Sunday, January 07, 2007

ஆண்களாகலாம் வாங்க !!

ஆண்களாகலாம்

போன வாரம் முச்சூடும் நம்ம ப்ளாக்கிலே ஒரு வித்தியாசமான விவாதம் ஓடிகிட்டு இருக்கு. திடீர்னு ஆம்பிளைக எல்லாம் மிருகம்னு நம்ம கவிதாக்கா போகிற போக்கிலே கொழுத்தி போட்டுட்டு போய்ட்டாங்க. படிச்சுமுடிச்சுட்டு பார்க்கிறேன் அட எனக்கு பின்னாடி வாலு மொளச்ச மாதிரி இருக்கு. என்னடா இது சோதனைன்னு நெசமாதான் நாம மிருகமாய்ட்டமான்னு சோதனை பண்ணி பார்கறதுக்கு எந்திரிச்சு நின்னா அட நான் நாலு காலிலே நின்னுகிட்டு இருக்கேன் !!! அடங்கொக்க மக்கா என்னாடா ஆச்சு நமக்கு ? நெசமதேன் நம்ம கவிதாக்கா சொல்லி இருப்பாகளோன்னு ‘டவுட்’ வேற வந்திருச்சு. அப்புறம் தான் யோசிச்சு பார்க்கிறேன் நம்ம கவிதாக்க அந்த ரேஞ்சுக்கு ‘ பவர்புல்’ லா எழுதி இருகாங்கன்னு. ஹிஹிஹி.

சரி சரி இப்படி அடிக்கடி வால் மொளச்சு நாலு காலிலே நடந்துகிட்டு இருந்தா என்ன பண்ணும் ஆண்குலம்? இனிமேலாச்சும் ஆம்பளைங்களையெல்லாம் மிருகமாகம தடுக்கறது எப்படீன்னு அப்படியேக்கா நம்ம சகாக்களோட உக்கார்து யோசிச்சதிலே சும்மா நயாகரா ரேஞ்சுக்கு ஐடியா கொட்டுச்சு,. சரி எல்லாத்தையும் அள்ளித்தெளிச்சிட்டா அப்புறம் எல்லா ஆம்பிளைகளும் காவி கமண்டலம்னு ஊரைவுட்டு போய்ட்டாங்கன்னு வைங்க அப்புறம் அதுக்கும் நம்ம அம்மணிக பிரச்சனைய கெளப்புவாங்க இல்லை? அதான் ஏதோ கொஞ்சத்தை அப்படியே பதமா கிள்ளி வச்சு இருக்கேன். படிச்சுபுட்டு அல்லாரும் ரெண்டு காலிலே நடக்கனும் ஆண்குலமே புரிஞ்சுதா ?? சரி இனி over to tips !!


பஸ்ஸிலே ரொம்ப கும்பல்! உங்களால இடிக்காம நிக்க முடியாதுங்கர கண்டிசன் வந்துச்சுன்னா இருக்கவே இருக்கு தலைக்கு மேலே கைப்பிடி கம்பி !! அப்படியே ஜாக்கிசான் கணக்கா கையோட காலையும் கம்பியிலே கோர்த்துகிட்டு சிம்பன்சி கணக்கா தொங்குங்க. பொண்ணுங்க உங்களை தெய்வமா பார்ப்பாங்க. ஆஞ்சனேயரும் சாமிதானுங்களே ?

யாராசும் இடிக்கிறதை பார்த்தா ‘தேமே’ ன்னு நிக்காமா உடனே போய் உயிரைக்கொடுத்தாச்சும் தடுத்து நிறுத்துங்க. அதுக்காக அத்துமீறி கட்டுன கட்டடத்தை இடிக்கறதையெல்லாம் போய் நிறுத்தனும்ம்னு நெனச்சா ‘டின்’னு கட்டீருவாங்க ஜாக்கிரதை.

கூட்டமான பஸ்ஸிலே ஏறித்தான் ஆகனுன்னு ஆகிபோச்சுன்னு வைங்க என்ன பண்ணலாம்ன்லாம் யோசிக்காதீங்க. அப்படியே ரெண்டு ‘டன்லப்’ தலையணைய முன்னாடி ஒண்ணு முதுகிலே ஒண்ணுன்னு கட்டிகிட்டு கவலையே படாம ஏறுங்க.அது இல்லாம ஏறுரவங்களுக்கும் நீங்களே இலவசமா கட்டிவுடலாம் தப்பில்லை!

