Wednesday, October 04, 2006

அடங்கொப்புறானே !!

அடங்கொப்புறானே
உங்களுக்கு ஹாஸ்பிடல்ல யாரையாச்சும் உயிருக்கு ஆபத்தான நிலைமையிலே அட்மிட் பண்ணி பார்த்துகிட்ட அனுபவம் இருக்கா? நமக்கு அப்படிப்பட்ட அனுபவத்தை என் நைனா கொஞ்ச வருஷமா வாரி வழங்கிட்டு இருக்காரு. நம்ம ஊரு டாக்டருங்க இருக்காங்களே ரொம்ப கூலா போக்ரான் நேபாம்மெல்லாம் பேஷண்டை பார்த்துக்குற ஆண் வாரிசுககிட்டே அப்பபோ போட்டுகிட்டே இருப்பாங்க. “ தம்பி எதுவும் இன்னும் 48 மணி நேரம் போனாதான் சொல்ல முடியும் பார்த்துகுங்க ! “ உடனே ஒரு மூணு லட்சுமி வெடிய ஒன்னா திரியகோர்த்துகிட்டு மனசுகுள்ள வெடிக்கும். தம்பி டாக்டர் உங்கூட பேசனும்குறார் அப்படீன்னு யாராச்சும் வந்து சொன்னா போதும். இப்போ என்ன குண்டத்தூக்கி போடப்போறாங்களோன்னு பயந்துகிட்டே போய் போயி ஒரு கட்டத்துலே என்ன வேணாலும் சொல்லிக்கிங்க டாக்டர். எம் மனசு கல்லாயிடுச்சுன்னு நின்ணு கிட்டு வரதோணும்.

அப்படியே பேசிட்டு நொந்து நூலாகி வெளிய வருவோம் பாருங்க இதுலே இந்த வெள்ளை ட்ரெஸ் போட்ட பிசாசுங்க யாரு ஆங் அதாங்க நர்ஸ்சுங்க அதுக வேற Parallel லா சைடுல இப்படி ஆச்சு அப்படி மூச்சு இழுதுகிட்டாருன்னு போற போக்கிலே கொழுத்தி போட்டுகிட்டு போவாங்க. ஏம்மா ஒத்தைப் பையன் என்னைய பார்த்தா பாவமா இல்லையா ஒருத்தன் எத்தனை அதிர்ச்சியத்தான் தாங்குவான்னு கேட்கத்தோணும் ! எங்கே சிலதுக சிரிக்கிற சிரிப்புல அதுவும் மறந்து போய்டும்.

இப்படியாக அதிர்ச்சி மேல அதிர்ச்சி வாங்கி இடிதாங்கியா ஆகிபோன மனசோட ஆஸ்பத்திரியில் சுத்திகிட்டு இருந்தப்போதான் சிந்தியா என் நைனா இருக்கும் floorக்கு Duty nurse - ஆக வந்தாள். நாந்தான் நைனாவுக்கு பணி செய்வதே என் தலையாய கடமையாக இருந்தேனே. சுத்து வட்டாரத்துலே என்ன நடக்குது என்ன போகுதுன்னு நமக்கு எங்கே தெரியுது? நாக்கை நாலா மடக்கி வாய்குள்ள வச்சுகிட்டு என் கடமையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தேனா பார்துகுங்களேன்.

இந்த காலத்துலே இப்படி ஒரு பையனா ? இவ்ளோ சின்சியரா இருக்கானேன்னு பல பேரு பார்த்துருப்பாங்க போல ஆஸ்பிடல்ல, அதுல நம்ம சிந்தியாவும் ஒருத்தின்னு உங்களுக்கு தெரியாதா என்ன ? சிந்தியா சிரிப்பை சிந்துனா அதுல கூட லேசா பிச்சர் பீரை ஊத்துனா லேசா பொங்குற நுரை மாதிரி ஒரு மெல்லிய சோகம் கொப்பளிக்கிறது தெரிஞ்சுது. அட என்னைய போலவே ஒருத்தி சோககமா இருகாளேன்னு லேசா மனசு மெயின் ட்ராக்கிலே இருந்து ஒதுங்குனா கூட உடனே மெயில் ட்ரக்கான நைனா caring வந்து எல்லாத்தையும் ஓரங்கட்டி ஒதுக்கிடும்.

