Tuesday, November 13, 2007

‘சைட்’ அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!! ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ?? அட ஆமாங்க. அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. ரோட்டோரமா ஒரு அழகான பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா? இதே மாதிரி தாங்க ‘சைட்’ டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு ‘குய்யோ’ னு எரியும் பாருங்க அதுதான். அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ? ( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )

நெறைய பேரு ‘ சைட்’ அடிக்கிறதுன்னா ரொம்ப தப்பா நெனசுக்கறாங்க. அதெல்லாம் ‘சைட் சைக்காலஜி ‘ பத்தி தெரியாதவங்க சொல்லுற அல்பதனமான argument. சைட் அடிக்கறதுங்கரது ஒரு கலை தெரியுங்களா? என்னடா இது கேவலம் சைட் எப்படி கலையாகும்னு நீங்க எல்லாம் வாயப்பொளக்கறது எனக்குத்தெரியுது !! door close plz. ஏன்னா இந்த கலையையும் கத்துக்கனும். ‘ சைட் டெக்னாலஜி' பத்தி சொல்லத்தானே நான் இருக்கேன் !!!

முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன் பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது. அப்படியே ஏதோ நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற ‘டெஸர்ட்’ டை பார்க்கிற மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே ஜெண்டிலா பார்க்கணும் . ‘சைட்’ அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க மறந்துடக்கூடாதுங்கண்ணா.

எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ பார்க்கலாமா? இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க நடக்கறப்போ, ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ ( ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா இதெல்லாம் beginners in ‘சைட்’ டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும் எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும் கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக் கெளப்பலாங்கோ !!

சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு பார்க்கலாமா?

'சைட்' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம் ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே? )

மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )

சைட் அடிச்சா நமக்கும் சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம். ( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )

தேவையில்லாம காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை )

ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ் சை வச்சு சந்தோஷமா ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ? உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா ?

Wednesday, October 31, 2007

DEEPA ’ வலி ’


உங்க பக்கத்து வீட்டிலே ஒரு அழகான பொண்ணு குடிவந்துச்சுன்னா எப்படி இருக்கும்? அதுவும் காலேஜ் படிக்கும்போது பசங்க எல்லாம் சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்த வீட்டுக்கு பக்கதிலேன்ன கேக்கவா வேணும் ? எங்க பக்கத்து வீட்டுக்கு தீபா வந்தப்ப அப்படித்தான் ஆகிபோச்சு.

புதுசா அந்த வீட்டுக்கு அவங்க குடிவந்தப்போ நாங்க எல்லாம் தீபாவளி லீவுக்கு ஊருக்கு போய் இருந்ததால யார் வந்து இருக்கான்னு தெரியலை. லீவுமுடிஞ்சு திரும்பி வந்தபோதான் தெரிஞ்சது அந்த வீட்டிலே “ பால் போல 16ல் ஒரு girlfriend” அனாமத்தா போனி டெய்ல் போட்டுகிட்டு பொஸுக்கு பொஸுக்குன்னு நடந்து பேஷன் பரேட் நடத்திகிட்டு சல்லைய கொடுத்துகிட்டு இருக்குது !! அதுவும் பசங்க பாக்குறானுவன்னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சு போச்சுன்னா அதுக வுடுர அலப்பறை இருக்கே !!! யப்பா.... நமக்கு தான் சும்மா சைட் அடிக்கறதோட திருப்தி அடைஞ்சிட்டு போறது வழக்கமாச்சே !! அப்படியே வீட்டிலே இருந்து கடைக்கு போறப்போ காலேஜ் முடிஞ்சு வர்றப்போன்னு வெளிய வர்ரப்போ எல்லாம் ஏதோ கோயில்ல நடை தொறந்திருக்கான்னு பாக்குர மாதிரி அவ வீட்டை பார்த்துக்கிட்டு கன்னத்திலே போட்டுகிட்டு போறதே வழக்கமாய்டுச்சு.

இப்படியே கொஞ்சநாள் நாங்களும் கண்ணாலயே தீபாவ பார்த்து நெய்ய ஊத்திகிட்டு இருக்குரப்போதான் திடீர்னு நம்ம க்ளோஸ் ப்ரெண்டு மணி ஒரு நாள் நானும் அவனும் வாக்கிங் போறப்போ ‘ டேய் பாண்டி எனக்கு இப்போ எல்லாம் சாப்பிட முடியலை தூங்க முடியலை ஏன் படிக்கவே முடியலை ( அதுக்கு முன்னாடி என்னவோ 24 மணி நேரமும் படிச்சான்னானு கேக்காதீங்கப்பு ) ன்னு ஒரே பீலிங்ஸ் பயலுக்கு, “ டேய் மணி நல்லாதானடா இருந்தே என்ன ஆச்சு உனக்கு? ன்னு அக்கரையா பயகிட்டே கேட்டா லேசா லூசு மாதிரி இளிச்சுகிட்டே “ தீபாமேல எனக்கு கண்ணபின்னான்னு காதல் வந்துருச்சுடா!! னு சொல்லிட்டு பையன் பாயபொராண்டுர பூனை மாதிரி ஆக்க்ஷன் கொடுக்கறான் !!. “அடக் கருமமே உனக்கும் வந்துடுச்சா? என்னடா இது? சரி ஏன் அவ உன்னைய பார்த்து சிரிச்சாளா இல்லை பேசினியா? “இல்லடா பாண்டி அவ வழக்கம் போல எனக்கென்னான்னு தெணாவெட்டா நடந்தே என் உசுரை எடுக்கறாடா. அவளை மடக்க நான் பல ப்ளான் ரெடி பண்ணிவச்சு இருக்கேன். நீ மட்டும் நம்ம பசங்க யாரும் எனக்கு போட்டியா வராம பார்த்துக்கோ” ன்னு சொல்லி பய தீபவுக்கு துண்டைப் போட்டுட்டான்.

டேய் பார்த்துகுங்க இன்னில இருந்து நம்ம தீபா நமக்கெல்லாம் அண்ணி (சக ப்ரெண்டோட சைட் டுன்னாலே default டா அண்ணி முறை தானே எல்லாரும் கூப்பிடனும் ? ) மணிப்பயலுக்கு ஒரே சந்தோசம். ஒரு வாரம் கழிச்சு மணி என்கிட்டே ஒரு பேப்பரோட வந்தான். ‘என்னடா செமஸ்டருக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே இப்போவே பசங்ககிட்டே நேட்ஸ் வாங்க ஆரம்பிச்சியாடன்னு அதிர்ச்சியோட கேட்டா பய நக்கலா சிரிக்கிறான். “பாண்டி ஏண்டா இப்படி என்மேல அபாண்டமா சந்தேகப்படுறே?! ன்னு சொலிட்டு கொடுத்தான், பேப்பர்ல பார்த்தா அட தீபாவோட வரலாறு !!! தீபாவுக்கு ஒரு தம்பி அம்மா அப்பா அவ எந்த ஸ்கூல் எந்த வழியா போறான்னு பட்டியல் அவ எந்த கடையில ஹேர்பேண்ட் வாங்கறாங்கற சும்மா google ரேஞ்சுக்கு பயபுள்ள தகவல்களை அள்ளி தெளிச்சி எடுத்துவச்சுருக்கான் !!!. ஆஹா போற போக்கிலே பய தீபாவோட தீபாவளிகொண்டாடிவான் போல இருக்கே !!! “ பாண்டி இனிமேதாண்டா எனனோட ஆக்க்ஷன் ப்ளான் பார்த்துகிட்டே இருடா தீபாவோட சேர்ந்து பக்கத்து பேக்கரில ஆப்பிள் கேக் சாப்பிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை !! ” சும்மா அண்ணாமலை ரஜினி கணக்கா தொடைதட்டி பையன் ‘பிட்’ டை ஓட்டறான்!!

ரெண்டுநாள் கழிச்சு வழக்கமா நாங்க ஷட்டில் கார்க் வெளையாடுர க்ரெளண்ட்ல புதுசா ஒரு பொடியன் மணி கூட வெளையாடிகிட்டு இருந்தான். அட வழக்கமா இப்படி பொடியனுங்க வந்தா மணிப்பயதானே அடிச்சி பத்திவிடுவான் இப்போ என்னடான்னா இப்படி மாறிட்டானேன்னு ஆச்சரியமா மணிப்பயலப் பார்த்தேன். “ டேய் பாண்டி கொஞ்சம் நேரம் ஓரமா ஒக்காருடா பொடியன் யாரு தெரியும்ல? நம்ம தீபாவோட தம்பி தாண்டா !! “ என்னோட ஆக்சன் ப்ளான்ல முதல் டார்கெட் இவந்தான் . அப்படியே இவனை வச்சே தீபாவோட மனசிலே ஒரு ‘பஞ்ச்’ வைக்கிறேன் பாரு !! ப்ளீஸ் இப்பொ கொஞ்சம் இடத்தை vacate பண்ணுடா மாப்ளே !! னு கொஞ்சம் decent ஆ நம்மளை கழட்டி விட்டுடான். அடப்பாவி இந்த பசங்களோட இதாங்க பெரிய தொல்லைங்க. கொஞ்சம் ஏமாந்தா நம்மளை ஊறுகாய் ஆக்கிடுவாய்ங்க! என்ன பண்ணுறது ?

ரெண்டு வாரம் கழிச்சு பார்த்தா மணிப்பய தீபாவோட வீட்டுல இருந்து வெளிய வந்துகிட்டு இருக்கான். பய கில்லாடியா இருப்பான் போல! தம்பியப் புடிச்சே பொண்ணு மனசில வீட்டுக்கு போற ரேஞ்சுக்கு பஞ்ச் வச்சுட்டான் போல இருக்கேன்னு நெனச்சிகிட்டே “ டேய் மணி என்னடா கண்ணா இவ்ளோ வேகமா இருக்கே என்ன அவங்க வீட்டில இருந்து வார்றே, தீபாவ பார்துட்டா? “ “ அட இல்லைடா பாண்டி ஆண்ட்டி ( தீபாவோட அம்மாவாம் !! )நம்ம பால்காரனை அவங்க வீட்டுக்கும் பால் போட சொல்லமுடியுமான்னு கூப்ட்டு கேட்டாங்க. சான்ஸை விடலாமா? நாளைக்கு பாரேன் அவங்க வீட்டு பாலையும் நம்ம வீட்டிலயே வாங்கி நானே கொண்டுபோய் டெலிவரி பண்ணி ஆண்ட்டிகிட்டயும் நல்ல பேரை வாங்கி என்னோட லவ்வையும் தீபாகிட்டே டெலிவரி பண்றேண்டா !!”. ஏண்டா வழக்கமா மொதல்ல பொண்ண கரெட் பண்ணி அப்புறம் தானேட இப்படி அல்லைடு சொந்த பந்தங்களை கரெட் பண்ணனும் நீ என்னடா ரிவஸ்ல பேறேன்னு கேட்டா பய “ கண்ணா அது ordinary பசங்க பண்ணுர லொடுக்கு காதல்டா! என் வழி தனி வழி !!! “ ன்னு பையன் கைய ஆட்டி சலம்பறான் !!!

இப்படியா தீபா வீட்டுக்கு ப்ரீ லேபரா சுத்திகிட்டு இருந்த மணி திடீர்னு ஒருநாள் கண்ணீரும் கம்பலையுமா எங்ககிட்டே வந்தான். “ டேய் மாப்ளே மணி என்னடா ஆச்சு ஊர்ல பாட்டி கீட்டி யாராச்சும் டிக்கெட் வாங்க்கிடாங்களா?” ன்னு கேட்டா “ பாண்டி அதெல்லாம் இல்லைடா இனிக்குதான் நான் தீபாகிட்டே என் மனசை கஷ்டப்பட்டு ஓபன் பண்ணினேன். உடனே என்னைய ரிஜக்ட் பண்ணிட்டாடா. அவளுக்கு ஏற்கனவே இருந்த வீட்டு பக்கத்திலே நம்மள மாதிரியே எவனோ ஒருத்தன் ரிசர்வ் பண்ணிட்டானாம். சாரிங்க அண்ணானு சொலிட்டாடா. என்னாடா அவ தம்பியக் கரெட் பண்ணிட்டேன் அவ அம்மாவையும் கரெட் பண்ணிடேன் ஆனா மெயின் மேட்டரான பொண்ணக் கரெட் பண்ண முடியலையேடா !!! “ ன்னு கே கொள்ளேன்னு பய ஒப்பாரி வைக்கிறான் !! என்னத்த சொல்றது ? இனிமேலாச்சும் யார் வீட்டுக்காச்சும் ப்ரீ லேபரா ஆகரதுக்கு முன்னாடி pitch report பார்த்து batting பண்ணுங்கப்பு !!!

