Tuesday, January 09, 2007

F 14

 F 14

என்னாடா இது தலைப்புன்னு பார்க்குறீங்களா ?? என்னாங்க பண்றது. வேலண்டைன்ஸ் டே க்கு இன்னும் ஒரு மாசந்தேன் இருக்கு. பிகர் இருக்குறவுக எல்லாம் இப்போ இருந்தே ரெடியாகபோறேன் கொடிபிடிக்கபோறேன் அப்படீன்னு பிஸ்த்து கெளப்பிகிட்டு ஜீன்ஸுபேண்டும் முண்டா பனியனுமா கலவரமா சுத்திகிட்டு இருக்காங்க. பிக்கப்பு பேக்கப்புன்னு அவனவன் அலப்பறை உட்டுகிட்டு டாப் கியர்ல எகிறிகிட்டு இருக்கானுக. ஆனா பிகரே இல்லாம இன்னமும் மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா) மொரைச்சி மொரைச்சு பார்துகிட்டு பிஸ்ஸாவும் பர்கருமா கிரைண்டர் கணக்கா அரைச்சுகிட்டு சோலோவா இன்னமும் பசங்களோட மட்டும் சினிமா பார்த்துகிட்டு சுத்திகிட்டு இருக்குற நம்ம சாப்ட்வேர் சங்கரபாண்டியனெல்லாம் என்ன பண்ணுவாய்ங்க?

இதுலே நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் ஒருத்தர் கிட்டே கேட்டேன் ‘என்னாபா பண்ணபோறே வேலண்ட்டைன்ஸ் டே க்குன்னு?’ அவ்ளோதான் ஒரே அழுகாச்சி. “பாண்டி !நான் இதுவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டே கூட பேசுனதே இல்ல !! நானும் ஏதாச்சும் ஒரு 'ராங் கால்' லாச்சும் பொண்ணுங்க கிட்டே இருந்து வந்துராதான்னு பார்த்துகிட்டு காத்துகெடக்கேன். ஆனா எனக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லடா! . எப்போவாச்சும் எந்த பயலுக்காச்சும் 'போன்' னப் போட்டா “the subscriber cannot be reached at the moment” ன்னு மட்டும் ஏதோ ஒரு பொண்ணு உசுர கொடுத்துகிட்டு சொல்லும். இதுவே BSNL Phoneஆ இருந்தா அதையவே கர்ணகொடூரமா ஒரு ஆளு சொல்லுவான்! என்ன பண்றது பாண்டி? வேலண்டைன்ஸ் டே அன்னிக்கி ஊர்ல இருக்குற பொக்கைவாயனெல்லாம் ‘பொக்கே’ யோட அந்தகால தெலுங்கு ஹீரோ ரேஞ்சுக்கு சிகப்பு பேண்ட்டு பச்சை சட்டைன்னு பிளிறிகிட்டு அலைவானுங்க. நான் மட்டும் ‘பெக்’ அடிச்சுட்டு கவுந்தர வேண்டியதுதானா ? எல்லாம் என் தலையெழுத்து !! கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்டாட்டியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடனும்னுங்கற அவலநிலைக்கு தள்ளப்பட்டுட்டேனே!!” ன்னு பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி !!

சரி சரின்னு அவனை ஆசுவாசப்படுத்தி ஓரமா ஒக்காரவச்சு சிச்சுவேசனை சீரணிக்கறதுக்கு ஓமத்திரவகம் கொடுத்துட்டு யோசிச்சேன். நம்ம ப்ரெண்டுக்கு மட்டுமா இந்த ப்ராப்ளம்? வேலெண்டைன்ஸ் டே கொண்டாடுற 'ட்ரெண்டு ' வந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தானேன்னு. பேசாமா எல்லாரும் சந்தோசமா பிகரோட பிளிறிகிட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாட ஜொள்ளுபேட்டையில இருந்து சில ஐடியாகளை அள்ளித்தெளிச்சா என்னானு தோணுச்சு. இதோ தெளிக்க ஆரம்பிச்சிட்டேன். அல்லாரும் வந்து நனைஞ்சிட்டு போங்கப்பூ !!


நீங்க பிகரை பார்க்கறது இருக்கட்டும் . பிகர் உங்களைப் பார்க்குதான்னு பார்க்கனுமில்லே ? கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க. உங்களுக்கு முன்னாடியே உங்க தொப்பை உலககோப்பை கணக்கா ‘கோல்’ அடிக்குதா? உடனே உங்க ஷூவை எடுத்து மாட்டிகிட்டு தீப்புடிச்ச மாதிரி தெனமும் ஓட ஆரம்பிங்க. தொப்பையும் குறையும் அப்படியேக்கா எக்குதப்பா ஏதாச்சும் பிகர் மாட்டுச்சுன்னா ஓடிப்போய் (பொண்டாட்டிய வுட்டுட்டு இல்லீங்க ) கல்யாணம் பண்ணிக்கவும் முடியும்!! எப்படி மல்ட்டி பர்பஸ் ஐடியா ?

