Tuesday, January 09, 2007

F 14

 F 14

என்னாடா இது தலைப்புன்னு பார்க்குறீங்களா ?? என்னாங்க பண்றது. வேலண்டைன்ஸ் டே க்கு இன்னும் ஒரு மாசந்தேன் இருக்கு. பிகர் இருக்குறவுக எல்லாம் இப்போ இருந்தே ரெடியாகபோறேன் கொடிபிடிக்கபோறேன் அப்படீன்னு பிஸ்த்து கெளப்பிகிட்டு ஜீன்ஸுபேண்டும் முண்டா பனியனுமா கலவரமா சுத்திகிட்டு இருக்காங்க. பிக்கப்பு பேக்கப்புன்னு அவனவன் அலப்பறை உட்டுகிட்டு டாப் கியர்ல எகிறிகிட்டு இருக்கானுக. ஆனா பிகரே இல்லாம இன்னமும் மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா) மொரைச்சி மொரைச்சு பார்துகிட்டு பிஸ்ஸாவும் பர்கருமா கிரைண்டர் கணக்கா அரைச்சுகிட்டு சோலோவா இன்னமும் பசங்களோட மட்டும் சினிமா பார்த்துகிட்டு சுத்திகிட்டு இருக்குற நம்ம சாப்ட்வேர் சங்கரபாண்டியனெல்லாம் என்ன பண்ணுவாய்ங்க?

இதுலே நம்ம க்ளோஸ் ப்ரெண்ட் ஒருத்தர் கிட்டே கேட்டேன் ‘என்னாபா பண்ணபோறே வேலண்ட்டைன்ஸ் டே க்குன்னு?’ அவ்ளோதான் ஒரே அழுகாச்சி. “பாண்டி !நான் இதுவரைக்கும் ஒரு பொண்ணுகிட்டே கூட பேசுனதே இல்ல !! நானும் ஏதாச்சும் ஒரு 'ராங் கால்' லாச்சும் பொண்ணுங்க கிட்டே இருந்து வந்துராதான்னு பார்த்துகிட்டு காத்துகெடக்கேன். ஆனா எனக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லடா! . எப்போவாச்சும் எந்த பயலுக்காச்சும் 'போன்' னப் போட்டா “the subscriber cannot be reached at the moment” ன்னு மட்டும் ஏதோ ஒரு பொண்ணு உசுர கொடுத்துகிட்டு சொல்லும். இதுவே BSNL Phoneஆ இருந்தா அதையவே கர்ணகொடூரமா ஒரு ஆளு சொல்லுவான்! என்ன பண்றது பாண்டி? வேலண்டைன்ஸ் டே அன்னிக்கி ஊர்ல இருக்குற பொக்கைவாயனெல்லாம் ‘பொக்கே’ யோட அந்தகால தெலுங்கு ஹீரோ ரேஞ்சுக்கு சிகப்பு பேண்ட்டு பச்சை சட்டைன்னு பிளிறிகிட்டு அலைவானுங்க. நான் மட்டும் ‘பெக்’ அடிச்சுட்டு கவுந்தர வேண்டியதுதானா ? எல்லாம் என் தலையெழுத்து !! கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்டாட்டியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடனும்னுங்கற அவலநிலைக்கு தள்ளப்பட்டுட்டேனே!!” ன்னு பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி !!

சரி சரின்னு அவனை ஆசுவாசப்படுத்தி ஓரமா ஒக்காரவச்சு சிச்சுவேசனை சீரணிக்கறதுக்கு ஓமத்திரவகம் கொடுத்துட்டு யோசிச்சேன். நம்ம ப்ரெண்டுக்கு மட்டுமா இந்த ப்ராப்ளம்? வேலெண்டைன்ஸ் டே கொண்டாடுற 'ட்ரெண்டு ' வந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தானேன்னு. பேசாமா எல்லாரும் சந்தோசமா பிகரோட பிளிறிகிட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாட ஜொள்ளுபேட்டையில இருந்து சில ஐடியாகளை அள்ளித்தெளிச்சா என்னானு தோணுச்சு. இதோ தெளிக்க ஆரம்பிச்சிட்டேன். அல்லாரும் வந்து நனைஞ்சிட்டு போங்கப்பூ !!