Thursday, October 11, 2007

அம்மணீஸ் Unleashed ....


நம்ம ப்ரெண்டு ஒருத்தன் நம்மகிட்டே வந்து ‘ ஏண்டா பாண்டி இந்த பொண்ணுகளைப் புரிஞ்சுக்கவே முடிலைடா. சிரிக்குறாளுவளேன்னு நானும் சிரிச்சா “போதுண்டா ஒவரா வழியாதேங்கறாளுக “சரி ஏதோ கொஞ்சம் பேசுறாளுவளேன்னு நானும் கொஞ்சம் பேச்சுத்தொணைக்கு கம்பெனி கொடுத்தா “ டேய் ரொம்ப மொக்கயப்போடாதே!’ ன்னு சொல்லிபுட்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சு நம்மளை உசுப்பேத்திவிட்டு வெறுப்பேத்தறதே பொழப்பா வச்சு இருக்காளுக. எப்படிடா நாம பொண்ணுகளைப் புரிஞ்சுக்கறது? நீதான் ஒரு எழுத்தாளன்னு அடிக்கடி பீத்திக்கிறியே!’ ன்னு அப்படியே நம்ம தன்மானத்தை லேசா உரசி ஏதோ நம்மளையும் ஒரு சாமியாரு ரேஞ்சுக்கு வச்சு கேள்விய கேட்டுப்புட்டான். அட பாவிபயபுள்ள தனியா சொல்லி இருந்தாலாச்சும் ஏதாசும் சொல்லி ஒப்பேத்தி இருக்கலாம் இப்படி சபையிலே வச்சு கேட்டுபுட்டானே ஏதாசும் சொல்லித்தொலையனுமேன்னு எடுத்துவுட்ட சரக்குதாங்க இது !!


நம்ம அம்மணிகளை மொதல்ல புரிஞ்சுக்கனும்னு நெனகறதே தப்புங்க. எப்படீன்னா பொண்ணுங்க எல்லாம் 50 Kg தாஜ்மகால் மாதிரி. தாஜ்மகாலைப்பார்க்கறீங்கனு வைங்க அதைய அப்படியே நின்னு ரசிப்பிங்களா இல்லை எப்படி இந்த தாஜ்மகாலை கட்டி இருப்பாய்ங்க ன்னு ஒரு ஆர்க்கிடெக்ட் ரேஞ்சுக்கு திங்க் பண்ணுவீங்களா? எப்படி கட்டுனாங்கங்கறதெல்லாம் நம்ம தாஜ்மகாலோடா ஆர்கிடெக்ட்ஸ்சான அவிய அப்பா அம்மாவோட கவலைங்க. நம்ம பணி இந்த நடமாடும் தாஜ்மகால்களை ரசித்துக்கிடப்பதேன்னு இருந்தீங்கன்னாதான் வாழ்க்கையிலே நிம்மதியா கலர் கலரா நெனப்புகளை போட்டோ எடுத்துக்க முடியும் என்னா?

அப்புறம் இந்த பேச்சு. நம்ம அம்மணீஸ் எல்லாம் ஒரு நடமாடும் FM ரேடியோ மாதிரிங்க. ரேடியோன்னாலே எதையப்பத்தியாச்சும் என்னவாச்சும் எப்பவும் சொல்லிகிட்டே இருக்கனும் இல்லையா? பேசாதா ரேடியோ நல்லாவா இருக்கும்? சொல்லுங்கப்பூ! சரி பேசிட்டு போவட்டும்னு நீங்க பாட்டுக்கேட்கறதோட நிறுத்திகிடனும். அதை விட்டுட்டு நீங்கபாட்டுக்கு ப்ரேக்ராமை சேஞ்ச் பண்றேன் finetune பண்ணறேன்னு கெளப்புனீங்கன்னா அவ்ளோதான் சும்மா இருக்குற கொளவிக்கூட்டை எடுத்து காதுகுள்ள உட்டுகிட்ட கதை மாதிரி காதெல்லாம் அம்மணி வார்தையாலயே உங்களை வகுந்து புடுவாக வகுந்து !! அப்புறம் காது கிழியுது ரத்தம் வழியுதுன்னு தேவையில்லாம கதறப்பிடாது !! . இந்த ரேடியோவை Off பண்ண முடியாது ஆனா வேற ஸ்டேசனை வேணா மாத்திகிட்டு வேற பாட்டைக் கேக்கமுடியும் !!

CBI FBI எல்லாம் நம்ம அம்மணிகளோட துப்பறியும் தெறமைக்கு முன்னாடி பிச்சை வாங்கனுங்க. அதுவும் நீங்க அம்மணியோட ஹஸ்பண்டாவோ இல்லை அம்மணியை லவ்விகிட்டோ இருந்தீங்கன்னா நீங்க அவுகளோட ஸ்பெசல் செக்யூரிட்டிக்குள்ள ஆட்டோமேடிக்கா வந்துருவீங்க. நீங்க வாயக்கூட தொறந்து பேச வேணாங்கப்பூ உங்களோட முழிய வச்சே நம்ம அம்மணிக நீங்க பக்கத்து வீட்டு பைங்கிளிக்கு கேப்புல ட்ராக் உடுறீங்களா? இல்லை பசங்களோட பேசுற மாதிரி என்னதான் நீங்க சிவாஜியையும் கமலையும் கலந்துகட்டி உங்க நடிகவேள் திறமையகாட்டி போன்ல பேசுனாலும் நீங்க உண்மையிலேலே உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்து இருக்குற ஜில்லு பிகர் ரிசப்ஷனிஸ்டோட பிட்டைப் போடுறீங்கங்கறதை சும்மா அசால்டா கண்டுபுடிக்கிற தனித்தெறமை இருக்கங்கறதை நீங்க மறந்துடக்கூடாதுங்கப்பூ !!!

துணிக்கடையிலே மூச்சு தெனறத் தெனற சும்மா பத்தாயிரம் கலர்ல சேலைகளை சேல்ஸ்மேன் நாக்கு வெளிய தள்ள அம்மணிகளுக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் இதுல எல்லாம் இல்லாத பத்தாயிரத்து ஒண்ணாவது கலர்ல சேலை இருக்கான்னு அசால்ட்டா இல்லாத கலரைக் கேட்டு சேல்ஸ்மேன்களை தெனற அடிக்கரதோட இல்லாம பார்த்தீயாளா என் தெறமைய ன்னு கூட நிக்குற அப்பாவி ஆம்பிளைகளை பாக்குறது வேற இவுகளுக்கு ஒரு ஆனந்தமான ஹாபிங்க !! இதுலே நீங்க இவுக கூடவே நின்னுகிட்டு அந்தப்பக்கம் நின்னுகிட்டு சேலையப் தேடிகிட்டு இருக்குற பக்கத்துல நிக்குற பிகரை கண்ணாலையே முழம்போட்டுகிட்டு இந்த அப்பாவி நயமா இருக்குற நேரத்துல திடீர்னு ‘ ஏங்க இந்த கலர்ல சேலை என்கிட்டே இருக்குதில்ல? ன்னு கேட்டு உங்களை இப்படி சந்தோசமா பொழுது போக்க விடாம பண்ணறதுல ஒரு அலாதி ஆனந்தம் இவுகளுக்கு !!

சரி இதுக்கும் மேலயும் நம்ம அம்மணிகளைப்பத்தி பத்தி பத்தியா எழுதினா அவ்வளவுதான் அப்புறம் அம்மணிக எல்லாம் சேர்ந்து நம்மள ரவுண்டு கட்டி பொளந்துடுவாங்க !! ஆஹா தூரத்திலே ஏதோ சுரிதார் போட்ட சுந்தரி ஹை-ஹீல்ஸ்சோட வர்ற மாதிரி தெரியுது !! சரி சரி எல்லாரும் சங்கத்தை கலைங்கப்பூ !!

Monday, September 10, 2007

ஆண் GAL
ஆயிரம் தான் சொல்லுங்க இந்த பொண்ணுகளுக்கு இருக்குற மவுசு இந்த பசங்களுக்கு கெடையவே கெடையாதுங்க. பாவங்க இந்த பசங்க. என்னதான் ரவுசு பண்ணிகிட்டு டோல்லடிச்சுகிட்டு லோலாக்கை பார்த்துகிட்டு அலைஞ்சாலும் ஒரு பொண்ணுக்கு இருக்குர influence ஒரு பையனுக்கு கெடைகிறது இல்லை ! படிக்கிற இடத்திலே இருந்து வேலை செய்யுர இடத்திலே வரைக்கும் பையனா பொறந்தா என்ன கஷ்டம் என்னா கஷ்டம் ??

அதுக்கு காரணம் இந்த பசங்களே தாங்க. உங்களுக்கு கோடிங்ல ஏதோ கொஞ்சம் டவுட்டுன்னு இந்த பசங்களை போய் கேக்கறீங்கன்னு வைங்க. “ அட இது தெரியாதா? போடா போய் இந்த டாக்குமெண்டைப்ப படின்னு பொத்தாம் பொதுவா ஒரு மார்கமா உங்களுக்கு ஒரு national higway ய காட்டிட்டு போய்டுவாய்ங்க. டேய் இதை நீதான் படிச்சிட்டயேடா சொல்லி கொடுக்க ஒரு 5 நிமிசம் ஆகுமான்னு மனசுக்குள்ளேயே குமுறிகிட்டு அலைய வேண்டியதுதான். இதே கேள்விய ஒரு பொண்ணு வந்து “ இந்த கோடிங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ப்ளீஸ்! “ ன்னு ஹஸ்கி வாய்ல treble ஏத்தி கேட்டுச்சுன்னு வைங்க அவ்ளோதான் நம்ம ஆளு சும்மா ரம்மு குடிச்ச குதிரை குட்டி கணக்கா இருக்குற firewall ஐ எல்லாம் பேத்துகிட்டு கூகுள், அல்டாவிஸ்டான்னு சும்மா அலாஸ்காவுக்கே போய் ‘கோடிங்’க எடுத்துடுவாய்ங்க. ஏம்பா கண்ணுகளா இப்படி வாழமட்டையிலே கால் வச்ச மாதிரி தொபுக்கடீர்னு இந்த பொண்ணுங்க சிரிப்ப பார்த்து பல்ட்டி அடிக்கறீங்க? அட இதையே ஒரு பையன் கேட்டா மட்டும் ஏண்பா இப்படி வெளகெண்னைய லிட்டர் லிட்டரா குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கறீங்க ?

அப்புறம் இந்தப் பொறந்தநாள் கலாட்டா இருக்கே !! ஒரு பொணுக்கு பொறந்த நாளுன்னா போதும். சும்மா ஆளாளுக்கு முந்துன நாளுல இருந்தே சும்மா கரகாட்டம் ஒயிலாட்டம்னு சலங்கைய கட்டிகிட்டு சும்மா மாங்குயிலே பூங்குயில்லேன்னு ஜல்லு ஜல்லுன்னு குத்தைப்போட்டாய்ங்கன்னா சும்மா நாளுநாளைக்கு வாழ்த்தறேன்னு தேத்தறேன்னு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு குத்தைப்போடுவாய்ங்க பாருங்க ஆஹா என்னா ஒரு வேகம் என்னா ஒரு அக்கரை தெரியும் தெரியுமா?? பயபுள்ளைங்க ஓடிப்போயி கேக்கு வாங்கி வெட்டறது என்னா? ஆள் சைஸுக்கு க்ரீட்ங்ஸ் கார்ட் வாங்கி கொடுக்கறது என்னா? சும்மா கெடாவெட்டி பொங்கல வச்சு பொண்ணுங்க மனசுல பட்டறையப்போட சும்மா பொலபொலன்னு இந்த பசங்க பண்ணுற கலாட்டா இருக்கே என்னத்தை சொல்ல? இதுவே ஒரு பையனுக்கு பொறந்த நாளுன்னா டேய் மாப்ளே ஹாப்பி பர்த்டேடான்னு கைய மட்டும் கொடுத்துட்டு எங்கடா குவாட்டர்ன்னு காலைல இருந்தே மெதக்க ஆரம்பிச்சுசுடுவாய்ங்க ! சாயங்காலம் வந்துச்சோ இல்லையோன்னு சும்ம ஊத்து ஊத்துன்னு உத்திகிட்டு திரும்ப மப்பிலே தங்களோட மன்மதலீலைகளை அரங்கேத்தி விடுர அலப்பரை இருக்கே ??? ஏம்பா கண்ணுகளா இந்த பொண்ணுங்கன்னா மட்டும் கேக்கை தூக்கிகிட்டு பேக்கு மாதிரி காவடி எடுக்குறீயளே அதையே பசங்கன்னா மட்டும் அவனுகளை ஊத்தி ஊத்தி கொடுக்கற ‘பார்டெண்டரா’ பக்குறீயளே ஏன்பா??

