Thursday, March 01, 2007

' குட்டி' ன்னாலே...

குட்டி





ஆயிரம்தான் சொல்லுங்க ! இந்த ‘ குட்டி ‘ ன்னாலே ஒரு தனி ‘கிக்’ குதான் இல்ல? லேசா சொல்லிதான் பாருங்களேன் ‘குட்டி!!’ கேட்கறப்போவே அப்படியே லேசா ஒரு மப்பு தலைக்கு ஏறலை ? அதுவும் நமக்கு எப்பவுமே இந்த குட்டி மேல ஒரு வீக்னெஸ் இருக்கதான் செய்யுதுங்க . நானும் என்னாதான் ஆசைய அடக்கினாலும் முடியவே மாடீங்குது. குட்டிய பார்த்தாலே என் கண்ணு என்கிட்டவே இருக்க மாடீங்குது !!

அதுவும் இந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் இருக்கே யப்பா !! ஏங்க இந்த நம்பருக்கு முன்னாடி மட்டும் ஒரு அல்வா ஜாமூன்னு இனிப்பா வச்சு இருக்காங்க? என்னா இருக்கு இந்த பதினாறுல மட்டும் அப்படி?? நானும் மண்டைய போட்டு உடைச்சுகிட்டு யோசனை பண்ணுறேன் ஒன்னும் வெளங்க மாட்டீங்குது !! சரி நமக்குதான் கண்ணுலதானே பலமே இருக்குன்னு நல்ல பார்க்கறேன் ! என்னாடா இது ஜொள்ளுப்பாண்டிக்கு வந்த சோதனைன்னு ரோசணை பண்ணுறேன் பண்ணுறேன் மூளையே சூடாகிபோச்சுங்க. இப்படியே போனா இருக்குர கொஞ்ச நஞ்ச மூளையும் வெடிச்சு சிதறுதேங்கா ஆய்புடும்டா பாண்டின்னு கவலையோட இருக்குறப்போதான் பொடேல் பொட்டுல அடிச்சாப்ல பதில் தோணுச்சுங்க !!



>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>





ஒருவேளை பொறந்து பதினாறே நாள் ஆன இந்த குட்டிகளை பார்த்துதான் வச்சு இருப்பாகளோ??



kutty6





என்ன பண்றது ஆராச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பூ. இந்த குட்டிகள பார்த்தாலே காலு நகர மாடீங்குது. அப்படியே தூக்கிவச்சு கொஞ்சனும் போல இருக்கே !! முடிஞ்சா அப்படியே ஒரு உம்மா கூட கொடுக்கணும் போல பரப்ரப்பா இருக்கு !!



kutty5


இதுல இந்த குட்டிக கூட இருக்குற அம்மாதான் நமக்கு வில்லியே !




kutty4



kutty3


குட்டிய நான் தூக்கிட்டனாம் . உடனே வந்து திரும்பி தூக்கிட்டு போக வந்துட்டாக இவுக அம்மா !






kutty2


kutti1




ஆனாலும் ரொம்ப கஷ்டம் தாங்க அவுக அம்மா கிட்டே இருந்து இங்கன வச்சு ஒரு போட்டோ புடிக்கறதுக்குள்ல என்ன பாடுபட வேண்டி இருக்கு !!


அப்புறம் அல்லாரும் நல்லா குட்டிய பார்த்தீயளா ?? எனக்கு தோணுன மாதிரியே உங்களுக்கு இதுகளை துக்கிவச்சு கொஞ்சணும் போல இருக்கா? உங்களு எந்த குட்டி வேணும்னு சொன்னீங்கன்னா குட்டி கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சவுடனே நானே கொண்டாந்து தாரேன்!! அட நெசமாதாங்க !!