Tuesday, June 19, 2007

Modern Girls vs Ultra Modern Girls
அல்லும் பகலும் அயராது ஆணிபுடுங்க பணிக்கப்பட காரணத்தால் சங்கப்பணிகளையும் சொந்தப்பணிகளையும் புறம்தள்ள வேண்டிய கட்டாயத்துள்ளாக்கப்பட்ட சங்க சிங்கம் உங்கள் தங்கம்( வேற யாருங்கோ? தம்பி ஜொள்ளுபாண்டிதானுங்கோ! ) சிறிது நாட்களுக்கு கைகளும் வாயும் கட்டப்பட நிலையிலே மற்ற சிங்கங்கள் அடிக்கும் கூத்தையும் கொட்டத்தையும் பார்த்து மகிழ்ந்துகொண்டு எங்கிருந்தாலும் வாழ்கவெனெ மனதிற்குள்ளாகவே வாழ்த்திகொண்டிருந்த வேளையிலே எங்கிருந்தோ ஒரு ஈனக்குரல் செவிப்பறையை வந்து சுனாமியாய் தாக்கி தடுமாற வைத்த அந்த பொழுதிலே ஒலித்த அசரிரி ‘ டேய் செல்லம் இப்படியே இருந்தா ஜொள்ளுப்பண்டிக்கு சங்குதாண்டி ! சீக்கிரம் அவனுக்கு அப்படியே ரெண்டு கட்டிளம் கம்மர்கட்டுகளையும் ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டாகளையும் அண்டா அண்டாவாக ரத்தநாளங்களில் ஏற்றாவிட்டால் ‘ பிசாசோபிகரோசைடிங் ‘ சின்ரோம் வந்து கொத்தோடு வாரிகொண்டு போக வாய்ப்புள்ளதாக’ ஜொள்ளுப்பேட்டை மருத்துவர் அய்யா ஜொள்ளானந்தா சொன்னதால் வேறு வழியின்றி ஜொள்ளுப்பாண்டியின் ICU வான சென்னையின் லேட்டஸ்ட் சென்சேஷன் பிகர்களின் பதாமிஷேக தலம் புனித யாத்திரை பூமி சென்னைசிட்டி சென்ட்டருக்கு கைத்தாங்கலாக அழைத்துப்போகப்பட்டதின் விளைவே இந்த கட்டுரையன்றி வேறொன்றும் இல்லை பராபரனே !

Modern Girls
டி சர்ட் போட்டுகிட்டு மங்களகரமா சுத்துவாங்க

Ultra Modern Girls
அதோ டிசர்டில கையை கிழிச்சுவுட்டுகிட்டு கையில்லாத பனியனோட பரிதாபமா உலாவருவாங்க

Modern Girls
லூசுமாதிரி லூசா ஒரு ஜீன்ஸ் போட்டுகிட்டு சுத்துவாங்க

Ultra Modern Girls
போட்டுகிட்டு தச்சாங்களோ இல்லை தச்சுகிட்டுதான் போட்டாங்களோன்னு கவலைய உண்டாகுற மாதிரி ஒரு ஜீன்ஸோட கலவரமா உலாவருவாக

Modern Girls
ஜீன்ஸ் டிசர்ட் போட்டுகிட்டு ஏதோ ‘ஹேர்பேண்டு’ எல்லாம் ஹேர்லதான் போட்டுக்கணுங்கர பழைமைவாதத்தில சடைபின்னி அதுல இந்த ‘ஹேர்பேண்டு’ போட்டுகிட்டு ‘தேமே’ ன்னு சுத்திகிட்டு இருப்பாக

Ultra Modern Girls
எங்க அவுக போட்டு இருக்குற டிசர்ட்டு ஜீன்சை ‘டச்’ பண்ணி டார்சர் கொடுத்துடுமோங்கற கவலையில ஜீன்ஸுக்கு பாதமகமில்லாம ஒரு டிசர்ட்டை போட்டுகிட்டு அப்படியே ஹேர்பேண்டு எல்லாம் கையில போடுறதுக்குதாங்கற வாழ்க்கைத் தெளிவோட தலைவிரிகோலமா கலவரமா சுத்திகிட்டு இருப்பாக !