நீங்க பிகரை பார்க்கறது இருக்கட்டும் . பிகர் உங்களைப் பார்க்குதான்னு பார்க்கனுமில்லே ? கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க. உங்களுக்கு முன்னாடியே உங்க தொப்பை உலககோப்பை கணக்கா ‘கோல்’ அடிக்குதா? உடனே உங்க ஷூவை எடுத்து மாட்டிகிட்டு தீப்புடிச்ச மாதிரி தெனமும் ஓட ஆரம்பிங்க. தொப்பையும் குறையும் அப்படியேக்கா எக்குதப்பா ஏதாச்சும் பிகர் மாட்டுச்சுன்னா ஓடிப்போய் (பொண்டாட்டிய வுட்டுட்டு இல்லீங்க ) கல்யாணம் பண்ணிக்கவும் முடியும்!! எப்படி மல்ட்டி பர்பஸ் ஐடியா ?

எப்பவும் கோடிங்கு ப்ராஜெக்டுன்னு கொலவெறியோட யோசுசிகிட்டு இருக்காம இப்போ இருந்தே ஏதாச்சும் உங்களுக்கு சிக்குற மாதிரி 'அம்மாயி ஒஸ்தாரா 'ன்னு தலைக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்குற ‘ஸ்பைகேமரா’ மாதிரி மண்டையை கேபினுக்கு மேலே வுட்டு அடிக்கடி பார்த்துகிட்டே இருங்க. ஏதாசும் பிகர்சின்னம் தென்மேற்கு திசையிலயோ வடகிழக்கு திசையிலயோ உருவாகறமாதிரி தெரிஞ்சா உடனே மத்தவனுக அலர்ட் ஆகறதுக்குள்ள நீங்க பிகருக்கு குடை பிடிக்க ஆரம்பிச்சுடுங்க. கோடிங் எழுதவே மத்தவனுக கிட்டே கும்மியடிக்கவேண்டிய அவலநிலைமையிலே நீங்க இருந்தாலும் நீங்கதான் ‘கோடிங் குரு’ ன்னு ஒரு பிட்டை நல்லா ஸ்ராங்கா போடுங்க. யாருகண்டா ? உங்க அறிவபார்த்து காதல்மழை வானத்தை பொத்துகிட்டு ஊத்தரதுக்கு பிரகாசமான சான்ஸ் இருக்கு !!

இப்போ இருந்தே ரெண்டு மூணு Format ல லவ் லெட்டர்களை ரெடிபண்ணுங்க. எழுதறப்போ அப்படியேக்கா அங்கங்கே சுட்ட சுடாத காதல் கவிதைகளை லெட்டர் முச்சூடும் அள்ளி தெளிச்சுக்குங்க. அதுக்குன்னு “ என் எல்லா காதலுமே முதல் காதல்தான்!! - அந்தந்த பெண்களிடம்!! ன்னு அபத்தமா இருக்குறதையெல்லாம் போட்டா அவ்ளோதான் அப்புறம் பிகர்கிட்டே பினாயில், குடிக்க வேண்டியதுதான் . ஜாக்கிரதை ! வழக்கமான உங்க சாப்ட்வேர் புத்தியிலே லவ் லெட்ட்ர் மேலே ‘To Whomsoever it may concern” ன்லாம் எழுதிபுடாதீங்க. அப்புறம் வாழ்க்கையிலே நீங்க பொண்டாடியோட மட்டும்தான் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறது கன்பார்ம் ஆய்டும்! அப்புறம் ஆதங்கப்பட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லே !!

இப்போல்லாம் பல பிகருக இன்ஸ்டண்ட் அல்வா பாக்கெட்டோட அமைதியா சுத்திகிட்டு இருக்குறதா பேட்டையிலே இருந்து ரகசிய தகவல் ஒரு அல்வா வாயன்கிட்டே இருந்து வந்துச்சு. இப்படிபட்ட அல்வா பார்ட்டிக கிட்டே கீது லவ்லெட்டர் கொடுத்து கோக்கு மாக்கா மாட்டிகிட்டீங்கன்னு வைங்க வேற வழியே இல்லை !! பேசாம வடிவேலு கணக்கா “நான் இதுவரை லவ்வே பண்ணுனது இல்லை ! வேணாம் விட்டுடு! வலிக்குது !! “ ன்லாம் சொல்லி பாருங்க . இல்லாட்டி இருக்கவே இருக்கு முதுகு !! அடிக்கிற வரைக்கு அடிச்சிக்கோன்னு குனிஞ்சு நின்னுகிட்டு ஒண்ணு.. ரெண்டு.. ன்னு எண்ண ஆரம்பிச்சுடுங்க. உங்க பரிதாப நிலைமைய பார்த்து பிகர் மனசுகுள்ளே காதல் கரகாட்டம் சலங்கைய கட்டிகிட்டு கண்டபடி ஆடாதா என்ன?

