Thursday, March 01, 2007

' குட்டி' ன்னாலே...

குட்டி





ஆயிரம்தான் சொல்லுங்க ! இந்த ‘ குட்டி ‘ ன்னாலே ஒரு தனி ‘கிக்’ குதான் இல்ல? லேசா சொல்லிதான் பாருங்களேன் ‘குட்டி!!’ கேட்கறப்போவே அப்படியே லேசா ஒரு மப்பு தலைக்கு ஏறலை ? அதுவும் நமக்கு எப்பவுமே இந்த குட்டி மேல ஒரு வீக்னெஸ் இருக்கதான் செய்யுதுங்க . நானும் என்னாதான் ஆசைய அடக்கினாலும் முடியவே மாடீங்குது. குட்டிய பார்த்தாலே என் கண்ணு என்கிட்டவே இருக்க மாடீங்குது !!

அதுவும் இந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் இருக்கே யப்பா !! ஏங்க இந்த நம்பருக்கு முன்னாடி மட்டும் ஒரு அல்வா ஜாமூன்னு இனிப்பா வச்சு இருக்காங்க? என்னா இருக்கு இந்த பதினாறுல மட்டும் அப்படி?? நானும் மண்டைய போட்டு உடைச்சுகிட்டு யோசனை பண்ணுறேன் ஒன்னும் வெளங்க மாட்டீங்குது !! சரி நமக்குதான் கண்ணுலதானே பலமே இருக்குன்னு நல்ல பார்க்கறேன் ! என்னாடா இது ஜொள்ளுப்பாண்டிக்கு வந்த சோதனைன்னு ரோசணை பண்ணுறேன் பண்ணுறேன் மூளையே சூடாகிபோச்சுங்க. இப்படியே போனா இருக்குர கொஞ்ச நஞ்ச மூளையும் வெடிச்சு சிதறுதேங்கா ஆய்புடும்டா பாண்டின்னு கவலையோட இருக்குறப்போதான் பொடேல் பொட்டுல அடிச்சாப்ல பதில் தோணுச்சுங்க !!



>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>





ஒருவேளை பொறந்து பதினாறே நாள் ஆன இந்த குட்டிகளை பார்த்துதான் வச்சு இருப்பாகளோ??



kutty6





என்ன பண்றது ஆராச்சும் ஹெல்ப் பண்ணுங்கப்பூ. இந்த குட்டிகள பார்த்தாலே காலு நகர மாடீங்குது. அப்படியே தூக்கிவச்சு கொஞ்சனும் போல இருக்கே !! முடிஞ்சா அப்படியே ஒரு உம்மா கூட கொடுக்கணும் போல பரப்ரப்பா இருக்கு !!



kutty5


இதுல இந்த குட்டிக கூட இருக்குற அம்மாதான் நமக்கு வில்லியே !




kutty4



kutty3


குட்டிய நான் தூக்கிட்டனாம் . உடனே வந்து திரும்பி தூக்கிட்டு போக வந்துட்டாக இவுக அம்மா !






kutty2


kutti1




ஆனாலும் ரொம்ப கஷ்டம் தாங்க அவுக அம்மா கிட்டே இருந்து இங்கன வச்சு ஒரு போட்டோ புடிக்கறதுக்குள்ல என்ன பாடுபட வேண்டி இருக்கு !!


அப்புறம் அல்லாரும் நல்லா குட்டிய பார்த்தீயளா ?? எனக்கு தோணுன மாதிரியே உங்களுக்கு இதுகளை துக்கிவச்சு கொஞ்சணும் போல இருக்கா? உங்களு எந்த குட்டி வேணும்னு சொன்னீங்கன்னா குட்டி கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சவுடனே நானே கொண்டாந்து தாரேன்!! அட நெசமாதாங்க !!

40 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

பாண்டி.. மார்ச் மாசம் கவுச்சிச் சாப்பிடமா விரதம் இருக்கண்ணுத் தெரியுது.. ஆனா அதுக்குன்னு.. இது எல்லாம் ரொம்ப ஓவர் ராசா..

said...

good post

said...