ரொம்ப கூட்டமா இருக்குற பஸ்ஸுக்குள்ள போனாத்தானே இடிக்கிற புடிக்கிர கவலையெல்லாம்? பேசாமா ‘புட்போர்ட்’ லயே தொங்கிட்டு போங்க, கை வலிச்சதுன்னா இடுப்பிலே கட்டி இருக்குற பெல்டை எடுத்து கம்பியிலே கட்டிகிட்டு தொங்குங்க. பரிதாபமா நீங்க தொங்கறதை மகளிர் பார்த்துட்டு ‘சே நம்மள இடிக்கக் கூடாதுன்னு கொரங்கு மாதிரி தொங்கறானேன்னு ஒரு ‘லுக்’க்கு வுடுவாங்க பாருங்க அந்த பார்வையிலே நீங்க மிருகமில்லைன்னு தெரிஞ்சுக்கலாம்.

ஆபீஸிலே யாராச்சும் பெருசுக பொண்ணூகளுக்கு ரூட் உட்டு டார்ச்சர் கொடுதுச்சுன்னு வைங்க உடனே போனை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு டயல் பண்ணி ’ஹலோ மகளிர் போலீஸ் ஸ்டேசன்களா ?’ அப்படீன்னு பெருசு காதிலே விழுகுற மாதிரி சத்தமா பேசி அடுத்த லைன் சத்தம் கம்மியா பேசுங்க. எதிர் முனையிலே ‘ எந்தா பட்டி பறைஞ்சது? ’ ஏதாசும் நாயர் கண்டபடி ஏசுனாலும் கண்டுகிடாதீங்க. நீங்க பேசுறதை அந்த பொண்ணும் பார்க்கற மாதிரி பண்ணுங்க!! அப்போதானே உங்க zoo இமேஜ் போயி ஒரு நல்ல இமேஜ் கிரியேட் ஆகும் ?!

அப்படியேக்கா ஒரு ஞாயித்து கெழமையா பாரீஸ்கார்னர் பக்கம் ஒதுங்குனீகன்னா பண்டல் பண்டலா ஜப்தி ரேட்டுக்கு டிஸ்யூ பேப்பர் கெடைக்கும். வாங்கிட்டு போய் ஆபீசிலே வச்சுக்குங்க. ரொம்ப வழியரவங்களுக்கு தொடச்சுக்க நீங்களே இலவசமா அவங்க டேபிள்ல வச்சிடலாம்.தொடச்சுகிடட்டும். அட்லீஸ்ட் வழிசல் அப்படியாச்சும் நிக்காதா என்ன ? நீங்களும் கொஞ்சம் உங்க டேபிளுக்கடியிலே ரகசியமா (ரொம்ப முக்கியம்) வச்சுக்குங்க. உங்களுக்கும் தேவைப்படாதா என்ன?? ஹிஹிஹிஹி

உடனே பக்கதிலே இருக்குற zoo வுக்கு போங்க! பாருங்க! மிருகம்னா எப்படி கூண்டிலே வச்சு இருகாங்கன்னு. நீங்களும் அப்படி இருக்கனுமா ? நீங்க கூண்டுக்குளார உக்கார்துகிட்டு இருக்குறப்போ வெளிய இருந்து பொண்ணுக எல்லாம் வந்து வந்து பார்துட்டு போனா கேவலமா இருக்கும்லே ??

கதறக் கதற உயிரே போனாலும் பரவாயில்லைன்னு பேசாமா நம்ம அருமை அண்ணன் அடுக்குமொழி ஏந்தல் விஜய T.ராஜேந்தர் கதாநாயகனா நடிச்சி ஓடிகிட்டு ( தியேட்டரை விட்டா? ன்லாம் ஏடாகூடமா கேள்வி கேட்கக் கூடாது ஆமா !! ) இருக்குற “ வீராச்சாமி “ படத்தை பாருங்க. ஏன்னா அவருதான் கதாநாயகிய கூட தொடாம நடிக்கிறவரராச்சே !! ஏதாச்சும் டிப்ஸ் கெடைக்காமயா போய்டும் ? !! தியேட்டர்ல விக்கிற ‘சிப்ஸ்’ இல்லீங்க அவரு கொடுக்குற டிப்ஸ் ஓகே ?!!


