Sunday, April 01, 2007

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? (மகளிர் ஸ்பெசல்)

நம்ம தோழி ஒருத்தரு புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன் பாண்டின்னு நமக்கு சந்தோசமா மெயில் தட்டி உட்டுருந்தாரு. அதுக்கு பாராட்டலாமேன்னு நானும் ஒரு phone ஐபோட்டு ‘என்னாமா கண்ணு எப்படி இருக்கு புது வேலை எல்லாம்?’ ன்னு கேட்டதுதான் போதும் அவ்ளோதான் ‘பாண்டி வேலை எல்லாம் ஜுஜுபிதான் !
(அவுக நம்மளை மாதிரி இல்லைங்கோ! நெசமாவே கொஞ்சம் மூளைக்காரவுகதான்!) ஆனா இந்த சீனியருக தொல்லை தான் தாங்கமுடியலை! அப்பபோ அதைய சொல்லுறேன் இதையக் கேக்குறேன்னு வந்து வழியறதைத்தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலைன்னு !” பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி ! நமக்குத்தான் ரொம்ப இளகின மனசாச்சே !! அதுவும் இப்படி தாய்குலங்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறதைப்பார்த்தா மனசு தாங்குமா சொல்லுங்க? அப்படியேக்கா மனசுலே ஒரு ரெண்டு ‘டன்’ பாரம் ‘லோட்’ ஆயிடுச்சு !!

அட இது நம்ம தோழிக்குக்கு மட்டுமா பிரச்சனை ? வெளியே வேலைக்குப்போற நம்ம எல்லா தாய்க்குலங்களுக்குமே உள்ள பிரச்சனை தானே ! எப்படி இந்த மெகா ஜொள்ளு பார்ட்டிகளை சமாளிக்கறதுன்னு ஏதோ நம்மாளான ஐடியாக்களை அள்ளித்தெளிச்சா என்னான்னு தோணுச்சு. இதோ களத்திலே குதிச்சிட்டான் ஜொள்ளுப்பாண்டி!! நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு போட்டுருவாங்க. ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது உங்கள் ஜொள்ளுப்பாண்டி !!

ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’ இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘ எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !


வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’ பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’ பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை ‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘ என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!


திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :

இந்த ‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா ‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம் விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு ‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’ வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!


அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச் பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?! குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல் உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல் ஊத்தி பத்தவசுடாதீங்க !!

45 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

என்னய்யா இது புது ட்ரெண்ட் அடிக்கிறீரு?

தேர்தல்ல ஏதாச்சும் நிக்கப் போறீரா?

திடீர்னு தாய்குலத்துக்குச் சப்போர்ட் பண்ணுறீரு?

:))

said...

அடப் பாவி!

இன்னிக்கு ஏப்ரல் 1 க்காகவா இப்படி ஒரு வேஷம்?

said...

அண்ணாத்தே!
இன்னொரு ரகத்தை விட்டுட்டீங்களேஎ

ஐடியா ஜொள்ளுப் பார்ட்டி
இப்படி யாருமே கேட்காமே ஜொள்ளர்களிடமிருந்து தப்பிக்க பல வழிகள் னு சொல்லிகிட்டே பல ஐடியாக்களை வாரி வழங்குவாங்க.

அட! பரவாயில்லையே! இப்படியெல்லாம் கூட இருக்கா ன்னு வெகுளித்தனமா கொஞ்சம் சீரியஸா கேட்டீங்கன்னா போதும்.

அப்புறம் லைஃப் லாங்க் உங்களுக்கு ஐடியா தர்றேன்னு சொல்லிகிட்டே உங்ககிட்டே ஐக்கியமாயிடுவாங்க!

said...

ஏன்யா பாண்டிண்ணே....

இப்படி எல்லா மாதிரி இருந்தாலும் ஜொள்ளு விடுறவங்கன்னு கொளுத்தி போடுறியளே.. அப்போ பசங்க எப்படித்தான் இருக்குறது? :((((

said...

ஜொள்ளு சார் ஜொள்ளு சார் எனக்கு ஒரு சந்தேகம்.இது மூணுல நீங்க எந்த ரகம்?

said...