அப்படித்தான் ஒரு இளங்காலைப் பொழுதுலே ஹாஸ்பிடல் ரூம்ல இருந்து வந்தப்போதான் பார்த்தேன் சிந்தியாவை.அப்போதுதான் Duty ஆரம்பித்து இருக்கும் போல, லேசா மனசு கபடி ஆட ஆரம்பிச்சது நெசந்தான். ஒரு சின்ன வெள்ளை தொப்பி. ஒரு வெள்ளை Frock போட்டுகிட்டு சிந்தியா சிலுப்பிகிட்டு அடிக்கடி அப்புறம் என்னை கடந்து போனா. போற போக்கிலே அப்படியே என்னையய பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை வேற சிந்திட்டு போனா.
உன் floor ல் இருந்தா அப்படிதாண்டா நாயேன்னு நீங்க கத்துறது கேட்குதுங்கோ. ஆயிரம்தான் இருந்தாலும் நைனாவைப் பார்த்துக்குற கடமை வேறு பின்னால் அழைக்குது சிந்தியாவோட சிரிப்பு சத்தம் முன்னால் அழைக்குது என்ன பண்ணுவேன் நான். டேய் பாண்டி இந்த நேரத்திலே தான் steady யா இருக்கனும் என என் கடமையில் கருத்தும் சிந்தியாவின் மேல் கண்ணுமாக அல்லாடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை எனக்கு.

அப்போதான் ஒரு அதிகாலைப் பொழுதிலே வழக்கமான check up புக்கு சிந்தியா ரூமுக்கு வந்தாள். வழக்கம் போல ரெண்டு ஊசியப் போட்டுட்டு நைனாவுக்கு pressure பார்க்க ஒரு பொட்டி வச்சிருப்பாங்களே அதைய திறந்தாள். அப்போதான் கவனிச்சேன் அந்த பொட்டிகுள்ள இருந்து ஏதோ கீழ விழுந்துச்சு.ஆனா அதைய நம்ம சிந்தியா கவனிக்கலை. சிந்த்யாவுக்கு உதவுர பாக்கியத்தை நான் விடுவேனா Never !! பாய்ஞ்சு போய் எடுத்தேன். அட தங்கசங்கிலி.!! இம்மாம் பெருசா இருக்கே. அங்கன பார்த்தா சிந்தியா ஏதோ Pressure பார்ப்பதே தன் வாழ்வியல் கடமையாக சின்சியரா பார்துகிட்டு இருந்துச்சு. சரி சரி பார்க்கட்டும்.இந்த செயினை கொடுத்தா எப்படியெல்லாம் எனக்கு நன்றி சொல்ல போறாளோ??

ரூமை விட்டு வெளியே போய்ட்டா சிந்தி ( செல்லமா ஹிஹி ) . பின்னாடியே ஓடிபோய் கூப்பிட்டேன். ‘சிந்தியா உங்க pressure பார்க்கர Box ல இருந்து இந்த செயின் கீழே விழுந்துருச்சுங்க !! ‘. சிந்தயா முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் வெளிச்சம் . இருக்காதா பின்னே !! ‘ அட இதைதாங்க நான் காலைல இருந்து தேடிகிட்டு இருக்கேன் இங்கதான் இருக்குதா. நல்ல வேளை. என் தாலிக்கொடிங்க இது !! ‘ சிந்தியா சொல்லிக்கொண்டே போக எனக்கு அய்யோ அம்மா ஹார்ட் அட்டாக் வரமாதிரி இருக்கே. சிந்த்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறதே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு இதுலே தாலிய வேற அம்மணி இப்படி கழட்டி வச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தா எப்படி என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பிறன் மனையா இல்லை காலி மனையான்னு கண்டுகரது ?? மார்டன் அம்மணிகளே இதெல்லாம் ஞாயமா?? ஆராச்சும் சொல்லுங்கப்பூ !!