எப்பவும் கோடிங்கு ப்ராஜெக்டுன்னு கொலவெறியோட யோசுசிகிட்டு இருக்காம இப்போ இருந்தே ஏதாச்சும் உங்களுக்கு சிக்குற மாதிரி 'அம்மாயி ஒஸ்தாரா 'ன்னு தலைக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்குற ‘ஸ்பைகேமரா’ மாதிரி மண்டையை கேபினுக்கு மேலே வுட்டு அடிக்கடி பார்த்துகிட்டே இருங்க. ஏதாசும் பிகர்சின்னம் தென்மேற்கு திசையிலயோ வடகிழக்கு திசையிலயோ உருவாகறமாதிரி தெரிஞ்சா உடனே மத்தவனுக அலர்ட் ஆகறதுக்குள்ள நீங்க பிகருக்கு குடை பிடிக்க ஆரம்பிச்சுடுங்க. கோடிங் எழுதவே மத்தவனுக கிட்டே கும்மியடிக்கவேண்டிய அவலநிலைமையிலே நீங்க இருந்தாலும் நீங்கதான் ‘கோடிங் குரு’ ன்னு ஒரு பிட்டை நல்லா ஸ்ராங்கா போடுங்க. யாருகண்டா ? உங்க அறிவபார்த்து காதல்மழை வானத்தை பொத்துகிட்டு ஊத்தரதுக்கு பிரகாசமான சான்ஸ் இருக்கு !!

இப்போ இருந்தே ரெண்டு மூணு Format ல லவ் லெட்டர்களை ரெடிபண்ணுங்க. எழுதறப்போ அப்படியேக்கா அங்கங்கே சுட்ட சுடாத காதல் கவிதைகளை லெட்டர் முச்சூடும் அள்ளி தெளிச்சுக்குங்க. அதுக்குன்னு “ என் எல்லா காதலுமே முதல் காதல்தான்!! - அந்தந்த பெண்களிடம்!! ன்னு அபத்தமா இருக்குறதையெல்லாம் போட்டா அவ்ளோதான் அப்புறம் பிகர்கிட்டே பினாயில், குடிக்க வேண்டியதுதான் . ஜாக்கிரதை ! வழக்கமான உங்க சாப்ட்வேர் புத்தியிலே லவ் லெட்ட்ர் மேலே ‘To Whomsoever it may concern” ன்லாம் எழுதிபுடாதீங்க. அப்புறம் வாழ்க்கையிலே நீங்க பொண்டாடியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறது கன்பார்ம் ஆய்டும்! அப்புறம் ஆதங்கப்பட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லே !!

இப்போல்லாம் பல பிகருக இன்ஸ்டண்ட் அல்வா பாக்கெட்டோட அமைதியா சுத்திகிட்டு இருக்குறதா பேட்டையிலே இருந்து ரகசிய தகவல் ஒரு அல்வா வாயன்கிட்டே இருந்து வந்துச்சு. இப்படிபட்ட அல்வா பார்ட்டிக கிட்டே கீது லவ்லெட்டர் கொடுத்து கோக்கு மாக்கா மாட்டிகிட்டீங்கன்னு வைங்க வேற வழியே இல்லை !! பேசாம வடிவேலு கணக்கா “நான் இதுவரை லவ்வே பண்ணுனது இல்லை ! வேணாம் விட்டுடு! வலிக்குது !! “ ன்லாம் சொல்லி பாருங்க . இல்லாட்டி இருக்கவே இருக்கு முதுகு !! அடிக்கிற வரைக்கு அடிச்சிக்கோன்னு குனிஞ்சு நின்னுகிட்டு ஒண்ணு.. ரெண்டு.. ன்னு எண்ண ஆரம்பிச்சுடுங்க. உங்க பரிதாப நிலைமைய பார்த்து பிகர் மனசுகுள்ளே காதல் கரகாட்டம் சலங்கைய கட்டிகிட்டு கண்டபடி ஆடாதா என்ன?

சரி சரி இப்போதைக்கு இது போதும். அல்லாரும் போய் ‘Pitch; ஐ ரெடி பண்ணுங்கப்பு. ஆமா என்னாடா அது F 14 ? எல்லாம் February 14, ஐதான் அப்படி சுருக்கி சுருக்கி எழுதி இருக்கேன் ஹிஹிஹிஹி. F 14 வர்ற வரைக்கும் அப்பப்போ இப்படிபட்ட ஐடியாக்களை அள்ளிதெளிக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக கண்ணுகளா ?