இன்னைக்கு ஏப்ரல் 1...ஆகவே நீங்க ரொம்ப நல்ல பையன் என்று காண்பித்து எங்களை ஏமாற்ற பார்க்கின்றீர்களா?கேட்கமலே டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே அதான் சந்தேகம் ;)

said...

இந்த மாதிரி யாரும் இது வரைக்கும் நான் பார்த்தது இல்லை.(என்னைப் பார்த்து ஜொள்ளு விட எல்லாத்துக்கும் பயம்.ஹி ஹி)

said...

//ஜொள்ளு சார் ஜொள்ளு சார் எனக்கு ஒரு சந்தேகம்.இது மூணுல நீங்க எந்த ரகம்?
//

துர்க்கா!

அவர் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் 5 வது ரகம்!

:))

said...

//துர்க்கா!

அவர் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் 5 வது ரகம்!//

ஐடியா ஜொள்ளு...பொருத்தமான ரகம் ;)

ஆனால் இவர் இந்த எல்லா ரகத்தில் சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன்.இல்லையென்றால் எப்படி இப்படி புட்டு புட்டு வைக்கின்றார்?experience talking

said...

//இப்படி எல்லா மாதிரி இருந்தாலும் ஜொள்ளு விடுறவங்கன்னு கொளுத்தி போடுறியளே.. அப்போ பசங்க எப்படித்தான் இருக்குறது? :(((( //

very simple.பொண்ணுகளைப் பார்க்கதீங்க பேசதீங்க.அவுங்களே வந்து பேசினாலும் விறப்பாக பேசமால் போய் விடனும் ;)மொத்ததில் நீங்கள் ஒரு காவி உடை அணியாத சாமியாராக இருக்கனும் :)))

said...

//ஆனால் இவர் இந்த எல்லா ரகத்தில் சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன்.இல்லையென்றால் எப்படி இப்படி புட்டு புட்டு வைக்கின்றார்?experience talking
//

கரெக்ட்டு அண்ட் ரிப்பீட்டேய்!
:)

said...

வாங்க சிபி !! :))) அட தேர்தல் எல்லாம் இல்லை. ஏப்ரல்1 க்காகவும் இல்லைங்க !! :)))
//அண்ணாத்தே!
இன்னொரு ரகத்தை விட்டுட்டீங்களே//

ஆஹா சிபி ஞாபகப்படுத்திட்டீங்க ! இப்படி ஒரு ரகம் இருக்கே !! ஆமா இதிலே உள்குத்து வெளிகுத்து ஏதும் இல்லையே ??;))))))

said...

// ஜி - Z said...
ஏன்யா பாண்டிண்ணே....

இப்படி எல்லா மாதிரி இருந்தாலும் ஜொள்ளு விடுறவங்கன்னு கொளுத்தி போடுறியளே.. அப்போ பசங்க எப்படித்தான் இருக்குறது? :(((( //

ஜி என்ன இப்படி சோகமாகீட்டீங்க?? அட பசங்க எப்படி இருக்கறதுன்னு ஒரு போஸ்ட்டை போட்டுட்டாப்போச்சு !! கொஞ்சம் சிரிங்கப்பூ !!! :))))))

said...

// துர்கா|thurgah said...
ஜொள்ளு சார் ஜொள்ளு சார் எனக்கு ஒரு சந்தேகம்.இது மூணுல நீங்க எந்த ரகம்? //

ஆமா நான் என்ன துர்கா உங்களுக்கு சாரா?? NOOOOOOOOOOO. நான் இதிலே எந்த ரகம்ன்னு இந்த உலகம் சொல்லும் !! ;)))))

ஏப்ரல் 1 சாதாரணமா அமைஞ்சுடுச்சு ! வேற எந்த காரணமும் இல்லை !! :)))

//ஐடியா ஜொள்ளு...பொருத்தமான ரகம் ;)

ஆனால் இவர் இந்த எல்லா ரகத்தில் சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன்.இல்லையென்றால் எப்படி இப்படி புட்டு புட்டு வைக்கின்றார்?experience talking //

அட என்னாங்க துர்கா இப்படி என்னைய போட்டு நீங்களும் சிபியும் தாளிச்சு எடுக்கறீங்க ??;))))))) அட எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் கொடுக்கும் ஐடியாகள் தான் ;)))))))

said...

