Tuesday, November 14, 2006

தீராத வெளையாட்டு பிள்ளை
வெளையாட்டு புள்ளே !
எனக்கும் இந்த விளையாட்டுக்கும் என்னிக்குமே ஏழாம் பொருத்தம் தாங்க.ஆனா மனசு நெறையா வெளையாடனும் கோப்பைய வாங்கனும் வாங்குறபோ அமுதா டீச்சர் பொண்ணு என்னைய ஆச்சரியமா பார்க்கனுன்னு பல கனவுகளை சுமந்துகிட்டு அலைஞ்சேன். சரி எந்த வெளையாட்டு நமக்கு பொருத்தமா இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணுறப்போ ‘அல்லாதுக்கு பிட்னெஸ் தான் மாப்ளே தேவை! மொதல ஓட்டப்பந்தயத்திலே நம்ம கணக்கை ஆரம்பிப்போன்னு! ‘ நம்ம தோஸ்த் ஜார்ஜ் சொன்னதை ‘ நம்பி ’ ஓடரதுக்கு வாத்தியார்கிடே பேரைகொடுத்திட்டேன். அன்னிக்கு பிடிச்சது சனி. ஓடரதுக்கு பயிற்சின்னு சொல்லி வர சொன்னாரு வெளையாட்டு வத்தியார்னு சந்தோசமா போனோம். ஆரம்பத்திலே ground டை சுத்தி ஓடி வரணும். எங்க ஸ்கூல் ground டா சும்மா ஏக்கரா கணக்கா கெடக்கு. மொதோ ரெண்டு ரவுண்டு என்னமோ சந்தோசமாதேன் ஓடுனேன். சரி நிறுத்த சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சு ஓட சொல்லுவாங்கன்னு பார்த்தா ரெண்டு வாத்திக ஆளுக்கொரு மூலையிலே குச்சியோட நின்னுகிட்டு ஓடுங்கடா ஒடுங்கடான்னு வெரட்டிகிட்டு இருக்கனுவ.

எவனாவது கொஞ்சம் ஸ்லோவா ஓடுர மாதிரி இருந்தா பின்னாடி ரெண்டு இழுப்பு வேற . எனக்கா நாக்கு தள்ளுது,நம்ம பய ஜார்ஜ் என்னடான்னா சும்மா பெட்ரோலைக் குடிச்சுபுட்டு பின்னாடி பத்த வச்ச மாதிரி ‘பேய்’ கணக்கா ஓடிகிட்டு இருக்கான். அடப்பாவி மக்கா இப்படி கொண்டாந்து மாட்டிவிட்டுட்டியேடா நாயேன்னு நெனச்சுகிட்டு விதியேன்னு நானும் கொஞ்சம் சமாளிச்சு ஓடி ஓடி அப்படியே க்ரெண்டை விட்டு ஓடி வந்தவன்தான். இனி ground டு பக்கம் தல வெக்கிறதில்லைன்னு கொள்கை பிடிப்போட சுத்திகிட்டு இருந்தேன். இருந்தாலும் இந்த வெளையாட்டு தாகம் அடிமனசிலே warming up பண்ணிகிட்டே இருந்துச்சு.

சரி நாம தான் வெளையாடரது இல்லை அட்லீஸ்ட் எப்படி வெளையாடறாங்கன்னு பார்க்கவாச்சும் செய்யலாம்னு அப்படியாக்கா டிவி ய திருப்புனா ஆஹா வாலிபாலு பேஸ்கட் பால். டென்னிஸ் , சட்டில் கார்க்குன்னு போட்டு தாக்கியெடுக்குராக, அதுலயும் இந்த அம்மணிகள் ஆடுர ஆட்டம் இருக்கே ( நான் வெளையாட்ட தாங்க சொல்றேங்கோ ) அதையப் பார்க்குறதுக்கு கே கொள்ளே ன்னு திருவிழாக்கூட்டம் தான் போங்க. இந்த பொண்ணுங்க ஆடுற டென்னிஸ் இருக்கே அதுக்கு Refree யா இருக்குரதுக்கு ரொம்ப அபார திறமையும் நெசமாலுமே சாமியார்த்தனமும் நெறையா வேணுங்க. என்னா கஷ்டம்! என்னா கஷ்டம் ! இவங்க வெளையாடி எதிராளி சர்வீஸை ப்ரேக் பண்றாங்களோ இல்லையோ பாக்குற நம்ம மனசை போட்டுருக்குற ட்ரெஸ்ஸால கண்டிப்பா ப்ரேக் பண்ணிடுவாங்க. கொஞ்ச காலத்துக்கு மிந்தி இந்த டென்னிஸ் வெளையாடுற அம்மணிக எல்லாம் மொழங்காலுக்கு ஒரு ரெணு இஞ்ச் மேலே வரை ஸ்கர்ட்டு போட்டுகிட்டு வெளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே அது இஞ்ச் பை இஞ்சா உசந்து போயி இப்போ இடுப்புக்கு ரெண்டு இஞ்சுக்கு கீழே வரை ட்ரெஸ் போட்டா போதும்னு ஆகிபோச்சு. இப்படியெல்லாம் பண்ணுனா அப்புறம் எப்படீங்க ஆட்டத்தை கவனிக்கிறது ?