Sunday, January 07, 2007

ஆண்களாகலாம் வாங்க !!

ஆண்களாகலாம்

போன வாரம் முச்சூடும் நம்ம ப்ளாக்கிலே ஒரு வித்தியாசமான விவாதம் ஓடிகிட்டு இருக்கு. திடீர்னு ஆம்பிளைக எல்லாம் மிருகம்னு நம்ம கவிதாக்கா போகிற போக்கிலே கொழுத்தி போட்டுட்டு போய்ட்டாங்க. படிச்சுமுடிச்சுட்டு பார்க்கிறேன் அட எனக்கு பின்னாடி வாலு மொளச்ச மாதிரி இருக்கு. என்னடா இது சோதனைன்னு நெசமாதான் நாம மிருகமாய்ட்டமான்னு சோதனை பண்ணி பார்கறதுக்கு எந்திரிச்சு நின்னா அட நான் நாலு காலிலே நின்னுகிட்டு இருக்கேன் !!! அடங்கொக்க மக்கா என்னாடா ஆச்சு நமக்கு ? நெசமதேன் நம்ம கவிதாக்கா சொல்லி இருப்பாகளோன்னு ‘டவுட்’ வேற வந்திருச்சு. அப்புறம் தான் யோசிச்சு பார்க்கிறேன் நம்ம கவிதாக்க அந்த ரேஞ்சுக்கு ‘ பவர்புல்’ லா எழுதி இருகாங்கன்னு. ஹிஹிஹி.

சரி சரி இப்படி அடிக்கடி வால் மொளச்சு நாலு காலிலே நடந்துகிட்டு இருந்தா என்ன பண்ணும் ஆண்குலம்? இனிமேலாச்சும் ஆம்பளைங்களையெல்லாம் மிருகமாகம தடுக்கறது எப்படீன்னு அப்படியேக்கா நம்ம சகாக்களோட உக்கார்து யோசிச்சதிலே சும்மா நயாகரா ரேஞ்சுக்கு ஐடியா கொட்டுச்சு,. சரி எல்லாத்தையும் அள்ளித்தெளிச்சிட்டா அப்புறம் எல்லா ஆம்பிளைகளும் காவி கமண்டலம்னு ஊரைவுட்டு போய்ட்டாங்கன்னு வைங்க அப்புறம் அதுக்கும் நம்ம அம்மணிக பிரச்சனைய கெளப்புவாங்க இல்லை? அதான் ஏதோ கொஞ்சத்தை அப்படியே பதமா கிள்ளி வச்சு இருக்கேன். படிச்சுபுட்டு அல்லாரும் ரெண்டு காலிலே நடக்கனும் ஆண்குலமே புரிஞ்சுதா ?? சரி இனி over to tips !!


பஸ்ஸிலே ரொம்ப கும்பல்! உங்களால இடிக்காம நிக்க முடியாதுங்கர கண்டிசன் வந்துச்சுன்னா இருக்கவே இருக்கு தலைக்கு மேலே கைப்பிடி கம்பி !! அப்படியே ஜாக்கிசான் கணக்கா கையோட காலையும் கம்பியிலே கோர்த்துகிட்டு சிம்பன்சி கணக்கா தொங்குங்க. பொண்ணுங்க உங்களை தெய்வமா பார்ப்பாங்க. ஆஞ்சனேயரும் சாமிதானுங்களே ?

யாராசும் இடிக்கிறதை பார்த்தா ‘தேமே’ ன்னு நிக்காமா உடனே போய் உயிரைக்கொடுத்தாச்சும் தடுத்து நிறுத்துங்க. அதுக்காக அத்துமீறி கட்டுன கட்டடத்தை இடிக்கறதையெல்லாம் போய் நிறுத்தனும்ம்னு நெனச்சா ‘டின்’னு கட்டீருவாங்க ஜாக்கிரதை.

கூட்டமான பஸ்ஸிலே ஏறித்தான் ஆகனுன்னு ஆகிபோச்சுன்னு வைங்க என்ன பண்ணலாம்ன்லாம் யோசிக்காதீங்க. அப்படியே ரெண்டு ‘டன்லப்’ தலையணைய முன்னாடி ஒண்ணு முதுகிலே ஒண்ணுன்னு கட்டிகிட்டு கவலையே படாம ஏறுங்க.அது இல்லாம ஏறுரவங்களுக்கும் நீங்களே இலவசமா கட்டிவுடலாம் தப்பில்லை!