இதையெல்லாம் நீங்க தெனமும் கடை புடிச்சா பொண்ணுங்க உங்களை தெய்வமேன்னு ஒரு பார்வை பர்ப்பாங்க பாருங்க. அப்புறம் நீங்க தாராளமா zoo வை விட்டு வெளியே வந்து நடக்கலாம் !! அட கூட யாருங்க ? பொண்ணுங்க தான் !! என்ன நாக்கு நீளுது ?? கமான் ஆண்குலமே !! control urself !!

48 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

அட்ரா சக்க...அட்ரா சக்க...அட்ரா சக்க....

said...

இந்த வாரம் நட்சத்திரம் அந்த அம்மணி தானா?? எல்லாரும் போட்டுத்தாக்குறீங்க... அசத்துங்க.

இந்த கொடுமைக்காக தான் நான் மனுஷனாகவே இருக்கலாம் என்று லோகல் பஸ் ஏறுவதை நிறுத்தி 15 வருஷம் ஆச்சு!!!

said...

jollz இது எல்லாம் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்த டிப்ஸ்தானே!

said...

ஆனால் jollz நீங்க மட்டும் மிருகம் என்று கேள்விப்பட்டேன்!யாரோ உங்களை வால் இல்லாத குரங்கு என்று சொன்னார்கள்!

said...

சந்தோஷமா? ஜொள்ஸ்.. ?!!!

:) :) :)... முடியல..ப்பா.. எல்லாரும் என்னைய கவிதா ரெம்ப நல்லவங்கன்னு சொல்றாங்கப்பா..

said...

//பங்காளி... said...
அட்ரா சக்க...அட்ரா சக்க...அட்ரா சக்க.... //

அட வாங்க பங்கு :)))
நீங்க பாட்டுக்கு அட்ரா சக்கைன்னு சொல்லிகிட்டு போறீங்க. படிச்சுபுட்டு ஆராச்சும் என்னை சக்கையடி போட்டுர போறாங்க ;)))))

said...

//அப்படியே ரெண்டு ‘டன்லப்’ தலையணைய முன்னாடி ஒண்ணு முதுகிலே ஒண்ணுன்னு கட்டிகிட்டு கவலையே படாம ஏறுங்க.//
இந்த ஐடியாவுக்கு எனக்கு காப்பி ரைட் வேணும் பாண்டி, ஆமாம் சொல்லிட்டேன் :)

said...

//இந்த வாரம் நட்சத்திரம் அந்த அம்மணி தானா?? எல்லாரும் போட்டுத்தாக்குறீங்க... அசத்துங்க.//

நாங்க எல்லாம் எங்க ஊருல.. ஓடற ரயில ஒத்த கையில நிறுத்தனவுங்க..!!! ம்ஹும்..எங்க நிறைய பேருக்கு இது தெரியல..!! போட்டுதாக்கிட்டாலும்.. :) :)

said...

//We The People said...
இந்த வாரம் நட்சத்திரம் அந்த அம்மணி தானா?? எல்லாரும் போட்டுத்தாக்குறீங்க... அசத்துங்க.//

வாங்க ஜெய் :))))
அட கவிதாக்கா நம்ம அக்கா!! ரொம்ப நல்லவங்க நெசமாதேன் சொல்லுதேன்!!:))) எல்லாம் சும்மா ஜாலிக்கு !! :))

//இந்த கொடுமைக்காக தான் நான் மனுஷனாகவே இருக்கலாம் என்று லோகல் பஸ் ஏறுவதை நிறுத்தி 15 வருஷம் ஆச்சு!!! //

ஆஹா வாங்க வாங்க கொசுவுக்கு பயந்து கோட்டைய கொழுத்தறதுன்னா இதுதானா ?? என்னாங்க சங்கர் நீங்க !! :))))

said...

//துர்கா said...
jollz இது எல்லாம் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்த டிப்ஸ்தானே! //

அட ஆமாங்க துர்க்கா :)) எல்லா பொண்ணுகளும் என்னைய
" தெய்வமே!" ( நல்லவிதமாதேன் )அப்படீன்னு பார்க்கற அனுபவதிலே கொடுத்த டிப்ஸ்!!! ஹிஹிஹிஹி

said...

//துர்கா said...
ஆனால் jollz நீங்க மட்டும் மிருகம் என்று கேள்விப்பட்டேன்!யாரோ உங்களை வால் இல்லாத குரங்கு என்று சொன்னார்கள்! //

அட என்னாங்க துர்கா வால் இல்லாம நீங்க கூடத்தான் இருகீங்க !! அதுக்காக ?? :))))))))))))

said...

//கவிதா said...
சந்தோஷமா? ஜொள்ஸ்.. ?!!!

