்லையா இப்படி எல்லாம் லூசுதனமாக கேள்விகள் கேட்கமால் ஓடிப்போ!இப்படிதான் பாரில் அந்த கருமம் எல்லாம் பிடித்ததை ரசித்து குடிக்கின்றீர்களே?அதைவிட கோக் ரொம்ப தேவலம்.அதை கொஞ்சம் ரசித்துக் குடிக்க கூட விடமாட்டீங்க போல் இருக்கே!நாங்கள் எது செய்தலும் குறை சொல்லவே ஒரு கூட்டம் அலைந்து கிட்டு இருக்கின்றது என்று தெரியுது!//

ok முதலில் ஒரு கேள்வி காதலித்தால் செலவு ஏதாவது செய்ய வேண்டும் என எழுதப்படாத விதி ஏதாவது உள்ளதா என்ன?சரி அதை விடுங்கள் இங்கு பிரச்சினை எவ்வளவு நேரம் குடிக்கிறார்கள் என்பது தான். அதற்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள். ரசித்துக் குடிப்பதர்க்கும் நேரம் போக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

4.//she wrote ஆமாம்.உங்களுக்கு எல்லாம் கல்யாணதிற்கு பிறகு பேசினால் fm ரேடியோ மாதிரிதான் இருக்கும்,காதலிக்கும் பொழுது மணிக்கணக்கில் பேசினாலும் இன்னும் கொஞ்சம் பேசு,உன் குரலை கேட்டுகிட்டு இருக்கனும் போல் இருக்குன்னு உருகுவீங்க.கல்யாணதிற்கு பின் ஒரு வார்த்தை பேசினாலும் உங்களுக்கு எல்லாம் எட்டிக்காய் போல் கசக்கும்!இதுதான் க.மு க.பி.புரியவில்லையா?கல்யாணதிற்கு முன் கல்யாணதிற்கு பின்!//

see அண்ணா அவரது கேள்வியில் கல்யாணத்தை பற்றி குறிப்பிடவே இல்லை.பொதுவாக ஏன் பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என தான் கெட்டார். நீங்கள் ஏன் கா.மு,கா.பி எல்லம் பற்றி பேசுகிறீர்கள்? நல்ல ஆண்களுக்கு தன் மனைவி எப்போதுமே தேவதை தான். கேட்ட கேள்விக்கு தெரிந்தால் மட்டும் பதில் சொல்லவும் வேறொரு கேள்வியை கேட்டு சமாளிக்க வேண்டாம்.

5.//she wrote கையிலே செல் வாயிலே பல் என்று பேசுற மாதிரி நடித்து கொண்டு, நடந்து போகின்ற பெண்களை cycle gapலில் சைட் அடிக்கமாட்டீங்க நீங்க?//

emhum இது வாதத்திற்கு உதவாது பேச்சி... நாங்கள் மொபைலில் பேசவில்லை என சொல்லவில்லை.
பெசுகிறோம் உண்மை தான். ஆனால் உங்களை போல் ஆட்கள் கடந்து செல்லும் ஆங்கிலதிலோ அல்லது கெட்ட வார்த்தையிலோ பேசி சீன் போடுவது இல்லை. அது தான் ஏன் இந்த பெண்கள் பண்ணுகிறார்கள் என கேட்க்கிறோம்?

இப்படி நீங்கள் அண்ணா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஏதோ சொல்லணும் என வெட்டியாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்.

உங்கள் மனதில் ஆண் என்றாலே கெட்டவன் என பதிவாகி உள்ளது. நீங்கள் இன்னும் சரியான ஆணை சந்தித்ததில்லை என நினைக்கிறேன். உடனே நீங்களும் நீ சரியான பெண்ணை சந்திததில்லையா என கேட்டு பெண் புத்தியைக் காட்டாதீர்கள்.

அண்ணா கேள்வி கேட்டது மேர்கூறிய 5 தவறுகளையும் செய்யும் பெண்களை பற்றி மட்டும் தான். ஏன் எதற்காக இதை செய்கிறார்கள் என? அதற்கு பதில் தெரிந்தால் கூறவும். நீங்கள் நல்ல பெண் என்றால் இந்த கேள்வி உங்களுக்கானது இல்லை. simple

Sudha Prasanna கூட பரவாயில்லை அவங்களுக்கு உண்மை என தோணியதை சொல்லி இருக்கிறார்கள்.

இதோ பாருங்கள் பேச்சி நான் உங்களிடம் சண்டை
போடவில்லை தவறை சுட்டிக் காட்டுகிறேன் அவ்வளவு தான். நீங்கள் என்னை தவறாக நினைத்தாலும் தவறில்லை.

*****************************************
என்ன அண்ணா போதுமா? இத படிச்ச பின்னாடி ரெத்த கண்ணீர் விடாதே. கண்ண தொடச்சிக்கோ...

ஜொள்ளு விடுறது தப்பே இல்லை. அதுக்கு மேல பொறது தான் தப்பு.


அன்புடன்

விஜய்
(nothing is stable in this world)