Tuesday, July 31, 2007

காதல் காவடி
நம்ம பய ஒருத்தன் கொஞ்ச நாளா சரியே இல்லங்க. நல்லா கல கலன்னு சிரிச்சுகிட்டே ஜோக் அடிச்சுகிட்டு பாக்குறவுகளையெல்லாம் கதறக் கதற ஓட்டிகிட்டு சும்மாகோயில் காளை கணக்கா துள்ளிகிட்டு சுத்திகிட்டு இருந்த பய இப்போ எல்லாம் ஏதோ மசக்கை வந்த பொண்ணு கணக்கா மூலையிலே போய் ஒக்கார்ந்துகிட்டு முகம் கொடுத்து பேசாம எங்கினயாச்சும் மூலையிலே போய் பதுங்கிகிட்டு மோட்டுவளைய பார்த்துகிட்டு இருக்குறான். ‘அட பாவி பயபுள்ள என்ன ஆச்சுடா உனக்கு?’ ன்னு ஒருநாளு பயலுக்கு வேப்பிலை அடிச்சு கேட்டப்போ பய மொகத்துல அப்படி ஒரு வெக்கம் !! டேய் நான் கூட சொல்லிகிட்டு இருப்பேன்ல என் ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க ப்ராஜெக்ட் பண்ணுதுங்கன்னு?? அதுல ஒரு பொண்ணுமேல எனக்கு ... என்னான்னு சொல்லத் தெரியலை ஆனா ஒரு மாதிரி பீலிங் ! ‘ ன்னு சொல்ல சொல்லவே அப்படியே ட்ரீம் அடிக்கிறான்.அடப்பாவிப்பயபுள்ள ! அதுதானா இது ?!! ன்னு நெனச்சுகிட்டு ‘டேய் என்ன இப்படி லேசா சூடம் காட்டிட்டு போய்ட்டா என்ன அர்த்தம் ? கொஞ்சம் வெளக்கமா சொல்லு ராசான்னு! ‘ பயலுக்கு லேசா விபூதியடிசு வுட்டு கேட்டேன். இந்தமாதிரி மேட்டரெல்லாம் தான் நமக்கு அல்வா சாப்புடற மாதிரி ஆச்சே !! ‘ டேய் பாண்டி அந்த பொண்ணுக என் கம்பெனியிலே ப்ராஜெக்ட் பண்ண வந்துதுங்க அதுகளுக்கு நானும் இன்னொரு பையனும்தான் ‘கைட்’ பண்ணறோம். ரெண்டுமே என்கிட்ட நல்லாதான் பேசுது. நான் எதைய சொன்னாலும் பெரிய ஜோக் கேட்ட கணக்கா வுழுந்து வுழுந்து சிரிக்குதுக. அப்படி சிரிக்குறப்போ அவ ஒரு பார்வை பார்ப்பா பாரு அதையப்பபார்த்து நான் வுழுந்துடேண்டா!! “ பயலுக்கு சும்மா காதல் பீலிங் ரெண்டு காலுலையும் சலங்கையக் கட்டிகிட்டு கன்னாபின்னான்னு ஆடுறது கண்ணுல தெரியுது !‘சரி சரி அதான் ரெண்டு பேர் அதுகளுக்கு சொல்லிகொடுக்கறீங்களே உன்னையதான் பார்க்குதுன்னு எப்படிடா சொல்லுறே?’ ன்னு கேட்டதுக்கு ‘அட மாப்ளே அவன் சரியான சொம்புடா! வாயே தொறக்க மாட்டான் என்னமோ இவந்தான் பில்கேட்ஸுக்கே கோடிங் குரு மாதிரி எப்பபாரு கோடிங் தான்.எப்ப அதுககிட்ட பேசுனாலும் சப்ஜெக்ட்டு மட்டும் தான். அவனை வுடுடா. என்னைய மாதிரியே அவளுக்கு இப்படி பீலிங்ஸ் வந்து இருக்கான்னு எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன்!’ ன்னு பய கட்டபொம்மு கணக்கா டயலாக் வுட்டுட்டு கெளம்பிட்டான் !