:) :) :)... முடியல..ப்பா.. எல்லாரும் என்னைய கவிதா ரெம்ப நல்லவங்கன்னு சொல்றாங்கப்பா.. //

வாங்க கவிதாக்கா :)))))))
ரொம்ப ரொம்ப சந்தோசம் நீங்க வந்தது !!! :)))))

நெசமாலுமே நீங்க நல்லவுகதான் !!!! :)))))

said...

// பொன்ஸ் said...
//அப்படியே ரெண்டு ‘டன்லப்’ தலையணைய முன்னாடி ஒண்ணு முதுகிலே ஒண்ணுன்னு கட்டிகிட்டு கவலையே படாம ஏறுங்க.//
இந்த ஐடியாவுக்கு எனக்கு காப்பி ரைட் வேணும் பாண்டி, ஆமாம் சொல்லிட்டேன் :) //

வாங்க வாங்க பொன்ஸக்கா :))))
அட இது உங்களுக்கும் அந்த ஐட்டியா தோணிடுச்சா :))))) சரி சரி என்ன காபி வேணும்னு சொல்லுங்க நம்ம நாயர் கடையிலே ஸ்பெசலா போட சொல்லி கொடுக்கறேன் ;))))))))))

said...

//நெசமாலுமே நீங்க நல்லவுகதான் //

இதுவேறையா..?!! இதுக்கு..நேரா கூப்பிட்டு நாலு அரை விட்டு இருக்காலம் போல..?!!...

said...

//கவிதா said...
//நெசமாலுமே நீங்க நல்லவுகதான் //

இதுவேறையா..?!! இதுக்கு..நேரா கூப்பிட்டு நாலு அரை விட்டு இருக்காலம் போல..?!!... //

அட என்ன கவிதாக்கா இப்படி சொல்லிபுட்டீக !!உண்மையதேன் சொல்லுதேன் !! நம்புங்க !! :))))))

said...

//அட என்ன கவிதாக்கா இப்படி சொல்லிபுட்டீக !!உண்மையதேன் சொல்லுதேன் !! நம்புங்க !! :)))))) //

என்ன ஜொள்ஸ் அண்ணே.. அம்மணிய ஓவராத்தான் உசுப்பேத்தறீங்க போல இருக்கு.. நடக்கட்டும் நடக்கட்டும்..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அம்மணி உடம்பு ரணக்கலமா கிடக்கு..!! :) :) எனக்கு ஜாலித்தேன்..!!

said...

//" தெய்வமே!" ( நல்லவிதமாதேன் )அப்படீன்னு பார்க்கற அனுபவதிலே கொடுத்த டிப்ஸ்!!! ஹிஹிஹிஹி //

jollz நல்லவே சமாளிக்கின்றீர்கள்!!

//அட என்னாங்க துர்கா வால் இல்லாம நீங்க கூடத்தான் இருகீங்க !! அதுக்காக ?? :)))))))))))) //
உங்கள் கூட சேர்ந்து விட்டேன் இல்லை.என்ன பண்ணுவது.இனிமேல் உங்களை மாதிரிதான் இருக்க வேண்டும்.(without the jollu)

said...

கலக்கீட்டீங்க..ஜொள்ஸ்..! அதானே-
man is a soical animal..இல்லயா!!

said...

//அணில்குட்டி said...
//அட என்ன கவிதாக்கா இப்படி சொல்லிபுட்டீக !!உண்மையதேன் சொல்லுதேன் !! நம்புங்க !! :)))))) //

என்ன ஜொள்ஸ் அண்ணே.. அம்மணிய ஓவராத்தான் உசுப்பேத்தறீங்க போல இருக்கு.. நடக்கட்டும் நடக்கட்டும்..//

அட வா அணிக்குட்டி :))))
அட இதெல்லாம் உசுப்பேத்தறது கெடையாது அணிலு. சிலசமயம் நானும் உண்மைய பேசுவேன் தெரியும்லே !! ;))))

//இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அம்மணி உடம்பு ரணக்கலமா கிடக்கு..!! :) :) எனக்கு ஜாலித்தேன்..!! //

அடப்பாவி அணிலு மொதலாளீயம்மா நல்லா இருந்தாதேன் உனக்கு சோறு ஞாபகம் இருகட்டும் தெர்தா ??:)))) அதான் உங்க மொதலாளியம்மா ஒத்தக்கையிலே ட்ரெய்னையே நிறுத்துனவுக ஆச்சே ஆரு என்ன பண்ணிட முடியும்??!! :))))))))))

said...