சரி சரி இப்போதைக்கு இது போதும். அல்லாரும் போய் ‘Pitch; ஐ ரெடி பண்ணுங்கப்பு. ஆமா என்னாடா அது F 14 ? எல்லாம் February 14, ஐதான் அப்படி சுருக்கி சுருக்கி எழுதி இருக்கேன் ஹிஹிஹிஹி. F 14 வர்ற வரைக்கும் அப்பப்போ இப்படிபட்ட ஐடியாக்களை அள்ளிதெளிக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்லுறீக கண்ணுகளா ?

33 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

Are you available.lol
I heard you are also having the same problem!Got gf or not!

said...

F 14 -ன்னு தலைப்ப பார்த்தவுடனே என்னடா நம்ம ஜொள்ளுப்பாண்டி ட்ராக் மாறி ஏதோ ஏரோப்ளேனப்பத்தி எழுதறாருன்னு நெனச்சு ஒரு நிமிசம் பயந்துட்டேன். அப்படி எல்லாம் எழுதினா அப்புறம் இப்படி டிப்ஸ் யாரு குடுப்பாங்களாம்?

ஐடியா எல்லாஞ்செரிதானுங்க. நீங்க இதில எத பாலோ பண்ணபோறீங்க?

said...

//Anonymous said...
Are you available.lol
I heard you are also having the same problem!Got gf or not! //

வாங்க அனானி :))
நான் அவய்லபிலான்னு தெரிஞ்சுக்கறதிலே ஏங்க உங்களுக்கு ஆர்வம் ? என்னா கேள்வி இது ஹிஹிஹிஹிஹி

said...

//Pranni said...
F 14 -ன்னு தலைப்ப பார்த்தவுடனே என்னடா நம்ம ஜொள்ளுப்பாண்டி ட்ராக் மாறி ஏதோ ஏரோப்ளேனப்பத்தி எழுதறாருன்னு நெனச்சு ஒரு நிமிசம் பயந்துட்டேன். அப்படி எல்லாம் எழுதினா அப்புறம் இப்படி டிப்ஸ் யாரு குடுப்பாங்களாம்? //

வாங்க Pranni :))
ஹஹஹஹ்ஹ்ஹா இப்படிபட்ட தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுதுடாதீங்கப்பூ :))))

//ஐடியா எல்லாஞ்செரிதானுங்க. நீங்க இதில எத பாலோ பண்ணபோறீங்க?//

என்னாங்க இது வம்பா இருக்கு ? வாத்தாயறு எதுக்கு பாடம் படிக்கனும் ? சொல்லிகொடுத்தா மட்டும் போதாதா ? பசங்க அல்லாருக்கும் கற்பூரபுத்திங்கோ ;)))))))

said...

எல்லோரும் கொண்டாடுவோம் ... F14 ....
ஜொள்ளுப்பேட்டைன் தலைமையில் ஒன்றினைவொம் !
வீரவேல் ... ஜொள்ளு வேல் ! வெற்றி நமதே ! ..
எல்லோரும் கொண்டாடுவோம் ... F14 ....

said...

//சுந்தர் / Sundar said...
எல்லோரும் கொண்டாடுவோம் ... F14 ....
ஜொள்ளுப்பேட்டைன் தலைமையில் ஒன்றினைவொம் !
வீரவேல் ... ஜொள்ளு வேல் ! வெற்றி நமதே ! ..
எல்லோரும் கொண்டாடுவோம் ... F14 .... //

வாங்கண்ணா சுந்தர் ;)))))
இப்படியெலாம் போருக்கு கெளம்பற effect கொடுத்தா எப்படி?? தாவணி கட்டிய பல்சர் பைக் மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க பார்க்கலாம் ;)))

said...

ஏப்பூ பாண்டி... என்ன இது... நீ ஒரு நிரந்தர மாணவ மணியாயிருப்பன்னு பார்த்தா.. வாத்தியார் ஆயிட்டே...