Modern Girls
அதிகபட்சமா ‘short’ சுரிதார் போட்டுகிட்டு வாய பொளந்துகிட்டு பாகுறவுகளை ‘அற்பனே’ ன்னு ஒரு ‘லுக்’ வுட்டுகிட்டு சீனைப்போடுவாங்க.

Ultra Modern Girls
இவங்களும் ‘short’ சுடிதான் போடலாம்னு நெனச்சுகிட்டு உள்ள போடுற ‘ஸ்லிப்’பையே கலர் கலரா கொழந்தை மனசோட போட்டுகிட்டு வந்து பாகுறவுக மனசை தவழவச்சுடுவாங்க.

Modern Girls
முக்கா காலுக்கு ஒரு பாவாடைய போட்டுகிட்டு தேம்ஸுக்கு பக்கத்துலதான் என் வீடுங்கர ரேஞ்சுகு அலப்பறை வுடுவாங்க

Ultra Modern Girls
இவுக ‘கால்’ காலுக்கு கொஞ்சம் கீழ வரைக்கும் பாவாடைய போட்டுகிட்டு ஜெனிபர் லோபஸ் தங்கச்சி ரெஞ்சுக்கு சிலுப்பிகிட்டு இருப்பாக

Modern Girls
இவுக அப்படியே டக்கு டகுன்னு ஹைஹீல்சை போட்டுகிட்டு நடந்தா ஏரியாவே அதிர்ரும்ல ?

Ultra Modern Girls
இவுக ஏரியாவுகு வந்தாலே பால்குடி பாலகன் முதல் நாளைக்கு பால் ஊத்தபோற தாத்தா வரை பாக்குறவுக மனசெல்லாம் சும்மா அதிர்ரும்லே ??

என்ன கண்ணுகளா ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு வெளகத்தை அள்ளித்தெளிச்சுருக்கேன். மார்டன் பொண்ணுகளுக்கும் அல்ட்ரா மார்டன் பொண்ணுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிஞ்சுகிட்டு ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்டிங்களா?? அப்படியே வந்து நம்ம ஆராய்ச்சிக்கு நிதி கொடுத்துட்டு போங்கப்பூ !!
25 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

தமிழ் மணத்தில் ஜொள்ளுக்கடல் மறுபடியும் ஓடுகின்றது.தல நீ வாழ்க

said...

ஆஹா... ஆஹா.. தல.. ரொம்ப நாளா ஜொள்ளுப்பேட்டை மூடப்பட்டதால சில பிக்காலி பசங்களெல்லாம் ஜொள்ளப் பத்தின பதிவுகள அள்ளித் தெளிக்கிறேன்னு அலப்பற விட்டுட்டுத் திரியிறாங்க.. நல்ல வேளையா விஜயம் கொடுத்து நல்லதொரு கருத்தையும் உலகுக்குத் தெரிவிச்சிருக்கீங்க :))

வாழ்க ஜொள்ளுடன். வளர்க ஃபிகருடன் :))

said...

சூப்பர்... டைம்பாஸ்க்கு டீ கூட படிக்க ரொம நல்லா இருந்துது..

said...

ஆக பக்தன் பாண்டி சென்னை திருத்தலத்திற்க்கு வந்துவிட்டார்.
பிகர் தேவதைகள் தரிசனம் பிராபிரஸ்து!!!!

said...

/madern girls, ultra madern girls/ இது போல ஆராய்ச்சி உன்னை விட்டா யாரால முடியும்
உனக்கு நிகர் நீநேதான் கண்ணு!!!!!!!!

said...

//ஜொள்ளுப்பாண்டியின் விசிறி said...
தமிழ் மணத்தில் ஜொள்ளுக்கடல் மறுபடியும் ஓடுகின்றது.தல நீ வாழ்க //

வாங்க தல நம்மளுக்கு விசிறியா?? அட கடல் அது இதுன்னு சொல்லி ரொம்ப புல்லரிக்க வைக்கறீயளே தல !:))))))))))

said...