//துர்கா said...
//" தெய்வமே!" ( நல்லவிதமாதேன் )அப்படீன்னு பார்க்கற அனுபவதிலே கொடுத்த டிப்ஸ்!!! ஹிஹிஹிஹி //

jollz நல்லவே சமாளிக்கின்றீர்கள்!!//

அட அடிவாங்கமா எப்படி தப்பிகிறதாம் பின்னே ??:)))

//அட என்னாங்க துர்கா வால் இல்லாம நீங்க கூடத்தான் இருகீங்க !! அதுக்காக ?? :)))))))))))) //
//உங்கள் கூட சேர்ந்து விட்டேன் இல்லை.என்ன பண்ணுவது.இனிமேல் உங்களை மாதிரிதான் இருக்க வேண்டும்.(without the jollu) //

அய்யய்யே வாயும் ஜொள்ளுமா இருந்தாதேன் அழகே !! :))))

said...

பாண்டிண்ணே,

இதுவும் கோமுட்டி தலையன் அழகுராஜா'கிட்டே கேட்கிற கேள்விதான்...

எப்பிடி அண்ணே உங்களுக்கு மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது....??

said...

//சந்தனமுல்லை said...
கலக்கீட்டீங்க..ஜொள்ஸ்..! அதானே-
man is a soical animal..இல்லயா!! //

வாங்க சந்தனமுல்லை :)))))
ஹிஹிஹிஹி ரொம்ப தேங்க்ஸ்!!!

ஆஹா இன்னொரு தாய்குலம் நமக்கு ஆதரவு தருதேன்னு சந்தோசப்படுகிட்டே ஓடிவந்தா man is a soical animal ன்னு சொல்லி ஏதோ கொழப்புறீயளே முல்லை என்னா இது ?? :))))))

said...

// இராம் said...
பாண்டிண்ணே,

இதுவும் கோமுட்டி தலையன் அழகுராஜா'கிட்டே கேட்கிற கேள்விதான்...

எப்பிடி அண்ணே உங்களுக்கு மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது....?? //

வாங்க ராம் :)))))
இப்படியெல்லாம் கன்னாபின்னானு உணர்ச்சிவசப்படக்கூடாது சொல்லிபிட்டேன் !!! :)))))) எல்லாம் நம்ம கவிதாக்கா பவர்புல்லா எழுதனதை படிச்ச ஒரு effect டு தான் வேறென்ன!!! :))))))))))

said...

அதாவது animal-ன்னு man-ஐ தானே சொல்லியிருக்காங்க!! womana-ஐ இல்லியே ன்னு சொல்லியிருக்கேங்க!!

said...

//சந்தனமுல்லை said...
அதாவது animal-ன்னு man-ஐ தானே சொல்லியிருக்காங்க!! womana-ஐ இல்லியே ன்னு சொல்லியிருக்கேங்க!!//

நெனச்சேன் முல்லை இப்படி பிரச்சனைய கெளப்புவீங்கன்னு !! :)))))

அட அது அப்படி இல்லீங்க முல்லை! நல்லா பாருங்களேன் woman. woman னுக்குள்ளார man இருக்குறதால ...ஹிஹிஹிஹி புரிஞ்சுக்குங்க முல்லை !! :))))

said...

எல பாண்டி ... சும்மா இருக்க மாட்ட ...
தாய்குலம் கொச்சிக்க மாட்டாங்க ...

பஸ்ல தான்னா ...
Blogs லுயும் மா ...
சும்மா இருங்கபா .....

said...

//சுந்தர் / Sundar said...
எல பாண்டி ... சும்மா இருக்க மாட்ட ...
தாய்குலம் கொச்சிக்க மாட்டாங்க ...

பஸ்ல தான்னா ...
Blogs லுயும் மா ...
சும்மா இருங்கபா ..... //

வாங்கண்ணா சுந்தர் :)))))))
அட அட அட என்னா அக்கறை. ஆமா நான் தாய்குலத்துக்கு ஆதரவாதேன் போஸ்ட் போட்டு இருகேங்கோ !! பஸ்ஸிலே எல்லாம் நான் பக்கா ஜென்லில்மேனுங்க.
( இப்போ போறதில்லைங்கறது வேற விசயம் !! ) ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லி இமேஜை டேமேஜ் பண்ணிடாதீங்கப்பா :))))))))))))))

said...

//man is a soical animal//
தப்பு.
Human is a Social aniamal
இதுதான் சரி

said...