செம க்யூட்டா இருக்குங்க.. நல்ல குட்டிங்க.. நம்ம கவிதாக்காவோட அணில்குட்டி இதுங்க கண்ணுல படாம இருக்கச் சொல்லுங்க.. அப்புறம் அணிலை ஒண்ணுமில்லாம பண்ணிடப் போவுதுங்க.. :))

மூணு குட்டியும் அழகு.. இன்னும் கொஞ்சம் பெரிசாகட்டும் பாண்டி.. அப்புறமா நீயெல்லாம் கையில் எடுத்துக் கொஞ்சலாம்.. எங்கிட்டாவது விழுந்து வைக்கப் போவுது...

said...

jollz என்ன ஆச்சு.சென்னையில் பொண்ணுங்க நடமாட்டம் குறைவோ?பூனை குட்டி பின்னால ஓடுகின்றீர்களே?எனக்கு எந்த குட்டியும் வேண்டாம்.எங்கள் வீட்டில் இருந்தால் பூனைக் குட்டி பூனை கறி ஆகி விடும்.I have dogs at home...but cute pussy.

said...

// தேவ் | Dev said...
பாண்டி.. மார்ச் மாசம் கவுச்சிச் சாப்பிடமா விரதம் இருக்கண்ணுத் தெரியுது.. ஆனா அதுக்குன்னு.. இது எல்லாம் ரொம்ப ஓவர் ராசா.. //

வாங்க தேவு :))))))))
என்ன இப்பை டென்சன் ஆனா என்ன அர்த்தம்ங்கறேன் ??!!:)))))))

said...

// கார்த்திக் பிரபு said...
good post //

ஹிஹிஹிஹிஹி வாங்க கார்த்தி டேங்ஸ் :))))))

said...

// பொன்ஸ் said...
செம க்யூட்டா இருக்குங்க.. நல்ல குட்டிங்க.. நம்ம கவிதாக்காவோட அணில்குட்டி இதுங்க கண்ணுல படாம இருக்கச் சொல்லுங்க.. அப்புறம் அணிலை ஒண்ணுமில்லாம பண்ணிடப் போவுதுங்க.. :))//

வாங்க பொன்ஸக்கா :)))))
அட அணிக்குட்டி சைஸ்லதான் இருக்கு இப்போ ! அப்படி ஏதாசும் ஆசு கவிதாக்காகிட்டே நான் சட்டினிதான் !! ;)))

//மூணு குட்டியும் அழகு.. இன்னும் கொஞ்சம் பெரிசாகட்டும் பாண்டி.. அப்புறமா நீயெல்லாம் கையில் எடுத்துக் கொஞ்சலாம்.. எங்கிட்டாவது விழுந்து வைக்கப் போவுது... //


அட பொன்ஸக்கா நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே .... அட சரி விடுங்க அதெல்லம் பெரிய கதை !!
உங்களுக்கு வேணுமா ?? வளர்க்கறீங்களா??

said...

// துர்கா said...
jollz என்ன ஆச்சு.சென்னையில் பொண்ணுங்க நடமாட்டம் குறைவோ?பூனை குட்டி பின்னால ஓடுகின்றீர்களே?எனக்கு எந்த குட்டியும் வேண்டாம்.எங்கள் வீட்டில் இருந்தால் பூனைக் குட்டி பூனை கறி ஆகி விடும்.I have dogs at home...but cute pussy. //

வாங்க துர்கா :)))
அட என்னாங்க நீங்க பொண்ணுகளை விட இதுக ரொம்ப க்யூட்டுங்க !! ;))))))))

said...

பாண்டிண்ணே,

குட்டியெல்லாம் நல்லா சோக்கா இருக்குண்ணே :)

//அட பொன்ஸக்கா நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே .... அட சரி விடுங்க அதெல்லம் பெரிய கதை !! //

இதை படிச்சதும் பெரிய ஜோக்கா நினைச்சு சிரிச்சிட்டிண்ணே... :)

said...

//இராம் said...
பாண்டிண்ணே,

குட்டியெல்லாம் நல்லா சோக்கா இருக்குண்ணே :)//

வாங்க ராம்:)) உங்களுக்கு குட்டி பிடிக்குமா ??;)))))

//அட பொன்ஸக்கா நாங்கெல்லாம் பொறந்ததுல இருந்தே .... அட சரி விடுங்க அதெல்லம் பெரிய கதை !! //

இதை படிச்சதும் பெரிய ஜோக்கா நினைச்சு சிரிச்சிட்டிண்ணே... :) //

அட ராமு இப்படி வாரிவிட்டா என்ன அர்த்தம் ?? அட எங்க வீட்டிலே நான் பொறந்ததுல இருந்தே பூனைக்குட்டி இருக்குன்னு சொல்ல வந்தேன் ராமு !! :)))))))))))))

said...

Yepadi Pondi yepadi, onalla mattum ipadiyellam sinthika mudiyuthu... Menaka gandhi rangekku.....

said...

