Monday, July 23, 2007

தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா...
நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னாலும் சொன்னாரு நம்ம மண்டைக்குள்ள சும்மா டின் டின் டின்னு மணியடிக்குது. அதென்னாங்க தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணுண்ணா எப்படி இருப்பாங்கன்னு !! ஆஹா நாமளும் தமிழ் நாட்டுலதானே இருக்கோம் நம்ம கலாச்சார சாகுபடி என்னான்னு தெரிஞ்சுக்கலேன்னா நீயெல்லாம் வேஸ்டுடா பாண்டின்னு நம்ம சிந்தனை சுனாமியா சுழட்டி சுழட்டி அடிச்சதிலே ஆனது ஆவட்டும்னு வழக்கம் போல தமிழ் கலாசாரதோட வேட்டி கட்டிகிட்டு கலாசார வேட்டைக்கு கெளம்பலாம்னு நெனச்சா அது ( வேட்டிதாங்க ) எந்நேரமும் அவிழகூடிய அபாயம் இருப்பதால் ( முன்ன பின்ன கட்டி இருந்தா தானே ?!) சரி சரி போனா போவட்டும்னு ஜீன்ஸும் கதர் சட்டையும் போட்டுகிட்டு ஆராய்ச்சிக்கு கெளம்பிட்டான்யா பாண்டி !!!


அட ஒரிஜினல் தமிழ் காலாச்சாரம் என்னாங்க?? நாமளும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஏதாச்சும் கோயிலுகு போய் தாவணி போட்ட தீபாவளி ஏதாச்சும் தென்படுதான்னு பார்த்தா என்ன சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? மருந்துக்கு கூட ஒரு தாவணிய காணோம். ஆஹா என்னடா இது தாவணிதான் தமிழ் கலாசாரம்ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் படத்துல காட்டுனாவுளே என்ன இது? ஆராச்சும் ஒருத்தராவது கடை பிடிக்கறாங்களா? இல்லையே !!!


சரி போனா போவுது தமிழ் கலாசாரம் நல்ல தமிழாவது பேசுதான்னு பார்த்த ‘ ஸ்வாமி கேன் ஐ ஹாவ் சம் விபூதி ப்ளீஸ் ! ’ ன்னு சும்மா இங்கிலிபீஸ்ல டயானா தங்கச்சி கணக்கா பீட்டர் உட்டுட்டு பயபக்தியோட கூட நிக்குற தமிழ் பயலுவகள எல்லாம் எளக்கார ‘லுக்’ உட்டுகிட்டு இருக்குறாக !

சரி தமிழ் கலாச்சாரத்தோட நம்ம பயளுவ வேட்டிய கட்டிகிட்டு பக்தியோட சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா ஆரச்சும் ஒரு பொண்ணாவது பாகுறாவுலான்னு பார்த்தா அட அதுவும் இல்லையே. சரி பாக்காட்டி போவுது போனா போறானுக நாமதான் தமிழ் கலாசார ‘சிம்பள்’ ளான தாவணிய மறந்துட்டோம் இவனுகளாவது ஞாபகம் வச்சு வேட்டியோட வர்றானுவளேன்னு ஒரு மரியாதையோட பார்க்க வேணாம்? ‘அட இங்க பாருடி மல்லு வேட்டி மைனர் ! ‘ னு நக்கல்வுட்டு கலாய்க்குதுங்க !

நம்ம ஆளுக்கு நெம்பத்தான் ஆசைங்க. பொண்ணு ‘கலரா’ வும் இருக்கோணும் ‘கல்ச்சர்’ரோடவும் இருக்கோணுமாம்.என்ன கொடுமை சார் இது? ஆமா அப்போ நல்ல செவப்பா கலரா இருக்குற பொண்ணுகதான் தமிழ் கலாசாரத்தை தொட்டில்ல போட்டு தாலாட்டராவுளான்னு பார்த்தா அட அதுவும் இல்லீங்க துப்பட்டாவையே ‘பின்லேடி’ (பின்லேடனோட பெண்பாலுங்கோ ! ) கணக்கா மூஞ்சியில சுத்திகிட்டு பைக் பின்னாடி தெறந்த மனசோட உக்கார்துகிட்டு பாக்குறவுக ‘பைக்’குகளை எல்லாம் தொட்டில் கணக்கா தள்ளாட வைக்கிறாங்க !!

