Wednesday, August 29, 2007

‘ஜில்’ ‘ஜில்’ ‘ஃபிகர்’ தண்டா....

லேசா குல்பி ஐஸ் flavourla அப்படியே ரெண்டு டேபிள்ஸ்பூன் சேமியாவைப் போட்டு அப்படியே ரெண்டு கலக்கு கலக்கி ஒரு 300 மிலி நீளமான டம்ளர்ல கொடுக்குற குஜாலக்கடி சரக்குதாங்க ஜிகர்தண்டா !! சரக்குன்னு சொன்ன உடனே ஏதோ டாஸ்மாக்குல விக்குற ஜில் ஜில் பீருன்னு நெனச்சுடாதீங்கப்பூ !! இது பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும் சப்புக்கொட்டி சாப்புடுற சூப்பரான பானம், மதுரையோட அக்மார்க் இந்த ஜிகர்தண்டா. சாப்ட்டு இருக்கீயளா?? மதுரை போய்ட்டு ஜிகர்தண்டா சாப்பிடாம வந்துடாதீங்கப்பூ !!

ஆஹா ஜிகர்தண்டா அவ்ளோ சூப்பரா இருக்குமா?? நான் இதுவரை சாப்டதே இல்லையேன்னு கவலைப்படுறவுகளுக்கு ஜிகர்தண்டாவை நான் இப்போதைக்கு கொடுக்க முடியாட்டியும் சாப்டா எப்படி மனசு ஜில் ஜில்லுன்னு குஜாலா இருக்கும்னு உணரனும்னா இங்க இருக்குர ஓமணகுட்டிகளோட சந்தோசமான இந்த ‘போஸ்’ களைப்பாருங்க மக்கா!!

ஓணதுக்கு எதுக்குடா சென்னையிலே லீவு வுடாங்கன்னு மண்டையப்பிச்சுகிட்டு அலைஞ்சப்போதான் தெரிஞ்சுது ஆஹா நம்ம சேர நாட்டிளம் பெண்களைப்பத்தி முண்டாசு கட்டிகிட்டு ஏண்டா நம்ம பாரதியார் அப்போவே தீர்க்கதரிசனமா பாடுனாருன்னு ?!!! இவுக எல்லாம் இல்லாட்டி நம்ம தமிழ் சினிமா என்ன ஆகும்னு நெனச்சுப்பாகவே முடியலையே !!

Thursday, August 16, 2007

Tamil பட்டறை

கலைஞர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதறார் சுஜாதா திருக்குறலுக்கு உரை எழுதறார் ஆனால் கொஞ்சம் நாளா நீயும் தமிழ்ல எழுதிகிட்டு இருக்கே ஜொள்ளுப்பாண்டி இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு என்ன தொண்டாற்றினாய்? அவங்க ரேஞ்சுக்கு நீ தொண்டு கன்னா பின்னானு ஆத்தாட்டியும் அட்லீஸ்ட் உன் ரேஞ்சுக்கு ஏதாச்சும் தமிழுக்கு தொண்டாற்றுடா திடீர்னு ஒருநாள் நம்ம மனசாட்சி என்னைய போட்டு உலுக்குன உலுக்குல சரி போனா போவுது தமிழ் கொஞ்சம் அதுக்கும் தான் தொண்டாற்றிவிட்டு போகலாமேன்னு நெனச்சி இந்தப் பணியை ஆரம்பிக்கிறேன் . ஏதோ பெரியவங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மாலான ரேஞ்சுக்கு எழுதறேன் கோச்சுக்காதீங்க !!

நம்ம வாசகி ஒருத்தாங்க ஏண்டா பாண்டி நீ எழுதர இதெல்லாம் தமிழ் தானா?? அர்த்தத்தை தேடி கூகுள்ல இருந்து குண்டலகேசி வரைக்கும் தேடித் தேடி அலுத்துப்போய்ட்டேண்டான்னு நாக்குமேல பல்லுப்போட்டு கேட்டுப்புடாங்க. இதனால் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் நாட்டுல இல்லாமல் மலேசியா சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பாவிலும் இன்னும் அமேரிக்காவின் பல பகுதிகளிலும் சிந்தியும் சிதறாமல் இருக்கும் கோடானு கோடி தமிழ் மக்களுக்கு இத்தகைய வழங்குதமிழ் (இள-வட்டாரத்தமிழ்) வார்த்தைகள் தெரியாவிட்டால் நாளைய தலைமுறை என்னை மன்னிக்காது என்ற ஒரே காரணத்தால் இந்தப் பணியை பெருந்தன்மையோடு என் தோள்களில் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அது தமிழ் மீது எனக்கு உள்ள பெரும் காதலால் தான் என்பது நீங்க அறியாதது அல்ல ! (யாருங்க அது தமிழ் எந்தப்பொண்ணோட பேருன்னு கேக்குறது? பிச்சுப்புப்புடுவேன்! பிச்சு) . சரிடா ரொம்ம மொக்கையப்போடத மேட்டருக்கு வான்னு நீங்க எல்லாம் கதர்றது கேக்குது வர்றேன் வர்றேன்.