ரொம்ப கூட்டமா இருக்குற பஸ்ஸுக்குள்ள போனாத்தானே இடிக்கிற புடிக்கிர கவலையெல்லாம்? பேசாமா ‘புட்போர்ட்’ லயே தொங்கிட்டு போங்க, கை வலிச்சதுன்னா இடுப்பிலே கட்டி இருக்குற பெல்டை எடுத்து கம்பியிலே கட்டிகிட்டு தொங்குங்க. பரிதாபமா நீங்க தொங்கறதை மகளிர் பார்த்துட்டு ‘சே நம்மள இடிக்கக் கூடாதுன்னு கொரங்கு மாதிரி தொங்கறானேன்னு ஒரு ‘லுக்’க்கு வுடுவாங்க பாருங்க அந்த பார்வையிலே நீங்க மிருகமில்லைன்னு தெரிஞ்சுக்கலாம்.

ஆபீஸிலே யாராச்சும் பெருசுக பொண்ணூகளுக்கு ரூட் உட்டு டார்ச்சர் கொடுதுச்சுன்னு வைங்க உடனே போனை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் பண்ணி ’ஹலோ மகளிர் போலீஸ் ஸ்டேசன்களா ?’ அப்படீன்னு பெருசு காதிலே விழுகுற மாதிரி சத்தமா பேசி அடுத்த லைன் சத்தம் கம்மியா பேசுங்க. எதிர் முனையிலே ‘ எந்தா பட்டி பறைஞ்சது? ’ ஏதாசும் நாயர் கண்டபடி ஏசுனாலும் கண்டுகிடாதீங்க. நீங்க பேசுறதை அந்த பொண்ணும் பார்க்கற மாதிரி பண்ணுங்க!! அப்போதானே உங்க zoo இமேஜ் போயி ஒரு நல்ல இமேஜ் கிரியேட் ஆகும் ?!

அப்படியேக்கா ஒரு ஞாயித்து கெழமையா பாரீஸ்கார்னர் பக்கம் ஒதுங்குனீகன்னா பண்டல் பண்டலா ஜப்தி ரேட்டுக்கு டிஸ்யூ பேப்பர் கெடைக்கும். வாங்கிட்டு போய் ஆபீசிலே வச்சுக்குங்க. ரொம்ப வழியரவங்களுக்கு தொடச்சுக்க நீங்களே இலவசமா அவங்க டேபிள்ல வச்சிடலாம்.தொடச்சுகிடட்டும். அட்லீஸ்ட் வழிசல் அப்படியாச்சும் நிக்காதா என்ன ? நீங்களும் கொஞ்சம் உங்க டேபிளுக்கடியிலே ரகசியமா (ரொம்ப முக்கியம்) வச்சுக்குங்க. உங்களுக்கும் தேவைப்படாதா என்ன?? ஹிஹிஹிஹி

உடனே பக்கதிலே இருக்குற zoo வுக்கு போங்க! பாருங்க! மிருகம்னா எப்படி கூண்டிலே வச்சு இருகாங்கன்னு. நீங்களும் அப்படி இருக்கனுமா ? நீங்க கூண்டுக்குளார உக்கார்துகிட்டு இருக்குறப்போ வெளிய இருந்து பொண்ணுக எல்லாம் வந்து வந்து பார்துட்டு போனா கேவலமா இருக்கும்லே ??

கதறக் கதற உயிரே போனாலும் பரவாயில்லைன்னு பேசாமா நம்ம அருமை அண்ணன் அடுக்குமொழி ஏந்தல் விஜய T.ராஜேந்தர் கதாநாயகனா நடிச்சி ஓடிகிட்டு ( தியேட்டரை விட்டா? ன்லாம் ஏடாகூடமா கேள்வி கேட்கக் கூடாது ஆமா !! ) இருக்குற “ வீராச்சாமி “ படத்தை பாருங்க. ஏன்னா அவருதான் கதாநாயகிய கூட தொடாம நடிக்கிறவரராச்சே !! ஏதாச்சும் டிப்ஸ் கெடைக்காமயா போய்டும் ? !! தியேட்டர்ல விக்கிற ‘சிப்ஸ்’ இல்லீங்க அவரு கொடுக்குற டிப்ஸ் ஓகே ?!!


இதையெல்லாம் நீங்க தெனமும் கடை புடிச்சா பொண்ணுங்க உங்களை தெய்வமேன்னு ஒரு பார்வை பர்ப்பாங்க பாருங்க. அப்புறம் நீங்க தாராளமா zoo வை விட்டு வெளியே வந்து நடக்கலாம் !! அட கூட யாருங்க ? பொண்ணுங்க தான் !! என்ன நாக்கு நீளுது ?? கமான் ஆண்குலமே !! control urself !!