அண்ணே.. ஜொள்ளுண்ணே... குட்டியையும் வுட்டு வைக்கலியா??

நல்லா இருங்கண்ணே...

said...

பாண்டி என்ன நீயும் இப்படி சைவம் ஆயிட்டே?

said...

//முடிஞ்சா அப்படியே ஒரு உம்மா கூட கொடுக்கணும் போல பரப்ரப்பா இருக்கு !!//

எனக்கு அதே தான் தோனுது...சொன்னா பைத்தியம்பாய்ங்க :-)

said...

என்னா ஜொள்ளண்ணே!

S J சூர்யா நெறய பாக்கறாப்பல இருக்கு! எல்லாம் double meaning லல்ல வருது.குட்டியாம்ல குட்டி.பார்த்துண்ணே! தாய் பிறாண்டிட போவுது.

said...

// ஜி - Z said...
அண்ணே.. ஜொள்ளுண்ணே... குட்டியையும் வுட்டு வைக்கலியா??

நல்லா இருங்கண்ணே... //

வாங்க ஜி :))))))))
என்னா இப்படி கேட்டுடீங்க?? குட்டி படா ஷோக்காகீதே என்னா பண்ணுவேன் நான் ??;))))))))))))

said...

//சந்தோஷ் aka Santhosh said...
பாண்டி என்ன நீயும் இப்படி சைவம் ஆயிட்டே? //

என்னாங்க சந்தோஷ் இப்படி சொல்லீட்டீங்க?? சைவம் கூட கொஞ்சம், நல்லாதான் இருக்குங்க !! ;)))))

said...

//Anonymous said...
Yepadi Pondi yepadi, onalla mattum ipadiyellam sinthika mudiyuthu... Menaka gandhi rangekku..... //

வாங்க அனானி :))) பேரென்னாங்க??;)))
அட மேனகா காந்தி என்னாங்க ?? ஜொள்ளுபாண்டிக்கும் பிராணிகளை ரொம்ப ரொம்ப பிடிக்குங்க !! அதனாலதானே பொண்ணுங்களையும் பிடிக்குது எனக்கு ??;))))))))))))))

said...

// Syam said...
//முடிஞ்சா அப்படியே ஒரு உம்மா கூட கொடுக்கணும் போல பரப்ரப்பா இருக்கு !!//

எனக்கு அதே தான் தோனுது...சொன்னா பைத்தியம்பாய்ங்க :-) //

வாங்க ஷ்யாம் :)))))

அட உங்களுக்கும் அதேதான் தோணுதா?? வார்ரே வா இதைதான் சொல்றாங்க wise people think alike ! ன்னு :))))))))

said...

//njsridhar said...
என்னா ஜொள்ளண்ணே!

S J சூர்யா நெறய பாக்கறாப்பல இருக்கு! எல்லாம் double meaning லல்ல வருது.குட்டியாம்ல குட்டி.பார்த்துண்ணே! தாய் பிறாண்டிட போவுது. //

வாங்க ஸ்ரீதரண்ணா ;))))))
அட அவரு படம் எல்லாமே என்னோட favourite தாங்க ;)))) அட அதுகெல்லாம் பயந்தா குட்டிய பார்க்க முடியுமா ??;)))))))))

said...

jollu pandi!!
ennavo arambichi.. eppadiyo mudichi..
hmm nadathunga

said...

எனக்கு அந்த black&white குட்டி வேணும்... எப்ப தரப் போறீங்க??? :)))

said...

// dubukudisciple said...
jollu pandi!!
ennavo arambichi.. eppadiyo mudichi..
hmm nadathunga //

வாங்க டுபுக்குபிசைபிள் :))))))))))))
ஏங்க கரெட்டா ஆரம்பிச்சு கரெட்டாதானே முடிச்சு இருக்கேன் ??;)))))) எனக்கு பூனைகுட்டின்னா உசுருங்க அதான் அப்படி பேரு :))))))))

said...

// இம்சை அரசி said...
எனக்கு அந்த black&white குட்டி வேணும்... எப்ப தரப் போறீங்க??? :))) //

வாங்க இம்சையரசி உங்களுக்கு இல்லாததா ?? தாராளமா எடுதுக்குங்க! நெசமாதேன் கேட்குறீயளா? சொல்லுங்க. இன்னும் ஒரு ரெண்டு வாரதிலே குட்டி நடக்க ஆரம்பிச்சுடும்.அப்போ உங்களுக்கு ரிசர்வ் பண்ணீட்டேன் . சந்தோசமா ? :)))))))

said...

jollupaandi!!
neenga correcta arambichi.. correcta thaan mudichi irukeegala.. nambiten nambitem

said...