என்னாடா இது பாண்டிக்கு வந்த சோதனைன்னு அப்படியேக்கா கவனைத்தை டென்னிஸ்ல இருந்து வாலிபால் பக்கம் திருப்புனா ஆஹா பீச் வாலிபால்னு போட்டு தாக்கி யெடுக்குராங்க. Ball ஐ இல்லீங்கோ நம்ம மனசைதான். நீச்சல் உடையிலே நீச்சல் தான் அடிக்கனும்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன ? இவுக அப்படியே பீச்சோரம் காத்தோட்டமா வெளையாடிகிட்டும் இருக்காக. ஆம்பிளைங்க எல்லாம் ஒரு பத்து இருவது வருசமா இன்னும் அதே மாதிரி தானே ப்ரெஸ் போட்டுகிட்டு ஆடிகிட்டு இருக்காங்க, இந்த பொண்ணுகளுக்கு மட்டும் எப்படீங்க சும்மா நாளொரு மேனியும் பொழுதொரு ‘ மினி ’ யுமா ஆகிகிட்டு இருக்கு அவுக டெரெஸ்ஸு ?? வெளையாடி வெளையாடி இவுக உடம்பு இளைக்குதோ இல்லையோ இவுங்களை பார்த்து பார்த்து பலபேரு உடம்பு இளைகாம இருந்த சரிதான் .ம்ம்ம் ஆனாலும் வெளையாட்டை விட ரசிக்கிரதுக்கு பலது இருக்குங்க வெளையாட்டுலே !!!

இப்போல்லாம் எங்கம்மா “ இவனுக்கு வெளையாட்டுன்னா உசுரு ! டென்னிஸ் மேட்சுன்னா டிவி வுட்டு நகர மாட்டீங்கரான்ன்னு !! “ பெருமை பொங்க பக்கத்து வூட்டுகாரங்க கிட்டே சொல்லிகிட்டு இருக்கரதை கேட்கறப்போ எனக்கு ஆனந்தக்கண்ணீரா வருதுங்க !!

31 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//“ இவனுக்கு வெளையாட்டுன்னா உசுரு ! டென்னிஸ் மேட்சுன்னா டிவி வுட்டு நகர மாட்டீங்கரான்ன்னு !! “ பெருமை பொங்க பக்கத்து வூட்டுகாரங்க கிட்டே சொல்லிகிட்டு இருக்கரதை கேட்கறப்போ எனக்கு ஆனந்தக்கண்ணீரா வருதுங்க !!//

:)))))
ஆஹா! என்ன ஒரு ஆனந்தம்.

said...

(ஆசை)தீராத விளையாட்டுப்பிள்ளை. இன்னும் சின்ன புள்ளத்தனமாதான் இருக்கனுமா? வேற விளையாட்டப் பார்க்கக் கூடாதா? அதாம்பா கிரிக்(கெட்டு)

said...

அந்தப் படத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?

டென்னிஸ் கோர்ட்தானே அது ?
எது என்று பதில் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது :-)

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
:)))))
ஆஹா! என்ன ஒரு ஆனந்தம். //

வாங்க சிபியண்ணே ;)))

என்னாங்க பண்றது அம்மாவுக்கு இப்படியெல்லாம் நான் பெருமை தேடி தர வேண்டி இருக்கே ;)))

said...

