Wednesday, October 25, 2006

Dark & Lovely

Dark & Lovely

எதுவுமே நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கனும் . காரம் மணம் சுவை எல்லாமே. உடம்பிலே ஒருத்தனுக்கு கொஞ்சம் சதை கம்மியா இருந்திட்டா போதும், என்னடா ஓட்டடை குச்சி மாதிரி இருக்கே ம்பாங்க.சரின்னு கொஞ்சம் சதைப்பற்றோட இருந்தா என்ன மாப்ளே எந்த கடையிலே அரிசி வாங்குறவுக ன்னு நக்கல் வுட்டு கலாய்ப்பாங்க. என்னதான் பண்ணறது ? நம்ம சினிமாவிலே எடுத்துகிட்டா ஹீரோயின்க எல்லாமே நாட்டுப்பற்றோட இருக்காங்களோ இல்லையோ சதைப்பற்றோட இருக்கனும் அப்படீங்கறதிலே நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க.

இதிலே அந்த கால சாவித்திரில இருந்து சென்ற கால குஷ்பு மற்றும் நிகழ்கால நடமாடும் குத்துவிளக்கு நமீதா வரை சொல்லிகிட்டே போகலாம். இதிலே மேட்டரே நம்ம தானைய தலைவி நமீதாதாங்க. என்ன பண்றதுங்க. நம்ம தமிழ் சினிமா
எல்லாருக்கும் நல்லா வயிறார சோறு போடுது ஆனா நம்ம ஹீரோயினகளுக்கு மட்டும் வயித்தை மறைக்க ஒரு நல்ல dress போடவிடமாட்டீங்குது. இதிலே நம்ம நமீதா என்ன பண்ணுவாங்க ? அவங்களே ஏதோ கெடச்ச ஒரு மீட்டர் துணிய கஷ்டப்பட்டு சுத்திகிட்டு தன்னோட தொறமையால நடிக்கவும் செய்யுறாங்க. இது நம்ம நாட்டுல இருக்குற சில மாதர் அம்மணிகளுக்கு புடிக்கலைங்களாம். என்ன கொடுமைங்க இது? நமீதா இப்படிப்பட்ட உடைஉடுத்தி மாதர்களை இழிவு படுத்தறதா சொல்லி போராட்டம் நடத்தப்போறதா அறிக்கை வேற. என்னாங்க இது யாருங்க உங்களை அவமானப் படுத்தினா ?

இந்த டீவியிலே பாருங்க எப்போ பார்த்தாலும் சிகப்பழகு க்ரீம் விளம்பரம்தான். பொண்ணுங்க கலரா இல்லாட்டி வேலை கெடக்க மாட்டிங்குது ! கலரா இல்லாட்டி புருஷன் கெடைக்க மாட்டேங்குது ! ன்னு இந்த க்ரீம்காரங்க டுபுக்கு விட்டு விளம்பரம் பண்ணராங்க,.அதைப் பார்த்து நம்ம ஊரு அம்மணிக எல்லாருமே கிலோ கணக்குல க்ரீம் வாங்கி ஏதோ இப்போவே ஏஞ்ஜலீனா ஜோலியோட தங்கச்சி ஆகப்போற ரேஞ்சுக்கு பயபக்தியோட முகத்திலே தடவிகிட்டு இருக்காங்க !! என்ன கொடுமைங்க இது ? ஏங்க இவங்க விக்கறதே சிகப்பழகு கீர்ம்னு சொல்லித்தான். சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா! ஏதோ கதக்களி டான்ஸ் ஆட மேக்கப் போட்ட மாதிரி இருக்காது ?

ஆமா பொண்ணுங்க கருப்பா இருந்தா என்னாங்க? வேலை கெடைக்காதா ? இல்லை யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்களா ? என்ன பேத்தல் இது. கல்யாணம் பண்ணப்போறப்போ பொண்ணு கலரா இருக்கணும்தானே தேடுறாங்கன்னு ஆனா அது வெள்ளைக்கலராதான் இருக்கணும்னு நீங்க ஏங்க முடிவு பண்ணுறீங்க? இதிலே Fairness மீட்டர்ன்னு வேற கொடுக்கறானுங்க. அழகை மீட்டர் வச்சு அளக்க முடியுமா கண்ணுகளா? யோசிங்கப்பூ. அந்த மீட்டர் எல்லாம் பாக்குறவுக கண்ணுலதான் இருக்குங்கரது இந்த பாண்டியோட தாழ்மையான கருதுங்க.பொண்ணு கருப்பா களையா இருக்குண்னு சொல்லிட்டு போங்களேன்.