எல பாண்டி ...தப்பா எம்முல புரிஞ்சுகிற ...
எங்கள் ஒட்டு பாண்டிக்கே ..ச்ச.. ஜொள்ளுபாண்டிக்கே !!

said...

//Anonymous said...
//man is a soical animal//
தப்பு.
Human is a Social aniamal
இதுதான் சரி //

வாங்க அனானி :)) என்னாங்க இது புது விளக்கமா இருக்கே !!!!!

said...

//சுந்தர் / Sundar said...
எல பாண்டி ...தப்பா எம்முல புரிஞ்சுகிற ...
எங்கள் ஒட்டு பாண்டிக்கே ..ச்ச.. ஜொள்ளுபாண்டிக்கே !! //


அட என்னாங்க சுந்தர் நான் உங்களை தப்பா புரிஞ்சுக்கலங்க !!! சும்மா அதெல்லாம் ஜுஜுபீ !!! :))) நீங்க வந்து என்ன வேணாலும் சொல்லுங்க சரியா ???:))))

said...

//அய்யய்யே வாயும் ஜொள்ளுமா இருந்தாதேன் அழகே !! :))))//

jollz பெண்கள் இப்படி இருந்த படு கேவலமாக இருக்கும்.ஏன் எப்படி தப்பு தப்பாக சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.நான் அப்பாவி பெண்.(பொய் நீங்கள் மட்டும் தான் சொல்ல வேண்டுமா என்ன?)

said...

பேசாம ஜென்டில்மென் ஸ்பெஷல் பஸ்ன்னு தனியா விட்டுட்டா டிப்ஸ் எல்லாம் மிச்சம் பண்ணிறலாம்ல ஜொள்ளுப்பாண்டி... என்ன அப்படி மெரள்ற? (பொதுவான) பஸ்லயே ஆண்கள் சீட்லயே ஆணிடமே சில்மிஷம் பண்ற ஆட்களை நினைச்சா?
:-)))

பெண்ணுக்குப் பெண் எதிரின்ற மாதிரி ஆணுக்கு இந்தமாதிரி சில்மிஷ ஆணே எதிரி ;-)

ஜொள்ளுப்பாண்டியெல்லாம் சொக்கத்தங்கம்! கொள்கைச் சிங்கம் ஆச்சே டென்ஷன் ஆவாத சாமி!

said...

அட அட அட.......

என்னால என் கண்ணையே நம்ப முடியலையே!!!!!

என்னப்பூ திடீர்னு சமுதாய கவலையெல்லாம் வந்து இந்த ஜொள்ளு மண்டைக்குள்ள உடுக்கை அடிச்சு ஆடுது??!!!

said...

ஏலே! என்னாலே பன்னுதீக இங்கின!

எல்லாம் எழுந்து போகலே! இங்கன படமா காட்டுறாக?

said...

//துர்கா said...
//அய்யய்யே வாயும் ஜொள்ளுமா இருந்தாதேன் அழகே !! :))))//

jollz பெண்கள் இப்படி இருந்த படு கேவலமாக இருக்கும்.ஏன் எப்படி தப்பு தப்பாக சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.நான் அப்பாவி பெண்.(பொய் நீங்கள் மட்டும் தான் சொல்ல வேண்டுமா என்ன?) //

ஹிஹிஹிஹி ஒத்துகிட்டா சரி துர்கா :)))) ஆமா நான் எங்கே தப்பு தப்பா சொல்லி கொடுக்குறேன்?? அபாண்டமா இருக்கே!!!

said...

எப்டியா உமக்கு மட்டும் இப்படியெல்லாம் ஐடியா வருது...

இருந்தாலும் உமக்கு தைரியம் ஜாஸ்தியா...

நான்கூட காமெடி போஸ்ட் ஒன்னு போடலாம்னு இருந்தேன். எதுக்கு இந்த பிரச்சனைன்னு ஃப்ரீயா விட்டுட்டேன் :)

said...

