Wednesday, December 06, 2006

பஸ்ஸில டவுன் பஸ்ஸில ...

டவுன் பஸ்ஸிலே


இந்த டவுன் பஸ் இல்லை டவுன் பஸ் அதிலே போயிருக்கீங்களா அப்பூ ? போகாம என்ன? அல்லாரும் போய் இருப்பீங்க. அதுவும் இந்த சென்னைக்குள்ள ஓடுற டவுன்பஸ் ஒரே கலக்கல் தான் போங்க. ஆனா பஸ்சிலே உட்கார்துகிட்டு போனா சொகமே இல்லைங்க. நிக்கனும்! நல்லா நடுவால நிக்கனும்! அப்போதான் பஸ்ஸுக்குள்ள உக்கார்ந்து இருக்குறது நின்னுகிட்டு இருக்குறது அப்புறம் பஸ் ஸ்டாபிலே ஏறுரதுக்கு காத்துகிட்டு இருக்குறதுன்னு பார்குறதுக்கு ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கு !! எதைய பார்க்குறதுன்னு கேட்குறீயளா ?? என்னா இது கப்பித்தனமா இருக்கு ? நான் வேற எதைய பார்க்கப்போறேன் ? ஹிஹிஹி . பஸ்சிலே உட்கார்துட்டா உங்களுக்கு வெறும் 60 டிகிரி ஆங்கிள்லதான் தலைய திருப்பி பார்க்க முடியும். ஆனா பஸ்ஸுக்குளார நின்னா 360 டிகிரியிலயும் யாரும் நம்ம கண்ணுல இருந்து தப்பிக்க முடியாது. எப்படி ஐடியா ?? இப்படியெல்லாம் ரொம்ப கஷ்டப்படு கண்டுபிடிச்ச டெக்னலஜிய உங்ககிட்டே சொல்லிட்டேன் பாருங்க ரொமப நல்ல பையன் நான் !! ( இப்படி நானே சொல்லிகிட்டாதான் உண்டு !! கண்டுகிடாதீங்க !! )

சென்னையிலே பஸ்சிலே வழக்கமா நாம போற மாதிரி இருந்தா எங்க போறோம்கறது முக்கியமில்லைங்க. ஆனா எந்த ரூட்டுல போறோம்கறது ரொம்ப முக்கியம். ஒரு உதாரணதுக்கு சொல்லனும்னா நான் பாச்சிலர்ஸ் பாரடைஸ் திருவல்லிக்கேனியிலே இருந்து அண்ணா நகர் போகணும்னா ரெண்டு மூணு ரூட்டிலே போலாம். அப்படிதான் பாருங்க போன புதுசிலே நமக்கு இதெல்லாம் தெரியாம 27B ல அண்ணாநகர் போகுமின்னு பஸ்ஸடாப்பிலே நிக்கிற ஒரு ரசனையில்லாதவரு சொல்லி அதிலே போக ஆரம்பிச்சேன். அப்பாடி அந்த பஸ்ஸிலே மீன் கூடை கருவாட்டுக்கூடை காய்கறிக்கூடைகளுக்கு மத்தியிலே அண்ணாநகர் போய் சேரதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். அப்போதான் ஆபத்பாந்தவன் போல என் மேன்சன் மேட் அருண் வந்தாரு என்னா பாண்டி ஜோலிய முடிச்சுட்டு வர்றப்போ எல்லாம் சப்பிபோட்ட கொட்டை மாதிரி வர்றே என்னா வேலை ஜாஸ்தியா ? ரொம்ப அக்கரை என்மேல அவருக்கு . வேலையினால இல்லீங்கண்னா எல்லாம் இந்த பஸ்ஸுதான்ன்னு சொல்லவும் அவருதான் நம்ம போதிமரமா இருந்து என்னொட பஸ்ஸு ரூட்டை மாத்தினாரு. “ இனிமே 27L இல்லாட்டி 27H லே போங்க . இதுவும் அண்ணா நகர்தான் போகுது. ஆனா என்ன விசேசம்னா இது போற ரூட்டிலே மூணு லேடீஸ் காலேஜ் இருக்கு “