அதுனால மாதர் குலங்களே! உங்களை இழிவு படுத்துரது எங்கள் தானைய தலைவி நமீதா இல்லீங்கோ. இந்த மாதிரி அழகு கீரீம் விக்கிறவுக தானுங்கோ. உங்க போரட்டத்தை அங்கன போய் வெடிங்க கொளுத்துங்க. பாவம் ஏதோ பஞ்சாப்ல இருந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்து நடிச்சிகிட்டு இருக்குற அப்பாவி மேல ஏம்மா பாயுறீங்க ??

49 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

இது ஒரு நல்ல கேள்வி!
:)))))

said...

aduthu namithaku sangam arambikka poringla enna

said...

//அதுனால மாதர் குலங்களே! உங்களை இழிவு படுத்துரது எங்கள் தானைய தலைவி நமீதா இல்லீங்கோ. இந்த மாதிரி அழகு கீரீம் விக்கிறவுக தானுங்கோ. உங்க போரட்டத்தை அங்கன போய் வெடிங்க கொளுத்துங்க.//

ஆஹா! இதுவல்லவோ கருத்து! இதை எழுதியிருப்பவர் அல்லவோ புரட்சி கவிஞர்?
:)

//பாவம் ஏதோ பஞ்சாப்ல இருந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்து நடிச்சிகிட்டு இருக்குற அப்பாவி மேல ஏம்மா பாயுறீங்க ?? //

அதானே! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இல்ல நாம இருக்குறோம்?
:)

said...

//இந்த க்ரீம்காரங்க டுபுக்கு விட்டு விளம்பரம் பண்ணராங்க,.//

என்னாது? டுபுக்குவை விட்டு விளம்பரம் பண்ணறாங்களா? நம்ம ஆள் அந்த லெவலுக்குப் போயாச்சா?

said...

பாண்டியின் இந்தப் பகுத்தறிவு கட்டுரைக்கு எங்கள் நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நவநாகரீக நங்கை நமீதா பாதுகாப்பு பேரவை.
கொருக்கு பேட்டை

said...

// வேந்தன் said...
இது ஒரு நல்ல கேள்வி!
:))))) //

வாங்க வேந்தன் :)) இது கேள்வி அல்ல வேள்வி !! ;)))))))))

said...

//zeno said...
aduthu namithaku sangam arambikka poringla enna //

வாங்க ஸீனோ ;))))

நமீதவுக்கு இனி என்னாங்க சங்கம் ?? பேட்டை மக்களின் மனசிலே அவங்க ஏற்கனவே சங்கமம் ஆய்ட்டாங்களே ;))))))))))))

said...

//வாங்க வேந்தன் :)) இது கேள்வி அல்ல வேள்வி !! ;))))))))) //

இந்த வேள்வியில் கலந்து கொள்ளும் நாங்கல்லாம் சுள்ளியா? இல்ல வரட்டியா? க்ளியராச் சொல்லிடுங்கப்பு
:)

said...

//கைப்புள்ள said...
ஆஹா! இதுவல்லவோ கருத்து! இதை எழுதியிருப்பவர் அல்லவோ புரட்சி கவிஞர்?//

வாங்க தல :)))
என்னாங்க புரட்சி அது இதுன்னு சொல்லி புல்லரிக்க வைக்கிறீங்களே !! :)))
//
//பாவம் ஏதோ பஞ்சாப்ல இருந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்து நடிச்சிகிட்டு இருக்குற அப்பாவி மேல ஏம்மா பாயுறீங்க ?? //

அதானே! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இல்ல நாம இருக்குறோம்?//

வாவ் வாவ் சப்போர்டுக்கு நீங்க இருக்குற தைரியத்துல தானே நானே கருத்து கந்தசாமி ஆனேன் :))))

said...

//இலவசக்கொத்தனார் said...
//இந்த க்ரீம்காரங்க டுபுக்கு விட்டு விளம்பரம் பண்ணராங்க,.//

என்னாது? டுபுக்குவை விட்டு விளம்பரம் பண்ணறாங்களா? நம்ம ஆள் அந்த லெவலுக்குப் போயாச்சா? //

ஆஹா கொத்ஸ் இப்படி என் குருநாதர் டுபுக்குவை இதிலே இழுத்துவிட்டு வேடிக்கை காட்டாதீங்க !!! :)))))
இது வேற டுபுக்குன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ;))))

said...

