Tuesday, February 06, 2007

ரயில் மயில் !

ரயில் மயில்


எப்பவுமே இந்த ரயிலுல போறது நமக்கு ரொம்ப பிடிச்ச விசயம். ஆனா பாருங்க இந்த ரயிலுல கூட வர்ற மயிலுகளைப் பார்க்கறதுக்கான பாக்கியம் நமக்கு எப்பவுமே வாய்ச்சது இல்லை. அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை என் கம்பார்ட்மெண்டில் மட்டும் எப்பவுமே நம்ம கூட வர்றதெல்லாம் ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி 10 வருசம் ஆன பல்லுப்போன பாட்டிகளும் ஜொள்ளுப்போன தாத்தாக்களும் தான். என்னாடா இது ?? ஒருவேளை இப்படி நம்ம கூட எந்த ஒரு கண்ணுக்கினிய கட்டிளங்கன்னிகளையும் வரவிடாம இருக்குறதுக்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியோ?? ன்லாம் ‘அப்பர்’ பெர்த்திலே மல்லாக்கப் படுத்துகிட்டு நெம்ப நாள் யோசனை பண்ணிகிட்டு இருந்திருக்கேன். இதிலே எப்பவும் யாராச்சும் ஒரு தாத்தாவோ பாட்டியோ தன்னோட பேராண்டியா நெனச்சுகிட்டு உரிமையோட என்னோட லோயர் பெர்த்தை கேட்டு வாங்கிக்குவாங்க. நமக்குத்தான் எந்த பெர்த்திலே படுத்தா என்ன கூட என்ன பிகரா வருது பார்த்துகிட்டு கெடக்க? ன்னு போய் படுத்துக்குவேன்.

சென்னைக்கு கெளம்புற அன்னிக்கு ஒருநா ராத்திரி ரயில்வே ஸ்டேசன்ல நின்னுகிட்டு இருத்தேன். அப்படியேக்கா தலைய சுத்தி சுத்திநிக்குற கூட்டத்தைப்பார்த்தேன். இதிலே எந்த பாட்டி இன்னிக்கு நம்ம கூட வரப்போகுதோன்னு சுவாரஸ்யம் இல்லாம பார்த்துகிட்டு இருந்தா திடீர்னு கினி கினி கினின்னு மணியடிக்குது. ரயிலு வரலீங்க !! ஒயிலா ஒய்யாரமா அப்படியே கூந்தலை விரிச்சுகிட்டு ஒரு மயிலு !! அப்படியே நம்ம ஹார்ட்டு சும்மா 100 KM / Hr ல துடிக்க ஆரம்பிக்குது, கூட அப்படியே நம்ம ஆளை ஒரு இருவது வருசதுக்கு மிந்தி ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஒரு அம்மா !! ஆஹா அவ அம்மா போல இருக்கே !! ஆனா அந்த அம்மாவை நான் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நெனச்சுகிட்டு இருக்குறப்போதான் தோணுச்சு “ அட நாயே தேவையில்லாத விசயமெல்லாம் இப்போ எதுக்கு ? பொரிச்சு வச்ச அரிசிப்பொரி கணக்கா வர்ற பொண்ணைப் பாருடா !! “ அம்பாள் வெள்ளை டாப்ஸும் கருப்பு லோவரும் போட்டுகிட்டு நடக்குது ! . எந்த ட்ரெஸ் போட்டாலும் செலருக்குத்தான் அசத்தலா இருக்குங்க. நம்ம ஜிங்கிலிக்கு அசத்தாலா இருந்துச்சுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன ?