அடுத்த நாளில இருந்து அதிலே போக ஆரம்பிச்சா ஆஹா என்னா ஒரு Golden ரூட்டை இவ்ளோ நாளும் மிஸ் பண்ணீட்டேனே ! அப்புறம் தெனமும் என்னைய சுத்தி ‘ பட்டாப் பூச்சிகள் தான் !! அப்புறம் பல fair & lovely களும் dark & lovely களும் நம்மகூட பஸ்ஸிலே !! செல சமயம் கூச்சமா வேற இருக்கும். எங்கயாச்சும் பூக்கடைய பார்த்துகிட்டு திரிஞ்சவனுக்கு பூக்கூடைக்குள்ளேயே அடைச்சு வச்ச மாதிரி என்ன ஒரு ஜாலி. தப்பா நெனச்சுகிடாதீங்க ஒன்லி சைட்டிங்ஸ் ஆப் இண்டியாதான். No உரசல்ஸ் No டச்சிங்ஸ் . அது ரொம்ப முக்கியம். ஏதாச்சு தெரியாத்தனமா ராசாபாசமான அவ்ளோதான் அப்புறம் பஸ்ஸிலே இருக்குற எல்லாரும் ஜாக்கிசானா மாறி உங்களை பிரிச்சு மேஞ்சுருவாங்கப்பூ.. சைட் அடிக்கிறதோட மட்டும் நிறுதிக்குங்க!! இதிலே வேற மூணுமே காலேஜுமே ‘ பல்ஸை ’ எகிர வைக்கிர பல மாடல்களை உருவாக்கிய கருவறைகளா இருந்துச்சுன்னா பார்துக்குங்க கேட்கவா வேணும் ? ஹூம்..

இப்படியாகா போய்கிட்டு இருந்தப்போதான் நம்ம அப்பாரு பாவம் பையன் பஸ்சிலே நொந்து நூடுஸ்ஸாகி போய்கிட்டு இருகானேன்னு தப்பா நெனசுகிட்டு ஊருல இருக்குற என்னோட பைக்கை பார்சல் பண்ணிவிட்டாரு. பைக்கிலே போறது சந்தோசமா இருந்தாலும் பஸ்ஸிலே கூட வர்ற மூணு காலேஜ் பொண்ணுகளை மிஸ் பண்ணுறமேன்னு ஏற்ட்ட துக்கம் தான் ஜாஸ்தி போங்க. என்ன பண்றது? வாழ்க்கையிலே சுக பயணத்துக்காக சக பயணிகளையே இழக்கற வலி இருக்கே !!! ஹும்ம்ம்.

போன வாரம் நம்ம சகா ஒருத்தன் மாப்ளே உன் வண்டிய இன்னிக்கு கொடேன் ஒரு சோலி இருக்குன்னு வழிஞ்சுகிட்டே கேட்டான் சரி சரி அவனுக்கு பில்லியனிலே ஒக்கரதுக்கு ஏதோ சிக்கிடுச்சு போலன்னு பெரிய மனசு பண்ணி தாராளமா எடுத்துகிட்டு போய்க்கோடா அப்படியே என்னிய ஏதாச்சும் பஸ் ஸ்டாப்பிலே இறக்கி விட்டுடுன்னு சொல்லி இறங்கிகிட்டேன். நமக்குதான் பஸ்ஸிலே போறதே ஒரு சொகமாச்சே. ரொம்ப நாள் வேற ஆச்சு பஸ்சிலே போய். ஒரு மீடியம் கும்பலோட ஒரு பஸ்ஸூ வந்துச்சு ஏறிட்டேன்.