//நம்ம சினிமாவிலே எடுத்துகிட்டா ஹீரோயின்க எல்லாமே நாட்டுப்பற்றோட இருக்காங்களோ இல்லையோ சதைப்பற்றோட இருக்கனும் அப்படீங்கறதிலே நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க//

ஜொள்ளுப்பாண்டி அய்யா,

நீங்க என்ன சொல்லவர்ரீங்க?
தமிழன் என்றோர் இனம் உண்டு ,தனியோர் அதற்கு குணம் உண்டு அப்படீன்னா..

பாலா

said...

//தேவ் | Dev said...
பாண்டியின் இந்தப் பகுத்தறிவு கட்டுரைக்கு எங்கள் நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நவநாகரீக நங்கை நமீதா பாதுகாப்பு பேரவை.
கொருக்கு பேட்டை //

ஆஹா வாங்க தேவண்ணா தானையதலைவி நமீதாவுக்கு பாதுகாப்பு படைத்தலைவரா ஆய்டீங்க போல??;))) தாரகை நமீதா வாழ்க வாழ்க!!!

said...

//அவங்களே ஏதோ கெடச்ச ஒரு மீட்டர் துணிய கஷ்டப்பட்டு சுத்திகிட்டு தன்னோட தொறமையால நடிக்கவும் செய்யுறாங்க.//

அதுவே அதிகம்!

said...

//கைப்புள்ள said...
//வாங்க வேந்தன் :)) இது கேள்வி அல்ல வேள்வி !! ;))))))))) //

இந்த வேள்வியில் கலந்து கொள்ளும் நாங்கல்லாம் சுள்ளியா? இல்ல வரட்டியா? க்ளியராச் சொல்லிடுங்கப்பு//

அட என்னாங்க தல இப்படி கேட்டுபுட்டீக !! நீங்கள்லா சுள்ளியும் இல்ல வராட்டியும் இல்லை நீங்கதான் நெருப்பு நீலமேகம் ஆச்சே !!! வேள்வித் தீயை பத்த வைக்கிறதே நீங்கதான் தல !! ;)))))))))

said...

//bala said...
//நம்ம சினிமாவிலே எடுத்துகிட்டா ஹீரோயின்க எல்லாமே நாட்டுப்பற்றோட இருக்காங்களோ இல்லையோ சதைப்பற்றோட இருக்கனும் அப்படீங்கறதிலே நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க//

ஜொள்ளுப்பாண்டி அய்யா,//

வாங்க பாலா :)) என்னாது ஜொள்ளுபாண்டி ஐயாவா ????? இதுக்கே என் கடுமையான ஆட்சேபத்தை தெரிவிச்சுக்கறேன்.:))

//நீங்க என்ன சொல்லவர்ரீங்க?
தமிழன் என்றோர் இனம் உண்டு ,தனியோர் அதற்கு குணம் உண்டு அப்படீன்னா..//

அடடா எனா இது ?? நான் அப்படியா சொன்னேன் ?? இப்படிக்கூட சொல்லலாமா என்ன? தெரியலையே :)))

said...

// தம்பி said...
//அவங்களே ஏதோ கெடச்ச ஒரு மீட்டர் துணிய கஷ்டப்பட்டு சுத்திகிட்டு தன்னோட தொறமையால நடிக்கவும் செய்யுறாங்க.//

அதுவே அதிகம்! //

வாங்க தம்பி :)))

ஆமா எது அதிகம்னு சொல்றீங்க?? துணியா இல்லை நடிப்பா? எதுன்னாலும் தம்பி சொன்னா சரியாதேன் இருக்கும் ;))))

said...

நமது த​லைவி நமீதா வின் ப​ட​த்தை சிறியதாக போட்டிருக்கீங்களே, நியாயமா, அடுக்குமா???

said...

//வாங்க பாலா :)) என்னாது ஜொள்ளுபாண்டி ஐயாவா ????? //

இப்படி புரட்சிகரமான கருத்துகளால வாசல் தெளிச்சி நமீதா வச்சி புள்ளி கோலம் எல்லாம் போட்டீங்கன்னா ஐயான்னாம ங்கொய்யாம்பாங்களா?
:)

said...

என்ன பத்தி ரொம்ப நல்லா எழுதிக்கிது ஜொள்ளுத்தம்பி. இன்னா மாரி நன்றி சொல்றதுன்னு தெரியலை. எங்கப்பா சூரத்ல ஒரு பெரிய துணி யாவாரி. அதனாலதான் நான் விதவிதமா ட்ரஸ் பண்ணுது. ஆனா இந்த தமிழ் சினிமாதான் போத்படா சைஸ் துணியெல்லாம் போட்டுகிட்டு நடிக்க சொல்லுது. ஏதோ அஜிஸ் பண்ணிக்கறேன்.