ரெயிலு வந்துருச்சு அப்படியேக்கா நம்ம கம்பார்ட்மெண்டை தேடிப்போய் என் சீட்டிலே ஒட்காருறேன் அடங்கொக்க மக்கா!! இது நம்ம சீட்டூதானா ?? ன்னு சந்தேகம் வந்துடுச்சு !! பாரம்பரியமா நம்ம கூட வர்ற தாத்தா பாட்டிகளை எதிர்பார்த்துகிட்டு போனா அங்கன சீவி முடிஞ்ச ஷில்பாஷெட்டி கணக்கா ஒய்யாரமா உக்கார்துகிட்டு இருக்குது ஜிங்கிலி என் பைங்கிளி !! ( ராஜேந்தர் பட டைட்டில் கணக்கா இருக்கா ?? ) வெளியிலே அவ அம்மா !! அட தனியாத்தான் போறாளா ?? அட அட அட பாண்டி உனக்கு இம்பூட்டு யோகமா ?? 10 செகண்ட் தொடர்ந்து பார்க்கமாட்டமான்னு நாம நெனச்சுகிட்டு இருக்குற பிகர் 10 மணிநேரம் உங்க கூட அதுவும் எட்டிக்கிள்ளுற தூரத்திலே (சும்மா ஒரு பேச்சுக்குதான்கேச்சுகிடாதீங்க!) உக்கார்துகிட்டு வந்தா என்ன பண்ணறது ?? ஆத்தா! அம்மா! என்ன பண்ணறதுன்னே தெரியலையே!? “மீட் மை சவுத் இண்டியன் டயானா !! “ ன்னு சொல்றதுக்கூட எந்த ஒரு ஆப்பவாயனும் பக்கத்திலே இல்லையேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது ! பொண்ண அனுப்பீட்டு அத்தை கெளம்பீட்டாங்க ! ( அழகான பொண்ண பெத்தாலே அத்தை முறைதானே ஆகணும் ?? ) ரயிலும் கெளம்பீடுச்சு !

இப்படி ஒரு அழகான பொண்ணு கூட இருக்கும்போது அப்படியே 10 நாளா சோத்தையே கண்ணில பார்க்காதவன் வடிச்சசோத்தை பார்க்கிற மாதிரி பொண்ணைப்பார்க்கக் கூடாதுங்க ! அப்படியே ரெண்டு ப்ளேட் மட்டன் பிரியணியை full கட்டு கட்டிமுடிச்சவன் வெள்ளை சோத்தை பார்க்கிற மாதிரி பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பார்க்கணும் ! நாம அந்து அவலாகி நொந்து நூலாகி காஞ்சு கருவாடா இருக்குறோம்கறது வெளிய தெரியக்கூடாதில்ல? அதுவும் நாம இதுல கில்லியாச்சே?? ஹிஹிஹி இனி திருச்சி வரைக்கும் நானும் என் ஏஞ்சலும் ( வெள்ளை கலர் சட்டையில்ல ? அதான் ஏஞ்சல் ) தான் ! திருச்சி வர்ற வரைக்கும் எந்தப்பயலும் இங்கன வரமாட்டான். அதுக்குள்ள சட்டியிலே மணலைக்கொட்டி பதமா கடலைய போட்டு வறுத்தர வேண்டியதுதான் ! முடிவே பண்ணீட்டேன்.

புத்தக கண்காட்சியிலே வாங்கின ஒரு புத்தகத்தை எடுத்து வச்சுகிட்டேன் ! முதல்ல நம்ம Personality ய load பண்ணனுமில்ல நம்ம ஏஞ்சல் மனசிலே ?? கண்ணு மட்டும்தான் புத்தகத்திலே! மனசு பூரா எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ஒரே சிந்தனைதான் போங்க. நமக்கு பஜாஜ் ஸ்கூட்டர் கணக்கா எப்பவுமே Starting Trouble தான் ! இந்த தடவை அப்படி ஏதும் ஆகக்கூடாதுடா பாண்டி. இப்பவே இஞ்சினை warmup பண்ணுடா அப்பதான் ஒரே ‘கிக்’ குல ஸ்டார்ட் ஆகும்ன்னு மனசுல பட்சி உடுக்கை அடிக்குது, அப்போதான் திடீர்னு ஒரு குயில் கூவுற மாதிரி கேட்டுச்சு. என்னடா இதுன்னு பார்த்தா என் சவுத் இண்டியன் டயானா தாங்கோ!! ஏதோ என்கிட்டே கேட்டு இருக்கும் போல !!

“ என்னாங்க என்ன கேட்டீங்க? “

“இல்ல நீங்க லேயர் பெர்த்தா ??”

அடங்கொக்கமகா மக்கா!!! பாட்டிக வந்தப்போ எல்லாம் நமக்கு லோயர் பெர்த் ஒதுக்கி இருந்தாங்களே! இப்போ நம்ம ஜிங்கிலிக்கு தேவைப்படுது போல இருக்கே ஆஹா லேயர் பெர்த்தை தானமா கொடுத்து ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி” மாதிரி “ டயானாவுக்கு லேயர் பெர்த் கொடுத்தான் பாண்டி !” னு நாளைக்கு வரலாறுல வர்றது ஜஸ்ட்ல மிஸ் ஆய்டுச்சு போல இருக்கேன்னு கவலையோட

“ இல்லீங்க எனக்கு அப்பர் பெர்த்தான்!! ஏன்?? “

“ இல்லை இல்லை நான் உக்கார்துகிட்டு இருக்கேன். இது உங்க பெர்த்தோன்னுதான் கேட்டே.ன் வேறே ஒன்னும் இல்லை !”

