சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் பின்ணணியில் உண்மையில் நடந்து என்ன ?
சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்ன??
ஏன் இதைப்பற்றி யாரும் எழுதவில்லை ??
இந்த பிண்ணனி உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ??
யாராச்சும் இதையப்பத்தி எழுதுவாங்கனு நானும் wait பண்ணி பார்த்தேன். தேவையில்லாம நீ இதையப்பத்தி ஏற்கனவே கற்பனையிலே ப்ளாக் மீட்டிங்க நடத்தி எழுதி வாங்குன ஆப்பு போதாதா ஜொள்ளுப்பாண்டி??!! கொஞ்சம் அமைதியா இருடா ன்னு மனசு வேற அபாய சங்கு ஊதுது !! நம்மளுக்கு தான் மனசும் சரி கண்ணும் சரி என்னிக்கு நம்ம பேச்சை கேட்டு இருக்கு ??
சரி பொறுமை காப்போம், யாரச்சும் அரசல் புரசலாகவவது இதையப்பத்தி எழுதுவாங்க ஓரமா ஒக்கார்ந்து ‘பிட்’ டைப்போடலாம்னு பார்த்தா அதுகெல்லாம் யாருமே வாய்ப்பு கொடுக்கவேயில்லை. சரி ப்ளாக் மீட்டிங்குக்கு பல போஸ்ட் எழுதி கொலவையிட்ட பழம்பெரும் 'தலை' கள் பலபேரு வேற வந்து இருந்துருக்காங்க நாம கொஞ்சம் அடக்கி வாசிப்போம்னு நானும் ‘கம்’முனு தான் ஒருவாரம் கையைக்கட்டிகிட்டு சும்மா இருந்தேன் . ஆனா முடியலை என்னால முடியலை !! ஏறகனவே நாம வாங்குன ஆப்பு வேற DTS எபக்ட்ல கண்ணுக்கு முன்னாடி கபடி ஆடுது !! ஆனாலும் நம்ம கை என்னவோ சும்மாவே இருக்க மாட்டீங்குது !!
சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த ப்ளாகர்ஸ் மீட்டிங்கின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்னான்னு எனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்குங்க. அன்னிக்கி வலைப்பதிவர் சந்திப்பில் என்ன பேசினாங்க என்ன முடிவு எடுத்தாங்கன்னு கிட்டத்தட அரைடசன் பதிவுக்கு மேல நம்ம பதிவுலக மக்கள் எழுதிபுட்டாங்க . ஆனா நான் அதையப்பத்தி சொல்ல வரலை சரியா?? ஆனா ஏன் இப்படி பின்ணணி தகவலகள் இருடடிப்பு செய்யறாங்கன்னு எனக்கு தெரியலை. இப்படி பின்ணனியில் நடந்த உண்மைகளை மறைச்சா நாளைய வரலாறு என்னைய மன்னிக்கவே மன்னிக்காது !!!
இதற்காகவே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி எத்தனை ஆப்புகள் வாங்கினாலும் சரி !! நீ எழுதுடா ஜொள்ளுப்பாண்டினு என் மனசுலா ஓரமா A/c போட்டு தூங்க வச்சு இருந்த வீரன் ஜலஜல ஜொள்ளுபாண்டி தன் வாளை உருவிகிட்டு வந்துட்டான் உண்மைகளை சொல்ல !!!
இதோ நடந்த உண்மைகள் !!!
வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும்போது நம்ம பதிவர்கள் யாரும் நடக்கவே இல்லை !! எல்லாரும் உக்கார்ந்துதான் இருந்தாங்க.
ஆனா அவங்களைச்சுத்தி பல பேரு பார்க்கிலே நடந்துகிட்டு இருந்தாங்க !! அதாங்க ‘வாகிங்’ போய்ட்டு இருந்தாங்க.
அதிலே மூணு அழகான அதிலும் ரெண்டு அதி அழகான பொண்ணுங்க நடந்துகிட்டு இருந்தாங்க.
நடந்த பொணுங்க எல்லாரும் ஒரு ‘பாடிகார்ட்’ கூடத்தான் வந்து இருந்தாங்க. பொதுவா அந்த ‘பாடிகார்ட்’டுக அவங்க அம்மாவோ அப்பாவோதான் !
எல்லா பொண்ணுங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்து நடந்து ஜொள்ளுப்பாண்டிக்கு கடுமையான கவனசிதைவை ஏற்படுத்தினார்கள் என்றால் மிகையாகாது. பதிவர்கள் பேச்சு காதில்தானே விழபோகுது என காதை பதிவர்களுக்கும் கண்ணை பின்ணனியில் நடக்கும் ‘ கன்னி ’ யருக்கும் பெரிய மனது பண்ணி ஒப்படைத்து விட்டார் பாண்டி !! யார் மனசும் புண்படக்கூடாது என்பதிலே எனக்கு இருக்குற அக்கரைய நெனச்சும் நீங்க ஆனந்தகண்ணீர் வடிக்கறது எனக்கு தெரியுது !!
பின்குறிப்பு :-
இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை சொன்னதால நான் நாளைல இருந்து வெளிய நடமாட முடியுமான்னு எனக்குத் தெரியலை. ஆனா பொது வாழ்க்கைன்னு வந்துட்ட பிறகு மக்களுக்கு உண்மைய சொல்ல பாண்டி மாதிரி யாரசும் ஒருத்தராச்சும் வீரமா இருக்கனும்னு நாளைய வரலாறு சொல்லட்டும் என்ன சொல்றீங்க?? !! படிச்சிட்டு ஓரமா நம்மளை வாழ்த்திட்டு போங்கப்பு !!!