சரி ஏண்டா நம்ம ஆண்குலங்கள் எல்லாம் இப்படி பொண்ணுங்க முன்னாடி மண்ணைப் பொராண்டிகிட்டே இருக்காய்கன்னு நானும் இருக்குற கொஞ்சம் நஞ்ச மூளைய கசக்கிட்டு ரோசணை பண்ணிப்பார்த்தா..

டிரிங் டிரிங் டிரிங் ...
அட என் மொபைல் கூப்பிடர சத்தம் உங்களுக்கு கேக்குதில்ல? யாரு??...

அட இருங்கப்பூ நம்ம ப்ரெண்டு ஜென்சி பேசுது. மத்தியானம் பேசுனது, பாருங்க முக்கியமான விசயத்தை பத்தி எழுதிகிட்டு இருக்குறப்போ இந்த லூசு வேற போனைப்போட்டு உயிரை எடுக்குது, பேசாட்டி அது வேற கோச்சுக்கும். அப்புறம் அதுக்கு கேட்பரீஸ் வாங்கித்தந்து மாளாது. இருங்க பேசிட்டு வாரேன் சரியா ?? ஹிஹிஹிஹிஹி....

" சொல்லுடா என்ன விசயம்? "
.................................

" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு "

Wednesday, August 29, 2007

‘ஜில்’ ‘ஜில்’ ‘ஃபிகர்’ தண்டா....

லேசா குல்பி ஐஸ் flavourla அப்படியே ரெண்டு டேபிள்ஸ்பூன் சேமியாவைப் போட்டு அப்படியே ரெண்டு கலக்கு கலக்கி ஒரு 300 மிலி நீளமான டம்ளர்ல கொடுக்குற குஜாலக்கடி சரக்குதாங்க ஜிகர்தண்டா !! சரக்குன்னு சொன்ன உடனே ஏதோ டாஸ்மாக்குல விக்குற ஜில் ஜில் பீருன்னு நெனச்சுடாதீங்கப்பூ !! இது பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும் சப்புக்கொட்டி சாப்புடுற சூப்பரான பானம், மதுரையோட அக்மார்க் இந்த ஜிகர்தண்டா. சாப்ட்டு இருக்கீயளா?? மதுரை போய்ட்டு ஜிகர்தண்டா சாப்பிடாம வந்துடாதீங்கப்பூ !!

ஆஹா ஜிகர்தண்டா அவ்ளோ சூப்பரா இருக்குமா?? நான் இதுவரை சாப்டதே இல்லையேன்னு கவலைப்படுறவுகளுக்கு ஜிகர்தண்டாவை நான் இப்போதைக்கு கொடுக்க முடியாட்டியும் சாப்டா எப்படி மனசு ஜில் ஜில்லுன்னு குஜாலா இருக்கும்னு உணரனும்னா இங்க இருக்குர ஓமணகுட்டிகளோட சந்தோசமான இந்த ‘போஸ்’ களைப்பாருங்க மக்கா!!

ஓணதுக்கு எதுக்குடா சென்னையிலே லீவு வுடாங்கன்னு மண்டையப்பிச்சுகிட்டு அலைஞ்சப்போதான் தெரிஞ்சுது ஆஹா நம்ம சேர நாட்டிளம் பெண்களைப்பத்தி முண்டாசு கட்டிகிட்டு ஏண்டா நம்ம பாரதியார் அப்போவே தீர்க்கதரிசனமா பாடுனாருன்னு ?!!! இவுக எல்லாம் இல்லாட்டி நம்ம தமிழ் சினிமா என்ன ஆகும்னு நெனச்சுப்பாகவே முடியலையே !!

Thursday, August 16, 2007

Tamil பட்டறை

கலைஞர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதறார் சுஜாதா திருக்குறலுக்கு உரை எழுதறார் ஆனால் கொஞ்சம் நாளா நீயும் தமிழ்ல எழுதிகிட்டு இருக்கே ஜொள்ளுப்பாண்டி இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு என்ன தொண்டாற்றினாய்? அவங்க ரேஞ்சுக்கு நீ தொண்டு கன்னா பின்னானு ஆத்தாட்டியும் அட்லீஸ்ட் உன் ரேஞ்சுக்கு ஏதாச்சும் தமிழுக்கு தொண்டாற்றுடா திடீர்னு ஒருநாள் நம்ம மனசாட்சி என்னைய போட்டு உலுக்குன உலுக்குல சரி போனா போவுது தமிழ் கொஞ்சம் அதுக்கும் தான் தொண்டாற்றிவிட்டு போகலாமேன்னு நெனச்சி இந்தப் பணியை ஆரம்பிக்கிறேன் . ஏதோ பெரியவங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மாலான ரேஞ்சுக்கு எழுதறேன் கோச்சுக்காதீங்க !!

நம்ம வாசகி ஒருத்தாங்க ஏண்டா பாண்டி நீ எழுதர இதெல்லாம் தமிழ் தானா?? அர்த்தத்தை தேடி கூகுள்ல இருந்து குண்டலகேசி வரைக்கும் தேடித் தேடி அலுத்துப்போய்ட்டேண்டான்னு நாக்குமேல பல்லுப்போட்டு கேட்டுப்புடாங்க. இதனால் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் நாட்டுல இல்லாமல் மலேசியா சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பாவிலும் இன்னும் அமேரிக்காவின் பல பகுதிகளிலும் சிந்தியும் சிதறாமல் இருக்கும் கோடானு கோடி தமிழ் மக்களுக்கு இத்தகைய வழங்குதமிழ் (இள-வட்டாரத்தமிழ்) வார்த்தைகள் தெரியாவிட்டால் நாளைய தலைமுறை என்னை மன்னிக்காது என்ற ஒரே காரணத்தால் இந்தப் பணியை பெருந்தன்மையோடு என் தோள்களில் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அது தமிழ் மீது எனக்கு உள்ள பெரும் காதலால் தான் என்பது நீங்க அறியாதது அல்ல ! (யாருங்க அது தமிழ் எந்தப்பொண்ணோட பேருன்னு கேக்குறது? பிச்சுப்புப்புடுவேன்! பிச்சு) . சரிடா ரொம்ம மொக்கையப்போடத மேட்டருக்கு வான்னு நீங்க எல்லாம் கதர்றது கேக்குது வர்றேன் வர்றேன்.

ஜொள்ளகராதி

மப்பு - ( உச்சரிப்பு :- [ ம-bb- பு] ) போதை.

வழக்கமா ரெண்டு பீரை உள்ள உட்டுகிட்டா வரும் இல்லாட்டி ஏதாச்சும் ஒரு அழகான பொண்ணை நீங்க பார்த்தாலோ இல்லை அந்தப்பொண்ணு தெரியாத்தனமா உங்களைப் பார்த்தாலோ கூட வரும்.சரி இப்போ இந்த வார்த்தையை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம்ன்னு இப்போ பார்க்கலாமா??

எடுத்துகாட்டு :-

“ டேய் மாப்ளே ரெண்டு ரவுண்டுக்கே இப்படி மப்பாகி போச்சேடா !!”
“ என்னடா இன்னும் கூட மப்பு தெளியலையா? “
“ மாப்ளே அவ என்னய பார்த்தாலே மப்பாகி போகுதுடா ! “


மப்பும் மந்தாரமும் - மேகமூட்டம்.

பொதுவா வானம் மேகமூட்டதோட மழைவர்றதுக்கு முன்னாடி அப்படியே லேசா ஜில்லுன்னு காத்தடிச்சுகிட்டு ரொமான்ஸ் மூட் க்ரியேட் பண்ணுமே அதுதாங்க இது ! ஆனா தெந்தமிழ் நாட்டிலே வயசுக்கு வந்த பசங்க எல்லாம் இதையே ஸ்லைட்டா கொஞ்சம் modify பண்ணி கோக்கு மாக்கான பிகர்களைப் பார்த்தா லேசா உயர்வு நவிர்ச்சி அணிய கலந்து பீளிங்ஸ்சோட பிதற்றுற வார்தை தாங்க இது.

எடுத்துக்காட்டு :-தமிழறிஞர் :- என்ன இது வானம் மப்பும் மந்தாரமுமா இருக்கே ? மழை வருமா ?

தமிழிளைஞர் :- “ டேய் யார்றா மாப்ளே அது மப்பும் மந்தாரமுமா நம்ம ஏரியாவுல உலா வர்ற இவ யாரு ?!? “


போங்கு - (உச்சரிப்பு :- [ Bo-ங்-gu ] ) தேறாத , பொய்யான .

இந்த போங்கு என்ற வார்த்தை தமிழ் தானா என்ற சர்சை இரண்டாம் நூற்றாண்டிலேயே காளமேகப்புலவரால் சோழமன்னனின் அவையிலே எழுப்பபட்டடாத வரலாற்றுக்கல்வெட்டுகள் தெரிவித்தாலும் தமிழ் இளைஞர் பட்டாளம் புதிய வரலாற்றை படைக்க வீருகொண்டு எழுந்து மானாவாரியாக உபயோகிக்கும் வார்த்தைதான் இந்த போங்கு என்றால் அது மிகையல்ல !

எடுத்துக்காட்டு :-

“ விடுடி அவன் ஒரு சரியான போங்கு பய ! “
“ ஏண்டா இந்த போங்கு பிகருக்குத்தான் இத்தனை பில்டப் கொடுத்தியா ? “


என்ன இப்போதைக்கு இந்த மூணு வார்தைய கத்துகிட்டு தமிழ் புலமைய ரெண்டு இன்ச் வளர்த்து இருப்பீங்களே !! இந்த வாரம் இது போதும் . உங்களுக்கு தெரியாத புரிபடாத தமிழ் வார்த்தைகளுக்கு இதே மாதிரி அர்த்தத்தை தேடி கண்டுபிடிக்க தொல்காப்பியத்தோட பேட்டையில காத்துகிட்டு இருக்கேன் மக்களே ! ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க என்ன ?

Tuesday, July 31, 2007

காதல் காவடி
நம்ம பய ஒருத்தன் கொஞ்ச நாளா சரியே இல்லங்க. நல்லா கல கலன்னு சிரிச்சுகிட்டே ஜோக் அடிச்சுகிட்டு பாக்குறவுகளையெல்லாம் கதறக் கதற ஓட்டிகிட்டு சும்மாகோயில் காளை கணக்கா துள்ளிகிட்டு சுத்திகிட்டு இருந்த பய இப்போ எல்லாம் ஏதோ மசக்கை வந்த பொண்ணு கணக்கா மூலையிலே போய் ஒக்கார்ந்துகிட்டு முகம் கொடுத்து பேசாம எங்கினயாச்சும் மூலையிலே போய் பதுங்கிகிட்டு மோட்டுவளைய பார்த்துகிட்டு இருக்குறான். ‘அட பாவி பயபுள்ள என்ன ஆச்சுடா உனக்கு?’ ன்னு ஒருநாளு பயலுக்கு வேப்பிலை அடிச்சு கேட்டப்போ பய மொகத்துல அப்படி ஒரு வெக்கம் !! டேய் நான் கூட சொல்லிகிட்டு இருப்பேன்ல என் ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க ப்ராஜெக்ட் பண்ணுதுங்கன்னு?? அதுல ஒரு பொண்ணுமேல எனக்கு ... என்னான்னு சொல்லத் தெரியலை ஆனா ஒரு மாதிரி பீலிங் ! ‘ ன்னு சொல்ல சொல்லவே அப்படியே ட்ரீம் அடிக்கிறான்.அடப்பாவிப்பயபுள்ள ! அதுதானா இது ?!! ன்னு நெனச்சுகிட்டு ‘டேய் என்ன இப்படி லேசா சூடம் காட்டிட்டு போய்ட்டா என்ன அர்த்தம் ? கொஞ்சம் வெளக்கமா சொல்லு ராசான்னு! ‘ பயலுக்கு லேசா விபூதியடிசு வுட்டு கேட்டேன். இந்தமாதிரி மேட்டரெல்லாம் தான் நமக்கு அல்வா சாப்புடற மாதிரி ஆச்சே !! ‘ டேய் பாண்டி அந்த பொண்ணுக என் கம்பெனியிலே ப்ராஜெக்ட் பண்ண வந்துதுங்க அதுகளுக்கு நானும் இன்னொரு பையனும்தான் ‘கைட்’ பண்ணறோம். ரெண்டுமே என்கிட்ட நல்லாதான் பேசுது. நான் எதைய சொன்னாலும் பெரிய ஜோக் கேட்ட கணக்கா வுழுந்து வுழுந்து சிரிக்குதுக. அப்படி சிரிக்குறப்போ அவ ஒரு பார்வை பார்ப்பா பாரு அதையப்பபார்த்து நான் வுழுந்துடேண்டா!! “ பயலுக்கு சும்மா காதல் பீலிங் ரெண்டு காலுலையும் சலங்கையக் கட்டிகிட்டு கன்னாபின்னான்னு ஆடுறது கண்ணுல தெரியுது !‘சரி சரி அதான் ரெண்டு பேர் அதுகளுக்கு சொல்லிகொடுக்கறீங்களே உன்னையதான் பார்க்குதுன்னு எப்படிடா சொல்லுறே?’ ன்னு கேட்டதுக்கு ‘அட மாப்ளே அவன் சரியான சொம்புடா! வாயே தொறக்க மாட்டான் என்னமோ இவந்தான் பில்கேட்ஸுக்கே கோடிங் குரு மாதிரி எப்பபாரு கோடிங் தான்.எப்ப அதுககிட்ட பேசுனாலும் சப்ஜெக்ட்டு மட்டும் தான். அவனை வுடுடா. என்னைய மாதிரியே அவளுக்கு இப்படி பீலிங்ஸ் வந்து இருக்கான்னு எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன்!’ ன்னு பய கட்டபொம்மு கணக்கா டயலாக் வுட்டுட்டு கெளம்பிட்டான் !