39 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//மார்டன் அம்மணிகளே இதெல்லாம் ஞாயமா?? ஆராச்சும் சொல்லுங்கப்பூ !!
//
தல, நர்ஸூங்க எல்லாம் டியூட்டி நேரத்துல நகைகள் போட்டுக்க கூடதுன்னு ஹாஸ்பிடல்ஸ் ரூல்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். யூனிஃபார்ம் போடரப்போ இதெல்லாம் கழட்டி வச்சிடுவாங்கன்னு கேள்விப்பட்டதா நினைவு!

said...

//இந்த வெள்ளை ட்ரெஸ் போட்ட பிசாசுங்க யாரு ஆங் அதாங்க நர்ஸ்சுங்க//

பாண்டி அப்டிலாம் சொல்லக்கூடாது. அப்புரம் எக்கு தப்பா ஊசி போட்டுருவாங்க.

கடைசில ஹோல்சேல் லெவல்ல பல்பு வாங்கிட்டிங்க போலருக்கு. இருந்தாலும் இந்த காலத்து நவீன பிகர்கள் தாலிய கூட கழட்டி வச்சி புர்ச்சி செய்யறது ரொம்ப ஓவர். அட கால்ல மெட்டி இருக்குதான்னு பாக்கலாம்ணு பாத்த அங்க சாக்ஸ் வேற போட்டு இருப்பாங்க இல்ல.

உன்ன சொல்லி குத்தமில்ல பாண்டி.

said...

என்னய்யா நம்ம ஆளு சம்பந்தமே இல்லாம மேட்டர ஆரம்பிக்குறாரே நினைத்தேன், ஆனா அதுக்குள்ள சரியான டிராக்கு வந்து வீட்டீர்கள். :)

நீங்க சொல்லுறது சரி தானே பாண்டிண்ணன், வெள்ளைபிசாசுக்கள் தொல்லை ரொம்ப அதிகம் தானுங்க. நம்ம பிஞ்ச மனசு என்ன பாடு பட்டு இருக்கும் என்பதை என்னால் உணர முடியுது.......

said...

// அருள் குமார் said...
தல, நர்ஸூங்க எல்லாம் டியூட்டி நேரத்துல நகைகள் போட்டுக்க கூடதுன்னு ஹாஸ்பிடல்ஸ் ரூல்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். யூனிஃபார்ம் போடரப்போ இதெல்லாம் கழட்டி வச்சிடுவாங்கன்னு கேள்விப்பட்டதா நினைவு! //

வாங்க அருள் வாங்க :)) இப்படியொரு ரூல்ஸ் இருக்கா என்ன? எங்க ஊருலே அதெல்லாம் இல்லைங்க !! :((( எப்படியோ இனிமேலாச்சும் எல்லாரும் அலர்ட்டா இருந்துக்குவோம் :))

said...

//தம்பி said...
கடைசில ஹோல்சேல் லெவல்ல பல்பு வாங்கிட்டிங்க போலருக்கு.

வாங்க தம்பி :)) என்ன இப்படி இந்த வாருவாரறீங்க தம்பி :((

//உன்ன சொல்லி குத்தமில்ல பாண்டி.//

ஹையா எப்படியோ காப்பாத்தீங்க தம்பி! சும்மாவா சொன்னாங்க தம்பியுடையான் பல்புக்கு அஞ்சான்-னு :)))

said...

//நாகை சிவா said...
என்னய்யா நம்ம ஆளு சம்பந்தமே இல்லாம மேட்டர ஆரம்பிக்குறாரே நினைத்தேன், ஆனா அதுக்குள்ள சரியான டிராக்கு வந்து வீட்டீர்கள். :)//

வாங்க வாங்க சிவாதம்பி ( போதுமா திருப்தியா?:))) டிராக் மாறுரதுதானே பிரச்சனை ;))

//நீங்க சொல்லுறது சரி தானே பாண்டிண்ணன், வெள்ளைபிசாசுக்கள் தொல்லை ரொம்ப அதிகம் தானுங்க. நம்ம பிஞ்ச மனசு என்ன பாடு பட்டு இருக்கும் என்பதை என்னால் உணர முடியுது....... //

ஒரு பிஞ்சோட மனசு
( என்னோடடதுதான் :)) இன்னொரு பிஞ்சுக்குதானே தெரியும் ;))))

said...

எலேய் பாண்டி உன்னியப் புள்ளையா பெற உங்க நைனா தவமாய் தவமிருந்து இருக்கணும்லேய்...