ஆண்டவன் அளந்துதாய்யா கொடுக்கறான் எல்லாத்துக்கும், அப்பன் பெரிய துணி யாவாரியா இருந்தாலும் பொண்ணு உடம்ப பாதிய கூட மறைக்க முடியல.

said...

//வேந்தன் said...
நமது த​லைவி நமீதா வின் ப​ட​த்தை சிறியதாக போட்டிருக்கீங்களே, நியாயமா, அடுக்குமா??? //

அட கோச்சுக்காதீங்க வேந்தன் !!;))) நம்ம தலைவி நமீதாவோட படமாச்சும் சின்னதா இருக்கட்டுமேன்னுதான் ஹிஹிஹிஹி

said...

//கைப்புள்ள said...
//வாங்க பாலா :)) என்னாது ஜொள்ளுபாண்டி ஐயாவா ????? //

இப்படி புரட்சிகரமான கருத்துகளால வாசல் தெளிச்சி நமீதா வச்சி புள்ளி கோலம் எல்லாம் போட்டீங்கன்னா ஐயான்னாம ங்கொய்யாம்பாங்களா?//

ஓஓஓ தல நீங்க அப்படி வாரீங்களா !! அப்போ ஜொள்ளூப்பாண்டி கருத்து ஏதும் சொல்லக்கூடாதா >> :(( கருத்து சொன்னா ஐயாவா ?? ஐயகோ !! ;))))))

said...

//நமீதா said...
என்ன பத்தி ரொம்ப நல்லா எழுதிக்கிது ஜொள்ளுத்தம்பி. இன்னா மாரி நன்றி சொல்றதுன்னு தெரியலை. எங்கப்பா சூரத்ல ஒரு பெரிய துணி யாவாரி. அதனாலதான் நான் விதவிதமா ட்ரஸ் பண்ணுது. ஆனா இந்த தமிழ் சினிமாதான் போத்படா சைஸ் துணியெல்லாம் போட்டுகிட்டு நடிக்க சொல்லுது. ஏதோ அஜிஸ் பண்ணிக்கறேன்.
ஆண்டவன் அளந்துதாய்யா கொடுக்கறான் எல்லாத்துக்கும், அப்பன் பெரிய துணி யாவாரியா இருந்தாலும் பொண்ணு உடம்ப பாதிய கூட மறைக்க முடியல. //


அட தலைவியேவா :))) வாங்க வாங்க ஏதோ உங்க மனக்கொறஒய சொல்லறீங்க வழ்க்கையினா அஜீஸ் பண்ணதான் வேணுமில்லையா :)))

said...

NDF (Nameeda Defense Force) - அமெரிக்க கிளையின் சார்பில் பாண்டியோட இந்த பதிவுக்கு முழு ஆதரவு தெரிவித்து இந்த வார கடைசியில் ஒரு நாள் அடையாள சைட் அடிக்கும் போராட்டத்தை வெள்ளை மாளிகையின் முன் நடத்த உள்ளோம் என்பதை இத்தருனத்தில் தெரிவித்து...

ஏம்பா யாராவது சோடா குடுங்களேன்..தொண்டை வரளுது :-)

said...

உயிர் மண்ணுக்கு உடல் நமீதாக்கு என்று முழங்கிய நமது தானை தலைவன் விவேக் அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற கடமை பட்டுள்ளோம் :-)

said...

படம் சூப்பர்.பக்கத்தில் உள்ள நாயைப் பார்த்தால் உன் ஞாபகம்தான் வருது பாண்டி!நீ ஜொள்ளு விடுவதை விட்டுபுட்டு ஜொள்ளுப் பாண்டி கருத்து பாண்டியாக மாறி விட்டாயா?சரி நீ சொல்லவதும் சரிதான்.ஆனால் உங்க நமீதா கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் சிகப்பாக இருகின்றாங்களே!அவங்க கருப்பாகவும் அதே சமயம் இந்த sizeயில் இருந்தால் நீங்க எல்லாம் பார்ப்பீங்களா?உனக்கு கருப்பாக உள்ள பெண்கள் களையாக இருக்கலாம்.ஆனால் முக்கால் வாசி பேர்களுக்கு கொஞ்சம் தோலு வெள்ளையாக இருந்தால்தான் பிடிக்குது.மவனே நீ மட்டும் யாரவது கொஞ்ச கலரா உள்ள பொண்ணுப் பின்னால் சுத்தினான்னு நான் கேள்விப் பட்டேனா உன் வீடு தேடி வந்து உதைப்பேன்.

said...