ஜொள்ளகராதி

மப்பு - ( உச்சரிப்பு :- [ ம-bb- பு] ) போதை.

வழக்கமா ரெண்டு பீரை உள்ள உட்டுகிட்டா வரும் இல்லாட்டி ஏதாச்சும் ஒரு அழகான பொண்ணை நீங்க பார்த்தாலோ இல்லை அந்தப்பொண்ணு தெரியாத்தனமா உங்களைப் பார்த்தாலோ கூட வரும்.சரி இப்போ இந்த வார்த்தையை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம்ன்னு இப்போ பார்க்கலாமா??

எடுத்துகாட்டு :-

“ டேய் மாப்ளே ரெண்டு ரவுண்டுக்கே இப்படி மப்பாகி போச்சேடா !!”
“ என்னடா இன்னும் கூட மப்பு தெளியலையா? “
“ மாப்ளே அவ என்னய பார்த்தாலே மப்பாகி போகுதுடா ! “


மப்பும் மந்தாரமும் - மேகமூட்டம்.

பொதுவா வானம் மேகமூட்டதோட மழைவர்றதுக்கு முன்னாடி அப்படியே லேசா ஜில்லுன்னு காத்தடிச்சுகிட்டு ரொமான்ஸ் மூட் க்ரியேட் பண்ணுமே அதுதாங்க இது ! ஆனா தெந்தமிழ் நாட்டிலே வயசுக்கு வந்த பசங்க எல்லாம் இதையே ஸ்லைட்டா கொஞ்சம் modify பண்ணி கோக்கு மாக்கான பிகர்களைப் பார்த்தா லேசா உயர்வு நவிர்ச்சி அணிய கலந்து பீளிங்ஸ்சோட பிதற்றுற வார்தை தாங்க இது.

எடுத்துக்காட்டு :-தமிழறிஞர் :- என்ன இது வானம் மப்பும் மந்தாரமுமா இருக்கே ? மழை வருமா ?

தமிழிளைஞர் :- “ டேய் யார்றா மாப்ளே அது மப்பும் மந்தாரமுமா நம்ம ஏரியாவுல உலா வர்ற இவ யாரு ?!? “


போங்கு - (உச்சரிப்பு :- [ Bo-ங்-gu ] ) தேறாத , பொய்யான .

இந்த போங்கு என்ற வார்த்தை தமிழ் தானா என்ற சர்சை இரண்டாம் நூற்றாண்டிலேயே காளமேகப்புலவரால் சோழமன்னனின் அவையிலே எழுப்பபட்டடாத வரலாற்றுக்கல்வெட்டுகள் தெரிவித்தாலும் தமிழ் இளைஞர் பட்டாளம் புதிய வரலாற்றை படைக்க வீருகொண்டு எழுந்து மானாவாரியாக உபயோகிக்கும் வார்த்தைதான் இந்த போங்கு என்றால் அது மிகையல்ல !

எடுத்துக்காட்டு :-

“ விடுடி அவன் ஒரு சரியான போங்கு பய ! “
“ ஏண்டா இந்த போங்கு பிகருக்குத்தான் இத்தனை பில்டப் கொடுத்தியா ? “


என்ன இப்போதைக்கு இந்த மூணு வார்தைய கத்துகிட்டு தமிழ் புலமைய ரெண்டு இன்ச் வளர்த்து இருப்பீங்களே !! இந்த வாரம் இது போதும் . உங்களுக்கு தெரியாத புரிபடாத தமிழ் வார்த்தைகளுக்கு இதே மாதிரி அர்த்தத்தை தேடி கண்டுபிடிக்க தொல்காப்பியத்தோட பேட்டையில காத்துகிட்டு இருக்கேன் மக்களே ! ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க என்ன ?