//Anonymous said...
//இப்படி எல்லா மாதிரி இருந்தாலும் ஜொள்ளு விடுறவங்கன்னு கொளுத்தி போடுறியளே.. அப்போ பசங்க எப்படித்தான் இருக்குறது? :(((( //

very simple.பொண்ணுகளைப் பார்க்கதீங்க பேசதீங்க.அவுங்களே வந்து பேசினாலும் விறப்பாக பேசமால் போய் விடனும் ;)மொத்ததில் நீங்கள் ஒரு காவி உடை அணியாத சாமியாராக இருக்கனும் :))) //

அமைதி அமைதி !! அனானி அப்படியெல்லாம் இல்லங்க. ஜொள்ளை எப்படி இதமா பதமா விடுறதுன்னு தெரிஞ்சுகிட்டு விடணும் அவ்ளோதாங்கோ !!!! ;)))))))))

said...

ஐயா ஜொள்ளு பல்கலைக்கழகமே,

இப்படி நீரே போட்டு குடுத்துட்டா, நாளைக்கு உம்ம கதியே என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்தீரா?

said...

இங்கு இப்படி யாரும் ஈ என்று இளித்தாளே சரி..உள்ளுக்கு தள்ளிடலாம்...இங்க எங்களுக்கு (பெண்களுக்கு) தான் முதல் உரிமை எங்கும்...

said...

enna solreenga jollu..
ellam unga anubavamo??
idu partha pengaluku kudukura advice mathiri theriyala.. aangala usupethi vidara mathiri iurku

said...

//கரெக்ட்டு அண்ட் ரிப்பீட்டேய்!
:)//

சிபி உங்கிட்ட இந்த ஆளோட பல இரகசியம் இருக்கு போல.ஒரு நாள் ரெண்டு பேரும் மீட் பண்ணி இதைப் பத்தி பேசலாம்.அப்படியே இதைப் பற்றி பதிவு போடலாமா?

said...

//அட என்னாங்க துர்கா இப்படி என்னைய போட்டு நீங்களும் சிபியும் தாளிச்சு எடுக்கறீங்க ??;))))))) அட எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் கொடுக்கும் ஐடியாகள் தான் ;))))))) //

ஜொள்ஸ் உங்க மனசுக்குத் துரோகம் பண்ணமால் சொல்லுங்க.நானா ஐடியா கொடுத்தேன்??உடல் மண்ணுக்கு உயிர் ஜொள்ளுக்கு என்று வாழ்பவர் நீங்களா நானா?உங்க பக்கம் வரும் வரை ஜொள்ளு என்றால் என்னவென்று அறியாத புள்ளை நான்.இப்படி எல்லாம் பொய் சொல்லகூடாது.ஜொள்ளில் phD செய்த உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அளவிற்கு நான் இல்லை :)))

said...

//நாகு (Nagu) said...
ஐயா ஜொள்ளு பல்கலைக்கழகமே,

இப்படி நீரே போட்டு குடுத்துட்டா, நாளைக்கு உம்ம கதியே என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்தீரா? //

வாங்க நாகு :))) அட என்னாங்க நீங்க?? நான் நம்ம தாய்க்குலங்களுக்கு புடிக்காத மாத்ரி ஜொள்ளுவிடுறவங்களைப்பதை தனே சொல்லி இருக்கேன் !! :))) கவலை படாதீங்க நாகு !!:)))))))))

said...

// தூயா said...
இங்கு இப்படி யாரும் ஈ என்று இளித்தாளே சரி..உள்ளுக்கு தள்ளிடலாம்...இங்க எங்களுக்கு (பெண்களுக்கு) தான் முதல் உரிமை எங்கும்... //

வாங்க தூயா :)))) ஏன் ஏன் ஏன் இப்படி ??? ஜாக்கிரதையா இருக்கனும் போல இருக்கே !! ஹிஹிஹிஹிஹிஹி :))))))))))

//dubukudisciple said...
enna solreenga jollu..
ellam unga anubavamo??
idu partha pengaluku kudukura advice mathiri theriyala.. aangala usupethi vidara mathiri iurku //

வாங்க டுபுக்குடிசைப்பிள் :))))))
ஆஹா நாம் உசுபேத்தி விடுறேனா?? அட தாய்க்குலங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யலாம்ன்னு வந்தா இவ்வளவு எதிர்ப்பு சந்தேகமா ?? எண்டே பகவானே !!! ;))))))))))))

said...