// ILA(a)இளா said...
(ஆசை)தீராத விளையாட்டுப்பிள்ளை. இன்னும் சின்ன புள்ளத்தனமாதான் இருக்கனுமா? வேற விளையாட்டப் பார்க்கக் கூடாதா? அதாம்பா கிரிக்(கெட்டு) //

பொண்ணுங்க கிரிக்கிட் தானே! தாராளமா பார்க்கலாமே!
:))))))))

said...

//ILA(a)இளா said...
(ஆசை)தீராத விளையாட்டுப்பிள்ளை. இன்னும் சின்ன புள்ளத்தனமாதான் இருக்கனுமா? வேற விளையாட்டப் பார்க்கக் கூடாதா? அதாம்பா கிரிக்(கெட்டு) //

அட வாங்க வெவசாயி :))
ரெண்டே ரெண்டு பேரு மட்டும் நகர்ந்துகிட்டு இருக்குறதை மத்த 10பேரு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்குற அதுவும் வெறும் சேவல் பண்ணையா இருக்குற வெளையாட்டை நாள் முச்சூடும் எப்படீங்க உக்கார்து பார்க்குரது ?? :((( ஏதாசும் ஒரு கவர்ச்சி வேணுமில்லே மந்த்ரா பேடி மாதிரி ;))))

said...

//Anonymous said...
அந்தப் படத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?

டென்னிஸ் கோர்ட்தானே அது ?
எது என்று பதில் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது :-)//

வாங்க அனானி :))
என்ன இப்படி கேட்டுடீங்க? ஷரபோவா மனசிலேதான் இருப்பேன் :))))

said...

// வேந்தன் said...
// ILA(a)இளா said...
(ஆசை)தீராத விளையாட்டுப்பிள்ளை. இன்னும் சின்ன புள்ளத்தனமாதான் இருக்கனுமா? வேற விளையாட்டப் பார்க்கக் கூடாதா? அதாம்பா கிரிக்(கெட்டு) //

பொண்ணுங்க கிரிக்கிட் தானே! தாராளமா பார்க்கலாமே!//

வாங்க வேந்தன் வாங்க ம்ஹூம் கிரிகெட் எல்லாம் டென்னிஸ் முன்னாடி ம்ஹூம் :)))

said...

//டென்னிஸ் வெளையாடுற அம்மணிக எல்லாம் மொழங்காலுக்கு ஒரு ரெணு இஞ்ச் மேலே வரை ஸ்கர்ட்டு போட்டுகிட்டு வெளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே அது இஞ்ச் பை இஞ்சா உசந்து போயி இப்போ இடுப்புக்கு ரெண்டு இஞ்சுக்கு கீழே வரை ட்ரெஸ் போட்டா போதும்னு ஆகிபோச்சு.//

:))))))))))) எல்லாம் நன்மைக்கே !!!

said...

பாண்டி நீ MTV க்கு அப்புறம் ஏன் sports channel முன்னுக்கு உட்கார்ந்துகிட்டு இருந்தேன்னு இப்போதான் புரியுது.எனக்கும் sports னா ரொம்ப புடிக்கும்.எனக்கு புடிச்ச விளையாட்டு body building,நீச்சல் மற்றும் weight lifting.ஏன் எனக்குப் பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியாதா என்ன?

said...

ஜொள்ளு,
இந்த முறை அமெரிக்க ஓப்பன் போயிருந்தேன்... ஷரப்போவா என்னமா இருக்கா...

எப்படியும் அடுத்த முறையும் போகனும் ;)

said...

நல்ல விளையாட்டு ரசனை....

said...

இதைப் படிகின்ற பொழுது எனக்கு இரத்தக் கண்ணீர் வருகின்றது Jollz.எப்படி உங்களுக்கு எல்லாம் இப்படி யோசிக்க முடியுது?

said...

//ஜொள்ளுப் பேச்சி said...
பாண்டி நீ MTV க்கு அப்புறம் ஏன் sports channel முன்னுக்கு உட்கார்ந்துகிட்டு இருந்தேன்னு இப்போதான் புரியுது.எனக்கும் sports னா ரொம்ப புடிக்கும்.எனக்கு புடிச்ச விளையாட்டு body building,நீச்சல் மற்றும் weight lifting.ஏன் எனக்குப் பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியாதா என்ன? //

வாங்க பேச்சி :)))

அட அட இதுலயும் போட்டியா. ரசிங்களேன் யாரு வேணாங்கரது. அப்பயேக்கா நம்மளையும் கூட்டிகிட்டு போறது ??;))))

said...