அய்யோ சிரிக்கிறாளே !! கமான் பாண்டி ! அப்படியே செகண்ட் கியரைப்போட்டுத் தூக்குடா நம்ம கடலை வண்டியன்னு மண்டைக்குள்ள மின்னல் !!

அப்படியே லேசா பிட்டைப்போட ஆரம்பிச்சேன். மெர்லின் ! எப்படீங்க அழகான பொண்ணுகளுக்குன்னு பேரு வக்கிறாங்க !! மெர்லின் அல்ல அவள் ஒரு மர்லின்மன்றோ !! சென்னையிலே மெர்லின் ஏதோ காலேஜிலே மாஸ்டர் டிகிரி படிக்குதுதாம். பாவம் கூடப்படிக்குற பயலுவ ! ம்ம்ம் அப்படியேக்கா கொஞ்சநேரம் போச்சு ! அப்போதாங்க நான் ஒரு கேள்வியக்கேட்டேன் ! “ ஆமாங்க மெர்லின் உங்க அம்மாவை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே !! என்ன பண்றாங்க? ரொம்ப Familiar் ரா இருக்கு அவ்ங்க முகம் எங்கயோ பார்த்திருக்கேன் ! “

“அப்படியா ? ஒருவேளை நீங்க அவங்ககிட்டே படிச்சி இருக்கலாம் ! எங்க அம்மாவும் அப்பாவும் ஒரு காலேஜ் வச்சு இருக்காங்க !! “

“ அட அப்படியா ? எப்படி மறந்தேன் ! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அவங்க முகம் ! என்ன காலேஜ் ? “

அஹா பாண்டி கமான் ஏதோ ஒரு சொந்தம் ஏதோ ஒரு பந்தம் உனக்கு நம்ம மெர்லினோட இருக்கும் போல இருக்கேடா. அப்படியே இதே ரூட்டிலே டாப் கியரைப்போட்டு துக்குடா மாப்ளே ! மனசு அப்படியே குஜால்ஸ் ஆய்டுச்சு ! பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் !

“ ம்ம் இந்த 10வது பெயில் ஆனா கோச்சிங் கொடுப்பாங்களே டுடோரியல் காலேஜ் அதுதாங்க ! நீங்க ஒருவேளை அவங்க கிட்டே படிச்சு இருக்கலாம் !! “

நெக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே என்னை பார்த்தா பாருங்க . ஒரு நிமிஷம் என்ன சொல்றதுன்னே தெரியலை !! அடிப்பாவி உன்னைய ‘பிக்’ கப் பண்ணுறதுக்கு நான் ஒரு ‘பிட்’டைப்போட்டா அது பூமராங்க கணக்கா இப்படிப்போட்டுத் தாக்கீடுச்சே. நம்மளை அவங்கம்மாகிட்டே படிச்ச டுடோரியல் கோஷ்டின்னு நெனச்சுட்டாளே !! அதுக்கப்புறம் எங்கே பேசுறது ?? இப்படியா ஆகணும் . "மெர்லின் நானெல்லாம் பத்தாவதிலே 2 மார்க்கிலே ஸ்கூல் First ஐ இழந்தவன் ! +2 விலே ஜஸ்ட் 200 மார்க்கிலே ஸ்டேட் first ஐ இழந்தவன் ன்னு சொல்லுடா!! "ன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது பாவம் அதுக்கு தெரியுமா ? அவ அதுக்கப்புறம் ஜன்னலை பார்த்து திருப்புன மூஞ்சியை என் பக்கம் திருப்பவே இல்லைன்னு !!

42 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

அட பாவமே, :-(

சரி விடுங்க, கழுதைக்கு தெரியுமா, கருவாட்டு வாசனை?

said...

Better Luck Next Time ...

இது உங்களுக்கு இல்லை .. எனக்கு நானே சொல்லிக்கிட்டது ...
எனக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கல...
நானும் ஏதாசும் மயில் வரும், அதுக்கோ இல்ல அது குடும்பத்துக்கோ இடம் குடுக்கலாம்னு கீழ இடம் புடிச்சா பாட்டிகளும் , தாத்தாக்களும் தான் வராங்க ...
அன்புடையீர் ...
உங்க அனுபவத்துல எந்த சமய டிக்கட் ரிசர்வ் பண்ணினா மயில்கள் வரும்னு சொல்லுங்க ...

உங்களுக்கு புண்ணியமா போகும் ..

said...