கொஞ்ச காலமாவே பாலாஜி பப்ளிகேஷந்ச் புக் மாதிரி பதிவுப் போட்டுகிட்டு இருக்க.. என்ன ஆச்சு... வூட்ட்ல்ல கைக்கு காலுக்கு எல்லாம் பூட்டு ரெடி பண்ணிட்டாங்களா என்ன?

said...

ஹாய்,
அது சரி, இந்த மாதிரி எத்தனை பிகருங்க கிட்ட நீங்க மாட்டி கிட்டு அல்வா வாங்கியிருக்கீங்க...? அனுபவம் பேசுதா?

ம்ம்ம்ம்.... இன்னும் என்னவெல்லாம் சொல்ல போறீங்கனு பாப்போம்...

said...

////மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா)///

மானிட்டர் இன்னும் கிடைக்குதா ?? ஹும், பழைய நியாபகத்தை பதிவை கால்வாசி படிச்சவுடனே கிளறிட்டீங்க...

said...

//தேவ் | Dev said...
ஏப்பூ பாண்டி... என்ன இது... நீ ஒரு நிரந்தர மாணவ மணியாயிருப்பன்னு பார்த்தா.. வாத்தியார் ஆயிட்டே...//

வாங்க தேவு ;))))
என்னா தேவு இப்படி கேட்டுப்புடீக ? வாழ்க்கைங்கற ஸ்கூலிலே நான் என்னிக்குமே மாணவன் தான் ;))))

//கொஞ்ச காலமாவே பாலாஜி பப்ளிகேஷந்ச் புக் மாதிரி பதிவுப் போட்டுகிட்டு இருக்க.. என்ன ஆச்சு... வூட்ட்ல்ல கைக்கு காலுக்கு எல்லாம் பூட்டு ரெடி பண்ணிட்டாங்களா என்ன? //

NOOOOOOOOOOOO Never.... எவ்ளோ சந்தோசமா சுத்திகிட்டு இருக்கேன். என்னைய பார்த்து இப்படி நாட்டுவெடிகுண்டை கவலையே படாம வீசுறீயளே இது ஞாயமா ?? :)))))))))))

said...

//sumathi said...
ஹாய்,
அது சரி, இந்த மாதிரி எத்தனை பிகருங்க கிட்ட நீங்க மாட்டி கிட்டு அல்வா வாங்கியிருக்கீங்க...? அனுபவம் பேசுதா?//

வாங்க சுமதி :))))))))))
நானா ? அல்வாவா ?? :)))) என்னாங்க இப்படி வரலாற்று ரகசியங்களையெல்லாம் இப்படி பப்ளிக்கா கேட்டா எப்படி ?? ;))))

//ம்ம்ம்ம்.... இன்னும் என்னவெல்லாம் சொல்ல போறீங்கனு பாப்போம்... //

உங்களுக்கு இல்லாததா?? பாருங்க பாருங்க :)))

said...

// செந்தழல் ரவி said...
////மானிட்டரையே (டாஸ்மார்க் சரக்கு இல்லீங்கண்ணா)///

மானிட்டர் இன்னும் கிடைக்குதா ?? ஹும், பழைய நியாபகத்தை பதிவை கால்வாசி படிச்சவுடனே கிளறிட்டீங்க...//

வாங்க செந்தழல் :))))
என்னாங்க இது ஒரு பேச்சுக்கு சொன்னா இப்போ அந்த சரக்கு கெடைக்குதான்னு பப்ளிக்கா கேட்குறீங்க??;)))))) தெரியலைங்களே நமக்கு கேள்வி ஞானம் மட்டுந்தாங்கோ!! ஹிஹிஹிஹிஹி...

said...

//வாங்க அனானி :))
நான் அவய்லபிலான்னு தெரிஞ்சுக்கறதிலே ஏங்க உங்களுக்கு ஆர்வம் ? என்னா கேள்வி இது ஹிஹிஹிஹிஹி//
hehe just for fun la.I am free for this valentine.so just asking you whether you are available or not.

said...

ஆஹா!!!!

ஒட்டு மொத்த பெண்கள் குலத்துக்கே ஒரு உதவி பண்ணிட்ட தம்பி...

உன் அரும பெருமயெல்லாம் வில்லுப்பாட்டாத்தேன் பாடணும்....

புரியலயா???