என்ன பண்ணியும் தமிழ்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு எப்படி இருக்கும்னு கண்டே புடிக்க முடியலைங்க ! ஆராச்சும் பெரிய மனசு பண்ணு தமிழ் கலாசாரத்தை பத்தி ஒரு லெக்சர் கொடுத்துடு போங்களேன் ப்ளீஸ் !!!

21 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

ஜொள்ளுப்பாண்டி பசுமை இல்லாத ஏப்ரல் மே மாதங்கள் எப்படா போகும்னு காத்துக்கிடந்து..ஜூன் ஜூலையானதும் முழுசா சுறுசுறுப்பாயாச்சு போல இருக்கு...அடடா! ஈயம் பித்தளை தகர மேட்டர் பா(ர்)ட்டிங்க ஒரு பக்கம் ரிவிட் அடிக்கப்போறாங்க.

தமிழ்க்கலாச்சாரப் பெண் என்ற ஒன்று தமிழ்நாட்டில் அட்ரஸ் இல்லாதது என்ற மாதிரி அதுபத்தி விலாவாரியா விளக்கச் சொல்லிக் கேட்டதுக்கு தமிழ்க்கலாச்சார காவலர்கள் வலையில் ஜொள்ளுப்பாண்டிக்கு "கொடும்"பாவி எதிர்ப்பு ரேஞ்சுக்கு கிளம்பி வர்றாங்க!

என்சாய் ஜொள்ளுப்பாண்டி...

தாவணி மதுரை ஏரியாவோட பேரா .."மாட்டுத்தாவணி" இன்னும் இருக்கு ஜொள்ளுப்பாண்டி!!

நம்ம கண் முன்னாடியே நடந்தேறிய/நடந்தேறும் உடைக்கலாச்சார அழிவு தாவணி!

நானெல்லாம் தினசரியா (அவுந்தே விழுந்தாலும் கவலைப்படாம)வீட்டுல வேட்டிய மடிச்சுக் கட்டுற ஆளுங்க!

டிஸ்கி: தாவணி பத்தி எனக்கு ஒரு கருத்தும் கிடையாதுங்க.. (டிஸ்கி இல்லைன்னா பித்தளையைத் தகரமாக்கி மலிவா பேரிச்சம்பழத்துக்கு கிரயம் ஆக்கிடுவாங்க :-))

ஜொள்ளுப்பாண்டி சும்மா இருக்க நினைச்சாலும் பதியும் எழுத்து சும்மா இருக்க விடாது போலிருக்கு! நல்லா இருந்தா சரிதான்! :-))

said...

ஓ நான்தான் பஷ்டா? கண்ணு பயங்கரமாய் தான் குழம்பி இருக்கே
ஐயோ பாவம்!!நீ எங்கே இருக்கே இந்த உலகத்தில தமிழ் நாடிலதான் இருக்கே?சூப்பர் ஸ்டார் படத்தை நான் பார்க்கவில்லை ஆனால் விளம்பரத்தைப் பார்த்தேன் அந்த பொண்ணு தாவானி மாத்திரம் அல்லாமல் வேற உடை எல்லாம் போடுது, இதுலருந்து என்னா
தெரியுது?
அது சரி 8 போட சொன்னது என்னாச்சு?வாலிப கிழவி சொன்னா கேட்க மாட்டிங்க,தாவானி போட்ட திபாவளி சொல்லுனும்போல
ம்ம்ம்.

said...

