Thursday, August 16, 2007

Tamil பட்டறை

கலைஞர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதறார் சுஜாதா திருக்குறலுக்கு உரை எழுதறார் ஆனால் கொஞ்சம் நாளா நீயும் தமிழ்ல எழுதிகிட்டு இருக்கே ஜொள்ளுப்பாண்டி இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு என்ன தொண்டாற்றினாய்? அவங்க ரேஞ்சுக்கு நீ தொண்டு கன்னா பின்னானு ஆத்தாட்டியும் அட்லீஸ்ட் உன் ரேஞ்சுக்கு ஏதாச்சும் தமிழுக்கு தொண்டாற்றுடா திடீர்னு ஒருநாள் நம்ம மனசாட்சி என்னைய போட்டு உலுக்குன உலுக்குல சரி போனா போவுது தமிழ் கொஞ்சம் அதுக்கும் தான் தொண்டாற்றிவிட்டு போகலாமேன்னு நெனச்சி இந்தப் பணியை ஆரம்பிக்கிறேன் . ஏதோ பெரியவங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மாலான ரேஞ்சுக்கு எழுதறேன் கோச்சுக்காதீங்க !!

நம்ம வாசகி ஒருத்தாங்க ஏண்டா பாண்டி நீ எழுதர இதெல்லாம் தமிழ் தானா?? அர்த்தத்தை தேடி கூகுள்ல இருந்து குண்டலகேசி வரைக்கும் தேடித் தேடி அலுத்துப்போய்ட்டேண்டான்னு நாக்குமேல பல்லுப்போட்டு கேட்டுப்புடாங்க. இதனால் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் நாட்டுல இல்லாமல் மலேசியா சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பாவிலும் இன்னும் அமேரிக்காவின் பல பகுதிகளிலும் சிந்தியும் சிதறாமல் இருக்கும் கோடானு கோடி தமிழ் மக்களுக்கு இத்தகைய வழங்குதமிழ் (இள-வட்டாரத்தமிழ்) வார்த்தைகள் தெரியாவிட்டால் நாளைய தலைமுறை என்னை மன்னிக்காது என்ற ஒரே காரணத்தால் இந்தப் பணியை பெருந்தன்மையோடு என் தோள்களில் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அது தமிழ் மீது எனக்கு உள்ள பெரும் காதலால் தான் என்பது நீங்க அறியாதது அல்ல ! (யாருங்க அது தமிழ் எந்தப்பொண்ணோட பேருன்னு கேக்குறது? பிச்சுப்புப்புடுவேன்! பிச்சு) . சரிடா ரொம்ம மொக்கையப்போடத மேட்டருக்கு வான்னு நீங்க எல்லாம் கதர்றது கேக்குது வர்றேன் வர்றேன்.

ஜொள்ளகராதி

மப்பு - ( உச்சரிப்பு :- [ ம-bb- பு] ) போதை.

வழக்கமா ரெண்டு பீரை உள்ள உட்டுகிட்டா வரும் இல்லாட்டி ஏதாச்சும் ஒரு அழகான பொண்ணை நீங்க பார்த்தாலோ இல்லை அந்தப்பொண்ணு தெரியாத்தனமா உங்களைப் பார்த்தாலோ கூட வரும்.சரி இப்போ இந்த வார்த்தையை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம்ன்னு இப்போ பார்க்கலாமா??

எடுத்துகாட்டு :-

“ டேய் மாப்ளே ரெண்டு ரவுண்டுக்கே இப்படி மப்பாகி போச்சேடா !!”
“ என்னடா இன்னும் கூட மப்பு தெளியலையா? “
“ மாப்ளே அவ என்னய பார்த்தாலே மப்பாகி போகுதுடா ! “


மப்பும் மந்தாரமும் - மேகமூட்டம்.

பொதுவா வானம் மேகமூட்டதோட மழைவர்றதுக்கு முன்னாடி அப்படியே லேசா ஜில்லுன்னு காத்தடிச்சுகிட்டு ரொமான்ஸ் மூட் க்ரியேட் பண்ணுமே அதுதாங்க இது ! ஆனா தெந்தமிழ் நாட்டிலே வயசுக்கு வந்த பசங்க எல்லாம் இதையே ஸ்லைட்டா கொஞ்சம் modify பண்ணி கோக்கு மாக்கான பிகர்களைப் பார்த்தா லேசா உயர்வு நவிர்ச்சி அணிய கலந்து பீளிங்ஸ்சோட பிதற்றுற வார்தை தாங்க இது.