வழக்கம் போல உக்கார இடம் இல்லை. ஹையா ஜாலின்னு அப்படியேகா நம்ம ரேடாரை சுத்தினா வாவ் சூப்பரான சிக்னல்!! ஒரு ரெண்டு சீட்டுக்கு முன்னாடி. பஸ்ஸிலே கம்பிய பிடிச்சுகிட்டு ஒரு பட்டாம் பூச்சி. சரி இனி நம்ம ஸ்டாப்பிங்க வர்ற வரைக்கும் பொழுது போய்டும்கற நிம்மதியிலே ஆரம்பிச்சேன் . ( என்னோட பயணத்தைதாங்க ) இப்படி பார்குறப்போ பஸ்ஸுக்குள்ளார இருக்குர floating population கொஞ்சம் உங்க பொருமைய சோதிப்பாங்க. இதிலே அதுக கூட ஆராச்சும் bodyguard வந்திருந்தா சும்மா ப்ரைம்மினிஸ்டர் செக்யூரிட்டி ரேஞ்சுக்கு அப்படியேக்கா கவர் பண்றது பீலா உடுறதுன்னு சும்மா சீனைக்கொடுத்துகிட்டு இருப்பானுங்க. அதையெல்லாம் கண்டுகிடவே கூடாது. நாமென்ன வாழ்க்கை பயணதிலயா போகப்போறோம்?

இங்கனயும் அப்படித்தான் போலங்க. என்னோட சிக்னல் அடிக்கடி கட்டாச்சு. ஆருடான்னு பார்த்தா ஏவனோ ஒருத்தன் என்னோட சிக்னல் வழியிலே பட்டாம்பூச்சிய மறைச்சுகிட்டு என்னைய மொறைச்சுகிட்டு இருக்குறான். எவனாவது அவளோட அண்ணனா இருப்பானோ? வழக்கமா இப்படி கூட வர்றவங்களை கண்டுக்க கூடாது. நாம கண்டுகிட்டோம்னு வச்சுகுங்க அப்புறம் ஓவரா சீனப் போடுவனுக. அதுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கலாமா ? டேய் இது மாதிரி பல பேரைப் பார்த்தவண்டா !! நீ மறைச்சா என்னா? எங்களுக்கு பார்க்க தெரியாதா ? கொஞ்சம் சிக்னல் கொடைக்கிற மாதிரி நகர்ந்து நின்னேன். கொஞ்ச நேரத்திலயே தெரிஞ்சு போச்சு அவனுக்கும் நம்ம பட்டாம்பூச்சிக்கும் சம்பந்தமே இல்லைன்னு. திரும்பவும் சும்மா சும்மா என்னைய மொறைக்குறதுன்னு ஒரே டார்ச்சரா போச்சு. டேய் நீயாசும் பாரு இல்லை என்னையவாச்சும் பார்க்க வுடுடான்னு கத்தனும் போல இருக்கு. என்ன பண்றது? பொது இடமாச்சே. இதுக்குள்ள என் பட்டாம்பூச்சி பறந்து போய்டுச்சு !! ஸ்டாப்பிங் வந்துடுச்சி போல. பஸ்ஸிலே பாதி டிக்கெட் காலி..

வேற வழியே இல்லை சீட்டிலே ஒக்கார்ந்துதான் ஆகணும்னு ஆகிபோச்சு. வேற பட்டாம்பூச்சி எதும் தேறலே. ஒக்கார்துதான் தீரணும் போல இருகேன்னு பார்த்தா இதிலே நம்ம மொறைக்குர பார்ட்டி பக்கதிலேதான் சீட்டு ஒன்னு காலியா இருக்கு. ஒக்காருங்கன்னு ரொம்ப ஆர்வமா அண்ணாதே வழி விட்டாரு. வேற வழியில்லாம வெறுமனே ரோட்டை வேடிக்கை பார்துகிட்டே வந்துகிட்டு இருந்தேன், திடீர்னுதான் காலிலே ஏதோ குறு குறுன்னு ஊருற மாதிரி இருகேன்னு பார்த்தா நம்ம பக்கத்திலே ஒக்கார்ந்துகிட்டு இருந்த மொறைக்கிற ஆளோட கையி என் தொடையிலே !! டேய் என்னடா பண்றேன்னு அவன் மூஞ்சியப்பார்த்தா ஒரு ‘மார்க்கமா’ சிரிக்கிறான். அடப்பாவி !! அவனா நீ ??!!!! அடங்கொப்புறானே டேய் இதுகெல்லாம் நான் ஆளு இல்லைடான்னு அலறியடிச்சு எந்திருச்சி பஸ்சு படிகட்டு கிட்டே போய் நின்னுகிட்டேன். அடப்பாவிகளா முந்தியெல்லாம் ஏதோ கைபோடுறது கால் போடுறது பொண்ணுகளுக்குத்தான் டார்ச்சர் கொடுத்துகிட்டு இருந்தானுவ. இப்போ ஆம்பிளைகளையும் வுட்டு வைக்கிலயாடா ?? பார்த்து சூதானமா இருந்துக்குங்கப்பூ !!