ஓ நான்தான் பஷ்டா?
கண்ணு பயங்கரமாய் தான் குழம்பி இருக்கே.ஐயோ பாவம்!!நீ எங்கே இருக்கே இந்த உலகத்தில தமிழ் நாடிலதான் இருக்கே?சூப்பர் ஸ்டார் படத்தை நான் பார்க்கவில்லை ஆனால் விளம்பரத்தைப் பார்த்தேன் அந்த பொண்ணு தாவானி மாத்திரம் அல்லாமல் வேற உடை எல்லாம் போடுது, இதுலருந்து என்னா தெரியுது?
அது சரி 8 போட சொன்னது என்னாச்சு?வாலிப கிழவி சொன்னா கேட்க மாட்டிங்க,தாவானி போட்ட திபாவளி சொல்லுனும்போல ம்ம்ம்..

said...

:))

said...

வாங்க ஹரி :)))))
ரொமப் நாள் ஆச்சு இல்லை?? :))) வாங்க வாங்க !!! :))

//ஜொள்ளுப்பாண்டி சும்மா இருக்க நினைச்சாலும் பதியும் எழுத்து சும்மா இருக்க விடாது போலிருக்கு! நல்லா இருந்தா சரிதான்! :-)) //

ஆஹா ஏதோ நானே இப்பவோ அப்பவோன்னு எழுதிகிட்டு இருக்கேன் இப்படி கொழுத்திப்போடுறியளே !!! :)))))))

said...

//ulagam sutrum valibi said...
ஓ நான்தான் பஷ்டா?
கண்ணு பயங்கரமாய் தான் குழம்பி இருக்கே.ஐயோ பாவம்!!நீ எங்கே இருக்கே இந்த உலகத்தில தமிழ் நாடிலதான் இருக்கே?சூப்பர் ஸ்டார் படத்தை நான் பார்க்கவில்லை ஆனால் விளம்பரத்தைப் பார்த்தேன் //

வாங்க வாங்க வாலிபியக்கா!!! :)))
உங்க அன்புக்கு நான் அடிமை !!


//அந்த பொண்ணு தாவானி மாத்திரம் அல்லாமல் வேற உடை எல்லாம் போடுது, இதுலருந்து என்னா தெரியுது?//

அட ஆமாங்க அதுதானே எனக்கு கவலையே !! :)))

//அது சரி 8 போட சொன்னது என்னாச்சு?வாலிப கிழவி சொன்னா கேட்க மாட்டிங்க,தாவானி போட்ட திபாவளி சொல்லுனும்போல ம்ம்ம்.. //

ஆஹா இப்படி கோச்சுக்கறீயளே !! கொஞ்சம் அசரிக்கையா இருந்துட்டேன் கோச்சுக்காதீங்க சரியா ?? :)))))

said...

//Anonymous said...
:)) //
வாங்க உங்களுக்கு பேர் ஒண்ணும் இல்லீங்களா?? ;)))

said...

//வாங்க உங்களுக்கு பேர் ஒண்ணும் இல்லீங்களா?? ;))) //

ஆமாம்!

said...

kalakaal paandy !! - Anu

said...

"tamil kalacharathoda 1 ponnu"
this words from rajini made jollupetayar to go for this blog,that's power of rajini making people come back with bang!rajini valga...jollupetayar your blog was good too
rajini veriyan

said...

//இன்னும் வைக்கலை said...
//வாங்க உங்களுக்கு பேர் ஒண்ணும் இல்லீங்களா?? ;))) //

ஆமாம்! //

ஹஹஹா :))) அப்படியா?? இப்படி ஒரு பேரா?? ஆச்சரியமா இருக்கே !! :)))

said...

//Anonymous said...
kalakaal paandy !! - Anu //

வாங்க அனு :))
பேட்டை பக்கம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸுங்க !!:)))

said...

ஜொள்ளப்பரே!

வாழ்க! உங்கள் தமிழ் புலமையும் வாழ்க! 'பின்லேடி' என்ன ஒரு கண்டுபிடிப்பு! பின் லேடனின் பெண்பால்... Bikeல் பின்னால் அமரும் lady. உங்கள் தமிழ் புலமை கண்டு வியந்தோம்.. மெச்சினோம். 'செந்தமிழ் ஜொள்ளன்' என்ற சிறப்பு பட்டமும் அளித்தோம்.

said...