பய அதுக்கபுறம் பாக்கணுமே! டெய்லி ஆபீஸுக்கு பேஷன் பேரேட் தான்! வாயிலே விசில்தான்! பய கால் தரையிலயே படரது இல்லை ! ‘ஏண்டா இந்த ஞாயித்துக்கெழமை லஞ்சுக்கு ஏதாச்சும் பஃபே போலாமா?’ ன்னு கேட்டா ‘ சாரி மாப்ளே என் ப்ராஜெக்ட் மேட்ஸோட லஞ்சுக்கு அப்பாய்ண்மெண்ட் பிக்ஸ் ஆய்டுச்சு கோச்சுகாதடா! ன்னு சொல்லிட்டு பிளிறிகிட்டு ஓடுறான் ! அடப்பாவி இப்படி ஒருத்திக்காக இருக்கறவனுகளை எல்லாம் அத்துவுட்டுட்டு போறியேடான்னு நெனச்சாலும் சரி நம்ம பய எஞ்ஜாய் பண்ணட்டும் மனசு என்னவோ வாழ்த்திகிட்டு தான் இருந்துச்சு. ஒரு பயலோட மனசு இன்னோரு பயலுக்குதானே தெரியும் ?? !!!

இப்படியே பயலோட வண்டி டாப் கியர்ல ஒரு ரெண்டு மாசத்துக்கு ஓடிகிட்டு இருந்துச்சு. ஒரு ரெண்டு நாளா பயகிட்டே இருந்து மூச்சு பேச்சையே காணோம். ‘என்னடா கண்ணா சும்மா கொம்பு சீவுன சிம்பு கணக்கா வர்றவன் போறவனையெல்லாம் சும்மா பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு இருந்தே? இப்போ என்னடான்ன டி ராஜேந்தர் கணக்கா தாடியோட சீன் போடுறே என்ன விசயம் ? ன்னு கேட்டதுதான் பய கண்ணுல இருந்து சும்மா குத்தால அருவி கணக்கா லிட்டர் லிட்டரா கண்ணீர் !!! அட பாவி என்னடா ஆச்சும் சொல்லித்தொலைன்னு கேட்டா ‘ மாப்ளே நாளு நாளைக்கு முன்னால அவகிட்டே என் மனசை தொறந்துட்டேண்டா ! அவ முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட பரவாயில்லை! ஆனா அவ அந்த கோடிங் கோயானை விரும்பரதா சொல்லீட்டாடா என்னால தாங்க முடியலைடா ! பய பாரேன் எப்பவுமே ஏதோ கோடிங் எழுதர மாதிரியே ‘சீனை’போட்டுகிட்டு இருந்துட்டு ‘கேப்’புல கெடா வெட்டீட்டாண்டா ! ஏண்டி எங்கூட தானே சிரிச்சு சிரிச்சு பேசுனே அவன்ந்தான் சரியான உம்மணாமூஞ்சின்னு சொல்லுவியேடின்னு கேட்டா அவர் அப்படி இல்லைடான்னு எவ்ளோ funny தெரியுமா ? ன்னு சொல்லறாடா !! பாருடா அந்த நாயி ‘அவர்’ ஆய்ட்டாரு. அந்தப் பன்னி என்ன fun பண்ணிக் கவுத்தானோ ? இதைய கூட தாங்கிடேண்டா! ஆனா கடைசியா சொல்லறா 'டேய் உன்னைய பார்த்தா செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கே'ன்னு சொன்னா பாரு! அதுக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியலைடா !!! “

நீங்க சொல்லற மொக்கை ஜோக்குக்கெல்லாம் சும்மா கெக்கேபிக்கேன்னு இந்த பொண்ணுங்க சிரிக்குதுன்னு அதுக பின்னாடி காதல் காவடி எடுத்துகிட்டு போய்டாதீங்க மக்களே!! உங்கள ஒரு வடிவேலு அண்ணன் மாதிரியோ இல்லை விவேக் தம்பி மாதிரியோ நெனச்சு இருக்கலாம் யாரு கண்டா ? அப்படியே எப்ப பாரு மானிடரையே மொறைச்சு மொறைச்சு பார்த்துகிட்டு ‘பப்பரக்கா’னு பேக்கு மாதிரி சீன் போட்டுகிட்டு பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக ! பார்த்து சூதானமா ‘லவ்’வுங்கப்பூ !!

Monday, July 23, 2007

தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா...
நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னாலும் சொன்னாரு நம்ம மண்டைக்குள்ள சும்மா டின் டின் டின்னு மணியடிக்குது. அதென்னாங்க தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா எப்படி இருப்பாங்கன்னு !! ஆஹா நாமளும் தமிழ் நாட்டுலதானே இருக்கோம் நம்ம கலாச்சார சாகுபடி என்னான்னு தெரிஞ்சுக்கலேன்னா நீயெல்லாம் வேஸ்டுடா பாண்டின்னு நம்ம சிந்தனை சுனாமியா சுழட்டி சுழட்டி அடிச்சதிலே ஆனது ஆவட்டும்னு வழக்கம் போல தமிழ் கலாசாரதோட வேட்டி கட்டிகிட்டு கலாசார வேட்டைக்கு கெளம்பலாம்னு நெனச்சா அது ( வேட்டிதாங்க ) எந்நேரமும் அவிழகூடிய அபாயம் இருப்பதால் ( முன்ன பின்ன கட்டி இருந்தா தானே ?!) சரி சரி போனா போவட்டும்னு ஜீன்ஸும் கதர் சட்டையும் போட்டுகிட்டு ஆராய்ச்சிக்கு கெளம்பிட்டான்யா பாண்டி !!!


அட ஒரிஜினல் தமிழ் காலாச்சாரம் என்னாங்க?? நாமளும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஏதாச்சும் கோயிலுகு போய் தாவணி போட்ட தீபாவளி ஏதாச்சும் தென்படுதான்னு பார்த்தா என்ன சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? மருந்துக்கு கூட ஒரு தாவணிய காணோம். ஆஹா என்னடா இது தாவணிதான் தமிழ் கலாசாரம்ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் படத்துல காட்டுனாவுளே என்ன இது? ஆராச்சும் ஒருத்தராவது கடை பிடிக்கறாங்களா? இல்லையே !!!


சரி போனா போவுது தமிழ் கலாசாரம் நல்ல தமிழாவது பேசுதான்னு பார்த்த ‘ ஸ்வாமி கேன் ஐ ஹாவ் சம் விபூதி ப்ளீஸ் ! ’ ன்னு சும்மா இங்கிலிபீஸ்ல டயானா தங்கச்சி கணக்கா பீட்டர் உட்டுட்டு பயபக்தியோட கூட நிக்குற தமிழ் பயலுவகள எல்லாம் எளக்கார ‘லுக்’ உட்டுகிட்டு இருக்குறாக !

சரி தமிழ் கலாச்சாரத்தோட நம்ம பயளுவ வேட்டிய கட்டிகிட்டு பக்தியோட சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா ஆரச்சும் ஒரு பொண்ணாவது பாகுறாவுலான்னு பார்த்தா அட அதுவும் இல்லையே. சரி பாக்காட்டி போவுது போனா போறானுக நாமதான் தமிழ் கலாசார ‘சிம்பள்’ ளான தாவணிய மறந்துட்டோம் இவனுகளாவது ஞாபகம் வச்சு வேட்டியோட வர்றானுவளேன்னு ஒரு மரியாதையோட பார்க்க வேணாம்? ‘அட இங்க பாருடி மல்லு வேட்டி மைனர் ! ‘ னு நக்கல்வுட்டு கலாய்க்குதுங்க !

நம்ம ஆளுக்கு நெம்பத்தான் ஆசைங்க. பொண்ணு ‘கலரா’ வும் இருக்கோணும் ‘கல்ச்சர்’ரோடவும் இருக்கோணுமாம்.என்ன கொடுமை சார் இது? ஆமா அப்போ நல்ல செவப்பா கலரா இருக்குற பொண்ணுகதான் தமிழ் கலாசாரத்தை தொட்டில்ல போட்டு தாலாட்டராவுளான்னு பார்த்தா அட அதுவும் இல்லீங்க துப்பட்டாவையே ‘பின்லேடி’ (பின்லேடனோட பெண்பாலுங்கோ ! ) கணக்கா மூஞ்சியில சுத்திகிட்டு பைக் பின்னாடி தெறந்த மனசோட உக்கார்துகிட்டு பாக்குறவுக ‘பைக்’குகளை எல்லாம் தொட்டில் கணக்கா தள்ளாட வைக்கிறாங்க !!

என்ன பண்ணியும் தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு எப்படி இருக்கும்னு கண்டே புடிக்க முடியலைங்க ! ஆராச்சும் பெரிய மனசு பண்ணு தமிழ் கலாசாரத்தை பத்தி ஒரு லெக்சர் கொடுத்துடு போங்களேன் ப்ளீஸ் !!!

Tuesday, June 19, 2007

Modern Girls vs Ultra Modern Girls
அல்லும் பகலும் அயராது ஆணிபுடுங்க பணிக்கப்பட காரணத்தால் சங்கப்பணிகளையும் சொந்தப்பணிகளையும் புறம்தள்ள வேண்டிய கட்டாயத்துள்ளாக்கப்பட்ட சங்க சிங்கம் உங்கள் தங்கம்( வேற யாருங்கோ? தம்பி ஜொள்ளுபாண்டிதானுங்கோ! ) சிறிது நாட்களுக்கு கைகளும் வாயும் கட்டப்பட நிலையிலே மற்ற சிங்கங்கள் அடிக்கும் கூத்தையும் கொட்டத்தையும் பார்த்து மகிழ்ந்துகொண்டு எங்கிருந்தாலும் வாழ்கவெனெ மனதிற்குள்ளாகவே வாழ்த்திகொண்டிருந்த வேளையிலே எங்கிருந்தோ ஒரு ஈனக்குரல் செவிப்பறையை வந்து சுனாமியாய் தாக்கி தடுமாற வைத்த அந்த பொழுதிலே ஒலித்த அசரிரி ‘ டேய் செல்லம் இப்படியே இருந்தா ஜொள்ளுப்பண்டிக்கு சங்குதாண்டி ! சீக்கிரம் அவனுக்கு அப்படியே ரெண்டு கட்டிளம் கம்மர்கட்டுகளையும் ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டாகளையும் அண்டா அண்டாவாக ரத்தநாளங்களில் ஏற்றாவிட்டால் ‘ பிசாசோபிகரோசைடிங் ‘ சின்ரோம் வந்து கொத்தோடு வாரிகொண்டு போக வாய்ப்புள்ளதாக’ ஜொள்ளுப்பேட்டை மருத்துவர் அய்யா ஜொள்ளானந்தா சொன்னதால் வேறு வழியின்றி ஜொள்ளுப்பாண்டியின் ICU வான சென்னையின் லேட்டஸ்ட் சென்சேஷன் பிகர்களின் பதாமிஷேக தலம் புனித யாத்திரை பூமி சென்னைசிட்டி சென்ட்டருக்கு கைத்தாங்கலாக அழைத்துப்போகப்பட்டதின் விளைவே இந்த கட்டுரையன்றி வேறொன்றும் இல்லை பராபரனே !