பசங்க எப்படி எப்படியெல்லாம் நூல் விடுவாங்கன்னு இப்படியெல்லாம் புட்டு புட்டு வச்சிட்டியளே..... இனிமே பொண்ணுங்க எல்லாம் கவனமா இருந்துப்பாங்க...... :)))

(ஏதோ என்னால முடிஞ்சது.... கொளுத்தி போட்டுட்டேன் ):))))))

said...

அண்ணே,

ரொம்ப டாங்கீஸிண்ணே.... ஐடியாவெல்லாம் கொடுக்கிறீங்க... நீங்க ரொம்ப நல்லவரு... :)

இன்னும் நிறைய குடுங்க, அதிலே இந்த தடவை ஏதாவது ஒர்கவுட் ஆகுதான்னு பார்ப்போம்.:)

said...

ஜொள்ளுப்பாண்டி அண்னே...

ஜொள்ளுப்பேட்டை ஜொள்ளுப்பாண்டி தலைமையில் கொண்டாட நாங்க ரெடி...

நான் pitch ரெடி பன்னியாச்சு... நீங்க எப்போ ஐடியாக்களை அள்ளிதெளிக்க/தரப்போரீங்க...?

said...

ஜொள்ளு அவர்களே..

காதலர் தினம் என்பது அப்பாவி ஆண்களின் பாக்கெட்டுகளை சுரண்டுவதற்காக இளம் பெண்கள் கண்டு பிடித்த ஒரு தினம்.

அப்பாவியாகி பலியாகாதீர்கள்...

:))

said...

//Anonymous said...
//வாங்க அனானி :))
நான் அவய்லபிலான்னு தெரிஞ்சுக்கறதிலே ஏங்க உங்களுக்கு ஆர்வம் ? என்னா கேள்வி இது ஹிஹிஹிஹிஹி//
hehe just for fun la.I am free for this valentine.so just asking you whether you are available or not.//

வாங்க அனானி ;)))))
அப்போ நீங்களும் ப்ரீதானா ? உங்கள மாதிரி மைந்தர்களுக்குதானே இந்த பதிவே !! படிச்சிட்டு பட்டையகெளப்புங்க வேலண்டைண்ஸ் டேக்கு :)))))

said...

// இம்சை அரசி said...
ஆஹா!!!!
ஒட்டு மொத்த பெண்கள் குலத்துக்கே ஒரு உதவி பண்ணிட்ட தம்பி...
உன் அரும பெருமயெல்லாம் வில்லுப்பாட்டாத்தேன் பாடணும்....

புரியலயா???

பசங்க எப்படி எப்படியெல்லாம் நூல் விடுவாங்கன்னு இப்படியெல்லாம் புட்டு புட்டு வச்சிட்டியளே..... இனிமே பொண்ணுங்க எல்லாம் கவனமா இருந்துப்பாங்க...... :)))//

வாங்க இம்சையக்கா ;))))))
அட வில்லுப்பாட்டு பாடறதுக்கு சொல்லிக்குடுத்த நீங்களே இப்படி பண்ணினா எப்படி இம்சை? எனக்கு சொல்லிகுடுத்தவங்களை போடுக்கொடுக்க வேணாம்னுதான் இருந்தேன் இப்படி பப்ளிக்கா சொல்ல வச்சுட்டேயளே என்ன பண்ணுவேன்?? !! :)))))))))))

//(ஏதோ என்னால முடிஞ்சது.... கொளுத்தி போட்டுட்டேன் ):)))))) //

இம்சை நீங்க சூடத்தை கொளுத்திட்டா எல்லாம் ஆச்சா ? நாங்கள்ளாம் பந்தத்தையே கொளுத்திகிட்டு காத்துகிட்டு நிக்குறவுக !!!ஹாங்... ;))))))))))))

said...

// இராம் said...
அண்ணே,

ரொம்ப டாங்கீஸிண்ணே.... ஐடியாவெல்லாம் கொடுக்கிறீங்க... நீங்க ரொம்ப நல்லவரு... :)

இன்னும் நிறைய குடுங்க, அதிலே இந்த தடவை ஏதாவது ஒர்கவுட் ஆகுதான்னு பார்ப்போம்.:) //

வாங்க இராம் :)))))))))
ஆஹா இப்படிபட்ட ஒரு ஆளூக்காகத்தானெ நான் காத்துக்கெடக்கேன் ;)))) அள்ளி அள்ளி கொடுக்குறேன் ஐடியாவ கொஞ்சம் பொறுத்துக்குங்க !!