// ஜி said...
ஆஹா... ஆஹா.. தல.. ரொம்ப நாளா ஜொள்ளுப்பேட்டை மூடப்பட்டதால சில பிக்காலி பசங்களெல்லாம் ஜொள்ளப் பத்தின பதிவுகள அள்ளித் தெளிக்கிறேன்னு அலப்பற விட்டுட்டுத் திரியிறாங்க.. நல்ல வேளையா விஜயம் கொடுத்து நல்லதொரு கருத்தையும் உலகுக்குத் தெரிவிச்சிருக்கீங்க :))//

வாங்க ஜி :))))))))))
பேடைய மூட வச்சுட்டாங்களே நான் என பண்ணுவேன் !! :(((. இந்தா வந்துட்டம்லே? இனிமே கதறக் கதற ஜொள்ளை விட்டுறவேண்டியதுதான் :)))))

//வாழ்க ஜொள்ளுடன். வளர்க ஃபிகருடன் :)) //

ஆஹா ஜி இப்படியெல்லாம் ஜொள்ளி என்னை freezer ல தூக்கி உட்கார வச்சுடீங்களே !!! :))))))))

said...

// Deepa said...
சூப்பர்... டைம்பாஸ்க்கு டீ கூட படிக்க ரொம நல்லா இருந்துது.. //

வாங்க தீபா :)))))
அட டீ கூட சேர்து படிச்சிங்களா?? அப்படியே நமகு ஒரு ஏலக்காய் ச்சாயா ப்ளீஸ் !!! ;))))))))

said...

//ulagam sutrum valibi said...
ஆக பக்தன் பாண்டி சென்னை திருத்தலத்திற்க்கு வந்துவிட்டார்.
பிகர் தேவதைகள் தரிசனம் பிராபிரஸ்து!!!! //

உலகம் சுற்றும் வாலிபி :)))))) வாங்க வாங்க வாங்க என்னா இது நான் ஒரு சாதாரண பக்தன்!! தேவி தரிசணம் கோடி புண்ணியம்னு சொல்லுறீங்கன்னு நெனகிறேன் சரியா??;))))))

said...

//ulagam sutrum valibi said...
/madern girls, ultra madern girls/ இது போல ஆராய்ச்சி உன்னை விட்டா யாரால முடியும்
உனக்கு நிகர் நீநேதான் கண்ணு!!!!!!!! //

ஹய்ய்யோ இப்படி சொல்லுபுடீயளே !! எலேய் யாரது சீக்கிரம் வண்டிய சத்யம் காம்ளக்ஸுகு விடு குளிரக் குளிர ஏசிபோட்ட ப்யூடீசை பார்த்துட்டு வரலாம் !! :))))

said...

kalakkal thala !!!
mohan

said...

வா ராசா .... வா ...

தலைப்பும் , பதிவும் அருமை .

said...

சமீபத்துல சென்னை ல நான் பார்த் மாடர்ன் அன்ட் அல்ட்ரா மாடர்ன் :

மாடர்ன் : கொஞ்சம் தயங்கி தயங்கி வந்து கிளாசிக் மைல்ட்ஸ் கொடுங்கனு கேட்டு வாங்கி, வேக வேகமா பைக்குள்ள போட்டுகிட்டு.. ஒரே ஓட்டம்...

அல்ட் மாடர்ன் : நின்னு நிதானிச்சு .. பில்டர் கிங்ஸ் ப்ளீஸ் நு கேட்டு.. பாக்கட் ல இருந்து லைட்டர் எடுத்து பத்த வெச்சு சும்மா சுருள் சுருளா பொகய விட்டு..

:) :)

said...

பிரையன் ஓ ஜொள்பாண்டியன் ஏற்கனவே ஒருபதிவருக்கு எழுதுன பின்னுட்டம்னாலும் உமக்கும் பொறுந்தும்கிறதால எழுதுறேன் ஓய்!

ஜொள்ளென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
ஜொள்பாண்டி தோன்றினானே

ஜொள்பேட்டை ஓரமாய்
கல்கண்டு பிகர்களை
கண்கொண்டு பார்க்கலாமே

முழுபாடலையும் அறிய சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் எழுதவும்

said...

// kalakkal thala !!!
mohan //

வாங்கண்ணா மோகன் கலக்கலா ஒரு கருத்த சொன்னதுக்கு !! :)))))

said...

// சுந்தர் / Sundar said...
வா ராசா .... வா ...

தலைப்பும் , பதிவும் அருமை . //

வாங்க சுந்தர் எப்படி இருக்கீங்க ??;))))) ஆஹா மறக்காம இருக்கீயளே ரொம்ப தேங்ஸ் !! :)))

said...

//வீ. எம் said...
சமீபத்துல சென்னை ல நான் பார்த் மாடர்ன் அன்ட் அல்ட்ரா மாடர்ன் :

மாடர்ன் : கொஞ்சம் தயங்கி தயங்கி வந்து கிளாசிக் மைல்ட்ஸ் கொடுங்கனு கேட்டு வாங்கி, வேக வேகமா பைக்குள்ள போட்டுகிட்டு.. ஒரே ஓட்டம்...

அல்ட் மாடர்ன் : நின்னு நிதானிச்சு .. பில்டர் கிங்ஸ் ப்ளீஸ் நு கேட்டு.. பாக்கட் ல இருந்து லைட்டர் எடுத்து பத்த வெச்சு சும்மா சுருள் சுருளா பொகய விட்டு..

:) :) //

வாங்க வீஎம் :)))))
அட இது கூட புது மேட்டராகீதே !! :)))))))

said...

//தமிழ் மணத்தில் ஜொள்ளுக்கடல் மறுபடியும் ஓடுகின்றது.தல நீ வாழ்க//
எந்தத்தலைன்னு சொல்லவே இல்லே.

நல்ல பதிவுதான். ஆனா இப்போ வெல்லாம் இந்த ஹோம்லின்னு சொல்லுவாங்களே அவுங்க இல்லியா?

said...

ஐயா பாண்டி,

நீங்க நெஜமாலுமே ஆணி பிடுங்கதான் போயிருந்தீங்களா? இதெல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே!!!

said...

// ILA(a)இளா said...
//தமிழ் மணத்தில் ஜொள்ளுக்கடல் மறுபடியும் ஓடுகின்றது.தல நீ வாழ்க//
எந்தத்தலைன்னு சொல்லவே இல்லே.

நல்ல பதிவுதான். ஆனா இப்போ வெல்லாம் இந்த ஹோம்லின்னு சொல்லுவாங்களே அவுங்க இல்லியா? //

வாங்க விவசாயி :))))))))))
ரொம்ப நாம் கழிச்சி பேட்டைப்பக்கம் உங்களைப்பாக்கறேன் :))). அட என்னாங்க ஹோம்லிய பத்திஎல்லாம் எழுதினா என்ன ஆவறது ??;)))))

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஐயா பாண்டி,

நீங்க நெஜமாலுமே ஆணி பிடுங்கதான் போயிருந்தீங்களா? இதெல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே!!! //

அட வாம்மா மைப்ரெண்ட் :))) அட நம்புங்க ஏன்னா நம்பிக்கைதான் வாழ்க்கை :)))) நெசமாதேன் செல்லுறேன் !!

said...

//எந்தத்தலைன்னு சொல்லவே இல்லே//

நெசமாத் தெரியாதா? அதான்! அப்பப்பா சங்கத்துப் பக்கம் வரணும்கிறது!

சங்கத்தோட தலையா பரிவட்டம் கட்ட உம்ம தலையைத்தான் யோசிச்சிகிட்டு இருக்காங்களாம்

said...

\\முக்கா காலுக்கு ஒரு பாவாடைய போட்டுகிட்டு தேம்ஸுக்கு பக்கத்துலதான் என் வீடுங்கர ரேஞ்சுகு அலப்பறை வுடுவாங்க\\
எப்டி தல இப்டி !!! ஜொள்ளிட்டே படிச்சேன்.. அண்ணன் ஜொள்ளுப்பாண்டி ஜொள்க!! என்றும் ஜொள்ளுடன்..

said...

பாண்டி,
உங்களை சின்ன வேலை. 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.

said...

அண்ணன் ஜொள்ளு பாண்டியின் இந்த ஆராய்ச்சிகாக டாக்டர் பட்டம் வழங்க கோரி மாபெரும் ஆர்பாட்டம் எல்லா லேடிஸ் காலேஜ் முன்பும் நடைபெறும்... டாக்டர் ஜொள்ளு பாண்டி.