பய அதுக்கபுறம் பாக்கணுமே! டெய்லி ஆபீஸுக்கு பேஷன் பேரேட் தான்! வாயிலே விசில்தான்! பய கால் தரையிலயே படரது இல்லை ! ‘ஏண்டா இந்த ஞாயித்துக்கெழமை லஞ்சுக்கு ஏதாச்சும் பஃபே போலாமா?’ ன்னு கேட்டா ‘ சாரி மாப்ளே என் ப்ராஜெக்ட் மேட்ஸோட லஞ்சுக்கு அப்பாய்ண்மெண்ட் பிக்ஸ் ஆய்டுச்சு கோச்சுகாதடா! ன்னு சொல்லிட்டு பிளிறிகிட்டு ஓடுறான் ! அடப்பாவி இப்படி ஒருத்திக்காக இருக்கறவனுகளை எல்லாம் அத்துவுட்டுட்டு போறியேடான்னு நெனச்சாலும் சரி நம்ம பய எஞ்ஜாய் பண்ணட்டும் மனசு என்னவோ வாழ்த்திகிட்டு தான் இருந்துச்சு. ஒரு பயலோட மனசு இன்னோரு பயலுக்குதானே தெரியும் ?? !!!

இப்படியே பயலோட வண்டி டாப் கியர்ல ஒரு ரெண்டு மாசத்துக்கு ஓடிகிட்டு இருந்துச்சு. ஒரு ரெண்டு நாளா பயகிட்டே இருந்து மூச்சு பேச்சையே காணோம். ‘என்னடா கண்ணா சும்மா கொம்பு சீவுன சிம்பு கணக்கா வர்றவன் போறவனையெல்லாம் சும்மா பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு இருந்தே? இப்போ என்னடான்ன டி ராஜேந்தர் கணக்கா தாடியோட சீன் போடுறே என்ன விசயம் ? ன்னு கேட்டதுதான் பய கண்ணுல இருந்து சும்மா குத்தால அருவி கணக்கா லிட்டர் லிட்டரா கண்ணீர் !!! அட பாவி என்னடா ஆச்சும் சொல்லித்தொலைன்னு கேட்டா ‘ மாப்ளே நாளு நாளைக்கு முன்னால அவகிட்டே என் மனசை தொறந்துட்டேண்டா ! அவ முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட பரவாயில்லை! ஆனா அவ அந்த கோடிங் கோயானை விரும்பரதா சொல்லீட்டாடா என்னால தாங்க முடியலைடா ! பய பாரேன் எப்பவுமே ஏதோ கோடிங் எழுதர மாதிரியே ‘சீனை’போட்டுகிட்டு இருந்துட்டு ‘கேப்’புல கெடா வெட்டீட்டாண்டா ! ஏண்டி எங்கூட தானே சிரிச்சு சிரிச்சு பேசுனே அவன்ந்தான் சரியான உம்மணாமூஞ்சின்னு சொல்லுவியேடின்னு கேட்டா அவர் அப்படி இல்லைடான்னு எவ்ளோ funny தெரியுமா ? ன்னு சொல்லறாடா !! பாருடா அந்த நாயி ‘அவர்’ ஆய்ட்டாரு. அந்தப் பன்னி என்ன fun பண்ணிக் கவுத்தானோ ? இதைய கூட தாங்கிடேண்டா! ஆனா கடைசியா சொல்லறா 'டேய் உன்னைய பார்த்தா செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கே'ன்னு சொன்னா பாரு! அதுக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியலைடா !!! “

நீங்க சொல்லற மொக்கை ஜோக்குக்கெல்லாம் சும்மா கெக்கேபிக்கேன்னு இந்த பொண்ணுங்க சிரிக்குதுன்னு அதுக பின்னாடி காதல் காவடி எடுத்துகிட்டு போய்டாதீங்க மக்களே!! உங்கள ஒரு வடிவேலு அண்ணன் மாதிரியோ இல்லை விவேக் தம்பி மாதிரியோ நெனச்சு இருக்கலாம் யாரு கண்டா ? அப்படியே எப்ப பாரு மானிடரையே மொறைச்சு மொறைச்சு பார்த்துகிட்டு ‘பப்பரக்கா’னு பேக்கு மாதிரி சீன் போட்டுகிட்டு பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக ! பார்த்து சூதானமா ‘லவ்’வுங்கப்பூ !!