//Syam said...
NDF (Nameeda Defense Force) - அமெரிக்க கிளையின் சார்பில் பாண்டியோட இந்த பதிவுக்கு முழு ஆதரவு தெரிவித்து இந்த வார கடைசியில் ஒரு நாள் அடையாள சைட் அடிக்கும் போராட்டத்தை வெள்ளை மாளிகையின் முன் நடத்த உள்ளோம் என்பதை இத்தருனத்தில் தெரிவித்து...//

ஆஹா வாங்க பங்காளி ஷ்யாம் :))) என்னா ஒரு போராட்டம் என்னா ஒரு உணர்ச்சிகரமான பேச்சு !!! NDF ரொம்ம நல்லா இருக்கே. ;)))))

//ஏம்பா யாராவது சோடா குடுங்களேன்..தொண்டை வரளுது :-) //

யாரங்கெ ஷ்யாமுக்கு ராவா ஒரு சோடா ( வெறும் சோடா பொதுமா இல்லை அதிலே ஏதாசும் மர்ட்டினி, ஸ்காட்ச் மிக்சிங் ஏதாச்சும்...:))))

said...

//Syam said...
உயிர் மண்ணுக்கு உடல் நமீதாக்கு என்று முழங்கிய நமது தானை தலைவன் விவேக் அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற கடமை பட்டுள்ளோம் :-) //

வாழ்க வாழ்க !!;)))

said...

//ஜொள்ளு பேச்சி said...
படம் சூப்பர்.பக்கத்தில் உள்ள நாயைப் பார்த்தால் உன் ஞாபகம்தான் வருது பாண்டி! //

அட வாங்க ஜொள்ளக்கா ;))))

அந்த நாயா நான் இருந்தா இப்படி இருப்பனா ?? :((( எம்பூட்டு சந்தோசப்பட்டு இருப்பேன் ஹும்ம்..

//நீ ஜொள்ளு விடுவதை விட்டுபுட்டு ஜொள்ளுப் பாண்டி கருத்து பாண்டியாக மாறி விட்டாயா?சரி நீ சொல்லவதும் சரிதான்.//

அதான் நான் சொல்றது சரின்னு ஒத்துகறீங்களே அப்புறம் என்ன? :))


//ஆனால் உங்க நமீதா கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் சிகப்பாக இருகின்றாங்களே!அவங்க கருப்பாகவும் அதே சமயம் இந்த sizeயில் இருந்தால் நீங்க எல்லாம் பார்ப்பீங்களா?உனக்கு கருப்பாக உள்ள பெண்கள் களையாக இருக்கலாம்.ஆனால் முக்கால் வாசி பேர்களுக்கு கொஞ்சம் தோலு வெள்ளையாக இருந்தால்தான் பிடிக்குது.//

என்ன இது அபாண்ட குற்றச்சாட்டு ??

//மவனே நீ மட்டும் யாரவது கொஞ்ச கலரா உள்ள பொண்ணுப் பின்னால் சுத்தினான்னு நான் கேள்விப் பட்டேனா உன் வீடு தேடி வந்து உதைப்பேன்.//

இப்படி வீடுகட்டி மெரட்டுனா எப்படீங்க பேச்சி ?? அதான் நீங்களே சொல்லீட்டீங்களே ! கொஞ்சம் கலரா அப்படீன்னா அது எந்தக்கலருங்க?? ;)))

said...

//NDF ரொம்ம நல்லா இருக்கே//

இதுதாங்க திருட்டு பயலே படத்துல விவேக் ஆரம்பிச்ச கட்சி :-)

நான் எப்ப சோடாவ ராவா குடிச்சி இருக்கேன்..கொஞ்சம் ரம்மோ,பிராந்தியோ மிக்ஸ் பண்ணி டைல்யூட் பண்ணி குடுதீங்கனா நல்லா இருக்கும் :-)

said...

இந்த பதிவு'ல நிங்க ஒரு பெரிய சரித்திரமெ செய்துடிங்க..!!

உங்க ஜொல்லு'லையும் ஒரு கருத்து' இருந்தது...என்னக்கு புல்லரிக்குத்ங்கோ!!!!

சரி நக்க'ல் நிரைய இருக்குதுதான்.. பரவாயில்லை அதை பட்ரி பெச வெண்டாம்..

ஆனால், எங்க பொண்ணுகளும் கொஞ்சம் மோசம் தான்.. நாங்க ரொம்ப அழகு மேல் ஆசை இருக்கொ தான்....

நீ ஏப்படி எங்க'ள பட்ரி பேசலாம்!!!!! இப்போ ஆண்களுக்கும் fair n lovely or do they call it fair and Handsome (thuuu) இருக்கு'னு தெரியாதா?
Actor சுரியா'தான் சன்டிவி'ல வந்து வந்து பொராரே...