Hi Pandi,
என் தமிழ் மோசமா இருந்தா sorry.
என் கருத்து "தாவணி கட்ட வயது வரம்பு 14-20. அதுவும் தாவணி கட்ட ஸ்ரேயா(அல்லது அவங்க கஸின் ஸிஸ்டர்) மாதிரி structure இருக்கனும்.
இது இரண்டும் இல்லாத தமிழ் girls என்ன பண்ணுறது?

said...

//Sridhar said...
ஜொள்ளப்பரே!

வாழ்க! உங்கள் தமிழ் புலமையும் வாழ்க! 'பின்லேடி' என்ன ஒரு கண்டுபிடிப்பு! பின் லேடனின் பெண்பால்... Bikeல் பின்னால் அமரும் lady. உங்கள் தமிழ் புலமை கண்டு வியந்தோம்.. மெச்சினோம். 'செந்தமிழ் ஜொள்ளன்' என்ற சிறப்பு பட்டமும் அளித்தோம்.//

வாங்க ஸ்ரீதர் :)))))
பின்லேடிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்குன்னு எனக்கே இப்பத்தான் தெரியுதுங்கண்ணா !! :)))))))
ஆஹா என இது இப்படி செந்தமிழ் ஜொள்ளன்ன்னு பட்டம் எல்லாம் கொடுத்து இப்படி புல்லரிக்க வைக்கிறீயளே!!! ஹையோ என்ன செய்வேன் இதுக்காக வாச்சும் நான் டமிழுக்கு தொண்டாற்றியே தீருவேன் !!! :)))

said...

//Premma said...
Hi Pandi,
என் தமிழ் மோசமா இருந்தா sorry.
என் கருத்து "தாவணி கட்ட வயது வரம்பு 14-20. அதுவும் தாவணி கட்ட ஸ்ரேயா(அல்லது அவங்க கஸின் ஸிஸ்டர்) மாதிரி structure இருக்கனும்.
இது இரண்டும் இல்லாத தமிழ் girls என்ன பண்ணுறது? //

வாங்க ப்ரேமா !!! :))))
அட உங்க தமிழ் நல்லாதாங்க இருக்கு !! நீங்க சொல்லற வயது வரம்பு நல்லாதான் இருக்கு. தாவணி கட்டுறதுக்கு நம்ம ஸ்ரேயா ரேஞ்சுக்கு structure தேவையில்லைங்கரது என்னுடைய தாழ்மையான கருத்துங்க. தாவணிய கட்டினாலே அழகுதாங்க !! :)))

said...

//Anonymous said...
"tamil kalacharathoda 1 ponnu"
this words from rajini made jollupetayar to go for this blog,that's power of rajini making people come back with bang!rajini valga...jollupetayar your blog was good too
rajini veriyan //

வாங்கண்ணா என்ன ஒரு ஆவேசமான தலைவர் ரசிகர் :)))) அட நானும் நம்ம சூப்பர் ஸ்டார் ரசிகன் தானுங்கோ !! ரொம்ம தேங்ஸுங்கண்ணா !! :))))

said...

hai jollllzzzz
what a research!!yar yaruko DR degree kudukarnga.
en ungalaku kuduka kudathu?hereafter u r christened as Dr.jollupondi for doing great research about girls.

said...

//Anonymous said...
hai jollllzzzz
what a research!!yar yaruko DR degree kudukarnga.
en ungalaku kuduka kudathu?hereafter u r christened as Dr.jollupondi for doing great research about girls. //

வாங்க அனானி :)))
அட இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா இன்னும் எவ்வளலோ ஆராய்ச்சிகள் எல்லாம் பாக்கி இருக்குங்க :)))) . எப்படியோ எனக்கு கொடுத்த பட்டதை வச்சு ஏதாச்சும் அனானி பிகர்களை பராமரிக்கிறா ஆசிரமத்துக்கு தொண்டாற்றலாம்னு இருக்கேன் போதுங்களா?? ;)))))))))

said...

உங்களுக்கு ஒரு சின்ன வேலை. எட்டு போட அழைப்பு விடுத்துள்ளேன்.

http://kalavaani.blogspot.com/2007/07/blog-post.html

said...

This very valuable message