அலங்கா நல்லூரில நம்மளை ஜல்லிகட்டுக்கு கூப்பிட்டு இருக்காக. போய் ரெண்டு காளைய அடக்கீட்டு வந்து பேசுறேன் சரியா தம்பி ?? ;))))))))

said...

//விசு said...
ஜொள்ளுப்பாண்டி அண்னே...

ஜொள்ளுப்பேட்டை ஜொள்ளுப்பாண்டி தலைமையில் கொண்டாட நாங்க ரெடி...

நான் pitch ரெடி பன்னியாச்சு... நீங்க எப்போ ஐடியாக்களை அள்ளிதெளிக்க/தரப்போரீங்க...? //

வாங்க விசு :)))))
இப்படி என்னைய அண்ணேனு கூப்பிட்டு புல்லரிக்க வைக்குறீயளே !! :)))))) என்னா அதுக்குள்ள பிட்ச் ரெடியா ??? 'கில்லி' மாதிரி வேலை பாக்குறீயளே. கேக்குறப்போவே ஒரு பிக்ச்சர் பீரை பாட்டம்ஸ்ஸிப் அடிச்ச மாதிரி இருக்கே!!! இந்த வந்துடேன். தம்பி ராமுக்கு கொடுத்த பதிலை பாருங்க சரியா ;)))))))

said...

//அரை பிளேடு said...
ஜொள்ளு அவர்களே..

காதலர் தினம் என்பது அப்பாவி ஆண்களின் பாக்கெட்டுகளை சுரண்டுவதற்காக இளம் பெண்கள் கண்டு பிடித்த ஒரு தினம்.

அப்பாவியாகி பலியாகாதீர்கள்...//

வாங்க அரைப்ளேடு ;)))))))
அட என்னா நீங்க இப்டி சொல்லிபுட்டீங்க? இளம் பெண்கள் எதை சுரண்டுனா என்னாங்க கொஞ்சம் பேசுனாவே போதுமே அப்படீன்னு நான் சொல்லலை!! நம்ம பேட்டை மக்கள் சொல்றாங்க ஹிஹிஹிஹி :)))))))

இந்த விசயத்தில் நான் ஒரு அப்பாவிங்க ... ;)))))))))

said...

என்ன??????????
நாஞ்சொல்லிக் குடுத்தேனா??
புதுகதையால்ல இருக்கு....

நானே ஒண்ணுந்தெரியாத அப்பாவி புள்ள. என் மேல இப்பேற்பட்ட பழியா?? அய்யகோ.... தாங்குமா என் சின்ன இதயம்???

நான் கொளுத்திப் போட்டது சூடத்த இல்ல தம்பி. நல்லா பாத்துட்டு சொல்லணும். நூலு விட்டுட்டு அலையற பேட்டை மக்கா மேலத்தான் :))))))))

said...

//இம்சை அரசி said...
என்ன??????????
நாஞ்சொல்லிக் குடுத்தேனா??
புதுகதையால்ல இருக்கு....

நானே ஒண்ணுந்தெரியாத அப்பாவி புள்ள. என் மேல இப்பேற்பட்ட பழியா?? அய்யகோ.... தாங்குமா என் சின்ன இதயம்???

நான் கொளுத்திப் போட்டது சூடத்த இல்ல தம்பி. நல்லா பாத்துட்டு சொல்லணும். நூலு விட்டுட்டு அலையற பேட்டை மக்கா மேலத்தான் :)))))))) //

அட விடுங்க பாஸ்!! ( நீங்கதான் இம்மசையக்கோவ் ) நமக்குள்ள இருக்குற தொழில் ரகசியத்தை எதுக்கு வெளிய சொல்லிகிட்டு. அதான் நான் நீங்க சொல்லிகொடுத்த மாதிரியே கரெட்டா பண்ணிகிட்டு இருக்கமுல்ல?? ;)))))))))))))

said...

//அலங்கா நல்லூரில நம்மளை ஜல்லிகட்டுக்கு கூப்பிட்டு இருக்காக. போய் ரெண்டு காளைய அடக்கீட்டு வந்து பேசுறேன் சரியா தம்பி //

பாண்டிண்ணே...