41 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

சுமோக்கு தூரோகம் பண்ணா கடவுள் சும்மா உடுவாரா?...

உன்க்கு இப்போ இரண்டு சாய்ஸ்.
1. சுமோ.
2. பஸ்ஸுல பக்கத்துல உக்காந்தது.

உனக்கு எது தேவை. நீயே செலக்ட் பண்ணிக்கோ

:)

said...

இவ்வளவு நாளு பஸ்ஸுல போறதுன்ன எறிச்சலா இருந்தேன்.. ஆனால், நீங்க அதுக்கு ஒரு புது அத்தியாயமே சொல்லுரீங்க!!!

said...

hi jollupandi!!!
enna ithu ... pudusa kathai ellam vidareenga ...ippadi ellam kooda nadakutha enna??? ellarukum ethavathu nalla anubhavam thaan pola iruku..
seri seri varutha padatheenga.. adu thaan figure ethuvum set agaliye.. ippadi ethavathu parthuka vendiyathu thane...
Chumaa joke thaan seriousa eduthukatheenga .. he he he

said...

ஹாய் ஜொள்ளுப்பாண்டி

ரொம்ப நல்லா இருந்தது உங்கள் பதிவு

ஆனா பருங்க எனக்கு தான் பஸ் பயணங்கள் கொடுத்து வைக்கள

said...

ஆகா தம்பி பாண்டி தலயை மொட்டப்புல்ல பார்த்தவன் உன்னையும் விடல்லயா... மத்த சங்கத்துச் சிங்கத்துக்கு எல்லாம் இது ஒரு எச்சரிக்கை மணியா ஒலிக்கட்டும்...

ஆளுக்காளு பஸ் கதையை எழுதி தாக்குறீங்களே.. என்னய்யா சேதி?

said...

//நாடோடி said...
சுமோக்கு தூரோகம் பண்ணா கடவுள் சும்மா உடுவாரா?...//

வாங்கண்ணா நாடோடி :))
இதென்னாங்க துரோகமா ?? ஐயகோ !!!

//உன்க்கு இப்போ இரண்டு சாய்ஸ்.
1. சுமோ.
2. பஸ்ஸுல பக்கத்துல உக்காந்தது.

உனக்கு எது தேவை. நீயே செலக்ட் பண்ணிக்கோ//

இந்த கிண்டல் தானே வேணாங்கறது
:(((

said...

// .:: My Friend ::. said...
இவ்வளவு நாளு பஸ்ஸுல போறதுன்ன எறிச்சலா இருந்தேன்.. ஆனால், நீங்க அதுக்கு ஒரு புது அத்தியாயமே சொல்லுரீங்க!!! //

வாங்க Myfriend :))
இனி பஸ்ஸிலே சரி ஜாலிதான் உங்களுக்கு. எப்படி என் ஆசீர்வாதம் ?? :)))

said...

//dubukudisciple said...
hi jollupandi!!!
adu thaan figure ethuvum set agaliye.. ippadi ethavathu parthuka vendiyathu thane...
Chumaa joke thaan seriousa eduthukatheenga .. he he he //

வாங்க dubukudisciple :))
என்னாங்க இப்படி சொல்லிட்டீங்க ? போங்க !!!

என்னவோ போங்க நான் என்னிக்கு சீரியச்சா எடுதுகிட்டு இருக்கேன் ?? :)) கவலைப்படாதீங்கோ !!

said...