//Hariharan # 26491540 said...
பேசாம ஜென்டில்மென் ஸ்பெஷல் பஸ்ன்னு தனியா விட்டுட்டா டிப்ஸ் எல்லாம் மிச்சம் பண்ணிறலாம்ல ஜொள்ளுப்பாண்டி... என்ன அப்படி மெரள்ற? (பொதுவான) பஸ்லயே ஆண்கள் சீட்லயே ஆணிடமே சில்மிஷம் பண்ற ஆட்களை நினைச்சா?
:-)))//

வாங்க ஹரிஹரன் :)))))
அட இப்படி ஜென்டில்மேன் ஸ்பெசல் சாதா எல்லாம் விட்டா என்ன ஆவறது என் நிலைமை :)))) ஹையோ அவனுகளை நெனச்சாலே BP எகிருதே !! :))))


//பெண்ணுக்குப் பெண் எதிரின்ற மாதிரி ஆணுக்கு இந்தமாதிரி சில்மிஷ ஆணே எதிரி ;-)//

சரியாச்சொன்னீங்க ;)))

//ஜொள்ளுப்பாண்டியெல்லாம் சொக்கத்தங்கம்! கொள்கைச் சிங்கம் ஆச்சே டென்ஷன் ஆவாத சாமி! //

அட நான் டென்சன் ஆவலைங்க ஹரி!! நமக்கு பில்டிங் ஸ்ராங்கு ஆனா பேஸ்மெண்ட்தான் வீக் !கு :)))))

said...

//இம்சை அரசி said...
அட அட அட.......

என்னால என் கண்ணையே நம்ப முடியலையே!!!!!

என்னப்பூ திடீர்னு சமுதாய கவலையெல்லாம் வந்து இந்த ஜொள்ளு மண்டைக்குள்ள உடுக்கை அடிச்சு ஆடுது??!!! //

வாங்க வாங்க இம்சையகா :))))
எலேய் இம்சையகாவுக்கு ஸ்ராங்கா ஒரு உடுக்கை ச்ச்சே டீ வாங்கியா !! நம்புங்க. நம்க்கும் இப்படி சமுதாய சிந்தனியெல்லாம் வந்து தாரை தப்பட்டையோட கும்மியடிக்குங்க !! என்னா இது கொஞ்சம் சேவை பண்ணினா இப்படி கேட்குறீங்க!!:))))))

said...

// நம்க்கும் இப்படி சமுதாய சிந்தனியெல்லாம் வந்து தாரை தப்பட்டையோட கும்மியடிக்குங்க !! என்னா இது கொஞ்சம் சேவை பண்ணினா இப்படி கேட்குறீங்க!!:))))))
//

அய்யோ நான் ஒண்ணும் தப்பா சொல்லல. எந்தம்பி இப்படி பொறுப்பா சேவை மனசோட இருந்தா எனக்கு சந்தோஷம்தான :))

said...

//கார்மேகராஜா said...
ஏலே! என்னாலே பன்னுதீக இங்கின!

எல்லாம் எழுந்து போகலே! இங்கன படமா காட்டுறாக? //

வாங்கண்ணா கார்மேகராசா :))) ஆமா ஏன் அல்லாறையும் வெரட்டுறீங்க?? இருந்துட்டு போகட்டுமே :)))

said...

// இம்சை அரசி said...
// நம்க்கும் இப்படி சமுதாய சிந்தனியெல்லாம் வந்து தாரை தப்பட்டையோட கும்மியடிக்குங்க !! என்னா இது கொஞ்சம் சேவை பண்ணினா இப்படி கேட்குறீங்க!!:))))))
//

அய்யோ நான் ஒண்ணும் தப்பா சொல்லல. எந்தம்பி இப்படி பொறுப்பா சேவை மனசோட இருந்தா எனக்கு சந்தோஷம்தான :)) //

அட என்னாங்க இம்சையக்க டென்சன் ஆய்டீங்க !! ;)))) சேவையே என் மூச்சு சேவையே என் பேச்சு !! ( சாப்பிடுற சேவை இல்லீங்க :))) ஆனா சேவை அப்பப்போ மாறும் பயனாளிகளைப் பொருத்து ;)))))))

said...

// அட என்னாங்க இம்சையக்க டென்சன் ஆய்டீங்க !! ;)))) சேவையே என் மூச்சு சேவையே என் பேச்சு !! ( சாப்பிடுற சேவை இல்லீங்க :))) ஆனா சேவை அப்பப்போ மாறும் பயனாளிகளைப் பொருத்து ;)))))))
//

எனக்கு தெரியாதா உங்க கொள்கைய பத்தி????

"என் பணி ஜொள்ளு விட்டுக் கிடப்பதே" - ஜொள்ளுபாண்டி

என்ன சரியா??

said...

இன்னாபா இது...

இங்க நடக்குற டிஸ்கஜனை பாத்தா "ஜொள்ளு" பாண்டிங்க எல்லாம் திருந்தி "நல்ல" பாண்டியா மார்ற மாதிரி தெரியுதே... :))

உங்க சமுதாய சிந்தனை வாய்க...