//வெட்டிப்பயல் said...
ஜொள்ளு,
இந்த முறை அமெரிக்க ஓப்பன் போயிருந்தேன்... ஷரப்போவா என்னமா இருக்கா...

எப்படியும் அடுத்த முறையும் போகனும் ;) //

வாங்க வெட்டிப்பயல் :))))
ஷரபோவா தரிசனம் கெடச்சுதா ?? இப்படியெல்லாம் சொல்லி வெறுபேத்துனா எப்படி ??
:(((

said...

//Divya said...
நல்ல விளையாட்டு ரசனை.... //

வாங்க திவ்யா :))

ரசிக்கிறது மட்டுமே நமக்குச்சொந்தம்னு யாரோ சொல்லியிருக்காங்க தெரியுமா ?? :)))

said...

//துர்கா said...
இதைப் படிகின்ற பொழுது எனக்கு இரத்தக் கண்ணீர் வருகின்றது Jollz.எப்படி உங்களுக்கு எல்லாம் இப்படி யோசிக்க முடியுது? //

வாங்க துர்கா :))
என்னாங்க ரத்தக்கண்ணீர் வருதுன்னு சொல்லீட்டீங்க ?? :(( இதெல்லாம் யோசிச்சு வர்றது இல்லீங்க. அப்ப்டியேக்கா ரத்ததிலேயே வர்றதுங்கோ ;))))))

said...

பாண்டி ஆனாலும் உனக்கு ரொம்ப நெக்கலுதான் போ !!! ;)))

said...

//அப்பயேக்கா நம்மளையும் கூட்டிகிட்டு போறது ??;)))) //
sorry.no guys are allowed!

said...

//வாங்க துர்கா :))
என்னாங்க ரத்தக்கண்ணீர் வருதுன்னு சொல்லீட்டீங்க ?? :(( இதெல்லாம் யோசிச்சு வர்றது இல்லீங்க. அப்ப்டியேக்கா ரத்ததிலேயே வர்றதுங்கோ ;)))))) //
உங்கள் ரத்ததில் ஜொள்ளுக் கூட வருமா jollz?

said...

//Deena said...
பாண்டி ஆனாலும் உனக்கு ரொம்ப நெக்கலுதான் போ !!! ;))) //

வாங்கண்ணா தினா :))

நெக்கலுலதான்ண்ணே நான் வாழ்ந்துகிட்டு இருகேன் ;))))

said...

// ஜொள்ளுப் பேச்சி said...
//அப்பயேக்கா நம்மளையும் கூட்டிகிட்டு போறது ??;)))) //
sorry.no guys are allowed! //

வாம்மா ஜொள்ளுபேச்சி :))
உங்களையும் கூட்டிகிட்டு போகலாம் தான் அப்புறம் உங்களை காபந்து பண்ணவே எனக்கு நேரம் சரியா இருக்குமே :(( என் கடமைய செய்ய முடியாதே ;)))

said...

//துர்கா said...
//வாங்க துர்கா :))
என்னாங்க ரத்தக்கண்ணீர் வருதுன்னு சொல்லீட்டீங்க ?? :(( இதெல்லாம் யோசிச்சு வர்றது இல்லீங்க. அப்ப்டியேக்கா ரத்ததிலேயே வர்றதுங்கோ ;)))))) //
உங்கள் ரத்ததில் ஜொள்ளுக் கூட வருமா jollz? //

வாங்க துர்கா ;))
என்ன இப்படி கேட்டுட்டீங்க ?? உடம்பிலே ஓடுறது சுத்தமான அக்மார்க் ஜொள்ளுரத்தம் தானுங்கோ ;)))) வேணுமா?

said...

எத்தனை பேரய்யா கிளம்பி இருக்கிறீகள் இதே படத்தை போட்டு ஜொள்ள ??
தமிழ் வலைப்பூ உலகில் முதன்முதலாக நாந்தான் இந்த படத்துக்கு ஜொள்ளினேன்.
சீனியர நானாக்கும்

said...