ஆண்களுக்கு இதை ஏன் விற்பனை செய்கிரார்கள்?எங்களை (பெண்கள்) பொல் நிங்கள்(ஆண்கள்) 'லும் வாங்குகிரிர் அதனால் தானே?!!

போங்கப்பா... பொய் நிங்க அதை நிருத்துங்கப்பா!! அப்புரம் நாங்க நிருத்துரொம் :D

said...

பாண்டி சைக்கில் கேப்பில் என்னை அக்காவாக ஆக்கி விட்டாயே?பாவி!உன்னை விட சத்தியமாக என்னக்கு வயது ரொம்ப கம்மி ஜொள்ளு அண்ணா!அடப் பாவி.நாய் அளவிற்குக் கேவலமாக போக ஆசையா உனக்கு.அதங்க உங்களுக்கு பிடித்த அந்த சிகப்பு கலரு பொண்ணுங்க!எப்படி அப்புறாணி போல் இப்படி நடிக்கின்றீங்க.இதற்கு பெயர்தான் பசு தோல் போர்த்திய புலி என்பார்களோ?

said...

ஜொள்ளுப்பாண்டி,

நம்ம பயலுக புள்ளைங்க கிட்ட கடலை வறுக்கும் போது நைஸா "அலிபாபா குகை மாதிரியான புதையல்கள் குவிஞ்சு கிடக்கிற அவங்க டம்பப்பையில" இருந்து ஆட்டையா போட்ட ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமை பூசிட்டு அதுவரை பொறம்போக்கா இருந்த அவனோட அளகை சும்மா மேம்போக்கா மேம்படுத்திட்டு இருந்தா, இப்போ அதையும் தாண்டிப்புனிதமா ஆண்களுக்குகாகவே தனி அளகு க்ரீம்மாம்... ப்ராடக்ட் லான்ச்க்கு நம்ம ச்ச்ச்ச்சூர்யாதான் மாடல்...

இந்தக் கிரகம் புடிச்ச 'சிகப்பழகு க்ரீம்" தயாரிப்பு பார்ட்டிங்களால பல்லு வெளக்க பயோரியா பல்பொடி வாங்குறாங்களோ இல்லியோ பேர் அண்ட் லவ்லி வாங்கித் தீர்த்துப்போடுறானுங்க மொதல்ல!

வயசுல நம்ம லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் இந்தக் க்ரீம்ல போடுற காசுல செங்கல்லு வாங்கினா செஞ்சிக்கோட்டையே கட்டலாம் அவங்க புள்ளைங்க விளையாட!

இதுல எதானும் ஒரு பல்லி பிஃகரை உலக அழகி ஃபிகர்னு சொல்லி ஸ்பான்ஸர் பண்ணிட்டா நாட்டுல இருக்க மொத்த 55கோடி பெண்களும் ஓம்..க்ரீம்னு மந்திரிச்சுவிட்ட மாதிரி அழகு க்ரீம்பக்கம் ஓடுறாங்க.

பிகர் குலைஞ்ச ரியல் பாட்டிகள் லோரியல் க்ரீம் பக்கம் சரியறாங்க!


நாலு லேடீஸ் இருக்குற வீட்டில கடைசிப்பையன் படிப்புக்கு இந்தப் பழைய ப்ளாஸ்டிக் எடைக்குப் போட்ட காசுதான் உதவுதாம்! (க்ரீம்ட்யூப்/டப்பா)
சிக்கனமா இருக்காங்களாம்!

என்ன அக்கிரமமான வேஸ்ட் எகானமி!

said...

//Syam said...
//NDF ரொம்ம நல்லா இருக்கே//

இதுதாங்க திருட்டு பயலே படத்துல விவேக் ஆரம்பிச்ச கட்சி :-)

நான் எப்ப சோடாவ ராவா குடிச்சி இருக்கேன்..கொஞ்சம் ரம்மோ,பிராந்தியோ மிக்ஸ் பண்ணி டைல்யூட் பண்ணி குடுதீங்கனா நல்லா இருக்கும் :-) //

அட வாங்க ஷ்யாம் அவ்ளோதானே டைல்யூட் பண்ணீடலாமே ;))))

said...