உன்னோட கடமை உணர்வு என்னிய ரத்தக் கண்ணீரே சிந்த வைச்சிருச்சே.. அதுல்லயும் கீழே நீ சொன்ன மேட்டர்... நீ ஒரு கலாச்சாரக் காவல் கண்மணிலே...

//இதுலே தாலிய வேற அம்மணி இப்படி கழட்டி வச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தா எப்படி என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பிறன் மனையா இல்லை காலி மனையான்னு கண்டுகரது ?? //

said...

தல!

இந்த தொல்லை உண்மையாலுமே ரொம்ப கஷ்டக்கீது!

பிறன் மனை நோக்கான்னு ஒரு கட்டுப்பாட்டோட இருக்கிற பசங்கள இப்படி கெடுக்கிறது நாயாமே இல்லை.

நானும் இதை அனுபவிச்சிருக்கிறேன்

said...

//எப்படி என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பிறன் மனையா இல்லை காலி மனையான்னு கண்டுகரது //

சூப்பரப்பு...

said...

நல்ல வேளையா மாற்றான் தோட்டத்து மல்லிகைன்னு போகாம இருந்தீங்களே. :)))

கல்கி அவர்கள் சமீபத்தில் 1945-ல் எழுதிய "கணையாழியின் கனவு" கதை ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

யப்பா தம்பி, காலி மனைன்னு கண்ட இடத்துல குடிசை போட்டு உக்காந்துக்காதே. என்னிக்கு இருந்தாலும் உம் பேர்ல பட்டா இருந்தாத்தான் நல்லது. பிரச்சனை வராது. நிலபுலன் வாங்குறதுல அனுபவம் இருக்கறவங்கள கேட்டுப்பாரு சொல்லுவாங்க.

said...

பாண்டி உன்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க உங்க அப்பா ரொம்ப கொடுத்து வைத்து இருக்கனும்!அவர் உடம்புக்கு முடியமால் இருக்கும் போது கூட நீ ஜொள்ளு விட்டுகிட்டு இருந்திருக்கின்றாய்!

நானும் பார்கின்றேன்.நீ பெண்களை தேவை இல்லமால் வம்புக்கு இழுக்கின்றாய்.யாரவது ஒரு பெண் வந்து செருப்பு என்று சொல்லமால் அதில் அடித்தால் உன்னைக் காப்பாற்ற எல்லாம் என்னால் வர முடியாது.so அடக்கி வாசி டா!

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.பெண்கள் கல்யாணம் ஆகிவிட்டாத என்பதை நீங்கள் எல்லாம் அவர்களின் கழுத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்கின்றீர்கள்.திருமண ஆன ஆண்களை எப்படி நாங்கள் கண்டு கொள்வது?அவர்களின் தொப்பையைப் பார்த்தா?no hard feelings guys!எங்களுக்கு எல்லாம் ஒரு நியாயம் உங்களுக்கு எல்லாம் ஒரு நியாயமா?

அப்புறம் படம் சூப்பர்.நீயே நேரில் வந்து சிரிப்பது போல் இருக்குது பாண்டி!

said...

// dondu(#4800161) said...
நல்ல வேளையா மாற்றான் தோட்டத்து மல்லிகைன்னு போகாம இருந்தீங்களே. :)))

கல்கி அவர்கள் சமீபத்தில் 1945-ல் எழுதிய "கணையாழியின் கனவு" கதை ஞாபகத்துக்கு வருகிறது.
//

வாங்க டோண்டு சார் :)) என்னோட இந்த அனுபவத்தை கல்கி கூடவெல்லாம் கம்பேர் பண்ணி ஆனந்தககண்ணீர் வரவழைக்கிறீயளே :))))

said...