தம்பி பாண்டி.. வீரனுக்கு ரோட்டிலும் காயம் தண்டவாளத்திலும் காயம்.. இதெல்லாம் வீர வரலாறு.. கவலைப் படாம அடுத்து பிளைட் டிக்கெட் எடுத்து ரெடியா இருடே..

said...

எல என் உண்மையானா கதய.. யாருமுல திருடுனது ... !

ஆமா ஜொளளு .. போன வருசம் மட்டும் 32 வாரங்களுக்கு மேல் ரயிலுல பயணித்தேன் ...ஆனா ஒரு பிக்ரு கூட செட்டாவுல ...

உனக்காவது செட்டாகுனு பாத்தா ... நீயும் இப்படிதான் இருக்க ... !

நமது பணி ஜொள்ளு விட்டுகிடப்பதே !
அருமையான பதிவு .. ரொம்ப உணர்ந்து படித்தேன் !

said...

//Mani said...
அட பாவமே, :-(

சரி விடுங்க, கழுதைக்கு தெரியுமா, கருவாட்டு வாசனை? //

வாங்க மணி :)))
அட என்னாங்க மணி ஆயிரம்தான் இருந்தாலும் மெர்லினை கழுதைன்னு சொல்ல மனசு வரலையே ;))))))

said...

//Prasram said...
Better Luck Next Time ...//

வாங்க Prasram :))))))))
Thank you verymuch !! :))

//இது உங்களுக்கு இல்லை .. எனக்கு நானே சொல்லிக்கிட்டது ...//

ஏற்கனவே கவுந்து கெடக்கறவனை இப்படி பொறட்டிப்போட்டு கவுத்தா எப்படி ?? :(((

//எனக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கல...
நானும் ஏதாசும் மயில் வரும், அதுக்கோ இல்ல அது குடும்பத்துக்கோ இடம் குடுக்கலாம்னு கீழ இடம் புடிச்சா பாட்டிகளும் , தாத்தாக்களும் தான் வராங்க ...//

அட அப்போ நீங்க எம் பக்கதிலே வந்து குந்துங்க !! :))))

//அன்புடையீர் ...
உங்க அனுபவத்துல எந்த சமய டிக்கட் ரிசர்வ் பண்ணினா மயில்கள் வரும்னு சொல்லுங்க ...

உங்களுக்கு புண்ணியமா போகும் ..//

ஆஹா இப்படி வேற பிட்டை போடுறீங்களா ??:))) ஆப்படியே எனக்கு தகவல் வந்தா forward பண்ணுங்கப்பூ !! :)))

said...

//தேவ் | Dev said...
தம்பி பாண்டி.. வீரனுக்கு ரோட்டிலும் காயம் தண்டவாளத்திலும் காயம்.. இதெல்லாம் வீர வரலாறு.. கவலைப் படாம அடுத்து பிளைட் டிக்கெட் எடுத்து ரெடியா இருடே.. //

தேவண்ணே வாங்க :)))))))))
வீர வரலாறுதான் அப்படி சொல்லி ஆறுதல் பட்டுகிட்டாதான் உண்டு !! ஆமா ப்ளைட்டுலே ஏதாச்சும் தேறும்ங்கறீங்க ?? ;)))))))

said...

// சுந்தர் / Sundar said...
எல என் உண்மையானா கதய.. யாருமுல திருடுனது ... ! //

வாங்க சுந்தர் அண்ணாச்சி :)))))))))))
என்னாங்க இப்படி சொல்லுபுட்டீங்க ??;)))

//ஆமா ஜொளளு .. போன வருசம் மட்டும் 32 வாரங்களுக்கு மேல் ரயிலுல பயணித்தேன் ...ஆனா ஒரு பிக்ரு கூட செட்டாவுல ...

உனக்காவது செட்டாகுனு பாத்தா ... நீயும் இப்படிதான் இருக்க ... ! //

வாங்க வாங்க Same Pinch ! ட்ரீட் எப்போ?? ;)))

//நமது பணி ஜொள்ளு விட்டுகிடப்பதே !
அருமையான பதிவு .. ரொம்ப உணர்ந்து படித்தேன் ! //

சுந்தர் நீங்களும் உணர்துட்டீங்களா ?? ;)))))) கவலைய விடுங்க. கடமையை செய்! பலனை எதிர்பார்க்காதேன்னு நமக்கு பெரியவுங்க சொல்லி கொடுத்து இருகாங்க இல்ல??;))))))))))

said...