// சுகன்யா ஷ்ரி said...
இந்த பதிவு'ல நிங்க ஒரு பெரிய சரித்திரமெ செய்துடிங்க..!!
உங்க ஜொல்லு'லையும் ஒரு கருத்து' இருந்தது...என்னக்கு புல்லரிக்குத்ங்கோ!!!!//

அட வாங்க சுகண்யா :)))) அப்பா இப்போவாச்சும் ஒத்துகிட்டிங்கலே நாம் கருத்தோடு ஜொள்ளூவிடுறதை :))))

// எங்க பொண்ணுகளும் கொஞ்சம் மோசம் தான்.. நாங்க ரொம்ப அழகு மேல் ஆசை இருக்கொ தான்.... //

அது .... :)))

//நீ ஏப்படி எங்க'ள பட்ரி பேசலாம்!!!!! இப்போ ஆண்களுக்கும் fair n lovely or do they call it fair and Handsome (thuuu) இருக்கு'னு தெரியாதா?
Actor சுரியா'தான் சன்டிவி'ல வந்து வந்து பொராரே... //

இப்படி சொன்னா எப்படீங்க :(( இப்படியெல்லாம் துப்பினா அப்புறம் நான் அழுதுடுவேன் :)))

//போங்கப்பா... பொய் நிங்க அதை நிருத்துங்கப்பா!! அப்புரம் நாங்க நிருத்துரொம் :D //

அட அது நேத்து வந்ததுங்க. ஆனா உங்களுக்கு பல decades ஆ இருக்கே :))

சுகண்யா மெய்யாலுமே உங்களுக்கு தமிழ் கத்துக்கொடுக்க வேணாமா ?? ப்ளீஸ்ங்க !!!

said...

//ஜொள்ளு பேச்சி said...
பாண்டி சைக்கில் கேப்பில் என்னை அக்காவாக ஆக்கி விட்டாயே?பாவி!உன்னை விட சத்தியமாக என்னக்கு வயது ரொம்ப கம்மி ஜொள்ளு அண்ணா!அதங்க உங்களுக்கு பிடித்த அந்த சிகப்பு கலரு பொண்ணுங்க!எப்படி அப்புறாணி போல் இப்படி நடிக்கின்றீங்க.இதற்கு பெயர்தான் பசு தோல் போர்த்திய புலி என்பார்களோ? //

வாங்க பேச்சி:))) உங்களுக்கு என்ன ப்ராப்ளம்ங்க இப்போ ? உங்களை அக்கான்னு கூப்பிட்டதா இல்லை நான் அப்புறாணி போல நடிப்பதாக நிங்க சந்தேகப்படுவதா? நான் ரொம்ப ரொம்ப அப்புறாணிதாங்க அம்மணி :)))

said...

//Hariharan # 26491540 said...
ஜொள்ளுப்பாண்டி,

நம்ம பயலுக புள்ளைங்க கிட்ட கடலை வறுக்கும் போது நைஸா "அலிபாபா குகை மாதிரியான புதையல்கள் குவிஞ்சு கிடக்கிற அவங்க டம்பப்பையில" இருந்து ஆட்டையா போட்ட ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமை பூசிட்டு அதுவரை பொறம்போக்கா இருந்த அவனோட அளகை சும்மா மேம்போக்கா மேம்படுத்திட்டு இருந்தா, இப்போ அதையும் தாண்டிப்புனிதமா ஆண்களுக்குகாகவே தனி அளகு க்ரீம்மாம்... ப்ராடக்ட் லான்ச்க்கு நம்ம ச்ச்ச்ச்சூர்யாதான் மாடல்... //

வாங்க ஹரிஹரன் :)) ஆமாங்க அந்தகொடுமை வேற :))

//இந்தக் கிரகம் புடிச்ச 'சிகப்பழகு க்ரீம்" தயாரிப்பு பார்ட்டிங்களால பல்லு வெளக்க பயோரியா பல்பொடி வாங்குறாங்களோ இல்லியோ பேர் அண்ட் லவ்லி வாங்கித் தீர்த்துப்போடுறானுங்க மொதல்ல! //

ஆஹா மகாக்கோபத்திலே இருப்பீக போல :)))

//வயசுல நம்ம லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் இந்தக் க்ரீம்ல போடுற காசுல செங்கல்லு வாங்கினா செஞ்சிக்கோட்டையே கட்டலாம் அவங்க புள்ளைங்க விளையாட!//

:)))))))))))))))))))

//இதுல எதானும் ஒரு பல்லி பிஃகரை உலக அழகி ஃபிகர்னு சொல்லி ஸ்பான்ஸர் பண்ணிட்டா நாட்டுல இருக்க மொத்த 55கோடி பெண்களும் ஓம்..க்ரீம்னு மந்திரிச்சுவிட்ட மாதிரி அழகு க்ரீம்பக்கம் ஓடுறாங்க. //

அண்ணே பல்லி பிஃகரா??? ஆஹா தய்க்குலங்களெல்லாம் அப்புறம் நம்மளை காவடி துக்க வச்சுருவாகளே :)))

said...