Modern Girls
டி சர்ட் போட்டுகிட்டு மங்களகரமா சுத்துவாங்க

Ultra Modern Girls
அதோ டிசர்டில கையை கிழிச்சுவுட்டுகிட்டு கையில்லாத பனியனோட பரிதாபமா உலாவருவாங்க

Modern Girls
லூசுமாதிரி லூசா ஒரு ஜீன்ஸ் போட்டுகிட்டு சுத்துவாங்க

Ultra Modern Girls
போட்டுகிட்டு தச்சாங்களோ இல்லை தச்சுகிட்டுதான் போட்டாங்களோன்னு கவலைய உண்டாகுற மாதிரி ஒரு ஜீன்ஸோட கலவரமா உலாவருவாக

Modern Girls
ஜீன்ஸ் டிசர்ட் போட்டுகிட்டு ஏதோ ‘ஹேர்பேண்டு’ எல்லாம் ஹேர்லதான் போட்டுக்கணுங்கர பழைமைவாதத்தில சடைபின்னி அதுல இந்த ‘ஹேர்பேண்டு’ போட்டுகிட்டு ‘தேமே’ ன்னு சுத்திகிட்டு இருப்பாக

Ultra Modern Girls
எங்க அவுக போட்டு இருக்குற டிசர்ட்டு ஜீன்சை ‘டச்’ பண்ணி டார்சர் கொடுத்துடுமோங்கற கவலையில ஜீன்ஸுக்கு பாதமகமில்லாம ஒரு டிசர்ட்டை போட்டுகிட்டு அப்படியே ஹேர்பேண்டு எல்லாம் கையில போடுறதுக்குதாங்கற வாழ்க்கைத் தெளிவோட தலைவிரிகோலமா கலவரமா சுத்திகிட்டு இருப்பாக !

Modern Girls
அதிகபட்சமா ‘short’ சுரிதார் போட்டுகிட்டு வாய பொளந்துகிட்டு பாகுறவுகளை ‘அற்பனே’ ன்னு ஒரு ‘லுக்’ வுட்டுகிட்டு சீனைப்போடுவாங்க.

Ultra Modern Girls
இவங்களும் ‘short’ சுடிதான் போடலாம்னு நெனச்சுகிட்டு உள்ள போடுற ‘ஸ்லிப்’பையே கலர் கலரா கொழந்தை மனசோட போட்டுகிட்டு வந்து பாகுறவுக மனசை தவழவச்சுடுவாங்க.

Modern Girls
முக்கா காலுக்கு ஒரு பாவாடைய போட்டுகிட்டு தேம்ஸுக்கு பக்கத்துலதான் என் வீடுங்கர ரேஞ்சுகு அலப்பறை வுடுவாங்க

Ultra Modern Girls
இவுக ‘கால்’ காலுக்கு கொஞ்சம் கீழ வரைக்கும் பாவாடைய போட்டுகிட்டு ஜெனிபர் லோபஸ் தங்கச்சி ரெஞ்சுக்கு சிலுப்பிகிட்டு இருப்பாக

Modern Girls
இவுக அப்படியே டக்கு டகுன்னு ஹைஹீல்சை போட்டுகிட்டு நடந்தா ஏரியாவே அதிர்ரும்ல ?

Ultra Modern Girls
இவுக ஏரியாவுகு வந்தாலே பால்குடி பாலகன் முதல் நாளைக்கு பால் ஊத்தபோற தாத்தா வரை பாக்குறவுக மனசெல்லாம் சும்மா அதிர்ரும்லே ??

என்ன கண்ணுகளா ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு வெளகத்தை அள்ளித்தெளிச்சுருக்கேன். மார்டன் பொண்ணுகளுக்கும் அல்ட்ரா மார்டன் பொண்ணுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிஞ்சுகிட்டு ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்டிங்களா?? அப்படியே வந்து நம்ம ஆராய்ச்சிக்கு நிதி கொடுத்துட்டு போங்கப்பூ !!
Friday, April 27, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் பின்ணணியில் உண்மையில் நடந்து என்ன ?

சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்ன??

ஏன் இதைப்பற்றி யாரும் எழுதவில்லை ??

இந்த பிண்ணனி உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ??


யாராச்சும் இதையப்பத்தி எழுதுவாங்கனு நானும் wait பண்ணி பார்த்தேன். தேவையில்லாம நீ இதையப்பத்தி ஏற்கனவே கற்பனையிலே ப்ளாக் மீட்டிங்க நடத்தி எழுதி வாங்குன ஆப்பு போதாதா ஜொள்ளுப்பாண்டி??!! கொஞ்சம் அமைதியா இருடா ன்னு மனசு வேற அபாய சங்கு ஊதுது !! நம்மளுக்கு தான் மனசும் சரி கண்ணும் சரி என்னிக்கு நம்ம பேச்சை கேட்டு இருக்கு ??

சரி பொறுமை காப்போம், யாரச்சும் அரசல் புரசலாகவவது இதையப்பத்தி எழுதுவாங்க ஓரமா ஒக்கார்ந்து ‘பிட்’ டைப்போடலாம்னு பார்த்தா அதுகெல்லாம் யாருமே வாய்ப்பு கொடுக்கவேயில்லை. சரி ப்ளாக் மீட்டிங்குக்கு பல போஸ்ட் எழுதி கொலவையிட்ட பழம்பெரும் 'தலை' கள் பலபேரு வேற வந்து இருந்துருக்காங்க நாம கொஞ்சம் அடக்கி வாசிப்போம்னு நானும் ‘கம்’முனு தான் ஒருவாரம் கையைக்கட்டிகிட்டு சும்மா இருந்தேன் . ஆனா முடியலை என்னால முடியலை !! ஏறகனவே நாம வாங்குன ஆப்பு வேற DTS எபக்ட்ல கண்ணுக்கு முன்னாடி கபடி ஆடுது !! ஆனாலும் நம்ம கை என்னவோ சும்மாவே இருக்க மாட்டீங்குது !!

சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த ப்ளாகர்ஸ் மீட்டிங்கின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்னான்னு எனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்குங்க. அன்னிக்கி வலைப்பதிவர் சந்திப்பில் என்ன பேசினாங்க என்ன முடிவு எடுத்தாங்கன்னு கிட்டத்தட அரைடசன் பதிவுக்கு மேல நம்ம பதிவுலக மக்கள் எழுதிபுட்டாங்க . ஆனா நான் அதையப்பத்தி சொல்ல வரலை சரியா?? ஆனா ஏன் இப்படி பின்ணணி தகவலகள் இருடடிப்பு செய்யறாங்கன்னு எனக்கு தெரியலை. இப்படி பின்ணனியில் நடந்த உண்மைகளை மறைச்சா நாளைய வரலாறு என்னைய மன்னிக்கவே மன்னிக்காது !!!

இதற்காகவே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி எத்தனை ஆப்புகள் வாங்கினாலும் சரி !! நீ எழுதுடா ஜொள்ளுப்பாண்டினு என் மனசுலா ஓரமா A/c போட்டு தூங்க வச்சு இருந்த வீரன் ஜலஜல ஜொள்ளுபாண்டி தன் வாளை உருவிகிட்டு வந்துட்டான் உண்மைகளை சொல்ல !!!


இதோ நடந்த உண்மைகள் !!!

வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும்போது நம்ம பதிவர்கள் யாரும் நடக்கவே இல்லை !! எல்லாரும் உக்கார்ந்துதான் இருந்தாங்க.

ஆனா அவங்களைச்சுத்தி பல பேரு பார்க்கிலே நடந்துகிட்டு இருந்தாங்க !! அதாங்க ‘வாகிங்’ போய்ட்டு இருந்தாங்க.

அதிலே மூணு அழகான அதிலும் ரெண்டு அதி அழகான பொண்ணுங்க நடந்துகிட்டு இருந்தாங்க.

நடந்த பொணுங்க எல்லாரும் ஒரு ‘பாடிகார்ட்’ கூடத்தான் வந்து இருந்தாங்க. பொதுவா அந்த ‘பாடிகார்ட்’டுக அவங்க அம்மாவோ அப்பாவோதான் !

எல்லா பொண்ணுங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்து நடந்து ஜொள்ளுப்பாண்டிக்கு கடுமையான கவனசிதைவை ஏற்படுத்தினார்கள் என்றால் மிகையாகாது. பதிவர்கள் பேச்சு காதில்தானே விழபோகுது என காதை பதிவர்களுக்கும் கண்ணை பின்ணனியில் நடக்கும் ‘ கன்னி ’ யருக்கும் பெரிய மனது பண்ணி ஒப்படைத்து விட்டார் பாண்டி !! யார் மனசும் புண்படக்கூடாது என்பதிலே எனக்கு இருக்குற அக்கரைய நெனச்சும் நீங்க ஆனந்தகண்ணீர் வடிக்கறது எனக்கு தெரியுது !!


பின்குறிப்பு :-

இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை சொன்னதால நான் நாளைல இருந்து வெளிய நடமாட முடியுமான்னு எனக்குத் தெரியலை. ஆனா பொது வாழ்க்கைன்னு வந்துட்ட பிறகு மக்களுக்கு உண்மைய சொல்ல பாண்டி மாதிரி யாரசும் ஒருத்தராச்சும் வீரமா இருக்கனும்னு நாளைய வரலாறு சொல்லட்டும் என்ன சொல்றீங்க?? !! படிச்சிட்டு ஓரமா நம்மளை வாழ்த்திட்டு போங்கப்பு !!!

Sunday, April 01, 2007

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்)

நம்ம தோழி ஒருத்தரு புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன் பாண்டின்னு நமக்கு சந்தோசமா மெயில் தட்டி உட்டுருந்தாரு. அதுக்கு பாராட்டலாமேன்னு நானும் ஒரு phone ஐபோட்டு ‘என்னாமா கண்ணு எப்படி இருக்கு புது வேலை எல்லாம்?’ ன்னு கேட்டதுதான் போதும் அவ்ளோதான் ‘பாண்டி வேலை எல்லாம் ஜுஜுபிதான் !
(அவுக நம்மளை மாதிரி இல்லைங்கோ! நெசமாவே கொஞ்சம் மூளைக்காரவுகதான்!) ஆனா இந்த சீனியருக தொல்லை தான் தாங்கமுடியலை! அப்பபோ அதைய சொல்லுறேன் இதையக் கேக்குறேன்னு வந்து வழியறதைத்தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலைன்னு !” பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி ! நமக்குத்தான் ரொம்ப இளகின மனசாச்சே !! அதுவும் இப்படி தாய்குலங்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறதைப்பார்த்தா மனசு தாங்குமா சொல்லுங்க? அப்படியேக்கா மனசுலே ஒரு ரெண்டு ‘டன்’ பாரம் ‘லோட்’ ஆயிடுச்சு !!

அட இது நம்ம தோழிக்குக்கு மட்டுமா பிரச்சனை ? வெளியே வேலைக்குப்போற நம்ம எல்லா தாய்க்குலங்களுக்குமே உள்ள பிரச்சனை தானே ! எப்படி இந்த மெகா ஜொள்ளு பார்ட்டிகளை சமாளிக்கறதுன்னு ஏதோ நம்மாளான ஐடியாக்களை அள்ளித்தெளிச்சா என்னான்னு தோணுச்சு. இதோ களத்திலே குதிச்சிட்டான் ஜொள்ளுப்பாண்டி!! நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு போட்டுருவாங்க. ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது உங்கள் ஜொள்ளுப்பாண்டி !!

ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’ இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘ எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !


வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’ பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’ பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை ‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘ என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!


திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :

இந்த ‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா ‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம் விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு ‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’ வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!


அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச் பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?! குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல் உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல் ஊத்தி பத்தவசுடாதீங்க !!

Thursday, March 01, 2007

' குட்டி' ன்னாலே...

குட்டி

ஆயிரம்தான் சொல்லுங்க ! இந்த ‘ குட்டி ‘ ன்னாலே ஒரு தனி ‘கிக்’ குதான் இல்ல? லேசா சொல்லிதான் பாருங்களேன் ‘குட்டி!!’ கேட்கறப்போவே அப்படியே லேசா ஒரு மப்பு தலைக்கு ஏறலை ? அதுவும் நமக்கு எப்பவுமே இந்த குட்டி மேல ஒரு வீக்னெஸ் இருக்கதான் செய்யுதுங்க . நானும் என்னாதான் ஆசைய அடக்கினாலும் முடியவே மாடீங்குது. குட்டிய பார்த்தாலே என் கண்ணு என்கிட்டவே இருக்க மாடீங்குது !!