பாண்டிண்ணே,

இது இல்லன்னா என்னண்ணே??? அடுத்து ஃபிளைட் பக்கத்து சீட்'லே டிரை பண்ணிப்பாருங்க :)

said...

அப்பாடா ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது.நல்ல வேளை!

said...

ஒரு விளம்பரம்தான்

ரயிலில் பார்த்த அவள் !

said...

ஹாய் பாண்டி!!!
என்ன பண்றது ... விட்டு தள்ளுங்க!! உங்களுக்காக ஒரு மீரா ஜாஸ்மின் எங்கயோ பிறந்து இருப்பா கவலை படாதீங்க!!!
பிளைட்ல பக்கத்துல இல்லேனாலும் airhostess அம்மணிங்க இருக்கும்ல!!!

said...

// இராம் said...
பாண்டிண்ணே,

இது இல்லன்னா என்னண்ணே??? அடுத்து ஃபிளைட் பக்கத்து சீட்'லே டிரை பண்ணிப்பாருங்க :) //

வாங்க ராம் :)))))
அப்படீங்கறீங்களா ?? எலேய் மொக்க ராசு கிங்க்பிஷ்சர்ல ஒரு சீட்டைப்போடுலே !! ;)))))))

said...

//thurgah said...
அப்பாடா ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது.நல்ல வேளை! //

வாங்க துர்கா :))))))))
ஆமா என்னா இது ??ம்ம்ம்ம்?? என்மேல என்னாங்க கோவங்க உங்களுக்கு ?? ;))))))))

said...

// சுந்தர் / Sundar said...
ஒரு விளம்பரம்தான்

ரயிலில் பார்த்த அவள் ! //

கொடுங்க கொட்டுங்க விளம்பரம் தானே !! ஆனா உங்க கவிதை கலக்கலா இருந்துச்சுங்க சுந்தர் !! ;)))))

said...

//dubukudisciple said...
ஹாய் பாண்டி!!!
என்ன பண்றது ... விட்டு தள்ளுங்க!! உங்களுக்காக ஒரு மீரா ஜாஸ்மின் எங்கயோ பிறந்து இருப்பா கவலை படாதீங்க!!!//

வாங்க டுபுக்கு டிசைப்பிள் :))))
இப்படியெல்லாம் ஆறுதல் வார்த்தை சொல்லி என் கண்ணுல ஆனந்தக்கண்ணீரை வரவைக்கிறீங்களே !!!:)))) எங்கே மேரா மீரா ?? ;)))))))))))

//பிளைட்ல பக்கத்துல இல்லேனாலும் airhostess அம்மணிங்க இருக்கும்ல!!! //

ஆஹா நல்ல ஐடியாவ அள்ளிவுடுறீங்களே !! :)) ஆமா இந்த கிங்பிஷ்ஷர் ஏர்லைன்ல இருக்குற airhostess அம்மணிக எல்லாம் சும்மா அள்ளிகிட்டு போறாங்களாம் பயணிகளோட மனச?? !! :)))))))) சீக்கிரமே அதிலே பயணப்பட்டுட வேண்டியதுதான் ;))))))))))))

said...

பாண்டிண்ணே....

நீங்களும் நம்ம செட்டா... ஆனா பாருங்க அட்லீஸ்ட் நீங்க கடல போட்டு பல்பாவாது வாங்குனீங்க... நான் எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு திங்க் பண்ணியே 14 மணி நேர ரயில் பயணம் முடிஞ்சிப் போச்சு... :((

கவலப் படாதீங்க... ஆண்டவன் ஒரு கதவ மூடுனா இன்னொரு கதவ தொறப்பான்....

said...

//ஜி said...
பாண்டிண்ணே....

நீங்களும் நம்ம செட்டா... ஆனா பாருங்க அட்லீஸ்ட் நீங்க கடல போட்டு பல்பாவாது வாங்குனீங்க... நான் எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு திங்க் பண்ணியே 14 மணி நேர ரயில் பயணம் முடிஞ்சிப் போச்சு... :((//

வாங்க ஜி :)))))))))))))
உங்களுக்கும் ஸ்டார்டிங் ட்ரபுள் இருக்கா?? ;))))))) நம்ம பகத்டிலே வந்து உட்காருங்க ! நாம எல்லாரும் சேர்ந்து ஏதாச்சும் பேசி இந்த ப்ராளத்தை எப்படி தீர்கரதுன்னு ஒரு 'தீர்த்த' டிஸ்கஸனைப்போடுவோமா ?? ;)))

//கவலப் படாதீங்க... ஆண்டவன் ஒரு கதவ மூடுனா இன்னொரு கதவ தொறப்பான்.... //

சரிதான் நீங்க சொலறது :))) ஆனா எல்லா கதவுலையும் வறுத்த வறுக்காத அவிச்ச அவியாக கடலையோட பலபேரு நின்னுகிட்டு இருக்கானுகளே !!:))))))))))

said...