என்னா நைனா... ஜொள்ளு பாண்டி...
என்னா நைனா... ஜொள்ளு பாண்டி...
இம்மாம் வெளயாட்டு புள்ளய கீறியே..
வெளயாட்டுல உனக்கு கீற இன்ட்ரஸ்ட் பாத்து நம்மளுக்கு புல்லரிக்கிதுப்பா..

said...

//சின்னவன் said...
எத்தனை பேரய்யா கிளம்பி இருக்கிறீகள் இதே படத்தை போட்டு ஜொள்ள ??
தமிழ் வலைப்பூ உலகில் முதன்முதலாக நாந்தான் இந்த படத்துக்கு ஜொள்ளினேன்.
சீனியர நானாக்கும் //

அண்ணா சின்னவரே வாங்க வாங்க :))

இதுலே என்னங்கண்ணா உரிமைப்பிரச்சனையெல்லாம் எழுப்பிகிட்டு ??? ஏதோ சின்னப்பையன் நான் !! சப்ஜெட்டுக்கு ஏத்த படத்தை தேடுனப்போ கெடச்சுதுன்னு போட்டேன். மத்தபடி யேதும் இல்லங்கண்ணா ;)))
கோச்சிக்காதீங்க சரியா :)))

said...

ஆத்தா ஷரபோவா
ஆடி மனச அள்ளுற
நெஞ்சுக்குள்ள துள்ளுற..

ஏலே ஜொள்ளு பாண்டி
ஏன்யா ஜொள்ளுற..

விளையாட்ட விளையாட்டுக்கா வேண்டி பாருலெ...

said...

//அரை பிளேடு said...
என்னா நைனா... ஜொள்ளு பாண்டி...
என்னா நைனா... ஜொள்ளு பாண்டி...
இம்மாம் வெளயாட்டு புள்ளய கீறியே..
வெளயாட்டுல உனக்கு கீற இன்ட்ரஸ்ட் பாத்து நம்மளுக்கு புல்லரிக்கிதுப்பா..//

வாங்கண்னா அரைப்ளேடு ;))
பேரே கலக்குதே !!! நானும் வெளையாட்டுப் புள்ளாண்டாந்தேன். வந்து நம்ம பக்கம் குந்திகோங்க. ஆனா சீப்பை மறந்துடாதீங்கோ. புல்லரிச்சா வசதியா இருக்குமில்லே ;)))))

said...

//அரை பிளேடு said...
ஆத்தா ஷரபோவா
ஆடி மனச அள்ளுற
நெஞ்சுக்குள்ள துள்ளுற..
ஏலே ஜொள்ளு பாண்டி
ஏன்யா ஜொள்ளுற..//

என்னா அரைப்ளேடு
அதான ஆத்தா ஷரபோவா ஆடி ஆடி மனச அள்ளூதுன்னு சொல்லிபிட்டு ஏன்யா ஜொள்ளுரேன்னு என்னா கேள்வியிது ??

//விளையாட்ட விளையாட்டுக்கா வேண்டி பாருலெ... //

விளையாட்ட விளையாட்டுகாதேன் பார்க்குறேன் ப்ளேடு தெரியலை ?? ;)))))

said...

//செங்குருவி said...
//டென்னிஸ் வெளையாடுற அம்மணிக எல்லாம் மொழங்காலுக்கு ஒரு ரெணு இஞ்ச் மேலே வரை ஸ்கர்ட்டு போட்டுகிட்டு வெளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே அது இஞ்ச் பை இஞ்சா உசந்து போயி இப்போ இடுப்புக்கு ரெண்டு இஞ்சுக்கு கீழே வரை ட்ரெஸ் போட்டா போதும்னு ஆகிபோச்சு.//

:))))))))))) எல்லாம் நன்மைக்கே !!! //

வாங்க செங்குருவி ;)))
நன்மைக்குதான் எல்லாமே ;)) ஆன யாருங்க மண்டை காயுரது ரோசணி பண்ணுங்க :)))

said...

//உங்களையும் கூட்டிகிட்டு போகலாம் தான் அப்புறம் உங்களை காபந்து பண்ணவே எனக்கு நேரம் சரியா இருக்குமே :(( என் கடமைய செய்ய முடியாதே ;))) //
இது நான் சொல்ல வேண்டிய டயாலாக்.உன்னை மாதிரி எல்லாம் நான் இல்லை.I am always under control!