//இராஜராஜன் said...
ஹாய் ஜொள்ளுப்பாண்டி

ரொம்ப நல்லா இருந்தது உங்கள் பதிவு

ஆனா பருங்க எனக்கு தான் பஸ் பயணங்கள் கொடுத்து வைக்கள //

வாங்க இராஜராஜன்:))

ஏன் கவலைப்படறீங்க ராஜன். சென்னைக்கு வாங்க ஏகாந்தமா போகலாம் பஸ்ஸிலே ;))))

said...

//தேவ் | Dev said...
ஆகா தம்பி பாண்டி தலயை மொட்டப்புல்ல பார்த்தவன் உன்னையும் விடல்லயா... மத்த சங்கத்துச் சிங்கத்துக்கு எல்லாம் இது ஒரு எச்சரிக்கை மணியா ஒலிக்கட்டும்...//

வாங்க தேவ் :))
என்னா ஒரு துன்பியலான சம்பவம் பாருங்க :(( அசிங்கப்படுதீடுவானுக போல இருக்கே !!;)))


//ஆளுக்காளு பஸ் கதையை எழுதி தாக்குறீங்களே.. என்னய்யா சேதி? //

ஏதோ ஆகி போச்சு. தல வழியில் நானும் :))

said...

அதான் பொண்ணுங்க ஒன்னுமே மாட்ட மட்டேங்கிறது.பேசமா வந்த வழிக்கு லாபம்ன்னு போக வேண்டியாதுதானே?ஹி ஹி ஹி

said...

ஆகா பாண்டி வர வர ஆமபளைங்களுக்கு இந்த சமுகத்துல பாதுகாப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கு.. உடம்பை பாத்துக்கோப்பா.. பின்னாடி ஏதாவது பிரச்சனைன்னு வந்தா சுமோ கூட இல்ல உன்னை கவனிக்க.

said...

//ஜொள்ளுப் பேச்சி said...
அதான் பொண்ணுங்க ஒன்னுமே மாட்ட மட்டேங்கிறது.பேசமா வந்த வழிக்கு லாபம்ன்னு போக வேண்டியாதுதானே?ஹி ஹி ஹி //

வாம்மா பேச்சி :))
என்ன நெக்கலா ?? ம்ம்ம் இரும்மா வச்சுக்கறேன் உனக்கு ஒருநாளு கச்சேரிய ;)))))))

said...

//சந்தோஷ் said...
ஆகா பாண்டி வர வர ஆமபளைங்களுக்கு இந்த சமுகத்துல பாதுகாப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கு.. உடம்பை பாத்துக்கோப்பா.. பின்னாடி ஏதாவது பிரச்சனைன்னு வந்தா சுமோ கூட இல்ல உன்னை கவனிக்க. //

வாங்க சந்தோசண்ணா ;))))
ஆமா ஆமா ஆம்பிளைகளுக்கு பாதுகாப்பே இல்ல
:((. ஆமா என்ன ஏதோ 'இரட்டுரமொழிதல்' மாதிரி ஏதோ தெரியுதே சந்தோசு ;))))) ம்ம்ம் அல்லாருக்கும் நக்கலா போச்சு என் நிலமை :))))

said...

I pity you jollz.Take good care of yourself.By the way the bus theory is superb!

said...

அதெப்படிங்க, என்னைய மாதிரியே திங் பண்ணறீங்க... ஆனா இது வரைக்கும் உங்க "அனுபவம்" எனக்கு இல்லை...

said...

//வாம்மா பேச்சி :))
என்ன நெக்கலா ?? ம்ம்ம் இரும்மா வச்சுக்கறேன் உனக்கு ஒருநாளு கச்சேரிய ;))))))) //
என்ன பாண்டி.அவ்வளவு தைரியமா உனக்கு?நீயா நானான்னு ஒரு கை பார்த்துருவோம்.

said...

பாண்டிண்ணே,

சேம் பிஞ்ச்... பெங்களுருலேயும் நானெல்லாம் பஸ்ஸிலேதான் போயிட்டு வாறேன்.......:-)

said...