//dubukudisciple said...
jollupaandi!!
neenga correcta arambichi.. correcta thaan mudichi irukeegala.. nambiten nambitem //

நம்பிக்கை நாணயம் கைராசி இதுவே பாண்டியின் தாரக மந்திரம்னு உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சுதா??:))))))))

said...

ஜொல்ஸ் நீங்க சைவம் ஆகிவிட்டீர்கள் என்று நான் ஒரு இடுகை இட போகின்றேன்.எப்படி என் யோசனை?உங்களை வைத்தே நான் பிரபலம் ஆக போகின்றேன்.ஹி ஹி :)))

said...

//வாங்க துர்கா :)))
அட என்னாங்க நீங்க பொண்ணுகளை விட இதுக ரொம்ப க்யூட்டுங்க !! ;)))))))) //

//ஜொள்ளுபாண்டிக்கும் பிராணிகளை ரொம்ப ரொம்ப பிடிக்குங்க !! அதனாலதானே பொண்ணுங்களையும் பிடிக்குது எனக்கு ??;)))))))))))))) //

ஜொள்ஸ் வாய் ரொம்ப நீளுது?!இனிமேல் உங்களுக்கு ஜொள்ளு விட பூனைக் குட்டி,நாய் குட்டி,கழுதை குட்டி,பன்னி குட்டி கிடைக்க எனது வாழ்த்துக்கள்

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜொல்ஸ் :-)

said...

happy birthday to u...

happy birthday to u...

happy birthday to dear jollu thambi...

happy birthday to u...

அப்பாடி... பாட்டு பாடிட்டேன்... treat எப்போ???

said...

// Syam said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜொல்ஸ் :-) //

ரொம்ப தேங்ஸுங்க ஸ்யாம் :))))

said...

// இம்சை அரசி said...
happy birthday to u...

happy birthday to u...

happy birthday to dear jollu thambi...

happy birthday to u...

அப்பாடி... பாட்டு பாடிட்டேன்... treat எப்போ??? //

யக்கா இம்சையக்கா என்மேல இப்பூட்டு பாசமா ??? இவ்ளோ பெரிய பாட்டு பாடிட்டு என்ன கேள்வி இது ?? எலேய் இம்சையக்காவுக்கு ரெண்டு கிலோ Fresh cream கேக் கொண்டுபோய் கொடுங்க !! இம்சையக்க கெடச்சுதானு மெயில் பண்ணுங்க என்ன ??:))))))

ரொம்ப தேங்க்ஸ்கா !! :))))

said...

//இம்சையக்க கெடச்சுதானு மெயில் பண்ணுங்க என்ன ??:))))))//

ம் அல்வா'தான் கிடைக்கும், :)

said...

பின்னூட்டம் இட்டவர்களின் பெயர் தெரியவில்லையே. ( இல்லை எனக்கு மட்டும் தெரியவில்லையா ?)
தயவு செய்து சரிபார்க்ககவும்.

said...

kottambatti rottula
kutti pOra shokkula
rottiya thaan thimbana
kuttiya thaan paappanaa

said...

Happy Birthday jollupandi!!!
(Belated wishes)
Better late than never.. enna solreenga

said...

அட்டகாசமா இருக்குப்பா குட்டி எல்லாம்...

said...

எனக்கும் குட்டிகள கொஞ்சணம் போல இருக்கே! :-)

said...

lol :) ==== ammu

said...

சென்னைல இருந்தப்போ இப்படித்தான் எங்க வீட்டுலே ஒரு பூனை 4 குட்டி போட்டிருந்தது.

ஒவ்வொண்ணுக்கும் நாங்க பேர் வெச்சிருந்தோம்.

சூர்யா, ஜோதி, ஜான்ஸி.. இப்படியெல்லாம். (எல்லாம் அண்ணாமலைல ராதிகாவோட பொண்ணுங்க பேரு)
அப்புறம் இன்னும் 4 குட்டி போட்டப்போ சரோ, விஜி..(மெட்டி ஒலி)

ஆனா கொஞ்சம் வளர்ந்தவுடனேயே அந்த குட்டிங்களோட அம்மா வேறெ இடத்துக்கு தூக்கிட்டுப் போயிடும். எங்களுக்கு ஒரே வருத்தமா இருக்கும்.
:(

அப்புறம் இண்ணும் ரெண்டு குட்டி போட்டப்போ தாமரை, செல்வின்னு பேரு வெச்சோம்!