27 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

//அந்த கோடிங் கோயானை //

நீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...

அருமை ... குட் கத ...

said...

// சுந்தர் / Sundar said...
//அந்த கோடிங் கோயானை //

நீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...

அருமை ... குட் கத ... //

வாங்கண்ணா சுந்தர் :)))
அட பாவிகளா இப்படி கதை சொலறவனுகே இப்படி ரிவிட் அடிச்சா எப்படீங்க ??;))))))

said...

what pondy
niraya experience irukum pola?
unmaila unga friend story aa?i dont beleive this.
might be yours!!!
any way all the best pondy.
better luck next time!!!!!
next time u should be a serious coding guru.

said...

//Anonymous said...
what pondy
niraya experience irukum pola?
unmaila unga friend story aa?i dont beleive this.
might be yours!!!
any way all the best pondy.
better luck next time!!!!!
next time u should be a serious coding guru. //

வாங்க அனானி :)))
அட இப்படி எனக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனும்னு இல்லீங்க என்ன இது கலாட்டா? என்னோட எல்லாதனியும் தான் ஏற்கனவே எழுதிட்டேனே !!
நானா கோடிங் குருவா?? ஆராச்சும் ஒரு அம்மாயி கோடிங் சொல்லிகொடுத்தாதான் உண்டுங்க ;)))))

said...

dont worry jollu, i will teach u how to code, coding mattundan.
pickup lam ungaloda own risk dan.

said...

//Anonymous said...
dont worry jollu, i will teach u how to code, coding mattundan.
pickup lam ungaloda own risk dan.//

அட நீங்க அம்மாயிதானா?? :))))) ஹையா எனக்கு கோடிங் எனக்கு கோடிங் குரு கெடச்சாசு !! :))))

said...

ok sishya!jollu pondy calendar la oru nalla kanni rasi nala parthu we will start our coding class. ok?

said...

//Anonymous said...
ok sishya!jollu pondy calendar la oru nalla kanni rasi nala parthu we will start our coding class. ok? //

ஆஹா நான் சிஷ்யனா ?? எனக்கேவா?? :))) சரி போய்ய் தொலையது !! சரி சரி காலண்டரை எடுத்து பார்கறேன். கூட படிக்க ஆராச்சும் அம்மாயி ஒஸ்த்தாரா குருஜி ??;)))))

said...

//பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக ! //

!???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

said...

//நீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...//

Enakku Kooda Antha Santhegam Undu!

said...

what jollu always looking or searching for girlzzzzzzzzzz aaa?
more kutties are coming but in the age of 40's and 30's.bcoz to teach u in depth in coding!!!
be ready!!!!!ok.

said...

// நாமக்கல் சிபி said...
//பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக ! //

!??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? //

hahahahahah தல அட நீங்களும் கண்ணாடியோட இருக்கறத மறந்துடேனே தல !!!:))))) அட நீங்க எல்லாம் பேண்ட் போட்ட ராமன்னுதான் இந்த உலகத்துக்கே தெரியுமே !!:)))))

said...

// நாமக்கல் சிபி said...
//நீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...//

Enakku Kooda Antha Santhegam Undu! //

இப்படியெல்லாம் சந்தேகம் உண்டு இல்லைன்னு என்ன பாப்பையா கூட்டிகிட்டு வந்து படிமன்றம் வைப்பீங்க போல இருக்கே தல !! :))))))

said...

//Anonymous said...
what jollu always looking or searching for girlzzzzzzzzzz aaa?
more kutties are coming but in the age of 40's and 30's.bcoz to teach u in depth in coding!!!
be ready!!!!!ok. //

வாங்க அனானி !!
என்னாஇப்படி கேட்டுப்புட்டீக?? ஜொள்ளுப்பாண்டின்னு நம்ம பேரைக் கேட்டாலே தெரிய வேணாம்?? பின்ன எதுக்கு இப்படி பேரை வச்சுகிட்டு எழுதிகிட்டு இருக்கோம் ??