//thurgah said...
I pity you jollz.Take good care of yourself.By the way the bus theory is superb! //

வாங்க துர்கா :))
எவ்ளோ பரிதாபமான நிலமை எனக்கு :)) பஸ் தியரியா ?? என்னையா புத்தக வாத்தியார் ரெஞ்சுக்கு ஆக்கீட்டீங்களே :))))))))

said...

//Udhayakumar said...
அதெப்படிங்க, என்னைய மாதிரியே திங் பண்ணறீங்க... ஆனா இது வரைக்கும் உங்க "அனுபவம்" எனக்கு இல்லை... //

வாங்க உதய் ;)))))) நாமெல்லாம் ஒரே வேவ்லென்ந்த்ல ஊருன மட்டைக தானே ;))) அனுபவம் எனக்கும் இல்லாம தாங்க இருந்துச்சு :((((

said...

//ஜொள்ளுப் பேச்சி said...
என்ன பாண்டி.அவ்வளவு தைரியமா உனக்கு?நீயா நானான்னு ஒரு கை பார்த்துருவோம். //

வாணாம் என்னைய உட்டுடுங்க பேச்சி !! பேச்சு பேச்சாதான் இருக்கணும் இல்லயா ;))))

said...

//ராம் said...
பாண்டிண்ணே,

சேம் பிஞ்ச்... பெங்களுருலேயும் நானெல்லாம் பஸ்ஸிலேதான் போயிட்டு வாறேன்.......:-) //

வாங்க ராம் :))
நீங்களும் பஸ்ஸா ?? பெங்களூரு சும்மா டாப் கியர்ல தூக்கலா இருக்குமே ;)))))

said...

//வாழ்க்கையிலே சுக பயணத்துக்காக சக பயணிகளையே இழக்கற வலி இருக்கே !!! ஹும்ம்ம்.//

யோவ் ஜொள்ஸ் ஆனாலும் உனக்கு ரொம்ப லொள்ளுதான்யா ;)

said...

\"எங்கயாச்சும் பூக்கடைய பார்த்துகிட்டு திரிஞ்சவனுக்கு பூக்கூடைக்குள்ளேயே அடைச்சு வச்ச மாதிரி என்ன ஒரு ஜாலி\"

ஆஹா, ஆஹா, என்னா ஒரு ஜொள்ளு வரி!

\"ஆனா பஸ்ஸுக்குளார நின்னா 360 டிகிரியிலயும் யாரும் நம்ம கண்ணுல இருந்து தப்பிக்க முடியாது. எப்படி ஐடியா ?? \"

எப்படீங்க இப்படி எல்லாம் ஐடியா வருது உங்களுக்கு, கில்லாடி தான்!!

said...

நானும் பஸ்ஸுல ஜன்னல் சீட்டு கெடச்சா டக்குனு, கர்ச்சீப்பப் போட்டு எடம் புடிச்சிருவேன். வெளியப் போற பொண்ணுங்களுக்கு பிராக்கட் போடத்தான் ஹி.. ஹி...

இந்த 360 டிகிரி மேட்டர் எனக்குத் தோணாமப் போச்சே!!!

said...

//Dinesh said...
//வாழ்க்கையிலே சுக பயணத்துக்காக சக பயணிகளையே இழக்கற வலி இருக்கே !!! ஹும்ம்ம்.//

யோவ் ஜொள்ஸ் ஆனாலும் உனக்கு ரொம்ப லொள்ளுதான்யா ;) //

வாங்க தினேஷ் :)))
ஜொள்ளும் லொள்ளூம் கூடபொறந்துதுங்கோவ்;))))

said...

//Divya said...
\"எங்கயாச்சும் பூக்கடைய பார்த்துகிட்டு திரிஞ்சவனுக்கு பூக்கூடைக்குள்ளேயே அடைச்சு வச்ச மாதிரி என்ன ஒரு ஜாலி\"

ஆஹா, ஆஹா, என்னா ஒரு ஜொள்ளு வரி!//

வாங்க திவ்யா வாங்க :))

ஹிஹிஹிஹி தேங்ஸுங்க :))
//
\"ஆனா பஸ்ஸுக்குளார நின்னா 360 டிகிரியிலயும் யாரும் நம்ம கண்ணுல இருந்து தப்பிக்க முடியாது. எப்படி ஐடியா ?? \"

எப்படீங்க இப்படி எல்லாம் ஐடியா வருது உங்களுக்கு, கில்லாடி தான்!! //

அட என்னாங்க நீங்க இதில என்ன கில்லாடிதனம் இருக்கு ;))) போங்க ரொம்ப வெட்கமா இருக்கு :))))

said...

