Monday, September 10, 2007

ஆண் GAL
ஆயிரம் தான் சொல்லுங்க இந்த பொண்ணுகளுக்கு இருக்குற மவுசு இந்த பசங்களுக்கு கெடையவே கெடையாதுங்க. பாவங்க இந்த பசங்க. என்னதான் ரவுசு பண்ணிகிட்டு டோல்லடிச்சுகிட்டு லோலாக்கை பார்த்துகிட்டு அலைஞ்சாலும் ஒரு பொண்ணுக்கு இருக்குர influence ஒரு பையனுக்கு கெடைகிறது இல்லை ! படிக்கிற இடத்திலே இருந்து வேலை செய்யுர இடத்திலே வரைக்கும் பையனா பொறந்தா என்ன கஷ்டம் என்னா கஷ்டம் ??

அதுக்கு காரணம் இந்த பசங்களே தாங்க. உங்களுக்கு கோடிங்ல ஏதோ கொஞ்சம் டவுட்டுன்னு இந்த பசங்களை போய் கேக்கறீங்கன்னு வைங்க. “ அட இது தெரியாதா? போடா போய் இந்த டாக்குமெண்டைப்ப படின்னு பொத்தாம் பொதுவா ஒரு மார்கமா உங்களுக்கு ஒரு national higway ய காட்டிட்டு போய்டுவாய்ங்க. டேய் இதை நீதான் படிச்சிட்டயேடா சொல்லி கொடுக்க ஒரு 5 நிமிசம் ஆகுமான்னு மனசுக்குள்ளேயே குமுறிகிட்டு அலைய வேண்டியதுதான். இதே கேள்விய ஒரு பொண்ணு வந்து “ இந்த கோடிங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ப்ளீஸ்! “ ன்னு ஹஸ்கி வாய்ல treble ஏத்தி கேட்டுச்சுன்னு வைங்க அவ்ளோதான் நம்ம ஆளு சும்மா ரம்மு குடிச்ச குதிரை குட்டி கணக்கா இருக்குற firewall ஐ எல்லாம் பேத்துகிட்டு கூகுள், அல்டாவிஸ்டான்னு சும்மா அலாஸ்காவுக்கே போய் ‘கோடிங்’க எடுத்துடுவாய்ங்க. ஏம்பா கண்ணுகளா இப்படி வாழமட்டையிலே கால் வச்ச மாதிரி தொபுக்கடீர்னு இந்த பொண்ணுங்க சிரிப்ப பார்த்து பல்ட்டி அடிக்கறீங்க? அட இதையே ஒரு பையன் கேட்டா மட்டும் ஏண்பா இப்படி வெளகெண்னைய லிட்டர் லிட்டரா குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கறீங்க ?

அப்புறம் இந்தப் பொறந்தநாள் கலாட்டா இருக்கே !! ஒரு பொணுக்கு பொறந்த நாளுன்னா போதும். சும்மா ஆளாளுக்கு முந்துன நாளுல இருந்தே சும்மா கரகாட்டம் ஒயிலாட்டம்னு சலங்கைய கட்டிகிட்டு சும்மா மாங்குயிலே பூங்குயில்லேன்னு ஜல்லு ஜல்லுன்னு குத்தைப்போட்டாய்ங்கன்னா சும்மா நாளுநாளைக்கு வாழ்த்தறேன்னு தேத்தறேன்னு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு குத்தைப்போடுவாய்ங்க பாருங்க ஆஹா என்னா ஒரு வேகம் என்னா ஒரு அக்கரை தெரியும் தெரியுமா?? பயபுள்ளைங்க ஓடிப்போயி கேக்கு வாங்கி வெட்டறது என்னா? ஆள் சைஸுக்கு க்ரீட்ங்ஸ் கார்ட் வாங்கி கொடுக்கறது என்னா? சும்மா கெடாவெட்டி பொங்கல வச்சு பொண்ணுங்க மனசுல பட்டறையப்போட சும்மா பொலபொலன்னு இந்த பசங்க பண்ணுற கலாட்டா இருக்கே என்னத்தை சொல்ல? இதுவே ஒரு பையனுக்கு பொறந்த நாளுன்னா டேய் மாப்ளே ஹாப்பி பர்த்டேடான்னு கைய மட்டும் கொடுத்துட்டு எங்கடா குவாட்டர்ன்னு காலைல இருந்தே மெதக்க ஆரம்பிச்சுசுடுவாய்ங்க ! சாயங்காலம் வந்துச்சோ இல்லையோன்னு சும்ம ஊத்து ஊத்துன்னு உத்திகிட்டு திரும்ப மப்பிலே தங்களோட மன்மதலீலைகளை அரங்கேத்தி விடுர அலப்பரை இருக்கே ??? ஏம்பா கண்ணுகளா இந்த பொண்ணுங்கன்னா மட்டும் கேக்கை தூக்கிகிட்டு பேக்கு மாதிரி காவடி எடுக்குறீயளே அதையே பசங்கன்னா மட்டும் அவனுகளை ஊத்தி ஊத்தி கொடுக்கற ‘பார்டெண்டரா’ பக்குறீயளே ஏன்பா??

சரி ஏண்டா நம்ம ஆண்குலங்கள் எல்லாம் இப்படி பொண்ணுங்க முன்னாடி மண்ணைப் பொராண்டிகிட்டே இருக்காய்கன்னு நானும் இருக்குற கொஞ்சம் நஞ்ச மூளைய கசக்கிட்டு ரோசணை பண்ணிப்பார்த்தா..

டிரிங் டிரிங் டிரிங் ...
அட என் மொபைல் கூப்பிடர சத்தம் உங்களுக்கு கேக்குதில்ல? யாரு??...

அட இருங்கப்பூ நம்ம ப்ரெண்டு ஜென்சி பேசுது. மத்தியானம் பேசுனது, பாருங்க முக்கியமான விசயத்தை பத்தி எழுதிகிட்டு இருக்குறப்போ இந்த லூசு வேற போனைப்போட்டு உயிரை எடுக்குது, பேசாட்டி அது வேற கோச்சுக்கும். அப்புறம் அதுக்கு கேட்பரீஸ் வாங்கித்தந்து மாளாது. இருங்க பேசிட்டு வாரேன் சரியா ?? ஹிஹிஹிஹிஹி....

" சொல்லுடா என்ன விசயம்? "
.................................

" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு "