Friday, April 27, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் பின்ணணியில் உண்மையில் நடந்து என்ன ?





சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்ன??

ஏன் இதைப்பற்றி யாரும் எழுதவில்லை ??

இந்த பிண்ணனி உண்மைகளை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ??


யாராச்சும் இதையப்பத்தி எழுதுவாங்கனு நானும் wait பண்ணி பார்த்தேன். தேவையில்லாம நீ இதையப்பத்தி ஏற்கனவே கற்பனையிலே ப்ளாக் மீட்டிங்க நடத்தி எழுதி வாங்குன ஆப்பு போதாதா ஜொள்ளுப்பாண்டி??!! கொஞ்சம் அமைதியா இருடா ன்னு மனசு வேற அபாய சங்கு ஊதுது !! நம்மளுக்கு தான் மனசும் சரி கண்ணும் சரி என்னிக்கு நம்ம பேச்சை கேட்டு இருக்கு ??

சரி பொறுமை காப்போம், யாரச்சும் அரசல் புரசலாகவவது இதையப்பத்தி எழுதுவாங்க ஓரமா ஒக்கார்ந்து ‘பிட்’ டைப்போடலாம்னு பார்த்தா அதுகெல்லாம் யாருமே வாய்ப்பு கொடுக்கவேயில்லை. சரி ப்ளாக் மீட்டிங்குக்கு பல போஸ்ட் எழுதி கொலவையிட்ட பழம்பெரும் 'தலை' கள் பலபேரு வேற வந்து இருந்துருக்காங்க நாம கொஞ்சம் அடக்கி வாசிப்போம்னு நானும் ‘கம்’முனு தான் ஒருவாரம் கையைக்கட்டிகிட்டு சும்மா இருந்தேன் . ஆனா முடியலை என்னால முடியலை !! ஏறகனவே நாம வாங்குன ஆப்பு வேற DTS எபக்ட்ல கண்ணுக்கு முன்னாடி கபடி ஆடுது !! ஆனாலும் நம்ம கை என்னவோ சும்மாவே இருக்க மாட்டீங்குது !!

சென்னை நடேசன் பார்கில் போன வாரம் நடந்த ப்ளாகர்ஸ் மீட்டிங்கின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்னான்னு எனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்குங்க. அன்னிக்கி வலைப்பதிவர் சந்திப்பில் என்ன பேசினாங்க என்ன முடிவு எடுத்தாங்கன்னு கிட்டத்தட அரைடசன் பதிவுக்கு மேல நம்ம பதிவுலக மக்கள் எழுதிபுட்டாங்க . ஆனா நான் அதையப்பத்தி சொல்ல வரலை சரியா?? ஆனா ஏன் இப்படி பின்ணணி தகவலகள் இருடடிப்பு செய்யறாங்கன்னு எனக்கு தெரியலை. இப்படி பின்ணனியில் நடந்த உண்மைகளை மறைச்சா நாளைய வரலாறு என்னைய மன்னிக்கவே மன்னிக்காது !!!

இதற்காகவே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி எத்தனை ஆப்புகள் வாங்கினாலும் சரி !! நீ எழுதுடா ஜொள்ளுப்பாண்டினு என் மனசுலா ஓரமா A/c போட்டு தூங்க வச்சு இருந்த வீரன் ஜலஜல ஜொள்ளுபாண்டி தன் வாளை உருவிகிட்டு வந்துட்டான் உண்மைகளை சொல்ல !!!


இதோ நடந்த உண்மைகள் !!!

வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும்போது நம்ம பதிவர்கள் யாரும் நடக்கவே இல்லை !! எல்லாரும் உக்கார்ந்துதான் இருந்தாங்க.

ஆனா அவங்களைச்சுத்தி பல பேரு பார்க்கிலே நடந்துகிட்டு இருந்தாங்க !! அதாங்க ‘வாகிங்’ போய்ட்டு இருந்தாங்க.

அதிலே மூணு அழகான அதிலும் ரெண்டு அதி அழகான பொண்ணுங்க நடந்துகிட்டு இருந்தாங்க.

நடந்த பொணுங்க எல்லாரும் ஒரு ‘பாடிகார்ட்’ கூடத்தான் வந்து இருந்தாங்க. பொதுவா அந்த ‘பாடிகார்ட்’டுக அவங்க அம்மாவோ அப்பாவோதான் !

எல்லா பொண்ணுங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்து நடந்து ஜொள்ளுப்பாண்டிக்கு கடுமையான கவனசிதைவை ஏற்படுத்தினார்கள் என்றால் மிகையாகாது. பதிவர்கள் பேச்சு காதில்தானே விழபோகுது என காதை பதிவர்களுக்கும் கண்ணை பின்ணனியில் நடக்கும் ‘ கன்னி ’ யருக்கும் பெரிய மனது பண்ணி ஒப்படைத்து விட்டார் பாண்டி !! யார் மனசும் புண்படக்கூடாது என்பதிலே எனக்கு இருக்குற அக்கரைய நெனச்சும் நீங்க ஆனந்தகண்ணீர் வடிக்கறது எனக்கு தெரியுது !!


பின்குறிப்பு :-

இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை சொன்னதால நான் நாளைல இருந்து வெளிய நடமாட முடியுமான்னு எனக்குத் தெரியலை. ஆனா பொது வாழ்க்கைன்னு வந்துட்ட பிறகு மக்களுக்கு உண்மைய சொல்ல பாண்டி மாதிரி யாரசும் ஒருத்தராச்சும் வீரமா இருக்கனும்னு நாளைய வரலாறு சொல்லட்டும் என்ன சொல்றீங்க?? !! படிச்சிட்டு ஓரமா நம்மளை வாழ்த்திட்டு போங்கப்பு !!!

23 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

:))

said...

நாளைய வரலாறு தவறாக எழுதப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து இப்பதிவை போட்டு இருக்கும் பாண்டியண்ணனுக்கு ஜொள்ளின் ஜொள்ளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

said...

நன்றிகளை தெரிவித்த அதே வேளையில் தான் கண்டதை படம் பிடித்து அடுத்தவரும் ரசிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இல்லாமல் தான் மட்டுமே ரசித்த சர்வாதிகார போக்கை மென்மையாக கண்டிக்கிறோம்.

said...

\\டிச்சிட்டு ஓரமா நம்மளை வாழ்த்திட்டு போங்கப்பு !!!\\

நல்லா இரு ;))

said...

ஏன் இல்ல ஏன்ங்கறேன்???

இனிமே எங்க போனாலும் தம்பி கண்ண ரெண்டையும் கட்டிதான் கூட்டிட்டு போகனும் போல... அநியாயத்துக்கு லூட்டி... ;)

said...

என்ன ஜொல்ஸ் மிதக்கும்வெளியின் பதிவை பார்க்கவில்லை போல ;)

அவரும் உங்கள மாதிரி நல்லா விசயங்கங்களை கூர்ந்து கவனிச்சு எழுதியிருந்தாரே!!!

:)))))

said...

"நவீன"ஜொள்ளரே!அப்போ நீங்களும் சந்திப்பில் கலந்து கொண்டீர்களா? எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! யோவ் சிபி நீராவது சொல்லக் கூடாதா? யாரிந்த ஜொள்ளுப் பாண்டினு! ஹிம் இதெல்லாம் சொல்லாத, நல்லா லார்ஜ், ஸ்மால் மட்டும் சொல்லு!
(பாரிலும் வந்து, புறாவுக்கு நான் கறி கொடுத்தேன், அதுனால புறாக் கறி எனக்கு வேனும்னு அடம்புடிச்ச ஆளுதான நீங்க!)

அன்புடன்...
சரவணன்.

அன்புடன்...
சரவணன்.

said...

பாண்டிண்ணே,

உங்களுக்கு மட்டும் எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் தோணுது??? :)

said...

// நாமக்கல் சிபி said...
:)) //

வாங்க சிபி :)))) ஆமா இப்படி சிரிசா என்ன அர்த்தங்கறேன் ?? ;)))))

said...

aapu vanginathu DTS effect la terinjum innum adangalaya. Nejamave neenga singam thaanga ;) ammu

said...

நாட்டுக்கு,பிளாக்கிற்கு "தேவை"யான விசயம் இதுதான்!!என்ன photo மட்டும் மிஸ்ஸிங் :)

said...

பாண்டி,உன் வீர தீர செயல்கள் வரலாற்று ஏட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டியவை.

said...

// நாகை சிவா said...
நாளைய வரலாறு தவறாக எழுதப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து இப்பதிவை போட்டு இருக்கும் பாண்டியண்ணனுக்கு ஜொள்ளின் ஜொள்ளர்கள் சங்கத்தின் சார்பாக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். //

வாப்பா எங்க் சிங்கத்தம்பி !!! அட நீங்க மட்டும் வந்து இருந்தா இன்னும் நல்லா கெலிசிருக்கலாம் தெரியுமா ?? ;)))) அட இப்படி ஒரு சங்கம் வேற இருக்கா ??;)))))

//நாகை சிவா said...
நன்றிகளை தெரிவித்த அதே வேளையில் தான் கண்டதை படம் பிடித்து அடுத்தவரும் ரசிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இல்லாமல் தான் மட்டுமே ரசித்த சர்வாதிகார போக்கை மென்மையாக கண்டிக்கிறோம்.
//

அட என்ன புலிக்குட்டி இப்படி கோச்சுகிட்டா எப்படி?? செவனேன்னு நடந்து போய்டு இருக்குறவகள படம் புடிச்சா அப்புறம் என்னைய புடிச்சு உள்ள வச்சு 'டின்' னு கட்டீறுஅவாகளே கொஞ்சம் ரோசணை பண்ணி பார்த்தீயளா??;)))))

said...

//கோபிநாத் said...
\\டிச்சிட்டு ஓரமா நம்மளை வாழ்த்திட்டு போங்கப்பு !!!\\

நல்லா இரு ;)) //

ஆஹா வாங்க கோபியாரே !!! ;)))))) உங்க வாயால இப்படி ஒரு வாழ்த்து வங்க நான் கொடுத்து வச்சுருக்கணும் தெரியுமா??;)))))))

said...

// இம்சை அரசி said...
ஏன் இல்ல ஏன்ங்கறேன்???

இனிமே எங்க போனாலும் தம்பி கண்ண ரெண்டையும் கட்டிதான் கூட்டிட்டு போகனும் போல... அநியாயத்துக்கு லூட்டி... ;) //

வாங்க இம்சையக்கா வாங்க !! :)))))
இப்படி என்னைய கண்ணைகட்டி போகச்சொல்லுறீயளே இப்பூட்டு கொடூர சிந்தனைய?? ஐயகோ என்ன செய்வேன் !! லூட்டி நம்ம கூடப்பொறந்த குணம் தெரியும்ல??;)))))))

said...

// We The People said...
என்ன ஜொல்ஸ் மிதக்கும்வெளியின் பதிவை பார்க்கவில்லை போல ;)

அவரும் உங்கள மாதிரி நல்லா விசயங்கங்களை கூர்ந்து கவனிச்சு எழுதியிருந்தாரே!!! :))))//

வாங்க ஜெய் !!;)))))
அட அப்படியா?? நான் கவனிகவேயில்லையே:)))) கோச்சுகிடாதீங்க தல!! இருந்தும் நம்ம பார்வையிலே எழுதலாமேன்னு தான் !! :)))))))

said...

// உங்கள் நண்பன் said...
"நவீன"ஜொள்ளரே!அப்போ நீங்களும் சந்திப்பில் கலந்து கொண்டீர்களா? எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! யோவ் சிபி நீராவது சொல்லக் கூடாதா? யாரிந்த ஜொள்ளுப் பாண்டினு! ஹிம் இதெல்லாம் சொல்லாத, நல்லா லார்ஜ், ஸ்மால் மட்டும் சொல்லு!
(பாரிலும் வந்து, புறாவுக்கு நான் கறி கொடுத்தேன், அதுனால புறாக் கறி எனக்கு வேனும்னு அடம்புடிச்ச ஆளுதான நீங்க!)///

வாங்க சரவணன் வாங்க !! ;))))))))
என்னே ஒரு குழுவுகுறி !! :)))) அட என்னைய பார்க்கவே இல்லையா நீங்க?? ஆனா நான் உங்கள பர்த்தேனே !! :))))))) என்ன பாருக்கு வரல. ஏன்னா நான் ரொம்ப நல்ல பையன் தெரியும்ல??;))))))))))
அடுத்த தடவை வாங்க முயல் கறி காடை ப்ரைன்னு அசத்தீடுவோம் !!!:))))

said...

// இராம் said...
பாண்டிண்ணே,

உங்களுக்கு மட்டும் எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் தோணுது??? :) ///

வாங்க தங்க சிங்கமே ராம் !!! :))))
அட இதுகெல்லாம் யுனிவர்சிடியிலயா போய் படிக்க முடியும் ?? நாமளே நம்மளை எக்யூப் பண்ணிக்க வேண்டியது தான்!!! இங்க வாங்க உங்க சிந்தனி குதிரைய நான் கொஞ்சம் தட்டி வுடுறேன் !! :))))

said...

//Anonymous said...
aapu vanginathu DTS effect la terinjum innum adangalaya. Nejamave neenga singam thaanga ;) ammu //

வாங்க அம்மு :))))) அட நம்மளப்போயி சிங்கம் அது இதுன்னு சொல்லு இப்படி உசுப்பேத்தி உடுறீயளே என்ன ஆகும் தெரியும்ல ??:))))))

said...

//Cheran Parvai said...
நாட்டுக்கு,பிளாக்கிற்கு "தேவை"யான விசயம் இதுதான்!!என்ன photo மட்டும் மிஸ்ஸிங் :) //

வாங்கண்ணா சேரன் பார்வை :)))) அட என்னா ஒரு ஆசை உங்களுக்கு:)))))) போட்டோ புடிச்சதுக்கப்புறம் என் நிலமைய பத்தி யாருமே கவலை பட மாட்டியறயளே !!! :)))))))))

said...

\\அதிலும் ரெண்டு அதி அழகான பொண்ணுங்க நடந்துகிட்டு இருந்தாங்க.\\

- போட்டா ஏதும் இருக்கா ?

said...

கண்ணு பாண்டி,
உனக்கு பின்னுட்டு போட்டிருக்கும்
அனானிமஸ் அம்மு நான் இல்லை.

said...

Naan thaan ammu :))