அதுவும் இந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் இருக்கே யப்பா !! ஏங்க இந்த நம்பருக்கு முன்னாடி மட்டும் ஒரு அல்வா ஜாமூன்னு இனிப்பா வச்சு இருக்காங்க? என்னா இருக்கு இந்த பதினாறுல மட்டும் அப்படி?? நானும் மண்டைய போட்டு உடைச்சுகிட்டு யோசனை பண்ணுறேன் ஒன்னும் வெளங்க மாட்டீங்குது !! சரி நமக்குதான் கண்ணுலதானே பலமே இருக்குன்னு நல்ல பார்க்கறேன் ! என்னாடா இது ஜொள்ளுப்பாண்டிக்கு வந்த சோதனைன்னு ரோசணை பண்ணுறேன் பண்ணுறேன் மூளையே சூடாகிபோச்சுங்க. இப்படியே போனா இருக்குர கொஞ்ச நஞ்ச மூளையும் வெடிச்சு சிதறுதேங்கா ஆய்புடும்டா பாண்டின்னு கவலையோட இருக்குறப்போதான் பொடேல் பொட்டுல அடிச்சாப்ல பதில் தோணுச்சுங்க !!>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>

ஒருவேளை பொறந்து பதினாறே நாள் ஆன இந்த குட்டிகளை பார்த்துதான் வச்சு இருப்பாகளோ??kutty6

என்ன பண்றது ஆராச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பூ. இந்த குட்டிகள பார்த்தாலே காலு நகர மாடீங்குது. அப்படியே தூக்கிவச்சு கொஞ்சனும் போல இருக்கே !! முடிஞ்சா அப்படியே ஒரு உம்மா கூட கொடுக்கணும் போல பரப்ரப்பா இருக்கு !!kutty5


இதுல இந்த குட்டிக கூட இருக்குற அம்மாதான் நமக்கு வில்லியே !
kutty4kutty3


குட்டிய நான் தூக்கிட்டனாம் . உடனே வந்து திரும்பி தூக்கிட்டு போக வந்துட்டாக இவுக அம்மா !


kutty2


kutti1
ஆனாலும் ரொம்ப கஷ்டம் தாங்க அவுக அம்மா கிட்டே இருந்து இங்கன வச்சு ஒரு போட்டோ புடிக்கறதுக்குள்ல என்ன பாடுபட வேண்டி இருக்கு !!


அப்புறம் அல்லாரும் நல்லா குட்டிய பார்த்தீயளா ?? எனக்கு தோணுன மாதிரியே உங்களுக்கு இதுகளை துக்கிவச்சு கொஞ்சணும் போல இருக்கா? உங்களு எந்த குட்டி வேணும்னு சொன்னீங்கன்னா குட்டி கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சவுடனே நானே கொண்டாந்து தாரேன்!! அட நெசமாதாங்க !!

Tuesday, February 20, 2007

எச்சரிக்கை : ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் !
ஜொள்ளனும் காதலிக்கக்கூடும்

ஆஹா இந்த வேலண்டைன்ஸ் டே வந்தாலும் வந்துச்சு நம்ம ப்ளாக் மக்கள் காதலை அப்படியே தமிழ்மணத்திலே கவிதையா கடைஞ்சு தேன்கூட்டைப்பிழிஞ்சு தேனா அமுதமா நம்ம கடைவாயிலே வச்சு தினி தினின்னு தினுச்சுட்டாங்க. அப்பா அம்மான்னு காதல் கவிதை கடல்ல இருந்து மூச்சு முட்டி முக்கித்தக்கி வெளியே வந்து பார்த்தா இன்னமும் அலை ஓயலை. விட்டா இங்க பாருடா ஒருத்தன் காதலிக்காம சும்ம சுத்திகிட்டு இருக்கான்னு கையிலே ரெண்டு காதலிய / கதலனை திணிச்சு விட்டுடுவாங்க போல இருக்கு !

ஏண்டா இவ்ளோ பேரு கவிதைய போட்டு பின்னி பொடல் எடுக்குறாங்களே என்ன விசயம்ன்னு கேட்டா அட கேணையேன்னு பார்த்துட்டு நீயெல்லாம் எழுதறேன்னு வெளிய சொல்லிக்க வெக்கமா இல்லை? வேலண்டைண்ஸ் டேக்கு ரெண்டு கவிதை எழுத வக்கில்லாம நீயெல்லாம் ஜொள்ளன்னு வேற பீத்திகிட்டு அலையறேன்னு நம்ம தம்பி செல்லமா கோவிச்சிகிட்டாரு. சரி அல்லாரும் இந்த காதல் கவிதை கடல்ல அப்படியேக்கா பல்டி அடிச்சு மூழ்கி பிகர் தேத்தராங்கலே நாமளும் ஒரு try உட்டு பார்த்தாதான் என்னான்னு தோணுச்சு.

சரின்னு எடுத்தேன் நம்ம போனாவ தட்டுனேன் நம்ம மூளைய ( இருக்கான்னு எல்லம் கேக்கப்பிடாது ஒகே? ) . இதோ காதல் என்ற இன்பத்தேன் சொட்ட சொட்ட நாமளும் அள்ளித்தெளிச்சிருக்கோம்லே ?!! அல்லாரும் படிச்சுபிட்டு காதல் பித்து பிடிச்சு அலஞ்சா நான் பொறுப்பில்லேன்னு தாழ்மையுடன் ஜொள்ளிக்கொள்கிறேன்.

எச்சரிக்கை 1 :
கவிதைய படிக்கும் போது காலில் செருப்பு இருக்கு அப்படீங்கறதை மறந்திடனும் சொல்லிபுட்டேன்

எச்சரிக்கை 2 :
கவிதைய படிச்சுபிட்டு இப்போவே சுடச்சுட காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்கனும் எல்லாம் நெனக்காதீங்க ! உடனே கொடுத்துடுங்க ஹிஹிஹிஹிஹிஹி

இனி ஓவர் டு என் கவிதை ஜொள்ளனும் காதலிக்கக்கூடும் ”


அவன் பார்த்துருவானோ?
இவன் போட்டுக்கொடுத்துடுவானோ?
இவ அண்ணன் பின்னீடுவானோ?
அவ அப்பன் சுளுக்கெடுத்துடுவானோ?
இப்படி பயந்து பயந்தே
எவ்ளோ நாளைக்குதான் சாவறது?
முடிவு பண்ணிட்டேன்
இப்போதைக்கு உனக்கு
லவ்லெட்டர் கொடுக்கறதில்லைன்னு ஹிஹிஹிஹி

இப்போல்லாம் நான்
படுத்துகிட்டே தூங்கறேன்
உக்கார்துகிட்டே சாப்புடறேன்
ஏன் நடந்துகிட்டே
பாட்டுகேட்கிறேன்
ஏன்னு உனக்கு புரியுதா??
அடி சிறுக்கி நான்
உன்னைய லவ் பண்றேண்டி !!

உன்னைய பார்க்குறப்போ
உன் தங்கச்சி எனக்கு
மச்சினியா தெரியறா
உன் தங்கச்சிய பார்க்குறப்போ
நீ எனக்கு மச்சினியா
தெரியரயேடி
என்னா ஒரு குறும்பு பாரேன்
இந்த காதலுக்கு !!

நீ ரொம்ப அழகா இருக்கேன்னு
சொல்றதுக்கு எனக்கே கொஞ்சம்
கஷ்டமாதான் இருக்கு
என்ன பண்றது ?
உனக்காக இந்த பொய்யகூட
சொல்லலைன்னா நான் எல்லாம்
என்ன காதலன் ??

Tuesday, February 06, 2007

ரயில் மயில் !

ரயில் மயில்


எப்பவுமே இந்த ரயிலுல போறது நமக்கு ரொம்ப பிடிச்ச விசயம். ஆனா பாருங்க இந்த ரயிலுல கூட வர்ற மயிலுகளைப் பார்க்கறதுக்கான பாக்கியம் நமக்கு எப்பவுமே வாய்ச்சது இல்லை. அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை என் கம்பார்ட்மெண்டில் மட்டும் எப்பவுமே நம்ம கூட வர்றதெல்லாம் ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி 10 வருசம் ஆன பல்லுப்போன பாட்டிகளும் ஜொள்ளுப்போன தாத்தாக்களும் தான். என்னாடா இது ?? ஒருவேளை இப்படி நம்ம கூட எந்த ஒரு கண்ணுக்கினிய கட்டிளங்கன்னிகளையும் வரவிடாம இருக்குறதுக்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியோ?? ன்லாம் ‘அப்பர்’ பெர்த்திலே மல்லாக்கப் படுத்துகிட்டு நெம்ப நாள் யோசனை பண்ணிகிட்டு இருந்திருக்கேன். இதிலே எப்பவும் யாராச்சும் ஒரு தாத்தாவோ பாட்டியோ தன்னோட பேராண்டியா நெனச்சுகிட்டு உரிமையோட என்னோட லோயர் பெர்த்தை கேட்டு வாங்கிக்குவாங்க. நமக்குத்தான் எந்த பெர்த்திலே படுத்தா என்ன கூட என்ன பிகரா வருது பார்த்துகிட்டு கெடக்க? ன்னு போய் படுத்துக்குவேன்.

சென்னைக்கு கெளம்புற அன்னிக்கு ஒருநா ராத்திரி ரயில்வே ஸ்டேசன்ல நின்னுகிட்டு இருத்தேன். அப்படியேக்கா தலைய சுத்தி சுத்திநிக்குற கூட்டத்தைப்பார்த்தேன். இதிலே எந்த பாட்டி இன்னிக்கு நம்ம கூட வரப்போகுதோன்னு சுவாரஸ்யம் இல்லாம பார்த்துகிட்டு இருந்தா திடீர்னு கினி கினி கினின்னு மணியடிக்குது. ரயிலு வரலீங்க !! ஒயிலா ஒய்யாரமா அப்படியே கூந்தலை விரிச்சுகிட்டு ஒரு மயிலு !! அப்படியே நம்ம ஹார்ட்டு சும்மா 100 KM / Hr ல துடிக்க ஆரம்பிக்குது, கூட அப்படியே நம்ம ஆளை ஒரு இருவது வருசதுக்கு மிந்தி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஒரு அம்மா !! ஆஹா அவ அம்மா போல இருக்கே !! ஆனா அந்த அம்மாவை நான் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நெனச்சுகிட்டு இருக்குறப்போதான் தோணுச்சு “ அட நாயே தேவையில்லாத விசயமெல்லாம் இப்போ எதுக்கு ? பொரிச்சு வச்ச அரிசிப்பொரி கணக்கா வர்ற பொண்ணைப் பாருடா !! “ அம்பாள் வெள்ளை டாப்ஸும் கருப்பு லோவரும் போட்டுகிட்டு நடக்குது ! . எந்த ட்ரெஸ் போட்டாலும் செலருக்குத்தான் அசத்தலா இருக்குங்க. நம்ம ஜிங்கிலிக்கு அசத்தாலா இருந்துச்சுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன ?

ரெயிலு வந்துருச்சு அப்படியேக்கா நம்ம கம்பார்ட்மெண்டை தேடிப்போய் என் சீட்டிலே ஒட்காருறேன் அடங்கொக்க மக்கா!! இது நம்ம சீட்டூதானா ?? ன்னு சந்தேகம் வந்துடுச்சு !! பாரம்பரியமா நம்ம கூட வர்ற தாத்தா பாட்டிகளை எதிர்பார்த்துகிட்டு போனா அங்கன சீவி முடிஞ்ச ஷில்பாஷெட்டி கணக்கா ஒய்யாரமா உக்கார்துகிட்டு இருக்குது ஜிங்கிலி என் பைங்கிளி !! ( ராஜேந்தர் பட டைட்டில் கணக்கா இருக்கா ?? ) வெளியிலே அவ அம்மா !! அட தனியாத்தான் போறாளா ?? அட அட அட பாண்டி உனக்கு இம்பூட்டு யோகமா ?? 10 செகண்ட் தொடர்ந்து பார்க்கமாட்டமான்னு நாம நெனச்சுகிட்டு இருக்குற பிகர் 10 மணிநேரம் உங்க கூட அதுவும் எட்டிக்கிள்ளுற தூரத்திலே (சும்மா ஒரு பேச்சுக்குதான்கேச்சுகிடாதீங்க!) உக்கார்துகிட்டு வந்தா என்ன பண்ணறது ?? ஆத்தா! அம்மா! என்ன பண்ணறதுன்னே தெரியலையே!? “மீட் மை சவுத் இண்டியன் டயானா !! “ ன்னு சொல்றதுக்கூட எந்த ஒரு ஆப்பவாயனும் பக்கத்திலே இல்லையேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது ! பொண்ண அனுப்பீட்டு அத்தை கெளம்பீட்டாங்க ! ( அழகான பொண்ண பெத்தாலே அத்தை முறைதானே ஆகணும் ?? ) ரயிலும் கெளம்பீடுச்சு !