//Dev said...
எலேய் பாண்டி உன்னியப் புள்ளையா பெற உங்க நைனா தவமாய் தவமிருந்து இருக்கணும்லேய்...//

வாங்க தேவண்னா வாங்க :))

என் நைனா இதைப்பார்த்தா முதுகுலா 'டின்'னுதான் தெரியாம பேசுறீயளே :((

//உன்னோட கடமை உணர்வு என்னிய ரத்தக் கண்ணீரே சிந்த வைச்சிருச்சே.. அதுல்லயும் கீழே நீ சொன்ன மேட்டர்... நீ ஒரு கலாச்சாரக் காவல் கண்மணிலே...//

சங்கதுல இருந்துகிட்டு கலாச்சாரக் காவல் வீரனா இருக்கரதுல என்ன ஆச்சரியம் ?? இன்னும் எங்கெல்லாம் கலாச்சாரம் காலாட்டிகிட்டு இருக்குன்னு பார்க்கறேன் ;)))

said...

//கடைசி பக்கம் said...
தல!

இந்த தொல்லை உண்மையாலுமே ரொம்ப கஷ்டக்கீது!
நானும் இதை அனுபவிச்சிருக்கிறேன் //

வாங்க கடைசி பக்கம் :))

நீங்களும் இதிலே ஒரு victimமா என்னா கொடுமை பாருங்க :)))

said...

//Nakkiran said...
//எப்படி என்னைய மாதிரி ஆளுக எல்லாம் பிறன் மனையா இல்லை காலி மனையான்னு கண்டுகரது //

சூப்பரப்பு... //

அட வாங்க நக்கீரன் :)) நல்ல வேளை என்னைய பார்த்து நெற்றிக்கண்ணை தொறந்துடாதீங்கப்பூ;)))

said...

//ஜொள்ளு பேச்சி said...
பாண்டி உன்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க உங்க அப்பா ரொம்ப கொடுத்து வைத்து இருக்கனும்!//

வாம்மா ஜொள்ளுபேச்சி :))
என்னாதிது பேரு? ம்ம் ஜொள்ளுக்கே ஜொள்ளா ? தேவண்ணா என்ன சொல்லி இருகாருன்னு பாரு கண்ணு ;)

//யாரவது ஒரு பெண் வந்து செருப்பு என்று சொல்லமால் அதில் அடித்தால் உன்னைக் காப்பாற்ற எல்லாம் என்னால் வர முடியாது.so அடக்கி வாசி டா!//

அடிப் பாவி என்ன டா போட்டு பேசுறே ம்ம்ம் !!!

//எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.பெண்கள் கல்யாணம் ஆகிவிட்டாத என்பதை நீங்கள் எல்லாம் அவர்களின் கழுத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்கின்றீர்கள்.திருமண ஆன ஆண்களை எப்படி நாங்கள் கண்டு கொள்வது?//

இப்படி கேட்டா எப்படி பேச்சி ? அவங்க முகத்தைப் பாருங்க. சிக்கம் குனியா வந்த மாத்ரியே முகத்தை வச்சு இருபாங்க. அதிலிருந்தே ஈசிய தெரிஞ்சுக்கலாம் ;))))

//அப்புறம் படம் சூப்பர்.நீயே நேரில் வந்து சிரிப்பது போல் இருக்குது பாண்டி! //

உங்க ரேஞ்சுக்கெல்லாம் நான் வர முடியுமா ? ஏதோ நானுண்டு என் சிரிப்பு உண்டுன்னு பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கேன் :))

said...

ஏங்க ஜொள்ளுப்பாண்டி, ஜொள்ளுக்கு இவ்ளோ விவரமா ஒரு
பதிவா ???? :-)))))

****

நல்லா வழியறது, துடைத்துக்கோங்க...

said...

neenga alaipayuthey padam pakkalayia...adhulaya thali kalatti vaikkara matter irukkungo....
adhu mattum illa sudha narayanamoorthy kuda thaliya avanga atha munnadi mattum than poduvangalam

said...

அப்பாவை ஆசுபத்திரியில வெச்சுக்கிட்டு, அவர உசுரையும் கையில புடிச்சுகிட்டு, மிதிவண்டி சந்துல மகிழுந்து ஓட்ட பார்க்கிறீங்க. அதுலையும் காலி மனை வேணுமோ?

said...

//சிந்தியா சொல்லிக்கொண்டே போக எனக்கு அய்யோ அம்மா ஹார்ட் அட்டாக் வரமாதிரி இருக்கே. சிந்த்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறதே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு //

அடக் கொடுமையே...

என்னா பாண்டிண்ணே இதுவும் சோகக் கதைதானா...

said...