எடுத்துக்காட்டு :-தமிழறிஞர் :- என்ன இது வானம் மப்பும் மந்தாரமுமா இருக்கே ? மழை வருமா ?

தமிழிளைஞர் :- “ டேய் யார்றா மாப்ளே அது மப்பும் மந்தாரமுமா நம்ம ஏரியாவுல உலா வர்ற இவ யாரு ?!? “


போங்கு - (உச்சரிப்பு :- [ Bo-ங்-gu ] ) தேறாத , பொய்யான .

இந்த போங்கு என்ற வார்த்தை தமிழ் தானா என்ற சர்சை இரண்டாம் நூற்றாண்டிலேயே காளமேகப்புலவரால் சோழமன்னனின் அவையிலே எழுப்பபட்டடாத வரலாற்றுக்கல்வெட்டுகள் தெரிவித்தாலும் தமிழ் இளைஞர் பட்டாளம் புதிய வரலாற்றை படைக்க வீருகொண்டு எழுந்து மானாவாரியாக உபயோகிக்கும் வார்த்தைதான் இந்த போங்கு என்றால் அது மிகையல்ல !

எடுத்துக்காட்டு :-

“ விடுடி அவன் ஒரு சரியான போங்கு பய ! “
“ ஏண்டா இந்த போங்கு பிகருக்குத்தான் இத்தனை பில்டப் கொடுத்தியா ? “


என்ன இப்போதைக்கு இந்த மூணு வார்தைய கத்துகிட்டு தமிழ் புலமைய ரெண்டு இன்ச் வளர்த்து இருப்பீங்களே !! இந்த வாரம் இது போதும் . உங்களுக்கு தெரியாத புரிபடாத தமிழ் வார்த்தைகளுக்கு இதே மாதிரி அர்த்தத்தை தேடி கண்டுபிடிக்க தொல்காப்பியத்தோட பேட்டையில காத்துகிட்டு இருக்கேன் மக்களே ! ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க என்ன ?

28 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:

said...

எங்க தல அடிக்கடி ங்கொய்யாலே, அப்படிங்கரார். அதற்கும் கொஞ்சம் வெளக்கம் குடுங்களேன்.

said...

உங்கள் சேவை ... Tamil பட்டறைக்கு தேவை .

ரும் போட்டு யோசிப்பாங்கலோ ... !

said...

//திருக்குரலுக்கு உரை எழுதறார்//
"திருக்குரலுக்கு" இல்லைங்க, "திருக்குறளுக்கு"...

said...

ஜொள்ளுப்பாண்டி,

திருக்குரல்ன்னு போங்குத்தனமா குரல்விட்டதுக்கு 1330 குறளையும் இம்போஸிசன் எழுதக்கடவது! காமத்துப்பால் அதிகாரங்களில் இருந்து ஆரம்பிச்சா இம்போஸிசன் கடினமாக இருக்காது:-))

தலைவன் தலைவி ஸ்பெஷல் பசலை நோய் தாக்கக் கடவது :-))

said...

பாண்டி!
எனக்கு ஒரு சந்தேகம் நைனா? உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா? ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன்? மனுசனுக்கு அடுத்த படியா ஜொள்ளுல முதல்ல நிக்கிறது சிம்பான்சின்னு எதனா உன்னோட ஆராய்ச்சி கீராய்ச்சி சொல்லுதா?
:)

said...

//பா. க. ச. தொண்டன் said...
எங்க தல அடிக்கடி ங்கொய்யாலே, அப்படிங்கரார். அதற்கும் கொஞ்சம் வெளக்கம் குடுங்களேன். //

வாங்கப்பூ தொண்டரே !! :))
வெளகம் தானே கொடுத்துடுவோம் !!