அலங்கநல்லூர் பக்கத்திலே தான் நம்ம வீடு இருக்கு...

:)

said...

hi jollupandi
enna idhu pudhu kadaiya iruku... softwarela work panravangaluku love panna theriyatha ...nambitenga...rendu varama vijay tv la neeya naana pakala pola iruku adu thaan ippadi ellam.. romba appaviya irupeenga pola iruku!!!
he he he

said...

ஆஹா...ஆஹா.. அஹா..

நானும் உங்க நண்பர் கட்சித்தான் (உங்களோடதும் அதுதான்னு கேள்விப் பட்டேன்)

நீங்க கொடுத்த ஐடியாக்கள் பலத அள்ளித் தெளிச்சும் ஒரு ஃபிகரும் மாட்டலயே....

ஒருவேள மொகராசியா இருக்குமோ?

said...

//இராம் said...
//அலங்கா நல்லூரில நம்மளை ஜல்லிகட்டுக்கு கூப்பிட்டு இருக்காக. போய் ரெண்டு காளைய அடக்கீட்டு வந்து பேசுறேன் சரியா தம்பி //

பாண்டிண்ணே...

அலங்கநல்லூர் பக்கத்திலே தான் நம்ம வீடு இருக்கு...//

வாங்க இராம் :)))
ஹப்பா ஒரே களைப்பா இருக்கு !! காளைய அடக்குறதுன்னா சும்மாவா ?? உங்க வீடு பக்கதிலே தானா ?? கேள்விபடு இருப்பீயளே பல காளைகளை அடக்கிய காளையப் பத்தி ?? :))) யாரதுன்னு கேட்காதீங்க நாந்தேன் ஹிஹிஹிஹி :)))))))))))

said...

// dubukudisciple said...
hi jollupandi
enna idhu pudhu kadaiya iruku... softwarela work panravangaluku love panna theriyatha ...nambitenga...rendu varama vijay tv la neeya naana pakala pola iruku adu thaan ippadi ellam.. romba appaviya irupeenga pola iruku!!!//

வாப்ங்க டுபுக்கு டிசைபிள் :))))
அட நானெல்லாம் டிவிய பார்க்குறதே இல்லீங்களே !:)))

நல்ல வேளை நீங்களாச்சும் நம்முறீங்களே நான் அப்பாவிதான்னு அப்படியேக்கா உரக்க சொல்லுங்க, அல்லாரும் கேட்டுகிடட்டும் :)))))

said...

// ஜி said...
ஆஹா...ஆஹா.. அஹா..

நானும் உங்க நண்பர் கட்சித்தான் (உங்களோடதும் அதுதான்னு கேள்விப் பட்டேன்)//

வாங்க ஜி :))))
எனக்கு கட்சியும் இல்ல கொடியும் இல்லீங்க :))))

//நீங்க கொடுத்த ஐடியாக்கள் பலத அள்ளித் தெளிச்சும் ஒரு ஃபிகரும் மாட்டலயே.... //

அட மனச தளரவிடாதீங்க !! நீங்க பண்ற தப்பு என்னான்னா போனடு வந்ததுன்னு எல்லா பிகருக்கும் மானாவாரியா நூல்விட கூடாதுங்கண்ணா !! உங்க நம்பகத்தன்மை போய்டும் சரியா??

//ஒருவேள மொகராசியா இருக்குமோ? //
மொகம் என்னாங்க மொகம் மனசு matters ;))) அதுனாலே நம்ம விவேகானந்தர் சொன்ன மாதிரி "Be a Hero !! Always say I have no fear !! :))))

said...

hmm indha ideas use panni yaarukaavadhu set aayirukkaa??? illa neenga try panni pudungikitta ideas kuduthu vechurikeengalaa??

said...

//balaji said...
hmm indha ideas use panni yaarukaavadhu set aayirukkaa??? illa neenga try panni pudungikitta ideas kuduthu vechurikeengalaa??//

ஹஹஹஹ வாங்க பலாஜி :)))
அட என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க? காலேஜிலே இருந்தே இப்படி ஐடியா கொடுத்து கொடுத்து தானெ நாங்க இப்படி குருப்வாகி இருக்கோம் ?? ;)))) என்ன உங்களுக்கு ஏதாச்சும் specilised ஐடியா வேணுமா? வெட்கப்படாம கேளுங்கப்பூ !!:))))))

said...

This is great info to know.