// ILA(a)இளா said...
அப்பாவை ஆசுபத்திரியில வெச்சுக்கிட்டு, அவர உசுரையும் கையில புடிச்சுகிட்டு, மிதிவண்டி சந்துல மகிழுந்து ஓட்ட பார்க்கிறீங்க. அதுலையும் காலி மனை வேணுமோ?//

வாங்க விவசாயி :)) என்ன இப்படி கேடுபுட்டீக :(( . விவசாயம் பண்ணுறப்போ வாழைதோட்டத்துக்கு இடையிலே வரப்பு சும்மாதானே இருக்குன்னு ஊடுபயிர் சாகுபடி பண்ணுவீகளே அதுமாதிரிதான் . மெயினான விசயம் நடந்துகிட்டு இருந்தாலும் ஒரு ஊடு பயிர் மாதிரி ஹிஹிஹி :)))

said...

//ராம் said...
அடக் கொடுமையே...

என்னா பாண்டிண்ணே இதுவும் சோகக் கதைதானா... //

வாங்க ராம் வாங்க என்ன நாங்களாம் பல பஞ்சாயத்தை பார்த்து ஆப்பு வாங்கை அந்து அவலாகி நின்னுகிட்டிருந்த அனுபவம் நெறைய இருக்குங்கோ :))))

said...

// சோம்பேறி பையன் said...
ஏங்க ஜொள்ளுப்பாண்டி, ஜொள்ளுக்கு இவ்ளோ விவரமா ஒரு
பதிவா ???? :-)))))
நல்லா வழியறது, துடைத்துக்கோங்க... //

வாங்க சோம்பேறி பையன் :))
நம்ம பொழப்பே இதுதானுங்கண்ணா ! அப்புறம் விளக்கமா சொல்லாம எப்படி ? ;)))

said...

//zeno said...
neenga alaipayuthey padam pakkalayia...adhulaya thali kalatti vaikkara matter irukkungo....
adhu mattum illa sudha narayanamoorthy kuda thaliya avanga atha munnadi mattum than poduvangalam //

வாங்க ஸெனோ :))
ஆமாம் அலைபாயுதே வைப் பார்த்து பல மனசு அலைபாயது :)) இவளோ தகவல் களஞ்சியமா இருக்கீயளே ;))))

said...

//இலவசக்கொத்தனார் said...
யப்பா தம்பி, காலி மனைன்னு கண்ட இடத்துல குடிசை போட்டு உக்காந்துக்காதே. என்னிக்கு இருந்தாலும் உம் பேர்ல பட்டா இருந்தாத்தான் நல்லது. பிரச்சனை வராது. நிலபுலன் வாங்குறதுல அனுபவம் இருக்கறவங்கள கேட்டுப்பாரு சொல்லுவாங்க. //

வங்க கொத்ஸ்ஸண்ணா வாங்க :))) அதெல்லாம் மாட்டேன் நான் நல்ல பையனாக்கும் :)) அனுபவஸ்தர்கள் படுற பாட்டை பார்த்தா நிலபுலன் வாங்குற ஆசையே போய்டுதே;)))))

said...

பாண்டி,
எந்த நேரத்துலயும் கடமையில கண்ணும் கருத்துமாதான் இருந்து இருக்கர போல...

நல்லா இரு. :-)

said...

இவளோ தகவல் களஞ்சியமா இருக்கீயளே ;))))

enna irundhalum ponnunga manasu pathina matterla ellam neenga nadamadum encylopedia:-))))

said...

// மனதின் ஓசை said...
பாண்டி,
எந்த நேரத்துலயும் கடமையில கண்ணும் கருத்துமாதான் இருந்து இருக்கர போல...

நல்லா இரு. :-) //

வாங்கண்ணா என்ன பண்றது ஏதோ என் கடமையைச் செய்யுறேன் ;)))

said...

//zeno said...
இவளோ தகவல் களஞ்சியமா இருக்கீயளே ;))))

enna irundhalum ponnunga manasu pathina matterla ellam neenga nadamadum encylopedia:-)))) //

வாங்க ஸீனோ என்னங்கண்ணா என்னைய போயி என்சைக்ளோபீடியான்லாம் சொல்லி புல்லரிக்க வைக்கிறீயளே :)))

said...