// துர்கா|thurgah said...
//அட என்னாங்க துர்கா இப்படி என்னைய போட்டு நீங்களும் சிபியும் தாளிச்சு எடுக்கறீங்க ??;))))))) அட எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் கொடுக்கும் ஐடியாகள் தான் ;))))))) //

ஜொள்ஸ் உங்க மனசுக்குத் துரோகம் பண்ணமால் சொல்லுங்க.நானா ஐடியா கொடுத்தேன்??உடல் மண்ணுக்கு உயிர் ஜொள்ளுக்கு என்று வாழ்பவர் நீங்களா நானா?உங்க பக்கம் வரும் வரை ஜொள்ளு என்றால் என்னவென்று அறியாத புள்ளை நான்.இப்படி எல்லாம் பொய் சொல்லகூடாது.ஜொள்ளில் phD செய்த உங்களுக்கு ஐடியா கொடுக்கும் அளவிற்கு நான் இல்லை :))) //

துர்கா :)))) வாங்க வாங்க நான் நடகற பாதையிலே ரெண்டு லிட்டர் வெளக்கெண்ணெய ஊத்திவிட்டு இருக்கலாம் !!! அட ஒரு கை கொடுங்க கீழ வுழுந்து கெடகறேனே தூக்கிவிட்டா கொறஞ்ச போய்டுவீங்க??:)))))))))))

said...

//துர்கா :)))) வாங்க வாங்க நான் நடகற பாதையிலே ரெண்டு லிட்டர் வெளக்கெண்ணெய ஊத்திவிட்டு இருக்கலாம் !!! அட ஒரு கை கொடுங்க கீழ வுழுந்து கெடகறேனே தூக்கிவிட்டா கொறஞ்ச போய்டுவீங்க??:)))))))))))//

உங்க size எல்லாம் என்னால் தூக்க முடியுமா?நீங்க எவ்வளவு பெரிய ஆள் ;)
சாதரணமான என்னால் தூக்க முடியுமா?

said...

ithukellam thalaivar neenga thaana jollupandi :) ==== ammu

said...

வேற எப்படி ஜொள்ளு விட்டா கரெக்டா இருக்கும்?

said...

அடடா பாண்டிண்ணே,

கலக்கல் போஸ்ட்:)

said...

தங்களை அழகுத் தொடருக்காகஅன்புடன் அழைக்கிறேன்

said...

இப்பிடி உண்மய பூராம் போட்டு ஒடச்சிட்டீங்களே! நீங்க நல்லா இருக்கனும் :)

said...

// துர்கா|thurgah said...
உங்க size எல்லாம் என்னால் தூக்க முடியுமா?நீங்க எவ்வளவு பெரிய ஆள் ;)
சாதரணமான என்னால் தூக்க முடியுமா? //

துர்க்கை பப்ளிக்கிலே இப்படியெல்லாம் சொல்லி என் இமேஜை டேமேஜ் ஆக்குறீயளே நான் என்ன தப்பு பண்ணுனேன் சொல்லுங்க !! :))))))))

said...

//ithukellam thalaivar neenga thaana jollupandi :) ==== ammu //

எண்டே அம்மு இப்படி பறஞ்சா ஞாண் எந்து செய்யாம்??;)))))))))) அட நான் எப்பொழுதுமே சாதாரண தொண்டன் தாங்கோ! :))))))

said...

//Anonymous said...
வேற எப்படி ஜொள்ளு விட்டா கரெக்டா இருக்கும்? //

வாங்க அனானி !! :))) இவளவுதானா உங்க கவலை?? கவலை படேல் உங்களுக்காக ஒரு பதிவை போட்டுத்தாகீடறேன் !!! :))))))))))))

said...

//ஆவி அம்மணி said...
தங்களை அழகுத் தொடருக்காகஅன்புடன் அழைக்கிறேன் //

வாம்மா ஆவி கண்டிப்பா போட்டுட போச்சு!!! ஆனா கொஞ்சம் ஏடாகூடமா இருக்குமே பரவாயில்லையா??;)))))))))

said...