தெரியாமதான் கேக்குறேன் இம்மாம் கஸ்டம் எதுக்கு...
நம்ம கிட்ட சூப்பர் ஐடியா கீது..

நம்ம சிட்டிய இரண்டா பிரிச்சு ஒரு பக்கத்துல எல்லா பொம்பளைங்க... ஆம்பளைங்க எல்லாம் இன்னொரு பக்கம் அப்படின்னு வெச்சிட்டோம்னு வச்சிக்கோங்க பிரச்சனையே வராது இல்ல...

ஆம்பளைங்க கிட்ட இருந்து பொம்பளைங்களையும் பொம்பளைங்க கிட்ட இருந்து ஆம்பிளைங்களையும் காப்பாத்த இத விட சூப்பர் ஐடியா இருக்க முடியுமா.. இன்னா?

said...

//இம்சை அரசி said...
எனக்கு தெரியாதா உங்க கொள்கைய பத்தி????

"என் பணி ஜொள்ளு விட்டுக் கிடப்பதே" - ஜொள்ளுபாண்டி

என்ன சரியா?? //

சரியாசொன்னீங்க இம்சையக்கா:)))) என்னைய பத்தி இப்படி புட்டு புட்டு வைக்கிறியளே கேக்கறப்போ ஆனந்த கண்ணீரா வருது :)))))))

said...

// அரை பிளேடு said...
இன்னாபா இது...

இங்க நடக்குற டிஸ்கஜனை பாத்தா "ஜொள்ளு" பாண்டிங்க எல்லாம் திருந்தி "நல்ல" பாண்டியா மார்ற மாதிரி தெரியுதே... :))//

வாங்கண்ணா அரைப்ளேடு ;))))
என்னா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க எல்லாம் டிஜிடல் எபக்ட்ல ஜொள்ளுவிடுறவங்ககோவ். விடறதும் தெரியாது யாருக்கு கஷ்டமும் இருக்காது ;)))

//உங்க சமுதாய சிந்தனை வாய்க...//

தேங்யூ தேங்யூ தேங்யூ...;))))

//தெரியாமதான் கேக்குறேன் இம்மாம் கஸ்டம் எதுக்கு...
நம்ம கிட்ட சூப்பர் ஐடியா கீது..

நம்ம சிட்டிய இரண்டா பிரிச்சு ஒரு பக்கத்துல எல்லா பொம்பளைங்க... ஆம்பளைங்க எல்லாம் இன்னொரு பக்கம் அப்படின்னு வெச்சிட்டோம்னு வச்சிக்கோங்க பிரச்சனையே வராது இல்ல...//

அட என்னா நீங்க அப்படி பண்ணினா நம்மள மாதிரி ஆளுங்க என்னா பண்றது ?

//ஆம்பளைங்க கிட்ட இருந்து பொம்பளைங்களையும் பொம்பளைங்க கிட்ட இருந்து ஆம்பிளைங்களையும் காப்பாத்த இத விட சூப்பர் ஐடியா இருக்க முடியுமா.. இன்னா? //

ஐயோ டிசண்டா ஜொள்ளு விட்டா எல்லார்ருக்கும் புடிக்கும்க ப்ளேடண்ணா. என்ன ஜொள்ளு லொள்ளு ஆகும்போதுதான் பிரச்சனையே!!! :))))

said...

// சரியாசொன்னீங்க இம்சையக்கா:)))) என்னைய பத்தி இப்படி புட்டு புட்டு வைக்கிறியளே கேக்கறப்போ ஆனந்த கண்ணீரா வருது :)))))))
//

அச்சச்சோ...... இப்படியெல்லாம் கண்ணீர் விடக் கூடாது......

தம்பி அழுதா அக்கா மனசு தாங்குமா???

said...

// இம்சை அரசி said...
// சரியாசொன்னீங்க இம்சையக்கா:)))) என்னைய பத்தி இப்படி புட்டு புட்டு வைக்கிறியளே கேக்கறப்போ ஆனந்த கண்ணீரா வருது :)))))))
//

அச்சச்சோ...... இப்படியெல்லாம் கண்ணீர் விடக் கூடாது......

தம்பி அழுதா அக்கா மனசு தாங்குமா??? //

ஆனந்த கண்ணீர் கூடவா?? இமசையக்கா வாழ்க !! வாழ்க !! :))))