பாண்டி உன் முகத்தைப் பார்த்தால் சிக்கம் குனியா வந்த மாதிரி இருந்தது.அப்படினா உனக்கு கல்யாணம் ஆச்சு!ஆமாம் தானே?கல்யாணம் ஆகி ஜொள்ளு விட முடியாமல் அந்த ஜொள்ளை எல்லாம் இங்கே கடலாய் ஒடுகின்றது என்று நினைக்கின்றேன்.

ஆமா உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்களைக் குறைச் சொல்லவில்லை என்றால் தூக்கம் வரதா?நீங்க பாட்டுக்கு தாலி போடவில்லை என்று ஒரே குதி குதிக்கின்றீர்கள்.ஒரு பெண் பாடும் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு எங்கே புரிய போகின்றது.இதில் உங்களுக்கு ஒத்து ஒத ஒரு கூட்டம் பின்னால் சுற்றுகின்றார்கள்.

சரி முதலில் பெண்கள் படும் கஷ்டத்தைப் பற்றி சொல்லுகின்றேன்.இந்த தாலி தங்கத்தில் இருந்தாலும் இருக்கு இதுவால் எங்கள் உயிருக்கே ஆபத்து!நிம்மதியாக தாலியைப் போட்டுகிட்டு வெளியே போக முடியுதா?அதை மட்டும் திருடிகிட்டு போறாங்களா?இல்லையே!எங்களையும் மேலோகத்திற்கு அனுப்புகின்ற மாதிரி அடித்துப் போடுறாங்க இந்த திருட்டு பயலுக!

சரி முதலில் உங்களில் யாரவது அந்த தாலியின் பாரம் பற்றி தெரியுமா?வேண்டும் என்றால் கழுத்தில் மாட்டி பாருங்கள்.கழுத்தே உடைந்து போகும் அளவிற்கு பாரம்.நீங்க எல்லாம் ஒரு மெட்டியைக் கூட காலில் போட்டுக்கொள்ள தயங்கி கழற்றி வைத்து விடுறீங்கள்.so நீங்க எல்லாம் குறைச் சொல்லவதுக்கு முன்பு கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்

said...

ஹய்யோ ஹய்யோ
:)))))
என்னா வில்லத்தனம்?!!!

said...

//ஜொள்ளு பேச்சி said...
கல்யாணம் ஆகி ஜொள்ளு விட முடியாமல் அந்த ஜொள்ளை எல்லாம் இங்கே கடலாய் ஒடுகின்றது என்று நினைக்கின்றேன்.//

வாங்க அம்மணி ஜொள்ளுபேச்சி :))
ஆமா நீங்க யாரு என்ன பண்ணுறீங்க எதுக்கு என்னைய போயி இப்படி காய்ச்சி எடுக்குறீங்க நான் என்ன தப்புங்க பண்ணினேன் ?? :((

//ஆமா உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்களைக் குறைச் சொல்லவில்லை என்றால் தூக்கம் வரதா?//

அய்யோ ஜொள்ளுப்பேச்சி நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. பொண்ணுங்க இல்லாட்டி அப்புறம் எங்களுக்கெல்லாம் எப்படீங்க பொழுது போகும் ?? ;)))

//சரி முதலில் உங்களில் யாரவது அந்த தாலியின் பாரம் பற்றி தெரியுமா?வேண்டும் என்றால் கழுத்தில் மாட்டி பாருங்கள்.கழுத்தே உடைந்து போகும் அளவிற்கு பாரம்..so நீங்க எல்லாம் குறைச் சொல்லவதுக்கு முன்பு கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள் //

அட கொஞ்சம் தாலிக்கொடியை சன்னாமா பேட்டா ஆச்சு. நீங்கதானுங்களே தாம்புகயிரு ரேஞ்சுக்கு பெருசா வேணும்னு போட்டுக்கறீங்க. சன்னமா போட்டுகிட்டா யாரு என்ன சொல்லப் போறாங்க ?

ரொம்ப டென்சன் ஆவாதீங்க பேச்சி:)) யாருப்பா அது பேட்டையிலே ? பேச்சியக்காவுக்கு ஜில்லுன்னு ஒரு மோரு கொடுங்கப்பூ !!!

said...