//ஜி said...
நானும் பஸ்ஸுல ஜன்னல் சீட்டு கெடச்சா டக்குனு, கர்ச்சீப்பப் போட்டு எடம் புடிச்சிருவேன். வெளியப் போற பொண்ணுங்களுக்கு பிராக்கட் போடத்தான் ஹி.. ஹி...

இந்த 360 டிகிரி மேட்டர் எனக்குத் தோணாமப் போச்சே!!! //

வாங்க ஜி வாங்க :)))
அதாங்க நாம பண்ற தப்பே ;))) சீட்டுஎல்லாம் நிறம்பி நிக்கிற பஸ்ஸா பார்த்து ஏறுனா போச்சு ;))) ஏன் கவலை ? இனிமே அப்படி பண்ணுங்கண்ணா :))))

said...

Mr.jollu neenga solrathum sari than kalam kettu kedakku appu paathu soothanama irunthukonga ;) ammu

said...

//Mr.jollu neenga solrathum sari than kalam kettu kedakku appu paathu soothanama irunthukonga ;) ammu //

வாங்க அம்மு வாங்க :))
அல்லாரும் சூதானமா இருக்கனும்னு தானே சொல்லுதேன்.நீங்களும் பார்த்து போங்க அம்மணி சரியா ? :)))

said...

//ஜொள்ளுப்பாண்டி said...
ஏன் கவலை ? இனிமே அப்படி பண்ணுங்கண்ணா :)))) //

இனிமே என்கிருந்து பண்றது. எங்க ஊருல இப்ப பஸ்ஸே கெடயாது. அப்படி பஸ் உட்டாலும், ஒருத்தியும் வர மாட்டேங்குறாளுங்க!

said...

ஜொள்ளுப்பாண்டி,

சென்னையில Short Haul டவுன்பஸ்ஸுலயே ஆரம்பிச்சிட்டனுங்களா?

நான் கல்லூரியில் படித்த காலத்தில் திருச்சியிலிருந்து போடிக்குச் செல்லும் இரவுப் பேருந்தில் இரண்டுபேர் சீட்டில் அருகே அமர்ந்திருந்த நல்ல நாகரீகமான வட இந்திய 50 வயதுப் பெரியவர் ஆங்கிலத்திலேயே உரையாடிவிட்டு எல்லா லைட்டையும் ஆஃப் செய்துவிட்டு இரவு விளக்குமட்டும் இருக்கும் இருட்டில் இதே மாதிரி சில்மிஷம் செய்ய ஒரு முறை குழப்பத்துடன் தேமே என்று இருந்த நான் அடுத்த முறை அவனது சுச்சியில் நச்சுன்னு சரியாக குத்து வைத்தேன். அப்பத் தூங்கிய ஆள்தான்!

ரியல் ராஸ்கல்ஸ்! என்ன கண்றாவி சிண்ட்ரோமோ? அதுக்கப்புறம் பஸ் பயணத்திலே ரொம்பவே கவனமாக இருந்து கற்பைக் காக்க மெனக்கெட வேண்டியிருந்தது!

said...

//ஜி said...
//ஜொள்ளுப்பாண்டி said...
ஏன் கவலை ? இனிமே அப்படி பண்ணுங்கண்ணா :)))) //

இனிமே என்கிருந்து பண்றது. எங்க ஊருல இப்ப பஸ்ஸே கெடயாது. அப்படி பஸ் உட்டாலும், ஒருத்தியும் வர மாட்டேங்குறாளுங்க! //

அடப்பாவமே ஜி உங்க நெலமை எனகு புரியுது :(( இருந்தாலும் மனச தளர வுட்டுறாதீங்கண்ணா ! மனமிருந்தால் மார்க்கம் உண்டு ;)))

said...