என்ன 36 தானா?
இதோ 37வது பின்னூட்டம்.

said...

//ஏங்க இவங்க விக்கறதே சிகப்பழகு கீர்ம்னு சொல்லித்தான். சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா! ஏதோ கதக்களி டான்ஸ் ஆட மேக்கப் போட்ட மாதிரி இருக்காது ?//

அண்ணே ...

கலக்கிட்டிங்க போங்க.. :-)))

said...

பாண்டி,
நமிதாவை எதிர்த்து போராட்டம் பண்ணா publicity கிடைக்கும் fair & lovely கம்பெனியை எதிர்த்து போராட்டம் பண்ணா ஆட்டோ இல்ல வரும்.

said...

// நாமக்கல் சிபி @15516963 said...
என்ன 36 தானா?
இதோ 37வது பின்னூட்டம். //

வாங்க சிபி :)) இப்படியெல்லாம் ஆதரவு கொடுக்கரதைப் பார்த்து ஆனந்தகண்ணீர் முட்டிகிட்டு வருதுங்க ;))))

said...

//ராம் said...
//ஏங்க இவங்க விக்கறதே சிகப்பழகு கீர்ம்னு சொல்லித்தான். சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா! ஏதோ கதக்களி டான்ஸ் ஆட மேக்கப் போட்ட மாதிரி இருக்காது ?//

அண்ணே ...

கலக்கிட்டிங்க போங்க.. :-))) //

வாங்க ராம் :))

நல்லவேளி என்ன ஆகுமோன்னு வயிறு கலங்கி இருந்தேன் :))))

said...

//சந்தோஷ் said...
பாண்டி,
நமிதாவை எதிர்த்து போராட்டம் பண்ணா publicity கிடைக்கும் fair & lovely கம்பெனியை எதிர்த்து போராட்டம் பண்ணா ஆட்டோ இல்ல வரும். //

அட வாங்க சந்தோசண்ணா என்ன ரொம்ப நாளைக்கு காணோம் ??

ஆட்டோவெல்லாம் பார்த்தா நாமெல்லாம் அரசியல் பண்ணமுடியுமா சொல்லுங்க. ;)))))

said...

Hi jollz,
long time no see!good posting.So you are suggesting that being dark is lovely.Good one!But how about pimples,wrinkles and so on.Please do a posting regarding this matter also.Have a nice day!

said...

//சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா!//

என்னை மாதிரி அழகா இருக்குமா?

said...

//t.h.u.r.g.a.h said...
Hi jollz,
long time no see!good posting.So you are suggesting that being dark is lovely.Good one!But how about pimples,wrinkles and so on.Please do a posting regarding this matter also.Have a nice day! //

வாங்க துர்கா:))

எங்க ரொம்ப நாளா பேட்டை பக்கம் ஒதுகவே இல்லை ?? எழுதினா போச்சு கவலைய விடுங்க :))

said...

// ஆவி அம்மணி said...
//சிவப்பா மொளகாப்பழம்தான் இருக்கும் அந்தக் கலரில் ஒரு முகம் இருந்தா எப்படி இருக்கும் ரோசணை பண்ணுங்க அம்மணிகளா!//

என்னை மாதிரி அழகா இருக்குமா? //

வாங்க ஆவி அம்மணி பார்த்தீங்களா இப்படியெல்லாம் கேட்டுடு சிரிச்சா என்ன அர்த்தம் ? :))

said...

jollupaettai apdingara blog pera mathi..namithapaettainu mathikongappu...

ippodhellam aangalukku sivapazhagu creamnu solli edho vandhudiche...edhanala adhu ....ellam namitha kooda nadikaradhukagava..

said...

//one among u said...
jollupaettai apdingara blog pera mathi..namithapaettainu mathikongappu...//

வாங்க எங்களில் ஒருதரே ;))
இது நமீதாபேட்டை இல்லீங்க . நமீதாவோட என் ஜொள்ளு சின்ன வட்டத்துக்குள்ள நிக்காது :)))

//ippodhellam aangalukku sivapazhagu creamnu solli edho vandhudiche...edhanala adhu ....ellam namitha kooda nadikaradhukagava.. //

ஹெஹே அது சும்மனாசிக்கி ஜுஜுபிங்க கண்டுகிடாதீங்க :))

said...

jollu vidalam athukaka epdia!!!!!!naaangellam namithavoda veriargal V HATE NAMITHA.SO OLUNGA NAMITHMELA JOOLU VIDRATHA STOP PANNIKUNGA.OKKKKKKKKKK