// இராம் said...
அடடா பாண்டிண்ணே,

கலக்கல் போஸ்ட்:) //

வாங்க ராம் ::)))) எல்லாம் உங்க ஆசீர்வாதம் தாங்கண்ணா :)))))))))

said...

//சுப.செந்தில் said...
இப்பிடி உண்மய பூராம் போட்டு ஒடச்சிட்டீங்களே! நீங்க நல்லா இருக்கனும் :) //

வாங்க செந்தில் !! :)))) என்ன இப்படி சாலிச்சுக்கிறீங்க?? :)))) அட கவலை படாம சிரிங்க !!! :)))

said...

ammu nu per iruntha malayali nu nenachukuteengala :O nan ISI tamizhachi :))))))))

said...

//துர்க்கை பப்ளிக்கிலே இப்படியெல்லாம் சொல்லி என் இமேஜை டேமேஜ் ஆக்குறீயளே நான் என்ன தப்பு பண்ணுனேன் சொல்லுங்க !! :))))))))
//

உண்மைதானே ஜொள்ஸ்!நான் என்ன பொய்யா சொன்னேன் ;)

said...

//ammu nu per iruntha malayali nu nenachukuteengala :O nan ISI tamizhachi :)))))))) //

ஆஹா அம்மு வாங்க வாங்க தமிழச்சியே !!! அட மலையாளத்திலே சொன்னது சும்மா ஒரு பில்டப்பு !!! கண்டுகிடாதீங்க !!! சரியா ?? :):):):):) நீங்க தமிழ் பொண்ணுன்னு எனக்கு இப்போ தானே தெரியும்?? இனி ஞாண் தமிழில் பறையும் !!! ஒகேவா ??;))))))))))))))

said...

ஜொள்ளுத் திலகமே...

இது ஒங்களுக்கே ஓவராத் தெரியல? இப்படியா கொளுத்திப் போடுறது?

இனிமே ஒருத்தன் நல்ல மனசோட போய் உதவி பண்ணாலும் பொண்ணுங்க ஒங்களால அவங்கள தப்பா எடுத்துப்பாங்க...

சரி விழிப்புணர்வ ஏற்படுத்த நெனச்ச ஒங்க "நல்ல" மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற...

said...

//செந்தில் said...
ஜொள்ளுத் திலகமே...

இது ஒங்களுக்கே ஓவராத் தெரியல? இப்படியா கொளுத்திப் போடுறது?

இனிமே ஒருத்தன் நல்ல மனசோட போய் உதவி பண்ணாலும் பொண்ணுங்க ஒங்களால அவங்கள தப்பா எடுத்துப்பாங்க...

சரி விழிப்புணர்வ ஏற்படுத்த நெனச்ச ஒங்க "நல்ல" மனசுக்கு நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற... //


வாங்கப்பூ செந்தில் :))))))))அடட என்னா ஒரு சோகம் எனா ஒரு சோகம் ??;)))))) சரி சரி லூசிலே விடுங்க. நானே இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லித்தொலைக்கிறேன் சந்தோசமா இப்போ?? ;)))))))))))))

said...

நீங்க இப்பிடி எல்லா வகையான ஜொள்ளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டி தாய்க்குலங்களை உழார் பண்ணறது
கொஞ்சம் கூட சரியில்லைங்க ஜொள்ஸ்!

-கிச்சா.

said...

magane pandi.epadi iruke roma naala kanama poita.ammava kavanipa

said...

//Kicha said...
நீங்க இப்பிடி எல்லா வகையான ஜொள்ளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டி தாய்க்குலங்களை உழார் பண்ணறது
கொஞ்சம் கூட சரியில்லைங்க ஜொள்ஸ்!

-கிச்சா. //

வாங்க கிச்சா :)))
அட இதுகெல்லாம் டென்சன் ஆனா எப்படி?? இன்னும் பல கேட்டகரிகளி சொல்லாம தானே விட்டு இருக்கேன் :)))))

said...

//ulagam sutrum valibi said...
magane pandi.epadi iruke roma naala kanama poita.ammava kavanipa //

ஆஹா நீங்க அம்மாவா?? :))) உலகம் சுற்றும் வாலிபி ஆச்சே:)) கவனிக்கறேன் கவனிக்கறேன் !!:)))

said...

இதுல நீங்க எந்த டைப்புங்க;0))