யோவ் ஜொள்ளு,
மேட்டர இந்த இழு இழுத்துட்டயே, படிச்சி முடிக்கறதுக்குள்ள கண்ண கட்டிடுச்சி..

நல்லா இருந்துச்சிப்பா படிக்க! டைபாய்டு வந்து ஆச்பத்திரில பத்து நாள் இருந்தேன். மருந்து வாங்க கீழ்தளத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்கு வைராக்கியமா போவேன். அங்கதான் ஒரு பச்சக்கிளி வேலை பாத்துச்சி ஒரு நாள் என்ன படிக்கறேன்னு கேட்டேன் காலேஜின்னு சொன்னா..
கடேசில அதுவும் உன்ன மாதிரி டுடோரியல் கேஸாம். :)))

இது தெரியாம நான் எனக்கு ஹார்லிக்ஸ் ஸ்பான்சர் பண்ண வந்த ப்ரண்ட்ஸ்கிட்ட எல்லாம் பிட்டுகள சரமாரியா போட்டு பில்டப் பண்ணி வச்சிருந்தேன். எல்லாத்துலயும் ஒரு லாரி மண்ணு.

said...

// தம்பி said...
யோவ் ஜொள்ளு,
மேட்டர இந்த இழு இழுத்துட்டயே, படிச்சி முடிக்கறதுக்குள்ள கண்ண கட்டிடுச்சி..//

வாங்க தம்பி !! :)))))))))
உங்களுக்கு கண்ணக்கட்டுடுச்சா ?? சரி சரி அப்படியே கதைய கொஞ்சம் கட் பண்ணி கடாசீட்டு சின்னதாகீட்டேன் போதுமா ?? ;))))

//நல்லா இருந்துச்சிப்பா படிக்க! //

ஹிஹிஹிஹி நெம்ப தேங்ஸ் !!பொருமையா கடைசி வரைக்கும் படிச்சதுக்கு !!

//டைபாய்டு வந்து ஆச்பத்திரில பத்து நாள் இருந்தேன். மருந்து வாங்க கீழ்தளத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்கு வைராக்கியமா போவேன். அங்கதான் ஒரு பச்சக்கிளி வேலை பாத்துச்சி ஒரு நாள் என்ன படிக்கறேன்னு கேட்டேன் காலேஜின்னு சொன்னா..
கடேசில அதுவும் உன்ன மாதிரி டுடோரியல் கேஸாம். :)))///

யோவ் தம்பி இதெல்லாம் நெம்ப ஓவரு சொல்லிபிட்டேன் !! இப்படியெல்லாம் என்னைய பத்தி அவதூறு பரப்பக்கூடாது ஆமா ??;)))))) அதான் சொல்லி இருக்கமுல்ல? 10 ல 2 மார்க்கிலா ஸ்கூல் பர்ஸ்ட்டையும் +_2 வுல 200 மர்க்கிலே ஸ்டேட் பர்ஸ்டையும் இழந்தோம்னு ?? ஏதோ டுடோரியல் காலேஜிலே படிகிற பொண்ணுகளை சைட் அடிச்சிருக்கேன் அவ்ளோதான்;))))))))))))))))

//இது தெரியாம நான் எனக்கு ஹார்லிக்ஸ் ஸ்பான்சர் பண்ண வந்த ப்ரண்ட்ஸ்கிட்ட எல்லாம் பிட்டுகள சரமாரியா போட்டு பில்டப் பண்ணி வச்சிருந்தேன். எல்லாத்துலயும் ஒரு லாரி மண்ணு. //

அட என்னா இப்படி பண்ணீட்டீங்க?? டுடோரியல் காலேஜிலையும் ஐஸ்வைர்யாக்கள் படிப்பதுண்டு !!!! :)))))) அவங்க பாடத்திலே பெயில் ஆகியிருந்தாலும் படம் காட்டறதிலே ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கறதுண்டு தெரியுமா?? ;)))))))))))))

said...

இது எல்லாம் புதுசா நமக்கு...அடுத்த ரயில் இன்னொரு ஜொர்லின்னு போய்கிட்டே இருப்போம்ல :-)

said...