இப்படி ஒரு அழகான பொண்ணு கூட இருக்கும்போது அப்படியே 10 நாளா சோத்தையே கண்ணில பார்க்காதவன் வடிச்சசோத்தை பார்க்கிற மாதிரி பொண்ணைப்பார்க்கக் கூடாதுங்க ! அப்படியே ரெண்டு ப்ளேட் மட்டன் பிரியணியை full கட்டு கட்டிமுடிச்சவன் வெள்ளை சோத்தை பார்க்கிற மாதிரி பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பார்க்கணும் ! நாம அந்து அவலாகி நொந்து நூலாகி காஞ்சு கருவாடா இருக்குறோம்கறது வெளிய தெரியக்கூடாதில்ல? அதுவும் நாம இதுல கில்லியாச்சே?? ஹிஹிஹி இனி திருச்சி வரைக்கும் நானும் என் ஏஞ்சலும் ( வெள்ளை கலர் சட்டையில்ல ? அதான் ஏஞ்சல் ) தான் ! திருச்சி வர்ற வரைக்கும் எந்தப்பயலும் இங்கன வரமாட்டான். அதுக்குள்ள சட்டியிலே மணலைக்கொட்டி பதமா கடலைய போட்டு வறுத்தர வேண்டியதுதான் ! முடிவே பண்ணீட்டேன்.

புத்தக கண்காட்சியிலே வாங்கின ஒரு புத்தகத்தை எடுத்து வச்சுகிட்டேன் ! முதல்ல நம்ம Personality ய load பண்ணனுமில்ல நம்ம ஏஞ்சல் மனசிலே ?? கண்ணு மட்டும்தான் புத்தகத்திலே! மனசு பூரா எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ஒரே சிந்தனைதான் போங்க. நமக்கு பஜாஜ் ஸ்கூட்டர் கணக்கா எப்பவுமே Starting Trouble தான் ! இந்த தடவை அப்படி ஏதும் ஆகக்கூடாதுடா பாண்டி. இப்பவே இஞ்சினை warmup பண்ணுடா அப்பதான் ஒரே ‘கிக்’ குல ஸ்டார்ட் ஆகும்ன்னு மனசுல பட்சி உடுக்கை அடிக்குது, அப்போதான் திடீர்னு ஒரு குயில் கூவுற மாதிரி கேட்டுச்சு. என்னடா இதுன்னு பார்த்தா என் சவுத் இண்டியன் டயானா தாங்கோ!! ஏதோ என்கிட்டே கேட்டு இருக்கும் போல !!

“ என்னாங்க என்ன கேட்டீங்க? “

“இல்ல நீங்க லேயர் பெர்த்தா ??”

அடங்கொக்கமகா மக்கா!!! பாட்டிக வந்தப்போ எல்லாம் நமக்கு லோயர் பெர்த் ஒதுக்கி இருந்தாங்களே! இப்போ நம்ம ஜிங்கிலிக்கு தேவைப்படுது போல இருக்கே ஆஹா லேயர் பெர்த்தை தானமா கொடுத்து ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி” மாதிரி “ டயானாவுக்கு லேயர் பெர்த் கொடுத்தான் பாண்டி !” னு நாளைக்கு வரலாறுல வர்றது ஜஸ்ட்ல மிஸ் ஆய்டுச்சு போல இருக்கேன்னு கவலையோட

“ இல்லீங்க எனக்கு அப்பர் பெர்த்தான்!! ஏன்?? “

“ இல்லை இல்லை நான் உக்கார்துகிட்டு இருக்கேன். இது உங்க பெர்த்தோன்னுதான் கேட்டே.ன் வேறே ஒன்னும் இல்லை !”

அய்யோ சிரிக்கிறாளே !! கமான் பாண்டி ! அப்படியே செகண்ட் கியரைப்போட்டுத் தூக்குடா நம்ம கடலை வண்டியன்னு மண்டைக்குள்ள மின்னல் !!

அப்படியே லேசா பிட்டைப்போட ஆரம்பிச்சேன். மெர்லின் ! எப்படீங்க அழகான பொண்ணுகளுக்குன்னு பேரு வக்கிறாங்க !! மெர்லின் அல்ல அவள் ஒரு மர்லின்மன்றோ !! சென்னையிலே மெர்லின் ஏதோ காலேஜிலே மாஸ்டர் டிகிரி படிக்குதுதாம். பாவம் கூடப்படிக்குற பயலுவ ! ம்ம்ம் அப்படியேக்கா கொஞ்சநேரம் போச்சு ! அப்போதாங்க நான் ஒரு கேள்வியக்கேட்டேன் ! “ ஆமாங்க மெர்லின் உங்க அம்மாவை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே !! என்ன பண்றாங்க? ரொம்ப Familiar் ரா இருக்கு அவ்ங்க முகம் எங்கயோ பார்த்திருக்கேன் ! “

“அப்படியா ? ஒருவேளை நீங்க அவங்ககிட்டே படிச்சி இருக்கலாம் ! எங்க அம்மாவும் அப்பாவும் ஒரு காலேஜ் வச்சு இருக்காங்க !! “

“ அட அப்படியா ? எப்படி மறந்தேன் ! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அவங்க முகம் ! என்ன காலேஜ் ? “

அஹா பாண்டி கமான் ஏதோ ஒரு சொந்தம் ஏதோ ஒரு பந்தம் உனக்கு நம்ம மெர்லினோட இருக்கும் போல இருக்கேடா. அப்படியே இதே ரூட்டிலே டாப் கியரைப்போட்டு துக்குடா மாப்ளே ! மனசு அப்படியே குஜால்ஸ் ஆய்டுச்சு ! பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் !

“ ம்ம் இந்த 10வது பெயில் ஆனா கோச்சிங் கொடுப்பாங்களே டுடோரியல் காலேஜ் அதுதாங்க ! நீங்க ஒருவேளை அவங்க கிட்டே படிச்சு இருக்கலாம் !! “

நெக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே என்னை பார்த்தா பாருங்க . ஒரு நிமிஷம் என்ன சொல்றதுன்னே தெரியலை !! அடிப்பாவி உன்னைய ‘பிக்’ கப் பண்ணுறதுக்கு நான் ஒரு ‘பிட்’டைப்போட்டா அது பூமராங்க கணக்கா இப்படிப்போட்டுத் தாக்கீடுச்சே. நம்மளை அவங்கம்மாகிட்டே படிச்ச டுடோரியல் கோஷ்டின்னு நெனச்சுட்டாளே !! அதுக்கப்புறம் எங்கே பேசுறது ?? இப்படியா ஆகணும் . "மெர்லின் நானெல்லாம் பத்தாவதிலே 2 மார்க்கிலே ஸ்கூல் First ஐ இழந்தவன் ! +2 விலே ஜஸ்ட் 200 மார்க்கிலே ஸ்டேட் first ஐ இழந்தவன் ன்னு சொல்லுடா!! "ன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது பாவம் அதுக்கு தெரியுமா ? அவ அதுக்கப்புறம் ஜன்னலை பார்த்து திருப்புன மூஞ்சியை என் பக்கம் திருப்பவே இல்லைன்னு !!

Tuesday, January 09, 2007

F 14

 F 14

என்னாடா இது தலைப்புன்னு பார்க்குறீங்களா ?? என்னாங்க பண்றது. வேலண்டைன்ஸ் டே க்கு இன்னும் ஒரு மாசந்தேன் இருக்கு. பிகர் இருக்குறவுக எல்லாம் இப்போ இருந்தே ரெடியாகபோறேன் கொடிபிடிக்கபோறேன் அப்படீன்னு பிஸ்த்து கெளப்பிகிட்டு ஜீன்ஸுபேண்டும் முண்டா பனியனுமா கலவரமா சுத்திகிட்டு இருக்காங்க. பிக்கப்பு பேக்கப்புன்னு அவனவன் அலப்பறை உட்டுகிட்டு டாப் கியர்ல எகிறிகிட்டு இருக்கானுக. ஆனா பிகரே இல்லாம இன்னமும் மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா) மொரைச்சி மொரைச்சு பார்துகிட்டு பிஸ்ஸாவும் பர்கருமா கிரைண்டர் கணக்கா அரைச்சுகிட்டு சோலோவா இன்னமும் பசங்களோட மட்டும் சினிமா பார்த்துகிட்டு சுத்திகிட்டு இருக்குற நம்ம சாப்ட்வேர் சங்கரபாண்டியனெல்லாம் என்ன பண்ணுவாய்ங்க?

இதுலே நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் ஒருத்தர் கிட்டே கேட்டேன் ‘என்னாபா பண்ணபோறே வேலண்ட்டைன்ஸ் டே க்குன்னு?’ அவ்ளோதான் ஒரே அழுகாச்சி. “பாண்டி !நான் இதுவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டே கூட பேசுனதே இல்ல !! நானும் ஏதாச்சும் ஒரு 'ராங் கால்' லாச்சும் பொண்ணுங்க கிட்டே இருந்து வந்துராதான்னு பார்த்துகிட்டு காத்துகெடக்கேன். ஆனா எனக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லடா! . எப்போவாச்சும் எந்த பயலுக்காச்சும் 'போன்' னப் போட்டா “the subscriber cannot be reached at the moment” ன்னு மட்டும் ஏதோ ஒரு பொண்ணு உசுர கொடுத்துகிட்டு சொல்லும். இதுவே BSNL Phoneஆ இருந்தா அதையவே கர்ணகொடூரமா ஒரு ஆளு சொல்லுவான்! என்ன பண்றது பாண்டி? வேலண்டைன்ஸ் டே அன்னிக்கி ஊர்ல இருக்குற பொக்கைவாயனெல்லாம் ‘பொக்கே’ யோட அந்தகால தெலுங்கு ஹீரோ ரேஞ்சுக்கு சிகப்பு பேண்ட்டு பச்சை சட்டைன்னு பிளிறிகிட்டு அலைவானுங்க. நான் மட்டும் ‘பெக்’ அடிச்சுட்டு கவுந்தர வேண்டியதுதானா ? எல்லாம் என் தலையெழுத்து !! கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்டாட்டியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடனும்னுங்கற அவலநிலைக்கு தள்ளப்பட்டுட்டேனே!!” ன்னு பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி !!

சரி சரின்னு அவனை ஆசுவாசப்படுத்தி ஓரமா ஒக்காரவச்சு சிச்சுவேசனை சீரணிக்கறதுக்கு ஓமத்திரவகம் கொடுத்துட்டு யோசிச்சேன். நம்ம ப்ரெண்டுக்கு மட்டுமா இந்த ப்ராப்ளம்? வேலெண்டைன்ஸ் டே கொண்டாடுற 'ட்ரெண்டு ' வந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தானேன்னு. பேசாமா எல்லாரும் சந்தோசமா பிகரோட பிளிறிகிட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாட ஜொள்ளுபேட்டையில இருந்து சில ஐடியாகளை அள்ளித்தெளிச்சா என்னானு தோணுச்சு. இதோ தெளிக்க ஆரம்பிச்சிட்டேன். அல்லாரும் வந்து நனைஞ்சிட்டு போங்கப்பூ !!


நீங்க பிகரை பார்க்கறது இருக்கட்டும் . பிகர் உங்களைப் பார்க்குதான்னு பார்க்கனுமில்லே ? கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க. உங்களுக்கு முன்னாடியே உங்க தொப்பை உலககோப்பை கணக்கா ‘கோல்’ அடிக்குதா? உடனே உங்க ஷூவை எடுத்து மாட்டிகிட்டு தீப்புடிச்ச மாதிரி தெனமும் ஓட ஆரம்பிங்க. தொப்பையும் குறையும் அப்படியேக்கா எக்குதப்பா ஏதாச்சும் பிகர் மாட்டுச்சுன்னா ஓடிப்போய் (பொண்டாட்டிய வுட்டுட்டு இல்லீங்க ) கல்யாணம் பண்ணிக்கவும் முடியும்!! எப்படி மல்ட்டி பர்பஸ் ஐடியா ?