//Hariharan # 26491540 said...
ஜொள்ளுப்பாண்டி,

சென்னையில Short Haul டவுன்பஸ்ஸுலயே ஆரம்பிச்சிட்டனுங்களா?//

வாங்க ஹரிஹரன் :))))
ஆமாங்க அந்தக்கொடுமைய ஏன் கேட்கறீங்க :((

//ரியல் ராஸ்கல்ஸ்! என்ன கண்றாவி சிண்ட்ரோமோ? அதுக்கப்புறம் பஸ் பயணத்திலே ரொம்பவே கவனமாக இருந்து கற்பைக் காக்க மெனக்கெட வேண்டியிருந்தது! //

:))))) என்னாங்க பண்றது கேள்விபடறப்போ சிரிப்பா இருக்கு :)) ஆம்பிளைகளே ஆம்பிளைகிட்ட இருந்து கற்பை காப்பாத்திக்க வேண்டிய அவலநிலை ஆய்டுசே !! :)))

said...

//வாணாம் என்னைய உட்டுடுங்க பேச்சி !! பேச்சு பேச்சாதான் இருக்கணும் இல்லயா ;))))//
அந்த பயம் எப்போதும் மனசுல இருக்கட்டும்.

//அட என்னாங்க நீங்க இதில என்ன கில்லாடிதனம் இருக்கு ;))) போங்க ரொம்ப வெட்கமா இருக்கு :))))//
உங்களுக்கு வெட்கம் எல்லாம் வருதா?நம்ப முடியவில்லை!

said...

he he!! nallaa venum.. Girlsa look viduradhu pathaadhunu adha periya science documentary maadhiri explanation vera kudukureengala??

Namma Dr.Ramadoss kitta indha bloga reference kudukannum :D

Moi, First time here, Superb tamil. Like it a lot.

said...

//Bindu said...
he he!! nallaa venum.. Girlsa look viduradhu pathaadhunu adha periya science documentary maadhiri explanation vera kudukureengala??//

வாங்க பிந்து :)))
என்ன இது சயின்ஸ் டாக்குமெண்டரி மாதிரி இருக்கா?? ஆஹா இப்படியெல்லாம் சொல்லி என்னைய சயிண்டிஸ்ட் ஆக்கீட்டேயளே !! ;)))))

//Namma Dr.Ramadoss kitta indha bloga reference kudukannum :D//

ஏங்க ஏன் இப்படி? எதுனாலும் நாமளே பேசி தீர்த்துகிடுவோம் சரியா ? :))) நான் ரொம்ப நல்ல பையங்க !! கருணை காட்டுங்க :))

//Moi, First time here, Superb tamil. Like it a lot. //

ரொம்ப தேங்ஸுங்கோ பிந்து . அடிக்கடி வாங்க சரியா ?? :))

said...

you r so funny

said...

//Anonymous said...
you r so funny //

வாங்கண்ணா :))
நெம்ப தேங்ஸுங்கோ.. ஆமா பேர் என்னாங்கோ ?? ;))))

said...

thambi

andha route'le 2,3 ille adhukku melayum niraiya college irukku.. idhukku dhan oru information madras'kara pasangalai kekkanum appadinradhu

said...

//Anbu said...
thambi

andha route'le 2,3 ille adhukku melayum niraiya college irukku.. idhukku dhan oru information madras'kara pasangalai kekkanum appadinradhu //

அன்பு அண்ணா :)))
பெரியவுக சொன்னா கேட்டுக்கிடணும் !!! அப்படீங்களா ??? அண்ணா நங்களும் கொஞ்சம் வருசமா database எல்லாம் collect பண்ணிதான் வச்சு இருந்தோம்... ஏதோ technical mistake ஆகிபோச்சுங்க :))) இனி உங்க database ஐ உபயோகிச்சுக்கறேன் .. கொஞ்சன் உதவுங்கண்ணா சரீங்களா ?? ;))))

ரொம்ப தேங்ஸுங்க அன்பு பேட்டைபக்கம் வந்து டிப்ஸ் கொடுத்ததுக்கு.... :)))