//Syam said...
இது எல்லாம் புதுசா நமக்கு...அடுத்த ரயில் இன்னொரு ஜொர்லின்னு போய்கிட்டே இருப்போம்ல :-) //

வாங்க ஷ்யாம் :)))))
சரிதான் நீங்க சொல்றது :)))) என்ன டாப் கியர் போடரப்போ பஞ்சரான மாதிரி ஆய்டுச்சே அதான் கொஞ்சம் Feeling... :)))))))))))

said...

//கொடுங்க கொட்டுங்க விளம்பரம் தானே !! ஆனா உங்க கவிதை கலக்கலா இருந்துச்சுங்க சுந்தர் !! ;))))) //

நன்றி ஜொள்ளு , விளம்பரத்தை அனுமதித்தற்கும் , பாராட்டுக்கும் !

said...

Jollu its really funny !! Sirichu sirichu vayire punnaakipochu!

Sharmi

said...

//Anonymous said...
Jollu its really funny !! Sirichu sirichu vayire punnaakipochu!

Sharmi //

வாங்க ஷர்மி :))
மனசுவிட்டு சிரிங்க அம்மணி :))) எதுக்கு கவலை ??!!!Enjoy !

said...

ஹா.... ஹா....
ஒரே சிரிப்பா வருது.

ஏப்பா ஜொள்ளு தம்பி....
உடைஞ்சு விழுந்த மூக்க பத்திரமா எடுத்து வச்சியா ராசா???
மறுபடியும் இன்னொரு பொண்ணால அறுபட்டு விழணும் இல்ல???

said...

//இம்சை அரசி said...
ஹா.... ஹா....
ஒரே சிரிப்பா வருது.//

அட அட அட இம்சையக்காவுக்கு அடுத்தவங்க இம்சைப்படுறதுல என்னா சந்தோசம் ??;))))))

//ஏப்பா ஜொள்ளு தம்பி....
உடைஞ்சு விழுந்த மூக்க பத்திரமா எடுத்து வச்சியா ராசா???
மறுபடியும் இன்னொரு பொண்ணால அறுபட்டு விழணும் இல்ல??? //

அட இதுகெல்லாம் அசந்துருவமா என்னா? நமக்கெல்லாம் கழுத்தே அறுபட்டாலும் கவலைப்படாம தலைய கையிலே துக்கி வச்சுகிட்டு ஒக்கார்ந்துகிட்டு இருக்குற வீரப்பரம்பரைங்கோ ;))))))))

said...

Sooper post JPandi..Same pinch..
En valkaiyilum ipdithan kaathaduthu..
irunthalum naamellam nambikaya ilaka koodathu..Pallavan pona Vaighai nu adhutha vandiye pudichu poine irukanum..
enna solreenga?

Nayagan.

said...

//Anonymous said...
Sooper post JPandi..Same pinch..
En valkaiyilum ipdithan kaathaduthu..
irunthalum naamellam nambikaya ilaka koodathu..Pallavan pona Vaighai nu adhutha vandiye pudichu poine irukanum..
enna solreenga?

Nayagan. //

வாங்கண்ணா நாயகன் :)))))))))
வந்து அப்படியே பெஞ்சிலே உக்காருங்க !! என்னா ஒரு தத்துவன் என்னா இரு நம்பிக்கை ஊட்டும் வரி !!! ;)))) நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைங்க !! காதல் இரு ரயில்வே ப்ளாட்பார்ம். ஒரு வண்டி போசுன்னா என்ன அடுத்த வண்டி வராமலா பூடும் ??ங்கறீங்க !! :))) வாவ் வாவ் ரொம்ப சந்தோசமா இருக்குங்க நாயகன் உங்களை என் பேட்டையிலே பார்க்கறதுக்கு :)))

said...

Hi JP

Aappu nu itha thaan sollunvaanga...
Aappu na Aapu sari aappu...

Ur flow is very gud. very funny.
Keep it up.

SweetVoice.

said...

//imasiarasi said.... ஏப்பா ஜொள்ளு தம்பி....
உடைஞ்சு விழுந்த மூக்க பத்திரமா எடுத்து வச்சியா ராசா??? //

பாண்டி நமெக்கெல்லாம் இது என்ன புதுசா... பொண்ணுங்க பக்கத்துல நின்னா, மூக்கே உடஞ்சாலும் நாமெல்லாம் styla எடுத்து திரும்பவும் மாட்டுவோம்ல..

said...

//பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் ! //

அச்சாணியையே நகட்டிபுட்டியேபா..

said...