அட நமக்கு குருபக்தி ஜாஸ்திங்க. கூட படிக்கறவுக இருக்கராங்கல்ல?? ஹிஹிஹிஹி :))))))

said...

ஜொள்ளுக ஜொள்ளிர் பயனுடய ஜொள்ளர்க சப்பை ஃபிகர்க்கு. BE SELECTIVE.

SIVA MANGALORE

said...

Anonymous said...
ஜொள்ளுக ஜொள்ளிர் பயனுடய ஜொள்ளர்க சப்பை ஃபிகர்க்கு. BE SELECTIVE.

SIVA MANGALORE
வாங்க சிவா :))))))))))
அட அட அட என்னாமா ஒரு குறள் விட்டுருக்கீங்க !!! :))))

said...

ஜொள்ளித்திரிவது ஜொள்ளர்க்கு அழகு.
ஒளவைப் பாட்டி
அன்னிக்கே சொல்லிருக்காங்க..

நீங்க நடத்துங்க ...!

K.Balu

said...

வாய்யா கருத்து கந்தசாமி. புதுசா இருக்கே இந்த மேட்டரு. ஊமைக் குசும்பு ஊரைக் கெடுக்குமாம்.

said...

எப்பிடிய்யா இப்பிடி உண்மையெல்லம் புட்டு புட்டு வக்கிரீங்க?முடியல....

said...

//மடல்காரன் said...
ஜொள்ளித்திரிவது ஜொள்ளர்க்கு அழகு.
ஒளவைப் பாட்டி
அன்னிக்கே சொல்லிருக்காங்க..

நீங்க நடத்துங்க ...!

K.Balu //

வாங்கப்பூ பாலு :)))))
நம்ம ஒளவைப்பாட்டி இப்படியெல்லாம் பிட்டைப்போட்டிருக்காகளா ?? ;)))) சொல்லவேயில்லை?? !!! நீங்களும் வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க பாலு !!!

said...

// ILA(a)இளா said...
வாய்யா கருத்து கந்தசாமி. புதுசா இருக்கே இந்த மேட்டரு. ஊமைக் குசும்பு ஊரைக் கெடுக்குமாம். //

வாங்க இளா :))))
அட நானாங்க கருத்து கந்த சாமி??!! ஜொள்ளுபாண்டின்னு அழகான பேரு இருக்குறப்போ என்ன இது புது ப்பேரு ??:)))))) ஆமா ஊமைகுசும்பு ஆருங்க ?? ;)))))

said...

ஜொள்ளுவதெல்லாம ஜொள்லல்ல
பாண்டி ஜொள்ளுவதே ஜொள்

said...

Four Ants are moving through a forest.
They see an ELEPHANT coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.

இது பபா சங்கத்தையோ அல்லது பீபா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவா

said...

நல்லா இருந்தது உங்கள் அனுபவம் (நீங்க இல்லனு சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்)! இனியாவது அந்த funny guy மாதிரி இருக்காம கோடிங்காரன் மாதிரி இருங்க....

said...

//ulagam sutrum valibi said...
ஜொள்ளுவதெல்லாம ஜொள்லல்ல
பாண்டி ஜொள்ளுவதே ஜொள் //

வாங்க வாங்க வாலிபியக்கா :)))) எப்படிக்கா இப்பட்யெல்லாம்?? தன்யனனேன் !! :))))

said...

//mglrssr said...
Four Ants are moving through a forest.
They see an ELEPHANT coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.

இது பபா சங்கத்தையோ அல்லது பீபா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவா //

வாங்க சிவாண்ணா:))) அட ஏங்க சும்மாவே இருக்க முடியாதா ??;))))

said...

//Appaavi said...
நல்லா இருந்தது உங்கள் அனுபவம் (நீங்க இல்லனு சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்)! இனியாவது அந்த funny guy மாதிரி இருக்காம கோடிங்காரன் மாதிரி இருங்க.... //

வாங்க அப்பாவி :))) நீங்க நெசமாவே அபாவிங்களாண்ணா?? :)))) சரி நீங்க சொலற மாதிரியும் 'பிட்' டை ஓட வேண்டியதுதான் :))))