எப்பவும் கோடிங்கு ப்ராஜெக்டுன்னு கொலவெறியோட யோசுசிகிட்டு இருக்காம இப்போ இருந்தே ஏதாச்சும் உங்களுக்கு சிக்குற மாதிரி 'அம்மாயி ஒஸ்தாரா 'ன்னு தலைக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்குற ‘ஸ்பைகேமரா’ மாதிரி மண்டையை கேபினுக்கு மேலே வுட்டு அடிக்கடி பார்த்துகிட்டே இருங்க. ஏதாசும் பிகர்சின்னம் தென்மேற்கு திசையிலயோ வடகிழக்கு திசையிலயோ உருவாகறமாதிரி தெரிஞ்சா உடனே மத்தவனுக அலர்ட் ஆகறதுக்குள்ள நீங்க பிகருக்கு குடை பிடிக்க ஆரம்பிச்சுடுங்க. கோடிங் எழுதவே மத்தவனுக கிட்டே கும்மியடிக்கவேண்டிய அவலநிலைமையிலே நீங்க இருந்தாலும் நீங்கதான் ‘கோடிங் குரு’ ன்னு ஒரு பிட்டை நல்லா ஸ்ராங்கா போடுங்க. யாருகண்டா ? உங்க அறிவபார்த்து காதல்மழை வானத்தை பொத்துகிட்டு ஊத்தரதுக்கு பிரகாசமான சான்ஸ் இருக்கு !!

இப்போ இருந்தே ரெண்டு மூணு Format ல லவ் லெட்டர்களை ரெடிபண்ணுங்க. எழுதறப்போ அப்படியேக்கா அங்கங்கே சுட்ட சுடாத காதல் கவிதைகளை லெட்டர் முச்சூடும் அள்ளி தெளிச்சுக்குங்க. அதுக்குன்னு “ என் எல்லா காதலுமே முதல் காதல்தான்!! - அந்தந்த பெண்களிடம்!! ன்னு அபத்தமா இருக்குறதையெல்லாம் போட்டா அவ்ளோதான் அப்புறம் பிகர்கிட்டே பினாயில், குடிக்க வேண்டியதுதான் . ஜாக்கிரதை ! வழக்கமான உங்க சாப்ட்வேர் புத்தியிலே லவ் லெட்ட்ர் மேலே ‘To Whomsoever it may concern” ன்லாம் எழுதிபுடாதீங்க. அப்புறம் வாழ்க்கையிலே நீங்க பொண்டாடியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறது கன்பார்ம் ஆய்டும்! அப்புறம் ஆதங்கப்பட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லே !!

இப்போல்லாம் பல பிகருக இன்ஸ்டண்ட் அல்வா பாக்கெட்டோட அமைதியா சுத்திகிட்டு இருக்குறதா பேட்டையிலே இருந்து ரகசிய தகவல் ஒரு அல்வா வாயன்கிட்டே இருந்து வந்துச்சு. இப்படிபட்ட அல்வா பார்ட்டிக கிட்டே கீது லவ்லெட்டர் கொடுத்து கோக்கு மாக்கா மாட்டிகிட்டீங்கன்னு வைங்க வேற வழியே இல்லை !! பேசாம வடிவேலு கணக்கா “நான் இதுவரை லவ்வே பண்ணுனது இல்லை ! வேணாம் விட்டுடு! வலிக்குது !! “ ன்லாம் சொல்லி பாருங்க . இல்லாட்டி இருக்கவே இருக்கு முதுகு !! அடிக்கிற வரைக்கு அடிச்சிக்கோன்னு குனிஞ்சு நின்னுகிட்டு ஒண்ணு.. ரெண்டு.. ன்னு எண்ண ஆரம்பிச்சுடுங்க. உங்க பரிதாப நிலைமைய பார்த்து பிகர் மனசுகுள்ளே காதல் கரகாட்டம் சலங்கைய கட்டிகிட்டு கண்டபடி ஆடாதா என்ன?

சரி சரி இப்போதைக்கு இது போதும். அல்லாரும் போய் ‘Pitch; ஐ ரெடி பண்ணுங்கப்பு. ஆமா என்னாடா அது F 14 ? எல்லாம் February 14, ஐதான் அப்படி சுருக்கி சுருக்கி எழுதி இருக்கேன் ஹிஹிஹிஹி. F 14 வர்ற வரைக்கும் அப்பப்போ இப்படிபட்ட ஐடியாக்களை அள்ளிதெளிக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக கண்ணுகளா ?

Sunday, January 07, 2007

ஆண்களாகலாம் வாங்க !!

ஆண்களாகலாம்

போன வாரம் முச்சூடும் நம்ம ப்ளாக்கிலே ஒரு வித்தியாசமான விவாதம் ஓடிகிட்டு இருக்கு. திடீர்னு ஆம்பிளைக எல்லாம் மிருகம்னு நம்ம கவிதாக்கா போகிற போக்கிலே கொழுத்தி போட்டுட்டு போய்ட்டாங்க. படிச்சுமுடிச்சுட்டு பார்க்கிறேன் அட எனக்கு பின்னாடி வாலு மொளச்ச மாதிரி இருக்கு. என்னடா இது சோதனைன்னு நெசமாதான் நாம மிருகமாய்ட்டமான்னு சோதனை பண்ணி பார்கறதுக்கு எந்திரிச்சு நின்னா அட நான் நாலு காலிலே நின்னுகிட்டு இருக்கேன் !!! அடங்கொக்க மக்கா என்னாடா ஆச்சு நமக்கு ? நெசமதேன் நம்ம கவிதாக்கா சொல்லி இருப்பாகளோன்னு ‘டவுட்’ வேற வந்திருச்சு. அப்புறம் தான் யோசிச்சு பார்க்கிறேன் நம்ம கவிதாக்க அந்த ரேஞ்சுக்கு ‘ பவர்புல்’ லா எழுதி இருகாங்கன்னு. ஹிஹிஹி.

சரி சரி இப்படி அடிக்கடி வால் மொளச்சு நாலு காலிலே நடந்துகிட்டு இருந்தா என்ன பண்ணும் ஆண்குலம்? இனிமேலாச்சும் ஆம்பளைங்களையெல்லாம் மிருகமாகம தடுக்கறது எப்படீன்னு அப்படியேக்கா நம்ம சகாக்களோட உக்கார்து யோசிச்சதிலே சும்மா நயாகரா ரேஞ்சுக்கு ஐடியா கொட்டுச்சு,. சரி எல்லாத்தையும் அள்ளித்தெளிச்சிட்டா அப்புறம் எல்லா ஆம்பிளைகளும் காவி கமண்டலம்னு ஊரைவுட்டு போய்ட்டாங்கன்னு வைங்க அப்புறம் அதுக்கும் நம்ம அம்மணிக பிரச்சனைய கெளப்புவாங்க இல்லை? அதான் ஏதோ கொஞ்சத்தை அப்படியே பதமா கிள்ளி வச்சு இருக்கேன். படிச்சுபுட்டு அல்லாரும் ரெண்டு காலிலே நடக்கனும் ஆண்குலமே புரிஞ்சுதா ?? சரி இனி over to tips !!


பஸ்ஸிலே ரொம்ப கும்பல்! உங்களால இடிக்காம நிக்க முடியாதுங்கர கண்டிசன் வந்துச்சுன்னா இருக்கவே இருக்கு தலைக்கு மேலே கைப்பிடி கம்பி !! அப்படியே ஜாக்கிசான் கணக்கா கையோட காலையும் கம்பியிலே கோர்த்துகிட்டு சிம்பன்சி கணக்கா தொங்குங்க. பொண்ணுங்க உங்களை தெய்வமா பார்ப்பாங்க. ஆஞ்சனேயரும் சாமிதானுங்களே ?

யாராசும் இடிக்கிறதை பார்த்தா ‘தேமே’ ன்னு நிக்காமா உடனே போய் உயிரைக்கொடுத்தாச்சும் தடுத்து நிறுத்துங்க. அதுக்காக அத்துமீறி கட்டுன கட்டடத்தை இடிக்கறதையெல்லாம் போய் நிறுத்தனும்ம்னு நெனச்சா ‘டின்’னு கட்டீருவாங்க ஜாக்கிரதை.

கூட்டமான பஸ்ஸிலே ஏறித்தான் ஆகனுன்னு ஆகிபோச்சுன்னு வைங்க என்ன பண்ணலாம்ன்லாம் யோசிக்காதீங்க. அப்படியே ரெண்டு ‘டன்லப்’ தலையணைய முன்னாடி ஒண்ணு முதுகிலே ஒண்ணுன்னு கட்டிகிட்டு கவலையே படாம ஏறுங்க.அது இல்லாம ஏறுரவங்களுக்கும் நீங்களே இலவசமா கட்டிவுடலாம் தப்பில்லை!

ரொம்ப கூட்டமா இருக்குற பஸ்ஸுக்குள்ள போனாத்தானே இடிக்கிற புடிக்கிர கவலையெல்லாம்? பேசாமா ‘புட்போர்ட்’ லயே தொங்கிட்டு போங்க, கை வலிச்சதுன்னா இடுப்பிலே கட்டி இருக்குற பெல்டை எடுத்து கம்பியிலே கட்டிகிட்டு தொங்குங்க. பரிதாபமா நீங்க தொங்கறதை மகளிர் பார்த்துட்டு ‘சே நம்மள இடிக்கக் கூடாதுன்னு கொரங்கு மாதிரி தொங்கறானேன்னு ஒரு ‘லுக்’க்கு வுடுவாங்க பாருங்க அந்த பார்வையிலே நீங்க மிருகமில்லைன்னு தெரிஞ்சுக்கலாம்.

ஆபீஸிலே யாராச்சும் பெருசுக பொண்ணூகளுக்கு ரூட் உட்டு டார்ச்சர் கொடுதுச்சுன்னு வைங்க உடனே போனை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் பண்ணி ’ஹலோ மகளிர் போலீஸ் ஸ்டேசன்களா ?’ அப்படீன்னு பெருசு காதிலே விழுகுற மாதிரி சத்தமா பேசி அடுத்த லைன் சத்தம் கம்மியா பேசுங்க. எதிர் முனையிலே ‘ எந்தா பட்டி பறைஞ்சது? ’ ஏதாசும் நாயர் கண்டபடி ஏசுனாலும் கண்டுகிடாதீங்க. நீங்க பேசுறதை அந்த பொண்ணும் பார்க்கற மாதிரி பண்ணுங்க!! அப்போதானே உங்க zoo இமேஜ் போயி ஒரு நல்ல இமேஜ் கிரியேட் ஆகும் ?!

அப்படியேக்கா ஒரு ஞாயித்து கெழமையா பாரீஸ்கார்னர் பக்கம் ஒதுங்குனீகன்னா பண்டல் பண்டலா ஜப்தி ரேட்டுக்கு டிஸ்யூ பேப்பர் கெடைக்கும். வாங்கிட்டு போய் ஆபீசிலே வச்சுக்குங்க. ரொம்ப வழியரவங்களுக்கு தொடச்சுக்க நீங்களே இலவசமா அவங்க டேபிள்ல வச்சிடலாம்.தொடச்சுகிடட்டும். அட்லீஸ்ட் வழிசல் அப்படியாச்சும் நிக்காதா என்ன ? நீங்களும் கொஞ்சம் உங்க டேபிளுக்கடியிலே ரகசியமா (ரொம்ப முக்கியம்) வச்சுக்குங்க. உங்களுக்கும் தேவைப்படாதா என்ன?? ஹிஹிஹிஹி

உடனே பக்கதிலே இருக்குற zoo வுக்கு போங்க! பாருங்க! மிருகம்னா எப்படி கூண்டிலே வச்சு இருகாங்கன்னு. நீங்களும் அப்படி இருக்கனுமா ? நீங்க கூண்டுக்குளார உக்கார்துகிட்டு இருக்குறப்போ வெளிய இருந்து பொண்ணுக எல்லாம் வந்து வந்து பார்துட்டு போனா கேவலமா இருக்கும்லே ??

கதறக் கதற உயிரே போனாலும் பரவாயில்லைன்னு பேசாமா நம்ம அருமை அண்ணன் அடுக்குமொழி ஏந்தல் விஜய T.ராஜேந்தர் கதாநாயகனா நடிச்சி ஓடிகிட்டு ( தியேட்டரை விட்டா? ன்லாம் ஏடாகூடமா கேள்வி கேட்கக் கூடாது ஆமா !! ) இருக்குற “ வீராச்சாமி “ படத்தை பாருங்க. ஏன்னா அவருதான் கதாநாயகிய கூட தொடாம நடிக்கிறவரராச்சே !! ஏதாச்சும் டிப்ஸ் கெடைக்காமயா போய்டும் ? !! தியேட்டர்ல விக்கிற ‘சிப்ஸ்’ இல்லீங்க அவரு கொடுக்குற டிப்ஸ் ஓகே ?!!


இதையெல்லாம் நீங்க தெனமும் கடை புடிச்சா பொண்ணுங்க உங்களை தெய்வமேன்னு ஒரு பார்வை பர்ப்பாங்க பாருங்க. அப்புறம் நீங்க தாராளமா zoo வை விட்டு வெளியே வந்து நடக்கலாம் !! அட கூட யாருங்க ? பொண்ணுங்க தான் !! என்ன நாக்கு நீளுது ?? கமான் ஆண்குலமே !! control urself !!