இப்படி பின் வாங்கிடீங்களே பாண்டி.....அந்த ஃபிகரு சொல்லிட்டா நீங்க ஃபெயில் ஆனதா ஆகிருமா, அதெப்படி நீங்க என்ன அப்படி சொல்லலாம்னு ஒரு சண்டைய போட்டு இருந்தா அப்பாடியே மோதல்ல தொடங்கி காதல்ல முடிஞ்சிருக்கும் சரி சரி இதெல்லம் ஒரு தோல்வியா...

இனியாள்

said...

//Hi JP

Aappu nu itha thaan sollunvaanga...
Aappu na Aapu sari aappu...

Ur flow is very gud. very funny.
Keep it up.

SweetVoice. //

வாங்க SweetVoice :))))))

என்னாங்க அவ்ளொ ஸ்வீட்டா இருக்குமா உங்க வாய்ஸ் ??;))))
அட நீங்க வேறங்க !! நமக்கு வாழ்க்கையே ஆப்புதான் :))))) சந்தோசமா எடுதுக்க வேண்டியதுதான் என்ன சொல்லுறீங்க??

ரொம்ப புகழாதீங்க என்னைய ரொம்ப வெக்கமா இருக்கு ஹிஹிஹிஹிஹி !! ரொம்ப தேங்ஸுங்கோ !! :)))

said...

//Appaavi said...
//imasiarasi said.... ஏப்பா ஜொள்ளு தம்பி....
உடைஞ்சு விழுந்த மூக்க பத்திரமா எடுத்து வச்சியா ராசா??? //

பாண்டி நமெக்கெல்லாம் இது என்ன புதுசா... பொண்ணுங்க பக்கத்துல நின்னா, மூக்கே உடஞ்சாலும் நாமெல்லாம் styla எடுத்து திரும்பவும் மாட்டுவோம்ல.. //

வாங்க அப்பாவி வாங்க :)))

நீங்களும் நம்ம இனமா??;)))))))) அப்படியே வந்து நம்மளோட பேட்டையிலே உக்காருங்கப்பு ! :)))

said...

// Appaavi said...
//பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் ! //

அச்சாணியையே நகட்டிபுட்டியேபா.. //

என்னாங்க அப்பாவி ஏதாசும் தப்பா சொல்லீட்டனா ?? இருந்தா சொல்லுங்கப்பூ திருத்திக்குறேன் :)))))

said...

//Iniyal said...
இப்படி பின் வாங்கிடீங்களே பாண்டி.....அந்த ஃபிகரு சொல்லிட்டா நீங்க ஃபெயில் ஆனதா ஆகிருமா, அதெப்படி நீங்க என்ன அப்படி சொல்லலாம்னு ஒரு சண்டைய போட்டு இருந்தா அப்பாடியே மோதல்ல தொடங்கி காதல்ல முடிஞ்சிருக்கும் சரி சரி இதெல்லம் ஒரு தோல்வியா...

இனியாள் //

வாங்க இனியாள் :))))))))))
என்னாங்க நீங்க வாலி பட ஸ்டைல எனக்கு ஏதோ அட்வை பண்றீங்க போல இருகே ?? நான் பாவம் இல்லையா ??:)))))
சும்மா தமாசுக்கு :))) இப்படியெல்லாம் பக்கபலமா நீங்க எல்லாம் இருக்குறப்போ திரும்ப திரும்ப தோக்கனும் போல இருக்கே !!! :))))))))))))

said...

ஹி ஹி ஹி உங்க பெயரை காப்பாற்ற ரொம்ப தான் முயற்சி எடுக்கிறிங்க ;)

said...

\:\பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் !\\

வாவ், எப்படீங்க இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்து வைச்சிருக்கிறீங்க, சூப்பர்!

said...

//Divya said...
\:\பொண்ணுங்களுக்கு பொறந்த வீட்டப்பத்தி பெருமையா சொன்னாலே போதுமே !! முக்காவாசி மேட்டர் ஓவர் !\\

வாவ், எப்படீங்க இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்து வைச்சிருக்கிறீங்க, சூப்பர்!//

வாங்க திவ்யா :))
எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் சொன்ன டிப்ஸ் வச்சுதாங்க நான் ஏதோ ஒப்பேத்தி எழுதறேன் :)))

said...

//தூயா said...
ஹி ஹி ஹி உங்க பெயரை காப்பாற்ற ரொம்ப தான் முயற்சி எடுக்கிறிங்க ;)//

வாங்க தூயா :))
அட நமக்கென்னாங்க பேரை காப்பாத்த வேண்டி இருக்கு?? :))) ( அப்படியா தோணுது ?? ;))))

said...

Very very funny:)
nice.