ங்கொய்யாலே
- கொய்யா இலை
கொய்யாவின் இலை எனலாம் இல்லை என்றால் கொய்யாத இலை
( பறிக்காத இலை ) எனவும் கொளலாம். அதாவது ' கைப்படாத CD' 'ஆளான தாமரை' போன்ற அர்த்தங்கள் செந்தமிழில் வருகின்றன என்றால் தல எவ்வளவு அர்த்தங்களை உள்ளடக்கி அனைவரையும் 'புத்தம் புதிய ஆத்மா' என உயர்வு நவிர்ச்சியில் விளிக்கிறார் பாருங்கள் !!! :)))

said...

//சுந்தர் / Sundar said...
உங்கள் சேவை ... Tamil பட்டறைக்கு தேவை .

ரும் போட்டு யோசிப்பாங்கலோ ...//

வாங்க சுந்தர் வாங்க ;)))))
இப்படி பொதுச்சேவை செய்யறதுன்னாதான் நமக்கு ரொம்ப புடிக்குமே !! நீங்களும் ஜாயின் பண்ணிக்குங்கண்னா !! :)))))))

said...

//ஜெகதீசன் said...
//திருக்குரலுக்கு உரை எழுதறார்//
"திருக்குரலுக்கு" இல்லைங்க, "திருக்குறளுக்கு"... //

வாங்க ஜெகதீசன் :))))
அட ஆமாங்க எழுதி முடிச்சுட்டு படிசு பார்த்தப்பவே திருக்குரல்ல எங்கினியோ இடிகுதேன்னு நானும் மூளையக்கசக்கி யோசிச்சேன் ஆனா கண்டேபுடிக்க முடியலை. திருக்குறள் ன்னு திருத்தீட்டங்க !!! இப்படி ஏதாச்சு குறில் நெடில் பிரசனையெல்லாம் நம்ம வாழ்கையிலே பலதடவை வெளையாடி இருக்குங்க என்ன பண்றது ??:(((((

said...

Hariharan # 03985177737685368452 said...
ஜொள்ளுப்பாண்டி,

//திருக்குரல்ன்னு போங்குத்தனமா குரல்விட்டதுக்கு 1330 குறளையும் இம்போஸிசன் எழுதக்கடவது! காமத்துப்பால் அதிகாரங்களில் இருந்து ஆரம்பிச்சா இம்போஸிசன் கடினமாக இருக்காது:-))

தலைவன் தலைவி ஸ்பெஷல் பசலை நோய் தாக்கக் கடவது :-)) //

வாங்க ஹரிஹரன் :)))))))))
ஹையா இவ்ளோ ஜாலியான குஜாலான தண்டனையா?? எங்க குறள் எங்க குறள் ?? ;)))))
கொஞ்சம் கீ ஸ்ரோக்கு ஸ்லிப் ஆயிடுச்சு !! இப்படி ஆளாளுக்கு நம்மளை பிண்ணி பெடல் எடுத்தா எப்படி??;))))))

said...

//கைப்புள்ள said...
பாண்டி!
எனக்கு ஒரு சந்தேகம் நைனா? உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா? ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன்? மனுசனுக்கு அடுத்த படியா ஜொள்ளுல முதல்ல நிக்கிறது சிம்பான்சின்னு எதனா உன்னோட ஆராய்ச்சி கீராய்ச்சி சொல்லுதா?//

ஆஹா தல வாங்க வாங்க :)))
எம்பூட்டு நாள் ஆச்சு நீங்க நம்ம பேட்டைபக்கம் ஒதுங்கி !! :))))

தல அது சிம்பன்சின்னு நீங்க சொல்லிதான் தெரியும்!! எனக்கு அது கொரங்குதாங்க. மனுசனோட மனசே ஒரு கொரங்குதானே?? ;)))) அதான் சிம்பாளிக்கா கெடச்ச சிம்பன்சிய போட்டேன் !!! :)))) மத்தபடி ஆராய்ச்சி ஏதும் இல்லீங்க தல !!;)))) இருந்தா தேடிப்பார்து சொல்லுறேன் என்ன??;)))))

said...

அடங்கொய்யாலே என்பது ஒரு கெட்டவார்த்தை , விளக்கம் சொன்னால் பதிவு நாறிடும் மி எஸ்கேப் :-))

said...