// வேந்தன் said...
ஹய்யோ ஹய்யோ
:)))))
என்னா வில்லத்தனம்?!!! //

வாங்க வேந்தன் :)) என்னாங்க என்னைய போயி நம்பியார் ரேஞ்சுக்கு வில்லன்லாம் சொல்லிட்டு போங்க எனக்கு வெக்கமா இருக்கு ;))))

said...

குறள் காட்டிய நெறிப்படி இளையர் யாரும் நடக்கிறதில்லைன்ற பெரிசுங்களுக்கு இந்த நிகழ்வு கண்திறப்பாக அமையட்டும்!

மெய் வருத்தம் பாரார் கண்துஞ்சார்...
கடமையே கண்ணாயினார்-

அப்பிடின்னு வள்ளுவர் சொன்னதைக் சமீப காலத்தில் கடைப்பிடிக்கிறது ஜொள்ளுப்பாண்டிதான்!

என்னதான் ஜொள்ளிக்கிறமாதிரி சூழல்ன்னாலும் " அது பிறன் மனையா காலிமனையான்னு" ஒருசெகண்ட் யோசிக்கிற பாரு...

மெய்யாலுமே ஒத்துக்கிறேம்பா..

"ஜொள்ளுப்பாண்டி நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்யா"

said...

// Hariharan said...
குறள் காட்டிய நெறிப்படி இளையர் யாரும் நடக்கிறதில்லைன்ற பெரிசுங்களுக்கு இந்த நிகழ்வு கண்திறப்பாக அமையட்டும்!

மெய் வருத்தம் பாரார் கண்துஞ்சார்...
கடமையே கண்ணாயினார்-
அப்பிடின்னு வள்ளுவர் சொன்னதைக் சமீப காலத்தில் கடைப்பிடிக்கிறது ஜொள்ளுப்பாண்டிதான்!

என்னதான் ஜொள்ளிக்கிறமாதிரி சூழல்ன்னாலும் " அது பிறன் மனையா காலிமனையான்னு" ஒருசெகண்ட் யோசிக்கிற பாரு...
மெய்யாலுமே ஒத்துக்கிறேம்பா..

"ஜொள்ளுப்பாண்டி நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்யா" //

வாங்க ஹரிஹரன் வாங்க :)) அய்யா அப்படியே கண்ணைகட்டிகிட்டு வருதே என்னையவா இப்படி குறளுக்கு எல்லாம் மேற்கோள் காட்டி சொல்லுறீக ??:)))) ஆஹா ஹரிஹரன் உங்க சிந்தனியே தனிதான் போங்க . ரொம்ப புகழாதீங்கண்ணா எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு ;))))

said...

தூ!!!!! ......:P kidding..

said...

பாண்டி! பொறாமையா இருக்குப்பா...எப்படி தான் இப்படியெல்லாம் எழுதறியோ? நடத்து நடத்து...சைக்கிள் கேப்ல புல்டோசர் வேற ஓட்டிருக்கே...கில்லிப்பா நீயு
:)

said...

//கைப்புள்ள said...
பாண்டி! பொறாமையா இருக்குப்பா...எப்படி தான் இப்படியெல்லாம் எழுதறியோ?//

பார்தீங்களா தல நீங்க இப்படி சொல்லலாமா ?? எல்லாம் உங்க ஆசீர்வாதங்க தல வேற எனாத்த சொல்லுவேன். தல யோட Military training தான் இதுக்கெல்லாம் காரணம்கரதை நான் சொல்லவே மாட்டேனே ;))))))))))

//நடத்து நடத்து...சைக்கிள் கேப்ல புல்டோசர் வேற ஓட்டிருக்கே...கில்லிப்பா நீயு//

சைக்கிள் கேப்புல புல்டோசரா என்னா தல காஷ்மீர் தீவிரவாதியையும் பார்த்திருக்கோம் பாகிஸ்தான் ராணுவத்தையும் சந்திச்சிருக்கோம் நீங்க கூட இருந்தா புல்டோசர் என்னா ரெண்டு டாங்கியவே ஒத்தை ஆளா சைக்கிள் கேப்புல ஓட்டிர மாட்டேன் ?? ;))))))))))