மப்பா இருக்கிற நேரத்துல மப்பும் மந்தாரமா ஒரு ஜிகிடி நம்மை கிராஸ் பண்ணினா, நம்ம கூட்டாளி போங்காட்டம் ஆட ஆரம்பிச்சுடறாங்க.

ஹை, கிளாஸ் சூப்பர், எப்படி நம்ம புரிதல்?

said...

//வவ்வால் said...
அடங்கொய்யாலே என்பது ஒரு கெட்டவார்த்தை , விளக்கம் சொன்னால் பதிவு நாறிடும் மி எஸ்கேப் :-))//

வாங்கண்ணா வவ்வாலு :)))
என்ன இப்படி தப்பா பேசுறீய ?? அதன் நாங்க டீசன்ட்டான வெளக்கத்தை அள்ளிதெளிச்சிருக்கம்ல?? பாருங்கண்ணே ! :)))))

said...

//ILA(a)இளா said...
மப்பா இருக்கிற நேரத்துல மப்பும் மந்தாரமா ஒரு ஜிகிடி நம்மை கிராஸ் பண்ணினா, நம்ம கூட்டாளி போங்காட்டம் ஆட ஆரம்பிச்சுடறாங்க.

ஹை, கிளாஸ் சூப்பர், எப்படி நம்ம புரிதல்? //

இளா வாவ் சூப்பரப்பு !! தல நீங்களூம் நம்ம கூட எழுத்தாணியோட ஒக்கார்ந்துருங்க. சேர்ந்து வெளக்கத்தை கொடுத்தா தமிழ் பதிவே சும்மா அதிரும்ல??;)))))))

said...

ithukku per thaan pattaraiya podurathaa?? :)
- Kabilan

said...

ஜொள்ளுண்ணே...எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்??? :)

said...

//Anonymous said...
ithukku per thaan pattaraiya podurathaa?? :)
- Kabilan //

வாங்க கபிலன் :)))
அட நம்புங்க இதுவும் பட்டறைதான் :)))))

said...

// இராம் said...
ஜொள்ளுண்ணே...எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்??? :) //

வாங்க ராம் :))))
அதெல்லாம் அப்படித்தான் இப்படி சும்மானாச்சுக்கும் பீளிங்ஸ் உட்டுகிட்டு இருக்கக்கூடாது சொல்லிட்டேன் !! :))))

said...

:) :) :)

said...

தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :)))

said...

:)

said...

தொல்காப்பியம் ku bathila u can start writing JOLKappiyam Mr.Pondi!

said...

// தூயா [Thooya] said...
:) :) :) //

வாங்க தூயா:)) அதென்னாங்க மூணு ஸ்மைலி ?? ;)))))

said...

//கப்பி பய said...
தெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :))) //

வாங்க கப்பி :)))
அட நான் தெய்வமெல்லாம் இல்லீங்க !! என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்க எனக்குப்புடிக்காதுன்னு தெரியுமுல்ல?? ;))))))))))

said...

//துர்கா|thurgah said...
:) //

வாங்க துர்கா :)))

said...

//Anonymous said...
தொல்காப்பியம் ku bathila u can start writing JOLKappiyam Mr.Pondi! //

வாங்க அனானி :))))
அட நீங்க சொல்லறதே சூப்பரான தலைப்பா இருக்கே !! கூடியவிரைவில் காப்பியத்தை காப்பிரைட்ஸ்சோட எழுதிடுவோம்ல !!! :))))

said...

ஜொள்ளு பாண்டி அவர்களே, பெண்ணியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறேன் அப்பிடி இப்பிடினு ஒரு குருப் கிளம்பி எங்கியோ கொண்டு போயிட்டாங்க (லிங்க் படிக்கவும்).

http://www.dinamalar.com/2007aug22/events_tn3.asp

நாம் ஜொள்ளூ விடுற கட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்கு எப்ப போக போகிறோம்?

மங்களூர் சிவா.

said...

முடியல..... முடியல..... உங்க தமிழ் சேவையை பாராட்டி உடம்புல உள்ள முடியெல்லாம் நட்டுக்கிட்டிருக்கு..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....